இந்த பதிவில் நாம் அளித்துள்ள கதையை (சம்பவத்தை) இதுவரை உங்களில் பலர் கேள்விப்பட்டிருக்கமாட்டீர்கள் என நம்புகிறோம். அப்படியே கேள்விப்பட்டிருந்தாலும், புகைப்பட ஆதாரத்துடன் எத்தனை பேர் அதை பார்த்திருப்பீர்கள் என்று தெரியாது. அந்த வகையில் ரைட்மந்த்ரா வாசகர்கள் அதிர்ஷ்டசாலிகள்! அரனருள்!!
நாம் ஏற்கனவே கூறியது போல அவனை வணங்கும் அடியவர்கள் உள்ளன்போடு “ஓம் நம சிவாய” என்று உருகி கூப்பிட்டாலே ஓடோடி வந்து ஏவல் செய்ய காத்திருப்பான். அவன் அருளை பெற நீங்கள் நாயன்மார்களை போல இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை. ‘அன்பே சிவம்’ என்பதை உணர்ந்த மனிதர்களாக இருந்தால் போதும்.
சிவபெருமானை போன்ற ஒருவரை தெய்வமாக பெற (அவனை வழிபடும் அறிவு + பாக்கியம்) நாம் இதற்கு முன்பு பல பிறவிகளில் புண்ணியம் செய்திருக்கவேண்டும். புண்ணியம் இருந்தால் தான் சிவசிந்தனையே வாய்க்கும்.
தனது மெய்யன்பர்கள் வாழ்வில் எத்தனையோ திருவிளையாடல்களை அவன் நிகழ்த்தியிருக்கிறான். நிகழ்த்தி வருகிறான். அப்படிப்பட்ட ஒன்றை தற்போது பார்க்கலாம்.
இந்த கல் மாடு புல் சாப்பிடுமா? தண்ணீர் குடிக்குமா?
இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்மேற்கு பிரிவில் அமைந்துள்ள ஓர் ஊர் கொக்கட்டிச்சோலை. கொக்கட்டி மரங்கள் இங்கே சோலை போன்று காட்சி தருவதால் இதற்கு கொக்கட்டிச்சோலை என்று பெயர் வந்தது. இங்குள்ள மக்களின் வாழ்வாதார தொழிலாக விவசாயம் விளங்குகிறது. கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோயிலானது இங்கு அமையப் பெற்றுள்ளது. ஈழத்திலுள்ள சுயம்பு லிங்கம் கொண்ட கோயில்களில் இது மிகவும் முக்கியமானதாகும். இது மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்குப் புறமாக உள்ளது.
கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக விளங்குவது கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயமாகும். கி.பி 301 – 382 ல் திடகன் எனும் வேடன் இந்த பிரதேசத்தில் விறகு வெட்டும்போது, கொக்கட்டி மரத்தை வெட்ட அதிலிருந்து இரத்தம் பீறிட்டு வந்தது. இதை திடகன் அந்த பிரதேசத்து அரசியாக இருந்த உலகநாச்சி என்பவரிடம் சொல்ல அவள் வந்து பார்த்து லிங்கம் இருப்பதைக் கண்டு கோயில் அமைத்து வட நாட்டில் இருந்து பட்டர் மூவரை அழைத்து பூசை செய்யும்படி கட்டளை இட்டாள்.
இந்த சம்பவம் நடைபெற்ற எப்படியும் 150 ஆண்டுகள் இருக்கலாம் என்று தெரிகிறது. ஐரோப்பியரின் ஆளுகைக்கு இந்தியாவும் இலங்கையும் உட்பட்டிருந்த நேரம் அது. அப்போது இலங்கையில் குடியேறிய ஐரோப்பியர்கள் இந்துக்களை மதமாற்றத்திற்கு வற்புறுத்தி வந்தனர்.
மட்டக்களப்பு பகுதியில் உள்ள தாந்தோன்றீஸ்வரரின் ஆலயத்திற்கு வந்த வெள்ளைக்கார பாதிரியார் ஒருவர் “கல்லையும் பாம்பையும் வணங்கும் நீங்கள் காட்டுமிராண்டிகள். கர்த்தரை கடவுளாக ஏற்றுக்கொண்டால் அவர் உங்களை மன்னிப்பார். இன்றே நீங்கள் ஏசு கிருஸ்துவை உங்கள் கடவுளாக ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்று பலவாறாக கிருஸ்தவ மதத்திற்கு மாறும்படி வலியுறுத்தினார்.
ஆனால் சைவத்தில் ஊறிய சிவனையே சிந்தையில் வைத்து வணங்கும் கொக்கட்டிச்சோலை மக்கள் மற்றும் இறைவனை பூஜித்து வந்த கோவில் அர்ச்சகர்கள் அதற்கு மறுத்துவிட்டனர்.
ஏமாற்றத்துடன் திரும்பிய பாதிரியார்கள் குழு கொழும்பு நகரில் முகாமிட்டிருந்த ஆங்கிலேயே படைத் தளபதியை சந்தித்தனர். “என்ன சொல்லியும் அம்மக்களை மாற்றமுடியவில்லை. ஏசு கிருஸ்துவை கடவுளாக ஏற்க மறுக்கின்றனர். அம்மிக் கல்லையும் பாம்பையுமே கடவுள் என்கின்றனர்” என்று தங்கள் ஆதங்கத்தை கொட்டினர்.
மக்களை எப்படி வழிக்கு கொண்டுவருவது என்று யோசித்த இரு தரப்பினரும், அவர்கள் பக்தி செய்வதற்கு மூல காரணமாக இருக்கும் கோவில்களை எல்லாம் பீரங்கி மூலம் தகர்ப்பது என்று முடிவு செய்கின்றனர்.
இம்முறை ஆங்கிலேயே துரை ஒருவர் மேற்படி எச்சரிக்கை செய்தியுடன் கொக்கட்டிசோலை செல்கிறார். பூட்ஸ் கால்களுடன் கோவிலுக்குள் செல்லும் அவரை கோவில் அர்ச்சகர்கள் ஓடி வந்து தடுத்தனர்.
“இதென்ன உங்கள் வீட்டு படுக்கை அறை என்று நினைத்தீர்களா? எங்கள் ஈசன் உறையும் இடம்…. பூட்ஸை வெளியே கழட்டி வைத்துவிட்டு வாருங்கள்… இல்லையேல் இறைவனை காவல் காக்கும் எங்கள் நந்தி பகவான் உங்களை சும்மா விடமாட்டார்” என்று சீற்றத்துடன் கூறினர்.
“ஹூ இஸ் நந்தி? வாட் கேன் ஹி டு?” என்று ஆங்கிலேய துரை கேட்க, “இதோ இவர் தான் நந்தி. எங்கள் இறைவனை காவல் காப்பவர்” என்று நந்தியை காட்ட, அதை பார்த்து “என்ன இந்த மாடு உங்கள் இறைவனை காவல் காக்கிறதா?? குட் ஜோக்…” என்று சிரித்தான்.
“ஆம்… இவர் தான் எங்கள் இறைவன் வீற்றிருக்கும் வாயிலை காப்பவர்”
“இந்த மாடு காவல் காக்கிறதா? ஹா…ஹா….ஹா… மாடு என்றால் புல் சப்பிடவேண்டுமே… தண்ணீர் குடிக்கவேண்டுமே…. இந்த கல் மாடு புல் சாப்பிடுமா? தண்ணீர் குடிக்குமா?”
“சிவ… சிவ…. எங்கள் நந்தி நிச்சயம் நாங்கள் கேட்டுக்கொண்டால் புல் சாப்பிடுவார்…. தண்ணீரும் குடிப்பார்!”
அது கேட்டு மீண்டும் சிரித்தான் வெள்ளைக்கார துரை.
“அப்படியானால் நாளை இதே நேரம் வருவேன். என் எதிரில் உங்கள் மாடு புல் சாப்பிடவேண்டும். தண்ணீரும் குடிக்கவேண்டும். இல்லையேல் பீரங்கி மூலம் கோவிலை இடித்து தரைமட்டமாக்கிவிடுவேன்!” என்று சூளுரைத்துவிட்டு சென்றான்.
“ஒரு வேகத்தில் சொல்லிவிட்டோமே…. கல் நந்தி எப்படி புல் சாப்பிடும், தண்ணீர் குடிக்கும்?” அர்ச்சகர் மனம் கலங்கினார்.
கவலையுடன் வீட்டிற்கு சென்றார். அவரது மனவாட்டத்தின் காரணத்தை அறிந்த அவர் இல்லத்தரசி அவரை தேற்றினாள்.
“நம் இறைவன் நினைத்தால் நடக்காத அதிசயம் உண்டா…. மதுரை சொக்கநாதர் கோவிலில் கல் யானை கரும்பு சாப்பிடவில்லையா? கவலை வேண்டாம்… பாரத்தை அவன் மேல் போட்டுவிட்டு படுத்து தூங்குங்கள். எல்லாம் ஈசன் பார்த்துக்கொள்வான்” என்று தைரியம் கூறினாள்.
“வெள்ளைக்கார துரையிடம் தெரியாமல் வார்த்தையை விட்டுவிட்டோமே… பிரசித்தி பெற்ற கோவில் நம்மால் தரைமட்டமாக போகிறதே…” என்று கலங்கியபடியே உறங்கச் சென்றார். படுத்தவருக்கு நீண்ட நேரம் உறக்கம் வரவில்லை. நள்ளிரவுக்கு மேல் அயர்ந்தார்.
அப்போது அவர் கனவில் தோன்றினார் சிவபெருமான். (இந்த என்ட்ரிக்கு ஈக்வலா ஏதாவது மாஸ் என்ட்ரி உண்டா என்ன…?).
“அன்பனே… வருந்த வேண்டாம். மெய்யன்பர்கள் நம்மீது வைக்கும் நம்பிக்கை என்றுமே வீண் போகாது. நாளை வெள்ளையன் வரும் நேரம், நீ கல் நந்திக்கு புல்லும் அபிஷேக நீரும் படைப்பாயாக…. மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்!” என்று கூறி மறைந்தார்.
திடுக்கிட்டு எழுந்த அர்ச்சகர், இறைவனின் அருளை எண்ணி கண்ணீர் வடித்தார். “இறைவா… உன் கருணையே கருணை!” என்று தான்தோன்றீஸ்வரர் கோவில் இருக்கும் திசை நோக்கி வணங்கினார்.
மறுநாள் காலை கோவிலில் அனைவரும் வெள்ளைக்கார துரையின் வருகைக்கு காத்திருக்கின்றனர்.
“சுவாமி… மிலேச்சன் வரும் நேரம் நெருங்கிவிட்டதே… என்ன ஆகுமோ ? பயமாயிருக்கிறதே…..”
“நாம் கவலைப் படவேண்டாம்… சிவனை நம்பினோர் கைவிடப்படார்” – ஒருவருக்கு ஒருவர் தைரியம் கூறிக்கொண்டனர்.
சொன்ன நேரத்திற்கு வெள்ளைக்கார துரை, ஆங்கிலேயே தளபதி ஒருவர் தலைமையில் ஒரு பீரங்கிப் படையுடன் வந்தார்.
“என்ன… பூசாரி… உங்கள் மாட்டை இதோ என் கண் முன்னே புல் தின்னச் சொல், தண்ணீர் குடிக்கச் சொல் பார்க்கலாம்…”
குருக்கள், ஒரு தாம்பாளத்தில் பக்தியோடு புல் கட்டையும் ஒரு பெரிய அண்டாவில் தண்ணீரையும் வைத்தார். “நந்தி பகவானே இதை அன்போடு ஏற்றுக்கொள்ளுங்கள்!” என்று கூறி வணங்கி நின்றார்.
“ஓம் நம சிவாய…. சம்போ மகாதேவா… திருச்சிற்றம்பலம்… தென்னாடுடைய சிவனே போற்றி…. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” போன்ற கோஷங்கள் அங்கு ஒலித்தன.
தொடர்ந்து அனைவரும் அதிசயிக்கும் வண்ணம் கல் நந்தி உயிர் பெற்று புல்லை உண்டது. தண்ணீரை குடித்தது. சாணமும் இட்டது.
