தஞ்சை மற்றும் கும்பகோணம் பகுதிகளில் உள்ள பல ஆலயங்களை குறிப்பாக நவக்கிரக பரிகாரத் தலங்களை தரிசித்துவிட்டு சென்னை திரும்பியாகிவிட்டது. இது எம் தங்கை குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த பயணம். முதலில் நாம் இதில் கலந்துகொள்வதாக இல்லை. ஆனால் பயணத்தில் எம் பெற்றோரும் இடம்பெற்றபடியால் அவர்களுடன் இருக்கும் பொருட்டும் தங்கை குடும்பத்தினரின் வேண்டுகொளுக்கிணங்கவும் கடைசி நேரத்தில் உடன் சென்றோம். மேலும் ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. விட்டுவிடுவோமா? ஒன்று அத்தனை ஷேத்ரங்களையும் தரிசிக்க ஒரு வாய்ப்பு. மற்றொன்று நமது ஆண்டுவிழா மற்றும் விருதுகள் விழாவுக்காக இரவு பகல் பாராமல் பணியாற்றியதால் நமக்கும் ஒரு பிரேக் தேவைப்பட்டது. அடுத்து அத்தனை தலங்களின் புகைப்படங்களையும் நம் காமிராவில் அள்ளிக்கொண்டு வர ஒரு அற்புதமான வாய்ப்பு… எனவே விடுமுறையை சற்று நீட்டித்து பயணத்தில் நாமும் சேர்ந்துகொண்டோம்.
இந்த திருத்தல பயணத்தில் இதுவரை நமக்கு பிரார்த்தனை கோரிக்கை சமர்பித்திருந்த நம் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பலருக்காக அர்ச்சனையும் பிரார்த்தனையும் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இது நம்மைப் பொறுத்தவரை நம் வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் நாம் செய்யும் நம்மால் இயன்ற ஒரு சிறு பிரதி உபகாரம். இதை எதற்கு இங்கே சொல்கிறோம் என்றால் நீங்களும் திருத்தலங்களுக்கு செல்லும்போது உங்கள் குடும்பத்தினருக்காக மட்டும் அல்லாமல் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பெயருக்கும் உங்களுடன் சேர்ந்தோ தனியாகவோ அர்ச்சனை செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே. இது ஒரு மிக நல்ல பழக்கம். அனைவரும் பின்பற்ற வேண்டிய பழக்கம். இப்படி செய்து வந்தால் உங்களை சுற்றி நேர்மறை அலைகள் உருவாகும். அந்த அலைகள் உங்கள் லட்சியங்களுக்கு துணை நிற்கும். அதனால் பரஸ்பரம் உங்களுக்கும் நன்மை. அவர்களுக்கும் நன்மை. மேலும் நமக்காக பிரார்த்திக்கும்போது சுயநலமே அங்கே முன்நிற்கிறது. அடுத்தவர்களுக்கு பிரார்த்திக்கும்போது பிறர் நலன் சேர்ந்துவிடுவதால் நமது பிரார்த்தனைக்கு இறைவனிடம் தானாக முக்கியத்துவம் கிடைத்துவிடுகிறது. (அர்ச்சனை செய்யும்போது உங்கள் குடும்பத்தினருக்கு ஸ்வாமியிடமும் நண்பர்கள் குடும்பத்தினருக்கு அம்பாளிடமும் செய்யலாம்!).
விஷயத்திற்கு வருகிறோம்….
நமது தளத்தில் இடம்பெற்ற வேல்மாறல் பற்றிய தொடர் பதிவையடுத்து ‘வேல்மாறல் பாராயணம்’ செய்ததன் மூலம் தன் வாழ்வில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றம் குறித்து வாசக நண்பர் ஒருவர் நமக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சலை இத்துடன் இணைத்துள்ளோம்.
கீழ்காணும் இந்த வாசகர் நமது தளத்தின் பல்வேறு பணிகளில் எந்த வித எதிர்பார்ப்புமின்றி ஒரு கடமையாக கருதி மனமுவந்து துணை நிற்பவர். பெங்களூரில் இருந்தாலும் இயன்றபோதெல்லாம் நமது உழவாரப்பணிகளில் பங்கேற்று வருபவர். சென்ற ஆண்டு குடியாத்தம் நகரில் சிவத்திரு.தாமோதரன் அவர்களின் முற்றோதல் நடைபெற்றபோது, நமது அழைப்புக்கிணங்க பெங்களூரில் இருந்து குடியாத்தம் வந்திருந்து முற்றோதலை கண்டு ரசித்துவிட்டு தாமோதரன் ஐயாவிடமும் அன்னை பழனி பாட்டியிடமும் ஆசி பெற்றுச் சென்றார். (அன்னையுடன் சில மணித்துளிகள் – குடியாத்தம் திருவாசகம் முற்றோதல் விழா அனுபவம்!) மேலும் தலைசிறந்த சிவபக்தர். சமீபத்தில் நடைபெற்ற நமது தளத்தின் ஆண்டுவிழாவுக்கும் இவர் வந்திருந்தார்.
நேற்று மாலை அவர் நமக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சலை இத்துடன் பகிர்ந்திருக்கிறோம். மேலும் அலைபேசியில் அவர் நம்மிடம் கூறி சேர்த்துக்கொள்ளுமாறு கூறிய தகவல்களையும் இணைத்து தந்திருக்கிறோம்.
இந்த கடிதத்தில் சில வரிகளை நாம் நீக்க விரும்பினோம். ஆனால் அவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. பிழை திருத்தம் மட்டுமே செய்து வெளியிடவேண்டும். இல்லையென்றால் வேண்டாம் என்று கண்டிப்புடன் கூறிவிட்டார். எனவே சிற்சில இடங்களில் பிழை திருத்தமும், இனிமைக்காக ஆங்கில வார்த்தைகளை தமிழ்ப்படுத்தியும் தந்திருக்கிறோம். சில நீண்ட கோர்வையற்ற வாக்கியங்களை பிரித்து தந்திருக்கிறோம்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
நன்றி!!
சுந்தர்,
ஆசிரியர், WWW.RIGHTMANTRA.COM
================================================================
சூரியனை கண்ட பனிபோல மறைந்த பிரச்சனைகள் – வேல்மாறலுக்கு நன்றி!!
ரைட்மந்த்ரா வாசகர்களுக்கு வணக்கம்.
என் பெயர் த.முத்துக்குமார். நான் பெங்களூரில் உள்ள ஒரு பன்னாட்டு ஐ.டி. நிறுவனத்தில் ப்ராஜக்ட் மேனேஜராக உள்ளேன். சுந்தர் அவர்களை கடந்த நான்கு வருடங்களாக நான் அறிவேன். அதாவது அவர் ரைட்மந்த்ரா.காம் துவக்குவதற்குக் முன்பிருந்தே அவரை எனக்கு தெரியும். ஆனால் பேசியதில்லை. ரைட்மந்த்ரா என்னும் இந்த முயற்சியை, புதிய பாதையை, அவர் போட்ட பின்னர் தான் அவருடன் பேசும் வாய்ப்பு அமைந்தது. தினமும் இந்த தளத்தை வாசிக்கும் வழக்கம் உண்டு. பதிவுகள் எதையும் விடுவதில்லை. ஓரிரு நாள் தவறினால் அடுத்த நாள் சேர்த்து வைத்து படித்துவிடுவேன். பதிவுகளில் கூறப்படும் கருத்துக்கள் பலவற்றுள் என்னால் இயன்றவற்றை கடைப்பிடித்து வருகிறேன். பல விஷயங்களில் என் சிந்தனையும் அவர் சிந்தனையும் ஒத்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. எனது சொந்த வாழ்க்கையிலும் அலுவலகத்திலும் சொல்ல முடியா நெருக்கடிகள் எனக்கு உண்டு. தனிப்பட்ட முறையில் சுந்தர் அவர்களிடம் கோரிக்கை விடுத்து எனக்காக பிரார்த்தித்துக் கொள்ள சொன்னதுண்டு.
இந்த வருட பிற்பகுதியில் அலுவலகத்தில் எனக்கு அளித்த வேலை மிகவும் கடினமாக இருந்தது. தினமும் ஏச்சும் பேச்சும் வாங்கி வந்தேன். என் மேல் தவறு இல்லை என்றாலும் எனக்கு ஆதரவாக யாரும் இல்லாத சூழல். (அது தான் இன்றைய கார்ப்பரேட் உலகம்).
என் மேலாளர், இந்த ப்ராஜெக்டை நான் முடிக்கவில்லை என்றால் எனது வேலை போய் விடும் என்றே சொல்லி விட்டார். இந்த சமயத்தில் தான் ‘வேல்மாறல்’ பற்றி இந்த தளத்தில் அறிய பெற்றேன். ஆனால் உடனே நான் அதன் மகத்துவத்தை அறியவில்லை. ‘பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று’ என்று விட்டுவிட்டேன். ஆனால் ரைட்மந்த்ராவில் ‘வேல்மாறல்’ பற்றி பதிவும் தொடரும் தொடங்கிய அடுத்த வாரத்தில், சக்திவிகடனிலும் ‘வேல்மாறல்’ பற்றி கட்டுரை வெளியானது. அதன் பிறகு தான் அதன் அருமை உணர்ந்தேன்.
ரைட்மந்த்ராவில் வெளியான ‘வேல்மாறல்’ பதிவை மீண்டும் படித்தேன். இப்போது ஒவ்வொரு வார்த்தைக்கும் பின்னணியில் உள்ள பொருள் புரிந்தது. அதன் அருமையும் புரிந்தது.
உடனே தளத்தில் வெளியாகியிருந்த அந்த மஹாமந்திரத்தை ஒரு பிரதி எடுத்து அடுத்த நாள் முதல் (Nov 18) பாராயணம் செய்ய ஆரம்பித்தேன்.
என்ன அதிசயம், அடுத்த நாளே எனக்கு ஒரு “Appreciation Mail” வந்தது. முன் தின இரவே எனது TEAM MEMBERS அனைத்து PENDING வேலைகளையும் முடித்து CLIENT க்கு தெரிவித்து விட்டார்கள். என்னால் நம்பவே முடியவில்லை, அன்று முதல் தினசரி காலையில் குளித்து விட்டு ‘வேல்மாறல்’ பாராயணம் செய்து வருகிறேன். மேலும் நான் தற்போது இருக்கும் டீமைவிட்டு வேறு ஒரு டீமில் சேர வேண்டும் என்று பிரார்த்தித்தேன், அதுவும் ஒரு வார காலத்தில் நடந்தது. ‘வேல்மாறல்’ மேல் இருந்த நம்பிக்கை மேலும் கூடியது.
அடுத்து, ஒரு முக்கியமான “Certification (PMP – Project Management Professional)” என்னும் தேர்வை கிளியர் செய்ய வேண்டி இருந்தது. இதன் கட்டணம் ரூ. 40,000. இந்த certification ஐ இரண்டு முறை (2010 மற்றும் 2012) முயற்சி செய்து தோல்வி அடைந்தேன், (ரூ.80,000 எனக்கு நட்டம் ஆயிற்று.) அப்படி ஒரு கடினமான தேர்வு அது. இந்த வருடம் எப்படியும் இதுல தேர்ச்சி பெற வேண்டும் என்று பிரார்தித்தேன், அதுவும் கடந்த வெள்ளி (Dec 19) அன்று நடந்தது. அந்த தேர்வில் வெற்றி பெற்றுவிட்டேன்.
மகிழ்ச்சியில் என் கண்ணில் நீர் பெருக்கெடுத்து ஓடியது, முருகனின் அருளை எண்ணி எண்ணி ஆனந்த கண்ணீர் வடித்தேன். நம்மால் கடவுளுக்கு எதையும் திருப்பி கொடுக்க முடியாது, நமது நன்றியையும், பக்தியையும் மட்டுமே செலுத்த முடியும். அதனால் உடனே திருத்தணிக்கு புறப்பட்டு சென்று முருகனை மனதார தொழுதேன், ‘வேல்மாறல்’ பாராயணத்தை அவன் அருகிலே நின்று பாராயணம் செய்தேன். என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, சத்தியமாக சொல்வதென்றால், மேற்கொண்டு அவனிடம் என்ன கேட்பது என்றே தெரியவில்லை, நன்றியை மட்டுமே மீண்டும் மீண்டும் கூறினேன்.
திருத்தணியில் தரிசனத்தை நல்ல படியாக முடித்து கொண்டு அங்கிருந்து நேரே காளஹஸ்தி சென்று, அங்கு இறைவனை வழிபட்டு விட்டு காரை ஸ்டார்ட் செய்கிறேன்…. சுந்தர் அலைபேசியில் அழைத்தார். கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் இராகு தலத்தில் தற்போது தான் தரிசனம் முடித்ததாகவும், என் பெயருக்கு அர்ச்சனை செய்ததாகவும் தெரிவித்தார். எனக்கு ஒரே வியப்பு. ஏனெனில், எனக்கு நடக்கும் தசாபுத்திப்படி ராகுவுக்கு நான் பரிகாரம் செய்யவேண்டும். இது குறித்து நான் யாரிடமும் எதுவும் பகிர்ந்ததில்லை. குறிப்பாக சுந்தர் அவர்களிடம் நான் இது பற்றி கூறவில்லை. ஆனால் சொல்லி வைத்தது போல ராகு பகவானுக்கு அதுவும் ராகுவின் பரிகார ஷேத்ரமான திருநாகேஸ்வரரத்தில் என் பெயரில் அர்ச்சனை செய்ததாக கூறியபோது எனக்கு ஏற்பட்ட வியப்பிற்கு அளவேயில்லை.
“எனக்கு திருநாகேஸ்வரத்தில் அர்ச்சனை செய்யவேண்டும் என்று உங்களுக்கு எப்படி தோன்றியது? நான் இது பற்றி உங்களிடம் எதுவும் பேசவில்லையே…” என்று என் வியப்பை அவரிடம் தெரிவித்தபோது, ரைட்மந்த்ரா வாசகர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும் தாம் தரிசித்து வரும் நவக்கிரக தலங்களில் பிரார்த்தனையும் அர்ச்சனையும் செய்துவருவதாகவும், திருநாகேஸ்வரத்தில் அர்ச்சனை செய்யும்போது, வாசக நண்பர்கள் மற்றும் இதுவரை பிரார்த்தனை சமர்பித்திருந்த அன்பர்களின் பெயர், ராசி, நட்சத்திரம் எழுதி வைத்திருந்த டைரியை எடுத்து வேகமாக பக்கங்களை புரட்டியபோது (சன்னதியில் கூட்டமென்றால் கூட்டம் அப்படியொரு கூட்டம் என்று கூறினார்) முதலில் எனது பெயர் கண்ணில் பட்டதாகவும், எனவே எதுவும் யோசிக்காமல் என் பெயருக்கு அர்ச்சனை செய்ததாகவும் கூறினார்.
எனக்கு ஒரு கணம் புல்லரித்தது. நிச்சயம் இது திருத்தணி முருகனின் விருப்பமே அன்றி வேறொன்றுமில்லை என்பது எனக்கு புரிந்தது.
அப்போது தான் அவரிடம் நான் காளஹஸ்தியில் தரிசனம் முடித்துவிட்டு கிளம்பிக்கொண்டிருக்கும் விஷயத்தை சொன்னேன். அன்று இரவே (சனிக்கிழமை 20/12/2014) பெங்களூர் திரும்பினேன். எனது சொந்த வாழ்வில் பல பிரச்சனைகள் உள்ளன. அவை சுந்தர் அவர்களுக்கு தெரியும். கூடிய விரைவில் அவை அனைத்தும், வேல்மாறலின் அளவில்லா சக்தியாலும், கந்தனின் அருளாலும் தீரும் என்ற ஆயிரம் மடங்கு நம்பிக்கை தற்போது எனக்கு ஏற்பட்டிருக்கிறது.
‘வேல்மாறல்’ ஒரு வரப்பிரசாதம். நான் இதன் மகத்துவத்தை எல்லோரிடமும் கொண்டு செல்ல விரும்புகிறேன். சமீபத்தில் நடந்து முடிந்த ரைட்மந்த்ரா ஆண்டு விழாவின் போது தான் வேல்மாறல் 4 புத்தகங்கள் மற்றும் யந்திரங்களை வாங்கி வந்தேன். வாழ்க்கையில் அல்லல்படும் பல பேரிடம் வேல்மாறல் மகத்துவத்தை எடுத்து கூறி, ரைட்மந்த்ராவில் அது தொடர்பாக வெளிவந்திருக்கும் தொடர் பற்றியும் கூறி அவர்களும் பயன் பெறுமாறு செய்வேன்.
உங்கள் கிரக நிலைகள் எப்படி இருந்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ரைட்மந்த்ரா வாசகர்கள் அனைவரும் உடனே ‘வேல்மாறல்’ புத்தகம் வாங்கி பாராயணம் செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
நன்றி.
த.முத்துக்குமார்,
பெங்களூர்-560048.
===============================================================
இந்த பதிவை எடுத்தாள விரும்பும் அன்பர்கள், பதிவிலோ புகைப்படங்களிலோ எந்த மாற்றத்தையும் செய்யாமல் உள்ளது உள்ளபடி எடுத்தாளுமாறு கேட்டுக்கொள்கிறோம். நமது தளத்தின் இணைய முகவரியை அளித்தால் நன்றியுடையவர்களாய் இருப்போம்.
===============================================================
அடுத்து…
* யார் இந்த திருப்புகழ் சகோதரர்கள் ?
* திரு.சாதுராம் ஸ்வாமிகள் என்பவர் யார் ?
அடுத்த பாகத்தில் விரிவாக…. to be continued in Part 8
==============================================================
Also check :
‘வேல்மாறல்’ யந்திர தரிசனம் — யாமிருக்க பயமேன்? (Part 6)
நம் வாசகர் வீட்டில் ‘வேல்மாறல்’ செய்த அதிசயம் — யாமிருக்க பயமேன்? (Part 5)
கைமேல் பலனைத் தந்த ‘வேல்மாறல்’ பாராயணம் — யாமிருக்க பயமேன்? (Part 4)
இழந்த வாழ்க்கையை மீட்டுத் தந்த ‘வேல்மாறல்’ — யாமிருக்க பயமேன்? (Part 3)
வினைகளை தகர்க்கும் ‘வேல்மாறல்’ எனும் மஹாமந்த்ரம் — யாமிருக்க பயமேன்? (Part 2)
வேல் தீர்க்காத வினை உண்டா? உண்மை சம்பவம்! — யாமிருக்க பயமேன்? (Part 1)
உன்னை தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்!
முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!
சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!
முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2
ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?
கருவறையில் மட்டுமா இருக்கிறான் கந்தன் ? தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 2
நல்லதை நினைத்தால் போதும்… நடத்திக்கொள்ள ஆண்டவன் தயார்!
கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1
தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!
காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!
ஏழை திருமணத்துக்கு உதவிய வள்ளல் & வாரியாரின் வாழ்வும் வாக்கும் – தமிழ் புத்தாண்டு SPL & வீடியோ!
காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!
================================================================
[END]
தங்கள் ஆன்மிக பயணத்தை முடித்து விட்டு மீண்டும் பதிவு எழுத ஆரம்பித்ததில் மிக்க மகிழ்ச்சி.
நிறைய அற்புதங்களை வரும் பதிவுகளில் எதிர்பார்கிறேன். கண்டிப்பாகக நிறைய அற்புதங்கள் தங்களுக்கு நடந்திருக்கும்.
வேல் மாரல் பற்றிய திரு முத்துக்குமார் அவர்களின் சிலிர்ப்பூட்டும் அநுபவத்தை படித்து மெய் சிலிர்கிறது. நானும் எனது மகனும் வேல்மாரல் படிக்க ஆரம்பித்து விட்டோம், போன வியாழன் அன்று வடபழனி முருகனின் பாதத்தில் lamination செய்த வேல் மாறலை முருகன் பாத்தில் வைத்து முருகனின் ஆசிர்வாதத்துடன் வீட்டு பூஜை அறையில் வைத்து விட்டேன். இனிமேல் வரும் காலம் நல்ல காலமாக அமைய இறைவன் அருள் புரிய வேண்டும்.
//நமக்காக பிரார்த்திக்கும்போது சுயநலமே அங்கே முன்நிற்கிறது. அடுத்தவர்களுக்கு பிரார்த்திக்கும்போது பிறர் நலன் சேர்ந்துவிடுவதால் நமது பிரார்த்தனைக்கு இறைவனிடம் தானாக முக்கியத்துவம் கிடைத்துவிடுகிறது. (அர்ச்சனை செய்யும்போது உங்கள் குடும்பத்தினருக்கு ஸ்வாமியிடமும் நண்பர்கள் குடும்பத்தினருக்கு அம்பாளிடமும் செய்யலாம்!).//
மிக்க மகிழ்ச்சி
திருசெந்தூர் முருகன் துணை
நன்றி
உமா
மிக்க நன்றி சுந்தர் சார்
திரு.முத்துக்குமார் அவர்களுக்கு வேல்மாறல் பாராயணம் மூலம் அவர் பணியில் ஏற்பட்ட இடர் கலைந்தது பற்றி மிகவும் சந்தோசம்.
அவர் சிறந்த சிவபக்தர்.இந்த சனிபெயர்சிக்கு பின் அவருக்கு வருவது எல்லாம் நன்மையே அன்றி வேறில்லை.
அதற்க்கு ஒரு முன் உதாரணம் தான் அவரின் கடிதம்.
அவர் வாழ்வில் எல்லா நலனும் பெற்று வாழ சிவ அருளும், அவர் மகன் முருகனருளும் என்றும் அவருக்கு கிடைக்கும்.
நம் வாசகர்கள் பல பேர் வேல்மாறலை கையில் எடுத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்.
எல்லோரும் எல்லா வளமும் பெற வாழ்த்துக்கள்.
நன்றி.
ஹலோ சுந்தர்
என் பதிவை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. சொல்ல நினைத்த அனைத்து விசயங்களையும் தமிழில் டைப் செய்ய மிகவும் சிரமப்பட்டதால். நான்கு வரி டைப் செய்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. நீங்கள் பிழை திருத்தி வெளியிட்டிருப்பது மிக்க மகிழ்சி. பதிவு நான் நினைத்தடவிட நன்றாக வந்துள்ளது. முருகன் படம் அருமை.
ரைட்மந்த்ரா வாசகர்கள் அனைவரையும் வேல்மாறல் பாராயணம் செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். இந்த கலி யுகத்தில் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் இந்த வேல்மாறல் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எத்தனையோ ஸ்லோகங்கள் இருந்தாலும் உடனடி நிவாரணம் தருவது என்னவோ வேல்மாறல் தான் என்பதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளேன்.
வெற்றி வேல் முருகனுக்கு அரோ கரா, வீர வேல் முருகனுக்கு அரோ கரா.
வேலும் மயிலும் சேவலும் துணை.
நன்றி.
வணக்கம்……….
வேல் மாறலின் மகிமை புரிந்தது………முத்துக்குமார் சாருக்கு நமது வாழ்த்துக்கள்………..
நம் வாசகர்கள் அனைவரும் வேல் மாறலைப் பாராயணம் செய்து நலமும், வளமும் பெறவேண்டும்………
முருகா சரணம்………..
நம் வாசகர்கள் அனைவரும் வேல் மாறலைப் பாராயணம் செய்து நலமும், வளமும் பெறவேண்டும்………
அனுபவத்தினை பகிர்ந்து கொண்ட நண்பர் தளபதி முத்துக்குமார் மென்மேலும் வெற்றி பெரவாழ்துக்கள்.
சுந்தர்ஜி அவர்களின் சேவை மகத்தானது .
வாழ்த்துக்களுடன்
மனோகர்
Vel’s moral is “Do not fear when I am here”. வேல் மாறலின் தத்துவம் “யாமேருக்க பயமேன்”.
நண்பர் முத்துகுமாரின் வேல் மாறல் அனுபவம் மற்றும் சுந்தரின் ஆன்மீக பயணம் குறித்த விவரங்களை சேர்த்து ஒரு அற்புதமான பதிவு. அதிலும் குறிப்பாக மற்றவர்களுக்காக பிரார்த்தனையும் அர்ச்சனையும் செய்வதன் முக்கியத்துவம் இப்போது புரிகிறது.
ஒவ்வொரு பதிவிலும் புதிய நன்மை பயக்கும் விவரங்கள் – மிக்க நன்றி சுந்தர்.
Like you usually say, If we take one step towards god, he will come towards us many more steps towards us.
**
Like friend muthukummar experienced divine power, many would be going to benefit out of ‘vel maaral’.
I too would like to read it.
**
Thanks so much for this post and thanks to Mr. Muthukumar too.
வேல் மாறல் மகத்துவம் அருமையான சாட்சியம் …
வணக்கம் அண்ணா
உண்மையிலேயே மிக்க சக்தி வாய்ந்ததாக உள்ளது வேல்மாறல்.
வேல் மாறல் ஒலி ஒளியுடன் கூடிய வீடியோ (45 நிமிடம்) கடைசி கட்டத்தை நெருங்கி விட்டது அண்ணா முழுமையாக தாயர் செய்து கொண்டிருக்கிறேன் முடித்து விட்டு மின்னஞ்சல் அனுப்புகிறேன்.
90 நாட்கள் தொடர்ந்து தினமும் பாராயணம் (1 முறை படிக்கலாம் அல்லது 3 முறை பாராயணம் செய்வது மிக்க சிறப்பு) செய்த பிறகு கண்ணை மூடி திருத்தணியில் உதித்தருளும்… என்ற இருவரிகளை பாடினாலே நம்மை சுற்றி ஒரு வேல் கவசமாக இருப்பதை உணரலாம் அண்ணா.
// (அர்ச்சனை செய்யும்போது உங்கள் குடும்பத்தினருக்கு ஸ்வாமியிடமும் நண்பர்கள் குடும்பத்தினருக்கு அம்பாளிடமும் செய்யலாம்!) == இதை அனைவரும் பின்பற்ற வேண்டும்
வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மை காக்கும் சுப்ரமண்ய வேல்…..
நன்றி
Even I wanted to share my experience with “vel Maral”. My son who was not getting job in US for 5 months, after I started reading “Vel Maral”, got a very Good divine job. Here Divine job, I am specifying because whenever I use to pray for his job, i use to request God that, he should get a divine job. And now he got into a Hospital called “Saint Mary’s Hospital”. He will b working with the Hospital’s corporate office.
I use to pray for his friends also to get job. My prayers were answered and they all got the job before 2months. And my son was the only person, who was left without job. But he helped his friends to move to other states for the job. Now I am happily telling that reading “vel maral” gave a very good divine job for my son and he will be joining on 5th of Jan (on Arudra Darshanam day).
shashi
சுந்தர் அண்ணா..
“வேல் மாறல்” பாராயணம் மகிமை என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. மேலும் பிரார்த்தனையின் நோக்கம் பற்றியும் அறிந்து கொண்டேன்.
மிக்க நன்றி அண்ணா
எனது தோழி மகன் பிரஷாந்த் உடல்நலக் குறைவால் அமெரிக்க நியூ ஜெர்சி ஹோச்பிடல் இல் அனுமடிக்கபட்டுள்ளார் ..அவர் விரைவில் குணமாகி இந்திய திரும்ப ரைட் mantra prayer கிளப் பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்
Please check your mail and reply. Don’t worry we will pray.
ரொம்ப ரொம்ப அருமை சார்: வேல் மாறல் மகத்துவம் என்றுமே மகத்தானது . அதுவும் நம் குடும்ப உறுப்பினருக்கு சாமிகிட்ட, நண்பர்களுக்கு அம்பாளிடமும் அர்ச்சனை செய்வது நல்லது .
ஆனால் என் மனைவியோ கோவிலுக்கு சென்ற வுடனே, முதல் வழிபாடு கோவில் நல்லா இருக்கனும் . அடுத்து சாமிகிட்டே, அம்பாள் கிட்டே நீ நல்லா இருக்கியா ? நீ நல்லா இருந்தாலே எல்லாரும் நல்லா இருப்பர்கள் . என்று பேசுகிறார் .
ஏன் இப்படி என்று கேட்டால் நமக்கு என்று எதுவும கேக்காதே :
எல்லாமும் அவருக்கு தெரியும் என்பாள்
நானும் அப்படியே செய்துடுவேன்.
உங்க கருத்தும் நல்லாவே இருக்குது சார்.
நன்றி.
தங்கள்
சோ. ரவிச்சந்திரன்
கைகா. கர்நாடகா
9480553409
Actually wanted to know the effect of velmaral thanks and blessed to get to know about velmaral through your e mails vstryvel வீரவேல்
Can anyone please upload velmaral in English or Hindi.It would be really nice for others getting benefit out of it.
Your website informations nice to read
I want to read on daily basis.
R S Sankaranarayanan
9840118620
Welcome sir. thank you very much