Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, October 12, 2024
Please specify the group
Home > Featured > கைமேல் பலனைத் தந்த ‘வேல்மாறல்’ பாராயணம் — யாமிருக்க பயமேன்? (Part 4)

கைமேல் பலனைத் தந்த ‘வேல்மாறல்’ பாராயணம் — யாமிருக்க பயமேன்? (Part 4)

print
முருகப்பெருமான் திருக்கை வேலின் புகழ் பாடும் ‘வேல்மாறல்’ பற்றிய தொடரின் அடுத்த பாகம் இது. கலியுகத்தில் நமது பிணிகளுக்கு – அது உடல் பிணியானாலும் சரி, வினைப் பிணியானாலும் சரி – உற்ற மருந்தாக விளங்குவது ‘வேல்மாறல்’ என்னும் மஹாமந்த்ரமே ஆகும்.

(‘வேல்மாறல்’ பற்றிய தொடரை நாம் ஆரம்பித்த நேரம், சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘சக்தி விகடன்’ இதழிலும் ‘வேல்மாறல்’ குறித்த கட்டுரை இலவச இணைப்புடன் இடம்பெற்றுள்ளது!)

‘வேல்மாறல்’ பற்றி நீங்கள் கேள்விப்படுகிறீர்கள் மேலும் இந்த பதிவை நீங்கள் படிக்கிறீர்கள் என்றாலே நீங்கள் கொடுத்து வைத்தவர் என்று தான் கொள்ளவேண்டும்.

காரணம்… மேலே படியுங்கள் உங்களுக்கே விளங்கும்!

================================================================

கலியுகத்தில் தர்மதேவதையின் நிலை!

தர்மமானதை ஒரு பசுவாக முதலில் உருவகப்படுத்திக்கொள்ளுங்கள்.

நான்கு யுகங்களில் முதல் யுகம், கிருத யுகம். இந்த யுகத்தில் மனிதர்கள் யாவரும் தத்தமது தர்மங்களை பூரணமாக கடைபிடிப்பவர்களாக இருப்பார்கள். தர்ம தேவதை திருப்தியோடு இருக்கும்.

Kamadhenu copyஅடுத்த யுகமான திரேதா யுகத்தில், மனிதர்களுக்கு தர்மத்திலுள்ள பற்று குறையும். அந்த யுகத்தில், பசு ரூபத்தில் உள்ள தர்ம தேவதை தனது ஒரு காலை இழந்து மற்ற மூன்று கால்களுடன் சிரமப்படும். அதாவது தர்மம் உலகில் முழுமையாக இல்லாது ஆங்காங்கு குறைந்துகாணப்படும்.

அடுத்த யுகம் துவாபர யுகம். இந்த யுகத்தில் தர்மம் மேலும் குறையும். மனிதர்களில் துர்குணம் கொண்டவர்கள் மிகுதியாக இருப்பார்கள். தர்மத்தின் கால்களில் இன்னொன்று குறையும். இரண்டு கால்களோடு ஒரு பசு எவ்வளவு சிரமப்படும் என்று யோசித்து பாருங்கள். அவ்வளவு சிரமம் துவாபர யுகத்தில் தர்மத்திற்கு ஏற்படும்.

தற்போது நடப்பது நான்காவது யுகமான கலியுகம். கண்ணிருந்தும் குருடர்களாக மக்கள் வாழும் காலகட்டம் இது. இதில் தர்மம் மூன்று கால்களை இழந்து ஒற்றைக்காலுடன் திண்டாடும். அதாவது உலகில் அதர்மம் முக்கால் பங்கு ஓங்கியிருக்கும். அதாவது ஆங்காங்கே தர்மம் திண்டாடிக்கொண்டிருக்கும். இப்போது கலியுகம் தொடங்கி 5100 வருடங்கள் ஆகின்றன. இப்போதே தர்மத்தின் திண்டாட்டத்தை உணர முடிகிறது. இன்னும் கலியுகத்தில் பாக்கி ஆண்டுகள் இருக்கின்றன. கலிமுற்ற கலிமுற்ற தர்ம தேவதையானது நொண்டி நொண்டி தான் நடக்கும்.

போகப் போக தர்மத்தின் உயிர் ஊசலாடிக்கொண்டிருப்பதை காண முடியும்.

வாழ்வுக்கு வளம் சேர்க்கும் விஷயங்களை விடுத்து, தீயவைகளை  மக்கள் வேண்டி விரும்பி அறிந்துகொள்ளும் காலம் இது. இப்படி தர்மத்தின் மீதும் ஆன்மீகத்தின் மீதும் தெய்வத்தின் மீதும் பற்றுக்கள் குறைந்துவிட்ட ஒரு காலகட்டத்தில் ‘வேல்மாறல்’ போன்ற ஒரு சர்வ ரோக வினை நிவாரணியை பற்றி உங்களுக்கு தெரியவருகிறது, அது குறித்த KNOWLEDGE ஏற்படுகிறது என்றால், நீங்கள் பாக்கியசாலிகள் தானே?

================================================================

‘வேல்மாறல்’ தொடரில் நாம் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கு முன்னர் ‘வேல்மாறல்’ நிகழ்த்திய அற்புதம் குறித்து ஒரு இணையத்தில் படித்த அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொள்கிறோம்.

VELMARAL MURUGAN

காப்பாற்றியது ‘வேல்மாறல்’  பாராயணம்!

பெரம்பூரில் சுமார் 10 ஆண்டுகள் வசித்த என் அண்ணன், தன் மகனின் பணி இடமாற்றத்தின் காரணமாக பெங்களூருவுக்கு குடி பெயர்ந்தார்.

அங்கு, பொங்கலுக்கு முதல் நாள் கடைத்தெருவுக்குச் சென்றபோது விபத்தில் சிக்கிய என் அண்ணன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ‘ஓரிரு நாட்கள் கழித்தே எதுவும் சொல்ல முடியும்!’ என்று மருத்துவர் கள் கை விரித்து விட… தகவல் அறிந்த நாங்கள் அதிர்ந்தோம். பத்து நாட்கள் சுய நினைவு இல்லாமல் கிடந்தார் அண்ணன். அவர் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.

இந்த நிலையில் என்னைச் சந்திக்க வந்த சிநேகிதி ஒருவள், ‘வேல் மாறல்’ (அருண கிரியாரது வேல்வகுப்பை ஒரு பாராயண முறையாக அமைத்தார் வள்ளி மலை ஸ்ரீசச்சி தானந்த சுவாமிகள். அதுவே வேல்மாறல்) புத்தகத்தைக் கொடுத்து தொடர்ந்து படிக்கச் சொன்னாள். நானும் விடாமல் ‘வேல் மாறல்’ பாராயணம் செய்து வந்தேன்.

தைக் கிருத்திகை அன்று கோயிலுக்குச் சென்று, அர்ச்சனை செய்து அண்ணன் குணமாக வேண்டி முருகனை பிரார்த்தித்தேன். அப்போது, அவர் மேல் சாத்தப்பட்டிருந்த மாலையில் இருந்து ரோஜா ஒன்று கீழே விழுந்தது; மகிழ்ந்தேன். வீடு திரும்பும்போது, கையில் வேல் & உடம்பு முழுவதும் திருநீறுடன் சிறுவன் ஒருவன் எதிர்ப்பட்டான். எனக்கு மெய்சிலிர்த்தது. விசாரித்தால் பள்ளியில் மாறு வேடப் போட்டிக்குச் செல்வதாகக் கூறினான் அவன். எது எப்படியோ… எனக்கு சாட்சாத் அந்த முருகப் பெருமானையே நேரில் தரிசித்தது போல் இருந்தது! கண்ணீர் மல்க, ‘முருகா!’ என கை கூப்பி வணங்கி விட்டு, வீடு வந்து சேர்ந்தேன். அன்று மாலையே, ‘அண்ணனின் உடல் நிலையில் முன்னேற்றம்; இனி கவலை இல்லை!’ என்று மருத்துவர்கள் சொன்னதாக தகவல் வந்தது. எல்லாம் வேல்மாறல் பாராயணம் செய்ததன் பலன்!

(- பி. ராஜலெக்ஷ்மி, சென்னை-61 | www.sirukathaigal.com)

செங்கேழ் அடுத்த சின வடி வேலும் திரு முகமும்
பங்கே நிரைத்த நற் பன்னிரு தோளும் பதும மலர்க்
கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன் என
எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் நிற்பனே!
– அருணகிரிநாதர்

ஆம்… எங்கே நினைத்தாலும் அங்கே வந்து எதிர்நிற்பான் நம் முருகன்.

=============================================================

யந்திரத்துடன் கூடிய ‘வேல்மாறல்’!

வேல்மாறல் நூல் வேண்டுவோர் நம்மை தொடர்புகொள்ளவும்.

Rightmantra Sundar,
Founder & Editor,
Rightmantra.com & Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

என்கிற முகவரிக்கு ரூ.100/- மணியார்டர் அனுப்பி தபாலில் யந்திரத்துடன் கூடிய ‘வேல்மாறல்’ நூலை பெற்றுக்கொள்ளலாம். (தபால் செலவுடன் சேர்த்து).

நூலுடன் கிடைக்கும் யந்திரத்தை தனியாக லேமினேட் செய்து பூஜையறையில் வைத்துக்கொள்ளவும்!

=============================================================

கடும் ஆராய்ச்சியிலும், தேடலிலும், உழைப்பிலும் விளையும் நமது தளத்தின் பதிவுகளை எடுத்தாளுபவர்கள், அவசியம் நமது தளத்தின் இணைய முகவரியை அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!!

=============================================================

Also check :

இழந்த வாழ்க்கையை மீட்டுத் தந்த ‘வேல்மாறல்’ — யாமிருக்க பயமேன்? (Part 3)

வினைகளை தகர்க்கும் ‘வேல்மாறல்’ எனும் மஹாமந்த்ரம் — யாமிருக்க பயமேன்? (Part 2)

வேல் தீர்க்காத வினை உண்டா? உண்மை சம்பவம்! — யாமிருக்க பயமேன்? (Part 1)

உன்னை தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்!

முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!

சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!

முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

கருவறையில் மட்டுமா இருக்கிறான் கந்தன் ? தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 2

ஏற்பது இங்கே இகழ்ச்சியல்ல!

நல்லதை நினைத்தால் போதும்… நடத்திக்கொள்ள ஆண்டவன் தயார்!

கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1

தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!

ஏழை திருமணத்துக்கு உதவிய வள்ளல் & வாரியாரின் வாழ்வும் வாக்கும் – தமிழ் புத்தாண்டு SPL & வீடியோ!

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

================================================================

[END]

8 thoughts on “கைமேல் பலனைத் தந்த ‘வேல்மாறல்’ பாராயணம் — யாமிருக்க பயமேன்? (Part 4)

  1. ஒவொரு முறையும் வேல் மாறல் பற்றிய பதிவு படிக்க படிக்க , வேல் மாறல் தினமும் பாராயணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மிக அதிகமாக ஏற்படுகிறது. இந்த பதிவை படித்த நாம் பாக்கியசாலி. இந்த நல்ல எண்ணத்தை ஏற்படுத்தி கொடுத்த ரைட் மந்த்ராவிற்கு வாழ்த்துக்கள் பல

    கந்தன் இருக்க கவலை எதற்கு., திசம்பர் 14 அன்று வேல் மாறல் புத்தகம் வாங்கி கொள்கிறேன்.

    முருகன் படம் மிக அழகாக உள்ளது. வேல்மாறலின் நான்கு பதிவிற்கும் நன்றிகள் பல

    திருசெந்தூர் முருகன் துணை

    நன்றி
    உமா

  2. கலியுகத்தில் தர்மதேவதையின் நிலை!
    ஏற்கனவே பல பத்திரிக்கைகளில் படித்து இருந்தாலும் படித்து முடித்தவுடன் தோன்றும் ஒரு வேதனை உணர்வு இப்போதும் வந்தது.
    கலியுகத்தில் நம் தர்மத்தின் நிலை கண்டு மனம் துடிக்கத்தான் செய்கிறது.
    எங்கே நினைத்தாலும் அங்கே வந்து எதிர்நிற்பான் நம் முருகன்.
    நல்லது. நன்றி.

  3. வேல்மாறல் மற்றும் சத்ரு சம்ஹார வேல் பதிகம் ஆடியோ லிங்க் இருந்தால் அடுத்த பதிவில் அதை இணைக்கும்படி தங்களை
    கேட்டு கொள்கிறேன் நன்றி.

  4. வேல்மாறல் நூலை மணியார்டர் அனுப்பி பெற்றுக்கொள்கிறோம். வேல்மாறலின் சிறப்பை அறிந்து கொள்ளும் பொழுது பிரமிப்பாக இருக்கிறது. கலியுகத்தில் நம்மைக் கடைத்தேற்றும் வழி வேல்மாறல் என புரிந்து கொள்ள முடிந்தது.பதிவிற்கு மிக்க நன்றி.

  5. வேலுண்டு வினையில்லை……மயிலுண்டு பயமில்லை…………

  6. செவ்வாய் அன்று அதுவும் கார்த்திகை மாத துவக்கத்தில் முருகனருள் பற்றி அறிந்துகொண்டதில் மகிழ்ச்சி.

    பதிவில் கூறப்பட்டுள்ள சம்பவம் உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கிறது.

    வேலுண்டு வினையில்லை; மயிலுண்டு பயமில்லை.

    முருகனருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  7. sairam sunder sir,

    i read ur article on “vel Maral”, next week got the “vel Maral” book alongwith “sakthi vikatan” magazine. Started to read from karthigai 1st day.

    Advance wishes and blessings for December 14th. function.

    sairam shashikala

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *