================================================================
டிசம்பர் 14 அன்று சென்னை கே.கே.நகர் சக்தி விநாயகர் கோவிலில் நடைபெறவுள்ள நமது பாரதி விழா மற்றும் ரைட்மந்த்ரா விருதுகள் விழாவில் நமது முழுக்கவனமும் உள்ளதால் வழக்கமான பதிவுகளை தயார் செய்ய நேரம் ஒதுக்க முடியவில்லை. பணி நேரம் போக மீதி நேரம் விழா ஏற்பாடுகளில் செலவாகி வருகிறது. எனவே விழா முடியும் வரை வாசகர்கள் சற்று பொருத்தருள வேண்டும். எனவே மகா பெரியவாவின் நாகங்குடி மகிமை தொடர்பான பதிவை இந்த வாரமும் அளிக்க இயலவில்லை. இருப்பினும் ஆவலோடு காத்திருக்கும் உங்களையும் ஏமாற்ற மனமில்லை. கிடைத்த துளி நேரத்தில் ‘சித்தர்கள் வாழ்வும் வாக்கும்’ என்னும் நூலில் முன்பு படித்ததை கொண்டு இந்த பதிவை தயார் செய்திருக்கிறோம். நிச்சயம் பயனுள்ளதாய் இருக்கும் என நம்புகிறோம்.
நமது விழாவின் நிகழ்ச்சி நிரல் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் விபரம் இறுதி செய்யப்பட்டு அழைப்பிதழ் தயாராகி வருகிறது. வார இறுதியில் பேரம்பாக்கம் (நரசிங்கபுரம்) லக்ஷ்மி நரசிம்மர் கோவில் சென்று வழக்கம்போல முதல் அழைப்பை நரசிம்மருக்கு வைத்த பிறகு தளத்தில் வெளியிடப்படும்.
விழாவுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் வாசகர்கள் தாங்கள் அளிக்கவிரும்பும் நிதியை விரைந்து அளித்து விழா சிறக்க உதவிடுமாறு கேட்டுகொள்கிறோம்.
நன்றி!
– ரைட் மந்த்ரா சுந்தர்
================================================================
இழுத்தடித்த சொத்து வழக்கும் மகா பெரியவா சொன்ன பரிகாரமும்!
தம்மை நாடி வந்த மக்கள் மற்றும் பக்தர்களின் குறைகளைப் போக்கி, மகா பெரியவா செய்தருளிய உதவிகளைக் கணக்கிட்டுக் கூற இயலாது. பிணி தீர்த்தல், தேர்வில் தேர்ச்சி பெறுதல், அரசுப் பணி கிடைத்தல் போன்றவையும் சுவாமிகளின் அருள்வாக்கு மூலம் நிறைவேறியுள்ள. செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த ஓர் அன்பர் சுவாமிகளிடம் தாம் முக்தி பெற்றிட என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு, மகா ஸ்வாமிகள் அவரிடம் “திருவாலங்காட்டு ஈசனை நீ வழிபட்டு வந்தால், உனக்கு முக்தி கிடைக்கும்” என்று அருளுரை கூறினாராம்.
ஒரு முறை செல்வந்தர் ஒருவர் சுவாமிகளை தரிசிக்க வேண்டி வந்தார். அவர் செய்து வந்த வாணிகம் தொடர்பாக அவரது எதிரிகள் சொத்து வழக்கு ஒன்றைப் போட்டிருந்தனர். அந்த வழக்கில் வணிகர் பக்கம் நியாயம் இருப்பது தெரிந்தும் எதிரிகள் பொய் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தனர். அது மட்டுமல்லாது அந்த எதிரிகள் வேண்டுமென்றே ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் வழக்கை ஒத்திப் போட்டு வாய்தா வாங்கி வழக்கை இழுத்தடித்து வந்தனர். இதனால் மகா சுவாமியின் மெய்யன்பரான அந்த வணிகர் மன உளைச்சலுக்கும் , பண நஷ்டத்துக்கும் ஆளாகி இருந்தார்.
அவரது குறையைக் கேட்டதும் ஸ்வாமிகள் அக்குறை தீர பரிகாரம் ஒன்றை அவருக்குக் கூறி அருளினார். அப்போது பங்குனி மாதம் ஆதலால் , திருவாரூர் தியாகராஜப் பெருமான் திருக்கோயில் திருத்தேர் உற்சவம் நடைபெற இருந்தது. சுவாமிகள் அவ்வணிகரிடம், “இப்போது திருவாரூரில் தேரோட்டம் துவங்க உள்ளது, முதலில் நீ திருவாரூருக்குச் சென்று அந்தத் திருத்தேரை வடம் பிடித்து இழு. உனக்கு நல்லதே நடக்கும்!” என்று கூறியருளி அவரை அனுப்பி வைத்தார். அந்த வணிகர் தன் தகுதிக்கு மக்களோடு மக்களாக நின்று தேர் இழுப்பது இழுக்கு என்று தோன்றிய போதும் சுவாமிகளின் ஆணைப்படி தேரோட்டத்தில் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து முடித்தார்.
