அக்டோபர் 15. People’s President என்று அன்போடு அழைக்கப்பட்ட, அழைக்கப்படும் திரு.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள். இப்புவியில் ‘திருக்குறள் வாழ்வு’ வாழும் மிகச் சிலருள் கலாமும் ஒருவர். அரிதினும் அரிய, இனிதினும் இனிய மனிதர்.
கலாம் அவர்கள் வள்ளுவமாய் வாழும் ஒரு வரலாறு. தன்னம்பிக்கைச் சிற்பி. கலங்கரை விளக்கம். எளிமையின் ஊற்று. கடவுளின் குழந்தை. ஏழைகளின் விடிவெள்ளி. பசுமை நாயகன். ஆன்மீக தூதுவர்… இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
“முடியாது என்று எவரேனும் எதற்காகவேனும் கூறுவாராயின் அவரை விட்டுக் காதத் தூரம் விலகிச் செல்” என்பதே குழந்தைகளுக்கும் சரி… பெரியவர்களான நமக்கும் சரி கலாம் கூறும் அறிவுரையாகும்.
‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் – வான்உநற்யும்
தெய்வத்துள் வைக்கப் படும்’
இந்தக் குறளுக்கு, இன்றைக்கு வாழும் மனிதர்களில் எவரேனும் ஒருவரை உதாரணமாகச் சொல்லலாம் என்றால் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களைவிட பொருத்தமான இன்னொருவர் இருக்க முடியுமா?
நீங்களே கீழ் கண்ட இந்த சம்பவத்தை படியுங்கள்.. பிறகு புரியும்!!
==================================================================
கலாமுக்கு கட்டுப்பட்ட மழை!
2003, ஆகஸ்ட் 15. அன்று சுதந்திர தினம். அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்த நேரம். ஜனாதிபதி மாளிகைப் புல்வெளியில் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பல துறை வல்லுநர்களுக்கு ஒரு வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் கலாம். மாலை ஐந்தரை மணிக்கு நிகழ்ச்சி. காலையிலிருந்து கொட்டோ கொட்டென்று மழை. நிகழ்ச்சியை உள் அரங்குக்கு மாற்ற முடியாது. ஏனென்றால் உள் அரங்கில் 600 பேர்தான் அமர முடியும். வர வேண்டிய விருந்தினரோ 2000 பேர்.
கலாமிடம் விஷயத்தைச் சொன்னால் புன்னகைக்கிறார். “என்ன போயிற்று, எல்லாரும் நனையப் போகிறோம், அவ்வளவுதானே?” என்கிறார். நாயரின் பரிதவிப்பைப் பார்த்து, “ஏன் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? நான் அங்கே பேசியாகி விட்டது, எல்லாம் சரியாகிவிடும்” என்று வானத்தைச் சுட்டிக் காட்டி புன்னகைத்தபடியே கூறுகிறார்.
வேறு வழியில்லாமல் அதிகாரிகள் 2000 குடைகளுக்கு ஏற்பாடு செய்து வைக்கிறார்கள். என்ன மாயம்! சாயங்காலம் மழை அறவே நின்று, சூரியன் பிரகாசிக்க ஆரம்பித்து விட்டது. ஆறரை மணிக்கு நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் முடிந்து அவரவர் விடைபெற்றுக் கொண்டு போனார்களோ இல்லையோ, வானம் மறுபடியும் பொத்துக் கொண்டு விட்டது!
முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி வெங்கடசல்லையா, கலாமைச் சந்தித்து விட்டு வந்து ஒரு முறை சொன்னது: “நாயர், என் வாழ்க்கையில் இது முக்கிய அனுபவம். டாக்டர் கலாமுக்கு மிக அருகில் உட்கார்ந்திருந்தேன். இறைத்தன்மையின் அதிர்வலைகள் என்னுள் எதிரொலிப்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவர் உண்மையிலேயே கடவுளுக்குச் சொந்தமானவர்!”
(பி.எம்.நாயர் எழுதிய “The Kalam effect – My years with the President” என்ற நூலிலிருந்து)
==================================================================
Also check from our archives:
“திருமலையில் அனைவரையும் வியக்க வைத்த திரு.அப்துல் கலாம்!”
==================================================================
[END]
திரு கலாம் அவர்களுக்கு எமது இனிய அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்களுடைய இலட்சியங்கள் மூன்றும் மூன்று முத்துக்கள் . விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள். திரு கலாம் அவர்களின் மிக எளிய வாழ்கைமுறை எனக்கு பிடித்த ஒன்று. அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் மிக எளிய வாழ்க்கை முறையை கடை பிடித்தார். பள்ளி மாணவர்களுக்கு அவர் ரோல் மாடல். எல்லா மாணவர்களை ஒரு லட்சிய பயணத்தை நோக்கி கனவு காண சொன்னார்.
இயற்கையே அவருக்கு கட்டு பட்டிருக்கிறது என்றால் அவர் எவ்வளவு பெரிய உயர்ந்த மனிதர. அவரது மனித நேயம் எனக்கு பிடிக்கும்.
மிகவும் அருமையான பதிவு
நன்றி’
உமா
கலாம் அவர்கள் நம் நாட்டில் பிறந்ததும், குறிப்பாக தமிழ்நாட்டில் பிறந்ததும் நாம் செய்த பாக்கியம் தான்.
செல்லும் இடங்களில் எல்லாம் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் விதைத்து, நாளைய தூண்களான மாணவர்களுக்கு உத்வேகமாகமாக விளங்குபவர் கலாம்.
திருக்குறள் வாழ்க்கை வாழும் அவருக்கு மழை கட்டுப்படுவதில் ஆச்சரியமென்ன…
திரு.அப்துல் கலாம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நல்லவரைப் பற்றிய நல்ல பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி.
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்
உங்கள் இலட்சியங்கள் நிறைவேற இறைவன் அருள் புரியட்டும் சுந்தர்.
திரு.அப்துல் கலாம் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
சுந்தர் தனது லட்சியத்தை அடைவதற்கான பிள்ளையார் சுழியை ரைட் மந்த்ரா தளத்தை ஆரம்பித்த போதே போட்டுவிட்டார். அவரது விடா முயற்சியாலும் ஆண்டவன் அருளாலும் கூடிய விரைவில் திரு கலாம் அவர்கள் நம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பேசலாம். நாளை நடப்பதை யார் அறிவார்.
லட்சியம் என்றால் இதுவல்லவோ லட்சியம்!
தங்கள் லட்சியம் அதிவிரைவில் நிறைவேற வாழ்த்துக்கள்……….திரு.கலாம் அவர்களுக்கு நம் வணக்கங்கள்……….திரு.கலாம் பற்றி தாங்கள் சொன்னவை அத்தனையும் உண்மை……..திரு.கலாம் அவர்களின் பிறந்த நாளையொட்டி நல்ல பதிவு………நன்றிகள் பல………..
Dear sir,
MY best wishes to scientist turned president Dr.kalam. I am happy to know he belongs to my wife’s birthplace and studied in the same school at rameswaram. It is rare to see people above caste greed and religion and position . I hope your ambition and dream will materialize soon.
S.Chandra mouli
1) கலாம் அவர்களை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுப்பது
2) அவர் இருக்கும் மேடையில் நான் பேசுவது
3) அவர் என்னைப் பற்றி பேசுவது.
இலட்சியங்கள் லட்சம் இருக்கட்டும். நம்ம ஊர்ல எல்லோரும் படம் பார்த்து அந்த அந்த நடிகர்கள் மாதிரி தங்களை நினைத்துக் கொள்வது போல நீங்கள் நினைப்பது ஆச்சரியமாக இருக்கிறது. நல்ல தலைவர்கள் சொல்ல்வது விரும்புவதெல்லாம் தனியாராதனை அல்ல, ஒவ்வொருவரும் “திரு. அப்துல் கலாம்” போல ஆக வேண்டும், அதற்கான முயற்சிகள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும், உங்கள் பணிக்கு ஒவ்வொருவரையும் ஊக்குவித்தல் போதுமானது. உருவாகுவது கடினம். விவேகானந்தர் சொன்னதும் இதைதான்.
கலாம் அவர்களுடன் புகைப்படம் எடுப்பது என்பது எனது பாக்கியத்தை குறிக்கிறது.
அவர் மேடையில் நான் பேசுவது என்பது என் வளர்ச்சியை குறிக்கிறது.
அவர் என்னைப் பற்றி பேசுவது என்பது என் சாதனையை குறிக்கிறது.
கலாம் அவர்கள் என்னைப் பற்றி பேசுவதாக இருந்தால் நான் ஏதேனும் சாதித்திருந்தால் தானே பேசுவார்?
இதில் தனியாராதனை எங்கே இருக்கிறது?
இன்று யாரைக் கொண்டாடவேண்டும், யாருடன் புகைப்படம் எடுக்க ஆசைப்படவேண்டும் என்கிற தெளிவின்றி இளைஞர்கள் தறிகெட்டு திரிகிறார்கள். அவர்களில் ஒருவர் சிந்தனையையாவது நாம் இப்படி கூறி மாற்ற முடியாதா என்று துடிக்கிறேன். அதன் வெளிப்பாடு தான் நான் வெளியிட்ட இந்த மூன்று இலட்சியங்கள்.
மேலும் நான் இப்படி கூறியதன் உட்பொருளை பலர் அறியமாட்டீர்கள். ஒருவேளை இறைவன் அருளால் மேற்கூறியவை நிகழ்ந்தால் அந்த மேடையில் இதை பகிர்ந்துகொள்வேன்.
உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்: மற்றுஅது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.
நன்றி.
– சுந்தர்
நமது முன்னாள் ஜனாதிபதி அவர்களைப் பற்றிய பதிவு சிறப்பு. அவருக்கு எனது வணக்கங்கள். இறைவனின் கருணை அளவில்லாதது. நன்றி.
என் ரோல் மாடல் திரு. அப்துல் கலாம் அய்யா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்…! சுந்தர் அண்ணாவைப் போல், எனக்கும் அப்துல் கலாம் அவர்களை நேரில் சந்திக்க வேண்டும் என்பது என் வாழ்வின் மிகப் பெரிய ஆசை…! நடக்கும் என்று நம்புகிறேன்…!
—
ராமேஸ்வரத்தில் அய்யா வாழ்ந்த வீட்டை கண்காட்சி இல்லமாக மாற்றி இருக்கிறார்கள். திரு பி.எம் நாயர் உணர்ந்த இறைத்தன்மையின் அதிர்வலைகளை அங்கும் உணரலாம். நாம் ஒரு முறையேனும் காண வேண்டிய இடம் அது. ராமேஸ்வரம் செல்லும் வாய்ப்புக் கிடைத்தால் அவசியம் சென்று வாருங்கள்…!
—
“கடமையைச் செய்; பலனை எதிர்பார் ”
—
விஜய் ஆனந்த்
HAPPY BIRTHDAY TO THIRU ABDUL KALAM
REGARDS
UMA
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை.
அது போல் அதே இயற்க்கை நல்லார் வேண்டுகோள் ஏற்று சற்று பொறுத்து கொள்வதும் இங்கு காணமுடிகிறது.
நன்றி
ப.சங்கரநாராயணன்
அருமையான நிகழ்வு.
HAPPY BIRTHDAY TO OUR BELOVED KALAM SIR.
சுந்தர்ஜி,
என்ன ஒரு அருமையான சிந்தனைகள் . அந்த ஒரு நல்ல அசைக்க முடியாத சிந்தனைகளே தங்கள் வெற்றி பாதையை காட்டுகின்றது.வெற்றி நிச்சயம்.
கூடிய விரைவில் திரு அப்துல் கலாம் அவர்களுடன் போட்டோ எடுக்கும் நாள் நல்லதொரு திரு நாளாக அமையும்.
திரு. அப்துல் கலாம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்ல வயதில்லை வணங்குகின்றேன்.
என் வாழ்நாள் லட்சியம் இந்த மனிதருள் மாணிக்கத்துடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்வது.
சங்கர நாராயணன்
திரு கலாம் அவர்கள் உங்களை தேடி வந்து உங்களுடன் புகைப்படம் எடுக்க வேண்டுமாய் சந்தர்பத்தை உருவாக்கக் இறைவனை வேண்டுகிறோம்.
திரு கலாம் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது . நம் எல்லோருக்கும் லட்சிய நாயகனாக வளம் வந்தார். இனிமேல் அவரைப் போன்ற உன்னத மனிதரை நாம் எங்கே காண்போம். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .
அவரை சந்திக்க வேண்டும் என்ற தங்களின் லட்சிய கனவும் நிறைவேறாமல் போய் விட்டது.
அவர் கண்ட கனவை நாம் நிறைவேற்றுவோம்.
Whatsapp இல் நேற்று வந்த அவருடைய உரையை பதிவு செய்யவும்
நன்றி
உமா வெங்கட்
என்றென்றைக்கும் ஜனாதிபதி என்றால், உயர்திரு. ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் மட்டுமே. அவரின் கணவுகள் நிறைவேற வேண்டும். அதற்கு இறைவன் அருள் புரிய வேண்டும்.
கலாம் காலமானதை கணத்த மனதுடன் க்ரஹித்து கடக்கையில் அவரது நினைவலைகளை நினைவூட்டியது சற்றே ஆறுதல் அளிக்கிறது