Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, October 6, 2024
Please specify the group
Home > Featured > மகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து நீர் – குரு தரிசனம் (21)

மகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து நீர் – குரு தரிசனம் (21)

print
ம் முப்பெரும் விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் இதர அலுவல்கள் காரணமாக கடந்த சில நாட்களாக பதிவெழுத நேரம் கிடைக்கவில்லை. எனவே அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துவரும் பெரியவாவின் ‘நாகங்குடி அற்புதம்’ தொடர்பான பதிவை முடிக்க முடியவில்லை. கூடுதல் நேரம் செலவிட்டு அதை தட்டச்சு வேண்டியிருக்கிறது. புகைப்படங்கள் வேறு எக்கச்சக்கமாக அளிக்கவேண்டியுள்ளது. எனவே பதிவை இன்றைக்கு நிறைவு செய்ய இயலவில்லை. அடுத்த வாரம் நிச்சயம் இடம்பெறும். (முடிந்தால் அடுத்த வியாழன் வரை காத்திருக்காமல் இடையே அளிக்க முயற்சிக்கிறோம்). தாமதத்திற்கு மன்னிக்கவும்.

இப்போதைக்கு மகா பெரியவா குறித்து திரு.சுவாமிநாதன் அவர்கள் தமது முகநூலில் முன்பெப்போதோ பகிர்ந்திருந்த ஒரு மெய்சிலிர்க்கும் நிகழ்வை தருகிறோம்.

சிலர் நம்மிடம் கேட்ட கேள்விகள், வேறு சிலர் கேட்க நினைக்கும் கேள்விகள் அனைத்திற்கும் பதில் இதில் அடங்கியிருக்கிறது.

மகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து நீர் !

பெரியவாள் முகாம் செய்திருந்த சிறிய கிராமத்தில் மொத்தம் பதினைந்து வீடுகளே இருந்தன.

ஓர் ஆரம்பப் பள்ளியில் பெரியவாள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதற்கு முந்தைய தினம் முகாம் செய்திருந்த கிராமம் சற்றுப் பெரியது. ஆனால் தண்ணீர் வசதியில்லை. எல்லாவித உபயோகங்களுக்கும் ஒரு குளம் தான் கதி! அதில் தண்ணீர் அசுத்தமாக இருந்தது. “குடிதண்ணீருக்கே அந்தத் தண்ணிதான்” என்று மனம் வருந்தி முறையிட்டார்கள் கிராம மக்கள்.

அன்றைய தினம், அந்தக் குளத்தில்தான் பெரியவா ஸ்நானம் செய்தார்கள்.

அன்று மாலையே புறப்பட்டு, சிறிய கிராமத்துக்கு வந்தாகிவிட்டது. மறுநாள் காலை வழக்கம்போல் பெரிய கிராமத்து மக்கள் அதே குளத்துக்குப் போனார்கள்.

ஒரே அதிர்ச்சி!

ஒரு குப்பை இல்லை; பாசி இல்லை; சேறு இல்லை! தண்ணீர் நிர்மலமாகப் பளிங்கு போலிருந்தது.

“பெரியவங்க வந்து குளிச்சது, நம்ம பாக்கியம்!” எல்லையில்லாத சந்தோஷம்.

Maha Periyava temple tank

ஸ்வாமிகளுக்கு நன்றியைத் தெரிவிக்க வேண்டுமே?

ஒரு மாட்டுவண்டி நிறைய சாமான்கள் – அரிசி, பருப்பு, கறிகாய், வாழை இலை, புளி, மிளகாய் ஏற்றிக் கொண்டு முகாமுக்கு வந்துவிட்டார்கள். நூறு பேர்கள் உணவு கொள்ளத்தக்க அளவு பண்டங்கள்.

சாமான்களை ஸ்ரீமடத்தில் இறக்கிவிட்டு, பெரியவாளிடம் ஆசி பெற்றுக்கொண்டு போய்விட்டார்கள்.

அவர்கள் புறப்பட்டுச் சென்றதும், “அந்த சாமான்களையெல்லாம் இன்னிக்கே சமைச்சுடு” என்று உத்தரவாயிற்று. சாப்பிடுவதற்கு இருந்ததே ஏழெட்டுப் பேர்கள். எல்லாவற்றையும் சமைத்தால், நூறு பேருக்கு எங்கே போவது?

பெரியவாள் உத்தரவு. அதன்படியே சமையல் ஆயிற்று.

ஏழெட்டுப் பேர்கள் சாப்பாடு, பிற்பகல் ஒரு மணிக்கே முடிந்துவிட்டது. சமையல் செய்த பண்டங்களை மூடி வைத்துவிட்டார்கள். “வீண்… அத்தனையும் வீணாகப் போகிறது” என்று சிப்பந்திகள் நொந்து கொண்டார்கள்.

மாலை மணி நான்கு, இரண்டு பேருந்துகளில், அன்றைய பிக்ஷாவந்தனத்துக்காக, குஜராத்திகள் வந்து சேர்ந்தார்கள். முதலில் காஞ்சிபுரம் சென்று ஒவ்வொரு இடமாக விசாரித்துக்கொண்டு, இங்கே வந்து சேர்ந்துள்ளார்கள்.

”ஸ்வாமிகளை உடனே தரிசனம் செய்யணும்…”

“முடியாது…”

“ஏன்?”

“முதலில் நீங்கள் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்; அப்புறம்தான், தரிசனம். பெரியவா உத்தரவு..”

“இனிமேல் அடுப்பு மூட்டி, இத்தனை பேருக்கும் சமையல் செய்ய இரண்டு மணி நேரமாகுமே?”

“இல்லை! இரண்டே நிமிஷம் போறும்! சமையல் ரெடி!”

“நாங்கள் வரப்போகிறோம் என்று உங்களுக்குத் தெரியுமா?”

“எங்களுக்குத் தெரியாது; பெரியவாளுக்குத் தெரிந்திருக்கும் போலிருக்கு…”

குஜராத்திக்காரர்கள் கண்களில் பரவசக் கண்ணீர்! கை, கால் கழுவிக்கொண்டு, சாப்பிட உட்கார்ந்தார்கள்.

கடைசியில், ஒரு பருக்கை சாதமோ, ஒரு கரண்டி சாம்பாரோ பாக்கியில்லை! நூறு பேர்களுக்கான உணவு வகைகளை, அறுபது பேர்களே சாப்பிட்டுத் தீர்த்துவிட்டார்கள், “என்ன ருசி, என்ன ருசி!” அவ்வளவு பசி!

=================================================================

ஒன்றை மட்டும் அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும். மகா பெரியவா மனிதர் உருவில் நம்மை கடாக்ஷிக்க வந்த பரம் பொருள். அதே சமயம் மனிதனாக பிறவி எடுத்துவிட்டபடியால் யுக தர்மத்திற்கு கட்டுப்பட்டு அதற்க்குரிய நியாய தர்மங்களையும் அனுஷ்டித்து வந்த மகா புருஷர். அவரது அவதார நோக்கம் கலியுகத்தில் இந்த இருபதாம் நூற்றாண்டில் கூட வேத சாஸ்திரங்கள் கூறும் வாழ்க்கை முறையை ஒருவரால் பின்பற்ற முடியும் என்பதை நிரூபிக்கவும்
பாமரருக்கும் இறை நம்பிக்கை ஏற்பட்டு அவர்களை ஆன்மீகப் பாதையில் கொண்டு செல்வதுமேயாகும். இல்லாவிட்டால் அவர் மறைந்து 22 ஆண்டுகள் கழித்தும் அவரது மகிமைகளை படித்து உருகுவோமா? இணையத்தில் நேரத்தை வீணடிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்க, இது போன்ற பதிவுகளை ருசித்துக் கொண்டிருப்போமா ?

=================================================================

Also check from our archives…

சாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா! – குரு தரிசனம் (20)

இது தான் பக்தி என்பதை உணர்த்திய குடும்பம் – குரு தரிசனம் (19)

பார்வையாலேயே குணப்படுத்தும் வைத்தீஸ்வரன் – குரு தரிசனம் (18)

கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)

குரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)

மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)

“ஏம்பா! உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பெரியவா சேவை தானா?” – குரு தரிசனம் (14)

வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!

வாழைப்பழத்துக்கு பதில் மகா பெரியவா கொடுத்த நெற்பொரி. ஏன்? எங்கு? – குரு தரிசனம் (13)

“கடமைக்கே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது?” – குரு தரிசனம் (12)

காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

=================================================================

‘ஸ்ரீ ராகவேந்திர தரிசனம்’ தொடர் புதிய தகவல்களுடன் தயாராகி வருகிறது. அடுத்த வாரம் முதல் நிச்சயம் தொடர்ந்து  இடம்பெறும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

================================================================
Also check :

Articles about Sri Ragavendhra Swamigal in Rightmantra.com

முதல் மாணவன், முதல் வேலை, முதல் சம்பளம்…!! – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (6)

புதுவை பிருந்தாவனத்தில் காட்சி தந்த ராகவேந்திரர் – உண்மை சம்பவம் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (5)

பட்ட மரம் துளிர்த்தது; வேத சக்தி புரிந்தது – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 4

கேட்பதை தருவார், கேட்டதும் தருவார் குருராஜர் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 3

“அழைத்தால் போதும் அடுத்த கணமே நினைத்தது நடக்கும்!” – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 2

திருவருளும் குருவருளும் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (1)

குருராஜர் இருக்க கவலை எதற்கு? நெகிழ்ச்சியூட்டும் நிஜ அனுபவங்கள்!

நம் தளத்திற்கு கிடைத்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பரிபூரண ஆசி! எங்கே… எப்படி?

ஆங்கில கவர்னருக்கு ராகவேந்திரர் காட்சியளித்த அற்புதம் – கஜெட் ஆதாரத்துடன்!

யாருக்கு தேவை தண்ணீர்?

உச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது!

இறைவா… பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்!

எது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம்

முக்காலமும் நீ அறிவாய் குருராஜா – நம் தள வாசகரிடம் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதம்!

=================================================================

[END]

8 thoughts on “மகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து நீர் – குரு தரிசனம் (21)

  1. எங்கள் கண்களிலும் கண்ணீர்………….தாயினும் சாலப் பரிந்தூட்டும் தெய்வம் நம் குரு தேவர்………குருதேவா சரணம்………….

  2. சத்குருவே …சரணம் ..

    மகா பெரியவர் முக்காலமும் அறிந்த மகான் .

    கருணைக் கடலும், ஈஸ்வர அவதாரமும், பரப் பிரம்மமும் , மாபெரும் யோகீஸ்வரரும் ஆகிய குருவிற்கு நமஸ்காரம் .

    குருவின் மகிமையை குரு வாரத்தில் படிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

    ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ்

    நன்றி
    உமா

  3. மஹா தெய்வம் சார், காஞ்சி பெரியவ.

    குருவே சரணம்.

    நன்றி
    நாராயணன்.

  4. அருமை…….காஞ்சி சங்கர ……காமகோடி சங்கர

  5. யாத்திரை செல்லாத மனிதன்
    மாத்திரை பின்னால் செல்கிறான்…

    அடுத்த பிறவிக்கும் சேர்த்து
    பாவங்களைச் சேர்த்து
    ஆரோகியத்தையும் இழந்து
    சிறு சிறு இன்பங்கள் பின்னால் செல்லும்
    இளைஞர் கூட்டம் பக்தி கொண்டாலன்றி
    பாரினில் சமுதாய மாற்றம் பகல் கனவோ?

    அழகு மலர்த் தோட்டத்தில் அமர்ந்திருக்க
    அதை அனுபவிக்கும் மனம் பெரும் சுகம்
    பெரியவா பற்றிப் படிக்கும்போது ஏற்படுகிறது….

  6. குருவின் பாத தூளியே மோட்சம் தரவல்ல சாதனம் எனும்போது அவர் ஸ்பரிசம் பட்ட குளத்து நீர் தெளிவடைந்ததில் என்ன அதிசயம் இருக்க முடியும்?

    ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *