இத்தனை பேரை, ஒருங்கிணைத்து அவர்களை வரவழைத்து நல்லபடியாக கவனித்து அவர்கள் மனம் கோணாமல் திருப்பி பத்திரமாக அனுப்பியதிலேயே நமது முழு கவனமும் இருந்தது. ஆகையால் நாம் எதிர்பார்த்த சில விஷயங்களை செய்யமுடியவில்லை. அது தவிர கடைசி நேர ‘கைவிடல்கள்’ சிலவற்றையும் நாம் சந்திக்க நேர்ந்தது. எல்லாமே ஒரு அனுபவம் தானே. அனுபவத்தை விட சிறந்ததொரு ஆசிரியர் உண்டா என்ன?
இந்த நிகழ்ச்சிக்கு பலரை அழைத்திருந்தோம். அவர்கள் வருகையை எதிர்பார்த்தோம். பலர் வந்திருந்து நம்மை மகிழ்ச்சியுறச் செய்தனர். சிலர் வர இயலவில்லை. சிலர் வர முயற்சிக்கவில்லை.
இந்த சமூகம் ஒரு மிக பெரிய பல்கலைக்கழகம். இதில் நாம் காணும் ஒவ்வொரு மனிதனும் ஒரு ஆசான். அவர்களிடம் நாம் தினம் தினம் பாடம் கற்றுகொள்ளும் ஒரு மாணவன். ஒரே ஒரு வார்த்தை தான் அவர்களுக்கு நாம் கூற விரும்புகிறோம். “நன்றி!”
கையிலையில் பார்வதி பரமேஸ்வரன் திருமணம் நடந்தபோது முப்பத்து முக்கோடி தேவர்கள் அங்கே ஒரே நேரத்தில் திரண்டனர். ஆகையால் வடக்கு உயர்ந்து தென் பகுதி தாழ்ந்தது. சர்வேஸ்வரன் உடனே அகத்திய மகரிஷியை தென்பகுதிக்கு அனுப்பி வைத்தார். அகத்தியர் பொதிகை வந்து சேர்ந்தவுடன் தென்பகுதி மீண்டும் பழைய நிலைக்கு உயர்ந்து சமன் பெற்றது. ஏனெனில், அவர் ஒருவரே முப்பது முக்கோடி தேவர்களுக்கு சமம். உருவத்தில் சிறியவர் என்றாலும் கீர்த்தியில் பெரியவர் அவர். அது போல நாம் எதிர்பார்த்த சிலர் வரவில்லை என்றாலும் இறைவன் நாம் எதிர்பார்க்காமல் நமது மனக்காயத்திற்கு அருமருந்தாக வேறு ஒருவரை அனுப்பி வைத்தான். அவர் வருகையால் எளிமையான இந்த விழா மிகப் பெரியதொரு விழாவாக மாறிவிட்டது. அவர் ஒருவர் வந்ததே ஒரு லட்சம் பேர் வந்ததற்கு சமம் என்றால் மிகையாகாது. அமர்சேவா சங்கத்தின் நிறுவனர் திரு.ராமகிருஷ்ணன் அவர்கள் நமது நிகழ்ச்சி பற்றி கேள்விப்பட்டு தாமாகவே வருகை தந்து சாதனையாளர்களுக்கு தன் கைப்பட பரிசுகளை அளித்து மகிழ்ந்து நம்மை திக்குமுக்காடச் செய்தார். இத்தனைக்கு நாம் அவரை நேரிடையாக இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை. அவரைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருந்தாலும் அவரிடம் நாம் பேசியதில்லை. இப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று தெரிந்தவுடன் நான் கண்டிப்பாக அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வேன் என்று கூறி வேறொரு நிகழ்ச்சியை இரத்து செய்துவிட்டு வருகை தந்தார்.
திரு.ராமகிருஷ்ணன் இந்த எளியோர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பித்ததை வார்த்தைகளால் வடிக்க இயலாது. உள்ளம் உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர் வடித்தது. அவர் யார், அவர் எவ்வளவு பெரிய சமூக சேவகர், சாதனையாளர் என்பது தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். அவரை நேரில் சந்திக்க வேண்டும். பேட்டி எடுக்க வேண்டும் என்பது நம் நீண்ட நாள் லட்சியங்களில் ஒன்று.
(யார் இந்த அமர்சேவா சங்கம் ராமகிருஷ்ணன்? தெரிந்துகொள்ள கிளிக் செய்யவும் : http://www.dinamalar.com/news_detail.asp?id=844467)
புண்ணியம் தேடி காசிக்கு போவார் இங்கு நம் நாட்டினிலே
இந்த காசியை தேடி யாரு வருவார் இந்த உலகத்திலே..
பாவம் போக்கிடும் கங்கையின் புனிதம் எல்லோரும் அறிவார்
இந்த பாவப்பிறவியின் கண்ணீர் கங்கையை இங்கே யாரறிவார்
தெய்வத்தை தேடி பக்தர்கள் கூட்டம் ஆலயம் செல்லுதடி
ஒரு பாட்டினில் வாழும் பித்தனை தேடி தெய்வமே வந்ததடி
நேற்று வரை சூரியனை நெஞ்சில் கற்பனை செய்தேன்
அது ஏதோ என்றெண்ணி கொண்டேன்
இன்று அந்த சூரியனை ஏழை குடிசையில் கண்டேன்
எந்தன் ஏழிசையை அள்ளித்தந்தேன்
ராகத்தின் கோயிலில் நாதத்தின் தேவனே
வேதத்தை ஓதுவேன் வேதனை தீரவே
கண்ணீரிலே உப்பு இன்று தித்திக்குதே
கண்டுகொண்டேன் மாற்றங்களை தந்தது நீ தானே
ஒரு சில மனக்காயங்களில் இருந்த நாம் இன்று காலை சற்று சோர்வுடன் தான் எழுந்திருந்தோம். திரு.ராமகிருஷ்ணன் அவர்கள் நம்மை அலைபேசியில் தொடர்புகொண்டு சுமார் அரைமணிநேரம் நிகழ்ச்சி பற்றி சிலாகித்துக் கூறி நம்மை கண்ணீரில் திக்குமுக்காட செய்தார். இதைவிட வேறு என்ன வேண்டும்?
இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தினால் தான் தெரியும் இவற்றை ஒருங்கிணைப்பது, நல்லபடியாக நடத்தி முடிப்பது, விருந்தினர்களை மனம் கோணாமல் உபசரித்து அனுப்புவது, கௌரவிக்க வேண்டியவர்களை கௌரவிப்பது, நிதியை மேலாண்மை செய்வது, குறித்த நேரத்தில் நிகழ்ச்சியை முடிப்பது இவையெல்லாம் எத்தனை பெரிய கடினம் என்பது..!
இப்படியெல்லாம் கஷ்டபட்டு ஒரு விழா நடத்தனுமா என்று சிலர் – சிலர் – இது குறித்து கருதக்கூடும். திருமணமும் சரி… வீடுகட்டுவதும் சரி.. இது போன்ற நிகழ்சிகளும் சரி… பட்ஜெட் போட்டு சரியாக அதன்படி நடத்துவது என்பது முடியவே முடியாது. கையில் பணத்தை வைத்துக்கொண்டு தான் திருமணம் செய்வேன் என்று பெற்றவர்கள் கூறத் தொடங்கினால் பல பெண்களுக்கு இங்கே திருமணம் நடக்காது. கையில் பணத்தை தயாராக வைத்துக்கொண்டு தான் நான் சேவை செய்வேன் என்று கூறினால் அதன் பெயர் சேவை அல்ல.
கல்யாணம் பண்ணிப்பார், வீட்டைக் கட்டிப்பார், நிகழ்ச்சி ஒன்றை நடத்திப்பார். இந்த உலகம் புரியும். உன்னை சுற்றியிருப்பவர்களும் யார் என்று உனக்கு புரியும்!
நமது விழாவில் ஒரு சில குறைகள் இருந்தாலும் பண பலமும் ஆள்பலம் இருப்பவர்களும் கூட பல நேரங்களில் இது போன்ற விழாக்களை நடத்த சிரமப்படும்போது நாம் சாமான்யர்கள் இதை சாதித்திருக்கிறோம் என்பது ஒரு வகையில் நமக்கு மகிழ்ச்சியே.
இப்போதைக்கு விருது பெற்றவர்களின் படங்களை முதலில் அளிக்கிறோம். (இந்த பதிவில் மேலும் மேலும் தகவல்கள் + படங்கள் சேர்க்கப்படும். எனவே ஒரு மணிநேரம் இடைவெளிவிட்டு மீண்டும் பதிவை பார்க்கவும்.)
விழா சிறக்க உதவிய நல்லுள்ளங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.
சுயநலமே வாழ்க்கை என்று பழகிவிட்ட இந்த உலகில், இப்படி தன்னலமற்ற உத்தமர்களை ஒரே மேடையில் காண்பது அரிதினும் அரிது. இதில் பலர் தங்கள் அணுகுமுறையால் நம்மை நெகிழச் செய்தனர். எந்த வித சௌகரியங்களும் சம்பிரதாயங்களும் நம்மிடம் எதிர்பார்க்காது நடந்துகொண்ட சிறப்பு விருந்தினர்ககள் குறிப்பாக சேகர் அவர்கள், புதுக்கோட்டை கணேசன் அவர்கள், ஜோலார்பேட்டை நாகராஜ் ஆகியோர் நிச்சயம் கண் நம்மை கண்கலங்க வைத்துவிட்டார்கள். மேன்மக்கள் மேன்மக்களே.
விழாவிற்கு தலைமையேற்ற திரு.ஆடுதுறை அழகு பன்னீர்செல்வம் அவர்களும் சரி… சிறப்பு விருந்தினராக வந்திருந்த பெரியவர் திரு. ராமகிருஷ்ணன் அவர்களும் சரி… இதுவரை நாங்கள் எத்தனையோ நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளோம். ஆனால் இப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில்லை. இங்கே விருது பெற்றுள்ள சான்றோர்களின் பாதாரவிந்தங்களில் எங்கள் நமஸ்காரத்தை சமர்பிக்கிறோம் என்று கூறி, நிகழ்சிக்கு ஏற்பாடு செய்திருந்த நமது தளத்தை மெச்சினர்.
இந்த தருணத்தில், விழாவுக்கு தன் துணைவியாரோடு வந்திருந்த இறுதி வரை அனைத்தையும் ரசித்த நண்பர், தினமலர் இணைய ஆசிரியர் முருகராஜ் அவர்களுக்கு நம் மனமார்ந்த நன்றி.
நம் நண்பர்கள் குட்டிசந்திரன், சிட்டி, விஜய் ஆனந்த் ஆகிய மூவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். இவர்கள் ஒத்துழைப்பு இல்லையென்றால் நிச்சயம் இந்த விழா நடந்திருக்க சாத்தியமேயில்லை. ஆனால் பதட்டத்தில் இவர்களை மேடை ஏற்றி கௌரவிக்க முடியவில்லை. நண்பர்கள் மன்னிக்கவேண்டும்.
அடுத்தது சாணு புத்திரன் அவர்கள். ஜெகதீஷ் மற்றும் சூரியா ஆகியோரு தங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்து உதவினார். விழாவை பற்றி தனது முகநூலில் பதிவிட்டு நண்பர்களையும் வருமாறு கேட்டுகொண்டார். தானும் குடும்பத்தோடு குறித்த நேரத்தில் வந்திருந்து ஒவ்வொரு நொடியையும் கண்கலங்கியபடி ரசித்துகொண்டிருந்தார். இறுதிவரை உடனிருந்து நமது பதட்டத்தை பெருமளவு குறைத்தார்.
ஒரு திருமணம் போல மிகச் சிறப்பாக இந்த விழா நடைபெற்றது. அதே நேரம் நிதிப் பற்றாக்குறையுடன் தான் நடந்து முடிந்ததுள்ளது. புகைப்படம், வீடியோ மற்றும் இன்னும் ஒரு சிலருக்கு செட்டில் செய்யவேண்டியுள்ளது. இரண்டு நாள் அவகாசம் கேட்டிருக்கிறோம். இந்த மகோன்னதமான விழாவிற்கு இதுவரை உதவிக்கரம் நீட்டாதவர்களுக்கு இன்னும் உதவிட வாய்ப்பிருக்கிறது. நண்பர்கள் தங்கள் உதவியை நல்கிடவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நமது நிலை பற்றி தெரிந்து நண்பர்கள் சிலர் உதவிடுவதாக கூறினாலும், நாம் ஏற்கனவே அவர்களுக்கு நிறைய நன்றிக்கடன் பட்டுள்ளோம். எனவே மீண்டும் அவர்களிடம் இது தொடர்பாக எதிர்பார்ப்பது நியாயமல்ல. இந்த புண்ணியத் தேரை இழுத்த பலன் வேறு சிலருக்கு சென்று சேரட்டுமே.
எல்லாம் வல்ல இறைவன் திருவருள் துணைக்கொண்டு அடுத்த ஆண்டு, குறைகளை களைந்து நிறைகளை பெருக்கி இதை விட சிறப்பாக இந்த விழா நடைபெறும் என்று உங்களிடையே உறுதி கூறுகிறோம்.
நிகழ்ச்சி நல்லபடியாக முடிந்துவிட்டாலும், பெண்ணுக்கு திருமணம் முடித்த தகப்பன் போல இன்னும் நாம் ஒருவித பதடத்தில் தான் இருக்கிறோம். நாம் கூறியவற்றில் ஏதேனும் பிழையிருந்தால் மன்னிக்கவேண்டும்.
(மேலும் பல தகவல்கள் அடுத்தடுத்த பதிவுகளில் இடம்பெறும்.)
[END]
டியர் சுந்தர்,
விழா மிக மிக சிறப்பாக நடைபெற்றது. வாழ்த்துக்கள்.
My infinite thanks to Sundar and all the Rightmantra guests. சில புனிதத் தலங்களுக்குச் சென்று அங்குள்ள கடவுளை தரிசித்தால், நமக்கு அடுத்து வரும் 6 மாதத்திற்கோ அல்லது ஒரு வருடத்திற்கோ தேவையான சக்தியானது கிடைக்கும் என்பது நாம் அறிந்ததே. அதேபோல் தெய்வாம்சம் பொருந்திய இச்சாதனையாளர்களைக் கண்டதும் அவர்களின் நேற்றைய பேச்சைக் கேட்டதும் நிச்சயம் பல ஆண்டுகளுக்கு நமக்கு சாதிக்கும் உத்வேகத்தை அளிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. தங்களின் youtube பதிவினையும் எதிர்நோக்கி இருக்கிறோம். அது கண்டிப்பாக நாம் சோர்ந்து போகும்போது அருமருந்தாக அமையும்.
நன்றி,
கே.எஸ்.வெங்கட்.
முகலிவாக்கம், சென்னை -125
Dear sir,
Happy to know that the function has been conducted in a grand manner and with all success.Due to some unforeseen circumstances i had to miss the function, Hope to join in some other activity shortly.
S.CHANDRA MOULI
விழா மிகவும் அருமையாக நடைபெற்றது. இத்தனை சாதனையாளர்களை, சான்றோர்களை ஒரே மேடையில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. விழாவிற்கு வந்த அனைவரும், விழா முடியும் வரை இருந்து சென்றதே, இது எவ்வளவு பேரை ஈர்த்திருக்கிறது என்பதற்கு சான்று. ஒவ்வொரு சாதனையாளரையும் சில நிமிடங்களாவது பேசச்சொல்லி கேட்டு மகிழ, நேரம் தான் போதவில்லை!!
அடுத்த வருடம், ஒரு நாள் முழுவதும் நடைபெறும் விழாவாக இவ்விழா இருக்க வேண்டும்.
பல வேலைகளுக்கு இடையே சிறப்பாக இவ்விழாவை நடத்திய உங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்!!
ஓம் நம சிவாய
வணக்கம்…..
நமது குடும்ப விழாவில் கலந்து கொண்டது குறித்து மிக்க மகிழ்ச்சி……..பெரியோர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள், சாதனையாளர்கள் ஆகியோரை ஒருங்கே சந்தித்ததில் எங்களின் குதூகலத்துக்கு அளவே இல்லை……..விழா மிக்க சிறப்பாக நடந்தேறியது…………மனமும் குளிர்ந்து வயிறும் நிறைந்தது……இதுவரை நமது தளத்தின் மூலமே அறிந்திருந்த நண்பர்களை நேரில் சந்தித்தது மகிழ்ச்சி கொடுத்தது……..
காலெண்டர் அருமை………..
இவற்றை எல்லாம் சாத்தியமாக்கிய தங்களுக்கு எங்கள் நன்றிகள்………..தங்களின் சீரிய முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது……….
நல்வாழ்த்துக்கள் ஐயா. தங்கள் திருப்பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
விழா ஏற்பாடுகள் பிரம்மாதம்..
நல்ல மனிதர்கள் நடுவில் இருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை..நிறைகளை நிறைய கண்டதால் குறையொன்றும் காணவில்லை… பல தெய்வத்தளங்களை தரிசித்த நிம்மதி கிடைத்தது…
நடுவரின் நகைச்சுவை பேச்சு
விருது வாங்கியவர்களின் பேச்சு
ராதாபாய் அம்மாவின் நம்பிக்கை பேச்சு
குறள் தம்பியின் சேவை
நடுவரின் பாடும் திறமை
வேதநாயகி அவர்களின் பாரதீ பேச்சு
இப்படி சொல்லி கொண்டே போகலாம்
அத்தனையும் அருமை..
என் நண்பர் அடிக்கடி கண்களை துடைத்துக்கொண்டே இருந்தார். மனதை தொட்ட விஷயங்கள் ஏராளம் … ஏராளம் …
வாழ்த்துக்கள் சுந்தர்…
வணக்கம்.
அருமையான விழா. நல்ல கருத்துகளால் மன மகிழ்ச்சி அடைத்தோம்.
உங்களுடைய வளர்ச்சி மேலும் பல மடங்கு உயர வாழ்த்துக்கள்.
– ஹரி கரிஷ்ணன்
சுந்தர்ஜி
எல்லாம் வல்ல இறைவனின் துணை கொண்டு நடத்திய விழா அல்லவா, மேலும் நம் பெரியவா அவர்களின் ஆசி நமக்கு உண்டு .
இன்றைய காலகட்டத்தில் நம் விழா தெய்வத்தின் திருவிழா.
பெரியோர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள், சாதனையாளர்கள் –
அவர்களை கௌரவிப்பது நாம் இறைவனுக்கு செய்யும் மிக சிறந்த தொண்டு .
இவற்றை எல்லாம் சாதித்த தங்களுக்கு வாழ்த்துக்கள்.இந்த விழாவிற்கு வந்து சிறபித்த அனைத்து உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்
மேலும் சொல்ல வார்த்தைகள் இல்லை.
நன்றி
i
வாழ்த்துக்கள் அண்ணா
ஏனோ இறைவன் சோதித்துவிட்டான் என்னை உடல்நிலை காரணமாக முப்பெரும் விழாவிற்கு வராததை இந்த பதிவு போக்கிவிட்டது…. படங்களை பார்க்கும் போது அடடா நம்மால் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஒரு உறுத்தல். நேரில் வர முடியாத வருத்தம் நெஞ்சின் ஓரத்தில் இருந்து கொண்டே இருக்கின்றது.
கண்டிப்பாக இறைவன் தங்களோடு துணையிருப்பார்.
மேலும் தங்கள் பயணம் தொடர எல்லாம் வல்ல நம்பெருமான் அண்ணாமலையானை வேண்டிக் கொள்கிறேன்.
நன்றி
வணக்கம் சார் விழா மிக மிக அருமையாக இருந்தது. நேரம் தான் போதுமானதாக இல்லை, நடுவரின் நகைச்சுவை பேச்சி, ராதாபாய் அம்மா பேசியது,மற்றும் வேதநாயகி மேடம் பேசியது இவர்களின் பேச்சை நீண்ட நேரம் கேட்க முடியவில்லை நேரம் நமக்கு போது மானதாக இல்லை. உண்மைய சொல்லவேண்டுமானால் அங்கு அமர்திருந்த நான்கு மணி நேரமும் ஒரு நொடி பொழது மாதிரி சென்றது. இப்படி அருமையான விழாவிற்காக சுந்தர் சாருக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.
இந்த நிகழ்ச்சிக்கு வராமல் போய் இருந்தால் என் வாழ்கையின் ஒரு முக்கிய நாளை நிகழ்வை இழந்து இருப்பேன் சற்று தாமதமாக வந்தாலும் ,நிகழ்ச்சி முடியும் வரை இருந்தது சந்தோசம்
நம் தளம் வருட வருடம் வளர்ந்து கொண்டு இருப்பதற்கு வந்த மக்களின் கூட்டமே சாட்சி
கடவுள் துணை இருப்பார் வாழ்த்துக்கள்
காலேண்டர் அருமை ,அதை ஒரு நண்பரிடம் கொடுத்தேன் அவர் எப்படிங்க உங்களுக்கு இந்த தளம் தெரியும் நான் கேள்வி பட்டு இருக்கிறேன் ஆனால் படிக்க முடியவில்லை ,இவ்வளவு பெரிய ஆட்களிடம் எல்லாம் உங்களுக்கு நட்பு இருக்கிறதா என்று ஆச்சரிய பட்டார் ,நமது தளம் எவ்வளவு நன்மதிப்பை பெற்று உள்ளது என்பதற்கு இது ஒரு சாட்சி
வாழ்க வளமுடன்
நல்ல நல்ல ஆத்மாகளின் சங்கமம் . மிக மிக நல்லவர்களுகாக நல்லவர்களால் எடுக்கப்பட்ட விழா இது . என்னாலும் முடியும் என்று சொல்லாமல் எங்களாலும் முடியும் என்று சொல்லி பலபல இன்னல்களை தாண்டி அதனை ஒரு பொருட்டாக கருதாமல் இதை மகா வேள்வியாக நடத்தி முடித்த சுந்தர் ஐயா அவர்கள் ஒரு அவதாரமாக எனக்கு தோன்றுகிறது. வாய் வலிக்க பேசலாம் அனால் செயல் என்று வந்தால் நாம் பின் வாங்குவோம் . இது தான் நிஜம் , இது தான் சத்தியம் . மனம் இருப்பவரிடம் பணம் இருபதில்லை , பணம் இருப்பவரிடம் மனம் இருபதில்லை, இவை இரண்டும் இருப்பவருக்கு கலி காலத்தில் நேரம் இருபதில்லை . சுந்தர் ஐயாவிடம் நிறைய மனம் இருந்தது அதை விட ஒரு வெறி இருந்தது எல்லாவற்றையும் விட குரு பக்தி நிரம்பி இருந்தது. அது தான் அவரை இயக்குகின்றது, மேன் மேலும் இயக்கும் , அடுத்த வருடம் அவர்கள் மூன்று பேராக வந்து விழாவை நடத்த நம் Rightmantra வாசகர்கள் சார்பாக வாழ்த்துவோம்
. நன்றி
. விருது வாங்கிய வள்ளி , லோச்சனவின் ( வாரியார் சுவாமிகளின் கொள்ளு பேத்திகள்) தந்தை 9841323328
சிறப்பு……………..சிறப்பு………………….சிறப்பு
நிகழ்ச்சிகள் அனைத்தையும் நேர்த்தியாக வடிவமைத்து வெற்றிகரமாக நடத்திவிட்டீர்கள் சகோதரர் சுந்தர் அவர்களே. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லையே தவிர, நானும் என்கணவரும் நேற்று நிகழ்ச்சி பற்றியே பேசிக்கொண்டிருந்தோம், இறைவன் கருணையிருந்தால் நிச்சயம் அடுத்தவருட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற முடிவினை எடுத்திருக்கிறேன். ராதாபாய் அம்மா அவர்களும் மாலை பேசினார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக இருந்தது என்றார். தங்கள் மற்றும் நண்பர்கள் அனைவரின் உழைப்பிற்கும் மனம்நிறைந்த வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
amazing sundarji. touched with the service you do to public. i really hope you will receive the greatest honer very soon. I feel aggrieved after seen you doing so many good things in past year without expecting any return. I know you for couple of years and you are an iron man.i feel very touched again to see u loosing weight. you stand with your own new empire which is untouchable. you are defenetly one of role model i follow in my life.. i hope god will give the right role to u soon . god bless.
வணக்கம்…
நம் விருதுகள் வழங்கும் விழா ,மிக நன்றாக நடந்தது.நான் ஒரு சின்ன அடி எடுத்து வைத்தவுடனேயே எனக்கு ஒரு விருது கொடுத்து என்னை ஊக்கப்படுத்தி விட்டீர்கள்.அடுத்து, இதையெல்லாம் தாண்டி மிக மிக நல்ல அருமையான மனிதர்களையெல்லாம் பார்க்கவும், பேசவும் மிகப் பெரிய வாய்ப்பு உங்களால் கிடைத்தது.நான் எந்த பலனும் கருதாமல் சமுதாயத்திற்காக எதேனும் செய்தாக வேண்டும் என்று நானே எனக்கு கூறிக் கொள்ளும்படி நடந்துவிட்டது.
நம் ஞானத்துறவி விவேகானந்தர் கூறிய ‘’நீ உனக்கு எதேனும் செய்ய விரும்பினால் அதை மற்றவர்களுக்குச் செய்”’என்பது இன்னும் மனதில் ஒலித்துக் கொண்டே உள்ளது.நம் நண்பர்கள் எல்லோருக்கும் நன்றி..
இந்த வாரம் ‘’ஸ்ரீ தேவி கருமாரி திரையரங்கில் ‘’அப்பா..வேணாம்ப்பா’’ (டிசம்பர் 19 முதல் 25 வரை – பகல் காட்சி மட்டும் .நேரம் -11.45 AM ) திரையிடப்பட உள்ளது.நீங்களும் நம் நண்பர்களும் வந்து பார்த்துச் செல்ல வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.நான் அங்கு தான் தினம் 11 மணி முதல் இருப்பேன்.நன்றி
வாழ்த்துக்கள். விழா படங்கள் மற்றும் செய்திகள் நிறைவாக உள்ளன. இக் கலி காலத்தில் உங்களை போன்றவர்களை, தந்தமைக்காக கடவுளுக்கு நன்றி. வீடியோ பார்க்க ஆவலாய் உள்ளேன்.
நாங்கள் இந்த விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டதில் மிகவும் பெருமை படுகிறோம். மிகவும் அழகாகவும் , நேர்த்தியாகவும் , தங்கள் நேரடி கைவண்ணத்திலும், நேரடி முயற்சியாளும் மிகவும் சிறப்பாக விழாவை முடித்து விட்டீர்கள். 4 மணி நேரமும் மிகவும் சந்தோசமான தருணங்கள். பணம் கொடுத்தால் கூட இந்த சந்தோசத்தை விலைக்கு வாங்க முடியாது. சாதனையாளர்களையும், ஆன்றோர்களையும், சான்றோர்களையும் ஒரு சேர சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. சானு புத்திரன் அவர்கள் சந்தித்து அவர்களுடன் உரையாடி அவர்கள் கையினால் மாகபெரியவா wooden statue பெற்றதில் அளவற்ற மகிழ்ச்சி எனக்கும் என் மகனுக்கும். அவகளுக்கு எனது வணக்க்கங்கள் . நடுவர் அவர்களின் பேச்சு அற்புதம்
அடுத்த வருடம் இன்னும் பல ஆயிரகணக்கான வாசகர்கள் பங்கு பெரும் விழாவாக நடைபெற இறைவன் அருள் செய்ய வேண்டும். விழாவின் முதலில் வள்ளி ,சுலோச்சனா பாடிய பாடல்களை கேட்க முடியவில்லை. வேத நாயகி அவர்களுடன் ஸ்பென்ட் பண்ணிய மணித்துளிகள் மிக அருமை.
நன்றி
உமா
ரைட்மந்த்ரா தளத்தின் ஆன்மீக தேடலில் நற்சிந்தனை பயணத்தில் மற்றுமோர் மைல்கல். நல்லோர்களின் சேர்கை நம் வாழ்க்கையில் தெளிவையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும். ஒரே நேரத்தில் இத்தனை நல்ல உள்ளங்களை இணைத்த பெருமையின் பெரும்பங்கு நம் சுந்தரை சேரும்.
இந்த நிகழ்ச்சிக்கு வந்தபிறகு புண்ணியம் சேர்ப்பதன் முக்கியத்துவம் இப்போது பலருக்கும் புரிந்திருக்கும்.
பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெறுவதைப்போல் சுந்தரோடு சேர்ந்து நானும் கொஞ்சம் நற்பலன் பெற்றேன். எல்லாம் இறைவன் செயல்!
Dear Sundar
we (myself and my wife) enjoyed the whole function and express our happiness in seeing the recognition to the deserved persons. we were in fact keen to meet these persons for a lovely interactions but missed the same due to paucity of time. it is a tough job and u had carried out it successfully. we thank u for the invitation.
regards
J Ramamurthy.
இப்படி ஒரு நிகழ்ச்சியை இதுவரை நான் கண்டதில்லை. இனி காணப்போவதுமில்லை. அந்தளவு மிக மிக சிறப்பாக அமைந்திருந்தது.
அனைத்து சான்றோர்களையும் நேரே காணும் பாக்கியம் பெற்றது உண்மையில் நான் செய்த பேறு. நானும் என் சகோதரரும் வந்திருந்தோம். உங்களிடம் அறிமுகப்படுத்திக்கொள்ளலாம் என்றால் நீங்கள் அத்தனை பிஸியாக இருந்தீர்கள். வேறொரு சந்தர்பத்தில் அறிமுகம் செய்துகொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.
நம் வாசகியரிடம் பேச ஆசை. ஆனால் அதற்கான சூழல் அமையவில்லை. அடுத்த முறை நிச்சயம் அனைவரிடமும் அறிமுகம் செய்துகொள்வேன். இடையே உழவாரப்பணி ஏதேனும் ஏற்பாடு செய்தால் முடிந்தால் நிச்சயம் கலந்துகொள்வேன்.
இப்படி ஒரு நிகழ்ச்சியை திட்டமிட்டு, ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்துவது என்பது சாதாரண விஷயமல்ல. நடுவர் அவர்களும் அதை பற்றி குறிப்பிட்டார். பெரியவா காலண்டர் அருமை. அருமை. தினமும் காலை விழிப்பதற்கு ஏற்றபடி எத்தனை அருமையான ஒரு காலண்டர்.
ஏற்பாடு செய்திருந்த உணவு உட்பட அனைத்தும் சூப்பர்.
அமர்சேவா சங்கம் திரு.ராமகிருஷ்ணன் போன்றவர்களே நிகழ்ச்சியை பற்றி கேள்விபபட்டு அவர்கள் இருந்த நிலையிலும் முதல் மாடி என்பதையும் பொருட்படுத்தாமல் வந்திருந்து உங்களை கௌரவித்தபோது வராதவர்களை பற்றி கவலைப்படவேண்டாம். அவர்கள் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்.
இந்த நிகழ்ச்சிக்கு ஒருவேளை வராமல் போனால் மிகப் பெரிய ஒரு பாக்கியத்தை இழந்திருப்பேன். என் கணவர் தற்போது புகைப்படங்களை பார்த்து மிஸ் செய்துவிட்டேனே என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்.
வாசகர் ஒருவர் குறிப்பிட்டதை போல அடுத்த ஆண்டு முழு நாளும் (காலை 10.00 முதல் மாலை 5.00 வரை) இருக்குமாறு நிகழ்ச்சி நிரலை வடிவமைத்துக்கொள்ளவும். நினைக்கும் அனைத்தையும் செய்ய நேரம் கிடைக்கும். நிச்சயம் தோள் கொடுக்க தயாராக இருக்கிறோம்.
நல்ல விஷயத்தில் ஈடுபடும்போது ஆயிரம் தடங்கல்கள் வரும். அவற்றை பொருட்படுத்தவேண்டாம். உங்களுக்கு தெரியாதா என்ன?
மற்றபடி மிகப் பெரிய சான்றோர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பை எங்களுக்கு அளித்தமைக்கு மிக்க நன்றி.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்புகிறேன்… மிக மிக நல்ல செய்திகளாக எனக்கு வந்துகொண்டிருக்கிறது. எங்கள் பக்கத்து வீட்டில் வீடு கட்டிக்கொண்டிருப்பவர்களுடன் பல மாதங்களாக இருந்த எல்லைப் பிரச்னை ஒன்று தானாக தீர்ந்துவிட்டது. அடுத்து என் தங்கை கணவருக்கு அயல்நாட்டில் நல்ல வேலை கிடைத்துவிட்டது.
நல்லோர் தரிசனம் பாப விமோசனம் என்று விழாவில் நீங்கள் குறிபிட்டது உண்மை உண்மை உண்மை…!
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்
There is no words to praise the function. There was a positive energy throughout the function.Meeting the right people at right place that can happen only in Right Mantra function. Hats off to you sundarji for making this to happen
Thanks
Venkatesh
Hi Sundarji,
Function went great by having so many great people. Pardon me for having done a blunder.
And I simply won’t forget all good things you have done in my life – time will come for me to show my gratefulness. Thanks so much.
Everything will go great for you from now on. Wish you all the best for your wonderful future. 🙂
சுந்தர்ஜி
இந்த முப்பெரும் விழாவில் நானும் கலந்து கொண்டதில் மிகவும் பெருமை கொள்கிறேன்
நன்றி சுந்தர்ஜி
திரு.சுந்தர் அவர்களுக்கு
நான் என் மணைவியோடு வந்திருந்து மகிழ்வுற்ற நன்நாள் அது,அன்றைய நிகழ்வின் நெகிழ்வி்ல் இருந்து இன்னும் என் துணைவியார் மீளவில்லை
என்னைப்பற்றி படத்துடன் பதிவு செய்து பெருமைப்படுத்திவிட்டீர்கள் மிகவும் நன்றி
அன்புடன்
எல்.முருகராஜ்
புகைப்பட நிருபர்
தினமலர்.காம்
சென்னை