அவரின் சாதனை பற்றி கேள்விப்பட்ட ஒரு நாளிதழ் அவரை பேட்டியெடுக்க தன் நிருபரை அனுப்பியது. நிருபர் விவசாயியிடம் பேச்சு கொடுத்தபோது அவர் செய்து வரும் ஒரு வினோத விஷயத்தை புரிந்துகொண்டார். அதாவது அவருடைய உயர்ரக விதைளை அந்த விவசாயி தன் பக்கத்திலும் தன்னைச் சுற்றிலும் நிலம் வைத்திருப்பவர்களிடம் கூட பகிர்ந்து வந்திருக்கிறார். பொதுவாக ஒருவர் இப்படி செய்வது அரிது.
“விவசாய கண்காட்சியில் உங்களுடனே போட்டியாக வரும் உங்கள் பக்கத்து நிலத்துகாரர்களுடன் எப்படி உங்களால் உங்கள் உயர் ரக விதைகளை பகிர்ந்துகொள்ள முடிகிறது? ஆச்சரியமாக இருக்கிறதே …”
“இதிலென்ன சார் ஆச்சரியம்…? காற்று பலமாக வீசும்போது நன்கு விளையும் கதிர்களில் இருந்து மகரந்தங்களை எடுத்து சென்று பக்கத்து நிலங்களில் வீசுவது வழக்கம். என்னுடைய அண்டை நிலைத்தவர்கள் மட்டமான தரமற்ற கதிர்களை விளைவித்தால் மகரந்தச் சேர்க்கையானது என் பயிர்களையும் பாதிக்கும். எனவே என்னுடைய கதிர்களின் தரம் பாதிக்கப்படும்.”
“எனவே நான் நல்ல தரமான கதிர்களை விளைவிக்க வேண்டும் என்றால், நான் என் அண்டை நிலத்தவர்களும் நல்ல கதிர்கள் விளைவிக்க உதவ வேண்டும். எனவே தான் தரமான நல்ல விதைளை அவர்களுக்கும் கொடுத்து பகிர்ந்துவருகிறேன்!” என்று விளக்கமளித்தார்.
என்ன ஒரு அற்புதமான விளக்கம். “நான் நல்ல பயிர்களை விளைவிக்கவேண்டும் என்றால் என் பக்கத்தில் உள்ளவர்களும் நல்ல பயிர்களை விளைவிக்கவேண்டும்.”
வாழ்க்கையின் தொடர்புத்திறனை (CONNECTEDNESS) இதைவிட அற்புதமாக எவரும் விளக்கமுடியாது.
மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ விரும்புகிறவர்கள், தங்களை சுற்றியிருப்பவர்களும் அவ்வாறு வாழ உதவிடவேண்டும். விரும்பவேண்டும். அங்கு தான் உங்கள் மகிழ்ச்சி ஒளிந்திருக்கிறது. நானும் என் குடும்பமும் நன்றாக இருந்தால் போதும் மற்றவர்கள் எக்கேடு கேட்டால் எனக்கென்ன என்று சுயநல வாழ்க்கை வாழ்பவர்கள் எந்த காலத்திலும் நிம்மதியாக வாழமுடியாது.
இறைவன் மிகவும் வெறுப்பது சுயநலக்காரர்களைத் தான். பாவிகளை கூட அல்ல. ஏனெனில், நொடிப் பொழுதில் உணர்ச்சிவசப்பட்டு பாவம் செய்கிறவர்கள் அநேகம். சுயநலம் அப்படிப்பட்டதல்ல. அது பிறவிக் குணம். திட்டமிட்டு வளர்க்கப்படுவது.
இறைவன் மிகவும் வெறுப்பது சுயநலக்காரர்களைத் தான். பாவிகளை கூட அல்ல. ஏனெனில், நொடிப் பொழுதில் உணர்ச்சிவசப்பட்டு பாவம் செய்கிறவர்கள் அநேகம். சுயநலம் அப்படிப்பட்டதல்ல. அது பிறவிக் குணம். திட்டமிட்டு வளர்க்கப்படுவது.
ஒருவர் வாழும் வாழ்க்கையின் மதிப்பு அது மற்றவர்களின் வாழ்க்கையில் எந்த வித மாற்றங்களை ஏற்படுத்துகிறதோ அதைக்கொண்டே இறைவனால் மதிப்பிடப்படுகிறது.
நீங்கள் கார், பங்களா, பேன்க் பாலன்ஸ், எஸ்டேட்டுகள் வைத்திருக்கலாம். ஆனால் உங்களை சுற்றியிருப்பவர்களின் (உறவினர்கள், நண்பர்கள், உடன் பணிபுரிகிறவர்கள், வேலைக்காரர்கள்) இவர்கள் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்களா? அப்படி ஏற்படுத்தியிருந்தால், உங்கள் செல்வம் என்றும் அழிவை சந்திக்காது. மேன்மேலும் விருத்தியடையும்.
கொடுத்து கெட்டவனும் வைத்திருந்து வாழ்ந்தவனும் சரித்திரத்தில் என்றுமே இல்லை.
=================================================================
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….
http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
==================================================================
[END]
மிகவும் கருத்துள்ள பதவு. அடுத்தவர்களுக்கு உதவுவதால் நம் வாழ்க்கை தரம் உயரும்
நாமும் நம் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்றால் இந்த விவசாயியை போல் நடந்து கொள்ள வேண்டும்/
நன்றி
உமா
வாழ்கையை, வாழும் முறையை மிகவும் எளிமையாக விளக்கும் அற்புதமான கதை. மன்னிக்கவும். கதையல்ல…. இதுவே நிஜம்.
மறக்காமல் மற்றவர்களுடன் இதை பகிரவும்.
Monday morning SPL supper…
கதை கேட்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது, ஆனால் பாருங்கள் நம்மைச் சுற்றிலும் “சுயநலவாதிகளே” அதிகம். அவர்களுக்கு ஒரு நல்லவன் இருந்தால் அவன் இளிச்சவாயன் மட்டுமே. சுயநலவாதி நன்கு வாழ்ந்து அனுபவித்து இறப்பான். நல்லவன் தினமும் கஷ்டத்தை அனுபவித்து மனம் வருந்தி இறப்பான், இதுதான் இன்றைய கண்கூடு. இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. உண்மையில் உதவி செய்யும் மனம் உள்ளவர்கள் 1% என்பது வேதனை. மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு உதவுபவர்கள் 2% இருப்பர் அவ்வளவே. சொல்ல மனம் வலிக்கிறது. நம்முடைய பாரம்பரியம் பண்பாடு அனைத்தும் வீழ்த்தப்பட்டு விட்டது. இன்று அந்நிய தேசத்திலே நம்மவர்கள் நம்மை என்றோ அடகு வைத்து விட்டார்கள். எதிர்காலத்தில் நம் சந்ததியனர் எப்படி இருப்பார்கள் என நினைக்கவே முடியவில்லை. மகனும் தந்தையும் வேறு தாயும் மகளும் வேறு, கணவனும் மனைவியும் வேறு, சகோதரன் சகோதரி வேறு ஆனால் எல்லோரும் சுயநலத்தால் ஒன்று என்ற நிலை எப்போதோ தொடங்கி வளர்ந்து வருகிறது. அப்புறம் நட்பு? சுயநலத்திற்கு சிறந்த உதாரணம் வேண்டுமா? நம்முடைய சாலைகளைப் பாருங்கள் (மயிலாப்பூர், தி . நகர், போரூர், இன்னும் பல) அந்த சாலையில் உள்ள வீடுகளைப் பாருங்கள் தெரியும். வீடுகள் மிக அழகாக எல்லா வசதிகளுடனும் விலையில் விண்ணைத் தொடும் அளவிலும், சாலைகள் குண்டும் குழியுமாக, குப்பையும் சாக்கடை நீருமாக, ஒன்று அரசாங்கம் இவற்றை சரி செய்து பராமரிக்க வேண்டும் அல்லது அந்த அந்தப் பகுதி மக்களே பொதுவாக சரிசெய்து பராமரிக்க வேண்டும். எல்லோர் வீடுகளிலும் இன்று கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தி வைத்துள்ளனர் ஏனென்றால் யாரும் நல்லவர்கள் கூட வந்து விட கூடாதாம். இன்னொன்று கடைகளில் கண்காணிப்பு காமிராக்கள் தேவை தான். ஆனால் திருடர்கள் வெளியிலிருந்து வருகிறார்களோ இல்லையோ அந்த அந்த கடை உரிமையாளர்களே பலே திருடர்களாக இருப்பதை உணரலாம், ஒவ்வொரு பொருட்களின் விலை, தரம், அளவு, பேச்சு, செயல் என கவனித்தால் உணராலாம். அரசாங்கங்கள் (மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டதாம்) வரி மேல் வரி விதித்து (பேசினால் வரி, எழுதினால் வரி, நடந்தால் வரி, நின்றால் வரி), விலைவாசியை ஏற்றி எல்லோரையும் மோசமான நிலையில் நிறுத்தி வருகிறது. இதுதான் நம்முடைய வளர்ச்சி அடைந்த நாட்டின் பெருமை, இன்னும் மோசமாகத்தான் நாம் போய்கொண்டிருக்கிறோம். சொல்ல சொல்ல முடிக்க முடியவில்லை இந்த அக்கிரமங்களைக் கண்டு……. இனி நல்லவனுக்கு இந்த தேசத்தில் இடமில்லை என்பது மாத்திரம் உறுதி.
உங்கள் ஆதங்கம் புரிகிறது. அனைவரிடமும் மாற்றம் வரவேண்டும். அப்போது தான் சமுதாய மாற்றம் சாத்தியம்.
அருமையான சிந்திக்க தூண்டும் பதிவு. வித்தியாசமான கோணம். என் தந்தை அடிக்கடி கூறுவதுண்டு, ஒரு கூடை ஆப்பிளில் ஒரு அழுகிய ஆப்பிள் இருந்தால் கூட மொத்த ஆப்பிளும் கெட்டுவிடும் என்று. நம்மை சுற்றிலும் இருப்பவர்கள் நலமாக சந்தோஷமாக இருந்தால் தான் நாம் அவ்வாறு இருக்க முடியும். அது தான் நியாமும் கூட.
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்
வணக்கம்……..
மிகவும் நல்ல விஷயம்……….பகிர்ந்தமைக்கு நன்றி…………
//ஒருவர் வாழும் வாழ்க்கையின் மதிப்பு அது மற்றவர்களின் வாழ்க்கையில் எந்த வித மாற்றங்களை ஏற்படுத்துகிறதோ அதைக்கொண்டே இறைவனால் மதிப்பிடப்படுகிறது. // – உண்மை………..
நல்ல பதிவு சுந்தர் ஆனாலும் மக்களிடயே சீக்கிரம் மாற்றத்தை கொண்டு வருவது மிகவும் கடினமாக தோன்றுகிறது. அதற்கு தற்பொழுது உள்ள பொருளாதார சமூக சூழ்நிலைகளே காரணம். இதற்கு ஒரு நல்ல பிள்ளையார் சுழி போட்டவர் நம்முடிய மஹா பெரியவர். அவருடிய பிடி அரிசி திட்டம் இன்றைக்கும் சமூக மாற்றத்தை கொண்டு வரக்கூடியது ஆனால் அதை கை விட்டு விட்டோம். பெரிய திட்டங்களுக்கு பதிலாக சின்ன சின்ன ஆனால் உறுதியான தளிர் நடைகளே மிகவும் சிறந்தவை. அவற்றில் பின்னோக்கி செல்வதிர்ற்கு வாய்ப்புகள் குறைவு.
நல்ல பதிவு சுந்தர் அண்ணா. மாற்றம் ஒன்றே மாறாதது.
நம்மைச் சுற்றிலும் “சுயநலவாதிகளே” அதிகம். அவர்களுக்கு ஒரு நல்லவன் இருந்தால் அவன் இளிச்சவாயன் மட்டுமே. சுயநலவாதி நன்கு வாழ்ந்து அனுபவித்து இறப்பான். நல்லவன் தினமும் கஷ்டத்தை அனுபவித்து மனம் வருந்தி இறப்பான், இதுதான் இன்றைய கண்கூடு. இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. உண்மையில் உதவி செய்யும் மனம் உள்ளவர்கள் 1% என்பது வேதனை. மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு உதவுபவர்கள் 2% இருப்பர் அவ்வளவே. சொல்ல மனம் வலிக்கிறது. நம்முடைய பாரம்பரியம் பண்பாடு அனைத்தும் வீழ்த்தப்பட்டு விட்டது. இன்று அந்நிய தேசத்திலே நம்மவர்கள் நம்மை என்றோ அடகு வைத்து விட்டார்கள். எதிர்காலத்தில் நம் சந்ததியனர் எப்படி இருப்பார்கள் என நினைக்கவே முடியவில்லை. மகனும் தந்தையும் வேறு தாயும் மகளும் வேறு, கணவனும் மனைவியும் வேறு, சகோதரன் சகோதரி வேறு ஆனால் எல்லோரும் சுயநலத்தால் ஒன்று என்ற நிலை எப்போதோ தொடங்கி வளர்ந்து வருகிறது. அப்புறம் நட்பு? சுயநலத்திற்கு சிறந்த உதாரணம் வேண்டுமா? நம்முடைய சாலைகளைப் பாருங்கள் (மயிலாப்பூர், தி . நகர், போரூர், இன்னும் பல) அந்த சாலையில் உள்ள வீடுகளைப் பாருங்கள் தெரியும். வீடுகள் மிக அழகாக எல்லா வசதிகளுடனும் விலையில் விண்ணைத் தொடும் அளவிலும், சாலைகள் குண்டும் குழியுமாக, குப்பையும் சாக்கடை நீருமாக, ஒன்று அரசாங்கம் இவற்றை சரி செய்து பராமரிக்க வேண்டும் அல்லது அந்த அந்தப் பகுதி மக்களே பொதுவாக சரிசெய்து பராமரிக்க வேண்டும். எல்லோர் வீடுகளிலும் இன்று கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தி வைத்துள்ளனர்