சிவராத்திரி விரதம் இருக்குமன்று அதாவது இன்று முழுதும் எதுவும் சாப்பிடக்கூடாது. நாள் முழுதும் உபவாசம் இருந்து மனதை சிவனின் மீது வைத்து, இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்து சிவாலயங்களில் நடைபெறும் 4 ஜாம பூஜைகளிலும் பங்கேற்க வேண்டும். இன்றைய ஒரு நாள் வழிபாடு ஆயிரம் நாள் சிவபூஜை செய்த பலனை அளிக்கும் என்பது அருளாளர்கள் வாக்கு.
சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து ஸ்வாமியை தரிசித்து வழிபாடு செய்ய முடியாவிட்டால் கூட, ‘லிங்கோற்பவ’ காலமாகிய இரவு 11.30 மணி முதல் 1மணி வரை உள்ள காலத்திலாவது சிவதரிசனம் செய்து வழிபட வேண்டும். ஏனெனில் இந்த நேரத்தில் தான் சிவன் ஜோதிலிங்கமாக தோன்றிய நேரமாக கருதப்படுகிறது.
மகாசிவராத்திரியன்று முறையாக விரதம் இருந்து, இரவு முழுவதும் கண்விழித்து இறைவனின் நாமத்தை சொல்லி வழிபடுவதால் அளவற்ற நன்மை கிடைக்கும். சிவராத்திரி வழிபாட்டினால் நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், நல்ல மக்கட்பேறு பெறலாம். தீரா நோய்கள் நீங்கும். முடிவாக இனிப் பிறவா தன்மை பெறலாம் என முன்னோர்கள் கூறுகின்றனர்.
விரதத்தை சாஸ்திர சம்பிரதாயங்களில் கூறியுள்ளபடி அனுஷ்டிக்க பயந்து பலர் விரதமிருக்க முயற்சிப்பதில்லை. இன்றைய சூழ்நிலையில் 100% உண்மையான விரதத்தை எடுத்தவுடன் அனுஷ்டிப்பது எவராலும் இயலாது. விரதமிருந்து உடலையும் மனதையும் பழக்கவேண்டும். ஒவ்வொரு மகா சிவராதிரியின்போதும் முந்தைய சிவராத்திரியைவிட சிறப்பாக அனுஷ்டிக்க சங்கல்பம் செய்துகொண்டால் நாளாவட்டத்தில் விரதம் கைவரப்பெறும்.
கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல இருக்கு… விரதமிருக்க ஆசை என்ன செய்வது என்ன என்று ஒன்றுமே புரியவில்லை என்று கூறுபவர்களுக்கு ஒரு எளிய உபாயம்…
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற (குறள் 34)
என்கிற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப, மனதில் மாசு இல்லாமல் இருப்பதே மிகப் பெரிய நோன்பாகும். எனவே இன்றைய நாள் முழுதும் கடுஞ்சொல் நீக்கி, சிவ சிந்தனையில் லயித்திருங்கள்.
இன்று உணவை தவிர்க்கவும். (நீரிழவு நோயாளிகள், வியாதியஸ்தர்கள் போன்றோர் மிதமான, பூண்டு வெங்காயம் நீக்கிய உணவை உட்கொள்ளலாம். வயதானோர் பால் பழங்கள் உட்கொள்ளலாம்!)
இரவு சிவாலயம் சென்று நான்கு கால பூஜைகளையும் கண்டு களிக்கவும். கண்விழிப்பதற்கு உறுதுணையாக அறுபத்துமூவர் கதைகள், திருவிளையாடற்புராணம், கந்தபுராணம் போன்ற சைவ சமய நூல்களை படிக்கலாம்.
கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் வீட்டில் விரதம் அனுஷ்டிப்பவர்கள் திருவிளையாடல், கந்தன் கருணை, திருவருட்ச்செல்வர் போன்ற பக்தி திரைப்படங்களை பார்க்கலாம். மேற்கூறிய சைவ சமய பக்தி இலக்கியங்களை நூல்களை படிக்கலாம்
எப்படியாகிலும் சிவராத்திரி அன்று சிவசிந்தனையுடன் இருந்து வயிற்றை காயப்போட்டாலே பாஸ்மார்க் வாங்கிவிடலாம். அடுத்த வருடம் இன்னும் சிறப்பாக, கடுமையாக அனுஷ்டிக்கவும்.
இன்று செய்யவேண்டியது :
1) சிவாலயத்தில் இருந்தபடி நான்கு கால பூஜைகளையும் பார்ப்பது
2) சிவ சிந்தனையுடன் உபவாசம் இருத்தல்
3) சிவ நாமத்தை மனதுக்குள் தியானித்தபடி இருத்தல்
4) பக்தி இலக்கியங்களையும் பக்தி நூல்களையும் படித்தல் (இன்று பன்னிரு திருமுறைகளுள் “போற்றித்திருத்தாண்டகம்” பாடுவது
மிகக் சிறந்தது).
5) சிவராத்திரி தரிசனத்திற்கு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உதவுவது; ஆலய நிர்வாகத்திற்கு உதவுவது
6) ஆலயத்தில் விழித்திருந்து துப்புரவு பணிகளை மேற்கொள்வது
7) சிவபூஜை செய்பவர்களுக்கு கூட மாட உதவுவது
8) கோ-சம்ரோக்ஷனம் செய்வது
9) தான தர்மங்களை (அடுத்த நாள்) மேற்கொள்வது. – இவைகளை அவசியம் கடைபிடிக்கவேண்டும்.
இன்று செய்யக்கூடாதது :
1) லௌகீக உலகியல் சார்ந்த விஷயங்களை பார்ப்பது, பேசுவது, படிப்பது
2) சினிமா, சீரியல் பார்ப்பது
3) கடுஞ்சொல் பேசுவது, கேட்பது
4) பொய் பேசுவது
5) மற்றவர்களை தரிசிக்க விடாமல் தான் மட்டுமே இறைவனை பார்த்தபடி இருப்பது
6) வயிறு முட்ட சாப்பிடுவது (பெருந்தீனி), மற்றும் அப்படி சாப்பிடுபவர்களுடன் பழகுவது. – இவைகளை இன்று அறவே தவிர்க்க வேண்டும். (மற்ற நாட்களில் கூட!)
(அறிவிப்பு : சிவராத்திரியை முன்னிட்டு இன்று நம் அலுவலகத்திற்கு அரை நாள் விடுமுறை. எனவே சிவராத்திரி சிறப்பு பதிவு 5 இன்னும் சற்று நேரத்தில் அளிக்கப்பட்டுவிடும். நாளையோ அல்லது நாளை மறுநாளோ நமது சிவராத்திரி அனுபவங்கள் தொடர்பான பதிவை அளித்த பிறகு இந்த வருட சிவராத்திரி சிறப்பு பதிவுகள் நிறைவு பெறும். அதன் பின்னர் இராமநாம மகிமையை விளக்கும் தொடர் முழு வேகம் பெறும்!)
==============================================================
Also check :
இறைவனிடம் கேட்கக்கூடாத கேள்வி – சிவராத்திரி ஸ்பெஷல் 3
மஹா சிவராத்திரி விழா – சிவ நாம அர்ச்சனையில் பங்கேற்க ஒரு அரிய வாய்ப்பு!
கல் நந்தி புல் சாப்பிட்டு தண்ணீரும் குடித்த உண்மை சம்பவம் – சிவராத்திரி ஸ்பெஷல் 1
சென்ற ஆண்டு அளித்த சிவராத்திரி ஸ்பெஷல் தொடர் மற்றும் இதற்கு முன்பு நாம் அளித்த சிவராத்திரி சிறப்பு பதிவுகளுக்கு….
http://rightmantra.com/?s=சிவராத்திரி&x=6&y=12
==============================================================
[END]
நன்றி!!!
இந்த பதிவை அளித்தமைக்கு.
நன்றி சுந்தர்,
இன்று பன்னிரு திருமுறைகளுள் “போற்றித்திருத்தாண்டகம்” பாடுவது
மிகக் சிறந்தது.
– மாறன்
அடுத்த பதிவில் போற்றித் திருத்தாண்டகம் இடம்பெறும். நன்றி மாறன் அவர்களே.
– சுந்தர்
சிவராத்திரி மகிமைகளையும் விரதம் இருக்கும் முறைகளையும் மிகவும் அழகாக பதிவு செய்து இருக்கிறீர்கள். படங்கள் மிக அழகு. இன்று அனைவரும் விரதம் அனுஷ்டித்து இறைவனின் அன்புக்கு பாத்திரமாவோம்.
சிவராத்திரி பதவுகள் ஜெட் வேகத்தில் செல்கிறது. வாழ்த்துக்கள்
இன்று முழுவதும் இறை சிந்தனையுடன் இருப்போம்.
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
நன்றி
உமா வெங்கட்
மிகவும் பயனுள்ள பதிவு என்னால் முழுமையான விரதம் இருக்க முடியா விட்டாலும் நீங்கள் சொன்னது போல் முயற்சி செய்து பார்க்கிறேன் .
நன்றி
நன்றி சுந்தர் சார்
இன்று கோவிலுக்கு சென்று கண் விழிக்க முடியாவிட்டாலும் சிவ சிந்தனையுடன் விரதம் இருக்க அவர் அருளால் முயற்சி செய்கிறேன்.
இந்த பதிவுக்கு நன்றி
முதல் கால பூஜை – சோமஸ்கந்தர் வழிபாடு – பாட வேண்டிய பதிகம் – மாணிக்கவாசகரின் “சிவபுராணம்” – விளக்கெண்ணை தீபம்.
இரண்டாம் கால பூஜை – தக்ஷினாமூர்த்தி வழிபாடு – பாட வேண்டிய பதிகம் – ருத்ர தண்டகம் என்னும் “திருத்தாண்டகம்” – இலுப்பெண்ணை தீபம்.
மூன்றாம் கால பூஜை – லிங்கோத்பவர் வழிபாடு – பாட வேண்டிய பதிகம் – “லிங்க புராண திருக்குறுந்தொகை” (முன்றாம் கால பூஜைக்கு மட்டுமே தாழம்பூவை சிவனுக்கு சாற்றப்படும்) – நெய் தீபம்.
நான்காம் கால பூஜை -லிங்க ரூபம் வழிபாடு – பாட வேண்டிய பதிகம் – நாவுக்கரசரின் “போற்றித்திருத்தாண்டகம்” நல்லெண்ணெய் தீபம் .
– நன்றி தினமலர்.
– மாறன்.
நன்றி……..இந்த நன்னாளில் அலுவலகத்தில் இருப்பதால் திருக்கோவிலுக்குச் சென்று இறைவனை தரிசிக்க முடியாவிட்டாலும், நம் தளத்தின் மூலம் அம்மையப்பரை தரிசித்துக் கொள்கிறோம்…….
மனத்துக்கண் மாசிலன் ஆதல் – குறள் எனக்கு மிகவும் பிடித்த குறள். மேலும் அடியவள் பாஸ்மார்க் எடுக்க இறைவன் அருள்புரிய வேண்டும்…..
கோவிலுக்கு செல்ல முடியாதவர்களுக்கும் தங்கள் பதிவினால்
ஆண்டவனை தரிசிக்க வைத்து விடுகிறீர்கள் அண்ணா!
சுந்தர் சார்
சிவ தலங்களுக்கு தான் செல்ல வேண்டுமா ?
தங்களின் குல தெய்வ கோவில்களுக்கு செல்ல கூடாதா ?
தங்களின் பதிலை விரைவில் எதிர்பாக்கிறேன்.
நன்றி
ராஜாமணி
சிவாலயத்திற்கு செல்வது சிறப்பு. அப்படி இயலாத பட்சத்தில் குலதெய்வத்தின் கோவிலுக்கு செல்லலாம். தவறில்லை.
மிக்க நன்றி சுந்தர் சார்.
You are giving the readers very important and useful information. Thanks for this information. Readers will definetely benefit by the info.
Regards
M. Padmavathi
பதிவு மிக நன்று.
use full information thank you….
டியர் சுந்தர்,
என்னை போல அயல்நாட்டில் வேலை செய்யும் இறையன்பர்கள் என்ன செய்வது ???ரூம்-இல் உட்கார்ந்து பிராத்தனை செய்ய வேண்டியது தான்!!!
சுந்தர்ஜி
சிவராத்திரி அன்று செய்ய வேண்டியவை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டோம் , நன்றி