Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 15, 2024
Please specify the group
Home > Featured > வாரியார் ஸ்வாமிகள் முருகப் பெருமானிடம் அனுதினமும் வேண்டி நின்றது என்ன?

வாரியார் ஸ்வாமிகள் முருகப் பெருமானிடம் அனுதினமும் வேண்டி நின்றது என்ன?

print
ன்று ஐப்பசி 1. ஆயில்யம் நட்சத்திரம். திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் குரு பூஜை. கிருபானந்த வாரியார் சென்ற நூற்றாண்டு கண்ட தலைசிறந்த முருக பக்தர். நாத்திகப் பிரசாரம் தமிழகத்தில் வேரூன்றி பரவிய இக்கட்டான காலகட்டங்களில், ஆத்திகத்தை பரவச் செய்தவர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். “அருள்மொழி அரசு”, என்றும் “திருப்புகழ் ஜோதி” என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.

இன்று அவரது குரு பூஜை. அவர் இறைவனோடு கலந்த நாள். அதையொட்டி இந்த சிறப்பு பதிவு இடம்பெறுகிறது.

வாரியார் ஒருமுறை மக்களுக்கும் அடியவர்களுக்கும் எழுதிய கடிதம் இது.

“என் உள்ளம்!”

– திருமுருக.கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்

எனக்கு இளமையில் இருந்தே பிறவித் துயரத்தைக் களைய வேண்டும்  என்ற ஆர்வம் வேரூன்றி நின்றது.  பற்று தான் பிறவிக்குக் காரணம்.  எந்தப் பொருளிலும் பற்று இருக்கக் கூடாது என்று எண்ணி வாழ்பவன்.  என்னைப் பகைக்கின்றவனும் வாழ்க என்று எண்ணுவேன்..  ”வைதவனை இன்சொல்லாக் கொள்வானும்” என்ற திரிகடுகப் பாடலைஅடிக்கடி நினைந்து கொள்வேன்.

‘சத்திய சோதனை’ என்ற நூலை அடிக்கடி படித்து அதன்படி ஒழுக வேண்டுமென்று சிந்திப்பேன்.   பிறரிடத்தில் ஒரு  பொருளை இனாமாகப் பெற்றால் அது பிறவியைத் தரும் என்று எண்ணுபவன்.  உழைத்துத் தான் ஒருவன் வாழ வேண்டும்.  போனகம் என்பது தான் உழந்துண்டல் என்பது அவ்வையார்   வாக்கு.  ஒவ்வொரு உயிர்களும் துன்பமின்றி இருக்க வேண்டும் என்று தான் எண்ணுகின்றன. துன்பங்கள் பல. ” பல துன்பம்  உழன்று கலங்கிய சிறியன்” என்பார்  அருணகிரிநாதர்.

gurupoojai copy

துன்பங்கள் அனைத்திற்கும் தலையாயது பிறவித் துன்பம் தான்.  பத்துத் திங்கள் நெருக்கமான கருப்பையில் கிடந்து அடையும் துன்பத்தை எண்ணும்  தோறும் உள்ளம் உலைகின்றது .  உண்மையில் அறிவு படைத்த ஒருவன் பிறவித் துன்பத்துக்குத் தான் அஞ்ச வேண்டும்.

நாம் செய்யும் வினைகளால் தான் பிறவிகள் எய்துகின்றன.  ஆதலால் பாவஞ் செய்ய அஞ்ச வேண்டும்.  பிறவித் துயருக்கு அஞ்சும் இயல்பு எனக்கு  இளமையிலிருந்தே  திருவருளால் எய்தியது .  ஆதலால் நெஞ்சாரப் பாவஞ் செய்யக்கூடாது  என்ற எண்ணமும் அவனருளால் எய்தியது.

நான்  தனிமையில் இருக்கும் பொழுது ”கந்தவேலே, ஒரு தாயின்  வயிற்றில் நான் புகாத வண்ணம் காத்தருள காத்தருள வேண்டும் ” என்று முறையிட்டுக் கண்ணீர் வடிப்பதுண்டு. நான் அறிவு தோன்றிய நாள் தொட்டு முருகப்பெருமானை உபாசித்து வருபவன்.  ஆனால் எந்த மூர்ததிகளிடத்திலும் வெறுப்பு இல்லாதவன்.

எனக்கென்று பெரும் பொருள் சேர்த்து வைத்துக் கொள்ளாத படியால் மனதில் எப்பொழுதும் ஆறுதல் நிலவுகின்றது. யாரிடத்தும் கடிந்து பேசுவதில்லை.

DSC06366 copy

உபவாசம் உடல் நலத்தைத் தரும்.  அதனால் கந்தர் சஷ்டி 6 நாள், மாத  சஷ்டிகள் , மாத சிவராத்திரி, கார்த்திகை சோமவாரம், அருணகிரிநாதர் ஆராதனை இந்த நாட்களில் உபவாசம் இருந்து இறைவனை வழிபடுபவன்.

என்னிடத்தில் உதவி பெறாதவர்கள் என்னிடம் எப்பொழுதும் அன்பாக இருக்கிறார்கள்.  என்னிடத்தில் பெரிய அளவில் உதவி பெற்றவர்கள் மேலும் உதவி செய்யவில்லையே என்று என்று என்னை வெறுக்கின்றார்கள்.  இது என் வாழ்கையில் தெரிந்து கொண்ட  அனுபவம்.

எனக்கு 25  வயது முதல் இன்று வரை நான் விரிவுரை  செய்யாத   நாளில்லை. மழை  வந்து விரிவுரை நின்றிருக்கும்.  எனக்குச் சுகக் குறைவு என்று ஒரு பொழுதும் விரிவுரை நின்றதில்லை.  பிற மதங்களை நான் எப்பொழுதும் வெறுப்பதில்லை.  என்னுடைய உள்ளத்தில் நீங்காது நிலவும்  இரக்கத்தைச் சிலர் தங்களுக்கு கருவியாகக் கொண்டு என்னைப் பெரிதும் ஏமாற்ற ஏமாந்து நான் பெரிதும் இடர்   பட்டிருக்கின்றேன்.  கருணையில் விளையும் இரக்கம்  இடர் தருகிறது என்பது உணர்கின்றேன்.

நம் எண்ணங்களும், சொல்லும், செயலும் தூயவாக இருக்க வேண்டும்.  அருளறியப்  பாவங்கள் செய்தல் கூடாது. நாம் எண்ணில் கோடி  கோடி பிறவிகளை எடுத்து அயர்ந்து போனோம்.

இறைவன் திருக்கோயிலில் மட்டும் இருக்கின்றான் என்று எண்ணக்கூடாது நம் உள்ளத்திலே பிரியாது இருக்கின்றான்,  அதனால் பிரான் என்று இறைவனை அழைக்கின்றோம்,  எண்ணத்திலும் , சொல்லிலும் இறைவம் இருக்கிறான் .  நம் எண்ணங்களும், சொல்லும், செயலும் தூயவாக இருக்க வேண்டும்.  அருளறியப்  பாவங்கள் செய்தல் கூடாது. நாம் எண்ணில் கோடி  கோடி பிறவிகளை எடுத்து அயர்ந்து போனோம்.  இனிப் பிறவாமையை பெற வேண்டும்.

பிறவாதவனும் , இறவாதவனும் ஆகிய எந்தை கந்தவேலிடம் நான் வேண்டுவது பிறவாமை ஒன்றையே தான். ஒவ்வொரு நாளும் வழிபாட்டில் பிறவித் துயரை நினைத்து கண்ணீர் மல்கி அப்பரமபிதாவை வேண்டுகின்றேன்,  பிறவாமை  கருதியே உள்ளத்தில் ஒழுக்கமும் அமைந்தது.  ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் விழுப்பொருள்.  ஒழுக்கம் இன்றி உயர்வு ஏற்படாது.

நாம் இறைவனுடைய சந்நிதியில் இருக்கின்றோம்,  அவன் நம்மை ஒவ்வொரு கணமும் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்று அடியேன் கருதுகின்றேன்.  அதனால் அவன் அருளிய உள்ளத்தில் பாவ நினைவுகள் எழுவதில்லை.  இந்த ஒரு நிலையை எல்லோரும் அடைதல் வேண்டும் என்றே எழுத்தாலும், சொல்லாலும் இடையறாது தொண்டு புரிகின்றேன்.

எனவே ஒவ்வொரு மனிதனும் நம் உள்ளத்தில் இறைவன் உறைகின்றான் என்று எண்ணி , அவனருரளியத் தீவினை புரியாது, நல்வினை பயன் கருதாமல் புரிந்து பிறவித் துன்பத்தை அகற்றுதல் வேண்டும். இதுவே என் வேண்டுகோளும், உள்ளமும் ஆகும்.

அடியார்க்கு அடியேன்
திருமுருக கிருபானந்த வாரி

(வாரியார் சுவாமிகளின் வாழ்க்கை குறித்த அனைவரும் காணவேண்டிய காணொளி லிங்க் ‘வாரியாரின் வாழ்வும் வாக்கும்’ – இறுதியில் தரப்பட்டுள்ளது. அனைவரும் அவசியம் அதை ஒரு முறையேனும் பாருங்கள். இரு வினை தீர்க்கும் குருவின் பெருமை பேசுதல், சிரவணம் செய்தல், மற்றவர்களை பார்க்கச் செய்தல்.)

4 thoughts on “வாரியார் ஸ்வாமிகள் முருகப் பெருமானிடம் அனுதினமும் வேண்டி நின்றது என்ன?

  1. வாரியார் சுவாமிகளை பற்றிய பதிவு மிகவும் நன்றாக உள்ளது.

    அவரது குரு பூஜையில் அவர் தாள் வணங்கி அவரை பணிவோம்

    //ஒவ்வொரு மனிதனும் நம் உள்ளத்தில் இறைவன் உறைகின்றான் என்று எண்ணி , அவனருரளியத் தீவினை புரியாது, நல்வினை பயன் கருதாமல் புரிந்து பிறவித் துன்பத்தை அகற்றுதல் வேண்டும்/

    //என்னுடைய உள்ளத்தில் நீங்காது நிலவும் இரக்கத்தைச் சிலர் தங்களுக்கு கருவியாகக் கொண்டு என்னைப் பெரிதும் ஏமாற்ற ஏமாந்து நான் பெரிதும் இடர் பட்டிருக்கின்றேன். கருணையில் விளையும் இரக்கம் இடர் தருகிறது என்பது உணர்கின்றேன்.//

    //யாரிடத்தும் கடிந்து பேசுவதில்லை.//

    நன்றி

    உமா

  2. இன்று வாரியாரின் குரு பூஜை என்று உங்களக்கு தகவல் அனுப்பலாம் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் பதிவாகவே போட்டு அசத்திவிட்டீர்கள்.

    குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடம் என்பார்கள். அதுபோல வடிவேலன் இருக்கும் இடமெல்லாம் வாரியார் இருப்பார்.

    வாரியார், மகா பெரியவா இருவரையும் அடுத்தடுத்து இழந்தது மிகப் பெரிய இழப்பு. அவர்கள் இடத்தை இன்று வரை யாராலும் நிரப்பமுடியவில்லை. அவர்கள் பூதவுடல் மறைந்தாலும் ஸ்தூல சரீரத்தோடு இருந்து நம்மை வழி நடத்துகிறார்கள் என்பதே நிஜம்.

    வாரியாரின் வாழ்க்கை வரலாற்று வீடியோவை ஏற்கனே ஒரு முறை பார்த்திருந்தாலும் இன்று மற்றொரு முறை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் என்பது போல அத்தனை இனிமை.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  3. Arumaiyana padivu,

    Vaariyar thanudaiya udal seri illamal irundha podhum london makkal emarnthuvidakudathu endru enni sorpozhivuku purapadukirar. London il irangiyathum avaradhu udal nilai mosamayitru. London makkalidam , neengal kavalaipadavendam, eman ennai vittu 12 adi thalli than nirpan , ennai ketkamal en uyirai edukka maatan enrar.Irundhum makkalin kannerai parthu thangamudiyamal kandhavelei Un kaal adiyil serthu kolla karunai kola maataya endru kanner vitu azhuthar. Piragu bombay vandhapin angirunthu vimaanam erinar. Flight thirupathi vandhapodhu ,Avar adiyavar saathur rajendranidam aduthathu thiruthanni thane endrar . Appodhey murugaperman avarai aatkonduvittar.
    Vel ai vananguvathey velai endru irundhavarin vandha velai mudindhadhu.
    Swathi nakshathirathil thondri aayilya nakshayhirathil marainthadhu andha aanmega nakshathiram.

    Om Saravana bhava.

  4. தனக்கென தேவைக்கு அதிகமான பொருட்களை சேமித்து வைத்துக் கொள்ளாமல், எளிமையாக வாழ்ந்த தூய உள்ளமும் வேதனை படும்படி நேர்ந்திருக்கையில் சாதாரண மணிதப்பிறவிகளான நாம் மற்றவரை குறை கூறி பலன் என்ன. என்பதனை வாரியார் அவர்களின் அனுபவத்தின் மூலம் அறிந்து கொண்டேன். நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *