திருச்சி சென்றால் மலைக்கோட்டைக்கு செல்லாதவர்கள் அரிதினும் அரிது. மலைகோட்டையின் மீதிருந்து பார்த்தால் ஒட்டுமொத்த திருச்சியின் அழகையும் அதன் பசுமையையும் ரசிக்கலாம்.
சென்னையிலும் அதே போன்று ஒரு மலைக்கோட்டை இருக்கிறது தெரியுமா?
சென்னையில் உள்ள பல்லாவரம் அருகே அமைந்துள்ள அருமையான மலைக்கோவிலான திருநீர்மலை தான் அது. திருநீர்மலை என்றால் பலர் ஏதோ சைவத் திருத்தலம் அல்லது முருகனின் திருத்தலம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட அதி அற்புதமான வைணவத் திருத்தலம். 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் 91 வதாக வருவது திருநீர்மலை.
சுவாமியின் பெயர் நீர்வண்ணபெருமாள். தாயாரின் பெயர் அணிமாமலர்மங்கை. (என்ன ஒரு அழகான பேர் பார்த்தீங்களா?)
சென்னையில் உள்ள மிக மிக பழமையான திருக்கோவில் இது. இதன் உச்சியில் இருந்து பார்க்கும்போது ஒட்டுமொத்த சென்னை புறநகரின் அழகையும் ரசிக்கலாம்.
அழகான படிக்கற்களும் செல்லும் வழி நெடுக பசுமையும், நம்மை ஆழ்வார்களின் காலத்துக்கே அழைத்துச் செல்லும் என்பது மட்டும் உறுதி.
நம் தளம் சார்பாக ஆலய தரிசனம் பகுதிக்கு, வரும் ஞாயிறு காலை 6.30 A.M. அளவில் கிண்டி கத்திப்பாராவிலிருந்து (அஸர்கானா பஸ் ஸ்டாப்) புறப்படுகிறோம். டூ-வீலர் பயணம் தான். வரவிருப்பமுள்ளவர்கள் அவசியம் ஹெல்மட் அணிந்து வரவேண்டும்.
குடும்பத்துடன் வர விருப்பம் உள்ளவர்கள் கவனத்திற்கு : நேரடி பஸ், ஷேர் ஆட்டோ வசதி பல்லாவரத்திலிருந்து இருக்கிறது. மற்ற விபரங்களுக்கு எம்மை தொடர்புகொள்ளவும்.
நம்முடன் இந்த பயணத்தில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்கள் அலைபேசி எண் மற்றும் வசிக்கும் பகுதி இவற்றை குறிப்பிட்டு எனக்கு simplesundar@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். Subject ல் : உங்கள் பெயரை குறிப்பிட்டு – TEMPLE VISIT VOLUNTEER என்று மட்டும் குறிப்பிடவும்.
நன்றி!
ஓம் நமோ நாராயணாய
E : simplesundar@gmail.com | M : 9840169215
hello sundar sir you are about to visit my area temple. with god grace we too plan to join you. thanks. nagarani chennai.
சுந்தர்,
இந்த நன் நாளில் சந்திபோம்..
காத்திருக்கிறேன்.
என்றும் தலைவர் ரசிகன்
விஜய்