அப்படி நான்கு சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான திருஞான சம்பந்தப் பெருமானால் விதியை மாற்றிக் காட்டச் செய்த ஒரு அற்புத வரலாற்றை இங்கே காணலாம். உங்களில் பலருக்கு இது பற்றி தெரிந்திருக்கும். இருப்பினும் இந்த வார பிரார்த்தனையில் வைக்கப்பட்டுள்ள ஒரு கோரிக்கையின் பொருட்டே இந்த வரலாறும் பதிகமும் அளிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்டவர்கள் தவிர அந்த பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் அனைவருக்கும் இது ஒரு கலங்கரை விளக்கமாக இருக்கும்.
சென்னை மயிலாப்பூரில் சிவநேசச் செட்டியார் என்கின்ற செல்வம் நிறைந்த ஒரு பெருவணிகர் வாழ்ந்து வந்தார். அவருக்குப் பூம்பாவை என்று அழகான பெண் குழந்தை இருந்தாள். திருஞானசம்பந்தரின் புகழைக் கேள்விப்பட்ட செட்டியார், தன் மகளை அவருக்கு மணம் முடிக்க விரும்பினார். அதன்படியே மகளை வளர்த்தும் வந்தார். பூம்பாவைக்கு ஐந்து வயதானபோது அவள் பாம்பு தீண்டி இறந்துவிடுகிறாள்.
அவளுடைய பூத உடலை எரித்துச் சாம்பலாக்கி, அந்த அஸ்தியை ஒரு குடத்தில் இட்ட செட்டியார், அதைக் கன்னி மாடத்தில் வைத்துவிடுகிறார். இருந்தாலும் தன் மகள் உயிருடன் இருப்பதாக நினைத்து அனைத்து வேலைகளையும் செய்கிறார்.
இது நடந்து சில வருடங்கள் கழித்து திருஞான சம்பந்தர் அந்த ஊருக்கு வருகிறார். அவரைப் பார்த்த ஊர் மக்கள் பூம்பாவையைப் பற்றிச் சொல்கிறார்கள். சம்பந்தர், ஆலயத்துக்குள் நுழையாமல் செட்டியாரைச் சந்திக்கிறார். அவருடைய மகளின் அஸ்தி இருக்கும் குடத்தை எடுத்துவரச் சொல்கிறார். அந்த அஸ்தியின் முன்னால் அமர்ந்து ஒவ்வொரு விழாவாகச் சொல்லி ஒவ்வொரு பதிகம் பாடுகிறார்.
“இந்த ஊரில் கார்த்திகை தீபம் நடக்கும், பெண்கள் எல்லாம் வீட்டில் விளக்கேற்றுவார்கள். அதைப் பார்க்காமல் மாண்டு போனாயே. இந்த ஊரில் தைப்பூசம் நடக்கும். பெண்கள் எல்லாம் பொங்கல் வைத்துக் கொண்டாடுவார்கள். அதை எல்லாம் பார்க்காமல் மாண்டு போனாயே” என்று பாடுகிறார்.
சம்பந்தர் பாடி முடித்ததும் அப்போது பூம்பாவை உயிரோடு இருந்திருந்தால் என்ன வயது இருக்குமோ அந்த வயதோடு குடத்தை உடைத்துக்கொண்டு வெளியே வந்தாள். அங்கம் என்றால் எலும்பு. எலும்பு உயிர்ப்பெற்று வந்ததால் அங்கம் பூம்பாவை என்று அழைக்கப்பட்டாள்.
விபத்தில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்டு எவரேனும் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவார்களேயானால் இந்த பதிகத்தை பக்தியுடன் அவர்களோ அவர்களுக்காக மற்றவர்களோ பாடி வந்தால் அவர்கள் மருத்துவர்களே வியக்கும் வண்ணம் விரைந்து நலம் பெறுவார்கள் என்பது உறுதி.
திருமயிலாப்பூர்
மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.
மைப்பயந்த வொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான்
ஐப்பசி யோண விழாவு மருந்தவர்கள்
துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்.
வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.
ஊர்திரை வேலை யுலாவு முயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச் சரமமர்ந்தான்
ஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்.
மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்க னேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்.
மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
அடலானே றூரு மடிக ளடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்.
மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்தரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்.
தண்ணா வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிலைக் கபாலீச் சரமமர்ந்தான்
பண்ணார் பதினெண் கணங்கடம் மட்டமிநாள்
கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்.
நற்றா மரைமலர்மே னான்முகனு நாரணனும்
முற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக்
கற்றார்க ளேத்துங் கபாலீச் சரமமர்ந்தான்
பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய்.
உரிஞ்சாய வாழ்க்கை யமணுடையைப் போர்க்கும்
இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில்
கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச் சரத்தான்றன்
பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்.
கானமர் சோலைக் கபாலீச் சரமமர்ந்தான்
தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான்
ஞானசம் பந்த னலம்புகழ்ந்த பத்தும்வல்லார்
வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே.
==================================================================
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குவது : நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் (Indian National Army) பணியாற்றிய தியாகி.திரு.முத்தப்பா அவர்கள்.
எண்பத்தி ஆறு வயதாகும் திரு.முத்தப்பா சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டங்களில் பர்மாவில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் இந்திய தேசிய ராணுவத்தில் சிப்பாயாக பணியாற்றியவர். பர்மாவிலிருந்து தமிழகம் வந்தபோது காமாரஜாரிடம் அடைக்கலம் புகுந்து பின்னர் அவர் அறிவுறுத்தலின் பேரில் ஏ.வி.எம். நிறுவனத்தில் ஒப்பனைக் கலைஞராக சேர்ந்தார். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கும் மேல் முன்னை நட்சத்திரங்களுக்கு ஒப்பனைக் கலைஞராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர் இவர். இன்றும் நமது அரசின் தியாகிகள் பட்டியலில் இடம்பெற்று சுதந்திர் போராட தியாகிகளுக்குரிய ஓய்வூதியமும் இதர பல சலுகைகளையும் பெற்று வருகிறார் திரு.முத்தப்பா. திரு.முத்தப்பா அவர்களை நேதாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு 2013 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதியும், இந்த ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதியும் சந்தித்து அது பற்றிய பதிவுகளை அளித்திருக்கிறோம்.
நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டுகொண்டபோது மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.
==================================================================
* நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்றிருந்த இரண்டு கோரிக்கைகள் நிறைவேறியிருப்பதாக சென்ற வாரம் தெரிவித்திருந்தோம் அல்லவா? தற்போது மற்றொரு தகவல் கிடைத்திருக்கிறது. மூன்றாவதாக தன் கோரிக்கை நிறைவேறியிருப்பதாக வாசகர் ஒருவர் நமக்கு தெரிவித்திருக்கிறார். விபரங்கள் விரைவில்…!
==================================================================
இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?
இந்த வார பிரார்த்தனைக்கு முதலில் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கை ஞானானந்தகிரி ஸ்வாமிகளின் வாட்ஸ் ஆப் க்ரூப்பில் நாம் கண்ட ஒன்று. அந்த க்ரூப்பின் நண்பர் ஒருவர் இது பற்றி விவரித்து மேற்படி குடும்பத்தினருக்காக அனைவரையும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுகொண்டிருந்தார். படித்தவுடன் கல்நெஞ்சும் கரையும் வண்ணம் இருந்தது.
சாலை விபத்து ஒன்றில் குடும்ப உறுப்பினர்கள் பலரை பறிகொடுத்ததோடல்லாமல் பெற்ற மகளையும் பறிகொடுத்துவிட்டு தவிக்கும் கோபி & சசிரேகா தம்பதியினரை நினைத்தால் கண்கள் கலங்குகிறது. அவர்கள் இருக்கும் நிலையில் இந்த பதிகங்கள் எல்லாம் படிக்க இயலுமா? நாம் நன்றாகத் தானே இருக்கிறோம்… எனவே இந்த வாரம் முழுதும் நாம் அனைவரும் சேர்ந்து இந்த பதிகத்தை தினமும் காலை நமது பணிகளை துவக்கும் முன்னர் அவர்களுக்காக படித்து வருவோம். நிச்சயம் அந்த குடும்பத்திற்கு இறைவன் ஆறுதல் அளிப்பதோடு அவர்கள் அனைவரும் விரைந்து நலம் பெற அருள்புரிவான்.
வாசகர்கள் இது தொடர்பாக நமக்கு ஒத்துழைப்பு நல்கிடுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம். பதிகம் படிக்கும்போது கூடவே இரண்டாவது கோரிக்கை அனுப்பியிருக்கும் சுரேஷ் அவர்களின் தந்தை லோகநாதன் அவர்களுக்காகவும் பிரார்த்திப்போம்.
நோய் இல்லா வாழ்வு அமைய நின் கருணை விழி வேண்டும்!
பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்!!
==================================================================
குடும்பமே விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் கொடுமை !
Friends,
A sad news…
One of HP employee Gobi met with an accident few days back near Tirchy. He was travelling in a van along with his relatives.
Gobi lost his relatives, parents and 8 year old daughter.. He is suffering from head injury, his wife with hip & rib injury and his 2 yr old younger son with arm injury..
They are admitted in Tirchy hospital and the treatment estimates around 2L..
Please forward to your friends which may help them for a better and quick recovery..
– Sri Ram Venkat
==================================================================
உயிருக்கு போராடும் தந்தை!
பெருந்துறையை சேர்ந்த நம் வாசகர் திரு.சண்முகநாதன் அவர்களின் நண்பர் திரு.சுரேஷ். கார்மெண்ட் எக்ஸ்போர்ட் பிஸ்னெஸ் செய்து வருகிறார். அவர் தந்தை திரு.லோகநாதன் (வயது53) என்பவருக்கு சிறுநீரகம் இரண்டும் பழுதடைந்துள்ளது. இந்நிலையில் இதய நோயும் ஏற்பட்டுள்ளது. மிகவும் ஆபத்தான நிலையில் ரேவதி மருத்துவமனை, திருப்பூரில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். சிறுநீரகம் பழுதடைந்துள்ள நிலையில் ஆஞ்சியோகிராம் செய்ய இயலாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
திரு.சுரேஷ் நம்மிடம் தனது தந்தைக்காக பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர்களது நிலைமையை உணர்ந்து உடனடியாக அவர்களுக்கு வேல்மாறல் நூலை அனுப்புவதாகவும் அதை படிக்கும்படியும் கூறியிருக்கிறோம்.
==================================================================
பொது பிரார்த்தனை
தியாகிகள் படும்பாடு முடிவுக்கு வரவேண்டும்
இந்தியாவில் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் படும் பாடு வேறு எந்த நாட்டிலும் இருக்காது. தகுதியிருந்தும் அரசாங்க நடைமுறைகளினால் பலரால் ஓய்வூதியப் பட்டியலில் இடம்பெறமுடியவில்லை. இடம்பெற்றுள்ள பலருக்கும் ஓய்வூதியம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
கக்கன், வ.உ.சிதம்பரனாரின் வழிதோன்றல்க மற்றும் அவர்களது சகோதரர்களின் குடும்பத்தினருக்கு போனால் போகிறதென்று மாதம் 2,000 ரூபாய் சிறப்பு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. அது அப்படியே தான் உள்ளதா? இல்லை உயர்த்தப்பட்டதா என்று தெரியவில்லை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அரியலூர் மாவட்டம் முத்துசேர்வாமடம் கிராமத்தைச் சேர்ந்த 86 வயதான சுதந்திர போராட்டத் தியாகி சுப்ரமணி என்பவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். வயதான காலத்தில் அவர் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் கேட்டு அரசுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அப்போதைய மாநில அரசு அவருக்கு ஓய்வூதியம் வழங்க மறுத்துவிட அவர் அளித்த கோரிக்கையை பரிசீலிக்குமாறு, தமிழக உள்துறைச் செயலருக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை செய்திருந்தது. ஆனால அதற்கு பிறகும் அவருக்கு ஓய்வூதியம் கிடைத்ததாக தகவல் இல்லை.
சுதந்திரத்துக்கு போராடிய பல உண்மையான தியாகிகளின் வரலாறு இன்றைய மாணவர்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் தெரியவில்லை. இன்னும் நாம் கர்சன் பிரபு, மவுண்ட் பேட்டன் பிரபு என்று படித்துக் கொண்டிருப்பதில் என்ன பயன்? இன்றைய தலைமுறையினருக்கு இந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகள் யாரென்று ஒருவருக்கும் தெரியாது. நம் அரசோ அவர்கள் குடும்பத்துக்கு ஆயிரம் இரண்டாயிரம் என்று கணக்கு பார்க்கிறது. இதை விட இந்த தியாகிகள் குடும்பத்தை நாம் நோகடிக்க முடியாது.
சுதந்திர போராட்ட தியாகிகள் மதிக்கப்படும் போற்றப்படும் நாடுகளே நல்ல நிலையில் இருக்கும். தியாகிகளை மதிப்போம். அவர்களின் தியாகத்தை போற்றுவோம்.
அதுவே இந்த வார பொது பிரார்த்தனை!
==================================================================
முசிறி சாலை விபத்தில் சிக்கிய குடும்பத்தை சேர்ந்த திரு.கோபி அவர்களுக்கோ அவரது குடும்பத்தினருக்கோ இறைவன் ஒருவனே ஆறுதல் அளிக்கமுடியும். விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி வரும் திருச்சி எடமலைப்பட்டிப்புதூரை சேர்ந்த திரு.கோபி (35), சசிரேகா (32), லத்தியேந்திரன் (2) மற்றும் அவர்கள் உறவினர்கள் அனைவரும் விரைந்து நலம் பெறவும், விபத்தில் உயிரிழந்த அவரது உறவுகள் மற்றும் குழந்தை பவதாரிணி ஆகியோரின் ஆன்மா சாந்தியடையவும் இறைவனை வேண்டுவோம். அதே போன்று திருப்பூரை சேர்ந்த திரு.லோகநாதன் அவர்களின் சிறுநீரக பாதிப்பும், இதய நோயும் நீங்கி அவர் முற்றிலும் நலம் பெற்று ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுவோம்.
இந்த வாரம் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றிருக்கும் நேதாஜியின் தொண்டர் பெரியவர்.தியாகி திரு.முத்தப்பா (86) அவர்கள் மேலும் பல்லாண்டு இந்த உலகில் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று வாழவேண்டும்.
சுதந்திரத்துக்காக தங்கள் இளமையையும் வாழ்க்கையையும் உறவுகளையும் தியாகம் செய்து இன்றோ நம்மோடு வாழ்ந்து வரும் சுதந்திர போராட்ட தியாகிகள் உரிய முறையில் நடத்தப்படவேண்டும்.
நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.
கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.
நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!
பிரார்த்தனை நாள் : ஜனவரி 25, 2015 ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm
இடம் : அவரவர் இருப்பிடங்கள்
=============================================================
பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:
உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.
=============================================================
பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.
அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.
(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)
=============================================================
உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…
உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!
உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.
E-mail : simplesundar@gmail.com Mobile : 9840169215
=============================================================
பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131
=============================================================
சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : மேற்கு மாம்பலம் ‘ஸ்ரீ வேத வித்யா ஆஸ்ரமம்’ என்ற யஜூர் வேத பாடசாலையில் வேதம் பயின்று வரும் மாணவர்கள்.
பூம்பாவை கதை தெரிந்த கதை . நம் தளத்தின் மூலம் படிக்கும் பொழுது அதன் மதிப்பே தனி தான்.
இந்த வார பிரார்த்தனை கோரிக்கையை படிக்கும் பொழுது கண்களில் கண்ணீர் வருகிறது. அவர்களுக்காக் ”மட்டிட்ட …………. பாடல் .இந்த வாரம் முழுவதும் கண்ண்டிபாக படிப்பேன்.
திரு சுரேஷ் அவர்களின் தந்தைக்காக பிரார்த்தனை செய்வோம்.
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு முத்தப்பா அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்
விடுதலை போராட்ட தியாகிகளுக்காகவும் பிரார்த்தனை செய்வோம்.
மைலாப்பூர் கோவில் குளம் தண்ணீர் உடன் பார்ப்பதற்கு கொள்ளை அழகு . கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.
லோகா சமஸ்தா சுகினோ பவந்து
ராம் ராம் ராம்
மகா ….பெரியவா…. கடாக்ஷம்
நன்றி
உமா வெங்கட்
இந்த வாரம் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றிருக்கும் நேதாஜியின் தொண்டர் பெரியவர்.தியாகி திரு.முத்தப்பா அவர்களுக்கு எங்கள் நன்றி.
அவர்கள் நீண்ட ஆயுள் பெற்று எல்லா நலமும், வளமும் பெற வேண்டுவோம்.
தியாகிகள் அனைவரும் இன்புற்று வாழவும்.
சகோதரர் கோபி அவர்கள் சந்தித்த விபத்தை அறிந்தவுடன் நெஞ்சம் பதறுகிறது,அவர்களும், அவர் குடும்பத்தாரும் விரைவில் நலம் பெற்று நல்ல ஆரோக்கியத்துடன் வீடு திரும்பவும்,
விபத்தில் உயிர் இழந்தவர்கள் ஆத்மா சந்தி அடையவும்,
சகோதரர்.சுரேஷ். அவர்களின் தந்தை திரு.லோகநாதன் விரைவில் நலம் பெறவும், மகா பெரியவாவை வணங்கி மனம் உருகி பிரார்த்தனை செய்வோம்.
அருமை….அருமையான பதிகம் …இதன் சிறப்பை சொல்லில் வடிக்க முடியாது அய்யனே …….சிவாயநம…..
பிணி தீர்ந்து உய்யும் பாடல்
//மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந்தருவி
வெடிபட கரையொடுந் திரை கொணர்ந் தெற்றும்
அன்னமாக் காவிரி அகன் கரை உறைவார்
அடியினை தொழுதெழும் அன்பராம் அடியார்
சொன்னாரறி வார் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
என்னை நான் மறக்குமா றெம் பெ ருமானை
என்னுடம் படும் பிணி இடை கெடுத்தானை // சுந்தரர்
திருச்சிற்றம்பலம்
உயிருக்கு உறுதி அளிக்கும் சேக்கிழார் பெருமான் பாடிய பாடல்
“” இருவினைப் பாசமும் மலக்கலார்த்தலின்
வருபவக் கடலில் வீழ மாக்க ளேறிட
அருளுமெய் அஞ்செழுத்தரசை இக்கடல்
ஒருகணமே லேற்றிட உரைக்க வேண்டுமோ “”
திருச்சிற்றம்பலம்
நன்றி
உமா வெங்கட்