Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, September 14, 2024
Please specify the group
Home > Featured > திருடனிடம் கொடுக்கப்பட்ட சாவி — MONDAY MORNING SPL 68

திருடனிடம் கொடுக்கப்பட்ட சாவி — MONDAY MORNING SPL 68

print
ரு உதவி நீங்கள் செய்ய முன்வந்தால் பலனடைவோரின் தகுதி, நேர்மை ஆகியவை பற்றி கவலைப்படவேண்டாம். உங்கள் ஊக்கமும் உற்சாகமும் பாராட்டும் அவர்கள் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கையும் அவர்களை மாற்றி பணியை நிச்சயம் சிறக்கச் செய்யும்.

நெல்லுக்கு இறைக்கும் நீர் சில சமயம் புல்லுக்கும் போகும். அது இயற்கை. அதை நம்மால் தவிர்க்க இயலாது. அதற்காக நீர் இறைப்பதை நிறுத்த முடியுமா? நீங்கள் சற்று விழிப்புடன் இருந்தால் போதும். காலப்போக்கில் நெல்லுக்கு மட்டுமே நீர் இறைக்கும் பக்குவம் உங்களுக்கு வந்துவிடும்.

பாக்கு விற்பவனைக் கூட ஊக்குவித்தால் தேக்கு விற்பான். தேக்கு விற்பவனை ஊக்குவித்தால் தங்கம் விற்பான். ஆக, இன்று உலகிற்கு தேவை ஊக்குவிப்பவர்களும் நம்பிக்கையளிப்பவர்களும் தான். குற்றம் குறை கண்டுபிடிப்பவர்கள் அல்ல. அவர்கள் ஏற்கனவே நிறைய இருக்கிறார்கள். நாம் அந்தப் பட்டியலில் இணையவேண்டாமே.

சென்ற பதிவில் நாம் கூறிய வரிகள் இவை. இது பற்றி ஒரு உதாரணத்துடன் விளக்குவதாக கூறியிருந்தோம்.

This looks great even if I say so myself.

திருடனிடம் கொடுக்கப்பட்ட சாவி செய்த அற்புதம்!

நாம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது நடந்த ஒரு நிகழ்வு இது. எங்கள் பள்ளியில் வகுப்பறையில் சக மாணவர்களுடன் பேசினால் தண்டனை உண்டு. ஆசிரியர் வகுப்பறையில் இல்லாத போது மாணவர்களின் சத்தம் சற்று அதிகமாக இருக்கும். 2000 மாணவர்கள் மேல் படிக்கும் ஒரு பள்ளியில் மாணவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தால் என்ன ஆவது? எனவே பேசுவோர் பெயரை பள்ளியின் கரும்பலகையில் எங்கள் கிளாஸ் லீடர் எழுதி வைத்துவிடுவான். ஆசிரியர் வந்ததும் அவர்களுக்கு பிரம்படி கிடைக்கும். எங்கள் அறிவியல் ஆசிரியர் (அவர் தான் எங்கள் வகுப்பாசிரியர்) சற்று மென்மையான சுபாவம் கொண்டவர் என்பதால் அவர் வகுப்பில் மட்டும் மாணவர்கள் சத்தம் அதிகம் இருக்கும். “உங்கள் வகுப்பு மாணவர்கள் மட்டும் அதிக சத்தம் போடுகிறார்கள். ஆசிரியர் இல்லாத நேரம் ஆட்டம் பாட்டம் என ரகளை செய்கிறார்கள். கொஞ்சம் கண்டித்து வையுங்கள்” என்று சக ஆசிரியர்கள் அவரிடம் புகார் கூறுவது வழக்கம். இது ஒரு நாள் தலைமை ஆசிரியர் வரை சென்று அவர் ஆசிரியரை கூப்பிட்டு கண்டிக்கவேண்டியதாகிவிட்டது.

பிரச்னையின் ஆணி வேர் என்னவென்றால், எங்கள் வகுப்பில் இருந்த கடைசி பெஞ்ச் மாணவன் ஒருவன் தான். அவன் அண்ணன் ஒரு பெரிய ரௌடி. அடிக்கடி உள்ளே, வெளியே என போய் வரும் கேஸ். தன் அண்ணன் பெரிய ரௌடி என்பதால் ஆசிரியர்களின் அடிக்கெல்லாம் பயப்படாத அவன் தம்பி, தன்னுடன் சில மாணவர்களை வகுப்பறையில் சேர்த்துக்கொண்டு ஓயாமல் அட்டகாசம் செய்வான். அவனை கண்டிக்க எந்த மாணவனுக்கும் தைரியம் இருக்காது. ஆசிரியருக்கும் தைரியம் இருக்காது.

இவனை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்று யோசித்த எங்கள் ஆசிரியர், ஒரு நாள் அவனை கூப்பிட்டு, “இன்று முதல் நீ தான் கிளாஸ் லீடர். வகுப்பறையை அமைதியாக வைத்திருக்க வேண்டியது உன் பொறுப்பு. தவிர அனைவரும் ஒழுங்காக யூனிபார்ம், போட்டு வருகிறார்களா, ஹோம் வொர்க் செய்துகொண்டு வருகிறார்களா என்றும் கண்காணித்து எனக்கு தினசரி ரிப்போர்ட் கொடு!!” என்று அவனிடம் மிகப் பெரிய பொறுப்பை கொடுத்துவிட்டார்.

கிளாஸ் லீடர் என்றால் அது ஒரு தனி கெத்து என்பதால் அவனும் ஒப்புக்கொண்டுவிட்டான்.

தனக்கு முன்னாலும் பின்னாலும் “நீ உருப்படமாட்டே… நீ நாசமாத் தான் போவே…” போன்ற வார்த்தைகளை கேட்டே பழக்கப்பட்ட அவனுக்கு தன்னையும் மதித்து இப்படி ஒரு பொறுப்பை கொடுக்கிறாரே நம் ஆசிரியர் என்று தோன்றியதோ என்னவோ, தனது திறமையை உபயோகித்து வகுப்பறையை வழிக்கு கொண்டு வந்துவிட்டான். அவன் லீடராக பொறுப்பேற்றது முதல் அவன் மீதிருந்த அச்சம் காரணமாக வகுப்பில் ஒரு ஒழுங்கு நிலவியது.

சில சமயம் காவல் காக்கும் பொறுப்பை திருடனிடமே ஒப்படைக்கும்போது பொருள் பத்திரமாக இருக்கும். அதுபோலத் தான் இது.

இதில் என்ன ஆச்சரியம் என்றால், அந்த மாணவனுக்கு கொஞ்ச கொஞ்சமாக படிப்பு மீது கவனம் ஏற்பட்டு, கவனம் வெறியாக மாறி, கடைசியில் அனைவரும் மூக்கில் விரல் வைக்கும் விதமாக அவன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 465 மார்க்குகள் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவனாக வந்தான். எங்கள் பள்ளியின் ROLL OF HONOUR பட்டியலில் இன்றும் அவன் பெயர் இடம்பெற்றிருக்கும். தற்போது அவன் எம்.பி.பி.எஸ்., எம்.டி. முடித்து ஒரு மருத்துவராக இருப்பதாக கேள்விப்பட்டோம்.

மேற்கூறிய அனுபவம் நிச்சயம் உங்கள் பள்ளி வாழ்க்கையிலும் சிலருக்கு ஏற்பட்டிருக்கும்.

ஒருவரை நம்பித் தான் ஆகவேண்டும் வேறு வழியில்லை நமக்கு என்ற சூழல் வரும்போது நம்புங்கள். மனப்பூர்வமாக நம்புங்கள். உங்கள் நம்பிக்கை வீண்போகாது. பலநேரங்களில் நம்பிக்கை தான் வாழ்க்கை.

DONT COMPLAINஇதை எதற்கு கூறுகிறோம் என்றால், பிறரை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தால் அதற்கு முடிவே கிடையாது. சந்தேகத்திற்கு பதில் நம்பிக்கையை விதையுங்கள். பன்மடங்கு அறுவடை செய்வீர்கள். நம்பிக் கெட்டவர்களை விட நம்பாமல் கெட்டவர்களே உலகில் அதிகம்.

சிலருக்கு யாரையவாது எதற்காகவும் புகார் கூறிக்கொண்டே இருக்கவேண்டும். அப்போது தான் அவர்களுக்கு அன்றைய நாளே கழியும். அப்படிப்பட்டவர்கள் ஒரு நாள் யாரையும் எதற்காகவும் புகார் கூறாமல் வாழ்ந்து பாருங்கள். அப்போது உணர்ந்துகொள்வீர்கள் உங்கள் வாழ்க்கை அற்புதமாக மாறுவதை.

நாம் ஏற்கனவே பல முறை கூறியிருக்கிறோம். நாம் (ரைட்மந்த்ரா குடும்பத்தினர்) அனைவரும் மகிழ்ச்சியின் அலைகளை பரப்ப வந்தவர்கள். புகார் கூறிக்கொண்டிருக்க அல்ல. அதை மறக்கவேண்டாம்.

11 thoughts on “திருடனிடம் கொடுக்கப்பட்ட சாவி — MONDAY MORNING SPL 68

  1. As usual, monday morning ஸ்பெஷல் simply superb

    // நம்பிக் கெட்டவர்களை விட நம்பாமல் கெட்டவர்களே உலகில் அதிகம்.//

    அடுத்தவர்களை பற்றி புகார் கூறிக் கொண்டு நம் வளர்ச்சியை நாம் கெடுத்துக்கொள்ள வேண்டாம்.

    நம் ரைட் மந்த்ரா வாசகர்கள் வெற்றிப் பாதையை நோக்கி முன்னேறுவோம்

    எல்லோருக்கும் இந்த வாரம் இனிய வாரமாக அமைய வாழ்த்துக்கள்

    நன்றி
    உமா

  2. அருமையான மற்றும் உற்சாகமான பதிவு.
    தேவையான பதிவு.
    பொறுப்புகள் நமக்கு தரப் படும் போது நமக்கே தெரியாமல் நமது திறமைகள் வெளிப்படும்.
    மற்றவரை குறை சொல்வதை முற்றிலுமாக விட்டு விட வேண்டும்.
    “சுடர் விளக்காயினும் தூண்டு கோல் வேண்டும்”
    பிரகாசமான ஒளியை தரும் விளக்கிட்கே தூண்டு கோல் எனும் போது, நமது மனதிற்கு பாராட்டு மிக மிக அவசியம்.
    அல்லவைகளை விட்டு விட்டு நல்லவைகளை மனதார பாராட்டுவோம்.

  3. சுந்தர்ஜி,
    As usual, monday morning special simply super.
    Have a good start of this week.

    S.Narayanan.

  4. Very nice…

    What we think about the most or focus on the most will appear as our life. Our thoughts become things. So, let us focus on good things, appreciate and be grateful for what God has given us.

    Om Nama Sivaya

  5. Hello Sundar Sir,

    I feel very honest to say that I had similar thoughts till I read this article. I usually think twice or thrice and even more before giving something to someone. Though, 90% of my mind insist me to help someone whom i see, 10 % of my mind will regret and think that whether they deserve.

    This post cleared my doubts. Thank you so much for the true inspirational message.

    Thanks,
    Divya

    1. Thanks for sharing your thoughts.

      There is no error-free place in this world. Rather than discarding our intention to help we should try to rectify that with our approach. But this very challenging where one can attain by continuous experience only.

      – Sundar

  6. நம்பிக் கெட்டவர்களை விட நம்பாமல் கெட்டவர்களே உலகில் அதிகம்.

    – சும்மா நச்சின்னு இருக்கு .

    பாராட்டுகளுடன்
    -மனோகர்

  7. Dear sir,

    The article teaches good moral and lesson. Though this has been already conveyed by lord krishna in mahabarath while asking duryodana to search for good people and to dharmar to search for bad people and the result is known to all. It is obvious how we approach each individual with our inner heart matters for any outcome.

    S.CHANDRA MOULI.

  8. அருமையான பதிவு…………நன்றிகள் பல………..டிசம்பர் 14 அன்று குட்டி விநாயகரை சந்திக்க ஆவலாக உள்ளோம்………..

  9. அனைவரும் மகிழ்ச்சியின் அலைகளை பரப்ப வந்தவர்கள். புகார் கூறிக்கொண்டிருக்க அல்ல –

    அற்புதமான வார்த்தைகள்.

    நன்றி
    ப.சங்கரநாராயணன்

  10. அற்புதமான கட்டுரை. நம் பக்கம் இருக்கும் நியாயத்தை மட்டுமே பார்த்து அடுத்தவர்களை எடை போடா கூடாது. நமக்கு தெரியாமலே எத்தனையோ கலைகள் மற்றவர்களிடம் பொதிந்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *