Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, September 14, 2024
Please specify the group
Home > Featured > பத்மபீடத்தில் தவழும் பாலமுருகனுக்கு உழவாரப்பணி செய்வோம் வாருங்கள்!

பத்மபீடத்தில் தவழும் பாலமுருகனுக்கு உழவாரப்பணி செய்வோம் வாருங்கள்!

print
ழுவகைப் பிறப்புக்களுள் மனிதப் பிறவிக்கு மட்டுமே தனிச் சிறப்பு உண்டு. பாவங்களை அனுபவித்துக் அவற்றை கழிப்பது மட்டுமின்றி அவற்றை அடியோடு துடைத்தெறியும் வாய்ப்பு இந்த மனித ஜென்மத்திற்கு மட்டுமே உண்டு. ஒரு ஜென்மத்தில் செய்த பாவத்தை மற்றொரு ஜென்மத்தில் தீர்த்துக் கொள்ளட்டும் என்று கருதித்தான் ஆண்டவன் மறுபடியும் மறுபடியும் நமக்கு ஜென்மத்தை அளிக்கிறான். ஒருவகையில் இது தவறு செய்கிறவனை திரும்ப திரும்ப மன்னிப்பது போலத் தான். எனவே கிடைப்பதற்கரிய இந்த மனித பிறவியை பயன்படுத்தி பாவங்களை தொலைத்து புண்ணியங்களை பெருக்கி இறைவனின் திருவடி நிழலை அடையவேண்டும்.

Porur Balamurugan

இதற்காக எத்தனையோ தீர்வுகளை இறைவன் நம் முன் வைத்திருக்கிறான். அவற்றுள் ஒன்று தான் இந்த உழவாரப்பணி. மனிதன் கடைத்தேறுவதற்கு எத்தனையோ வழிகாட்டுதல்களை சடங்குகளை சம்பிரதாயங்களை பிரார்த்தனை முறைகளை, கூறியிருந்தாலும் இவை எல்லாவற்றையும் விட சிறப்பும் மகத்துவமும் மிக்கது திருக்கோவில்களை சுத்தம் செய்யும் உழவாரப்பணி.

பிரசாதம் சமைத்து நைவேத்தியம் செய்கிறோம். கடைசியில் அவற்றை நாம் தான் சாப்பிடுகிறோம். மேலும் பூஜைகள் செய்வதாலோ பக்தி செய்வதாலோ கடவுளுக்கோ, மகான்களுக்கோ லாபம் இல்லை. அவர்கள் மகிழ்வதும் இல்லை. லாபம் எல்லாம் நமக்குத் தான். நமது நன்மைக்கும் மனசாந்திக்கும் தான் இவைகளை செய்கிறோம். அப்படியானால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் நம்மை காக்கும் இறைவனுக்கு நாம் செய்யும் கைம்மாறு தான் என்ன?

இரண்டு கால்களை இழந்துள்ள நிலையிலும் திரு.ஜெயராமன் மேற்கொள்ளும் உழ்வரப்பணி
இரண்டு கால்களை இழந்துள்ள நிலையிலும் திரு.ஜெயராமன் மேற்கொள்ளும் உழவாரப்பணி

அவனுக்கு நாம் செய்யக்கூடியது என்ன என்று பார்த்தால் அது இந்த உழாவாரப்பணி ஒன்று தான். நாம் கேட்பவற்றை தரும் அந்த பரம்பொருளுக்கு இது ஒரு வகையில் நாம் செய்யும் பதில் மரியாதை. மேலும் உழவாரப்பணி என்கிற கைங்கரியத்தை செய்வதன் மூலம் இறைவனை நாம் நமக்கு கடன்பட்டவனாக்கிவிடுகிறோம்.

தீராத தோஷங்களை தீர்க்கும், தீவினைகளை அகற்றும், நவக்கிரகங்களை சாந்தி செய்யும், ஜென்ம ஜென்மங்களாக தொடர்ந்து வரும் பாவங்களை துடைத்தெறியும்…. உழவாரப்பணியின் சிறப்பை சொல்ல வார்த்தைகள் இல்லை.

மேன்மை பொருந்திய இப்பணியின் போது திருக்கோவில் வளாகத்தில் உள்ள குப்பை கூளங்களை அகற்றி கோவிலை கூட்டி பெருக்கி சுத்தம் செய்தல், தண்ணீர் விட்டு தரையை கழுவுதல், ஒட்டடை அடித்தல், கோவில் பாத்திரங்களை கழுவி கொடுத்தல், கோ-சாலையை சுத்தம் செய்தல், பசுக்களை குளிப்பாட்டுதல், புற்களை வெட்டி சீர்படுத்துதல், தேவையற்ற செடிகொடிகளை புதர்களை அப்புறப்படுத்துதல் என பல்வேறு பணிகள் செய்யப்படும்.

யார் என்ன பணி செய்ய விரும்பினாலும் அதில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளலாம். முடிந்தால் தங்கள் பிள்ளைகளையும் அழைத்து வரலாம். இது போன்ற கைங்கரியங்களில் சிறு வயது முதலே அவர்களை ஈடுபடுத்துவது அவர்களை செம்மை படுத்த உதவும்.

பத்மபீடத்தில் எழுந்தருளியிருக்கும் பாலமுருகன்!

நமது தளத்தின் அடுத்த உழவாரப்பணி சென்னை போரூரில் உள்ள பாலமுருகன் கோவிலில் நடைபெறும்.  சென்னை போரூரில் உள்ள ஈஸ்வரன் கோவில் தெருவில் அமைந்திருக்கிறது இந்த அழகான கோவில்.

IMG_20150113_061439 copy copy

1985 ஆம் ஆண்டு கட்டப்பட்டு குடமுழக்கு செய்யப்பட்டது இக்கோவில். இந்த கோவிலை கட்டுவதற்கு முன்பு இக்கோவிலின் அறங்காவலர் குழு திரு.தாமோதரன் என்பவர் தலைமையில் காஞ்சி சென்று மகா பெரியவரை சந்தித்து அவரிடம் விஷயத்தை கூறி அவரின் ஆசியை பெற்றுக்கொண்டு வந்து பின்னர் தான் கோவிலை கட்டும் முயற்சியையே துவக்கினர்.

http://rightmantra.com/wp-content/uploads/2014/01/DSCN0165-copy.jpg

IMG_20150113_060912 copy copy

IMG_20150113_060451 copy copyமகா பெரியவரை சந்தித்ததை நம்மிடம் நினைவுகூறும் கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் திரு.தாமோதரன், பெரியவாவை சந்தித்தபோது பூரண பலத்தை (மட்டைத் தேங்காய்) கொடுத்து ஆசீர்வதித்ததாக கூறினார். அதற்கு பிறகு அடிக்கடி காஞ்சி சென்று பெரியவாவை தரிசித்து வந்ததாகவும் மகா பெரியவருக்கு கனகாபிஷேகம் நடைபெற்றபோது தரிசித்ததை மறக்க முடியாத அனுபவம் என்றும் கூறுகிறார் திரு.தாமோதரன். பெரியவா சித்தியடைந்த பிறகு நான்கைந்து முறை ஜெயேந்திரர் இந்த இங்கு வந்து சென்றிருக்கிறார்.

http://rightmantra.com/wp-content/uploads/2013/12/IMG-20131215-00358.jpg

திருமுருக. கிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கும் இந்த கோவிலுக்கும் நெருங்கிய ஒரு பந்தம் உண்டு. இந்த கோவில் கட்டப்பட்ட பிறகு மணிமண்டபத்தை திறப்பதற்கு வருகை தந்த வாரியார் ஸ்வாமிகள் மூலவர் விக்ரகம் சற்று தாழ்ந்து இருப்பதை பார்த்து, “பத்ம பீடம் ஒன்றை மூலஸ்தானத்தில் எழுப்பி அதில் மூலவரை வையுங்கள்” என்று ஆலோசனை கூறியிருக்கிறார். “அதையும் நீங்கள் தான் செய்யவேண்டும்” என்று கோவில் நிர்வாகம் கேட்டுக்கொள்ள, பிறிதொரு சமயம் மீண்டும் வந்திருந்து மூலவரை பத்ம பீடத்தில் வைத்தருளினார் வாரியார் சுவாமிகள். இன்றும் மூலஸ்தானத்தில் முருகன் பத்மபீடத்தில் எழுந்தருளியிருப்பதை பார்க்கலாம்.

வாரியார் அதற்கு பிறகு பலமுறை இக்கோவிலுக்கு வருகை தந்து சொற்பொழிவுகள் நிகழ்த்தியிருக்கிறார். கோவிலில் இப்போது போனாலும் இடப்பக்கம் வாரியார் சுவாமிகளின் பிரம்மாண்ட படமும் வலப்பக்கம் மகா பெரியவாவின் படம் அலங்கரிப்பதை காணலாம்.

kANDHA SASHTI

அனைத்து முருகன் கோவில்களையும் போல இங்கும் கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட முருகனுக்கு உகந்த விஷேட நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுவதுண்டு.

கடந்த கந்தசஷ்டி முழுதும் ஆறு நாட்களும் இந்த கோவிலுக்கு சென்று  நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் லக்ஷார்ச்சனை செய்தது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் முருகன் ஜொலித்தார்.

இந்த ஆலயத்தில் உழவாரப்பணி செய்யவேண்டும் என்ற எண்ணம்  தெரியவில்லை. முருகன் திருவுள்ளம் என்றே கருதுகிறோம்.

ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர்

வற்றாத செல்வத்தை வாரி வழங்கக்கூடிய ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் இந்த கோவிலில் உள்ளார். உழவாரப்பணியில் பங்கேற்கும் வாசக அன்பர்கள் மற்றும் நண்பர்கள் பெயர்களில் இந்த பைரவருக்கு பணி நடைபெறும் சமயம் விசேஷ அர்ச்சனை ஏற்பாடு செய்யப்படவிருக்கிறது.

IMG_20150113_060113 copy copy

போரூர் ஜங்கஷனிலிருந்து குன்றத்தூர் செல்லும் சாலையில் ஒரு சில அடிகள் சென்றால் இந்த கோவிலின் ஆர்ச் இடது புறம் வரும். அதன் உள்ளே நுழைந்தால் கோவிலுக்கு வந்துவிடலாம். வடபழனி, கிண்டி, பூவிருந்தவல்லி ஆகிய இடங்களில் இருந்து போரூருக்கு பஸ் மற்றும் ஷேர் ஆட்டோ வசதி உள்ளது.

IMG_20150113_060847 copy copy

உழவாரப்பணிக்கு  வருகை தரும் அன்பர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்.

கோவில் முகவரி : அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில், ஈஸ்வரன் கோவில் தெரு, போரூர் – சென்னை – 600116. பஸ் ஸ்டாப் : போரூர் ஜங்க்ஷன்

உழவாரப்பணி நடைபெறும் நாள் : ஜனவர் 18, 2015 ஞாயிறு  நேரம் : காலை 7.00 – பகல் 12.00 வரை.

தொடர்புக்கு : Sundar | www.rightmantra.com | Mobile : 9840169215 | E-mail : simplesundar@gmail.com

===============================================================

* இதற்கு முன்பு நடைபெற்ற பேரம்பாக்கம் நரசிம்மர் கோவில் உழவாரப்பணி மற்றும் ஆப்பூர் மலைக்கோவில் உழவாரப்பணி குறித்த அப்டேட்டுகள் விரைவில் அளிக்கப்படும். மேற்படி கைங்கரியத்தின்போது நம் தளம் சார்பாக நாம் செய்வதாக வாக்களித்த அனைத்து திருப்பணிகளும் (தீப மேடை, பெரிய பெடஸ்ட்ரல் ஃபேன், சிமெண்ட் பெயர்ப்பலகை etc.) செவ்வனே நிறைவேற்றப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அதுகுறித்த பதிவுகள் வரும்.

===============================================================

ரைட்மந்த்ராவின் பணிகளில் உங்கள் பங்களிப்பை வழங்க…!

உழவாரப்பணிக்கு வருகை தரும் அன்பர்கள் மற்றும் ஏனையோர் உழவாரப்பணி செலவுகளுக்கு பொருளுதவி செய்திட விரும்பினால் பணியின்போது நேரடியாக தங்கள் உதவியை நல்கிடலாம். தொகைக்கான ரசீது அவர்களுக்கு தரப்படும். ஆன்லைனில் செலுத்த விரும்புகிறவர்கள் ஆன்லைனிலும் செலுத்தலாம்.

இதுதவிர நம் தளத்தின் இதர மாதாந்திர பணிகளுக்கு உதவிட விரும்பினால் தளத்தின் வங்கிக்கணக்கில் உங்கள நிதியை அளிக்கலாம்.

Bank A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

தொகையை செலுத்திய பின்பு, மறக்காது நமக்கு simplesundar@gmail.com, rightmantra@gmail.com ஆகிய முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பவும். அல்லது 9840169215 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும்.

===============================================================

சபரிமலையில் உழவாரப்பணி பங்கேற்க வாய்ப்பு!

‘ஆத்ம தர்ஷன சேவா சமிதி’ என்கிற அமைப்பு சார்பாக சபரிமலையில் உழவாரப்பணி நடைபெறவிருக்கிறது. வரும் 17 ஆம் தேதி மாலை 5.00 மணிக்கு பேருந்து புறப்பட்டு 21 ஆம் தேதி காலை சென்னை திரும்புகிறது. சுமார் நான்கு பேருந்துகளில் 300க்கும் மேற்பட்டோர் செல்லவிருக்கின்றனர்.

இதில் பங்கேற்க விரும்பும் அன்பர்கள் பங்கேற்கலாம். பேருந்து கட்டணம் : ரூ.1350/- (தங்குமிடம், உணவு அனைத்துக்கும் சேர்த்து).

மேலும் விபரங்களுக்கு : திரு.ராமஜெயம் 9941901390 | திரு.சிவக்குமார் 9941924861

===============================================================

Also check :

நல்லதை நினைத்தால் போதும்… நடத்திக்கொள்ள ஆண்டவன் தயார்!

மிளகளவு கைங்கரியமும் மலையளவு புண்ணியமும்! மார்கழி முதல் நாள் தரிசனம்!!

உயிரை பறிக்க வந்த எமதூதர்கள்; தடுக்க வந்த சிவகணங்கள்!

===============================================================

[END]

10 thoughts on “பத்மபீடத்தில் தவழும் பாலமுருகனுக்கு உழவாரப்பணி செய்வோம் வாருங்கள்!

  1. பாலசுப்ரமணிய சுவாமி கோயில் உழ வாரபணி பற்றிய பதிவு நன்றாக உள்ளது. நாமும் இந்த பணியில் கலந்து கொண்டு இறை தொண்டு செய்வோம். கோவில் கோபுரம் மற்றும் படங்கள் பார்க்க பார்க்க பரவசமாக உள்ளது. உழவார பணி என்றால் என்ன என்பதை நம் தளத்தின் மூலம் தெரிந்து கொண்டு 7 முறை தொடர்ச்சியாக நம் தளத்தின் சார்பாக கலந்து கொண்டு பணி செய்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

    நேற்று வளசரவாக்கம் செல்லும் வேலை இருந்தது. செல்லும் வழியில் விருகம்பாக்கத்தில் இறங்கி மெயின் ரோட்டில் உள்ள வேம்புலி அம்மன் கோவிலுக்கு 5 மணிக்கு சென்றேன்., குருக்கள் தீபாராதனை காட்டி பிரசாதம் கொடுத்தார். மக்கள் கோவிலுக்கு வரும் வண்ணமாக இருந்தனர். கோயிலில் ஆங்காங்கே குப்பைகளும், எழுமிச்சம்பழமும், கொண்டை கடலை மாலைகளுமாக சிதறி கிடந்தன. நான் குருக்களிடம், நான் கோவிலை பெருக்கி சுத்தம் செய்து விட்டு செல்கிறேன் என்றேன். அவர் உடனே வேலை செய்யும் அம்மா வருவார்கள் என்றார் . நான் உடனே கோயில் சுத்தம் செய்யும் உழவாரபணி தொண்டு செய்யும் பழக்கம் எனக்கு உண்டு. ஆகையால் நான் சுத்தம் செய்ய அனுமதி கொடுங்கள் என்றேன். அவர் சிரித்துக் கொண்டே சரி என்றார். 15 நிமிடத்தில் முழு கோவிலையும் சுத்தம் செய்து விட்டு , குருக்க்களிடம் சொல்லி விட்டு கிளம்பினேன். அவருக்கு மிக்க மகிழ்ச்சி. இதை எதற்காக இங்கே பதிய வைக்கிறேன் என்றால். உழாவார பணி செய்யும் எண்ணம் வந்தது இந்த தளத்தின் மூலம் தான். என் மனதில் நல எண்ணத்தை விதைத்த தங்களுக்கு நன்றிகள் பல.

    குருவருளோடும் திருவருளோடும் வரும் 18 ம் தேதி உழவார பணி செவ்வனே நடைபெற வாழ்த்துகள்.

    திருசெந்தூர் முருகன் துணை

    நன்றி
    உமா வெங்கட்

  2. அருமை…..உமா அம்மா ..தங்கள் தொண்டு சிறக்க ஈசனை துதித்து ,ஆர்பாட்டம் இல்லாமல் ஆன்மிக புரட்சி செய்து வரும் அன்பர் .சுந்தர் அய்யாவுக்கும் நன்றி…..தங்கள் உழவார திருவடிகள் போற்றி போற்றி….. சிவ.அ.விஜய் பெரியசுவாமி

  3. உமா மேடம் அவர்களக்கு கோடானுகோடி நன்றி. உங்கள் பனி சிறக்க குரு அருள்.

    நாராயணன்.ச

  4. உழவாரப்பணியின் பெருமை பற்றி நீங்கள் கூறக் கூற நாம் கலந்துகொள்ள முடியவில்லையே என்று தோன்றுகிறது. எங்கள் மாவட்டத்தில் வைத்தால் முதல் ஆளாக குடும்பத்துடன் வந்து நிற்பேன்.

    சகோதரி உமா அவர்களின் செயல் பாராட்டுக்குரியது. ரைட்மந்த்ராவை படிப்பதோடு அல்லாமல் அதில் கூறப்படுபவற்றை பின்பற்றவும் செய்கிறார்.

    உழவாரப்பணியில் பங்கேற்கவுள்ள அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். முருகன் உங்கள் எல்லாருக்கும் எல்லா வளமும் வாரி வழங்கட்டும்.

    – பிரேமலதா மணிகண்டன்

  5. என்னை வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் பல. என்னை மென் மேலும் உயர்த்திக்கொள்ள தங்கள் ஒவொருவரின் பின்னூட்டமும் எனக்கு உந்து சக்தியாக இருக்கும்

    நன்றி
    உமா வெங்கட்

  6. திரு. சுந்தர் அவர்களுக்கு,

    நானும், எனது தங்கை மற்றும் அவரது மகனும் தங்களுடன் உழவார பணியினில் இணைய விரும்புகின்றோம். தங்களிடமிருந்து அழைப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

    அன்புடன்,

    திருமதி. ரமா ஷங்கர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *