அதற்கு முன்பு அவர் யார் என்று பார்ப்போமா??
இதுவரை எத்தனையோ பெரிய மனிதர்களை, சாதனையாளர்களை நான் பேட்டிக்காக சந்தித்திருக்கிறேன். அவர்களுடன் உரையாடியிருக்கிறேன். அவர்களிடம் பல அரிய குணங்களை கண்டு வியந்திருக்கிறேன். அவற்றில் நான் பின்பற்றக்கூடியவற்றை பின்பற்றி வருகிறேன். சிலவற்றை முயற்சித்து வருகிறேன்.
எனது – வாழ்வில் – அணுகுமுறையில் – ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு இதுவும் ஒரு காரணம்.
—————————————————————————————
இந்த பதிவின் முதல் பகுதியை (Part 1) படிக்காதவர்கள் அவசியம் படித்துவிட்டு பின்னர் இதை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
http://rightmantra.com/?p=1371
—————————————————————————————
* இரு கண்களையும் பிறவியில் இருந்தே இழந்து பார்வையற்ற சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையுடன் எதிர்நீச்சல் போட்டு, மிகப் பெரிய சாதனைகளை அனாயசமாக செய்திருக்கும் திரு. இளங்கோவை சந்தித்த பின்பு என் அறிவுக் கண்கள் திறக்காமல் இருக்குமா? அப்படி திறக்கவில்லை என்றால் நான் அல்லவா மிகப் பெரிய குருடன்?
* பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு லாட்டரி விற்பது முதல் டூ-வீலர் மெக்கானிக் ஷாப் வரை பல வேலைகளை பார்த்து பின்னர் ப்ரைவேட்டாக எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ என எழுதி இறுதியில் ஐ.ஏ.எஸ். தேர்வில் மாநிலத்திலேயே முதலாவது வந்த திரு.நந்தகுமார் அவர்களை சந்தித்து உரையாடிய பின்பு அவரது நட்பு கிட்டிய பிறகு… என்னுடைய தோல்விகளுக்கு விதியின் மீது பழி போடும் எண்ணம் எனக்கு வருமா? அப்படி வந்தால் நானும் ஒரு மனிதனா?
* சொந்தக்காரர்களின் வீட்டிலேயே பெற்ற தாய் பத்து பாத்திரம் தேய்த்து அதன் மூலம் படிக்க வைத்து, வளரும் காலத்தில், உத்தியோகம் சென்ற இடத்தில் என, எங்கும் அவமானம் எதிலும் அவமரியாதை, சூழ்ச்சிகள், துரோகங்கள் என்று சந்தித்த நிலையிலும் இறை நம்பிக்கை கொண்டு அவற்றை தூள் தூளாக்கி இன்று மிகப் பெரிய ஒரு வணிக குழுமத்தின் தலைவராக இருக்கும் ‘மதுரை அப்பு க்ரூப் ஆஃப் ரெஸ்டாரண்ட்ஸ்’ திரு.R.சந்திரசேகரன் அவர்களை பார்த்த பிறகு எனக்கு ஏற்பட்ட அவமானங்களை பற்றி நான் கவலைப்படுவேனா?
இப்படி நான் சந்தித்த ஒவ்வொரு சாதனையாளர்களும் இந்த களிமண்ணை செதுக்கியதால் தான் இன்று ஒரு பிம்பத்துடன் உங்கள் முன் நிற்கிறேன். இல்லையெனில் என் வாழ்வில் அடித்த சூறாவளியில் சிக்கி சின்னாபின்னமாகி என்றோ மண்ணோடு மண்ணாகியிருப்பேன்.
சாதனையாளர்களை தொடர்ந்து சந்திக்கும் ஆவல், அவர்கள் நட்பு + அறிமுகம் வேண்டும் என்கிற தாகம், நாமும் வாழ்ந்துக் காட்ட வேண்டும் என்கிற வெறி இதன் மூலம் தான் எனக்கு தொடர்ந்து ஏற்பட்டது.
அண்மையில் கோவை சென்று 4000 பேருக்கும் மேல் வேலை கொடுத்திருக்கும் ஒரு முன்னணி வணிகக் குழுமத்தின் நிறுவனரை நம் தளத்திற்காக பேட்டி எடுத்து வந்தேன். மிகப் பெரிய விஷயங்களின் தொடக்கம் எத்தனை எளிமையாக, சிறியதாக இருந்திருக்கிறது என்று மற்றுமுறை அனுபவப் பூர்வமாக தெரிந்துகொண்டேன்.
அடுத்த சில நாட்களில் இங்கே சென்னையில் சாதனையாளர்களுக்கெல்லாம் சிகரமாக திகழ்ந்து கொண்டிருக்கும் ஒருவரை சந்திக்க நேர்ந்தது.
என்ன சொல்வது எப்படி சொல்வது?
என்ன சொல்வது எப்படி சொல்வது? என்னிடம் மிச்ச மீதியிருந்த அழுக்குகளை எல்லாம் துடைத்து எறிந்து என்னை மேலும் பக்குவப் படுத்திவிட்டார் இந்த மனிதர். இவருடன் பேசப் பேச சில இடங்களில் வெட்கப்பட்டேன். பல இடங்களில் வியப்பின் எல்லைக்கே சென்று கைகளை தட்டி மகிழ்ந்தேன். (அடுத்தடுத்த பதிவுகளை படிக்கும்போது அந்த இடங்களில் நீங்களும் கைதட்டுவீங்க. அப்போ புரியும் நான் சொல்வது துளியும் மிகையல்ல என்பது!)
அண்ணல் காந்தியை பற்றி ஐன்ஸ்டீன் அவர்கள் சொன்னபோது, “இப்படி ஒரு மனிதர் ரத்தமும் சதையுமாக பூமியில் வாழ்ந்தார் என்பதையே வருங்கால சந்ததியினர் நம்ப மறுப்பார்கள்” என்றார்.
அதே வார்த்தைகள் இவருக்கும் 100% பொருந்தும். என்ன ஒரு சின்ன திருத்தம். இவரை பற்றி கூறினால் இப்படி ஒரு மனிதர் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்று நிகழ் காலத்திலேயே நம்ப மறுப்பார்கள்.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். (குறள் 664)
உபதேசம் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் செய்யும் உபதேசப்படி வாழ்வது என்பது அரிதினும் அரிய குணம். இவர் வாழ்ந்து காட்டி வருகிறார்.
எளிமை என்பதற்கு பொருளாக அகராதியில் இவர் பெயரை சேர்த்துவிடலாம். அதனால் அகராதிக்கே பெருமை சேரும்.
இவரது கொடைத்தன்மை பற்றி கேள்விப்பட்ட தருணம்… கேள்விப்பட்டவர்களுக்கு தோன்றும் பாடல் இதுவாகத் தான் இருக்கும்.
கர்ணன் அறிமுக பாடல்
*நடுத்தர குடும்பத்தில் பிறந்து மாத ஊதியம் வாங்கிய ஒருவர், தன் ஊதியம் முழுவதையுமே சமூகசேவைக்காகச் செலவழித்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?
*மக்கள் வரிப் பணத்தில் அரசு தரும் சம்பளம் வாங்கிக்கொண்டு அலுவலகத்துக்கு செல்லாமல், வேறு பசையான தொழில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் பலர் வாழும் இந்த உலகில், அரசு தரும் ஓய்வூதியம் முழுவதையுமே பொது நலனுக்காக செலவிடுகிறார் என்பது தெரியுமா?
*35 ஆண்டுகள் பணி செய்த இவர் ஒரு நாள் ஊதியத்தை கூட தனக்காக இவர் எடுத்துக்கொள்ளவில்லை என்பது தெரியுமா?
*மாதம் ரூ.20,000/- சம்பளம் வாங்கிய போதிலும், அனைத்தையும் பொதுக் காரியங்களுக்கு கொடுத்துவிட்டு தனது வாழ்விற்கு தேவையானதை திருநெல்வேலியில் ஓட்டல் ஆர்யாஸில் மாலை நேரத்தில் சர்வராக வேலை பார்த்து சம்பாதித்துக்கொண்டவர் என்பது தெரியுமா? (ஓவராயிருக்கே…. என்று தானே நினைக்கிறீங்க ? இதுக்கு காரணத்தை அப்புறம் சொல்றேன்!)
*1969 இல் இவரது குடும்ப சொத்துக்களை பாகம் பிரித்த போது இவருக்கு கிடைத்த ரூ.5 லட்சம் மதிப்புடைய சொத்தை உடனடியாக தானம் செய்துவிட்டார். (1969ல் 5 லட்சம் என்றால் இப்போ அதன் மதிப்பு எத்தனை இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்…!)
*இவரது கண்கள் உள்ளிட்ட அனைத்து உடலுறுப்புக்களையும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரிக்கு தானம் கொடுத்துவிட்டார். அதுவும் 25 ஆண்டுகளுக்கு முன்பாகவே.
*பொதுவாழ்க்கைக்கு மண வாழ்க்கை இடையூறாக இருக்கக் கூடாதென்று திருமணமே செய்துகொள்ளவில்லை இவர்.
*சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர் இவர். தாயாரின் அரவணைப்பில் வளர்ந்தவர். தாய் தான் தமது தயாள குணத்திற்கு ஆசான் என்று தாயாரை ஆராதிப்பவர்.
*ஏழை எளிய மக்கள் படும் துன்பங்களை நேரடியாக அறிந்துகொள்ள அவர்களுடனே சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேல் நடை பாதை வாசியாகவே வாழ்ந்திருக்கிறார்.
*ஆந்திர புயல், குஜராத் பூகம்பம், சுனாமி உள்ளிட்ட பேரிடர்களின்போது பல லட்ச ரூபாய்களை நன்கொடையாக திரட்டி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அளித்தவர்.
*1963 ல் இந்தியா – சீனா யுத்த நிதிக்காக காமராஜரிடம் தமது தங்கச் சங்கலியை தேசிய நிதிக்கு அளித்தவர்.
*தன் பெயருக்கு பின்னால் M.A. (Lit), M.S. (His)., M.A., (GT), B.Lib.Sc., D.G.T., D.R.T., D.M.T.I.F. & C.W.D.S. என பட்டங்களை பெற்றுள்ள இவர் அனைத்திலும் கோல்ட் மெடல் வாங்கிய முதல் மாணவர்.
*வாழ்நாள் முழுதும் தன பெயரில் ஒரு சென்ட் நிலமோ அல்லது ஒரு ஒலைக்குடியாசையோ அல்லது பணமோ இருக்கக் கூடாது என்ற கொள்கையுடையவர்.
*ஐந்தாவது ஊதியக் குழுவில் விடுபட்ட ஊதியத்தை 14 ஆண்டுகள் முன் தேதியுடன் அரசு வழங்கிய ரூ.10 லட்சத்தையும் தனது 70 வது பிறந்த நாளில் மக்களுக்கு அளித்தார்.
*ஆறாவது ஊதியக் குழுவில் பயன்பெறும் ரூ.5 லட்சத்தை ஏழைக் குழந்தைகளின் குழந்தைக்காக எழுதி வைத்துவிட்டார்.
*கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்த இவர் ஏழைகளுக்கு கிட்டாத உணவையோ அல்லது உடையையோ இருப்பிடத்தையோ பயன்படுத்தாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருபவர்.
*இவரது ஆடை சாதாரண கதராடை தான். செருப்பு ரப்பர் செருப்பு தான்.