இப்பரிகாரத்தை அவர் சுவாமிகளின் அறிவுரைப்படி இழுத்து முடித்த சில நாட்களிலேயே வழக்கு நீதி மன்ற விசாரணைக்கு வந்தது. இந்த முறை வழக்கு ஒத்தி வைக்கப்படாமல் அன்றே விசாரணை நடந்து முடிந்ததுடன் அன்றே வணிகருக்குச் சாதகமான தீர்ப்பும் வழங்கப்பட்டது. அவரும் தம் பூர்வ ஜன்ம வினையால் தமக்கு ஏற்பட்ட இக்கட்டிலிருந்து விடுபட்டார்.
இவ்வாறு சுவாமிகள் பலருக்கு பல பரிகாரங்களைக் கூறி ஏராளமான உதவிகளைச் செய்து அருளியுள்ளார். சுவாமிகள் பரமுக்தி அடைந்த பின்னும் கூட அவர் அருவ அருள் நிலை கண்டு எண்ணற்றோருக்கு உதவிகளை செய்து அருளி வருவது கண்கூடான உண்மை. இன்றும் கூட சுவாமிகளின் பக்தர்கள் தம் இல்லங்களில் சுவாமிகளின் திரு உருவப் படத்தை வைத்து முழு நம்பிக்கையோடு வழிபட்டு குறைகள் நீங்க இன்பமுற்று வாழ்ந்து வருவது சுவாமிகளின் மகிமைக்குச் சான்று.
(நன்றி : பி.எஸ். ஆச்சார்யா – ‘சித்தர்கள் வாழ்வும் வாக்கும்’ – | தட்டச்சு : www.rightmantra.com)
================================================================
Also check from our archives…
மகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து நீர் – குரு தரிசனம் (21)
சாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா! – குரு தரிசனம் (20)
இது தான் பக்தி என்பதை உணர்த்திய குடும்பம் – குரு தரிசனம் (19)
பார்வையாலேயே குணப்படுத்தும் வைத்தீஸ்வரன் – குரு தரிசனம் (18)
கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)
குரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)
மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)
“ஏம்பா! உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பெரியவா சேவை தானா?” – குரு தரிசனம் (14)
வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!
வாழைப்பழத்துக்கு பதில் மகா பெரியவா கொடுத்த நெற்பொரி. ஏன்? எங்கு? – குரு தரிசனம் (13)
“கடமைக்கே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது?” – குரு தரிசனம் (12)
காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)
குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….
http://rightmantra.com/?cat=126
=================================================================
‘ஸ்ரீ ராகவேந்திர தரிசனம்’ தொடர் அடுத்த வாரம் முதல் தொடர்ந்து இடம்பெறும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
================================================================
Also check :
Articles about Sri Ragavendhra Swamigal in Rightmantra.com
முதல் மாணவன், முதல் வேலை, முதல் சம்பளம்…!! – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (6)
புதுவை பிருந்தாவனத்தில் காட்சி தந்த ராகவேந்திரர் – உண்மை சம்பவம் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (5)
பட்ட மரம் துளிர்த்தது; வேத சக்தி புரிந்தது – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 4
கேட்பதை தருவார், கேட்டதும் தருவார் குருராஜர் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 3
“அழைத்தால் போதும் அடுத்த கணமே நினைத்தது நடக்கும்!” – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 2
திருவருளும் குருவருளும் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (1)
குருராஜர் இருக்க கவலை எதற்கு? நெகிழ்ச்சியூட்டும் நிஜ அனுபவங்கள்!
நம் தளத்திற்கு கிடைத்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பரிபூரண ஆசி! எங்கே… எப்படி?
ஆங்கில கவர்னருக்கு ராகவேந்திரர் காட்சியளித்த அற்புதம் – கஜெட் ஆதாரத்துடன்!
உச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது!
இறைவா… பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்!
எது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம்
முக்காலமும் நீ அறிவாய் குருராஜா – நம் தள வாசகரிடம் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதம்!
=================================================================
[END]
– See more at: http://rightmantra.com/?p=14891#sthash.spTnKErC.dpuf
குருவே ….சரணம் ….
மிகவும் அருமையான பதிவு
நன்றி
உமா
Periyava Charanam
மஹா பெரியவர் கருணையோ கருணை ,
இப்பதிவு அளிததுற்கு நன்றி.
தங்களின் பதிவு அருமை. தங்கள் கூறியபடி விழ ஏற்பாடுகளில் கவனம் செலுத்துங்கள். ரெகுலர் பதிவுகளை விழ முடிந்ததும் தொடரலாம். இதற்காக வருந்த வேண்டாம். எந்த பணியிலவது தங்களுக்கு உதவ நங்கள் காத்திருக்கிறோம். ஓம் சாயி ராம்.
குருநாதா சரணம்………சரணம்……….