Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, November 8, 2024
Please specify the group
Home > Featured > ரைட்மந்த்ரா முப்பெரும் விழா 2014 – நிகழ்ச்சி நிரல் & அழைப்பிதழ்!

ரைட்மந்த்ரா முப்பெரும் விழா 2014 – நிகழ்ச்சி நிரல் & அழைப்பிதழ்!

print
மக்கும் பேரம்பாக்கம் (நரசிங்கபுரம்) ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கும் இந்த தளத்திற்கும் உள்ள தொடர்பு உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். அவரின்றி நானில்லை; இந்த தளமும் இல்லை. நம் தளத்தின் ‘முப்பெரும் விழா 2014’ அழைப்பிதழ் இறுதிப் பிரதி தயாரானவுடன் இன்று 07/12/2014 ஞாயிறு காலை பேரம்பாக்கம் சென்று நரசிம்மரின் பாதத்தில் அழைப்பிதழை வைத்து பூஜித்து விட்டு இதோ தற்போது தளத்தில்  வெளியிடுகிறோம்.

Rightmantra Awards Narasimamar temple 1

இன்று காலை நாம் பேரம்பாக்கம் சென்றபோது புதுவையிலிருந்து நண்பர் சிட்டி, கல்பாக்கத்திலிருந்து வெங்கடேஷ் பாபு ஆகியோரும் நம்முடன் வந்திருந்தனர். நரசிங்கபுரம் ஆலயம் சென்றவுடன் நேராக ஸ்ரீ மரகதவல்லி தாயாரைத் தான் முதலில் தரிசிக்க சென்றோம். தாயார் சன்னதியில் இருந்த திரு.விஜயராகவன் ஏற்கனவே நமக்கு உழவாரப்பணியின் போது அறிமுகமானவர் தான். நமது விழா பற்றி விளக்கி அழைப்பிதழை கொடுத்து தாயார் பாதத்தில் வைத்து பூஜித்துவிட்டு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.

தொடர்ந்து தாயாரின் பாதத்தில் அழைப்பிதழ் வைக்கப்பட்டு அஷ்டோத்திரம் சொல்லி பூஜிக்கப்பட்டது. அடுத்து மூலவர் லக்ஷ்மி நரசிம்மர் சன்னதியில் நரசிம்மரின் திவ்ய திருவடிகளில் வைக்கப்பட்டது.

விழாவை நல்லபடியாக திட்டமிட்டதைவிட சிறப்பாக நடத்தி தரவேண்டும் என்று இந்த தளத்தின் பார்த்தசாரதியாக இருந்து வழிநடத்தும் நரசிம்மரை வேண்டிக்கொண்டோம். (இந்த தளத்திற்கான பிள்ளையார் சுழியை போட்டவரே அவர் தான்!)

திவ்யதரிசனம்!!!

நரசிம்மரை சேவித்துவிட்டு வெளியே வரும்போது சூடான தயிர் சாதம் பிரசாதமாக கிடைத்தது. தொடர்ந்து கோவிலை சுற்றிவந்து நமஸ்கரித்துவிட்டு கோ-சாலையில் பசுக்களுடனும் கன்றுகளுடனும் சிறிது நேரம் செலவிட்டுவிட்டு புறப்பட்டோம்.

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் ஆண்டு விழா & ரைட்மந்த்ரா விருதுகள் விழாவும், டிசம்பர் மாதம் பாரதி விழாவும் நடத்தப்பட்டது.

குறைந்த இடைவெளியில் இரண்டு விழாவாக நடத்தாமல் ஒரே விழாவாக நடத்தினால் இன்னும் நன்றாக கவனம் செலுத்தி சிறப்பாக செய்யலாம், உங்களையும் சற்று உரிமையுடன் கண்டிப்போடு விழாவுக்கு கூப்பிடலாம் என்று கருதி ஒரே விழாவாக இந்த ஆண்டு ஏற்பாடு செய்துள்ளோம்.

Rightmantra Awards Invitation

ஏன் பாரதி விழா?

பாரதியை போல ஒப்பற்ற கவிஞனை, தீர்க்க தரிசியை, விடுதலை வீரனை, சமூக சீர்திருத்தவாதியை இதுவரை பாரதம் கண்டதில்லை. இனி காணப்போவதுமில்லை. சரியாக, 38 ஆண்டுகள், 9 மாதங்களே வாழ்ந்த சுப்ரமணிய பாரதி தன் மொழிக்கும் சமூகத்துக்கும் விட்டுச்சென்றது ஏராளம். தனது குறுகிய வாழ்நாளுக்குள் எவ்வளவு செய்திருக்கிறார் இந்த பாரதி…. வாழும்போது அந்த மாணிக்கத்தின் அருமையை இந்த மாநிலம் உணரவில்லை.

கவிதைகள், உரைநடை, இதழியல் எழுத்துக்கள் என்று பாரதியை எழுத்து சார்ந்த மனிதராக மட்டுமே பார்த்துவிட முடியாது. தான் வாழ்ந்த காலத்தில் மகத்தான புரட்சியாளராக பாரதி இருந்திருக்கிறார். இந்து மதத்தில் ஈடுபாடுடையவராக இருந்தாலும், சாதிப் பிரிவினைகளையும் தீண்டாமைக் கொடுமையையும் கடுமையாக எதிர்த்தார். இந்த எதிர்ப்புணர்வைத் தனது வாழ்க்கை முறையிலும் செயல்படுத்திக் காட்டினார். பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் பாகுபாடு பார்க்காமல் பழகுதல், அவர்கள் வீட்டில் உணவருந்துதல் போன்ற பழக்கங்களைத் தான் பின்பற்றியதோடு மட்டுமல்லாமல், பிறரையும் பின்பற்றுமாறு வலியுறுத்தியிருக்கிறார்.

எப்பாடுபட்டாவது இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கித்தர வேண்டும் என்று தவிப்புடன் போராடியவர்களில் பாரதிக்கு முதல் வரிசையில் இடம் உண்டு.

பாரதி ஒருவருக்கு விழா எடுப்பதன் மூலமாகவே சுதந்திர போராட்ட வீரர்களுக்கும், தெய்வப் புலவர் திருவள்ளுவருக்கும், தமிழன்னைக்கும், நமது சமயத்திற்கும், இதிகாசங்களுக்கும், சாட்சாத் அந்த சரஸ்வதி தேவிக்கும் என அனைத்துக்கும் விழா எடுப்பதற்கு ஒப்பாகும்.

ஒளி படைத்த கண்ணினாய் வா வாவா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிபடைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா..

தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கொண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறுபோல் நடையினாய் வா வா வா

Rightmantra Awards 2014 A

(Double click to Zoom and Read the invitation)

Rightmantra Awards 2014 B

ரைட்மந்த்ரா விருதுகள்… ஏன்? யாருக்கு?

பாக்கு விற்பவனை ஊக்குவித்தால் தேக்கு விற்பான்!! நாம் ஊக்குவிப்பதோ தங்கம் விற்பவர்களை!!!!

நாம் அளிக்கும் இந்த ஊக்கம் அவர்கள் மேலும் மேலும் சாதனைகளை புரிவதற்கும் தன்னலம் கருதாது உழைப்பதற்கும் ஒரு உந்துதலாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதுமட்டுமல்ல மேலும் பலரை இவ்வாறு செய்ய தூண்டும்.

‘ரைட்மந்த்ரா விருதுகள்’ சம்பந்தப்பட்டவர்களுக்கு நிச்சயம் ஒரு சமூக அங்கீகாரம்.

ரைட்மந்த்ரா என்கிற ஒரு மேடை நமக்கிருக்கிறது. அதை பயன்படுத்தி நம்மை சுற்றி தன்னலம் கருதாது உழைக்கும் உத்தமர்களை அடையாளம் கண்டு அவர்களை மேன்மேலும் ஊக்குவிக்கவேண்டியது நமது கடமை என்று கருதியே இந்த விழாவை ஒவ்வொரு வருடமும் ஏற்பாடு செய்கிறோம்.

இந்த வருடம் நம் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்களை பாருங்கள். அவர்கள் தகுதியை பாருங்கள்… அவர்களை ஊக்குவிக்கவேண்டியது நமது கடமை என்று உங்களுக்கே புரியும்.

விருது பெறுபவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பற்றி…

இந்த விழாவில் கலந்துகொண்டு விருது பெறுபவர்களும் சரி… சிறப்பு விருந்தினர்களும் சரி…  அனைவரையும் நாம் நம் தளத்திற்காக சந்தித்திருக்கிறோம். பேட்டி கண்டிருக்கிறோம். சிலரைப் பற்றி பதிவுகளை ஏற்கனவே அளித்திருக்கிறோம். நேரமின்மை காரணமாக சிலரைப் பற்றி இன்னும் அளிக்கவில்லை. எப்படியும் விழாவுக்குள் மேலும் சிலரைப் பற்றி பதிவளித்துவிடுவோம்.

விழாவுக்கு நம் வாசகர்கள் குடும்பத்தோடு வந்திருந்து சிறப்பிக்கவேண்டும் என்று கேட்டுகொள்கிறோம்.

================================================================

ஒரு முக்கிய வேண்டுகோள்!

விழாவுக்கு இன்னும் ஆறு நாட்களே உள்ள சூழ்நிலையில் இதுவரை 50% தான் நிதி கிடைத்துள்ளது. மண்டப வாடகை, மேடை அமைப்பு, சவுண்ட் சர்வீஸ், வீடியோ கவேரேஜ், சிறப்பு விருந்தினர்களுக்கு பரிசு, விருது, வரும் வாசகர்களுக்கு காலண்டர், விழாவுக்கு  வரும் அனைவரும் பசியாற உணவு, தங்குவதற்கு ஏற்பாடு என்று பல அத்தியாவசிய செலவுகள் விழாவில் உள்ளன. ஆடம்பரத்தை அறவே தவிர்த்து கூடியமட்டும் சிக்கனமாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

எப்படியும் சமாளித்துவிடுவோம்… என்றாலும் இந்த விழா சிறக்க வாசகர்கள் மனமுவந்து கைகொடுத்தால் நன்றாக இருக்கும். இது தொடர்பாக யாருக்கும் எந்தவித நிர்பந்தத்தையும் நாம் அளிக்க விரும்பவில்லை. இது அனைவரும் தாமாகவே மனமுவந்து முன்வந்து இழுக்க வேண்டிய ஒரு புண்ணியத் தேர். இப்படி ஒரு மேன்மை பெற்ற விழாவில் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இருந்தால் விழாவை திட்டமிட்டபடி சிறப்பாக நடத்த இயலும். எனவே நமது இந்த ஆண்டுவிழா சிறக்க உங்கள் உதவியை உரிமையுடன் எதிர்பார்க்கிறோம். சிறு துளி பெரு வெள்ளம். எனவே ஆண்டு விழா பணிகளில் உதவிட விரும்புகிறவர்கள் விரைந்து தங்கள் உதவியை அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். நமக்கு ஏதேனும் கைம்மாறு செய்யவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த விழாவுக்கு பொருளுதவி நல்கிடுங்கள். எமக்கு நீங்கள் செய்யும் மிகப் பெரிய உதவி, இது போன்ற சந்தர்ப்பங்களில் தோள் கொடுத்து துணை நிற்பதே!

நம் தளத்தின் வங்கிக் கணக்கு விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

Bank A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

தொகையை செலுத்திய பின்பு, மறக்காது நமக்கு simplesundar@gmail.com, rightmantra@gmail.com ஆகிய முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பவும். அல்லது 9840169215 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும்.

தங்கள் ஆதரவுக்கு நன்றி!

Sundar,
Founder & Editor,

www.rightmantra.com and Right Mantra Soul Solutions
Mobile : 9840169215
E-mail : simplesundar@gmail.com, rightmantra@gmail.com

================================================================

Also check :

பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!

2013 ஆம் ஆண்டு இரண்டாம் பாரதி விழா அழைப்பிதழ்

ரைட்மந்த்ரா விருதுகள் 2013 & ரைட்மந்த்ரா ஆண்டு விழா!

2012 ஆம் ஆண்டு முதல் பாரதி விழா அழைப்பிதழ் 

இது தொடர்பான பதிவுகளுக்கு :

http://rightmantra.com/?cat=129

================================================================

[END]

17 thoughts on “ரைட்மந்த்ரா முப்பெரும் விழா 2014 – நிகழ்ச்சி நிரல் & அழைப்பிதழ்!

  1. அழைப்பிதழ் அருமை சுந்தர் சார்..விருதின் பெயருக்கு மிகவும் பொருத்தமானவர்கள் விருது பெறுபவர்கள். அனைவரை பற்றியும் முழுவதும் உங்கள் தளத்தின் மூலம் ஏற்கனவே நாங்கள் அறிந்து இருக்கிறோம். நம் அனைவருக்கும் பிரபலமானவர்கள்.

    எங்கோ கடல் கடந்து அயல் நாட்டில் வசிப்பதால் அவர்களை நேரே சந்திக்க முடியாத குறித்த வருத்தம் தான். விழாவின் புகைப்படம், வீடியோ உடனே பதிவேற்றுங்கள்.

    விழாவிற்கு தலைமை ஏற்கும் , மற்றும் விழா சிறக்க உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் எங்கள் அன்பும், நன்றியும்..

    விருது பெறுபவர்களுக்கு எங்கள் மனமார வாழ்த்துக்கள்.
    விழா சிறக்க வாழ்த்துகிறோம்!

  2. விழா அழைப்பிதழ், விழா நோக்கம் மட்டுமின்றி விழா விருந்தினர்கள், விழாவை நடத்துபவர், விழாவில் விருதுகளை பெறுபவர்கள், விழாவில் பங்கு பெறுபவர்கள் என அனைவரும் உயரிய நோக்கத்துடன் உள்ளவர்கள் என்பதை அழைப்பிதழைப் பார்த்தாலேத் தெரிகிறது. விழாவை சிறப்பித்து தர அப்பரம்பொருள் நம்முடனே இருப்பார் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. ஆங்கிலத்தில் “One Man Army” என்று சொல்வதுபோல், தாங்கள் ஒருவரே, பம்பரம் போல் சுற்றி விழா ஏற்பாடுகளைக் கவனித்து வருகிறீர்கள் என்பதையும் அனைவரும் அறிவார்கள் என்றே நினைக்கிறோம். இவ்விழா நடக்கும் தருணத்தில் அனைவரையும் ஊக்குவிக்கும் தங்களுக்கு கூடிய விரைவில் தங்கள் மனம் போல் வாழ்க்கைத் துணை அமைய இறைவனை வேண்டிக் கொள்கிறோம். வரும் காலங்களில் நம் தளம் மூலம் பலர் பயன்பெறுவார்கள் என்பதிலும் நம் வாசக நண்பர்கள் அனைவருக்கும் மிகுந்த நம்பிக்கை உண்டு. இவ்வருடம், இவ்விழாவிற்கு பல நூறு வாசகர்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்வார்கள் என்பது நாம் அறிந்ததே. அடுத்து வரும் 2015ம் வருடம் நடக்க இருக்கும் தங்கள் ரைட்மந்தரா விழாவின் போது, தாங்கள் ஆயிரம் வாசகர்களை எதிர்கொள்ள வேண்டி வரும். காத்திருங்கள், தோள் கொடுக்க நாங்களும் இருக்கிறோம்.

    நன்றி,
    கே.எஸ்.வெங்கட்,
    முகலிவாக்கம், சென்னை-125

  3. Dear Sundarji,

    I wishes you a Very Grand Sucess of Muperum Vizha Organised By Right Mantra. I pray to god Narasimha to Give you a Healthy and Prosperous Life to Lead Rightmantra.

    All the Very Best to You.

    With Thanks,
    S.Narayanan.

  4. அழைப்பிதழை பார்க்கையில் கண்கள் பனிக்கின்றன. வாழ்க வாழ்க வாழ்க!!!!!!!!!!! வளர்க வளர்க வளர்க!!!!!!!!!!!!!!!!!

  5. விழா அழைப்பிதழும், நிகழ்ச்சி நிரலும் அருமை. விருது பெறுபவர்களையும், சிறப்பு விருந்தினர்களையும் மிகவும் நேர்த்தியாக செலக்ட் செய்து இருப்பது பாராட்டுக்குரியது. விழா மிகவும் சிறப்பாகவும் விமர்சையாகவும் நடக்க வாழ்த்துக்கள்.

    நன்றி
    உமா v

  6. வணக்கம் சுந்தர் சார்

    முப்பெரும் விழா இனிதை நடக்க என் மனம் மார்ந்த வாழ்த்துக்கள் விழா அழைப்பிதழ் மிகவும் அருமை சார்

    நன்றி

  7. வணக்கம்………

    அழைப்பிதழ் கண்டு மிக்க மகிழ்ச்சி………. ஒவ்வொருவரின் சேவைக்கும் சாதனைக்கும் பொருத்தமான விருதுகள்………விருது பெரும் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்………..விழா இனிதே நடைபெற குருவருளையும், திருவருளையும் வேண்டுகிறோம்……

  8. அழைப்பிதழ் அருமையாக உள்ளது.
    தனி மனிதனாக உங்கள் உழைப்பு பெருமைக்கும் பாராட்டுக்கும் உரியது.
    உங்கள் எதிர்பார்ப்புக்கும் மேலாக விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள்.

  9. சுந்தர்ஜி,

    தேனீக்கள் போல் சுறு சுறுப்பாக தனி ஒரு மனிதனாக எதிர் நீச்சல் போட்டு முப்பெரும் விழாவை நடத்த தாங்கள்
    மேற்கொண்ட சிரமங்கள் அனைவரும் அறிந்ததே.
    அழைப்பிதழ் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்.
    உழைப்பு, உண்மை , உயர்வு ………..தங்களுக்கே பொருந்தும். விழா இனிதே நடந்தேற வாழ்த்துக்கள்.

    தோள் கொடுக்க நாங்களும் இருக்கிறோம்.

    நன்றி,

  10. sir
    அழைப்பிதழ் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைத்தேன்.
    முப்பெரும் விழா இனிதை நடக்க என் மனம் மார்ந்த வாழ்த்துக்கள் –
    விருது பெறுபவர்களுக்கு எங்கள் மனமார வாழ்த்துக்கள்.
    விழா சிறக்க வாழ்த்துகிறோம்! -செல்வி

  11. Thanks so much for taking me there along with you while getting blessings for Invitation card and function.

    I was happy to see your invitation personally.

    And like people have mentioned here, everyone knows – how you singlehandedly doing all preparation without much help – both personally and financially (even though our readers are helping in this – but you too are contributing a significant sum amidst your difficulties) as well.

    Hope I will be of some help to you in near future.

    God bless. Like one said, next year, this function will be very grand – in terms of powerful people and very useful/inspiring things.

    Good future is ahead for you. And all the problems are slowly melting and leaving a way for your freedom – financially, mentally & physically.

  12. அருமை… அபாரம்… அற்புதம்.
    இதைத் தவிர வேறு வார்த்தைகள் எனக்கு வரவில்லை.

    இத்தனை நாட்கள் நாங்கள் காத்திருந்தது வீண்போகவில்லை. வைத்த கண் வாங்காமல் பார்த்துகொண்டேயிருக்கிறேன் அழைப்பிதழை. பால கணேஷ் கொள்ளை அழகு. நீங்கள் தான் டிசைன் செய்திருப்பீர்கள் என்று நினைத்தேன். என் கணிப்பு தவறவில்லை.

    விருதுக்கு தேர்ந்தேடுக்கப்பட்டிருப்பவர்களும் சரி… விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருப்பவர்களும் சரி… ஒவ்வொருவரும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள்.

    வேதநாயகி அவர்களின் உரைகளை வாதங்களை நான் தொலைக்காட்சிகளில் பட்டிமன்றங்களில் கேட்டிருக்கிறேன். பாரதி விழாவுக்கு சரியான தேர்வு. திரு.அழகு பன்னீர்செல்வம் அவர்களை பற்றி சேக்கிழார் மணிமண்டப விழாவில் நீங்கள் குறிப்பிட்டதை படித்திருக்கிறேன். சரியான நபர்.

    குடும்பத்தோடு விழாவில் சந்திக்கிறோம்…

    வாழ்த்துக்கள்.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்.

  13. சுந்தர் சார்,

    நாங்க ஏதாவது செயல்களை செய்யும் நபர்கள் பற்றி உங்களுக்கு இந்த பகுதியில் தெரிவித்தால் அதை ஏன் ஏற்க மாடீர்கள் / அதை உடனே நீக்கி விடுகிறீர்கள்? உள்ளொன்று வைத்து புறமொன்று செய்யும் செயல்கள் ஏதும் கடவுளின் அருள் பெறாது என்பதை மனதில் கொள்ளுங்கள். இனி இதுபோல தெரியவரும் எந்த நபர்களைப் பற்றியும் உங்களுக்கு கூறப் போவதில்லை. எல்லாம் வெளிவேடம் என்பது புரிகிறது. வழக்கம் போல இதையும் நீக்கி விடுங்கள். நன்றி.

    1. நீங்கள் அனுப்பிய கமெண்ட் என் மின்னஞ்சலில் பிரதி உள்ளது. அவர் செய்து வருவது மிகப் பெரிய தொண்டு என்பதில் எந்த ஐயமுமில்லை. நேரம் வரும்போது அந்த தொண்டரை சந்திக்கிறேன். இந்த பதிவில் எந்தவித முன்னுரையும் இன்றி நீங்கள் அளிக்கும் பின்னூட்டம் குழப்பத்தை ஏற்படுத்தும். அவசரப்பட்டு வார்த்தைகளை விடவேண்டாம். மிகப் பெரிய சாதனையாளர்களை அறிமுகப்படுத்தி அவர்களை பற்றி நான் பதிவிட்டிருக்கும்போது இது இப்போது தேவையல்ல என்று நினைத்தேன். எப்போதும் தேவையல்ல என்று நினைக்கவில்லை.

      மேலும் இது போன்ற செய்திகளை அனுப்பினால் அதை எங்கே படித்தீர்கள் (source) என்று தெரிவிக்கவேண்டும். செய்தியின் நம்பகத்தன்மையை ஆராய அது உதவும்.

      // நாங்க ஏதாவது செயல்களை செய்யும் நபர்கள் பற்றி உங்களுக்கு இந்த பகுதியில் தெரிவித்தால் அதை ஏன் ஏற்க மாடீர்கள் //

      இதுவரை எத்தனை பேர்களை பற்றி நீங்கள் இப்படி விபரங்கள் அனுப்பியிருக்கிறீர்கள் என்று நான் தெரிந்துகொள்ளலாமா?

      எல்லா செயல்களுக்கும் விளக்கம் சொல்லிக்கொண்டிருக்க எனக்கு நேரமில்லை. ஒருவேளை நீங்கள் இதை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தால் பதில் சொல்லியிருப்பேன். அதற்குரிய வாய்ப்பை எனக்கு நீங்கள் வழங்கவில்லை.

      மற்றபடி உள்நோக்கம் எதுவும் இல்லை.

      மற்றொரு விஷயம் கடந்த காலத்தில் இது போன்று வரும் விஷயங்களை அப்ரூவ் செய்தால், சார் அதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வரவேண்டியே பின்னூட்டம் இட்டேன். அப்ரூவ் செய்யவேண்டிய அவசியமில்லை. நீங்கள் தெரிந்துகொண்டால் போதும். நேரமிருக்கும்போது நேரில் சந்தித்து பதிவிடுங்கள். அது தான் என் நோக்கம் என்றும் சிலர் கூறியிருக்கிறார்கள். உங்கள் பின்னூட்டமும் அத்தகையது என்று நினைத்தேன்.

      கேட்டு தெரிந்துகொள்ள விழைந்தமைக்கு நன்றி.

      – சுந்தர்

  14. வாழ்க வளமுடன்

    நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனா கைவிட மாட்டான்

    எல்லாம் நன்மைகே !!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *