Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 8, 2024
Please specify the group
Home > Featured > ருத்ராக்ஷ லிங்கம், கயிலாய வாத்தியங்கள் & தசாவதாரம் – 7 வது இந்து ஆன்மீக கண்காட்சி – ஒரு ரவுண்டப்!

ருத்ராக்ஷ லிங்கம், கயிலாய வாத்தியங்கள் & தசாவதாரம் – 7 வது இந்து ஆன்மீக கண்காட்சி – ஒரு ரவுண்டப்!

print
7 வது இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக 1 லட்சத்து 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 340 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சி, தினமும் காலை 9.30 முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாகப் பார்வையிடலாம்.

DSCN4464

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் இருந்து 70 கிலோ தங்கத்தில் உருவான ஸ்ரீசுவர்ண லட்சுமி விக்ரகம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கண்காட்சியில் ஸ்ரீபுரம் அரங்குக்கு கொண்டுவரப்படுகிறது. அன்று முழுவதும் பார்வையாளர்கள் தாங்களே ஸ்ரீசுவர்ண லட்சுமிக்கு துளசி தீர்த்த அபிஷேகம் செய்யலாம்.

நீங்கள் ஏன் இந்து ஆன்மீக கண்காட்சிக்கு செல்லவேண்டும்?

ஏனெனில்…

* நமது ஹிந்து மத தர்மத்தை பற்றியும் பாரம்பரியத்தை பற்றியும், அதன் பெருமையை பற்றியும் நீங்களும் உங்கள் குழந்தைகளும் முழுமையாக தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

* வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இந்த கண்காட்சியை காணும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கிறது.

* திருமலை, கொல்லூர், சபரிமலை போன்ற வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் உள்ள பல பிரசித்தி பெற்ற திருத்தலங்களின் கோபுரங்களின் மூர்த்தங்களின் மாதிரியை தரிசிக்கலாம்.

* சேவையே ஆன்மிகம், ஆன்மீகமே சேவை என்ற உயரிய கருத்தை வலியுறுத்தும் இந்து மதத்தின் பல்வேறு அமைப்புக்களின் சேவையை பற்றி அறிந்துகொண்டு நீங்களும் உங்களை இணைத்துக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

* ஒரு ருத்ராக்ஷத்தை தரிசித்தாலே சிவபெருமானை தரிசித்ததற்கு சமம். அப்படியிருக்க கண்காட்சியில் லட்சக்கணக்கான ருத்ராக்ஷங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய சிவலிங்கத்தை தரிசிக்கலாம். கனவிலும் கிடைக்காத வாய்ப்பு இது.

இந்த கண்காட்சிக்கு செல்வது நமது கடமை.

DSCN4468

கண்காட்சியில் வேறு என்னென்ன பார்க்கலாம்?

* ஒரு லட்சம் ருத்ராட்சங்களினால் ஆன ஐந்து தலை நாகத்தின் மீது மகா பெரியவா அமர்ந்திருக்கும் சிலையை காணலாம்.

* இரண்டு லட்சம் ருத்ராட்சங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய சிவலிங்கத்தை தரிசிக்கலாம்.

DSCN4398

* வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தின் தத்ரூப மாதிரியை தரிசிக்கலாம்.

* குழந்தைகள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லும் சனாதன விருட்சத்தை காணலாம்.

DSCN4459

DSCN4432

* திருமலை திருப்பதியின் ஆனந்த நிலையத்தை தரிசிக்கலாம். அங்கு வைக்கப்பட்டிருக்கும் அரங்கனின் தத்ரூப படத்தை கண்டு பரவசமடையலாம்.

DSCN4302

DSCN4301

* கர்நாடக மாநிலத்தின் குக்கி சுப்ரமணிய சுவாமி கோவிலின் மாதிரி கோபுரத்தையும் மூலவரையும் தரிசிக்கலாம்.

* விஸ்வ ஹிந்து பரிஷத் ஸ்டாலில் கண்ணன் குழலிசைக்க, அதன் 1நடுவே தசாவதார சிற்பங்களை கண்டு ரசிக்கலாம்.

DSCN4319

* DSCN4324DSCN4320கொல்லூர் மோகாம்பிகை, பெங்களூரு பானாஷங்கரி, ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள நிமிஷம்பாதேவி ஆகியோரை இங்கேயே தரிசிக்கலாம். அந்த கோவில்களின் குங்குமப் பிரசாதத்தை பெற்றுக்கொள்ளலாம்.

DSCN4306

* அகஸ்திய க்ருபா ஸ்டாலில் மனைவி லோபாமுத்திரையுடன் அகஸ்திய மகரிஷியை தரிசிக்கலாம்.

DSCN4357

* சபரிமலை சேவா சமாஜம் ஸ்டாலில் சபரிமலை ஐயப்பனை 18 படிகளுடன் தரிசிக்கலாம்.

* சிவபுரம் ஸ்டாலில் வாழ்தலே வழிபாடு என்றுரைக்கும் நடராஜரை தரிசிக்கலாம்.

* அரங்கிற்கு வெளியே மைதானத்தில் ரதத்தில் ஆந்திர மாநிலம், யாதுகிரி குட்டாவின் பிரசித்தி பெற்ற லக்ஷ்மி நரசிம்மரையும் புட்லூர் அம்மனையும் அங்காள பரமேஸ்வரியையும் தரிசிக்கலாம்.

கண்காட்சியின் அட்ராக்ஷன்கள்

* ஹிந்து மதத்தை மரமாகவும், ஹிந்து ஆன்மிக, சேவை அமைப்புகளை விழுதுகளாகவும் சித்திரிக்கும் மிகப் பெரிய செயற்கை ஆலமரம் கண்காட்சி அரங்கில் அமைக்கப்பட்டுள்ளது.

DSCN4297

* DSCN4298இந்து ஆன்மிக சேவைக் கண்காட்சியில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சார்பில் 1 லட்சம் ருத்ராட்சங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட 5 தலை நாகத்தின் மீது அமர்ந்தபடி அமைக்கப்பட்டுள்ள காஞ்சி பரமாச்சாரியாரின் முழு உருவச் சிலை அனைவரையும் கவர்ந்துள்ளது. அதே போன்று 2 லட்சம் ருத்ராட்சங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட 20 அடி உயர பிரம்மாண்ட சிவலிங்கமும் ஹைலைட்டாக அமைந்துள்ளது.

DSCN4352

* DSCN4353‘கோசை நகரான் திருக்கயிலாயத் திருக்கூட்டம்’ அரங்கில் ‘கயிலாய வாத்தியங்கள்’ என்று அழைக்கப்படும் கொம்பு, கொக்கரை, சங்கு, திருச்சின்னம், பறை, தாரை, கண்டை (தவண்டை), தாளம் ஆகிய புராதன கருவிகள் பார்வையாளர்களுக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த இசைகருவிகள் கையிலாயத்தில் இருந்து வந்ததாக ஐதிகம்.

* அதேபோல் ‘சனாதன தர்ம விருட்சம்’ என்ற பெயரில் செயற்கை ஆலமரம் ஒன்று தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது இதனை மிருகங்கள் சுற்றி திரிவது போன்றும், 6 பண்புகளின் விளக்கமும் அளிக்கப்பட்டிருந்தது.

* ஆதி சிவ சபை அறக்கட்டளை அரங்கில் சங்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை தரிசிக்கலாம்.

DSCN4361

* தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்பு அரங்கில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள திருவாரூர் தியாகராஜர் + கமலாம்பிகை

* கோவை பாலாஜி நகரை சேர்ந்த ஸ்ரீ செல்வகணபதி ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் சேவை அறக்கட்டளையின் ஸ்டாலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர்

DSCN4449

* ஓம்காரத்தில் ஆரம்பித்து ஏகாரத்தில் முடியும் திருமுறை மந்திரத்தேர்.

*  கன்னியாகுமரி மாவட்டதில் உள்ள வெள்ளிமலையை சேர்ந்த ஸ்ரீ விவேகானந்தா ஆஸ்ரமத்தின் ஸ்டாலில் உள்ள வேடன் கண்ணப்ப நாயனார் உருவச் சிலை.

DSCN4453

* திருவெண்காடு சிவா நர்சரி கார்டனின் ஸ்டாலில் காணப்படும் பல அரிய தெய்வீக மூலிகைகள் மற்றும் செடிகள் (ருத்ராக்ஷம், திருவோடு, வன்னி, செஞ்சந்தனம், இராஜ சஞ்சீவி, அமிர்த சஞ்சீவி, நாராயண சஞ்சீவி, கிருஷ்ண கமலம், பேய் மிரட்டி etc.etc.)

DSCN4341

DSCN4418அவசியம் காணவேண்டிய ஸ்டால்கள் சில…

1) ஆனந்தாஷ்ரமம்

2) விஸ்வ ஹிந்து பரிஷத்

3) அமர் சேவா சங்கம்

4) கோசை நகரான் திருக்கயிலாயத் திருக்கூட்டம்

5) சிருங்கேரி சாரதா பீடம்

6) ஈஷா யோக மையம்

7) வேத ரக்ஷன சமிதி

8) மாடம்பக்கம் சேஷாத்ரி ஸ்வாமிகள் சித்தர் பீடம்

9) ஆத்ம தர்ஷன சேவா சமிதி

10) ராஷ்ட்ரீய சேவிகா சமிதி (ஆர்.எஸ்.எஸ். மகளிர் பிரிவு)

11) வேதாத்திரி மகரிஷியின் WORLD COMMUNITY SERVICE CENTRE

12) பசு பாதுகாப்பை வலியுறுத்தும் கோ ரக்ஷ் தள்

13) உளுந்தூர்பேட்டை சாராதா சேவாஷ்ரம்

14) ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன்

15) சிவா நர்சரி கார்டன் (மூலிகைப் பண்ணை)

இன்னும் பலப் பல அற்புதமான அரங்குகள் உண்டு…!

DSCN4380

DSCN4377

இந்து ஆன்மீக கண்காட்சிக்கு செல்லுங்கள். நமது பாரம்பரியத்தையும் அதன் பெருமையையும் உணர்ந்துகொள்ளுங்கள்!

=============================================================

 

 

 

4 thoughts on “ருத்ராக்ஷ லிங்கம், கயிலாய வாத்தியங்கள் & தசாவதாரம் – 7 வது இந்து ஆன்மீக கண்காட்சி – ஒரு ரவுண்டப்!

  1. படங்கள் அனைத்தும் கண்களையும் மனதையும் கொள்ளை கொள்கின்றன. இருபதடி உயரத்திற்கு உருத்திராக்கத்தினால் ஆன லிங்கமூர்த்தியை நினைத்துப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது. நேரில் தரிசித்தவர்கள் பேறு பெற்றவர்கள். வெளியூரில் இருக்கும் எங்களுக்காக படங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி!.

  2. எழாவது ஆன்மிக கண்காட்சியை நம் வாசகர் பரிமளம் மற்றும் என் மகன் ஹரிஷுடன் சென்று பார்த்தது இந்த வருடத்தின் மறக்க முடியாத நிகழ்வு. ஒவொரு ஸ்டாலும் மிகவும் அருமையாக இருந்தது. உலகிலேயே மிகப் பெரிய ஸ்படிக லிங்கத்தை பார்த்த பொழுது நம்மில் ஒரு சொல்லமுடியாத அதிர்வலை ஏற்பட்டது என்னவோ உண்மை. லிங்கத்தை தரிசித்தவுடன் ருத்ராக்ஷமும் எங்களுக்கு கிடைத்தது. ஒரு லட்சம் ருத்ராக்ஷம் கொண்டு உருவாக்கப்பட்ட மகா பெரிய மிகவும் தத்ரூப மாக இருந்தது. சிவலிங்கமும் அருமை. கண்காட்சி ஒன்று சேர லட்சத்திற்கும் மேற்பட்ட ருத்ராக்ஷங்களை பார்த்து ஜன்ம சாபல்யம் பெற்றோம் என்றால் மிகையாகாது .

    ஈசாவின் ஸ்டாலும் அருமை. அந்த ஸ்டாலை பார்த்து எங்களுக்கு மானசரோவர் போக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. அதற்கான details கேட்டு தெரிந்து கொண்டோம். ஈசன் அருள் இருந்தால் கண்டிப்பாக நிறைவேறும்.

    விவேகனந்தர் ஸ்டால் தத்ரூபமாக உள்ளது. அங்குள்ள விவேகானந்தர் சிலையை பார்த்து நம் நம்பருக்கு பரிசளிக்கலாம் என நானும் பரிமளமும் நினைத்திருக்கிறோம்.

    என் அம்மாவின் குரு ஞானானந்தா கிரியின் ஸ்டாலும் நன்றாக இருந்தது.

    ‘மொத்தத்தில் ஒரு கோவிலுக்கு சென்று எல்லா சுவாமியையும் ஒரே நேரத்தில் தரிசித்த உணர்வு ஏற்பட்டது.

    கடைசி நாளான இன்று அரங்கனுக்கு ஸ்ரீனிவாச கல்யாண வைபவம் மாலை 6 மணிக்கு நடை பெறுகிறது. அனைவரும் அரங்கனின் கல்யாண வைபவத்தை கண்டு களிக்கவும்.

    எங்களில் ஸ்ரீபுரம் மகா லக்ஷ்மியை பார்க்க முடியவில்லை. 1 மணி வரை வேலூரில் இருந்து அம்மன் வரவில்லை. ஆகையில் எங்கள் கையால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

    இந்த கண்காட்சியை பற்றி அடிக்கடி பதிவளித்து கண்காட்சியை அவசியம் பார்க்கவேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தியமைக்கு ரைட்மந்த்ராவுக்கு நன்றி.

    அணைத்து படங்களும் அருமை.

    அடுத்த வருடம் நம் ஸ்டாலை ஆவலுன் எதிர்பார்கிறேன்.

    நன்றி
    உமா வெங்கட்

  3. அருமையான பதிவு
    புகைப்படங்கள் அனைத்தும் கண்களையும் மனதையும் நிறைக்கின்றன
    கண்காட்சியை நேரில் கண்டுகளித்த உணர்வு
    இக்கண்காட்சியை அவசியம் தரிசிக்க வேண்டியது ஒவ்வொரு ஹிந்துவின் கடமை
    ஒரு இனிய புனித யாத்திரை சென்று வந்ஹ்ட அனுபவத்தை அளித்த சுந்தர் அவர்களுக்கு நமது தளத்தின் வாசகர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுதல்களும்

    நல்லதே நினைப்போம்
    நல்லதே செய்வோம்
    நல்லதே நடக்கும்

    வாழ்க வளமுடன் – தொடரட்டும் உங்கள் திருப்பணி !!!

  4. தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி. ரைட் mantra பார்த்த பிறகு தான் என் சிற்று அறிவுக்கு மீனம்பாக்கம் போய் பல் வேறு ஸ்வாமிகளை பார்க்க பாக்கியம் கிடைத்துது.

    மிக்க நன்றி.

    கே. சிவசுப்ரமணியன் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *