Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, December 6, 2024
Please specify the group
Home > Featured > நல்லவர் என்றும் நல்லவரே !

நல்லவர் என்றும் நல்லவரே !

print
Lord Siva copyமது தளத்தின் முப்பெரும் விழா நெருங்குவதால் அதற்கு முன்பாக சில முக்கியமான பதிவுகளை அளித்துவிட விரும்பி சில பதிவுகளை தயாரித்து வருகிறோம். இன்று அவற்றில் ஒன்றையாவது அளித்துவிடவேண்டும் என்று விரும்பினோம். ஆனால் நேரம் ஒத்துழைக்காததால் முடியவில்லை. இன்று இரவு அளிக்கப்படும். இருப்பினும் இன்று நமக்கு ஒரு முக்கியமான நாள் என்பதால் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அளிக்கவேண்டி வைத்திருந்த பதிவை இன்று அளிக்கிறோம். இதில் உள்ள பாடங்கள் தான் எத்தனை எத்தனை..!

படிக்க படிக்க சலிக்காதது பிரம்மிப்பூட்டுவது ஸ்ரீ அப்பைய தீட்சிதரின் திவ்ய சரிதம். எனவே தான் அவரது வரலாற்றை படித்தவுடனே அவரை தரிசிக்க பேராவல் பிறந்தது. அவரும் அதை உடனே நிறைவேற்றித் தந்தார் என்பது தான் அதிசயமே! (அவரது அதிஷ்டானத்தை தரிசிக்க வைத்து!)

படியுங்கள்… புண்ணியம் தரும் புனிதரின் சரிதம் இது.

(மேலும் அப்பைய தீக்ஷிதருக்கும் நம் தளத்திற்கும் வேறு ஒரு தொடர்பு உள்ளது. டிசம்பர் 14 அன்று நடைபெறப்போகும் நமது ஆண்டுவிழாவில் அதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.)

தனக்கு எதிராக நடந்த சதிச்செயல்கள் குறித்து ஏன் அப்பைய தீட்சிதர் அலட்டிக்கொள்ளவில்லை?

ஸ்ரீ அப்பைய தீட்சிதரின் திவ்ய சரிதம் பற்றிய பதவில் அவருக்கு எதிராக நடைபெற்ற சூழ்ச்சிகள் பற்றியும் அதில் அவர் சிவனருளால் மீண்டு வந்த கதை பற்றியும் படித்தோம். உண்மையில் சொல்லப்போனால் அப்பைய தீட்சிதர் என்னும் ஆனந்தக்கடலிலிருந்து சில துளிகளை மட்டுமே நாம் பருகியுள்ளோம். மேலும் இரண்டு துளிகளை பார்ப்போம்.

Appaiya Deekshithar

ஸ்ரீமத் அப்பய்ய தீட்சிதர் சின்னபொம்ம அரசனால் மேலும் மேலும் நன்கு மதிக்கப்பட்டு வேலூரில் வசித்து வரும் பொழுது ஒரு சமயம் தஞ்சாவூர் அரசனான நரசிம்ம பூபாலன் வேண்டுகோளுக்கு இணங்கி தஞ்சாவூர் சென்றார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தாதாசாரியார் அரசனுக்குத் தீக்ஷிதரிடமுள்ள நன்மதிப்பைப் போக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அரசனிடம் தீக்ஷிதரைப் பற்றிக் குறைவாகப் பேசி கோள் சொல்ல ஆரம்பித்தார். “அரசே! எனக்கு நீர் வஸ்திரமோ, யானை, குதிரை, தங்கம் போன்றவைகள் கொடுக்க வேண்டாம். எனக்கு பதவியில் இருக்க வேண்டும் என்ற ஆசையுமில்லை. இவைகளுக்காக நாம் உம்மிடம் இருக்கவில்லை. என்னுடைய நண்பரும் க்ஷேமத்தையடைய வேண்டியவருமான உம்மைப் பிரிய மனமில்லாது உம்முடன் இருந்து உமது நன்மையையே ஸதா காலமும் விரும்பி வருகிறேன். எனவே நான் தற்போது கூறும் வார்த்தைகளைக் கவனமாகக் கேளும். உலகத்தில் ஒருவன் புத்திமானாகவும் சாமர்த்தியவானாகவும் இருக்கட்டும். அதனால் நீர் உமது பரம்பரை ஆசாரத்தையும் குருவையும் விட்டு விடலாமா? ஆதலால் நீர் அப்பய்ய தீக்ஷிதரிடம் வைத்துள்ள பற்று உமக்கு நன்மையை விளைவிக்காது என்றே நான் கருதுகின்றேன். நீர் தீக்ஷிதருக்குப் பொன்னோ, மணியோ, வீடு வாசலோ கொடுப்பதில் (அவரது சைவ பிரசாரத்தை மன்னன் ஆதரிப்பது தான் தனக்குப் பிடிக்கவில்லை என்று தாதாசாரி கூறுவதாகக் கருத்து). அது ஒரு புறம் இருக்க, தஞ்சை மன்னன் ஸ்ரீ தீக்ஷிதருக்கு ஏராளமான செல்வத்தை அளித்திருந்தும் அவர் ஏன் இங்கு ஒன்றுமில்லாதவர் போலத் தம்மைக் காட்டிக் கொள்ள வேண்டும். அவரது இந்த ஏழ்மை அவரது பூர்வ பாவத்தினால் விளைந்ததோ அல்லது பேராசையினால் தம்மை ஏழை போலக் காட்டிக் கொள்கிறாரோ நாம் அறியோம்” என்று கூறினார்.

இவ்விதம் தாதாசாரியார் கூறியதெல்லாம் அரசன் கேட்டான். தனக்குள்ளேயே ஆழ்ந்து யோசிக்கலானான். இந்த தாதாசாரியர் அவதூறு கூறுவது போல இவர் அவருக்கு எவ்வளவு கொடுமைகள் செய்தும் ஸ்ரீ தீக்ஷிதர் ஒரு பொழுதும் இவரைப் பற்றியோ மற்ற எவரைப் பற்றியும் ஒரு வார்த்தையும் குறை கூறுவதில்லை. ஏன் எனில் ஸ்ரீ தீக்ஷிதர் இத்தகைய அற்பமான விஷயங்களில் ஈடுபட்டுக் காலத்தை அவமே கழிக்காமல் ஸதாகாலமும் சிவத்தியானத்தில் ஈடுபடும் சிவயோகியன்றோ? இவ்வாறு எல்லாம் சிந்தித்துக் கொண்டே, “தாதாசாரியரே! தஞ்சாவூர் நரசிம்மவர்மா ஸமீபத்தில் காளஹஸ்தி தரிசனம் செய்ய தீக்ஷிதரவர்களுடன் வரப்போகின்றார். அப்போது எல்லா விஷயங்களும் நன்கு புலனாகும்” என்று பதில் கூறி தாதாசாரியாரை அனுப்பி வைத்தான். சாம்பசிவனுடைய பக்தர்களின் விசேஷ மகிமையை உலகுக்கு எடுத்துக் காட்டவே விதி இவரை இப்படித் தூண்டுகின்றது போலும் என்ற எண்ணத்துடன் அரசன் அமைதியாக இருந்தான்.

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்

என்று சும்மாவா சொன்னார் வள்ளுவர்?

http://rightmantra.com/wp-content/uploads/2014/11/Appaiya-Dishidhar-Adhishtanam-2.jpg

தீக்ஷிதரின் பற்றற்ற தன்மை நிரூபணமாதல்!

சின்னபொம்ம ராஜன் கூறியது போல் சில தினங்களில் ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரரும், தஞ்சை மன்னரும் காளஹஸ்தி வந்து சேர்ந்தனர். சின்ன பொம்மராஜன் தாதாசாரியாரை அழைத்துக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். எல்லோரும் சிவதரிசனம் செய்து மகிழ்ந்தார்கள். மறுநாள் ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் ஒரு பெரிய வேள்வி செய்தார். யாக சமயத்தில் தாதாசாரியாரால் கோள்சொல்லப்பட்டிருந்த அரசனின் சந்தேஹத்தை அறிந்த தீக்ஷிதேந்திரர் யக்ஞேச்வரரைப் பின்வருமாறு பிரார்த்தித்தார்.

“அஷ்ட மூர்த்தங்களில் ஒன்றான அக்னியின் வடிவில் உள்ள சிவபெருமானுக்கு எனது செல்வத்தையெல்லாம் அர்ப்பணம் செய்கின்றேன் என்பதை இறைவனே இங்குள்ளவர்களுக்கு நிரூபிக்கவேண்டும்” என்று இவ்வாறு பூசுரசிகாமணியான ஸ்ரீமத் அப்பய்ய மதீந்திரர் துதித்து நிற்கவும், அப்பொழுது யாவரும் பார்த்துக் கொண்டிருக்க மஹாதேவர் அக்னியாகப் பிரகாசித்தார். காருஹபத்யம், ஆகவனீயம், தக்ஷிணாக்னி ஆகிய மூன்று அக்னிகளும் வலஞ்சுழித்து மேலும் மேலும் பிரகாசித்தன. தீக்ஷிதேந்திரர் யாகத்தில் அர்ப்பணம் செய்த பால், நெய், தேன், வஸ்திரங்கள், பீதாம்பரங்கள், மாலைகள், ஸ்வர்ண ஆபரணங்கள் அனைத்தும் அக்னியிலிருந்து வெளிவந்தன. மன்னர்களும், மக்களும், தாதாசாரியாரும் கூட இப்பேரதிசயத்தைக் கண்டனர். இரண்டு அரசர்களும் அந்த ஆடையாபரணங்கள் தாங்கள் கொடுத்தவைகள் என்பதை அடையாளம் கண்டு கொண்டனர். எனவே அவர்கள் இருவரும் தீக்ஷிதர் தமக்குக் கிடைத்த செல்வத்தை தமக்கே வைத்துக் கொள்ளாமல், இறைவனின் சேவையில் ஈடுபடுத்தினார் என்பதை உணர்ந்து, அதன் மூலம் அவரது பற்றற்ற தன்மையை அறிந்து தீக்ஷிதேந்திரரை மிகவும் கொண்டாடினார்கள். அதேபோல காஞ்சீபுரம் சென்று, அங்கு வரதராஜப்பெருமான் சந்நிதியில் வாஜபேய யாகம் செய்து ஸ்வர்ணம், பீதாம்பரம் போன்றவற்றை எல்லாம் அக்னியில் அர்ப்பணம் செய்ததை மன்னர்கள் பார்த்து மனம் உருகினார்கள்.

(அப்பைய தீட்சிதர் சரிதம் சரிதம் – நன்றி : www.shaivam.org)

http://rightmantra.com/wp-content/uploads/2014/11/Appaiya-Dishidhar-Adhishtanam-10.jpg

‘சிவாய நம’ என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் இல்லை ஒருநாளும்!

ஒரு விஷயத்தை அனைவரும் இங்கே கவனிக்கவேண்டும். தமக்கு எதிராக நடைபெற்ற எந்த சதிச்செயல்கள் பற்றியும் அப்பைய தீட்சிதர் சிறிதும் அலட்டிக்கொள்ளவில்லை. மன்னனிடம் அது குறித்து புகார் செய்திடவும் இல்லை. காரணம் பெறுவதற்கரிய இந்த மானிடப் பிறவியை இறைவனை துதிப்பதற்க்கு தான் அவர் செலவிட விரும்புகிறாரே அன்றி அற்ப விஷயங்களில் கவனம் செலுத்தி அதை வீணாக்க அவர் விரும்பவில்லை என்பதை மன்னனே புரிந்துகொண்டான்.

(ஏழு வகை பிறப்புக்களில் இறைவனுக்கு பக்தி செய்யும் வாய்ப்பும் அறிவும் மானிடப் பிறவியில் மட்டுமே ஒருவருக்கு ஏற்படுகிறது. எனவே தான் மானிடப் பிறவியை உயர்வாக கொள்ளவேண்டும். விலங்குகளாக இருந்து இறைவனை பூஜை செய்தவை அனைத்தும் ஏதோ ஒரு சாபத்தின் காரணமாக விலங்குகளாக பிறந்து முன்ஜென்ம வாசம் காரணமாக இறைவனை பூஜித்தன என்பது தான் உண்மை!)

walkawayநீங்கள் தீயவற்றுக்கெல்லாம் ரியாக்ட் செய்வதை எப்போது கைவிடுகிறீர்களோ அப்போதே நீங்கள் முன்னேற்றத்தை நோக்கி செல்ல ஆரம்பித்துவிட்டீர்கள் என்று அர்த்தம். முப்பத்திரண்டு பற்களுக்கிடையே நாக்கு போன்றது தான் மனித வாழ்க்கை. நம்மை சுற்றி ஆயிரம் நடக்கும். அதற்க்கெல்லாம் நாம் ரியாக்ட் செய்துகொண்டிருந்தால் எப்போது நாம் போகவேண்டிய இடத்திற்கு போய் சேருவது?

அப்போ என்ன தான் செய்றதுன்னே புரியலயே என்றால்… இதோ இருக்கிறது பதில்!

No matter how badly people treat you, never drop down to their level, just know you’re better and walk away.

நல்ல எண்ணங்களும், கடுமையான உழைப்பும், கடவுள் மேல் உண்மையான பக்தியும் வைத்திருப்பவர்கள் வீழ்ந்தே கிடப்பதில்லை. கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் மீண்டும் எழுந்து விடுவார்கள்.

நாம் நல்லபடியாக வாழ ஒரு உயர்ந்த சக்தி நமக்கு வழிகாட்டுகிறது – அது தான் இறைவன். ஒருவர் நல்லது செய்து கொண்டிருந்தால்தான் அந்த சக்தி அவருக்கு துணையிருக்கும். அவர் கெடுதல் செய்ய ஆரம்பித்தால், அவரால் பாதிக்கப்பட்ட அனைவரின் எண்ணங்களும் அவருக்கு எதிர்வினையை ஏற்படுத்தும் விதத்தில் செயல்படும், அப்போது அவரை வழிகாட்டும் சக்தியும் கைவிட்டுவிடும். அதனால் அவர் பாதிக்கப்படுவார். இது தான் உண்மை.

நல்லவர்களை எப்போதும் எந்த தீயசக்தியும் நெருங்க முடியாது. அவர்கள் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.

‘நல்லவர் என்றும் நல்லவரே… உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே!’

================================================================

Also check from our archives…

தீயவர்கள் சுகப்படுவதும் நல்லவர்கள் துன்பப்படுவதும் ஏன்?

பித்தனாகியும் பரமனைப் பாடிய ஸ்ரீ அப்பைய தீட்சிதர் திவ்ய சரிதம் + அதிஷ்டான தரிசனம்!

ராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரலாற்று நாடகம்! ஒரு நேரடி அனுபவம்!!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

பொருள் தெரியாமல் ஒரு ஸ்லோகத்தை உச்சரிப்பதால் பலன் உண்டா? MUST READ

திருவாரூர் தந்த திருஞானசம்பந்தருடன் நம் தியாகேசர் தரிசனம்!

ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)

உருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர்! உண்மை சம்பவம்!!

ஆங்கிலேயே கலெக்டருக்கு அருள்புரிந்த அன்னை மீனாக்ஷி! சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!

சிவபெருமான் தன் பக்தனுக்கு காட்டிய கண்ணனின் ராசலீலை (உண்மை சம்பவம்)!

வள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

ஆருத்ரா தரிசனம் – சிவபெருமானின் திருநடனத்தை காண ஆதிசேடனை அனுப்பிய திருமால்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்! – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்!

‘என் கடைக்காலம் அரங்கன் சேவைக்கே!’ – கண்கலங்க வைத்த ரங்கநாயகி – திருநீர்மலை உழவாரப்பணி UPDATE!

வாழ்வுக்கு வழிகாட்டும் 27 நட்சத்திரங்களுக்குரிய பரிகாரத் திருத்தலங்கள்!

உங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியுமா?

பிறந்தநாளன்று நாம் செய்ய வேண்டியது என்ன? செய்யக் கூடாதவை என்ன?

எங்கே ‘தேடல்’ உள்ளதோ அங்கே தோல்வியில்லை!

சிவன் கோவிலில் காணக் கிடைக்காத அனுமன் சன்னதியுடன் கூடிய மூல நட்சத்திர பரிகாரத் தலம்

ஜொலிக்கப்போகும் சிங்கீஸ்வரர் – ஓரடி எடுத்து வைத்தவர்களிடம் நூறடி எடுத்து வைத்த ஈசனின் பெருங்கருணை!!

பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!

================================================================

[END]

8 thoughts on “நல்லவர் என்றும் நல்லவரே !

  1. அப்பைய தீட்சிதர் சரிதம் படிக்க படிக்க ஆனந்த சாகரம். மிகவும் எல்லோருக்கும் பயன் படக் கூடிய ஒரு சரிதம். நமக்கு தீங்கு செய்பவர்களை நினைத்து நாம் ஒன்றும் கவலை படாமல் இருக்க வேண்டும் என்பதை இந்த சரிதம் உணர்த்துகிறது.

    //நல்ல எண்ணங்களும், கடுமையான உழைப்பும், கடவுள் மேல் உண்மையான பக்தியும் வைத்திருப்பவர்கள் வீழ்ந்தே கிடப்பதில்லை. கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் மீண்டும் எழுந்து விடுவார்கள்.// மிகவும் அற்புதமான வைர வரிகள்

    //அப்பைய தீக்ஷிதருக்கும் நம் தளத்திற்கும் வேறு ஒரு தொடர்பு உள்ளது.// ஒவொரு பதிவிலும் ஒரு suspense வைத்து விடுகிறீர்கள். …..

    ஞானிகள் என்றும் ஞானிகளே …………

    நன்றி
    உமா

  2. //இருப்பினும் இன்று நமக்கு ஒரு முக்கியமான நாள் என்பதால் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அளிக்கவேண்டி வைத்திருந்த பதிவை இன்று அளிக்கிறோம்//

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அப்பைய தீட்சிதர் மற்றும் மகான்களின் அருளால் , தங்கள் வாழ்வில் எல்லா வளமும் , நலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்

    நன்றி
    உமா

  3. “நல்லவர் என்றும் நல்லவரே.. உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே!’
    அருமையான பதிவு.
    “”” நாம் நல்லபடியாக வாழ ஒரு உயர்ந்த சக்தி நமக்கு வழிகாட்டுகிறது – அது தான் இறைவன். ஒருவர் நல்லது செய்து கொண்டிருந்தால்தான் அந்த சக்தி அவருக்கு துணையிருக்கும். அவர் கெடுதல் செய்ய ஆரம்பித்தால், அவரால் பாதிக்கப்பட்ட அனைவரின் எண்ணங்களும் அவருக்கு எதிர்வினையை ஏற்படுத்தும் விதத்தில் செயல்படும், அப்போது அவரை வழிகாட்டும் சக்தியும் கைவிட்டுவிடும். அதனால் அவர் பாதிக்கப்படுவார். இது தான் உண்மை.

    நல்லவர்களை எப்போதும் எந்த தீயசக்தியும் நெருங்க முடியாது. அவர்கள் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை”””.

    நன்றி

  4. அருமையான பதிவு.

    ‘சிவாய நம’ என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் இல்லை ஒருநாளும்!!

    We need not react to everything happening around us. Nicely said.

    ஓம் நம சிவாய

  5. அருமை.அப்பைய தீட்சிதர் திருத்தாள் போற்றி ……..சுந்தர் சார் பல்லாண்டு வாழ பரமனை பணிந்து ,எல்லோரும் வாழ்த்த எந்நாளும் வாழ்க …….சிவாய நம் ….

  6. பிறந்த நாள் வாழ்த்துகள் சுந்தர் சார், தாங்கள் இன்று அளித்திருக்கும் பதிவு, நிச்சயம் நான் பின்பற்ற வேண்டிய பதிவு. சில கடந்த கால கசப்புக்களை நினைத்து என் மனம் அடிக்கடி அமைதியை இழந்து விடுகிறேன். அந்த எண்ணத்தை இனிமேல் மாற்றிக்கொள்கிறேன். மிக்க நன்றி.

  7. பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுந்தர்ஜி !!!

    உமது பயணம் மென்மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *