பார்வை ஒன்றே பரம ஒளஷதம் !
என் நாத்தனார் பிள்ளைக்கு திடீரென்று கழுத்தில் ஒரு வீக்கம். வலி என்றால் அப்படி ஒரு வலி.
‘கழுத்து நரம்பில் பெரிய ப்ராப்ளம். உடனே மேஜர் ஆப்பரேஷன் செய்யனும்’ என்று சொல்லிவிட்டார்கள் டாக்டர்கள்.
என் நாத்தனாருக்கு வயிற்றை கலக்கியது. பணச் செலவு, ஆஸ்பத்திரி வாசம் என்பது ஒரு புறமிருக்க டாக்டர்களின் பேச்சு உற்சாகமளிப்பதாக இல்லை.
‘மன்னிக்கு காஞ்சி பெரியவாவிடம் நல்ல பக்தி உண்டே… அடிக்கடி ஓடிப்போய் சேவித்து விட்டு வருவாள். அவரிடம் என்ன தெய்வீக சக்தி இருக்கோ தெரியவில்லை. நாமும் போய் பார்த்துவிட்டு வருவோமே!”
அவர்கள் காஞ்சிபுரம் சென்ற நாளில் பெரியவா காஷ்டமௌனம். இவர்கள் சொன்னதை கேட்டுக்கொண்டார்கள். மௌனமாயிற்றே. பதில் ஏதும் சொல்லவில்லை. தன் கழுத்தை தடவிக்கொண்டே உள்ளே போய்விட்டாராம்.
என் நாத்தனாருக்கு மிகவும் ஏமாற்றம். ‘பெரியவாளைப் பற்றி கூடை கூடையாக சொல்வாளே மன்னி… இப்படி ஜாடை கூட காட்டாமல் போய்விட்டாரே..’ என்கிற ஏக்கம்.
நாளைக்கு ஆப்பரேஷன்.
“தொண்டை என்னவோ போலிருக்கு, அம்மா….” என்று பையன் சொன்னதை கேட்டவுடன் என் நாத்தனார் கதிகலங்கிப் போய்விட்டார்.
“கண்ணா… கண்ணா…. என்னடா ஆச்சு….?”
வாந்தி ஆச்சு!
தேங்காய் ஓட்டின் ஒரு சில்லு வெளியே வந்து விழுந்தது. பையன் நிம்மதியாக ‘சரியா போச்சு!’ என்றான்.
மறுநாள் குறித்த நேரத்தில் ஆஸ்பத்திரி போனார்கள்.
டாக்டர் பையனின் கழுத்தில் கையை வைத்து அழுத்தினார்.
“வலிக்கிறதா?”
“இல்லை!”
“ஆப்பரேஷன் தேவையில்லை….”
என் நாத்தனாருக்கு உடலில் புல்லரித்தது.
பெரியவாவின் தீவிர பக்த குடும்பங்களில் ஒன்று அதிகரித்தது.
நன்றி : மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள் | ஸ்ரீ குரு பாதுகா சரணம் – கே.ஜெயலக்ஷ்மி அம்மாள், செங்கற்பட்டு
தட்டச்சு : www.rightmantra.com
=================================================================
நம் தள வாசகர் & நண்பர் ஒருவரின் ஏழு வயது மகளுக்கு தொண்டையில் ஏதோ பிரச்னை. பயப்படுவதற்கு எதுவும் இல்லை, சிகிச்சையில் குணப்படுத்திவிடலாம் என்றாலும் பெற்றோர்களுக்கே உரிய பதைபதைப்பு கணவன்-மனைவி இருவரிடமும் இருந்தது. நம்மிடம் நேற்று முன்தினம் அதைப் பற்றி சொல்லி வருத்தப்பட்டார்கள். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கவேண்டியே இந்த பதிவை அளிக்கிறோம். இன்று குருவாரம் என்பதால் பெரியவா தொடர்பான பதிவை அளிக்க நினைத்தபோது, இந்த சம்பவம் கண்ணில் பட்டது. தட்டச்சு செய்து அளித்துள்ளோம்.
இருவினை தீர்க்கும் குருவின் பெருமை !
குருவின் பெருமையை, கேட்பவர்கள், படிப்பவர்கள், பகிர்கிறவர்கள் அனைவரும் பாக்கியசாலிகளே!
=================================================================
குறிப்பு : ‘ஸ்ரீ ராகவேந்திர தரிசனம்’ தொடர் அடுத்த வாரம் முதல் தொடர்ந்து இடம்பெறும்….
=================================================================
Also check from our archives…
கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)
குரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)
மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)
“ஏம்பா! உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பெரியவா சேவை தானா?” – குரு தரிசனம் (14)
வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!
வாழைப்பழத்துக்கு பதில் மகா பெரியவா கொடுத்த நெற்பொரி. ஏன்? எங்கு? – குரு தரிசனம் (13)
“கடமைக்கே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது?” – குரு தரிசனம் (12)
காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)
குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….
http://rightmantra.com/?cat=126
=================================================================
Also check :
Articles about Sri Ragavendhra Swamigal in Rightmantra.com
முதல் மாணவன், முதல் வேலை, முதல் சம்பளம்…!! – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (6)
புதுவை பிருந்தாவனத்தில் காட்சி தந்த ராகவேந்திரர் – உண்மை சம்பவம் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (5)
பட்ட மரம் துளிர்த்தது; வேத சக்தி புரிந்தது – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 4
கேட்பதை தருவார், கேட்டதும் தருவார் குருராஜர் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 3
“அழைத்தால் போதும் அடுத்த கணமே நினைத்தது நடக்கும்!” – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 2
திருவருளும் குருவருளும் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (1)
குருராஜர் இருக்க கவலை எதற்கு? நெகிழ்ச்சியூட்டும் நிஜ அனுபவங்கள்!
நம் தளத்திற்கு கிடைத்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பரிபூரண ஆசி! எங்கே… எப்படி?
ஆங்கில கவர்னருக்கு ராகவேந்திரர் காட்சியளித்த அற்புதம் – கஜெட் ஆதாரத்துடன்!
உச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது!
இறைவா… பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்!
எது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம்
முக்காலமும் நீ அறிவாய் குருராஜா – நம் தள வாசகரிடம் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதம்!
=================================================================
[END]
குருநாதா சரணம்………………..
இருவினை தீர்க்கும் குருவின் பெருமை
பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா? என்பது போல பெரியவா அவர்களின் பார்வையாலே தீர்வு சொன்ன அற்புத நிகழ்ச்சி பற்றி எங்களிடம் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு எங்கள் நன்றிகள்.
அதே போல நம் நண்பர் மகளுக்கும் எந்தவித பிரச்னையும் இல்லாமல் தொண்டை சரியாகும்.
பெரியவா அவர்களின் படம் எதுபார்தலும் மனதில் அமைதி நிலவுகிறது.
நன்றி.
தாங்கள் மீண்டு(ம்) வந்தமைக்கு மகிழ்ச்சி.
– சுந்தர்
குருவின் பெருமையை படித்துக்கொண்டே இருக்கலாம். இப்போது பெரியவா நம்மிடையே இல்லையே என்கிற ஏக்கம் தான் ஏற்படுகிறது.
பெரியவா தமிழகத்தில் நடமாடும் காலத்தில் அவரை பற்றியோ அவரது அருமைகளை பற்றியோ எங்களுக்கெல்லாம் தெரியாமல் போனது துரதிர்ஷ்டம் தான்.
பரிமளம் அவர்களை மீண்டும் பின்னூட்டத்தில் பார்ப்பதில் மகிழ்ச்சி.
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்
அந்த கருணைக் கடலின் அற்புதங்களுக்கு ஈடு இணை ஏது.
– வெங்கட்.
குருவே சரணம்
சுந்தர்ஜி
குரு தரிசனத்தில் இன்று எனக்கும் ஒரு வரபிரசாதம். நானும் அடிக்கடி இரவு நேர தொண்டை கரகரப்பு பிரச்சனையால் அவதிப்பட்டு இன்று தான் வலையில்(நெட்டில் ) ஏதேனும் தீர்வு இருக்குமா எனத் தேடினேன். தொண்டை கரகரப்பு வந்து விட்டால் ஒருவித அரிப்பினால் நான் சத்தம் செய்வேன். இதனால் என் தூக்கமும் பாதித்து அருகில் இருப்பவரையும் பாதிக்கும் . நம் தளத்தில் எனக்கும் தீர்வு கிடைத்து விட்டது என நம்புகிறேன். நன்றி. திருமதி பரிமளம் அவர்களின் வருகையால் மிக்க மகிழ்கிறேன்! எல்லாம் பெரியவா பார்த்துப்பா!! ஹர ஹர சங்கர! ஜெய ஜெய சங்கர! சிவ சிவ சங்கர!!
மகா பெரியவாவின் கருணை அளவற்றது …
ஓம் மகா பெரியவா சரணம்
மிகவும் அருமையான பதிவு
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர
Harish. வ
குருவே சரணம்
திருமதி பரிமளம் அவர்கள் மீண்டும் நம் தளத் தில் பார்பதற்கு மிக்க magilchi.
நன்றி
உமா
மஹா பெரியவரின் கருணையோ கருணை, நம்பிக்கையோடு வழிபட்டால் மஹா பெரியவர் நம்மை என்றும் காப்பர். ஓம் மஹா பெரியவா சரணம் சரணம்.
சுந்தர்ஜி
அன்பு சகோதரி பரிமளம் அவர்கள் மீண்டும் நம் தளத் தில் பார்பதற்கு மிக மகிழ்ச்சி மஹா பெரியவா என்றும் நம் துணை நிற்பார்.
மஹா பெரியவா அவர்கள் ஆசி எல்லோர்க்கும் உண்டு.