Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, September 14, 2024
Please specify the group
Home > All in One > சிறப்பாக நடைபெற்ற நமது பாரதி பிறந்த நாள் விழா!

சிறப்பாக நடைபெற்ற நமது பாரதி பிறந்த நாள் விழா!

print
நண்பர்களே, நமது தளத்தின் சார்பாக நடைபெற்ற பாரதி விழா மிக மிக எளிமையாக அதே சமயம் நிறைவாக நடைபெற்றது.

ஏழையின் கல்வி, அச்சமின்மை, மகிழ்ச்சி, மனதுக்கு நிறைவு, வளம், கொடை, வள்ளுவன் புகழ், தமிழன்னை, பசுமை என பாரதி கனவு கண்ட ஒவ்வொரு விஷயத்தின் முக்கிய அம்சங்களையும் எங்கள் சக்திக்கு இயன்றவரையில் நேற்றைய விழாவில் செயல்படுத்தினோம். பாரதி ஆன்மா நிச்சயம் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும்!

சிறப்பு விருந்தினர்கள் மற்றும் வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் வந்திருந்து நிகழ்ச்சியை நல்லபடி நடத்திக்கொடுத்தனர்.

இப்போதைக்கு ஆவலுடன் காத்திருக்கும் உங்களுக்காக சில புகைப்படங்களை தந்திருக்கிறேன். விழா பற்றிய விரிவான செய்தி பின்னர் வெளிவரும்.

நாம் கணித்ததை போல நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் தங்கள் வாழ்நாளின் மிக மிக முக்கிய நாள் இது வென்று நம்மிடம் கைகுலுக்கி நன்றி கூறியதை மறக்க முடியாது.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய். (குறள் 69)

பொருள் :  நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்.

ஒரு மகனாக நான் என் பெற்றோருக்கு இதுவரையில் எதையும் பெரிதாக செய்துவிடவில்லை. ஆனால் நேற்றைய நமது நிகழ்ச்சி என் பெற்றோரை தலைநிமிரச் செய்தது என்பதை மறுக்க முடியாது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

—————————————————————————————————————-

—————————————————————————————————————-

—————————————————————————————————————-

—————————————————————————————————————-

—————————————————————————————————————-

—————————————————————————————————————-

—————————————————————————————————————-

—————————————————————————————————————-

—————————————————————————————————————-

—————————————————————————————————————-

 

18 thoughts on “சிறப்பாக நடைபெற்ற நமது பாரதி பிறந்த நாள் விழா!

  1. ஹாய் சுந்தர்,

    நேற்று நடந்த நமது விழா கண்டிப்பாக ஒரு மிக மிக பெரிய மாற்றத்தை பல பேருக்கு கொடுத்திருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    நம் ஐயா திரு கல்யாணசுந்தரம் அவர்கள் பேசியதற்கு பிறகு நேற்று வந்திருந்த பல பேரிடம் அந்த POSITIVE VIBRATION ஐ நான் கண்கூடாக பார்த்தேன்..

    இப்படி ஒரு நிகழ்ச்சி மறுபடியும் நடைபெறுமா என்பது எனக்கு தெரியாது ஆனால் நேற்று நடந்த விழா பல பேருக்கு ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமையும் / அமைந்தால் அதுவே இதற்கு கிடைத்த மாபெரும் வெற்றி…

    இதை காண வந்திருந்த அனைவருக்கும் இது ஒரு நல்ல பயனுள்ள நிகழ்ச்சி என்றால் அது மிகை அல்ல..

    நேற்றைய பொழுதை பயனுள்ள வகையில் செலவு செய்வதற்கு உதவியாக இருந்த திரு சுந்தர் அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் THANKS…

    இனி நம் தளம் மூலமாக பல அறபனிகள் செய்ய வேண்டும் என்ற என்னுடைய ஆசை நிறைவேற கடவுளை பிரார்த்திக்கிறேன்..

    வந்திருந்து சிறப்பு செய்த அனைவருக்கும் நம் தளம் சார்பாக எனது நன்றிகள்..

    வாழ்க தமிழ் வளர்க இவ் வையகம்..

    PVIJAYSJEC

  2. ஒரு சிறந்த வழிகாட்டியாக இந்த விழா அமைந்தது….குறிப்பாக அய்யா பாலம் அவர்களின் உரை பிரமாதம் …நானும் என் நண்பர்களும் கலந்து கொண்டு மகிழ்ந்தோம்..உணர்ந்தோம் ..நன்றி சுந்தர்

    மகாலட்சுமி காலண்டர் அருமை – என் அம்மாவுக்கும் மனைவிக்கும் மிகவும் பிடித்திருந்தது!

  3. Even I have planned to participate this event (booked train ticket also), I could not able to participate due to unavoidable reason. I missed one great opportunity.
    Anyway, Thank you and congrats Sundar. You DID IT.

  4. சுந்தர் சார் என்னுடன் என் நண்பர்களில் சுவாமிநாதன் குடும்பமும் உடன் வந்து பாரதி பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு மகிழ்ந்தோம் . உங்கள் பெற்றோரையும் அவர் தம் பெருமிதம் கண்டு உணர்ந்தோம் ஒரு குடும்ப நிகழ்வாக அமைந்தது. திருமகள் வீடு தேடி வந்தாள் மகிழ்ச்சி Nahrani chennai

  5. சுந்தர்

    நாம் நம் குழுவோடு செய்த செயல்களில் முதல்மயானது என்றால் கண்டிப்பாக அது இது தான் அதில் எந்த மாற்று கருதும் இல்லை ,இவர்களை போன்ற சாதனையாளர்களை பார்ப்பதே அரிது அவர்களோடு பேசி அவர்களோடு புகைப்படம் எடுத்து ,உண்மையில் மிக மிக மகிழ்ச்சியான நாள் நேற்று அதுவும் ஒரு மிக பெரிய கவிஞனின் பிறந்தநாள் விழாவை கொண்டாடியது மற்றும் ஒரு மகிழ்ச்சி.

    ஒவ்வொரு விருந்தினரும் அவர்கள் செய்த சாதனைகளும் பார்த்தல் அப்பா மலைப்பு ஏற்படுகிறது,

    திரு நந்தகுமார் அவர்கள் -ஒரு அரசு அலுவலகத்தில் வேலை செய்யும் உதவியாளர் கூட பந்தா பண்ணும் நேரத்தில் நாட்டின் பிரதமர் ஜனாதிபதி அவர்களோடு பேசி சாப்பிடும் இவர் ,ஒரு சிறு பந்தா கூட இல்லாமல் என்ன ஒரு எளிமை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியது

    திரு இளங்கோ அவர்கள் ,மாற்று திறனாளி ஆக இருந்தபோதிலும் அவர் செய்துள்ள சாதனைகள் ,சிலர் நினைத்து இருப்பார்கள் இவர் ஏன் இவருடைய சாதனையை இவரே இவ்வளவு பெருமையாக சொல்லி கொள்கிறார் என்று ஆனால் உண்மையில் ஒரு மாற்று திறனாளியான நானே இவ்வளவு சாதனைகள் செய்ய முடியும் பொழுது உங்களால் ஏன் செய்ய முடியாது என்று அவர் கேட்காமால் கேட்டார்.

    திரு முல்லைவனம் அவர்கள் ,மனிதர்களில் பல பேர் தனக்கு மட்டுமே நல்லது செய்து கொண்டு இருக்கும்பொழுது ,நம்மை வாழவைக்கும் பூமிக்கு இவர் நல்லது செய்து கொண்டு இருக்கிறார் ,அதுவும் மரத்திற்கு பிறந்தநாள் கொண்டாடுவது அதை விட சிறப்பு ,நான் எனது சொந்த ஊருக்கு செல்லும் போது கண்டிப்பாக இவரிடம் மரக்கன்றுகளை வாங்கி எங்கள் வீட்டில் நட்டு அந்த தேதியை குறித்து வைத்து கண்டிப்பாக பிறந்தநாள் கொண்டாடுவோம் எங்க குடும்பத்தோடு

    திரு பாலம் கல்யாண சுந்தரம் அவர்கள் ,இவரை போன்ற மனிதர்கள் வாழும் காலத்தில் நாமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதே மிக பெரிய பாக்கியம் ,இவ்வளவும் செய்து விட்டு நான் ஒன்னும் பெரிதாக செய்யவில்லை என்று அவர் சொல்வது மற்றவர்களுக்கு ஒரு மிக பெரிய பாடம்

  6. தவிர்க்க முடியாத காரணத்தினால் நிகழ்ச்சிக்கு வர இயலவில்லை. மன்னிக்கவும். விரிவான பதிவுக்கு காத்திருக்கிறேன். இது போன்ற பயனுள்ள நிகழ்வுகள் நம் தளத்தின் மூலம் மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  7. அன்புள்ள சுந்தருக்கு,

    என் தந்தை நல்ல நிகழ்ச்சி பார்த்த திருப்தியுடன் வீடு திரும்பினர்.
    நல்ல கருத்துகள், நல்ல எண்ணங்கள் எல்லாம் நல்ல வீதைகளாக மாறும், அறம் செய்யும்.

    வாழ்த்துகளுடன்
    ஹரி கிருஷ்ணன்

  8. நேற்றைய விழா உண்மையில் படு அபாரம். பாலம் ஐயாவை பார்பதற்கே புண்ணியம் செய்திருக்க வேண்டும். அவர் பேச்சும் விளக்கமும் மிக்க நன்று. மிக மிக மிக உயர்ந்த மனிதர், அதே அளவு எளிமையும் கூட.. சாதனையாளர்கள் (சுந்தர் ஐயாவையும் சேர்த்து) ஒரே மேடையில் பார்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நந்தகுமார் அண்ணன் அவ்வளவு எளிமை, அவ்வளவு energetic. நம்முடன் பேசுவாரோ மாட்டாரோ என்று தயங்கித் தயங்கி அவரை அணுகினால் நீண்ட நாள் பழகிய சகோதரர் போல அவ்வளவு சகஜமாக பேசினார். மிக்க நன்றி அண்ணா. இளங்கோ அண்ணன், சொல்லவே வேண்டியதில்லை அருமையான குரல், பந்தா இல்லாத திறமை பாடல்களின் ஊடே விளக்கம் பிரமாதம். முல்லைவனம் ஐயாஒரு தமிழக ஜாதவ் பயேங் உங்கள் முயற்சி வாழ்க, உங்களுடன் சமகாலத்தில் வாழ்வதே பெருமை.
    நேற்றைய நிகழ்ச்சிக்குப்பிறகு என்னுள் ஒரு positive vibration-ஐ உணர முடிந்தது. சுந்தர் ஐயா நானும் ஒருநாள் நிச்சயம் IAS அதிகாரி ஆகிவிடுவேன் என்ற நம்பிக்கை வேரூன்றி விட்டது. மிக்க நன்றி ஐயா.

  9. ஹாய் சுந்தர் அண்ணா,

    உங்களுக்கு முதலில் நன்றிகள் பல.. நான் இதில் கலந்து கொள்ள முதலில் விரும்பவில்லை.. பின்னர் கலந்து கொண்டேன் என் நண்பனுடன்.. கோடி நன்றிகள் உங்களுக்கு .. நிறைய நிறைய புது புது விஷயங்கள் , பாலம் அய்யா வை பார்த்தது , இளங்கோ அவர்களின் பேச்சு, நந்தகுமார் அவர்களின் எளிமை ,மரங்களுக்கு பிறந்தநாள் கொண்டாடிய முல்லைவனம் அவர்களின் குணம் ஆகியவை எங்களை வியப்பில் ஆழ்த்தின.. இதன் பின்பு நமது rightmantra சார்பில் நடைபெறும் அணைத்து நிகழ்வுகளிலும் நான் கண்டிப்பாக இருப்பேன் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை.. புதிய பாலம் புத்தகத்திற்கு நானும் சந்தாதாரர் ஆகிவிட்டேன்…

    இது போன்ற அடுத்த நிகழ்வை எதிர்நோக்கி என்றென்றும் ஜி.உதய்..

  10. அன்புள்ள சுந்தர் ஜி ,
    விழா இனிதே நடந்து முடிந்ததை கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன். புகைப்படங்கள் சிறப்பாக இருக்கின்றன. வர முடியாததை எண்ணி வருந்துகிறேன். குறிப்பாக பாலம் ஐயாவை சந்திக்க கிடைத்த வாய்ப்பு பறிபோனதை எண்ணி வருந்துகிறேன். ஆகட்டும் அதற்கான காலம் வரட்டும். மென்மேலும் தங்கள் பணி சிறக்க உளமார வாழ்த்துகிறேன்

  11. I attended the Bharathiyar function which turned out to be a memorable day for me. One thing which impressed me most is those lines in your banner ” Thedudhal ulla theneekkalukku” and felt very happy when the same thing was expressed by Mr. Nandhakumar also. Paalam Iyya – great personality. I just felt to be a blessed one to see him on that day. Mr. Nandhakumar is very simple and friendly. Being a lover/protector of nature I was very happy to receive the tree saplings.

    I would like to thank you for arranging such a memorable event – Jayanthi Sambasivam

  12. சுந்தர்ஜி, இந்த பதிவை கூட இரவு 12:30 க்கு போஸ்ட் செய்து இருக்கிறிர்கள் என்று உங்களை பாராட்டினாலும் உங்கள் உடல் நலமும் மிக முக்கியம். இரவு 11 to 3 அவசியம் உறங்க வேண்டும். அது அடுத்த நாளின் சக்தி.

    இந்த விழாவில் எல்லோரும் கற்று கொண்டது. தானம், விட முயற்சி சுய முன்னேற்றம் , தன்னம்பிக்கை, இயற்கையை பாதுகாத்தல் …

    இவர்களை ஒன்றிணைத்து வைத்தது மிகபெரும் முயற்சி. அதன் காரணமாக நீங்கள் பட்ட சிரமத்தை உங்களுக்கு மறக்க செய்தது இந்த விழா என்று நம்புகிறேன்.

  13. சுந்தர் சார், பின்னிடிங்க போங்க, உங்க எழுத்துக்கள்ல இருந்தே தெரியுது விழா எவ்ளோ சிறப்பா அமைஞ்சிருக்கும்ங்க்றது, அந்த விழால பங்குகொள்ளவே குடுப்பனை வேணும்கறது புரியுது, நீங்க இந்த தளத்த ஆரம்பிச்சதுக்கான நோக்கம் இதுல இருந்து தொடக்கம், இல்லையா, இப்போ நீங்க கண்டிப்பா எங்க ரிஷி அண்ணாக்கு – livingextra நன்றி சொல்லியே ஆகணும், அப்புறம் நாங்களும் உங்களுக்கு நன்றி சொல்றோம், இப்படி ஒரு விழாவ குடுத்ததுக்கும், எங்க ரிஷி அண்ணாவ எல்லாருக்கும் காட்டினதுக்கும், (ரிஷி அண்ணா இப்ப என்ன பண்ணுவிங்க, இப்ப என்ன பண்ணுவிங்க, ஜவாலகடி இப்ப என்ன பண்ணுவிங்க)
    ஓம் க்ரியா பாபாஜி நம ஓம் ஓம் நமச்சிவாய

  14. உண்மையில் வர இயலாதவர்கள் தங்கள் வாழ்கையில் ஒரு முக்கியமான நாளை இழந்து விட்டதாக தான் கருதுவேன் ,வேறு எதோ வீட்டில் பிரச்சனை அது போன்று இருந்தால் சரி ஆனால் பாரதியார் பிறந்தநாள் விழாவுக்கு வரவேண்டுமா என்று நினைத்து வராதவர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.இனி இது போல் நிகழ்சிகள் கடவுளின் அருளால் அடிக்கடி நடக்கும் என்று எதிர்பார்கிறேன்

  15. Hi All,
    ***
    I am planning to start this new year with a divine support by visiting a great temple.
    Planning to go to Mantralayam (Raghavendra Jeeva samadhi place), Andhra on 29th Dec, 12. Most probably.
    Since harihara sudan, our team has wished to join me in this trip, I thought if some others may even join us too. So, thought of putting it here and get to know.
    Please let me know if anyone else wish to join us.
    ***
    **Chitti**.

  16. And sorry I could not give my feedback about the event in the past two days,.
    ***
    And the event was great. The guests were really great. Be it anyone.

    Mr. Palam kalyanasundaram – his humbleness and punctuality, simplicity…etc all are awesome. By seeing him coming to the function by 4.15pm (though event would start by 5.50pm) made me dumbstruck.

    Mr. Nandakumar – still he looks like a college student. So humble. So simple. even in explaining how he reached till there. But unfortunately we couldn’t spend much time with him. Else we would have got much more insights about the curiousness soul searching processes.

    Mr. ilango – I respect him above all since all else have come to this great heights by having everything. But ilango, though he is visually challenged, he had reached this level. I had thought earlier to have a words with him once the function gets over. but he went before it ends.

    Mr. Mullaivanam – his simplicity made me even like “Isn’t he the fourth guest for this event?”. Such a man who had devoted his lifetime to revolutionize, recharging the earth. very happy to see you.

    Mr. Rishi – We can’t say anything out of his appearance. Such a silent person who’s having phenomenal data in his head enough to have huge spiritual fan followers for his site.

    If i start to explain about everyone above in detail, it will extends to pages. So, I will stop with this.:-)
    ***
    Wishing Sundar a lot more to come like the one example you quoted in the event and lot more are going to grow with you in this journey.

    All the best!
    ***
    **Chitti**.
    Thoughts becomes things.

  17. டியர் சுந்தர்ஜி

    2012 பாரதி விழா பதிவை படித்து விட்டு நான் அட்டெண்ட் பண்ணவில்லை என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. அப்பொழுது இந்த சைட் பற்றி தெரியாது. 2 1/2 மாதங்களாக தான் நான் RM வாசகி. இதை போல் பல விழாக்களை ஆவலுடன் எதிர் நோக்கும் – உமா வெங்கட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *