Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, September 14, 2024
Please specify the group
Home > Featured > இழந்த வாழ்க்கையை மீட்டுத் தந்த ‘வேல்மாறல்’ — யாமிருக்க பயமேன்? (Part 3)

இழந்த வாழ்க்கையை மீட்டுத் தந்த ‘வேல்மாறல்’ — யாமிருக்க பயமேன்? (Part 3)

print
ன்று கந்தசஷ்டி நிறைவு நாள். சூரசம்ஹாரம். வந்தவாசியை சேர்ந்த திரு.வெங்கடரமணன் என்பவரின் வாழ்க்கையில் வேல்மாறல் செய்த அற்புதங்களை பார்ப்போம். வந்தவாசியை அடுத்த ஒரு சிற்றூரில் திரு.வெங்கடரமணன் என்பவர் ஒரு மத்திய அரசு ஊழியராக பணிபுரிந்து கொண்டிருந்தார்.

1977-ம் வருடம் அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய புயல் வீசியது. செய்யாத குற்றதிற்காக அவர் பணியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார்.  அப்போது அவருக்கு மூன்று மகள்கள் சிறு சிறு குழந்தைகளாக இருந்தனர்.  தான் செய்யாத குற்றதிற்காக தண்டனை அளிக்கப்பட்டதை எண்ணி நாளெல்லாம் வருந்தினார். ஆன்மீகத்திலோ இறைவழிபாட்டிலோ இதனால் ஈடுபாடு குறைந்திருந்தது.  அவருடன் அவர்தம் மனைவி மற்றும் குழந்தைகளும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருந்ததை எண்ணி மிகுந்த துயரம் அடைந்தார்.  எந்த ஒரு வருமானமும் இன்றி, “எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்” என்ற மன நிலையில் இருந்தார். பல மாதங்கள் இப்படியே சென்றன.

2ஆம் நாள் அலங்காரம் - தந்தைக்கு பிரணவமந்திரம் உபதேசிக்கும் சுவாமிநாதன் அலங்காரம்
2ஆம் நாள் அலங்காரம் – தந்தைக்கு பிரணவமந்திரம் உபதேசிக்கும் சுவாமிநாதன் அலங்காரம்

அப்போது தன் உறவினர்கள் மூலம் அருட்கவி சாதுராம் சுவாமிகள் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் வயலூர் எனும் சிற்றூரில் இருப்பதை அறிந்தார்.  அவரைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றார். சாதுராம் சுவாமிகள் அப்போது அவ்வூரில் உள்ள குன்றின் மீது அமைந்துள்ள முருகப் பெருமானின் சன்னதியில் இருந்தார்.  இவரின் கோலத்தைக் கண்டு விவரங்களை அறிந்து கொண்ட சாதுராம் சுவாமிகள், திரு.வெங்கடரமணன் அவரின் கஷ்டங்களைக் களையும் பொருட்டு, வேல்மாறலைப் பற்றி எடுத்துக் கூறி, அப்பாராயணத்தை மிகுந்த பக்திச் சிரத்தையுடன் செய்யுமாறு கூறினார்.  ‘வேல்மாறல்’ பாராயணம் ஆரம்பித்ததுடன் கொஞ்சம் கொஞ்சமாக தான் கற்றுத் தேர்ந்த சோதிடக் கலை மூலம் சிறு சிறு வருமானங்களைப் பெற்றார். அவரும் நாள்தோறும் விடாமல் வேல்மாறலைப் பாராயணம்செய்து வந்தார்.  சில மாதங்களிலேயே அவர் அரசு வேலை அவரை மீண்டும் தேடி வந்தது.  அது மட்டுமின்றி, அவர் எந்த தவறும் இழைக்கவில்லை என்றும்  அவரின் பணி இடை நீக்கமே தவறானது என்றும் நிரூபணமாகியது.  இடையில் ஏற்பட்ட பணி நீக்கத்தால், அவரின் சர்வஸீக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் அந்த முருகப் பெருமான் அவரை ஆட்கொண்டார்.

அவர் தற்போது பணி ஓய்வு பெற்று, 3 பெண் குழந்தைகளுக்கும் மணம் முடித்து, தன் மனைவி, மகள்கள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக உள்ளார்.

அதுமட்டுமல்ல, தற்போது 70வது வயதிற்கு மேலாகும் திரு.வெங்கடரமணன் வாராஹி உபாசராகவும், மிகச் சிறந்த ஜோதிட நிபுணராகவும் விளங்குகிறார்.  தம்மை நாடி வரும் அனைவருக்கும் ஜோதிடக்கலை மூலமாக அவரவரின் இன்னல்களுக்கு ஏற்ப, பரிகாரங்களைச் சொல்லி அவர்களின் வாழ்க்கையில் வசந்தத்தை வீச செய்கிறார்.

Swaminathan Alangaram 2

முடிந்துவிட்டது என்று கருதப்பட்டவரின் வாழ்க்கையை மீண்டும் புதிப்பித்து அவர் இழந்த பணியையும் அவருக்கு மீண்டும் கொடுத்து, அவரது குடும்ப கடமைகளை செவ்வனே நிறைவேற்றச் செய்து, இன்று பேரக்குழந்தைகளோடு விளையாடிக்கொண்டிருக்கும் பாக்கியத்தை தந்தது யார்?

முருகன் திருக்கை வேலின் புகழ் பாடும் ‘வேல்மாறல்’ என்னும் மகாமந்த்ரமே ஆகும்!

செங்கேழ் அடுத்த சின வடி வேலும் திரு முகமும்
பங்கே நிரைத்த நற் பன்னிரு தோளும் பதும மலர்க்
கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன் என
எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் நிற்பனே!

ஆம்… எங்கே நினைத்தாலும் அங்கே வந்து எதிர்நிற்பான் நம் முருகன். நாம் தான் அவனை பார்க்க மறுக்கிறோம்!

==============================================================

அடுத்து…

* துயரமென்னும் வெள்ளம் – தேடி வந்த வேல்மாறல் – நம் வாசகருக்கு நிகழ்ந்த அனுபவம்!

* யார் இந்த திருப்புகழ் சகோதரர்கள் ?

* திரு.சாதுராம் ஸ்வாமிகள் என்பவர் யார் ?

அடுத்த பாகத்தில் விரிவாக…. to be continued in Part 4

==============================================================

Also check :

வினைகளை தகர்க்கும் ‘வேல்மாறல்’ எனும் மஹாமந்த்ரம் — யாமிருக்க பயமேன்? (Part 2)

வேல் தீர்க்காத வினை உண்டா? உண்மை சம்பவம்! — யாமிருக்க பயமேன்? (Part 1)

உன்னை தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்!

முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!

சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!

முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

கருவறையில் மட்டுமா இருக்கிறான் கந்தன் ? தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 2

ஏற்பது இங்கே இகழ்ச்சியல்ல!

நல்லதை நினைத்தால் போதும்… நடத்திக்கொள்ள ஆண்டவன் தயார்!

கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1

தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!

ஏழை திருமணத்துக்கு உதவிய வள்ளல் & வாரியாரின் வாழ்வும் வாக்கும் – தமிழ் புத்தாண்டு SPL & வீடியோ!

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

==============================================================

[END]

6 thoughts on “இழந்த வாழ்க்கையை மீட்டுத் தந்த ‘வேல்மாறல்’ — யாமிருக்க பயமேன்? (Part 3)

  1. சஷ்டியில் வேல் மாறல் அற்புதங்களின் தொடர் மிகவும் அருமை . மிக்க நன்றி சார்..

  2. மிகவும் அற்புதமான பதிவு. நம் தளம் மூலம் வேல் மாறல் சுலோகம் பற்றி அறிந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி. இன்னும் பல அறிய ஸ்லோகங்களை நம் தளம் மூலம் அறிய ஆவலாக உள்ளோம்.

    திருச்செந்தூர் முருகன் துணை. முருகன் அனைவருக்கும் நீண்ட ஆயுளையும் , மற்ற அனைத்து செல்வங்களையும் கொடுக்கட்டும்

    அனைவரது கோரிக்கையும் நிறைவேற வாழ்த்துக்கள்

    நன்றி

    உமா

  3. ஆம், எங்கே நினைத்தாலும் அங்கே வந்து எதிர்நிற்பான் நம் முருகன்.

    முருகன் ஸ்லோகம் வேண்டும் என்று நினைத்த அடுத்த நாள் உங்கள் பதிவு கண்டு, அதற்கு அடுத்த நாள் வேல்மாறல் மஹா மந்திரம் கிடைக்கப்பெற்று (thanks to internet), அடுத்த நாள் வேல்மாறல் புத்தகம் கையில்.

    ஓம் நம சிவாய

  4. அற்புதம் நிறைந்த பதிவு
    சண்முகா சரணம் முருகா சரணம்

  5. சுந்தர்ஜி,

    இந்த அற்புதமான நன்னாளில் வேல் மாறன் சுலோகம் கிடைக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
    அனைவரும் இந்த பதிகத்தை பாராயணம் செய்து முருகன் அருள் பெறுவோம். வாழ்கையில் பிரச்சினை இல்லாதவர்கள் எவரும் இல்லை.

    நன்றி

  6. Sir
    After reading this article i searched net for ‘VelmAral’ manthiram. I found one article posted by Karthikeyan Sir in siththanarul.blogspot.in with mp3 and pdf links of the manthiram.

    Yesterday I bought SakthiVikatan the current editon. In that they said that in the next edition of sakthi vikatan ‘VelmAral’ manthiram will be coming as an 32 page add on supplementary. I hope because of this ‘VelmAral’ manthiram is going to reach more people.

    This is the first time i am posting comment, if anything hurt i apologize.

    Regards
    A.Kannan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *