“சார்… வணக்கம்… சுந்தர் சாருங்களா? அயனாவரத்திலிருந்து பேசறேன். என் பேர் பாஸ்கரன்….”
“வணக்கம்… சொல்லுங்க சார்….”
“சார்… இன்னைக்கு கோவிலுக்கு போகப்போறேன்னு சொல்லியிருக்கீங்க. என்னோட தம்பிக்காக கொஞ்சம் பிரார்த்தனை பண்ணிக்கோங்க சார்… பிரார்த்தனை கோரிக்கை அனுப்ப எனக்கு நேரமில்லை”
“தாராளமா பண்றேன்… தம்பிக்கு என்ன சார் உடம்புக்கு?”
“அவனுக்கு கிட்னி பெயிலியர் ஆகி டயாலிசஸ் பண்ணிக்கிட்டு இருக்கோம். இப்போ ரொம்ப நிலைமை மோசமாயிருக்கு. அவனுக்கு வயசு 38 தான் ஆகுது. கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைங்க இருக்கு. அவனை நம்பி ஒரு குடும்பம் இருக்கு…..”
“நிச்சயம் பண்றேன் சார்… நீங்க அவர் பேர், ராசி, நட்சத்திரம் மட்டும் சொல்லுங்க… இன்னைக்கு என்னோட நண்பர்கள் சில பேருக்கு தனித்தனியா லக்ஷார்ச்சனை பண்ணப்போறேன்…அப்படியே உங்க தம்பி பேருக்கும் தனியா பண்றேன்”
(ஒரு லக்ஷார்ச்சனைக்கு ஒரு குடும்பத்தின் பெயர்களைத் தான் சங்கல்பம் செய்யவேண்டும். மற்றவர்களை கலக்கக்கூடாது.)
“சார்.. எந்தக் கோவில்னு சொல்லுங்க சார்… சண்டே தானே நானே நேர்ல வர்றேன்” என்றார்.
போரூர் பாலமுருகன் கோவிலின் அமைவிடம் பற்றி குறிப்பிட்டு சரியாக மாலை 7.00 மணிக்கு வந்துவிடுமாறு கேட்டுக்கொண்டோம்.
ஞாயிறு வீட்டில் பிரார்த்தனையை முடித்துவிட்டு கோவிலுக்கு புறப்பட்டோம்.
நண்பர்கள் பெயருக்கு அர்ச்சனை செய்வதால், நிறைய பிரசாத பைகளை தூக்கி வரவேண்டும். எனவே துணைக்கு நண்பர் குட்டி சந்திரனை அழைத்தேன். அவருக்கு அன்று விடுமுறை என்பதால் சரியான நேரத்தில் அவர் நம் வீட்டுக்கு வந்து சேர, இருவரும் போரூர் புறப்பட்டோம்.
போரூர் ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள பாலமுருகன் கோவிலுக்கு நாங்கள் செல்லும்போது பாஸ்கரன் ஏற்கனவே வந்து சேர்ந்திருந்தார். நமக்காக காத்திருந்தார்.
குடும்பத்துடன் வந்திருந்தார். தனது மனைவி மற்றும் மகனை அறிமுகப்படுத்தினார். அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும் கூறி, நண்பர் சந்திரனை பரஸ்பரம் அறிமுகப்படுத்திவைத்து, “லக்ஷார்ச்சனைக்கு நேரமாயிடுச்சு…. இப்போ ஆரம்பிச்சுடுவாங்க. எல்லாம் முடியட்டும் நாம ப்ரீயா பேசலாம்” என்று திரு.பாஸ்கரனிடம் கூறி லக்ஷார்ச்சனைக்கு பணம் கட்டி ரசீதுகள் பெற்றுக்கொண்டு உற்சவர் முன்பு சங்கல்பம் செய்துகொண்டோம்.
கந்தசஷ்டியை முன்னிட்டு தினமும் இங்கு முருகனுக்கு வெவ்வேறு அலங்காரம் செய்யப்பட்டு வந்தது. நாங்கள் சென்ற அந்த நாள், திருச்செந்தூர் அலங்காரம். (முந்தைய நாள் அன்னையிடம் வேல் வாங்கும் அலங்காரம்!)
சங்கல்பம் முடிந்தது பாஸ்கரன் அவர்களை மூலவர் சன்னதியில் நமக்கு முன்னே அமருமாறு ஏற்பாடு செய்துவிட்டு நாம் பின்னே அமர்ந்தோம். நல்லகூட்டம். நெருக்கிக்கொண்டு தான் அமர முடிந்தது.
முருகனின் திவ்யமான அலங்காரம் கண்களை பறித்தது.
‘அழகென்று சொல்லுக்கு முருகா… உந்தன்
அருளன்றி உலகிலே பொருளேது முருக….”
என்ற பாடல் தான் நினைவுக்கு வந்தது. அழகில் சிறந்த மன்மதர்கள் ஆயிரம் கோடி பேர் ஒன்று சேர்ந்தாலும் குமரக்கடவுளின் பாத அழகுக்குக் கூட இணை வராது. மன்மதனை தன் அழகால் முருகன் ஏளனம் புரிபவன் ஆன படியால் அவனுக்கு ‘குமரன்’ என்ற பெயர் ஏற்பட்டது.
அன்று பிரார்த்தனை சமர்பித்திருந்தவர்கள் மற்றும் வாசகர்கள் & நண்பர்களுக்காக பிரார்த்திப்படி அமர்ந்திருந்தோம்.
லக்ஷார்ச்சனை மந்திரங்கள் நன்றாக நமக்கு கேட்கும்படியும் புரியும்படியும் ஸ்பஷ்டமாக உச்சரித்தார்கள்.
லக்ஷார்ச்சனை முடிந்து பிரசாதப் பை பெற்றுக்கொண்டு வெளியே வந்தோம்.
பாஸ்கரன் அவர்களிடம் அப்புறம் தான் சற்று ப்ரீயாக பேசுவதற்கு நேரம் கிடைத்தது.
அவருடைய சகோதரர் பற்றி கேட்டோம். அவர் தம்பி பெயர் ருக்மாங்கதன் என்றும் வயது 39 என்றும், கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் என்றும் திருமணமாகி ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தையும் மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருப்பதாகவும் கூறினார். சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து டயாலிசஸ் செய்யப்பட்டு வருவதாகவும் நாளுக்கு நாள் உடல்நிலை மிகவும் மோசமாகி அவரும் அவர் குடும்பத்தினரும் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் கண்கலங்கியபடி கூறினார்.
“கவலை வேண்டாம்… நான் ஒரு சர்வரோக நிவாரணி, கற்பக விருட்சத்தை தருகிறேன். இதை வீட்டிற்கு கொண்டு சென்றாலே அனைத்தும் சரியாகும். பக்தியோடு பாராயணம் செய்துவந்தால் இன்னும் என்னெவெல்லாம் தரும் தெரியுமா?”
ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினை தன்னைத் தீர்க்கும் – துன்பம்
வாராத நிலை தன்னைச் சேர்க்கும்
ஆராவமுதென அருள் மழை பெய்யும்
கூரான வேல்கொண்டு கொடுமைகளைக் கொய்யும்
“இந்தாருங்கள்… வேல்மாறல். இதை என் நண்பர்களுக்கு தர ஒரு சில காப்பிகள் வாங்கி வந்தேன். முதன் முதலில் உங்களுக்கு தருகிறேன். இதை பக்தியுடன் படித்து வாருங்கள். அனைத்தும் சரியாகிவிடும்….” என்று, கூறி அவருக்கு அர்ச்சகர் திரு.ஸ்ரீ ஸ்கந்தன் என்பவர் மூலம் அந்த நூலை கொடுத்தோம்.
ஸ்ரீ ஸ்கந்தன் மயிலாடுதுறையை சேர்ந்தவர். கந்தசஷ்டியை முன்னிட்டு இந்த கோவிலுக்கு கைங்கரியத்துக்கு தனது சகோதரர்களுடன் (அவர்களும் அர்ச்சகர்கள் தான்) வந்திருந்தார்.
முந்தைய நாள் சனிக்கிழமை கந்தசஷ்டி துவங்கிய அன்றே நாம் சென்றிருந்தபடியால் அர்ச்சகர்கள் அனைவரும் நமக்கு பழக்கமாகிவிட்டனர்.
அவரிடம் நமது வேல்மாறல் சேவையை பற்றி எடுத்துக்கூறி “உங்கள் கைகளால் திரு.பாஸ்கரன் குடும்பத்தினருக்கு இந்த நூலை வழங்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டோம்.
பின்னர் வேல்மாறல் நூலை அவருக்கு கொடுத்தார்.
“சார்… கவலையேபடாதீங்க… உங்கள் பிரச்சனைகளின் தீவிரத்தை பொறுத்து ஒவ்வொன்றாக இனி குறையத் துவங்கும்!” என்றோம்.
“முதல்ல என் தம்பிக்கு ஏதாவது ஒரு வழி கிடைச்சா போதும். டயாலிசஸ் அது இதுன்னு ரொம்ப கஷ்டப்படுறான்!” என்றார் கண்கலங்கியபடி.
“வேல்மாறல் வீட்டுக்கு உள்ளே வருதில்லே. பொறுத்திருந்து பாருங்கள்…”
நூலுக்கு பணம் கொடுக்க முற்பட்டார்… வேண்டாம் என்று மறுத்துவிட்டோம்.
“இதை நான் பணம் கொடுத்து வாங்கவில்லை சார். நண்பர் முகலிவாக்கம் வெங்கட் ஒரு சில காப்பிகள் வாங்கிக் கொடுத்து, உங்களைப் போல மிகவும் துன்பத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கச் சொல்லியிருக்கிறார். பணம் வேண்டாம். இலவசமாக பெறவேண்டாம் என்று நீங்கள் விரும்பினால் அதோ இந்த வயதிலும் வந்து முருகனுக்கு தொண்டு செய்கிறாரே அந்த அர்ச்சகரின் தட்டில் பணத்தை போடுங்கள்” என்றோம்.
அங்கே ஒரு சன்னதியில் நின்றுகொண்டிருந்த அர்ச்சகரின் தட்டில் பணம் போட்டுவிட்டு வந்தார்.
பிறகு நம்மிடம் ஒரு சிறு தொகையை கொடுத்து “இந்தாங்க சார் நீங்க இதை வெச்சிக்கோங்க” என்றார்.
“இது எதுக்கு? நான் தான் புக்குக்கு பணம் வாங்கமாட்டேன்னு சொன்னேனே….”
“உங்களிடம் நான் முன்பு சுந்தரகாண்டம் நூல் அனுப்பச்சொல்லி கூரியரில் வாங்கியிருக்கிறேன். FRANK ஆ சொல்லனும்னா நான் அதை படிக்க .ஆரம்பிக்கலே… அதற்கு உங்களுக்கு பணமும் கொடுக்கலை. நீங்களும் கேட்கலை. இதை அதற்கு வைத்துக்கொள்ளுங்கள். எக்ஸ்ட்ரா இருக்கும் தொகையை நம் தளத்தின் பணிகளுக்கு உபயோகப்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவோ நல்ல விஷயங்கள் பண்றீங்க. அதுக்கு என்னால முடிஞ்சா ஒரு சிறு CONTRIBUTION. சந்தோஷமா மனப்பூர்வமா கொடுக்குறேன்!!” என்றார்.
முருகன் சன்னதியில் கிடைத்தபடியால் கண்களில் ஒற்றி வாங்கிக்கொண்டோம்.
தம்பதிகள் நன்றி கூறி விடைபெற்றுச் சென்றார்கள்.
சுப்பிரமணியன் அனைத்தையும் பார்த்துக்கொண்டே சிரித்தபடி நின்றுகொண்டிருந்தான்.
அடுத்து நமது லக்ஷார்ச்சனை பிரசாதத்தை நாம் உற்சவர் திருவடிகளில் வைத்து பெற்றுக்கொண்டோம். நண்பர்கள் சார்பாக அர்ச்சகருக்கு தக்ஷனை கொடுத்தபிறகு ஆலயத்தை வலம் வந்து நமஸ்கரித்துவிட்டு புறப்பட்டோம்.
இப்படியே அடுத்தடுத்த நாட்கள் சூர சம்ஹாரம் வரை ஏழு நாட்கள் பணி முடிந்து வீடு திரும்பும்போது பாலமுருகன் கோவிலுக்கு சென்று வந்தோம்.
கந்தசஷ்டி முடிந்து மீண்டும் வேல்மாறல் பதிவை தளத்தில் சென்ற வாரம் முதல் துவக்கினோம்.
சென்ற வார பதிவை அளித்துவிட்டு அடுத்த வாரம் என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, நண்பர் பாஸ்கரன் நம்மிடம் வேல்மாறல் பெற்றுச்சென்றது நினைவுக்கு வந்தது.
பாராயணம் துவக்கிவிட்டார்களா? அவர் தம்பிக்கு எப்படி இருக்கிறது? ஏதேனும் முன்னேற்றம் உள்ளதா என்று தெரிந்துகொள்ள ஆசை. அப்படி ஏதேனும் முன்னேற்றம் இருந்தால் அது பற்றி தளத்தில் தெரிவிக்க ஆசை.
அவரை அலைபேசியில் அழைத்தபோது அவர் திருமதி தான் நம்மிடம் பேசினார்.
நம் பெயரைச் சொல்லி, “ஞாபகம் இருக்காம்மா? போரூர் முருகன் கோவிலுக்கு கந்தசஷ்டிக்கு வந்திருந்தீங்க. வேல்மாறல் கூட கொடுத்தோமே…” என்றோம்.
“சொல்லுங்க சார் நல்லா ஞாபகம் இருக்கு… எப்படி இருக்கீங்க சார்?” என்றார்.
“நல்லாயிருக்கேன்மா… உங்க மச்சினருக்கு இப்போ எப்படி இருக்கு? வேல்மாறலை படிக்க ஆரம்பிச்சுட்டீங்களா?”
சற்று தயங்கி… “இன்னும் இல்லே சார்… படிக்கிறதுக்கான சூழ்நிலையே அமையலே… சீக்கிரம் ஆரம்பிச்சுடுறோம் சார்” என்றார்.
“அவருக்கு இப்போ எப்படியிருக்கு?”
“இன்னும் அப்படியே தான் சார் இருக்கு….”
“நீங்க ஒன்னு பண்ணுங்க… உடனே அந்த புக்கை கொண்டு போய் அவர் கிட்டே கொடுத்து படிக்கச் சொல்லுங்க… லேட் பண்ணாதீங்க”
“சார்… நாங்க சனிக்கிழமை தான் மறுபடியும் அவரை பார்க்க அங்கே போவோம்… அப்போ கொடுத்துடுறேன்…”
சற்று யோசித்தோம்… “உங்களுக்கு புக்கை நேர்ல கொண்டு போய் சேர்க்குறதுல சிரமம் இருந்தா ஒரு கூரியர் அனுப்பிடுங்களேன்… இன்னைக்கு அனுப்பிச்சா நாளைக்கு போய்டப்போறது. அதுல வேல்மாறல் யந்திரம் இருக்கு. புக்கோட உங்க தம்பி வீட்டுக்குள்ளே நுழைஞ்சாலே விசேஷம் தான்!” என்றோம்.
வேல்மாறல் வீட்டுக்குள் விசேஷம் என்று ஏன் சொன்னோம் என்றால் அதில் சாதுராம் ஸ்வாமிகள் உருவாக்கிய வேல்மாறல் யந்திரம் இருக்கிறது என்பதால் தான். மேலும் நாம் யாரிடம் பேசினாலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எவ்வளவு நம்பிக்கை கொடுக்கமுடியுமோ அவ்வளவு நம்பிக்கையை கொடுப்பது நம் வழக்கம். நமது வார்த்தைகளில் தெரியும் உறுதியை பார்த்து அவர்களும் அதே நம்பிக்கயை அந்த நூலின் மீதும் சம்பந்தப்பட்ட தெய்வத்தின் மீதும் வைப்பார்கள். எந்த தெய்வமானாலும் ஒருவர் வைக்கும் நம்பிக்கையின் ஆழத்தை பொறுத்து அதன் சக்தியும் அதிகமாக இருக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் அருள் கிடைக்கும் என்பது நம் கணிப்பு. அனுபவம்.
“சரிங்க சார்… நான் இன்னைக்கே கூரியர் அனுப்பிடுறேன்!” என்றார்.
அப்பாடா … ஒரு முக்கிய வேலை முடிஞ்சுது. இனி அனைத்தையும் ‘வேல்மாறல்’ பார்த்துக்கொள்ளும். நாம் நிம்மதி பெருமூச்சு விட்டோம். அத்துடன் இந்த சம்பவத்தை மறந்துவிட்டோம்.
சென்ற வெள்ளிக்கிழமை மாலை நாம் நங்கநல்லூரில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு செல்ல வேண்டியிருந்ததால், அலுவலகத்துக்கு பர்மிஷன் போட்டுவிட்டு வீட்டுக்கு வந்து குளித்து உடை மாற்றி சுமார் 6.30 மணியளவில் வெளியே வருகிறோம்… திரு.பாஸ்கரன் அவர்களிடமிருந்து அலைபேசி.
“சார்…. வணக்கம்.. நல்லாயிருக்கீங்களா?”
“நல்லாயிருக்கேன்… சொல்லுங்க சார்…”
“எப்படி சொல்றதுன்னே தெரியலே…”
நமக்கு ஒன்றும் புரியவில்லை.
“…………………….. என்ன ஆச்சு சார்?”
“சார் செவ்வாய்க்கிழமை நீங்க எனக்கு போன் பண்ணியிருக்கீங்க. என் மிசஸ் கிட்டே பேசியிருக்கீங்க. உடனே வேல்மாறலை தம்பிக்கு கூரியர் பண்ணச் சொல்லியிருக்கீங்க. அவ அடுத்த நாள் கூரியர் பண்ணிட்டா. மறுநாள் வியாழக்கிழமை தம்பிக்கு கிடைச்சிடுச்சு. மத்தியானம் 2.00 மணிக்கு கூரியர் வந்துச்சு. கூரியரை பிரிச்சி அவன் வைஃப் புக்கை அவர் கையில கொடுத்திருக்கா. யந்திரத்தை பூஜை ரூம்ல சாமி படத்துக்கு முன்னே வெச்சிட்டா. கரெக்டா சாயந்திரம் 5.00 மணிக்கு குளோபல் ஆஸ்பிட்டல்ல இருந்து ஃபோன்….”
நாம் மிகவும் ஆர்வமானோம்….
“என்னன்னு????”
“யாரோ DONOR கொடுத்த கிட்னி ஒன்னு ரெடியா இருக்கு. உடனே ஆஸ்பத்திரில அட்மிட் ஆகிடுங்க. நாளைக்கு கிட்னி TRANSPLANT பண்ணிடலாம்னு”
“வாவ்…அப்புறம்…”
“நேத்திக்கு அட்மிட் பண்ணி, இன்னைக்கு சக்ஸஸ்புல்லா ஆப்பரேஷன் முடிஞ்சிடுச்சு… இப்போ தம்பிக்கு பரவாயில்லே… HE IS RECOVERING SLOWLY”
“கந்தா உன் கருணைக்கு தான் ஈடு இணை ஏது…..!” கண்கலங்கிவிட்டோம்.
திரு.பாஸ்கரன் தொடர்ந்தார்… “சார்… நடந்ததெல்லாம் ஒரு கனவு மாதிரி இருக்கு. இன்னும் என்னால நம்பமுடியலே…..”
உண்மை தான். சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைந்துகொண்டிருப்பவர்களுக்கு தெரியும் அதில் உள்ள வலி. மாற்றுச் சிறுநீரகத்துக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருப்பவர்கள் கூட உண்டு. லட்ச லட்சமாக பணத்தை செலவு செய்யத் தயாராக இருந்தாலும் சரியான சிறுநீரகம் கிடைக்கவேண்டுமே? மேலும் இவர்கள் நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவர்கள். அப்படி ஒன்றும் வசதியானவர்கள் அல்ல. அதை விற்று இதை விற்று அவருக்கு வைத்தியம் செய்துவரும் சூழ்நிலையில் இது உண்மையில் பேரதிசயம் தான்.
“நீங்க மட்டும் போன் பண்ணி சொல்லலேன்னா நாங்க புக்கை கூரியர் பண்ணியிருக்க மாட்டோம். இன்னைக்கு கிட்னி கிடைச்சிருக்காது. நீங்க சொன்னவுடனே அனுப்பி வெச்சோம். அது கைக்கு கிடைச்சவுடனே அதாவது வீட்டுக்குள் நுழைஞ்சவுடனே இந்த அற்புதம் நடந்திருக்கு…”
“அப்போ படிக்க ஆரம்பிச்சா என்னவெல்லாம் நடக்கும் யோசிச்சு பாருங்க…”
“உண்மை தான் சார்… எனக்கு ஒரு ரெண்டு காப்பி வேணும். நானே உங்ககிட்டே வந்து வாங்கிக்குறேன்…” என்றார்.
“நடந்த இந்த அதிசயம் பற்றி உங்கள் கருத்து என்ன? நம் வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்று கேட்டோம்.
திரு.பாஸ்கரன் அதற்கு கூறியதாவது : ‘வேல்மாறல்’ வீட்டுக்குள் நுழைந்த நேரம், வினைகள் ஒட்டமெடுத்துவிட்டன. அந்த நூலுடன் வந்த ‘வேல்மாறல்’ யந்திரம் மிகவும் சக்திமிக்கது என்பது மட்டும் எனக்கு புரிகிறது. மேலும் எந்த நூலையும் வாங்கி சும்மா வைத்திருக்காமல் பாராயணம் செய்ய துவங்கவேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நம்பிக்கை தான் தெய்வபலம். உங்கள் வார்த்தைகள் எனக்கு அந்த நம்பிக்கையை கொடுத்தது. அதனால் தான் தம்பி பெயருக்கு லக்ஷார்ச்சனை செய்ய நானே நேரடியாக வந்தேன். அதனால்
முதன்முதலாக வேல்மாறலையும் பெற்றேன்!” என்றார்.
ஆம்… நம்பிக்கை தான் தெய்வபலம்!
==============================================================
நாம் இங்கு REFER செய்துவரும் ‘வேல்மாறல்’ நூலை விளக்கவுரை மற்றும் யந்திரத்துடன் வெளியிட்டிருப்பது வேல்மாறலின் புகழை பரப்புவதற்கென்றே துவக்கப்பட்டு நடத்தப்பட்டு வரும் வேல்மாறல் மன்றம் ஆகும். வணிக நோக்கம் இவர்களுக்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
மகா பெரியவா அவர்களால் ‘திருப்புகழ் சகோதரர்கள்’ என்று பெயர்சூட்டப்பட்டு பாராட்டப்பெற்ற தவத்திரு.சாதுராம் ஸ்வாமிகள் மற்றும் சகோதரர் எஸ்.வி.சுப்பிரமணியம் அவர்களால் துவக்கப்பட்டது இந்த வேல்மாறல் மன்றம் ஆகும். (சாதுராம் சுவாமிகள் முக்தியடைந்துவிட்டார். அவர் சமாதி நங்கநல்லூர் பொங்கி மடாலயத்தில் உள்ளது).
சாதுராம் சுவாமிகள் வடிவமைத்த வேல்மாறல் யந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. அந்த நூலுக்கு மகுடமாய் திகழ்வது.
நூலுடன் கிடைக்கும் யந்திரத்தை தனியாக லேமினேட் செய்து பூஜையறையில் வைத்துக்கொள்ளவும்!
==========================================================
கடும் ஆராய்ச்சியிலும், தேடலிலும், உழைப்பிலும் விளையும் நமது தளத்தின் பதிவுகளை எடுத்தாளுபவர்கள், அவசியம் நமது தளத்தின் இணைய முகவரியை அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி!!
==========================================================
அடுத்து…
* வேல்மாறல் யந்திர தரிசனம்…!
* யார் இந்த திருப்புகழ் சகோதரர்கள் ?
* திரு.சாதுராம் ஸ்வாமிகள் என்பவர் யார் ?
அடுத்த பாகத்தில் விரிவாக…. to be continued in Part 6
==============================================================
Also check :
கைமேல் பலனைத் தந்த ‘வேல்மாறல்’ பாராயணம் — யாமிருக்க பயமேன்? (Part 4)
இழந்த வாழ்க்கையை மீட்டுத் தந்த ‘வேல்மாறல்’ — யாமிருக்க பயமேன்? (Part 3)
வினைகளை தகர்க்கும் ‘வேல்மாறல்’ எனும் மஹாமந்த்ரம் — யாமிருக்க பயமேன்? (Part 2)
வேல் தீர்க்காத வினை உண்டா? உண்மை சம்பவம்! — யாமிருக்க பயமேன்? (Part 1)
உன்னை தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்!
முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!
சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!
முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2
ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?
கருவறையில் மட்டுமா இருக்கிறான் கந்தன் ? தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 2
நல்லதை நினைத்தால் போதும்… நடத்திக்கொள்ள ஆண்டவன் தயார்!
கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1
தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!
காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!
ஏழை திருமணத்துக்கு உதவிய வள்ளல் & வாரியாரின் வாழ்வும் வாக்கும் – தமிழ் புத்தாண்டு SPL & வீடியோ!
காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!
================================================================
[END]
வேல் மாறல் நிகழ்த்திய அற்புதத்தை படிக்க படிக்க மிகவும் பரவசமாக உள்ளது. வாசகர்கள் அனைவருக்கும் நம்பிக்கையை தூண்டும் அற்புத பதிவு,
//திரு.பாஸ்கரன் அதற்கு கூறியதாவது : ‘வேல்மாறல்’ வீட்டுக்குள் நுழைந்த நேரம், வினைகள் ஒட்டமெடுத்துவிட்டன. அந்த நூலுடன் வந்த ‘வேல்மாறல்’ யந்திரம் மிகவும் சக்திமிக்கது என்பது மட்டும் எனக்கு புறிகிறது. மேலும் எந்த நூலையும் வாங்கி சும்மா வைத்திருக்காமல் பாராயணம் செய்ய துவங்கவேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நம்பிக்கை தான் தெய்வபலம். உங்கள் வார்த்தைகள் எனக்கு அந்த நம்பிக்கயை கொடுத்தது. அதனால் தான் தம்பி பெயருக்கு லக்ஷார்ச்சனை செய்ய நானே நேரடியாக வந்தேன். அதனால் வேல்மாறலையும் பெற்றேன்!” என்றார்.// – மிகவும் நம்பிகையான டானிக் அண்ட் enegetic வார்த்தைகள்
படங்கள் அனைத்தும் அருமை. அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்கிறேன். உங்களின் எழுத்து நடை அருமை
நன்றி
உமா
ரைட்மந்த்ரா நண்பர்களுக்கு,
வணக்கம்.
வேல்மாறலைப் பற்றியும், வேல்மாறல் யந்திரத்தை பற்றியும் நான் என் தந்தையார் மற்றும் திருப்புகழ் சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட சாதுராம் சுவாமிகள் & அவரின் பூர்வாஸ்ரமத் தமையனார் திரு.எஸ்.வி.சுப்ரமணியம், மற்றும் அவரது மகன் திரு.குஹானந்தம் அவர்களின் மூலமாக பல அற்புதங்களை கண்டும், கேட்டும், நானே அனுபவித்தும் உள்ளேன்.
அத்தகைய வேல்மாறலை மெய்யன்பர்களுக்கு ரைட்மந்த்ரா தளத்தின் மூலமாக கொண்டு சேர்க்க, நான் வணங்கும் மகா பெரியவா எம்மை திரு. சுந்தர் அவர்களுக்கு அறிமுகம் செய்வித்து பல கட்டளைகளை இட்டுள்ளார் என்றே நாங்கள் இருவரும் நினைக்கிறோம். ஏனெனில், சுந்தர் அவர்களை சில மாதங்களுக்கு முன்பு நான் முதன்முதலில் தொடர்புகொண்டதே இதைப் பற்றி விளக்குவதற்கு தான்.
வேலையையும் பார்த்துக்கொண்டு இதற்க்கெல்லாம் சுந்தர் அவர்களால் நேரம் ஒதுக்கமுடிகிறது என்பது சாதாரண விஷயம் அல்ல. இரண்டு முறை நாங்கள இது தொடர்பாக செய்தி சேகரிக்க நங்கநல்லூர் சென்றோம். இரண்டு முறையும் சுந்தர் சலிக்காமல் வந்தார். முதன்முறை நாங்கள் இருவரும் நங்கநல்லூரில் உள்ள திரு.எஸ்.வி.சுப்பிரமணியம் அவர்களின் இல்லத்திற்கு சென்றபோது அங்கு ஏதோ ஒரு உள்ளுணர்வால் ‘வேல்மாறல்’ நூலினை சில பிரதிகள் வாங்கி திரு. சுந்தர் அவர்களிடம் அளித்தேன். மிகவும் துன்பத்தில் இருப்பவர்களுக்கு அதை கொடுக்கச் சொல்லி அவரிடம் சேர்ப்பித்தேன்.
முருகப் பெருமான் எங்களிருவரையும் கருவிகளாகக் கொண்டு இத்தகைய அற்புதத்தை ஏற்படுத்தியுள்ளான் என்றே நாங்கள் இருவரும் நினைக்கிறோம். ஏற்கனவே நாம் கூறியுள்ளபடி வேல்மாறலை அனைவரும் பாராயணம் செய்வது மட்டுமில்லாமல், தங்கள் சுற்றத்திற்கும் நண்பர்களுக்கும் அளித்து அனைவரும் முருகப் பெருமான் அருளால் தங்கள் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறவும், உலகத் துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறவும் இந்த சர்வரோஹ நிவாரணியை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி
கே.எஸ்.வெங்கட்.
முகலிவாக்கம்.
திரு வெங்கட் அவர்களுக்கு வணக்கம், வேல்மாறல் புத்தகத்தை திரு.சுந்தர் மூலமாக நம் தளத்திற்கு அறிமுகபடுத்தி நம் வாசகரின் வாழ்வில் ஒளி ஏற்றி விட்டீர்கள். தங்களின் செயல் போற்றுதலுக்குரியது. தாங்கள் வாழ்க பல்லாண்டு ……
வேல் மாறல் பற்றிய 5 பதிவுகளும் 5 முத்துக்கள். திரு சுந்தர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
நன்றிகள் பல
திருசெந்தூர் முருகன் துணை
உமா
நன்றி சகோதரி.
– வெங்கட்
Thank you Venkat Sir to providing such a great service.
வாழ்த்துக்கள் சார்.
En kangalil kaneer vandhu vitadhu
Oru uyir ungalal kaapatrapatadhu
Super Sundar ji.
Sukkuku Minjiya Vaithiyamum Illai
Muruganuku minjiya deivamum illai.
Harish V
முருகா சரணம்………………..ஷண்முகா சரணம்…………….
கண்கள் கலங்கி விட்டது.
“எந்த தெய்வமானாலும் ஒருவர் வைக்கும் நம்பிக்கையின் ஆழத்தை பொறுத்து அதன் சக்தியும் அதிகமாக இருக்கும்”
100% உண்மை.
கந்தன் கைவிட மாட்டான்.
நம்பிக்கைதான் தெய்வபலம்………………….என்பதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளீர்கள். புத்தகங்கலை வாங்கினால் மட்டும் போதாது, உடனடியாக நம்பிக்கையுடன் படிக்க வேண்டும் என்று கூறியுள்ளீர்கள். கடைபிடிக்க முயல்கிறேன். பதிவிற்கு மிக்க நன்றி.
சார்
கண்கள் கலங்கி விட்டது.வேல் மாறல் நிகழ்த்திய அற்புதத்தை படிக்க படிக்க மிகவும் பரவசமாக உள்ளது. வாசகர்கள் அனைவருக்கும் நம்பிக்கையை தூண்டும் அற்புத பதிவு, – வேல் மாறல் புக் வாங்க kandipppaga டிசம்பர் 14 வருவேன்
selvi
Really Amazing! Thank you Sundar Sir! i would buy ‘Vel Maaral’ book from your stall, will get it soon.
வாழ்க வளமுடன்
எல்லாம் அவன் செயல்
நன்றி
சுந்தர் சார் நல்லா இருக்கீங்களா? ரொம்ப நாள் ஆச்சு பேசி.. வேல்மாறல் மஹா மந்திரம் 14 நாள் தொடர்ந்து படித்தேன், இடையில் சில காரணங்களால் படிக்க இயலாமல் போனது.. வேளையில் முன்னேற்றமில்லாமலும் இருக்கிறது.. மீண்டும் படிக்கலாம் என்று இருக்கிறேன்… பன்னிரு திருமுறைகள் படித்து வருகிறேன்… 64 நாயன்மார்கள் படித்து வருகிறேன்.. நேரம்தான் போதவில்லை. – பிரபாகர் ஈரோடு.