Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, October 10, 2024
Please specify the group
Home > Featured > வைகுண்ட ஏகாதசி + புத்தாண்டு ஆலய தரிசன விபரம்!

வைகுண்ட ஏகாதசி + புத்தாண்டு ஆலய தரிசன விபரம்!

print
ரும் ஜனவர் 1, 2015 ஆங்கிலப் புத்தாண்டு அன்று வைகுண்ட ஏகாதசியும் வருகிறது. காலங்களில் வசந்த காலத்தையும், மாதங்களில் மார்கழியையும் சிறப்பித்துக் கூறுவார்கள். இந்த மார்கழி மாதம் முழுவதும் விரதங்கள், வழிபாடுகள், பஜனைகள், கச்சேரிகள், உற்சவங்கள், உபந்யாசங்கள், கதாகாலட்சேபங்கள், தெய்வீக சொற்பொழிவுகள், ஆன்மிக யாத்திரைகள் சிறப்பாகவும், விமரிசையாகவும் தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

வைகுண்ட ஏகாதசி அன்று உபவாசம் இருப்பது மிகவும் அவசியம். மகா பெரியவா அவர்கள் தான் வாழ்ந்த காலத்தில் தவறாமல் கடைபிடித்த அனுஷ்டானங்களுள் வைகுண்ட ஏகாதசி விரதமும் ஒன்று.

கடைசி நேரத்தில் வைகுண்ட ஏகாதேசி விரதத்தை அனுஷ்டிக்க நினைத்து ஆனால் என்ன, ஏது, எப்படி என்கிற வழி தெரியாமல் தவிப்பவர்கள் இதோ இங்கே கூறியவற்றை பின்பற்றலாம்.

1.ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடவேண்டும்.

(இந்த ஆண்டிற்கான ஏகாதசி திதி இன்று அதாவது டிசம்பர் 31 காலை 11.53 க்கு துவங்கி, ஜனவரி 1 காலை 10.40 மணியோடு நிறைவு பெறுகிறது. எனவே டிசம்பர் 31 கண் விழிப்பது அவசியமாகிறது.)

2.ஏகாதசி திதி முழுவதும் முடிந்தவரை பூரண உபவாசம் (பட்டினியாக) இருக்கவேண்டும். குளிர்ந்த நீரை குடிக்கலாம். ஏழு முறை துளசி இலையை சாப்பிடலாம். ஏகாதசி குளிர்_மாதமான மார்கழியில் வருவதனால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிடவேண்டும். பட்டினி கிடப்பதினால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வுகிடைக்கிறது. குளிர்ந்த_நீர் வயிறை சுத்தமாக்குகிறது.

அப்படி முழுவதும் பட்டினியாக இருக்க முடியாத நிலையில் இருப்பவர்கள், அன்று பணிக்கு செள்ளவேண்டியிருப்பவர்கள் மெலிதான சிற்றுண்டி, காய்கனிகள், பழங்கள், நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து (பிரசாதமாக) உண்ணலாம்.

4.இரவு முழுவதும் உபவாசம் இருந்து கண்விழித்து புராண நூல்களை படிப்பதும்,விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக பொழுதுபோக்க வேண்டும். கண் விழிக்கிறோம் என்றபெயரில் சினிமா, டிவி பார்க்கக் கூடாது. பக்தி திரைப்படங்களை பார்க்கலாம்.

5. அடுத்த நாள் துவாதசி அன்று காலை குளித்துவிட்டு கோவிலுக்கு சென்று தீர்த்தப் பிரசாதமும் துளசியும் பெற்றுக்கொள்ளவேண்டும். பின்னர் வீட்டிக்கு வந்து பாரணை அதாவது விரதத்தை பூர்த்தி செய்யவேண்டும்.

சென்ற ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் வைகுண்ட ஏகாதசி குறித்து நாம் விரிவான பதிவை அளித்திருப்பதால் இம்முறை அளிக்கவில்லை. அந்த பதிவின் முகவரி இறுதியில் தரப்பட்டுள்ளது. விரதத்தின்போது (கண்விழிக்கும் போது) என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பவை பற்றிய விபரங்கள் முந்தைய பதிவுகளில் விளக்கமாக கூறப்பட்டுள்ளன. வைகுண்ட ஏகாதசி விரதம் எப்படி இருப்பது என்பது உள்ளிட்ட விபரங்கள் அந்த பதிவில் உள்ளன.

எனினும் இந்த பதிவில் இரண்டு புதிய விஷங்களை சேர்த்துள்ளோம்.

திருஊரகப்பெருமாள் கோவில், குன்றத்தூர்
திருஊரகப்பெருமாள் கோவில், குன்றத்தூர்

1) ஏகாதசி விரதம் கடைபிடித்ததால் சுபிட்சமாக வாழ்ந்த மக்கள்

ருக்மாங்கதன் என்ற அரசர் இருந்தார். அவர் ஏகாதசி விரதத்தின் மகிமையை பற்றி தெரிந்து கொண்டார். அதனால் தன் நாட்டு மக்கள் யாவரும் பாவத்தில் இருந்து விடுபட்டு, புண்ணியம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஏகாதசி விரதத்தை கட்டாயமாக மக்கள் அனைவரும் அனுசரிக்க வேண்டும் என்று அரசாங்க உத்தரவிட்டார்.

அத்துடன் ஏகாதசி விரதத்தை கடைப்பிடிக்காதவர்கள் ராஜதண்டனைக்கு ஆளாவார்கள் என்றும் ஆணையிட்டார். இதனால் எட்டு வயது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அரசாங்கத்துக்கு பயந்தே ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தார்கள். ஏகாதசி விரதத்தின் மகிமையால் நல்ல பலன் கிடைத்தது. நாடும், அந்நாட்டு மக்களும், அரசரும் சுபிட்சமாக வாழ்ந்தார்கள்.

குன்றத்தூர் மலையிலிருந்து திருஊரகப்பெருமாள் கோவிலின் எழில்மிகு தோற்றம்
குன்றத்தூர் மலையிலிருந்து திருஊரகப்பெருமாள் கோவிலின் எழில்மிகு தோற்றம்

2) ஏகாதசி விரதம் இருப்பவர்களை காக்கும் திருமால் – அம்பரீஷன் வரலாறு!

ஒரு காலத்தில் அம்பரீஷன் என்பவன், இப்பூமண்டலத்தின் சக்கரவர்த்தியாக ஆட்சி செய்து வந்தான். அவன் ஏகாதசி விரதத்தை தவறாது கடைபிடித்து வந்தான். ஒருமுறை, ஏகாதசி முடிந்த மறுநாள் துவாதசி சமயத்தில், யமுனைக்கரையில் கோபக்கார துர்வாச முனிவரை அவன் சந்தித் தான். அவருக்கு பாதபூஜை செய்து, அவரையும் தன்னோடு உணவு உண்ண வரும்படி அழைத்தான். யமுனையில் நீராடிவிட்டு வருவதாகச் சொல்லிச் சென்ற முனிவர், நீண்டநேரமாகியும் வரவில்லை. அம்பரீஷனின் ஏகாதசி விரத பலனை பங்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், இவ்வாறு அவர் செய்தார்.

செய்வதறியாது திகைத்த அம்பரீஷனிடம் அங்கிருந்த மற்ற ரிஷிகள், “”அம்பரீஷா! துளசி தீர்த்தத்தையாவது சாப்பிட்டு விரதத்தை முடித்துக்கொள். துர்வாசரை விட்டு விட்டு உணவு உண்பது தான் தவறு. தீர்த்தம் அருந்துவதால் குற்றமில்லை,”என்று ஆலோசனை கூறினர். அம்பரீஷனும் துளசி தீர்த்தத்தை அருந்தினான். துர்வாசரும் வந்து சேர்ந்தார். தன்னை எதிர்பார்க்காமல் அம்பரீஷன் மட்டும் துளசி தீர்ததம் உண்டதைக் கேட்டு கோபம் கொண்டார். தன் சடைமுடி ஒன்றை அம்பரீஷன் மீது ஏவி விட்டார். அது பயங்கர பூதமாக மாறி அம்பரீஷனைத் துரத்தியது. அப்போது, மகாவிஷ்ணு அந்தப் பூதத்தின் மீது, தன் சுதர்சனச் சக்கரத்தை வீசி எறிந்தார். அச்சக்கரத்தின் வெப்பம் தாங்காமல் பூதம் எரிந்து சாம்பலானது. அதோடு மட்டுமில்லாமல் துர்வாசரையும் துரத்தியது. துர்வாசர் பாற்கடலுக்கு ஓடி மகாவிஷ்ணுவிடம் தன்னை மன்னிக்குமாறு முறையிட்டார்.

“துர்வாசரே! யாரொருவர் பக்தியோடு ஏகாதசி நாளில் என்னைக் குறித்து விரதம் இருக்கிறார்களோ, அவர்களுடைய இதயத்தில் நான் குடியிருக்கிறேன். அவர்களை காப்பது என் கடமை. அம்பரீஷனிடம் மன்னிப்பு கேளுங்கள். அப்படியானால் தான் சக்கரத்திடமிருந்து விடுதலை பெறுவீர்கள்,” என்றார். துர்வாசரும் அம்பரீஷனிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டியதோடு, அவனுடன் உணவு அருந்தி, பல வரங்களையும் தந்து விட்டு கிளம்பினார். ஏகாதசி விரதமிருப்பவர்கள் எவ்வளவு பெரிய துன்பத்தையும் தாங்கும் சக்தி படைத்தவர்களாகத் திகழ்வார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

(ருக்மாங்கதன் & அம்பரீஷன் கதை உதவி : தினமலர்.காம்)

====================================================================

Also check from our archives:

அரங்கனின் அருள்மழை பொழியும் வைகுண்ட ஏகாதசி – A COMPLETE PACKAGE

நந்தம்பாக்கம் கோதண்டராமர் கோவில் பரமபத வாசல் திறப்பு – ஒரு நேரடி கவரேஜ்!

ஏகாதசி விரதம் & வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு ! கிடைப்பதர்க்கரிய சொர்க்கவாசல் திறப்பு!!

அவனுக்கு தெரியாதா எப்போ, யாருக்கு, என்ன, ஏன் கொடுக்கணும் என்பது?

====================================================================

நகைமுகைவல்லி உடனுறை அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோவில், குன்றத்தூர்
நகைமுகைவல்லி உடனுறை அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோவில், குன்றத்தூர்

2015 – ஜனவரி 1 புத்தாண்டு வைகுண்ட ஏகாதசி + ஆலய தரிசன விபரம்

நாம் ஏற்கனவே கூறியபடி, இந்த ஆண்டு ஜனவரி 1 அன்று  நமது நண்பர்களுடன் குன்றத்தூர் மற்றும் பேரம்பாக்கம் பயணத்தை திட்டமிட்டுள்ளோம்.

காலை 4.30 மணி  – குன்றத்தூர் கந்தழீஸ்வரர் (ஸ்ரீ கற்பக விநாயகர் சன்னதியில் அபிஷேகம் + சுவாமி, அம்பாள் விஸ்வரூப தரிசனம்)

காலை 5.30 மணி – குன்றத்தூர் திருஊரகப் பெருமாள் கோவில் பரமபத வாசல் திறப்பில் பங்கேற்பு

(ஜனவரி 1 அன்று வைகுண்ட ஏகாதசி வருவதால், கந்தழீஸ்வரர் கோவிலில் அபிஷேகம் நிறைவு பெற்ற பின்னர் அருகில் உள்ள திருஊரகப்பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பில் பங்கேற்க உத்தேசித்துள்ளோம்.)

காலை 7.00 மணி – குன்றத்தூர் முருகன் (தரிசனம்)

காலை 9.30 மணி – உளுந்தை அனுமன் கோவில்

நண்பகல் 11.00 – பேரம்பாக்கம் நரசிம்மர் (அர்ச்சனை)

பிற்பகல் 1.00 மணி – மப்பேடு சிங்கீஸ்வரர் (லக்ஷார்ச்சனை)

பிற்பகல் 2.00 மணி – சென்னை திரும்புதல்

(இது தவிர கோ-சம்ரோக்ஷனம் தனியாக நடைபெறும்).

* வரவிருக்கும் நண்பர்கள் அவரவர் சௌகரியப்படி இந்த பயணத்தில் எங்கு வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். டூ-வீலர் பயணம் தான். பேருந்தில் வரவிரும்புகிறவர்களும் வரலாம்.

Kandhazheeswarar 2

திருவருளும் குருவருளும் துணை நின்று அனைத்தையும் நல்லபடியாக நடத்தித் தரவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம்!

[END]

8 thoughts on “வைகுண்ட ஏகாதசி + புத்தாண்டு ஆலய தரிசன விபரம்!

  1. ஏகாதசி விரதம் இருப்பதால் அஸ்வ மேத யாகம் செய்த பலன் ஏற்படும். ஏகாதசி அன்று தான் பகவான் பகவத் கீதையை உபதேசித்தார். இந்த இனிய நாளில் அனைவரும் விரதம் இருந்து இறை அருள் பெறுவோம்

    புத்தாண்டு ஆலய அஜெண்டா நன்றாக உள்ளது.

    திரு ஊரகப் பெருமாள் கோவில் படம் அருமை.
    பதிவிற்கு நன்றிகள்

    நன்றி
    உமா

  2. சுந்தர் சார் ,மற்றும் நம் ரைட் மந்திரா அடியவர்கள் அனைவர்க்கும் எனது ஜனவரி முதல் நாள் மற்றும் வைகுண்ட ஏகாதசி திருநன்னாள் வாழ்த்துக்கள் ..நம் தள அடியவர்கள் அனைவரையும் அவர்களது சந்ததியினரையும் பரமனும் ,பரந்தாமனும் காக்கட்டும்….சங்கர நாராயணா போற்றி போற்றி …..சிவாய நம…….

  3. நம் தல வாசகர்கள் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். தங்களின் திட்டம் அற்புதம். நாங்கள் உளுந்தை அனுமார் கோயிலில் சேர்ந்துகொள்ளலாம் என்று இருக்கிறோம். எங்கள் வீட்டில் கலந்துகொண்டு போன் செய்கிறோம். நம் எல்லோருக்கும் இறைவன் கருணையினால் கள்ளம் கபடம் இல்லாத மனமும் அறமும் அன்பும் பெருகி 16 பெரும் பெற்று வாழ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவளின் பாதம் பணிகிறேன்.

  4. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்………

  5. sir,

    It is very useful article which contains the information of ekadasi viradha and also the blessings one could get from the almighty by undergoing the viradaha. I should appreciate you for your spritual trip which is planned in advance. I also take this opportunity to wish one and all a happy and prosperous new year 2015.

  6. Hi sundar,

    Please provide some information about 108 divyadesam perumal darshan arranged at sri varu venkatachalapathy kalyamandapam at vanagaram. So that our rightmantra readers would get benefit by getting darshan of 108 divyadesam perumals at one roof.

    Thanks and Regards,
    Venkat.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *