சென்ற ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இந்தப் பதிவில் அளித்திருக்கிறோம். இந்த ஆண்டு குறித்த கவரேஜ் இரண்டொரு நாளில் அளிக்கப்படும்.
இந்த கண்காட்சியில் இடம்பெறவேண்டும் என்பது நமது லட்சியங்களுள் ஒன்று. அடுத்த ஆண்டு இந்த கண்காட்சியில் ரைட்மந்த்ரா.காம் இடம்பெற்றே தீரும்.
சென்ற ஜூலை மாதம் இந்த கண்காட்சி நடைபெற்றபோது நாம் சென்றிருந்தோம். ஆனால் நேரமின்மை காரணமாக தளத்தில் அது குறித்த பதிவை அளிக்க முடியவில்லை.
ஆனால் இந்த ஆண்டு துவக்கவிழாவிற்கே நாம் செல்கிறோம். எனவே கவலைவேண்டாம். கண்காட்சி குறித்த விரிவான பதிவு வட்டியும் முதலுமாக இடம்பெறும்.
எப்படி வாழவேண்டும்?
1. வீட்டில் தினமும் தவறாமல் கடவுளுக்கு பூஜை செய்தல். வாரம் ஒருமுறையேனும் தவறாமல் கோவிலுக்கு செல்லுதல்.
2. இல்லறத்தில் கணவனும் மனைவியும் கற்பு நெறி காத்து உண்மையான அன்பு செலுத்துதல்.
3. பெற்றோர்களையும் மகான்களையும் தூய சாதுக்களையும் பக்தியுடனும் பணிவுடனும் வணங்கி அவர்களுடைய ஆசிகளை பெறுதல்.
4. ஏழை எளியவர்களுக்கு உணவளிப்பதோடு இயன்ற உதவிகளை அவர்களுக்கு மனமுவந்து செய்தல்.
5. கடவுளின் பெருமையை கேட்பதும், நினைப்பதும், புகழைப் பாடுவதும், இறைவனுடைய தெய்வீக குணங்களை பேசுவதும் நாம ஜபம் செய்தலும் முக்கிய கடமை என்று எண்ணிச் செய்து வருதல்.
6. சோதனைகள், துன்பம் வரும் காலங்களில் யாரையும் குறை சொல்லாமல் தளர்வடையாமல் துன்பங்களை வெல்ல இறைவனைத் துணையாக கொள்ளுதல்.
7. தன்னுடைய உடல், பொருள், சொத்து, அனைத்தும் இறைவன் தந்தது என்பதை உணர்ந்து அவற்றை முறையாக பயன்படுத்தி உயர்ந்த வாழ்க்கை வாழுதல்.
இவ்வாறு வாழ்வதன் மூலம் தீவினைப் பயன்கள் குறைந்து பல நன்மைகள் கிடைக்கும். கடவுளின் அருள் காத்து நிற்கும். மேற்கூறியவை அனைத்தும் நமது மகான்களால் பல்வேறு காலகட்டங்களில் நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.
கண்காட்சியில் ஒரு ஸ்டாலில் கண்டது இது. இது ஒரு சாம்பிள் தான். இப்படி பல நல்ல விஷயங்கள் கண்காட்சியில் கொட்டிக்கிடக்கிறது. காணத் தவறாதீர்கள்!
=============================================================
Also check :
சென்னையில் 6 வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி – MUST VISIT
இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி 2012 – ஒரு பார்வை!
இந்து ஆன்மீக & சேவை கண்காட்சி – பார்வையாளர்களை ஈர்த்த ஆந்திர கோவில்களின் ரதங்கள் – கவரேஜ் 1
=============================================================
[END]
படங்கள் அனைத்தும் அருமை
கண்காட்சி பதிவு வரவில்லை என்றாலும் தற்போது பதிவில் படங்களை பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக உள்ளது
இந்த கண்காட்சி நாம் அனைவரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒன்று.
நாம் செல்லமுடியாத பல கோவில்களுக்கும், அந்தந்த ஊரில் இருக்கும் எல்லா தெய்வங்களையும் நாம் நேரில் தரிசித்த உணர்வு வரும்.
கண்டிப்பாக எல்லோரும் கட்டாயம் சென்று விட்டு வந்து உங்கள் உணர்யுகளை இந்த தளத்தில் பகிர்ந்துகொள்ளுங்கள் .
நன்றி
இனிய காலை வணக்கம்
அனைவரும் இந்து ஆன்மிக கண்காட்சிக்கு செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் அழகிய பதிவு. போன வருடம் நாம் இந்த கண்காட்சிக்கு சென்று அணைத்து ஸ்டால்களையும் கண்டு ரசித்தது மறக்க முடியாத ஒன்று especially மகா பெரியவா ஸ்டால். சுவாமி விவேகானந்தா ஸ்டால், திருப்பதி பெருமாள் , மற்றும் பல அறிய ஸ்டால்கள்.
இந்த வருடமும் முன்டிந்தால் செல்வோம். ஜெயின் கல்லூரி நமக்கு மிகவும் பரிச்சயமான இடம்.
வாழ்க …………. ஆன்மிகம் ..வளர்க தங்கள் ஆன்மிகத் தொண்டு
நன்றி
உமா வெங்கட்
சுந்தர் சார்,
நல்ல விஷயம். நாம் இது வரை கண்டதில்லை. பார்க்க ஆவலாக இருக்கிறேன். தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.