மகாவி பாரதியின் பிறந்த நாள் டிசம்பர் 11 அன்று வருகிறது. அதையொட்டி டிசம்பர் 9, ஞாயிற்றுக் கிழமை அன்று சென்னையில் நமது தளம் சார்பாக அவரின் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.
விழா நடைபெறும் இடம், பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்கள் விபரம், நிகழ்ச்சி நிரல் உள்ளிட்டவை விரைவில் தெரிவிக்கப்படும்.
மோகத்தைக் கொன்றுவிடு – அல்லா லென்றன்
மூச்சை நிறுத்திவிடு;
தேகத்தைச் சாய்த்துவிடு – அல்லா லதில்
சிந்தனை மாய்த்துவிடு;
யோகத் திருத்திவிடு – அல்லா லென்றன்
ஊனைச் சிதைத்துவிடு;
ஏகத் திருவுலகம் – இங்குள்ளன
யாவையும் செய்பவளே !
பந்தத்தை நீக்கிவிடு – அல்லா லுயிர்ப்
பாரத்தைப் போக்கிவிடு;
சிந்தை தெளிவாக்கு – அல்லா லிதைச்
செத்த உடலாக்கு;
இந்தப் பதர்களையே – நெல்லா மென
எண்ணி இருப்பேனோ?
எந்தப் பொருளிலுமே – உள்ளே நின்று
இயங்கி யிருப்பவளே.
உள்ளம் குளிராதோ? – பொய்யாணவ
ஊனம் ஒழியாதோ?
கள்ளம் உருகாதோ? – அம்மா ! பக்திக்
கண்ணீர் பெருகாதோ?
வெள்ளக் கருணையிலே – இந்நாய் சிறு
வேட்கை தவிராதோ?
வில்லற் கரியவளே – அனைத்திலும்
மேவி யிருப்பவளே !
பாரதி க்கு என் வாழ்கையில் மிக முக்கியமான பங்கு உள்ளது …. பல தருணங்களில் சில பல மனிதர்களால் வருத்தமும் சோர்வும் அடையும் பொழுது அவருடைய “தேடி சோறு நிதம் தின்று …” எனக்கு மிக பெரிய ஊக்க மருந்து …
என் படுக்கை அறையில் ஓட்ட பட்டிருக்கும் இரு கவிதைகள் — “தேடி சோறு நிதம் தின்று …” மற்றும் “மனதில் உறுதி வேண்டும் …”
சென்ற நூற்றாண்டு மனிதர்களில் எனக்கு மிக சிறந்த வழிகாட்டி என்று சொன்னால் – அது என் பாரதியை தவிர வேறில்லை !!!
என்னால் முடிந்த வரையில் கண்டிப்பாக இந்த கருத்தரங்கத்துக்கு வர முய்ரச்சிக்கிறேன் ..அதற்க்கு தகுந்த படி நேரம் அமைத்து கொடுக்க அந்த ஆண்டவனை பிராத்திக்கிறேன் !!
———————————-
தங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். விபரங்களை விரைவில் தெரிவிக்கிறேன்.
– சுந்தர்
Just saw the news about happy occasion. Arise awake and stop not till the goal is reached. this is real hero’s function. Sir i too come
தமிழகமும் தமிழ் மக்களும் மறக்க கூடாத ஒரு தமிழ் வீரக் கவிஞனை தாங்கள் நினைவு கூர்ந்து பிறந்தநாள் வில்லா கொண்டாடுவது மிக சிறப்பு