அழகிய தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பகவத் கீதை, ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் இவைகளை பற்றிய பெருமைகளை உண்மைகளை இவரது உரைகளில் அள்ளி அள்ளி தருகிறார். அனைத்தும் தெவிட்டாத தெள்ளமுது.
இந்தியாவில் இவரது சொற்பொழிவு நடக்காத ஊரே இல்லை என்னுமளவுக்கு பல ஊர்களில் திவ்ய தேசங்களில் அரங்கனின் பெருமையை பேசியிருக்கிறார். அமேரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என பலப் பல நாடுகளுக்கு பறந்து பறந்து சென்று பக்தியை பரப்பியிருக்கிறார். பரப்பிவருகிறார்
இவரிடம் ஒரு விசேஷம்… என்ன பேசவேண்டும் என்று முன்கூட்டியே தலைப்பு கொடுக்க வேண்டிய அவசியமில்லை இவருக்கு. அந்தச் சமயத்தில் என்ன தலைப்பு கொடுக்கிறார்களோ, அதற்கேற்பச் சரளமாகவும், விஷய ஞானத்துடனும் சுவையாகப் பேசி அசத்துவதில் சமர்த்தர் இவர்.
கதாகாலஷேபம் மற்றும் உபன்யாசம் தவிர பல திருக்கோவில்களுக்கு திவ்யதேசங்களுக்கு திருப்பணிகள் செய்ய உதவி புரிந்து வருகிறார். இதற்காக Mangalasasana Divyadesa Samrakshana Trust என்ற அமைப்பை நிறுவியுள்ளார்.
“லக்ஷ்மி கடாக்ஷம் 2013” காலண்டர்
தற்போது இவரது ட்ரஸ்ட் சார்பில் சிட்டி யூனியன் வங்கியுடன் இணைந்து அன்னை மகாலக்ஷ்மியின் பல்வேறு வடிவங்களை அடிப்படையாக வைத்து அழகிய வண்ண காலண்டர் ஒன்றை வடிவமைத்து வருகிறார். இந்த காலண்டரை வாங்க விரும்பும் மெய்யன்பர்கள் அதை முன்பதிவு செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே காலண்டர் கிடைக்கும்.
முன்பதிவு முடிய இன்னும் மூன்று நாட்களே உள்ளன. நவம்பர் 30, 2012 அன்று முன்பதிவு முடிவடைகிறது.
முன்பதிவை இணையத்திலும் செய்யலாம் அல்லது சிட்டி யூனியன் வங்கியின் கிளைகளிலும் செய்யலாம்.
முன்பதிவு செய்பவர்கள் அவர்களுக்குரிய காலண்டரை சிட்டி யூனியன் வங்கியின் கிளைகளில் (புக் செய்த கிளையில்) 31 டிசம்பர் முதல் 10 ஜனவரி வரை பெற்றுக்கொள்ளலாம்.
காலண்டரை புக் செய்பவர்களுக்கு வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் வர்ணனையுடன் கூடிய மகாலக்ஷ்மி வைபவம் டி.வி.டி. மற்றும் மகாலக்ஷ்மி வைபவம் ஆடியோ சி.டி.க்கள் இலவசமாக வழங்கப்படும்.
“லக்ஷ்மி கடாக்ஷம் 2013” காலண்டர் + மகாலக்ஷ்மி வைபவம் டி.வி.டி ! இன்றே புக் செய்யுங்கள்!!
To book online & மேலும் விபரங்களுக்கு:
http://kinchitkaramtrust.org/kkt/index.php/new-releases/13-products
திரு.வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களை பற்றி :
சக்தி விகடனில் ‘கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்’ என்னும் அற்புதமான தொடரை எழுதி வருகிறார்.
இவரது ஆன்மீக சேவையை பாராட்டி பால வாக் அம்ருதவர்ஷி, உபன்யாச கண்டீரவா, பிரவசன சங்கீத பூஷணா, சொல்லின் செல்வர், ஸ்ரீ ராமானுஜ சேவா ஸ்ரீ உள்ளிட்ட பல பட்டங்களை வழங்கியுள்ளனர் இறைவனின் மெய்யன்பர்கள்.
கேரளத்தில் குலசேகராழ்வாருக்கு கோவில் எழுப்ப இவர் பேருதவி புரிந்தார். கோடிக்குலத்தில் பிள்ளை லோகாச்சாரியாருக்கு நினைவாலயம் எழுப்பவும் உதவி புரிந்துள்ளார். அரங்கனின் திருவுருவச் சிலை படையெடுப்பின்போது மறைந்திருந்த இடமாகும் இது. இவை தவிர வேத பாடசாலைகள் அமைக்கவும், நாலாயிர திவ்ய பிரபந்தங்களை ஆர்வமுள்ளோருக்கு பயிற்றுவிக்க பாடசாலைகள் அமைக்கவும் முயற்சித்து வருகிறார்.
இவரது உரைகள் மற்றும் கதாகாலஷேபங்கள் இதுவரை 200 க்கும் மேற்ப்பட்ட MP3 சி.டி. வடிவில் வெளிவந்துள்ளன. 2000 மணிநேரங்களுக்கு மேல் இவர் பேசியது சி.டி.யாக வெளிவந்துள்ளது.
[END]
நான் இவரது பரம ரசிகன். இவரது உரையை கோவையில் நேரில் கேட்டு இருக்கிறேன். ஆடியோவில் இவரது வாழ்க்கை தத்துவம் என்ற உரை அருமையாக இருக்கும்.
2. What is this?! here I saw this ad at on Saturday and kept in mind of booking by Monday..ok we too booked nice to see this too Naharani Chennai