கீழே 27 நட்சதிரங்களுக்குரிய பரிகாரத் தலங்கள் பற்றிய விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. உங்கள் பிறந்த நாளன்றோ (தமிழ் மாதப்படி) அல்லது ஒவ்வொரு மாதமும் வரும் ஜென்ம நட்சத்திரத்தன்றோ கீழே குறிப்பிடப்பட்டுள்ள தலங்களுக்கு சென்று, உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து இறையருளை பெறுங்கள். உங்கள் நட்சத்திர தேவதைகளின் ஆசையையும் பெறுங்கள். நீங்கள் ஆலயம் செல்லும்போது அன்னதானம் செய்வது கூடுதல் சிறப்பு.
27 தலங்களில் இரண்டு தலங்களுக்கு நாம் சென்றிருக்கிறோம். மற்ற தலங்களையும் ஒவ்வொன்றாக தரிசித்து ஒவ்வொரு தலத்தை பற்றியும் விரிவான பதிவளிக்க எண்ணியிருக்கிறோம். திருவருள் துணை செய்யவேண்டும்.
27 நட்சத்திரங்களுக்குரிய தலங்கள் குறித்து முகநூலில் பாஸ்கர் ஜெயராமன் என்பவர் பகிர்ந்திருந்த அற்புதமான தகவலை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.
27 நட்சத்திரங்களுக்குரிய பரிகாரத் திருத்தலங்கள்!
ஆன்மீக நண்பர்களின் நலம் கருதி, ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்க ளைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும், பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையே புதுப்பித்துக் கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை.
இவையெல்லாவற்றையும் விட முக்கியமான ரகசியம் – இந்த நட்சத்திரங்களுக்குரிய தேவதைகள், சூட்சும ரீதியாக இங்கே தினமும் ஒரு தடவையாவது தங்களுக்குரிய ஆலயம் சென்று வழிபாடு செய்கின்றன. மனிதராய் பிறந்த அனைவர்க்கும், அவரவர் கர்ம வினையே – லக்கினமாகவும், ஜென்ம நட்சத்திரமாகவும், பன்னிரண்டு வீடுகளில் நவக்கிரகங்கள் அமர்ந்து – பெற்றெடுக்கும் பெற்றோர்களையும், பிறக்கும் ஊரையும், வாழ்க்கை துணையையும் , அவர் வாழ்வில் நடக்கும் முக்கிய சம்பவங்களையும் , வாழ்க்கையையுமே தீர்மானிக்கிறது. நமது பூர்வ ஜென்ம தொடர்புடைய ஆலயங்களுக்கு, நம்மை அறியாமலே நாம் சென்று வழிபடும்போது, நமது கர்மக்கணக்கு நேராகிறது. அப்படி நிகழும்போது நம் வாழ்வில் ஏற்படும் பல தடைகளும், தீராத பிரச்னைகளும் தீர்ந்து , மனதளவில் நமக்கு பலமும், மாற்றமும் ஏற்படுகின்றன.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை – உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் தினத்தன்று, ஆத்ம சுத்தியுடன், நம்பிக் கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும். உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர, உங்கள் கஷ்டங்கள் வெகுவா க மட்டுப்படும்.
அஸ்வினி – அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில் இருப் பிடம்: திருவாரூரில் இருந்து 30 கி.மீ.தூரத்தில் திருத்துறைப் பூண்டி உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.
பரணி – அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்இருப்பிடம்: மயிலாடு துறையிலிருந்து (15 கி.மீ.) நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் நல்லாடை என்னும் ஊரில் உள்ளது.
கார்த்திகை – அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில். இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் கஞ்சாநகரம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டிலிருந்து பிரியும் ரோட்டில் அரை கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.
ரோஹிணி – அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில். இருப்பிடம்: காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் கோயில் அமைந்துள்ளது.
மிருக சீரிஷம் – அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில். இருப்பிடம் : தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கி.மீ., தூரத்தில் முகூந்தனூர் உள்ளது. இந்தஸ்டாப்பில் இருந்து, ஒரு கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.
திருவாதிரை – அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில். இருப்பிடம் : தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ளபட்டுக்கோட்டை சென்று, அங்கிருந்து 12 கி.மீ. சென்றால் அதிராம்பட்டினத்தில் உள்ள இந்த ஆலயத்தை அடையலாம்.
புனர் பூசம் – அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில். இருப்பிடம் : வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், 67 கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி உள்ளது. பஸ்ஸ்டாண் டில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள பழைய வாணியம் பாடியில் கோயில் உள்ளது.
பூசம் – அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில். இருப்பிடம்: பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கி.மீ., சென்றால் விளங்குளம் விலக்கு வரும். அங்கிருந்து தெற்கே 2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளத்தை அடைய வழியிருக்கிறது.
ஆயில்யம் – அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில். இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11 கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். திருவிசநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.
மகம் – அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில். இருப்பிடம்: திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ., மினிபஸ்சில் சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.
பூரம் – அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில். இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ., சென்றால் வரும் திருவரங்குளம் என்னும் ஊரில் ஆலயம் உள்ளது.
உத்திரம் – அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில். இருப்பிடம் : திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்று மங்கலம் என்னும் ஊரில் உள்ளது.
ஹஸ்தம் – அருள்மிகு கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில். இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலத்திலிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ. தூரத்தில் கோமல் என்னும் ஊரில் உள்ளது.குத்தாலத்திலிருந்து பஸ், ஆட்டோ வசதி உள்ளது
சித்திரை – அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில். இருப்பிடம்: மதுரையில் இருந்து 23 கி.மீ., தூரத்திலுள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. வியாழன், பவுர்ணமி தினங்களில் கோயில் வரை பஸ்கள் செல்லும். மற்ற நாட்களில் ஆட்டோவில் செல்ல வேண்டும்.
சுவாதி – அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில். இருப்பிடம்: சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை என்ற ஊருக்கு செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் சித்துக்காடு என்ற ஊரில் இத்தலம் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டுமே பஸ் உண்டு என்பதால், பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில் சென்று திரும்பலாம்.
விசாகம் – அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில். இருப்பிடம் : மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும் வேன்களில் அடையலாம். இவ்வூரைச் சுற்றி பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவை உள்ளன
அனுஷம் – அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில். இருப்பிடம்: மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கீ.மீ. தூரத்தில் திரு நின்றியூர் என்னும் ஊரில் இத்தலம் அமைந்துள்ளது.
கேட்டை – அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில். இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.
மூலம் – அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில். இருப்பிடம்: சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்தில் மப்பேடு என்ற ஊரில் உள்ளது. (பூந்தமல்லியிலிருந்து (22 கி.மீ.) பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.)
பூராடம் – அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில். இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,) திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியை அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.
உத்திராடம்– அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில். இருப்பிடம்: சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12 கி.மீ.,) ஒக்கூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., சென்றால் பூங்குடி என்ற ஊரில் உள்ளது. ஆட்டோ உண்டு. மதுரையில் இருந்து (45 கி.மீ.,) இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நேரடி பஸ் வசதி உண்டு.
திருவோணம் – பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில். இருப்பிடம்: வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ. சென்றால் திருப்பாற் கடலை அடையலாம். ஆற்காடு, வாலாஜா விலிருந்தும் பேருந்துகள் உள்ளன. இவ்வூரில் இரண்டு பெருமாள் கோயில்கள் இருப்பதால், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் என கேட்டு செல்லவும்
அவிட்டம் – அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில். இருப்பிடம் : கும்பகோணம் மகாமகக்குளம் மேற்குக் கரையிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கோயில்அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் கொருக்கை என்னும் இடத்தில் உள்ளது..
சதயம் – அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில். இருப்பிடம்: திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் என்னும் ஊரில் உள்ளது.
பூரட்டாதி – அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில். இருப்பிடம்: திருவையாறிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள திருக் காட்டுப்பள்ளி சென்று, அங்கிருந்து அகரப் பேட்டை செல்லும் ரோட்டில் 2 கி.மீ. தூரம் சென்றால் ரங்கநாதபுரம் என்னும் ஊரில் உள்ளது.
உத்திரட்டாதி– அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில். இருப்பிடம்: புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ.தூரத்திலுள்ள ஆவுடையார்கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் வழியில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது. மதுரையில் இருந்து செல்பவர்கள், அறந்தாங்கி சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் பஸ்களில் சென்றால் தீயத்தூர் என்னும் இடத்தில் உள்ளது. தூரம் 120 கி.மீ.
ரேவதி – அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில். இருப்பிடம்: திருச்சியிலிருந்து முசிறி (40கி.மீ)சென்று, அங்கிருந்து வேறு பஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை(21 கி.மீ) செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ள காருகுடி என்னும் இடத்தில் உள்ளது.
(நன்றி : திரு.பாஸ்கர் ஜெயராமன்)
================================================================
Also check from our archives….
உங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியுமா?
பிறந்தநாளன்று நாம் செய்ய வேண்டியது என்ன? செய்யக் கூடாதவை என்ன?
எங்கே ‘தேடல்’ உள்ளதோ அங்கே தோல்வியில்லை!
சிவன் கோவிலில் காணக் கிடைக்காத அனுமன் சன்னதியுடன் கூடிய மூல நட்சத்திர பரிகாரத் தலம்
ஜொலிக்கப்போகும் சிங்கீஸ்வரர் – ஓரடி எடுத்து வைத்தவர்களிடம் நூறடி எடுத்து வைத்த ஈசனின் பெருங்கருணை!!
பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!
================================================================
[END]
மிகவும் உபயோகமான பதிவு. நான் எனது மூல நட்சத்திர ஸ்தலமான சிங்கீஸ்வரர் கோவிலுக்கு 1 ஜனவரி 2014 அன்று ரைட் மந்த்ரா டீம் உடன் இறைவனை தரிசித்துவிட்டேன். மிகவும் அருமையான தரிசனம் அந்தக் கோவிலில் கிடைத்தது நான் செய்த புண்ணியம்.
நன்றி
உமா
Dear Sundarji,
Thanks for the share. Today morning in deiva ragam (radio mirchi) this was the topic they were speaking about.Suddenly looking at your website you have published the same article.
தேங்க்ஸ்
V.Harish
What my son told is correct. From tomorrow onwards, in Radio Mirchi 98.3 FM, at 5.45 am in deiva raagam programme, Ms. Revathi Sankaran will talk about each star’s parigar sthalam. Every one of us will hear the same.
Regards
Uma
நல்ல விஷயம்.
ஆனால் பாருங்க, எல்லாம் சிவன் கோயிலா இருக்கு. நாம் சிவா வைணவ பேதம் பார்ப்பதில்லை. ஆனால் வைணவ பக்தர்களும் பயனடைய வேண்டி அந்த அந்த ராசிக்குகந்த வைணவ தளங்களையும் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும் என கருதுகிறேன்.
நாசி!!
நமது நாசியில் சிவனும் உண்டு நாராயணனும் உண்டு. ஆகவேதான் அது “நா(ராயணன்) சி(வன்)” என்றாயிற்று.
நீங்கள் பதிவை முழுமையாக படிக்கவில்லை என்று கருதுகிறேன்.
ரோகினி நட்சத்திரத்துக்கு காஞ்சிபுரம் பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில், மிருகசீரிஷ நட்சத்திரத்துக்கு அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில், சித்திரை நட்சத்திரத்துக்கு சித்திரரத வல்லபபெருமாள் கோயில், கேட்டை நட்சத்திரத்துக்கு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், திருவோணம் – பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
சைவ வைணவ பேதம் பார்க்காதவர்கள், எந்த கோவிலாக இருந்தாலும் சென்று பரிகாரம் செய்யலாம். பேதம் பார்ப்பவர்களுக்கு அந்த ஸ்ரீஹரி தான் பதில் கூறவேண்டும்.
– சுந்தர்
படிக்க மட்டுமல்ல, பாதுகாக்கவேண்டிய பதிவு. ஆலயங்கள் அனைத்தும் தரிசிக்க வேண்டிய தலங்கள். பதிவுக்கு நன்றிகள்.
மிகவும் உபயோகமான பதிவு பதிவுக்கு நன்றிகள்.
நந்தா கோபால்
வந்தவாசி
Greetings Shri Sundar Sir
Your article states that the parikara sthalam for Revathi Star, is Lord Kailasa Nathar Thirukkovil.
I wonder if this Kailasa Nathar temple is the same as the Kailasa Nathar temple in KoonanCheri?
Please, if you do not mind, could you please write an article ( Of course with photos) about KoonanCheri Kailasa Nathar, and the sloka (in Sanskrit) for Kailasa Nathar in Koonancheri. How does one worship Lord Kailasa Nathar in Koonan Cheri? If any saint ( like Appar, Thirugnana sambanthar or Thiru Moolar) composed any poem in Tamil on this Koonancheri Kailasa Nathar.
Forgive me, I am not pushing you to write this article. when ever you find some time, please give us this article.
Thank you with best regards
Sakuntala
Sure. This is what i am expecting from our readers.
thanks.
சகுந்தலா மேடம் , தாங்கள் சொல்லும் கைலாசநாதர் கோவில் , கூனஞ்சேரி , சுவாமி மலையிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 500 வருடத்திய புராதனக் கோவில். போலியோ நோய் தீர்க்கும் ஸ்தலம்.
சுந்தர் சார் சொல்லும் கோவில் ரேவதி நட்சத்திர பரிகார ஸ்தலம். இரண்டும் வேற வேற கோவில்.
சார், ஒவ்வொரு கோவிலை பற்றியும் விரிவான பதிவு எழுதவும்.. எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும்.
நன்றி
உமா வெங்கட்