வெள்ளைக்கார துரையும், அவர்களின் தளபதியும் இதைப் பார்த்து நடுநடுங்கிப் போனார்கள். அர்ச்சகர் காலில் வீழ்ந்து “எங்களை மன்னித்துவிடுங்கள்…. எங்களை மன்னித்துவிடுங்கள்…. உங்கள் இறைவனின் சக்தி தெரியாமல் பிழை செய்துவிட்டோம்… இனி உங்கள் ஆலயத்திற்கு எந்த தீங்கும் செய்யமாட்டோம்…. உங்களையும் மதம் மாற வற்புறுத்தமாட்டோம்…”
“எங்கள் இறைவன் எல்லாருக்கும் பொதுவானவர். எளியோர்க்கு எளியோன். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவர். அடுத்தவர்களை தங்கள் மதத்திற்கு கட்டாயபடுத்தி இழுத்து தான் தங்கள் மதத்தின் பெருமையையோ இறைவனின் பெருமையையோ நிலைநாட்டவேண்டாம்… அவரவர் மதத்தை அவரவர் சரியாக பின்பற்றினாலோ போதும். இனி எங்கள் வழியில் குறுக்கிடாதீர்கள்!” என்று அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பினர்.
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரரின் மகிமையை எண்ணி அவ்வூர் மக்கள் வியந்தனர்.
ஈசன் ஆட்சி இங்குமட்டுமல்ல எங்கும் உள்ளது இதன் மூலம் புலனாகும்.
==================================================================
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் பற்றி சில மாதங்களுக்கு முன்பே நமக்கு தெரியும். சிவராத்திரி ஸ்பெஷல் தொடரில் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டோம். சில நாட்களுக்கு முன்பு அதை பதிவாக எழுதத் துவங்கியபோது தான்… கோவிலின் படத்தையும் மேற்படி சம்பவத்தில் வரும் புல் தின்ற கல் நந்தியின் புகைப்படத்தையும் அளித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
தமிழகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் நாம் நேரில் சென்று புகைப்படங்களை அள்ளிக்கொண்டு வந்துவிடுவோம் என்பது நீங்கள் அறிந்ததே. ஆனால் கொக்கட்டிசோலை இருப்பது இலங்கையில். என்ன செய்வது என்று யோசித்தபோது தான் சென்ற வாரம் பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருந்த கிருஷாந்த் நினைவுக்கு வந்தார். தனது நண்பர் ரஞ்சித் என்பவருக்காக இவர் பிரார்த்தனை கோரிக்கை சமர்பித்திருந்தாலும் இவருக்கும் பல பிரச்னைகள் உண்டு. அதை அடுத்து வரும் ஏதேனும் ஒரு வாரத்தில் வெளியிடும்படியும் நண்பரின் கோரிக்கையை மட்டும் அவசரம் கருதி உடனே வெளியிடுமாறும் கேட்டுக்கொண்டார். கூடவே தனக்கு ‘வேல்மாறல்’ நூலை மட்டும் உடனே அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து திரு.கிருஷாந்த்துக்கு சென்ற மாதத்தின் துவக்கத்தில் ‘வேல்மாறல்’ நூலை அனுப்பியிருந்தோம். எனவே அவர் இருப்பது இலங்கை என்று தெரியும். ஆனால் அவர் இருக்கும் பட்டிக்கோலா பகுதிக்கும் மேற்படி சம்பவத்தில் வரும் கொக்கட்டிச்சோலைக்கும் இடையே உள்ள தூரம், பயண நேரம் ஆகியவை நமக்கு தெரியாது. எதற்கும் கேட்டுப் பார்ப்போம் என்று கிருஷாந்த் அவர்களை தொடர்புகொண்டு விபரத்தை கூறி கேட்டபோது, கொக்கட்டிச்சோலை தனது இருப்பிடத்திலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் இருப்பதாகவும் தாம் நிச்சயம் கோவிலுக்கு சென்று புகைப்படங்களை எடுத்து அனுப்புவதாகவும் கூறினார்.
அவரை தொந்தரவு செய்ய நேர்ந்தமைக்கு வருத்தம் தெரிவித்தோம். “தொந்தரவா? சிவ… சிவ….” சிவனருளால் இது தனக்கு கிடைத்த பாக்கியம் என்றும் மிகப் பெரிய சிவ கைங்கரியத்தில் தனது பங்கும் சேர்ந்தமைக்கு தான் மிகவும் சந்தோஷப்படுவதாகவும், சிவபெருமானின் லீலையை உலகின் மூலை முடுக்கெங்கும் கொண்டு சேர்க்கும் ஒரு திருத்தொண்டில் தனது பங்களிப்பும் சேர நேர்ந்தது தான் முற்பிறவியில் செய்த புண்ணியம் என்றும் கூறினார்.
சொன்னபடியே இதோ புகைப்படம் எடுத்து அனுப்பிவிட்டார் திரு.கிருஷாந்த். அவருக்கு நம் வாசகர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி.
தென்னாடுடைய சிவனே போற்றி!
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
(சிவராத்திரி ஸ்பெஷல் 2 ல்…. தெரிந்த கோவில், ஆனால் தெரியாத செய்தி! அரிய புகைப்படங்கள்!!)
==================================================================
ஒரு முக்கிய வேண்டுகோள்….
வாசகர்கள் நம் தளத்திற்கும் பதிவுகளுக்கும் தரும் வரவேற்பை பொறுத்தே நமது பதிவுகளின் எண்ணிக்கையை நாம் கட்டிக்காக்க முடியும். வரவேற்பு இருப்பதாக கருதித்தான் நாம் பதிவுகளை அளித்து வருகிறோம். சில நேரங்களில் அப்படிப்பட்ட எண்ணம் தவறோ என்று தோன்றிவிடுகிறது. ஒரு படைப்பாளிக்கு அவன் படைப்புக்கு கிடைக்கக்கூடிய RESPONSE என்பது எந்தளவு முக்கியம் என்பது பலருக்கு தெரியவில்லை. அதுவும் வணிக நோக்கமின்றி சேவை நோக்கோடு அளிக்கப்படும் படைப்புக்கள் எனும்போது அது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது. எனவே வாசகர்கள் பின்னூட்டம் (கமெண்ட்), அலைபேசி, மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ்., முகநூல், வாட்ஸ் ஆப் இப்படி ஏதேனும் ஒரு வகையில் நம்முடன் தொடர்பில் இருக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். நம்மைப் பற்றி நீங்கள் பேசவேண்டும் என்று எந்தக் காலத்திலும் நாம் நினைத்தது கிடையாது. ஆனால் நாம் அளிக்கும் பதிவுகளில் உள்ள CONTENT பற்றி உங்கள் கருத்துக்கள் எமக்கு அவசியம் தேவை. அது இந்த தளத்தை யார், எப்படிப்பட்டவர்கள் பார்க்கிறார்கள், எத்தனை பேர் பார்க்கிறார்கள், அவர்கள் எதிர்பார்ப்பு என்ன, KNOWLEDGE LEVEL என்ன… etc.etc. இதெல்லாம் அறிந்துகொள்ள உதவும். இவை பற்றி தெரிந்தால் நாம் நம் பதிவின் தரத்தை மேலும் உயர்த்த அது துணை செய்யும்.
உங்கள் வேகத்துக்காகவே நாம் சற்று நிதானமாக போகிறோம். நம் வேகத்திற்கு நீங்கள் ஈடுகொடுப்பதானால், ஒரு நாளைக்கு நான்கு பதிவுகள் கூட நம்மால் அளிக்கமுடியும். (இதற்கு முன்பிருந்த நிலையில் கூட). நீங்கள் பதிவுகளை தவறாமல் அதே நேரம் முழுமையாக படிக்கவேண்டும், அதன் கருத்துக்களை உள்வாங்கவேண்டும் என்பதற்காகத் தான் சற்று மெதுவாக செல்கிறோம்.
நான் மிகப் பெரிய பணியை செய்துகொண்டிருப்பதாக நினைக்கவில்லை. ஆனால் எமக்கு பிடித்ததை மனப்பூர்வமாக செய்துகொண்டிருக்கிறோம். அதன் அருமையை உணர்ந்து அனைவரும் நடந்துகொள்ளவேண்டும். இதுவே நீங்கள் எமக்கு செய்யும் உதவி.
உங்கள் இணைய நேரம் மிகவும் அரிதானது குறுகியது என்பது நமக்கு தெரியும். அதை ஆக்கப்பூர்வமாக உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புண்ணியம் சேர்க்க பயன்படுத்திக்கொள்ளுங்கள். தேவையற்ற சினிமா செய்திகள், அரசியல் வம்புகள் இவற்றில் செலவிடவேண்டாம். நீங்கள் தேடல் உள்ள தேனீக்கள். கண்ட கண்ட இடத்தில் அமர்ந்து உங்கள் தரத்தை தாழ்த்திக் கொள்ளவேண்டாம்!
நன்றி!!
-ரைட்மந்த்ரா சுந்தர், WWW.RIGHTMANTRA.COM
Mobile : 9840169215 | E-mail : simplesundar@gmail.com | Facebook (Pers): Rightmantra Sundar | Facebook (Official): Rightmantra | Whats App : 9840169215
==================================================================
சென்ற ஆண்டு அளித்த சிவராத்திரி ஸ்பெஷல் தொடர் மற்றும் இதற்கு முன்பு நாம் அளித்த சிவராத்திரி சிறப்பு பதிவுகளுக்கு….
http://rightmantra.com/?s=சிவராத்திரி&x=6&y=12
==================================================================
[END]
தென்னாட்டவர்க்கு மட்டுமா?, அவர் என்னாட்டவருக்கும் இறைவன் ஆயிற்றே. சிவத்தின் அருளைச் சொன்னாலே நாம் சிவலோக வாசிகளே!!!
சிவனரு ளாற்சிலர் தேவரும் ஆவர்
சிவனரு ளாற்சிலர் தெய்வத்தோடு ஒப்பர்
சிவனரு ளால்வினை சேரகி லாமை
சிவனருள் கூறில்அச் சிவலோகம் ஆமே – திருமந்திரம்
சிறந்த பதிவுக்கு நன்றி,
கே.எஸ்.வெங்கட்
நேற்றைய தினம் பதிவு எதுவும் இன்றி இன்று இந்த பதிவை பார்த்தவுடன் 1000 வாட்ஸ் பல்பு போன்று இருந்தது.
சிவராத்திரி ஸ்பெஷல் பதிவு படிக்கும் பொழுதே புல்லரிக்கிறது. கொக்கட்டிசோலை கோயில் பற்றி நம் தளம் மூலமாக இப்பொழுதான் கேள்விபடுகிறேன். தெரியாத கோயிலை பற்றி தெரிந்தது கொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. மதுரை சொக்கநாதர் கோவிலில் கல் யானை கரும்பு தின்ன நிகழ்ச்சி தெரியும். புதுமையான கதைகளை நம் வாசகர்களுக்க பதிவு செய்வதில் தங்களை யாரும் மிஞ்ச முடியாது. நாங்கள் தேடல் உள்ள தேனிக்கள் . அதனால் தான் ஒவ்வொரு பதிவையும் மிகவும் ஆவலாக படிக்கிறோம். ஒரு நாள் இந்த தளத்தில் பதிவு படிக்கவில்லை என்றால் கூட தினசரி கோவிலுக்கு செல்பவர்கள் ஒரு நாள் செல்லாவிட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். தாங்கள் தினமும் குறைந்தது இரண்டு பதிவுகளாகவது அளிக்க வேண்டும். தங்கள் தளத்தை பார்பவர்கள் அதன்படி செயல் பட்டு புண்ணியம் தேடி கொள்வார்கள். படங்களை எடுத்தனுப்பிய கிருஷாந்த அவர்களுக்கு என் நன்றிகள்.
நம் சிவன் ஆகிய பரம்பொருள் ஆபத்து காலத்தில் நம்மை கை விட மாட்டான் என்பதை இந்த கதை உணர்த்துகிறது .
ஓம் நம சிவாய
நன்றி
உமா வெங்கட்
ஒரு படைப்பாளிக்கு அவரின் படைப்புக்கு ஏற்ற ஆதரவும் அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் . அப்பொழுதான் அவரால் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். நாம் அனைவரும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
நன்றி
உமா வெங்கட்
வணக்கம்………..சிவபெருமானின் கருணையை அறிந்து மெய் சிலிர்க்கிறது……….கண்ணீர் அடங்க வெகு நேரமானது……..நந்தீச்வரரைப் பார்க்கும் போதே நம் துன்பங்களைப் போக்க இப்போதே எழுந்து வந்து விடுவார் என்று தோன்றுகிறது……. ஒரு மாதத்திற்கும் மேலாக சிவன் கோவிலுக்குச் செல்லவில்லையே என்ற எண்ணம் வருத்திக் கொண்டிருந்தது……..இப்போது இலங்கைக்கே சென்று இறைவனை தரிசித்து வந்து விட்ட நிறைவு ஏற்படுகிறது………..பதிவும், புகைப்படங்களும் அளித்த நண்பர்களுக்கு நன்றி….
சுந்தர்ஜி
நல்ல ஆரம்பம். உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள்.
அன்புள்ள சுந்தர் அவர்களுக்கு,
கொக்கட்டிசோலை அற்புதத்தை தங்கள் பதிவு மூலம் தெரிந்து கொண்டேன். நந்தி பகவானின் எத்தனையோ அற்புதங்களை படித்திருக்கின்றேன். எழுத்தாளர் திரு. இந்திரா சௌந்தரராஜன் அவர்களுடைய படைப்புகளில் சிவபெருமானை பற்றியும் நந்தி பகவானை பற்றியும் நல்ல நல்ல விஷயங்கள் இருக்கும். அவற்றை படித்து மெய் சிலிர்த்திருக்கிறேன். உங்களுடைய இந்த பதிவும் எனக்கு சிவபெருமான் மற்றும் நந்தி பகவான் மீதுள்ள பக்தியை அதிகப்படுத்தியுள்ளது. எங்கிருந்துதான் இவ்வளவு விஷயங்களை
எங்களுக்காக தருகின்றீர்களோ தெரியவில்லை. தங்கள் திருப்பணி மென்மேலும் சிறக்க என் அப்பன் சிவபெருமானின் ஆசிகள் தங்களுக்கு என்றென்றும் உண்டு.
ஓம் நம சிவாய.
சிவ சிவ சிவ நம ஓம் .
சிவாய நம ஓம் பவாய நம. பவாய நம ஓம் நமசிவாயா.
நன்றியுடன்.,
ரமா ஷங்கர்.
சுந்தர்ஜி
உண்மையில் கொக்கட்டிய சோலை கோவிலை நம் தள வாசகர்கள் பார்க்கும் புண்ணியம் சுந்தர்ஜிக்கும் , கிருசாந்த் அவர்களுக்கும் சாரும்
மேலும் நம் தள வாசகர்கள் அனைவரும் தங்கள் பதிவுகள் அனைத்தும் வாசிபவர்கள் தான். என்னவே ஐயம் கொள்ள வேண்டாம். தங்கள் பணி
சிறக்க தொடருங்கள்.
நல்ல பதிவுகு
மிக்க நன்றி சுந்தர்.
திரு சுந்தர் அவர்கள் ஆதங்கம் சரி ஆனது. அவர் எதிர் பார்ப்பது பாராட்டு அல்ல. அவர் ஆசை நல்லவற்றை நாம் வரவேற்க வேண்டும் .
அவர் செய்யும் தொண்டு ஆண்டவன் நன்கு அறிவான். ஆண்டவன் அருளால் அவர் எந்த குறை இல்லாமல் மன அமைதிஉடன் வாழ்வார்.
தங்கள் பதிவுக்கு மிக நன்றி.
கே. சிவசுப்ரமணியன்
மெய் சிலிர்க்கும் பதிவு.
கோபுரத்தின் அழகை காட்டும் மூன்று புகைப்படங்களும் மிக அருமை.
அதில் உள்ள சிற்பங்கள் கூட தெளிவாக தெரியும் அளவிற்கு படம் எடுத்து அனுப்பிய கிருஷாந்த அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
ஈசனின் கருணையை எடுத்து காட்ட வார்த்தைகள் இல்லை.
கல் யானை கரும்பு தின்ற திருவிளையாடல் மாதிரி கல் நந்தி புல் தின்ற காட்சியும் அவர் அன்பர்க்கு அவர் செய்த திருவிளையாடல்.
உங்களின் எல்லா பதிவுகளும் வாசகர்களால் மிகவும் ஆழ்ந்து படிக்க கூடிய பதிவுகள்.
எங்களின் நாடி துடிப்பு உங்களுக்கு தெரியும்.
எல்லா வகையிலும் அவர்கள் உங்களுக்கு துணை இருப்பார்கள்.
எள்ளி நகையாடி வம்பு பேசி திரியும், நம் முதுகுக்கு பின்னால் எள்ளல் பேசம் கூட்டத்தை பொருட்படுத்த வேண்டாம்.
தேடல் உள்ள தேனீக்களின் அருமை புரிந்தால் மட்டும் போதும்.
நன்றி
வணக்கம் சுந்தர் சார்
மிகவும் அருமையான பதிவு
புகைப்படங்கள் அருமையோஅருமை
நன்றி
அருமையான பதிவு சுந்தர். நந்தீஸ்வரர் புல் தின்னும் காட்சியை மனகண்ணில் பார்க்கிறேன் உடம்பு சிலிர்க்கிறது. தங்கள் பணி மென்மேலும் சிறக்கவேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஒம் நமசிவாய…
ஓம் நம சிவாய அனைத்தும் சிவமயம்
உங்கள் பதிகள் அனைத்தும் அருமை
அருமையான பதிவு சுந்தர்ஜி, இலங்கைக்கு நேரில் சென்று கொக்கட்டி சோலை சிவனையும் நந்தியையும் தரிசித்த ஒரு உணர்வு ஏற்பட்டது.
தொடரட்டும் உங்கள் ஆன்மிக பணி. எமது ஆதரவும் நேச கரமும் எப்போதும் உங்களோடு.
மிக்க நன்றி
B.D.வெங்கடேஷ்
பெங்களூரு
Very Very useful information. About this temple many people may not be knowing. You have done a very wonderful work.God bless you.
Regards
Padmavathi
Dear சுந்தர்
Excellent publication please continue
எம்பெருமானின் திருவிளையாடல்களை எத்தனை முறை படித்தாலும் மனம் சலிப்பதில்லை. அதுவும் அயல் நாட்டில் இருக்கும் இறைவனின் ஆலயத்தைத் தரிசிக்க நிச்சயம் பேறுபெற்றிருக்க வேண்டும். அத்தகைய அரும்பேற்றினை எங்களுக்கு வணங்கிய தங்களுக்கும், நண்பர் கிருஷாந்த் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அண்ணா
வழக்கம் போல மிக மிக அருமையான பதிவு.மெய்சிலிர்க்கவைக்கும் பதிவும் கூட.ஓம் நமசிவய
சுபா
Vanakkam Sundar
How are you? I born and lived for 32 years in Ceylon. Never been to Baticaloo. Never heard about this temple. I wonder how did you find all these surprising news.
In January went to Colombo. If I find this article before may be I could visit there. I missed the chance. I should wait for 3 years at least to see the temple.
Thank you so much for the article from Ceylon temple.
Wish you all the best. God bless you and your family.
Regards
Mano Aunty from Canada
சிவ சிவ
தென்னாடு டைய சிவனே போற்றி! போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!
புதிய மற்றும் நம்பிக்கையூட்டும் தகவல் .
நன்றி
சுந்தர் ,அருமையான பதிவு .வாழ்த்துக்கள் .
Miga nandraga irundhadhu ungaludaya thelivana nadayil kidaitha arayana vishayam
On nama shivaya.
சிவராத்திரி அன்று இந்த பதிப்பை படிக்க நேர்ந்தது சிவனருளால் தான் என்று நினைக்கிறேன்!
மிகவும் அருமையான பதிவு சுந்தர் ஜி. உங்கள் இறைப்பணி மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்.
super..
மன்னிப்புடன் என் கமெண்டை பதிவு செய்கிறேன்.
சிறிது நாட்களாக நான் சுந்தரின் மணி முத்துக்களை படிக்க தவறி விட்டேன். இறைவன் என்னருகிலேய தான் இருக்கிறான் என்பதை நான் ஒவ்வொவொரு சிக்கலாக தேடி போயி உட்காருவதும் அவன் என்னை காப்பற்றுவதுமே அவனின் பெருமை அறிய செய்யும்.
சுந்தரின் கட்டிரை அந்த சிவராத்திரி விரதம் கடைபிடிக்காதவர்களுக்கு கூட புண்ணியம் கிடைக்கும் படி செய்துவிட்டது. தங்களின் தகவல் திரட்டும் திறன் ஒரு சீனியர் ரிப்போர்டரால் கூட முடியாது. அடுத்தடுத்து எவ்வளவு பணிகள் தங்களுக்கு. படிக்கும் எங்களுக்கே மூச்சுவாங்குகிறது. அடுத்த முறையாவது சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கும் பேற்றை அந்த தாயுமானவன் எங்களுக்கு அருள வேண்டும். புகைப்படங்கள் வெகு அருமை நண்பரே.
தாயுமானவன் என்று திருத்தி படிக்கவும். Sila எழுத்துக்கள் மாறி உள்ளன. மன்னிக்கவும்.
நண்பரே, கொக்கட்டச்சோலை கோவில் பற்றிய பதிவு இன்று படித்தேன். மிகவும் நன்றாக எழுதப்பட்டுள்ளது. புகைப்படங்கள் துல்லியமாக உள்ளன. தொடரட்டும் இந்தப் பணி.