*தாம் கதர் உடுத்த ஆரம்பித்த காரணத்தை பற்றி கூறுகையில் : “எளிமையையும், காந்தீயம் பற்றியும் உரையாற்ற கல்லூரிகளுக்குச் சென்றுள்ளேன். மில் உடைகளுடன் எளிமையையும், காந்தியத்தையும் பற்றிப் பேசுவது என் மனத்தை உறுத்தியது. உடனேயே காதிக்கு மாறி விட்டேன்.” என்கிறார்.
*நூலகத் துறையில் இவரது சேவையை பாராட்டி நமது இந்திய அரசாங்கம் இவருக்கு “இந்தியாவின் சிறந்த லைப்ரரியன்” என்ற பட்டத்தை அளித்தது. “உலகத்து சிறந்த 10 லைப்ரரியன்களில் ஒருவர்” என்ற புகழ் பெற்றார்.
*உலக பயோகிராஃபிகல் மையம், கேம்பிரிஜ் – உலகத்தின் சிறந்த மனிதாபிமானி – என்று கெளரவித்தது.
*ஐக்கிய நாட்டுச் சபை “20-ம் நூற்றாண்டின் சிறந்த மனிதர்” என்று தேர்வு செய்து, பாராட்டியது.
[pulledquote]இவரை சேவைகளை பற்றி கேள்விப்பட்ட அமெரிக்க நிறுவனம் ஒன்று இவரை கௌரவிக்கும் வகையில் இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதராக – Man of the Millenium – இவரை தேர்ந்தெடுத்து $ 6.5 Million வழங்கியது. (சுமார் 30 கோடி ரூபாய்). அந்த நிதியை கூட அந்த விழா மேடையிலேயே சர்வதேச குழந்தைகள் நல அமைப்புக்கு நன்கொடையாக கொடுத்துவிட்டார்.[/pulledquote]
*இவர் சேவைகளை பற்றி கேள்விப்பட்ட அமெரிக்க நிறுவனம் ஒன்று இவரை கௌரவிக்கும் வகையில் இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதராக – Man of the Millenium – இவரை தேர்ந்தெடுத்து $ 6.5 Million வழங்கியது. (சுமார் 30 கோடி ரூபாய்). அந்த நிதியை கூட அந்த விழா மேடையிலேயே சர்வதேச குழந்தைகள் நல அமைப்புக்கு நன்கொடையாக கொடுத்துவிட்டார்.
*சூப்பர் ஸ்டார் ரஜினி இவர் நற்பண்புகளை கேள்விப்பட்டு ஒரு விழாவில் “இவரை தந்தையாக” தத்து எடுத்து தன் வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார். அங்கு அவரால் சில மாதங்களுக்கு மேல் இருக்க முடியவில்லை. மூன்றடுக்கு பாதுகாப்பு மிகுந்த அந்த சூழல் தன்னை சந்திக்க வரும் நண்பர்களுக்கும் உதவி கோரி வருபவர்களுக்கும் கடினமாக இருக்கிறது என்றும் அவரது சுதந்திரமான குணத்திற்கும் எளிமைக்கும் அந்த சூழல் ஒத்துவரவில்லை என்றும் கூறி அதை அன்புடன் மறுத்து வெளியே வந்துவிட்டார். (இது பற்றிய விரிவான நெகிழ்ச்சியான தகவல்களை நம்மிடம் கூறியிருக்கிறார் இவர். அது தனிப் பதிவாக வரும்.)
இவருடைய பொது சேவைகள்:
1) ஏழை எளிய மாணவர்களை தத்து எடுத்து கொள்ளுதல்
2) மாணவ மாணவியர்களின் கல்வி வளர்ச்சிக்கு சீருடை, நோட்டு புத்தகம் வழங்குதல்
3) 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் மாநில அளவில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.
4) பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் நல் ஒழுக்கம், பொது அறிவு, அதிக மதிப்பெண் ஆகியவற்றுடன் தேர்வு அடையும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.
இவரின் கொள்கைகள் என இவரது விசிட்டிங் கார்டின் பின்னால் காணப்படும் வாசகங்கள் :
என்றும் இன்பமுடன் இனிது வாழ எதன் மீதும் பேராசை கொள்ளாது இருப்போம்! பத்தில் ஒன்றை தானம் செய்வோம்!! தினமும் ஒரு உயிருக்கு நன்மை செய்வோம்!!!
பணம் மட்டுமே உலகம் என்றெண்ணி இயந்திர வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு இவரின் வாழ்க்கை ஒரு பாடம்.
இத்தனை பெருமைக்கும் புகழுக்கும் சொந்தக்காரர்… ஐயா திரு.பாலம் கலியாண சுந்தரம்.
இவரைப் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன். பத்திரிக்கைகளில் படித்திருக்கிறேன். வியந்திருக்கிறேன்.
>>ஐயா திரு.பாலம் கலியாண சுந்தரம் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு குமரகுருபரர் கலைக்கல்லூரியில் 35 ஆண்டுகள் நூலகராக பணிபுரிந்தார்.
>>1995 இல் ‘இந்தியாவின் சிறந்த நூலகர்’ என்கிற பட்டத்தை ‘கோவா பல்கலைக்கழகம்’ இவருக்கு வழங்கியது.
>>1996 இல் உலகின் பத்து சிறந்த நூலகர்களுள் ஒருவர் என்கிற பட்டத்தை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இவருக்கு வழங்கியது.
>>உச்ச நீதி மன்ற நீதிபதிகள் அடங்கிய சபை உலகின் சிறந்த பண்பாளர்களில் ஒருவர் என்ற கௌரவத்தையும் அப்போது அளித்தனர்
>>புதுமையான நூலக நூற்பட்டியை இவர் கல்லூரியிலேயே ஆறு மாத காலம் தங்கியிருந்து தயாரித்தார். அந்த ஆராய்ச்சி முடியும் வரை அவர் வீட்டிற்க்கே செல்லவில்லை. இம்முறையில் நூல்பட்டி தயாரித்தால் ஒரு நூலின் தலைப்பையும் ஆசிரியரின் பெயரையும் சொன்னால் உடனடியாக அந்த நூலின் புத்தக எண்ணை சொல்லிவிடலாம்.
>>மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இவரது ஆராய்ச்சியை பாராட்டி அதை ஏல் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியது. ஏல் பல்கலைக்கழக அதற்கு தகுதி சான்றிதழ் (மெரிட் சர்டிஃபிகேட்) வழங்கியதுடன் அதை கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்திற்கு வழங்கியது.
>>கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் ‘A most notable intellectual’ பட்டத்தை வழங்கியதுடன் நூலகத்துறைக்கு நோபிள் பரிசு இருந்தால் அதை பெற தகுதி இதற்க்கு உண்டு என்ற குறிப்பையும் வழங்கியது.
>>தனது குடும்பத்திற்கும் நாட்டிற்கும் மட்டுமின்றி மாத ஊதிய வர்கத்தினர் அனைவருக்கும் கௌரவத்தை தேடித் தந்தவர் பாலம் கலியாணசுந்தரம் ஐயா.
இவரை சந்தித்ததையும் இவருடன் பேசியதையும் இவரது நட்பு கிடைத்ததையும் மிகப் பெரிய பாக்கியமாக கௌரவமாக கருதுகிறேன். இவருடன் எடுத்த புகைப்படத்தை பொக்கிஷமாக கருதுகிறேன்.
இவர் ஏதோ சமூக சேவகர், அனைத்தையும் அள்ளி வழங்கிய வள்ளல் மட்டுமல்ல. மிகப் பெரிய ஆத்ம ஞானி. ஆன்மீகவாதி. சைவத் திருமுறைகள், பக்தி இலக்கியங்கள், பைபிள், திருக்குர்-ரான் என அனைத்தையும் படித்து மெய்யறிவில் பூரணத்துவம் பெற்றவர்.
வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்படும் பல சந்தேகம் பலவற்றுக்கு இவர் மிக மிக அனாயசமாக விடை தருகிறார்.
இவரது சந்திப்பு மற்றும் இவர் பகிர்ந்து கொண்ட விஷயங்களை தொடர்ந்து நமது தளத்தில் படித்து வாருங்கள்…
அள்ளிக் கொடுத்து வாழ்பவர் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு
நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு!
* அடுத்த பகுதியில்….
கடமை தவறிய ஒருவருக்கு இறைவன் அளித்த சொர்க்கம் – இவர் கூறிய சுவையான குட்டிக்கதை + மேலும் மேலும் பல சுவையான அனுபவங்கள்…
—————————————————————————————-
இவரது சந்திப்பு குறித்த நமது முந்தைய பதிவுக்கு :
வெற்றிகரமான வாழ்க்கை என்பது உண்மையில் என்ன? இந்த வி.வி.ஐ.பி. சொல்றதை கேளுங்களேன்!
http://rightmantra.com/?p=1371
—————————————————————————————-
……………. to be continued
சத்தியமாக இவரை பற்றி facebook இல் தகவல் பரிமாறி தலைவருடன் சேர்த்து நிறைய பேர் பகிர்ந்து கொண்டிருந்தாங்க.அப்போ இப்படி ஒரு மனிதன் எப்படி இருப்பார்கள் என்று அலட்சியம் செய்தேன்.
அதை நான் பகிர விரும்ப வில்லை… காரணம் அதை நம்பாமல்.
சில சமயம் அப்படி ஒருவர் இருக்கிறாரா இது உண்மையா என்று தங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று பல நாட்கள் யோசித்ததுண்டு. வேலை பளு என்னை மறக்க வைத்தது. இன்னும் மனது நம்ப மறுக்கிறது. அந்தளவு வியப்பு ஏற்படுகிறது.
ரொம்ப ரொம்ப நன்றி சுந்தர். இப்படி ஒரு மனிதரை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் பேட்டி எடுத்து அளித்துள்ளமைக்கு.
இவரை போன்றவர்கள் இருப்பதால் தான் இன்னும் மனிதாபிமானம் நம் நாட்டில் இருக்கிறது என்று ஞாபகம் வருகிறது
இப்படி ஒரு மனிதர் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது..
இவரை பற்றிய செய்தியை நமது தளத்தில் பகிர்ந்து கொண்டதற்கு நாம் மிக பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும்.
இக்காலத்தில் ஒரு சிறு செயலை செய்துவிட்டு அதற்கு விளம்பரம் தேடும் எல்லா மனிதர்களுக்கும் இவர் ஒரு LESSON..
காத்திருக்கிறேன் இவரை பற்றிய அடுத்த பதிவிற்காக…
என்றும் தலைவர் ரசிகன்
விஜய்
டியர் சுந்தர் உண்மையிலேயே சொல்றேன் முதல் பதிவு படிக்கும் போதே இவரை பற்றி தான் சொல்ல porenga அப்படின்னு நினச்சேன் என் கணிப்பு பொய் ஆகல .வாழும் கடவுள்
I shud leave a heartful full of thanks for this wonderful effort from you. Loads and loads of Amazement and inspiration is filled here. what more can i say?? God Bless All .,
டியர் சுந்தர்,
இந்த மாதிரி ஒரு பதிவை படிப்பதற்கு நாங்கள் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். வாழ்க்கையோட தத்துவத்த இதை விட எளிமையா வேற யாரும் சொல்ல முடியாது…
கண்டிப்பா இதை படிக்கிறவங்க வாழ்க்கைல இனிமே ஒரு பெரிய மாற்றம் இருக்கும்.
நான் தலைவர் ரசிகனா இருந்ததால எனக்கு இந்த பாக்கியம் கிடைச்சது… தலைவருக்கு நன்றி… உங்களுக்கு மிக்க நன்றி..
வாழ்க வளமுடன்,
கணேசன்
அண்ணா இந்த பதிப்பு என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது……
கொடுபவனே உயர்ந்தவன்………….
Dear Mr. Sundar,
I would rate this article as one of the most important & an extremely exceptional one, for all the “Good readers”. I really mean the Good readers. I am not surprised there are only few comments , as most of the readers like me are lazy / hesitant to give their feed back in comments column – though we thoroughly enjoy. As an author, you may feel dejected with the response. May be you are not, as you are also an exceptional & well matured, as I know you.
I assure you that you can feel very proud yourself, as this will be a boon for many of us, to know the essence of Life & the living Legend, with your excellent way of writing.
You are fortunate & blessed , to get an opportunity to interview & be with this great personality. I can imagine those astonishing moments you had with him.
Wishing you sincerely to reach still more milestones in your life!
Am eagerly looking forward the series…….Well done & Keep Going!!
————————————–
Thank you very much Mr.Rishi for your compliments and encouragement.
When we follow our conscience and ALMIGHTY’s wish there’s nothing to feel dejected.
Let’s do our duty silently and patiently and GOD will take care the res(ul)t.
– Sundar
சுந்தர்ஜி
ஐயா அவர்கள் போல் உள்ளவர்களால் தான் நாம் இன்றும் நன்றாக உள்ளோம். ஐயா அவர்களை முன்பு ஒரு சந்தர்பத்தில் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது.
நாமும் பல நல் விஷயங்களை செய்வோம்.
இப்படிப்பட்ட மனிதரைபற்றி (பொதுவாக) இது வரை தெரிந்துகொள்ளாமல் போனது என்னுடைய துரதிர்ஷ்டம்…..
.
சாதனையாளர்கள் என்பவர்கள் ஏதோ புகழ் வெளிச்சத்தில் மட்டும் இருப்பவர்கள் அல்ல என்று இன்று தெரிந்துகொண்டேன்.
.
அந்தவகையில் இவரை பற்றி தெரிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பை அளித்த நம் தளத்திற்கு நன்றி….
.
ஏதோ ஒரு குற்ற உணரர்வு நம்மில் எழுவதை தவிர்க்கமுடியவில்லை…..
Dear Sundar,
Thanks a lot for this post. Hope u remember my request.. Thank you very much Bro. U r gr8
ஜி, நீங்கள் இவரை சந்தித்துள்ளீர்கள் எனும் விஷயம் அபாரமான மன நிறைவை ஏற்படுத்துகிறது. ஏனெனில் நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டும் என்று எண்ணியிருக்கும் மனிதர்களில் இவரும் ஒருவர். காந்தி தளத்திற்காக அவரிடம் விரிவாக பேச வேண்டும் என்றொரு திட்டமுண்டு. நீங்கள் கையில் வைத்திருக்கும் புத்தகம் பற்றிய தகவல்களை தர இயலுமா? இந்த கட்டுரைகள் விரிவான வாழ்வியல் ஆவணம், இதன் முக்கியத்துவம் இன்னும் பல ஆண்டுகளுக்கு பின்னால் தான் தெரியவரும்..மிக முக்கியமான பணியில் ஈடுபட்டு இருக்குறீர்கள் வாழ்த்துக்கள் ஜி..
-dr suneel
http://www.gandhitoday.in
மிக்க நன்றி ,இந்த பதிவு எப்போது வரும் என்று காத்து இருந்தேன் …….
இடை வெளி இன்றி பதிவிடவும்
LOT OF நன்றி
இவர்தான் மனிதர்… உடம்பு சிலிர்கிறது..
-ஜி.உதய்..
Thanks for presenting us with most valuable conversation.
Infact thanks for all of your articles in rightmantra.
Let me be frank, when you said you are going to start a new site for spirituality and self development, I was a bit skeptical about the topics that would be covered, and whether it would be as interesting as your OSS website. But you are proving me wrong day by day.
Spanning across all possible areas, with most informative information and acute presentation skills, your effot is laudable. Congrats Sundar.
Even I have posted a few blogs, poems, in our internal site sometime back. If I don’t get the response I expected, I won’t get motivation to post more. But I guess your way of looking things is different. You didn’t worried about anything. All you concentrated was: what next.
The fact that you are also a salaried employee like most of us, really makes us to think, why we are complaining about non availability of time.
Enaku thalaivar padathula vara dialogue thaan gnabagam varudhu : “Rathathilayum, Sadayilayum veri irukira oruthar naalathaan ida seya mudiyum”
————————————————
Somesh….
the logic is simple.
Naan jeyikkanum. jeyichchae aagaanum. I have no other thing in my mind than this.
– Sundar
சுயநலவாதிகளுக்கு நடுவில் வாழும் தெய்வம் இவர். இவரை சந்திக்கவே பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும். அனைவருக்கும் இந்த பாக்கியம் கிடைப்பதில்லையே. உண்மையிலேயே நீங்கள் பெரும் பாக்கியசாலி தான்.
நன்றி நான் ஏற்கணவ கொஞ்சம் தெரிந்த விஷயத்தை சொல்லியிருக்கிறீர்கள். அதனால் மேற்கொண்டு விபரம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் .நான் முதன் முறையாக தமிழில் டைப் செய்கிறேன் அதனால் உங்களை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறேன் .என்னுடை பேர் பாரதிதாசன்
———————————-
நன்றி திரு.பாரதிதாசன். தொடர்ந்து வருகை தந்து தங்கள் நல்லாதரவை தாருங்கள்.
பாலம் ஐயாவை பற்றி விரிவான பதிவுகள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன. சற்று பொறுங்கள்.
என்னை பற்றய விபரங்களுக்கு இந்த லின்க்கை செக் செய்யவும்….
http://rightmantra.com/?page_id=244
– சுந்தர்
வாழ்க்கை பற்றி விரிவான ஒரு புரிதல் தேவைபடுது அதற்காக ஒவ் ருவரும் சிந்திக்ரார்கள் .ஆனால் அய்யா சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள் .இது மனித வாழ்க்கையில் ஒரு பகுதி ஆகும் .இதுபோல் அதீக மனிதர்கள் பூமியில் வாழ்ந்து வருகிறர்கள் .ஆனால் அவர்கள் தெரிவதுயில்லை.நாமும் கூட வாழ முயற்சி பண்ணலாம் . .
வணக்கம்
இன்று வலைச்சரத்தில் தங்களது சிறப்பான பணியை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
( http://blogintamil.blogspot.in/2013/08/6_31.html
வாழ்க வளர்க
அன்புடன்
கபீரன்பன்
நன்றி கபீரன்பன் அவர்களே.
தங்கள் முயற்சி அருமை. தங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.
– சுந்தர்
விழுமியத்தின் வித்தகனே…!
வணக்கம். வாழ்த்துக்கள்.
இந்த வயதில் இத்தனை பொறுப்போடும், பொதுவாழ்வில்
முனைப்போடும், ரைட்மந்த்ரா வலைதளத்தில் நீங்கள் நடாத்தும்
வேள்வியின் வெளிச்சத்தில் மெய்சிலிர்க்கிறேன்.
எங்கள் செல்லம் சூரியா, ரைட்மந்த்ராவை எனக்கு
அறிமுகம் செய்ததனால், உங்கள் மேன்மையும் மேதினி மெச்சும்
பாண்மையும் அறிந்து, புனிதங்களைப் போற்றிப் புகழாரம் சூட்டுகிறேன்.
மேலோட்டமாய் வாசித்தபோதே உங்கள் நேர்த்தியும் கீர்த்தியும் வசீகரிக்கின்றன.
விநோதங்களின் வேடந்தாங்கலாய், நல்லோர்களின் நன்னம்பிக்கை முனையாய், தவிப்போர் மனதுக்குத் தாய்மடியாய், இருக்கின்ற சுந்தரின் வாழ்க்கை மற்றவர்களுக்கு வாழ்த்தாகட்டும்.