Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, July 16, 2024
Please specify the group
Home > Featured > ஸ்ரீ மகா பெரியவா திருவிளையாடல் – குரு தரிசனம் (23)

ஸ்ரீ மகா பெரியவா திருவிளையாடல் – குரு தரிசனம் (23)

print
ன்று மகா பெரியவா ஆராதனைத் திருநாள். அதாவது அவர் மகாசமாதி அடைந்த நாள். அவரைப் பற்றி இந்த எளியவன் என்ன செல்வது? தேடி வந்து தடுத்தாட்கொண்ட தெய்வம் அவர். நினைத்ததை நடத்தி தரும் கருணாமூர்த்தி. அவர் கொடுப்பதிலும் கருணை இருக்கும். கொடுக்க மறுப்பதிலும் கருணை இருக்கும். பொறுமையுடன் இருந்தால் அந்த பிரவாகத்தை உணரலாம். எல்லாம் அறிந்தவர். ஆனால் ஏதும் அறியாதவர் போல இருப்பார். தர்மத்தை காக்க இராமனாக அவதரித்த ஸ்ரீமன் நாராயணன், தான் ஒரு அவதார புருஷன் என்று எங்கேயும் சொன்னானா? அல்லது காட்டிக்கொண்டானா? அது போலத் தான் நம் பெரியவாவும்.

Maha periyava standingதனக்கு பலவித சித்திகள் கைவரப்பெற்றிருந்தும் அவற்றை அவசியமின்றி பிரயோகிக்காமல் ஆன்ம விசாரனை செய்து தன்னை உயர்த்திக்கொண்டார். இன்றைய ஆன்மீகவாதிகள் எப்படியெல்லாம் இருக்கிறார்கள்? ஆனால் மகா ஸ்வாமிகள் தனது வாழ்நாளில் இந்த தேசமெங்கும் பல்லாயிரம் கி.மீ. தூரம் பாதயாத்திரை சென்றிருக்கிறார். நாட்கணக்கில் உபவாசம் இருந்திருக்கிறார். பிராரப்த கர்மாவினால் தனது பக்தர்களுக்கு வரவிருந்த துன்பங்கள் பலவற்றை தான் ஏற்றுக்கொண்டு அவர்களை காப்பாற்றியிருக்கிறார். வேத நெறிப்படி மனிதன் வாழமுடியும் என்று நிரூபித்தது அந்த ராமச்சந்திரமூர்த்தி மட்டுமல்ல இந்த சந்திரசேகரரும் தான்.

“அவருடைய பக்தன் நான்” என்று சொல்வதைவிட “அவர் சொல்படி நடப்பவன் நான்” என்பதிலேயே ஒருவர் பெருமிதம் கொள்ளவேண்டும். அதுவே அவருக்கு ஒருவர் செய்யகூடிய நன்றிக்கடன். அடியேன் அவர் சொல்படி நடக்க முயற்சிப்பவன்.

மகா பெரியவா தொடர்பான பால்ய திருவிளையாடல் ஒன்றை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட நமது சோமசுந்தரரின் திருவிளையாடலை இது நினைவுபடுத்தியது. படியுங்கள். படிக்கவே பரவசமாக இருக்கும். ஏனெனில் இது எங்கள் பெரியவா திருவிளையாடலாக்கும்!

ஸ்ரீ மகா பெரியவா திருவிளையாடல்!

20-5-1894-ல் விழுப்புரத்தில் சுப்ரமணிய சாஸ்திரிகள், மகாலக்ஷ்மி என்ற திவ்ய தம்பதிகளுக்கு குழந்தையாக அவதரித்தார் பரமாச்சார்ய சுவாமிகள். 13-2-1907-ல் தனது 13-ஆவது வயதிலேயே  காமகோடி பீடத்தின் 68-ஆவது பீடாதிபதியானார்.

பீடத்திற்கு வந்ததும் சுவாமிகள் மகேந்திர மங்கலம் என்ற கிராமத்தில் பல ஆண்டுகள் தங்கி வேதம், வியாகரணம், வேதாந்தம் முதலிய வற்றைப் பயின்றார். சுவாமிகள் 1919 முதல் 21 ஆண்டுகள் பாரதம் முழுவதும் ஞான யாத்திரை செய்தார். அந்த காலகட்டத்தில் பரமாச்சார்ய சுவாமிகள் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார்.

Maha periyava earlier ageபரமாச்சார்ய சுவாமிகளின் தவம் தன்னிகரற்றது. அவர் பெற்ற ஞானம் எல்லையற்றது. மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட வல்லமையைப் பெற்றிருந்தார். சந்நியாச தர்மத்திற்கு இலக்கணமாய்த் திகழ்ந்தார். மகா யோகீஸ்வரர்!

அத்வைத சாஸ்திரத்தைப் பயில்பவருக்கு வசதி களையும், வழிகளையும் செய்தார். தனது உபன்யாசங்களினாலும், அருள் உரைகளினா லும் மக்களுடைய மன மாசுகளை அகற்றி தெய்வ பக்தியை வளரச் செய்தார். மகா பெரியவருக்குத் தெரியாத கலைகளே இல்லை. அவருடைய பேச்சில் வேதம் இருக்கும்; அறிவியல் இருக்கும்; சங்கீதம், சரித்திரம் போன்ற எல்லா விவரங்களும் இருக்கும்.

சுவாமிகள் காஞ்சி காமகோடி பீடத்தில் இருந்தபொழுது, 400 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத பொற்காலமாக அது இருந்தது. பல அற்புதங்கள் நடந்தன. எனது தந்தையார் சொன்ன சில அற்புத விவரங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது மகா பாக்கியம்.

“ஸ்ரீ சுவாமிகள் வித்யாப்யாசம் செய்த முறை தனியானது. சாதாரண மக்கள் தமக்கு கல்வி கற்பிக்கின்றவர்களை ஆச்சார்யார்களாக மதித்து, அவர்களிடம் பக்தி செலுத்திக் கல்வி பெறுவார்கள். பரமாச்சார்ய சுவாமிகளுக்கு கல்வி கற்பித்த பண்டிதர்களோ சுவாமிகளை தம் குருவாக ஏற்றுக்கொண்டவர்கள். பாடம் ஆரம்பிக்கும் முன்னரும், முடிந்த பின்னரும் அவர்கள் சுவாமிகளை வணங்குவார்கள்.

சுவாமிகளுக்கு முறையாகக் கல்வி உதவிய வர்களுள் பைங்காநாடு பஞ்சாபகேச சாஸ்திரி கள், மஹா மஹோபாத்யாய சாஸ்திர ரத்னா கர. தி. வெங்கடசுப்பா சாஸ்திரிகள், சாஸ்திர ரத்னாகர விஷ்ணுபுரம் சாமி சாஸ்திரிகள், திருவிசைநல்லூர் வெ. வேங்கடராம சாஸ்திரிகளும் அடங்குவர்.

ஒருசமயம் சுவாமிகளுக்கு கல்வி கற்பிக்க, அகண்ட காவிரியின் நடுவில் அமைந்த திட்டுக்குச் சென்று அங்கு பாடங்களை ஆச்சார்யர்கள் தொடங்கினார்கள். அப்பொழுது சுவாமிகள் பாலகிருஷ்ணனைப்போல லீலைகளைச் செய்தார். ஆற்று மணலைக் குவித்து விளையாடிக் கொண்டும், அங்கு மிங்கும் ஓடிக்கொண்டும் இருந்தாராம். ஆச்சார்யர்கள் நீண்ட நேரம் காத்திருந்து, அஸ்தமனம் ஆகிவிடவே பர்ணசாலைக்குத் திரும்பிவிட்டனர்.

மறுநாளும், அடுத்து சில நாட்களும் இதேபோன்ற லீலைகளை சுவாமிகள் செய்தார். ஆச்சார்யர்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. சுவாமிகளை கோபித்துக் கொள்ளவும் முடியாது. பாடங்கள் கற்பிக்கும் பணியை ஏற்றுக்கொண்டவர்கள் ஆயிற்றே.

அடுத்த நாள் ஆச்சார்யர்கள் சுவாமிகளை வணங்கி, “பெரியவா… நாங்கள் ஊருக்குச் சென்றுவிட்டு சில தினங்களில் வருகிறோம்” என்றார்கள்.

அவர்கள் நிலையை உணர்ந்த சுவாமிகள் புன்முறுவலுடன், “நான் பாடம் படிக்க உட்காரவில்லையே என்ற வருத்தம்தானே” என்று சொல்லி, அற்புதம் ஒன்றை நிகழ்த்தினார். தான் இதுவரையில் கற்ற பாடங்கள், இனிமேல் கற்க வேண்டிய பாடங்கள் எல்லாவற்றையும் அருவிபோல பொழிந்து விட்டாராம்.

ஆச்சார்யர்கள் மேனி சிலிர்த்தது. நெடுஞ்சாண் கிடையாக சுவாமிகளை வணங்கி ஆனந்தப் பரவசமானார்கள்.

சுவாமிகள் இவ்வளவு கல்விகளோடு ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளும் கற்று வந்தார். பல மொழிகளைப் பயின்றார். மகாராஷ்டிர மொழியையும், அதிலுள்ள நூல் களையும் ஆராய்ச்சி செய்துள்ளார். சுவாமி களுக்கு தமிழில் இருந்த ஆர்வம் அதிகமானது. தமிழ் இலக்கண, இலக்கியங்களையும் பயின்று வந்தார். தேவாரம், திருவாசகம், திருவிளையா டல் புராணம், திருக்குறள் போன்ற நூல்களை யும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வந்தார். சங்கீதக் கலை சுவாமிகளுக்கு மிகவும் பிடித்த மானது.

ஒரு அவதார புருஷராக இருந்தும்- நம்மிடையே நம் நிலைக்கு இறங்கி வந்து, மக்களோடு மக்களாகப் பழகி, அடியவர்களின் துன்பங்களை நீக்கி அருளைப் பொழிந்தார் மகாபெரியவர். சுவாமிகள் முன்பு நின்றாலே அவருடைய பார்வையினால் எல்லா தோஷங் களும் நீங்கி எல்லா நலன்களும் கிடைத்துவிடும். பல்லாயிரக்கணக்கான மக்களின் துயரங்களை நீக்கி அருள் மழையைப் பொழிந்துவிடுவார். இன்றும் சுவாமிகளை நினைத்து உள்ளம் உருகி நாம் செய்யும் பிரார்த்தனைகள் எல்லாம் நலமாக நடக்கிறது. குரு பாதம் வணங்கி குரு அருளைப் பெறுவோம்.

நன்றி : பி.ராஜலக்ஷ்மி | நக்கீரன்.காம்

Maha periyava upanyasam

பாக்கியத்திலும் மேலான பாக்கியம்!

மனிதனாகப் பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு. எல்லா பாக்கியங்களுக்கும் மேலான பாக்கியம் பிறருக்குச் சேவை செய்வதே.

‘சேவை’ என்று தெரியாமலே அவரவரும் தமது குடும்பத்துக்காகச் சேவை செய்கிறோம். அதோடு நமக்குச் சம்பந்தமில்லாத குடும்பத்துக்கு, ஊருக்கு, நாட்டுக்கு, சர்வதேசத்துக்கும் நம்மால் முடிந்த சேவையைச் செய்ய வேண்டும் என்கிறேன். நமக்கு எத்தனையோ கஷ்டங்கள், உத்தியோகத்தில் தொந்தரவு, சாப்பாட்டுக்கு அவஸ்தை, வீட்டுக் கவலை – இத்யாதி இருக்கின்றன. நாம் சொந்தக் கஷ்டத்துக்கு நடுவில், சமூக சேவை வேறா என்று எண்ணக்கூடாது. உலகத்துக்குச் சேவை செய்வதாலேயே சொந்தக் கஷ்டத்தை மறக்க வழி உண்டாகும். அதோடு கூட ‘அசலார் குழந்தைக்குப் பாலூட்டினால், தன் குழந்தைதானே வளரும்’ என்றபடி, நம்முடைய பரோபகாரத்தின் பலனாக பகவான் நிச்சயமாக நம்மைச் சொந்தக் கஷ்டத்திலிருந்து கைதூக்கி விடுவான். ஆனால் இப்படி ஒரு லாப நஷ்ட வியாபாரமாக நினைக்காமல், பிறர் கஷ்டத்தைத் தீர்க்க நம்மாலானதைச் செய்ய ஆரம்பிக்கவேண்டும். ஆரம்பித்துவிட்டால் போதும். அதனால் பிறத்தியான் பெறுகிற பலன் ஒரு பக்கம் இருக்கட்டும்! நமக்கே ஒரு சித்த சுத்தியும், ஆத்ம திருப்தியும், சந்தோஷமும் ஏற்பட்டு அந்த வழியில் மேலும் மேலும் செல்வோம்.

நம்மைப் போலவே சேவை செய்ய விருப்பம் உள்ளவர்களை எல்லாம் சேர்த்துக் கொண்டு எல்லோரும் ஒரே சங்கமாக ஒரே அபிப்ராயமாக இருந்து கொண்டு சேவை செய்வது சிலாக்கியம். அப்படிப் பலர் கூடிச் செய்யும்போது நிறையப் பணி செய்ய முடியும். சத்தியத்தாலும் நியமத்தாலும் இப்படிப்பட்ட சங்கங்கள் உடையாமல் காக்க வேண்டும்.

பொழுதுபோக்கு என்று ருசியாகத் தின்கிற இடத்திலும் கண்களைக் கவர்கிற காட்சி சாலைகளிலும் பொழுதை வீணாக்குவது தவறு. இந்தப் பொழுதைப் பிறருக்குச் சேவை செய்வதில் செலவழிக்க வேண்டும்.

அநாதைக் குழந்தைகளின் ஸம்ரக்ஷணை, திக்கற்ற ஏழைகளுக்கு ஸேவாஸதனம் வைப்பது, ப்ராணி வதையைத் தடுப்பது, பசு வளர்ப்பது, பசிக் கஷ்டம் யாருக்கும் வராமல் உபகரிப்பது என்றிப்படி எந்தெந்த விதத்தில் முடியுமோ அப்படி நம் அன்பை, வெறும் பேச்சாக இல்லாமல், கார்யத்தில் காட்டினால் பரமேச்வரனின் அன்பு நமக்கும் கிடைக்கும்.

– ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

(நன்றி : http://balhanuman.wordpress.com)

================================================================

வாசக நண்பர்களுக்கு…

எம் பெற்றோர் மற்றும் தங்கை குடும்பத்தினருடன் இன்றிரவு தஞ்சை, கும்பகோணம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல கோவில்களுக்கு திருத்தல யாத்திரை புறப்படுகிறோம். தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற பல புராதன ஆலயங்களை தரிசிக்க திட்டமிட்டிருக்கிறோம். செல்லும் ஆலயங்கள் அனைத்திலும் நம் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்வோம் என்பதை சொல்லவேண்டுமா என்ன? பயணம் முடித்து வரும் திங்கள் மாலை இறையருளால் சென்னை திரும்புவோம்.

நமது வெள்ளிக்கிழமை பிரார்த்தனை பதிவு மற்றும் MONDAY MORNING SPECIAL பதிவுகளை தயார் செய்துவைத்துவிட்டு செல்ல முயற்சிக்கிறோம். அப்படி தயார் செய்துவிட்டு செல்லும் பட்சத்தில் மொபைலில் இருந்து அவை போஸ்ட் செய்யப்படும். வழக்கமான பதிவு அடுத்த வாரம் முதல் வெளியாகத் துவங்கும். இடைப்பட்ட காலத்தில் முகநூல் வாயிலாகவும் இந்த தளத்திலும் தொடர்பில் இருப்போம்.

நன்றி!

– சுந்தர்,
ஆசிரியர்,
www.rightmantra.com

================================================================

Also check from our archives…

சொத்து வழக்குகளில் சிக்கித் தவித்தவருக்கு மகா பெரியவா சொன்ன பரிகாரம் – குரு தரிசனம் (22)

மகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து நீர் – குரு தரிசனம் (21)

சாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா! – குரு தரிசனம் (20)

இது தான் பக்தி என்பதை உணர்த்திய குடும்பம் – குரு தரிசனம் (19)

பார்வையாலேயே குணப்படுத்தும் வைத்தீஸ்வரன் – குரு தரிசனம் (18)

கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)

குரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)

மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)

“ஏம்பா! உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பெரியவா சேவை தானா?” – குரு தரிசனம் (14)

வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!

வாழைப்பழத்துக்கு பதில் மகா பெரியவா கொடுத்த நெற்பொரி. ஏன்? எங்கு? – குரு தரிசனம் (13)

“கடமைக்கே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது?” – குரு தரிசனம் (12)

காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

=================================================================

‘ஸ்ரீ ராகவேந்திர தரிசனம்’ தொடர் அடுத்த வாரம் முதல் தொடர்ந்து  இடம்பெறும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

================================================================
Also check :

Articles about Sri Ragavendhra Swamigal in Rightmantra.com

முதல் மாணவன், முதல் வேலை, முதல் சம்பளம்…!! – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (6)

புதுவை பிருந்தாவனத்தில் காட்சி தந்த ராகவேந்திரர் – உண்மை சம்பவம் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (5)

பட்ட மரம் துளிர்த்தது; வேத சக்தி புரிந்தது – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 4

கேட்பதை தருவார், கேட்டதும் தருவார் குருராஜர் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 3

“அழைத்தால் போதும் அடுத்த கணமே நினைத்தது நடக்கும்!” – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 2

திருவருளும் குருவருளும் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (1)

குருராஜர் இருக்க கவலை எதற்கு? நெகிழ்ச்சியூட்டும் நிஜ அனுபவங்கள்!

நம் தளத்திற்கு கிடைத்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பரிபூரண ஆசி! எங்கே… எப்படி?

ஆங்கில கவர்னருக்கு ராகவேந்திரர் காட்சியளித்த அற்புதம் – கஜெட் ஆதாரத்துடன்!

யாருக்கு தேவை தண்ணீர்?

உச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது!

இறைவா… பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்!

எது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம்

முக்காலமும் நீ அறிவாய் குருராஜா – நம் தள வாசகரிடம் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதம்!

=================================================================

[END]

5 thoughts on “ஸ்ரீ மகா பெரியவா திருவிளையாடல் – குரு தரிசனம் (23)

 1. இன்று மகா பெரியவாவின் ஆராதனை திருநாள் …. கண்களில் கண்ணீர் வருகிறது. அவர் இருக்கும் பொழுது நடமாடும் தெய்வத்தை பற்றி அதிகம் தெரிந்து கொள்ளவில்லை . இப்பொழுது அவரது லீலைகளைப் படிக்க படிக்க பரவசமாக உள்ளது

  நான் வெகு நாட்களாக அவரது அதிச்டானத்திற்கு செல்ல வேண்டும் என நினைத்தேன். போன வாரம் மகா பெரியவாவின் அருள் ஆசி கிடைத்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது .

  குருவின் திருவடி போற்றி

  மகா …. பெரியவா சரணம்….

  நன்றி
  உமா

 2. மகா பெரியவா அவர்கள் மகாசமாதி அடைந்த நாள் அன்று இந்த பத்திவை தந்த தங்களுக்கு நன்றி.
  படிக்க படிக்க கண்களில் கண்ணீர்.
  குருவே சரணம்
  நன்றி

 3. சுந்தர்ஜி,

  இன்று மகா பெரியவா ஜெயந்தி. காஞ்சிபுரம்
  கோலா கலமாக உள்ளது. பெரியவாளை பற்றி எந்த ஒரு நிகழ்ச்சியை படித்தாலும் கண்களில் கண்ணீர் வருகின்றது. பேசாமல் மடத்திலேயே போய் தங்கி விடலாம் என்று தோன்றுகின்றது.

  ஆண்டு விழாவின் போது தாங்கள் வெளியிட்ட காலண்டரை பார்த்ததும் நானும் என் அண்ணாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்கின்றோம். பேச்சே வரவில்லை. ஏன் என்றால் ஆண்டு விழா அன்று நாங்கள் பேசி கொண்டு இருந்தோம். பெரியவா படம் நம்மாத்தில் இருந்தது. இப்ப எங்க போச்சு என்று தெரியவில்லை. எங்கேயாவது அந்த மாதிரி கிடைத்தால் வாங்க வேண்டும் என்று ஸ்லாகித்து பேசி கொண்டு இருந்தோம். நாங்கள் எந்த படத்தை சொன்னோமோ அந்த படமே தேடி வந்த தென்றலாக கிடைத்து விட்டது. அந்த படத்திற்கு நாங்கள் தேடி வந்த தென்றல் என்று பெயர் வைத்து உள்ளோம்.

  நாம் மனதார நினைத்தால் எதையும் செய்வார் என்பதற்கு இதை விட வேறு என்ன வேண்டும்.

  ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.

 4. சகோதரருக்கு வணக்கம், மகாபெரியவா அவர்களின் திருவிளையாடலை அறிந்து மகிழ்ந்தோம். பதிவிற்கு நன்றி, தங்களின் திருத்தல யாத்திரை சிறப்புற அமைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் தரிசிக்கும் திருத்தலங்களைக் குறித்து நாங்கள் உணர்ந்திராத பல தகவல்களை உங்கள் மூலம் அறியப் போகிறோம் என்பதில் மகிழ்ச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *