இந்த பலன்களை அளித்திருக்கும் திரு.பெருங்குளம் ராமகிருஷ்ணன் நம் தளத்தின் வாசகர். பரம்பரையாக ஜோதிடக் குடும்பத்தில் வந்தவர். தாத்தா, தந்தை என முறையாக பரம்பரை அனுபவத்தில் ஜோதிடம் கற்றவர். தாமிரபரணி பாயும் நவதிருப்பதிகளில் ஒன்றும் 108 திவ்யதேசங்களில் ஒன்றுமான திருக்குளந்தை என்ற பெருங்குளம் கிராமம் மற்றும் கோவில் ஜோதிடர். இவரின் முன்னோர்கள் ஜோதிடத்திலும், வானவியலிலும் ஞானம் பெற்றவர்கள். வேதங்கள் மந்திரங்கள் சொல்வதிலும் பயிற்சி பெற்றிருக்கும் இவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ., படித்தவர். தினமணி மற்றும் விகடன் தளத்தில் ஜோதிட பலன்களைச் சொல்லி வருகிறார். இவருக்கு வாசகர்கள் வட்டம் பெரிது. பல குடும்பங்களுக்கு ஜோதிட ஆலோசனைகளை வழங்கி அவர்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்றவர்.
“சனிப்பெயர்ச்சியை கண்டு ஏன் இந்த் பயம்?” என்று நாம் அளித்திருந்த கட்டுரையை படித்துவிட்டு, நம்மை தொடர்புகொண்டவர் நீங்கள் கூறியிருக்கும் ஒவ்வொரு வரியும் உண்மை. சனிப் பெயர்ச்சி தொடர்பாக மக்களின் அறியாமையை போக்கியிருக்கிறீர்கள் என்று பாராட்டு தெரிவித்தார்.
சனிப்பெயர்ச்சியால் கலங்கிப் போயிருப்பவர்கள் நன்மைக்காக சனிப்பெயர்ச்சி பரிகாரங்களை நாம் அளிக்கவிருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தோம். அந்த பரிகாரங்களை முறைப்படி ஜோதிடம் கற்று பலன்களை கூறி வரும் ஒருவர் அளித்தால் நன்றாக இருக்கும் என்று ஏற்கனவே நமக்கு ஒரு எண்ணம் இருந்தது. உடனே திரு.பெருங்குளம் ராமகிருஷ்ணன் அவர்களிடம் ரைட்மந்த்ரா வாசகர்களுக்கு என பிரத்யேகமாக பரிகாரங்களை கணித்து தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
இதையடுத்து திரு.ராமகிருஷ்ணன் நம் வாசகர்களுக்கு என சனிப்பெயர்ச்சி பரிகாரங்களை கணித்து கூறியிருக்கிறார். அனைத்தும் மிக எளிமையான பரிகாரங்கள். நீங்கள் நடைமுறையில் சுலபமாக செய்யக்கூடியதே.
பின்பற்றி பலன் பெறுங்கள். சனிபகவானின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
நல்லதே நடக்கும்!
====================================================================
* திருநள்ளாறு செல்லவிருப்பவர்கள் திருநள்ளாறு TRIP பிளான் செய்யும் முன் நம்மை தொடர்புகொள்ளவும். நாம் அளிக்கும் டிப்ஸ்கள் உபயோகமாய் இருக்கும்.
* சனிப்பெயர்ச்சி தொடர்பாக உங்கள் அச்சத்தை போக்கி, நம்பிக்கையை கூட்டும் விதமாக மேலும் பல கட்டுரைகள், பதிவுகள் வரவிருக்கின்றன. நிச்சயம் அவை அனைவருக்கும் மிகவும் உபயோகமாய் இருக்கும்.
====================================================================
மேஷம்:
செவ்வாய்க்கிழமை தோறும் முருகன் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றவும். முடிந்தவரை சனீஸ்வரருக்கு எள் எண்ணை தீபம் ஏற்றி வழிபாடு செய்து வரவும். செவ்வாய்கிழமைதோறும் அறுகம்புல்லை விநாயகருக்கு அர்ப்பணிக்கவும்.
ரிஷபம்:
வெள்ளிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றவும். முடிந்தவரை வெண் மொச்சை சுண்டல் செய்து வழங்கவும். வெள்ளிக்கிழமை தோறும் மல்லிகை மலரை பெருமாளுக்கு சாத்தி வழிபடவும். பெருமாள் கிருபையால் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
மிதுனம்:
புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் ஆலயத்திற்கு செல்லுங்கள், முடிந்தவர்கள் பாடல் பெற்ற ஸ்தலங்களுக்கும் செல்லலாம். செல்வங்கள் குவியும். தாமரை மலரை அருகிலிருக்கும் பெருமாளுக்கு அர்பணியுங்கள், அவர் எல்லாவற்றையும் சீராக நடத்திவைப்பார்
கடகம்:
முடிந்தால் திருவண்ணாமலை அல்லது பர்வதமலையை பௌர்ணமியன்று வலம் வரவும். பௌர்ணமியன்று நிலாவில் 10 நிமிடங்கள் தியானம் செய்வது நல்லது. எலுமிச்சம் பழ சாரை பிரதோஷ நேரத்தில் சிவனுக்கு அபிஷேகம் செய்து வர குழப்பங்கள் அகலும். மனம் தெளிவடையும்
சிம்மம்:
ஞாயிற்றுக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று சந்தனாதி தைலத்தை அபிஷேகம் செய்து விளக்கு ஏற்றி வழிபடவும். முடிந்தவர்கள் ஸ்ரீசூரியனார் கோவில் சென்று வழிபட்டு வரலாம். காலையில் சூரியன் உதிக்கும் போது தரிசம் செய்வதும் நன்மையைத் த்ரும். “எருக்க மலரை” சிவனுக்கு மாத சிவராத்திரி அன்று அர்ப்பணம் செய்து வணங்கி வர நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களுக்கு அனைத்து காரியங்களும் தங்குதடையின்றி நடக்கும்.
கன்னி:
புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி வழிபடவும். வெண்ணையை ஆஞ்சநேயருக்கு சாத்தி அர்ச்சனை செய்து வணங்கி வர தடைகள் விலகி நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்தவந்த பிரச்சனைகள் மாறும்.
துலாம்:
வெள்ளிதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகருடனுக்கு நெய் விளக்கு ஏற்றி வணங்கி வரவும். முடிந்தவரை கருட தரிசனம் செய்யவும். தினமும் முன்னோர்களை வணங்கவும். சனிக்கிழமைதோறும் வில்வ இலையை சிவனுக்கு சாத்தி வழிபட்டு வர உங்கள் துக்கங்கள் சந்தோஷமாக மாறும்.
விருச்சிகம்:
செவ்வாய்தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று வலம் வந்து வணங்கி வரவும். நல்லெண்ணெய் விளக்கு ஏற்றலாம். இலுப்பைஎண்ணையில் வீட்டில் விளக்கு ஏற்றவும். செவ்வாய்தோறும் செவ்வரளிமாலையை அம்மனுக்கு அர்ப்பணித்து வலம் வந்து வணங்குங்கள்.
தனுசு:
வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகுருபகவானை வணங்கி வரவும். கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடவும். சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டு வர உங்கள் பொருளாதார நிலைமை படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.
மகரம்:
சனிதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீநடராஜரை வணங்கி வரவும். முடிந்தால் தேங்காய் விளக்கு போடவும். சனிக்கிழமைதோறும் சிவன் கோவிலில் இருக்கும் அம்பாளுக்கு பிச்சிப் பூவை அர்ப்பணித்து 3 முறை வலம் வரவும்.
கும்பம்
பரிகாரம் : சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும். சனிக்கிழமைதோறும் வினாயகருக்கு மரிக்கொழுந்துவை அணிவித்து வழிபட்டு வர உங்கள் பொருளாதார நிலைமை படிப்படியாக மூன்னேற்றம் ஏற்படும்.
மீனம்:
வியாழகிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று நவக்கிரகங்களை 9 முறை வலம் வரவும். வியாழக்கிழமைதோறும் சாமந்தி மலரை சிவனுக்கு சாத்தி வழிபட்டு வர உங்கள் தடைகளெல்லாம் விலகி நன்மைகள் ஏற்படும்.
====================================================================
Also check :
சனிப் பெயர்ச்சியை கண்டு ஏன் இந்த பயம்?
அறங்களில் உயர்ந்த கோ சம்ரோக்ஷனத்தின் அருமையும் பெருமையும்!
====================================================================
[END]
திருநள்ளாறு செல்லவிருப்பவர்கள்ளுக்கு தங்கள் அளிக்கும் டிப்ஸ்கள் உபயோகமாய் இருக்கும். தங்களியின் திருபனிக்கு நன்றி. அனைத்தும் மிக எளிமையான பரிகாரங்கள் மிகவும் நன்று.
மிகவும் அருமையான பதிவு . சனி பெயர்ச்சி பலன்களை நம் வாசகர்களுக்காக தொகுத்து வழங்கிய திரு ராம கிருஷ்ணன் அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் . அறச்செயல்களில் ஈடு பட்டு கொண்டிருக்கும் நம் வாசகர்கள் சனி பெயர்ச்சி பற்றி அஞ்ச மாட்டார்கள். எல்லோருக்கும் பயனுள்ள பதிவு. இன்னும் பல சனி பெயர்ச்சி பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.
நன்றி
உமா வெங்கட்
மிக்க நன்றி நண்பரே!!! தங்களின் (நம்) தளத்தை கிட்டத்தட்ட ஒரு மிக பெரிய பத்திரிக்கை போலவே நடத்தி கொண்டிருக்கிறீர்கள். தங்களின் விட முயற்சியும் தன்னம்பிக்கையும், தங்களின் வாசகர்களையும் தன்னை போல ஆன்மீகத்திலும் தன்னம்பிக்கையிலும் உயர்த்த இடத்திற்கு அழைத்து செல்லவேண்டும் என்ற தங்களின் உயர்த்த சிந்தனையும் நினைக்க நினைக்க வியப்பாக இருக்கிறது, தங்களை நேற்றய ஸ்ரீ ஸ்ரீ ஞானானந்தரின் ஆரதனை விழாவில் கண்டதும் ஒரு பெரிய பேரு. தங்களின் பணி தொடர சரி ஸ்ரீ மகாபெரியவ துணை நிற்க வேண்டுகிறோம்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
ஞானானந்தா கிரி ஆராதனை விழாவில் தங்கள் கலந்து கொண்டதை அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.
ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ்
நன்றி
உமா
அனைவருக்கும் உகந்த எளிய பரிகாரங்களை அளித்திருக்கும் திரு.ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி.
ஓம் நம சிவாய
அனைத்தும் எளிய பரிகாரங்கள்………..மிக்க நன்றி………