அவரிடம் பேசியபோது தான் தெரிந்தது. தவறு அவர் முதலாளி மீது அல்ல. அவர் மீது தான் என்று.
“ஆபீசே கதியாகக் கிடந்தால் நல்ல பெயர், ப்ரோமோஷன் கிடைக்கும் என்று முதலில் உங்களுக்கு யார் சொன்னார்கள்?” என்றோம்.
“அது வந்து…. வந்து…” என்று இழுத்தார்.
அவருக்காகத் தான் இந்த கதை. அவருக்காக மட்டுமல்ல அவரைப்போன்ற அனைவருக்காகவும் தான்.
மாடா… மனுஷனா?
அது ஒரு மிகச் சிறந்த ஏற்றுமதி நிறுவனம். அங்கு பணிக்கு சேர்ந்தால் அரசு உத்தியோகத்தில் சேர்வது போல என்று கூறுமளவிற்கு பல சலுகைகள் உண்டு. மூர்த்தி, கீர்த்தி என்கிற இரண்டு எம்.பி.ஏ. பட்டதாரிகள் ஒரே நேரத்தில் அந்த நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தனர். இருவரும் நண்பர்கள் அல்ல. ஒரே நிறுவனத்தில் ஒரே நாள் நடைபெற்ற நேர்காணலில் பணிக்கு சேர்ந்தவர்கள். இருவரும் நல்ல நல்ல உழைப்பாளிகள்.
அந்த நிறுவனத்தின் சேர்மன் & நிர்வாக இயக்குனர் மிகவும் நல்லவர். ஊழியர்களிடையே பாரபட்சம் பார்க்காதவர் எனப் பெயர் பெற்றவர்.
இருவரும் அவரவர் பணியை சிறப்பாக செய்து வந்தனர். ஒரு சில ஆண்டுகள் கழிந்தன.
கீர்த்திக்கு மட்டும் அடுத்தடுத்து ஊதிய உயர்வு, ப்ரோமோஷன் என்று அவர் மூர்த்தியைவிட பல படிகள் மேலே சென்றார். இது கண்டு மூர்த்திக்கு பொறுக்கவில்லை.
கீர்த்தி மேல் பொறாமை இல்லையென்றாலும் தனக்கு ஊதிய உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கவில்லையே என அவர் மனம் குமுறியது. குமுறலின் விளைவாக இப்படி ஒரு மன உளைச்சலுடன் இந்த நிறுவனத்தில் பணிக்கு சேர்வதற்கு பதில் நம் வேலையை ராஜினாமா செய்துவிட்டு போய்விடலாம் என்று முடிவு செய்து ராஜினாமா கடிதத்தை சேர்மனிடம் கொண்டு போய் கொடுத்தார் மூர்த்தி.
“சார்… இந்த நிறுவனத்திற்கு உண்மையாக உழைப்பவர்களை நீங்கள் கண்டுகொள்ளவில்லை. ஊழியர்களிடையே பாரபட்சம் பார்க்கிறீர்கள். அதை என்னால் ஏற்றுகொள்ளமுடியவில்லை. எனவே என் வேலையை ரிசைன் செய்கிறேன். மன்னித்துவிடுங்கள்.” என்றார்.
மூர்த்தி எந்தளவு ஒரு நேர்மையான ஊழியர் என்று சேர்மனுக்கு தெரியும். இருப்பினும் ஊதிய உயர்வும் பணி உயர்வும் பெற்றுள்ள கீர்த்தி இவரை விட எந்தவகையில் சிறந்தவர் என்பதை உணர்த்த எண்ணினார்.
தங்கள் நிறுவனத்தில் அடுத்து ஏற்றுமதி செய்யப்படவுள்ள ஒரு கார் சுவிட்ச் பாகத்தை காண்பித்து, “அடுத்து இதைத் தான் நம் நிறுவனம் நிறைய கொள்முதல் செய்து பெரிய அளவில் ஏற்றுமதி செய்யவிருக்கிறது. இது மார்க்கெட்டில் தாராளமாக கிடைக்கிறதா என்று பார்த்துவிட்டு வந்து உன் ரிபோர்ட்டை கொடு. அரை நாள் அவகாசம் எடுத்துக்கொள். அப்புறம் நீ ராஜினாமா செய்யலாம்” என்றார்.
“கிளம்புற நேரத்துல கூட வேலை வாங்குறாரே இந்தாளு” என்று உள்ளுக்குள் புலம்பிக்கொண்டே எழுந்து சென்றார் மூர்த்தி.
ஒரு சில மணிநேரங்கள் கழித்து திரும்ப வந்தவர், “விசாரித்துவிட்டேன். இரண்டு மூன்று இடங்களில் தாராளமாக கிடைக்கிறது.”
“ஓ… அப்படியா? வெரி குட். என்ன ரேட் சொல்றாங்க?”
“ரேட்டா… அதை நான் கேட்கலியே…”
“எனக்கு ரேட் அவசியம் வேணும். அப்போதான் ஆர்டரை பைனலைஸ் பண்ண முடியும். மறுபடியும் போய் ரேட்ஸ் விசாரிச்சுட்டு வா” என்று பணித்தார் சேர்மன்.
முன்னைப் போல அலுத்துக்கொண்டே மீண்டும் மார்கெட்டுக்கு போய் விலையை விசாரித்துக்கொண்டு வந்தார் மூர்த்தி.
“வெரிகுட். வெரிகுட். இப்போ ஆர்டர் பண்ணா எப்போ சப்ளை பண்ணுவாங்களாம்?”
மூர்த்தி ஒருமாதிரி நெளிந்த படி…. “அதை நான் கேட்கலியே………. நான் வேணும்னா மறுபடியும் போய் எல்லா டீடெயில்ஸூம் கரெக்ட்டா கேட்டுக்கிட்டு வர்றேன் சார்” என்றார்.
“NO ISSUES. கொஞ்சம் இரு…” என்று கூறி, இண்டர்காமில் கீர்த்தியை அழைத்தார்.
கீர்த்தியிடம் அதே சுவிட்ச்சை கொடுத்து “மார்கெட்டில் இது கிடைக்கிறதா?” என்று பார்த்து வா என்கிறார்.
கீர்த்தி சென்ற அடுத்த வினாடி, “நாம் கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருப்போம் மூர்த்தி…” என்று கூறி, அவர் அடுத்து வேலைக்கு சேரப்போவது எங்கே, என்ன, அவர் குடும்ப நிலை, அப்பா அம்மா இப்படி எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்.
ஒன்றரை மணி நேரம் சென்றிருக்கும்…. இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே கீர்த்தி வந்துவிட்டார்.
“சார்… இந்த மாடல் சுவிட்ச் மொத்தம் மூணு இடத்துல கிடைக்குது. ஒரு இடத்துல ரூ.500. இன்னொரு இடத்துல ரூ.510. வேறொரு இடத்துல ரூ.550. இதோ அவங்கவங்க லெட்டர் ஹெட்ல கொட்டேஷன் வாங்கிட்டு வந்திருக்கேன். இன்னைக்கு ஆர்டர் பண்ணா 24 மணிநேரத்துல சப்ளை பண்ணிடுவாங்களாம். CASH PUCHASE ன்னா 5% டிஸ்கவுன்ட் தர அதுல ரெண்டு பேர் ரெடியா இருக்காங்க. இன்னொருத்தர் ஆயிரம் பீஸ்க்கு மேல ஆர்டர் பண்ணா 20% வரைக்கும் டிஸ்கவுன்ட் தரத் தயாரா இருக்கார். அதுல ஒருத்தர் மட்டும் ஷிப்பிங் கூட நாங்க பார்த்துக்குறோம். போய் சேரவேண்டிய அட்ரஸ் மட்டும் கொடுங்க போதும்னு சொல்றார்….” என்றார்.
“வெல்டன் கீர்த்தி… YOU MAY GO. I WILL GET BACK TO YOU.”
கீர்த்தி போன பின்னர், “மூர்த்தி… இது தான் HARD WORK கிற்கும் SMART WORK கிற்கும் உள்ள வித்தியாசம். எனக்கு மட்டுமல்ல எந்த ஒரு நிறுவனதிற்குமே தேவை கடினமாக உழைப்பவர்கள் அல்ல. சாமர்த்தியமாக உழைப்பவர்கள் மட்டுமே. அவர்களால் தான் ஒரு நிறுவனத்தை முன்னேற்ற பாதையில் செலுத்த முடியும்.”
மூர்த்திக்கு அப்போது தான் புரிந்தது கீர்த்திக்கும் தனக்கும் உள்ள வேறுபாடு. தன் தவறும் புரிந்தது. ராஜினாமா கடிதத்தை கிழித்து போட்டு, சேர்மனை நோக்கி சொன்னார்…. “சார்… ஐ ஆம் ஸாரி. நான் என் ராஜினாமா முடிவை வாபஸ் பெறுகிறேன். என்னை தயவு செய்து கீர்த்தியின் கீழே பணியமர்த்துங்கள் சார். நான் அவரிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது” என்றார்.
STOP THE HARD WORK. LET’S START THE SMART WORK.
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல். (குறள் 462)
==================================================================
ஒருவர் தான் வாழ்வில் சாதிக்க வேண்டும் என்றால் முதலில் தன் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை பார்க்கவேண்டும். பலவீனத்தை குறைத்து பலத்தை பெருக்கிக்கொள்ளவேண்டும்.
உங்கள் பலம் என்ன பலவீனம் என்ன என்றே தெரியவில்லையா? தேவையற்ற விஷயங்களில் உங்கள் ஆற்றல் விரயமாகிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். உங்களை நோக்கி, உங்கள் வாழ்க்கையை நோக்கி, உங்கள் எதிர்காலத்தை நோக்கி உங்கள் கவனத்தை திருப்புங்கள்.
முகநூல், அரட்டை, சினிமா வெற்றி தோல்வி பற்றிய கருத்து பரிமாற்றம் என்று உங்கள் நேரத்தை வீணடிக்கும் எதிலும் ஈடுபடாதீர்கள். (அவர்கள் ஜெயிக்கிறார்களோ தோற்கிறார்களோ நீங்கள் வாழ்க்கையில் தோற்றுவிடுவீர்கள் என்பது நினைவிருக்கட்டும்!)
நண்பர்களே ஒரு வெற்றிகரமான மனிதன் என்பவன் எதையும் கூர்ந்து கவனிப்பான், அதிகம் சிந்திப்பான், ஆழமாக புரிந்துகொள்வான். நாளை பற்றி மட்டுமே நாம் யோசிக்கும் ஒரு விஷயத்தை ஒரு சாதனையாளனோ பல வருடங்கள் முன்னோக்கி சிந்திப்பான். (ADVANCE THINKING). ஒரு நாளுக்கும் ஒரு வருடத்துக்கும் 365 மடங்கு வித்தியாசம் உண்டு. இதில் சரசாரியாக சிந்திப்பவன் எப்படி வாழ்வில் வெற்றி பெற முடியும்?
அதற்காக எதிர்காலத்தில் கற்பனை கோட்டையை கட்டி நிகழ்காலத்தை கோட்டை விடுவதுடன் இதைப் போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது. (டூர் போகும்போது எங்கே எப்படி எந்த ரூட்ல போகணும், எங்கே எவ்ளோ நேரம் ஆகும் இதெல்லாம் கால்குலேட் பண்ணி தயார் ஆகி, கடைசியில ட்ரெயின் டிக்கெட்டை மறந்து வீட்ல வெச்சிட்டு கிளம்புற கேஸ் இவங்க.)
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எந்தளவு முன்னோக்கி சிந்திக்கிறீர்கள்? உங்கள் சிந்தனைகள் எந்தளவு ஆழமாக இருக்கிறது? இதற்கான விடையை பொறுத்தே உங்கள் எதிர்காலமும் இருக்கிறது.
தன்னை தானே சீர்திருத்திக்கொள்பவனே இந்த உலகின் மிகப் பெரிய சீர்த்திருத்தவாதி.
நீங்கள் சீர்திருத்தவாதியா?
==================================================================
Also check :
நல்ல செய்தியா கெட்ட செய்தியா எது வேண்டும்? MONDAY MORNING SPL 75
வாழ்க்கையில் உயர என்ன வழி? – MONDAY MORNING SPL 74
கடவுளிடம் நமக்காக ஒரு கேள்வி – MONDAY MORNING SPL 73
மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா? – MONDAY MORNING SPL 72
பல நாள் திருடன் ஒரு நாள்… MONDAY MORNING SPL 71
ஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! MONDAY MORNING SPL 70
நீங்கள் எந்தளவு ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று தெரியுமா? MONDAY MORNING SPL 69
திருடனிடம் கொடுக்கப்பட்ட சாவி — MONDAY MORNING SPL 68
வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67
பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா? — MONDAY MORNING SPL 66
உங்கள் வாழ்க்கையை இறைவன் மதிப்பிடுவது எப்படி தெரியுமா? – MONDAY MORNING SPL 65
முன்னேற துடிப்பவர்கள் மனதில் செதுக்க வேண்டிய வைர வரிகள் — MONDAY MORNING SPL 64
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….
http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
==================================================================
[END]
சூப்பர்
சிங்கம் படத்தில் சூர்யா விவேக் இருவருக்கும் ராதாரவி டெஸ்ட் வைப்பதை போல இருக்கிறதே என்று நினைவு வந்தது.
சொத்துக்காக, பதவிக்காக, உறவுக்ககாக என்று பலதரப்பட்ட விசயங்களில் இந்த மாதிரி கதைகள் படித்து இருந்தாலும் நம் தளத்தை போல வருமா?.
மிகவும் நன்றாக இருந்தது. சிந்திக்க வேண்டிய விஷயம்.
நான்கூட இனி ஆபீஸ் தான் கதி என்று இல்லாமல் சற்று யோசிக்கவேண்டும்.
நன்றி
வாழ்க வளமுடன்
நல்ல கருத்துள்ள கதை
Dear Sundarji,
Good Morning. Monday Spl as usual Super. Our Life is Precious. Dont Compare our Life with Others Life. God has Gifted our Birth to Lead a good way.
Once again Have nice start of the week.
Thanks & Regards,
S.Narayanan.
சார் வணக்கம்
சிந்திக்க வைக்கும் அருமையான பதிவு
நன்றி
///ஒரு நாளுக்கும் ஒரு வருடத்துக்கும் 365 மடங்கு வித்தியாசம் உண்டு./// – அருமை.
கடின உழைப்பு மட்டும் இருந்தால் போதாது……….சாமர்த்தியமான உழைப்பும் அணுகுமுறையும் வேண்டும் என்று புரிகிறது……….நன்றிகள் பல……….
Nice one.
A great week ahead for all of us!!
/////////////////////////உங்கள் பலம் என்ன பலவீனம் என்ன என்றே தெரியவில்லையா? தேவையற்ற விஷயங்களில் உங்கள் ஆற்றல் விரயமாகிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். உங்களை நோக்கி, உங்கள் வாழ்க்கையை நோக்கி, உங்கள் எதிர்காலத்தை நோக்கி உங்கள் கவனத்தை திருப்புங்கள். ///////////////
வைர வரிகள். நன்றாக எழுதி உள்ளீர்கள்.
மிகவும் அருமையான பதிவு.
“SUCCESS IS NOT JUST ABOUT WHAT YOU ACCOMPLISH IN YOUR LIFE, ITS ABOUT WHAT YOU INSPIRE OTHERS TO DO.”
“THERE IS NO SECRETS TO SUCCESS. IT IS A RESULT OF PREPARATION, HARD WORK AND LEARNING FROM FAILURE”
நன்றி
உமா வெங்கட்
எப்போதும் போல் அசத்தி விட்டீர்கள் நண்பரே.
நமக்கு வேண்டியது LATERAL THINKING. நாம் என்ன செய்கிறோம் என்பது மட்டுமே யோசிக்கிறோம். எப்படி செய்வது என்ற திட்டமிடல் பெரும்பாலும் இல்லை. EVERY MINUTE SPENT IN ORGANIZING IS EQUAL TO AN HOUR EARNED. நாமும் இதுபோல் கடைபிடித்தால் கண்டிப்பாக வாழ்க்கையில் முன்னேறுவது நிச்சயம்.