ஒரு மனிதனுக்குப் பாராட்டு, புகழ்ச்சி, ஊக்கம் தேவைதான். ஆனால் அது ஒரு அளவு வரை கிடைத்தால் போதுமானது. அளவுக்கு மீறுகிற போதும், தகுதியற்ற பாராட்டை நாம் எதிர்பார்க்கிற போதும் நமக்கே அது வினையாகி விடுகிறது.
பலியாடு தனக்கு பூசப்படும் மஞ்சள் குங்குமம் மாலை மரியாதையை பார்த்து “ஆகா! நமக்குத்தான் இவர்கள் எவ்வளவு மரியாதை செய்கிறார்கள்” என்று அது நினைத்தால் அது எத்தனை அறிவீனமோ அத்தகைய அறிவீனம் தான் பாராட்டைக் கேட்டு நாம் குளிர்ந்துப் போவதும்!
நம்மைப் புகழ்கிறவர்கள் பெரும்பாலானவர்கள் சுயநலவாதிகளே. எனவே கவனம் தேவை.
மனித மனம் புகழ்ச்சிக்கு ஏங்கும் ஒரு மிகப் பெரிய பலவீனம். ஒருவர் நம்மை புகழ்ந்து நாலு வார்த்தை பேசிவிட்டால் போதும் நமக்கு தலை கால் புரிவதில்லே. நெருங்கிய நட்போ அல்லது வாழ்க்கைத் துணையோ அவர்களிடம் கூட ஷேர் பண்ணாத விஷயங்களை எல்லாம் நம்மை புகழ்கிறவர்களிடம் ஷேர் செய்ய ஆரம்பித்துவிடுவோம். அங்கே தான் நமக்கு அழிவே ஆரம்பமாகிறது. “நாம் யாரை நம்பி நமது கண்ணீருக்கான காரணங்களை சொல்கிறோமோ அவர்களே அதை உபயோகப்படுத்தி நம்மை அழவைத்துவிடுகிறார்கள்!”. கொஞ்சம் யோசிச்சு பாருங்கள்… வாழ்க்கையில் நீங்க கண்ணீர் சிந்திய பல தருணங்கள் இது போல உங்களை ஒரு காலத்தில் “ஆஹா ஓஹோ” என்று புகழ்ந்தவர்களால் தான் இருக்கும்.
நம்மை புகழ்கிறவர்களுடைய கருத்துக்களுக்கு நாம் ஒத்துப்போகும் வரை தான் நம் நட்பு அவர்களுக்கு இனிக்கச் செய்யும். ஆனால் ஒரு சிறு விஷயத்தில் கருத்து வேறுபாடு வந்துவிட்டால் போதும் அதற்கு பிறகு அவர்கள் நம் எதிரிகளாக மாறிவிடுவார்கள். ஒரு சிலர் அப்படி மாறிய பின்பு விலகி போய்விடுவார்கள். அவர்களால் நமக்கு ஆபத்தில்லை. கவலையுமில்லை. ஆனால், சிலர் மனதுக்குள் வஞ்சம் வைத்து ஏதேனும் ஒரு வகையில் பழி தீர்க்க காத்துக்கொண்டிருப்பார்கள்.
என்னைப் பொருத்தவரை என்னை மிக அதிகமாக புகழ்ந்தவர்களே என் மிகப் பெரிய எதிரிகளாக கடந்த காலங்களில் மாறியிருக்கிறார்கள். எனவே எப்போதும் என்னை புகழ்கிறவர்களிடம் நான் சற்று எச்சரிக்கையாகவே இருப்பேன். நீங்களும் அப்படித் தான் இருக்கவேண்டும்.
புகழ்ச்சி எப்படி ஆபத்தாக மாறுகிறது தெரியுமா? ஒருவர் நம்மை அளவுக்குட்பட்டோ அல்லது அளவுக்கு மீறியோ புகழும்போது, அவருக்கு நம்மிடம் ஏதேனும் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிடுகிறது. நம் கவனம், நேரம், உதவி, ஆலோசனை இப்படி ஏதேனும் ஒன்றை நம்மிடம் எதிர்பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அதை நாம் நிறைவேற்றமுடியாமல் போகும்போது அந்த எதிர்பார்ப்பு நம் மீது அதிருப்தியை ஏற்படுத்திவிடுகிறது. அதிருப்தி நாளடைவில் கோபமாக மாறுகிறது. கோபம் வஞ்சமாக மாறி நமக்கு குழிபறிக்கிறது.
எனவே புகழ் போதையை எடுத்த எடுப்பிலேயே கிள்ளி எறிந்துவிடவேண்டும்.
புகழ் பெற்றவர்கள் மேலும் புகழ் பெறுகிறார்கள் என்பது தவறு. புகழை வேண்டாம் என ஒதுக்கித் தள்ளுபவர்களைத் தேடி புகழ் மீண்டும் வருகிறது என்பதுதான் உண்மை. திறமைக்கு சரியான மதிப்பை எதிர்பார்ப்பவர்கள் புகழ்ச்சியான வார்த்தைகளில் மயங்கிவிடக் கூடாது.
1960 களின் இடையில் அறிஞர் அண்ணா ஒரு முறை தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்ற போது, தென்மாவட்ட தலைநகர் ஒன்றில் கட்டுங்கடங்காத கூட்டம் கூடியதாம். அதுவரை அப்படி ஒரு கூட்டத்தை திராவிட தலைவர்கள் கண்டதேயில்லையாம். தி.மு.க.வினர் பயங்கர உற்சாகத்தில் மூழ்கிவிட்டனர். அப்போது, அண்ணாவிடம் ஒரு இரண்டாம் மட்ட தலைவர் ஒருவர், “அண்ணே, உங்களுக்கு கூடும் கூட்டத்தை பார்த்தால் நிச்சயம் அடுத்து நமது ஆட்சி தான் போலிருக்கிறது…!!” என்றாராம்.
அதற்கு அண்ணா, “அடே முட்டாள்… இதே கூட்டத்திடம் நாளை இதே இடத்தில் என்னை நிற்கவைத்து சவுக்கால் அடிக்கபோவதாக சொல். இதை விட இரண்டு மடங்கு கூட்டம் அதைப் பார்க்க வரும்!” என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தாராம். எத்தனை உண்மை… அண்ணாவின் வார்த்தைகள்….!
சில நிறுவனங்களில் புதுப் புது ஊழியர்கள் நல்ல சம்பளத்துடன் பதவி உயர்வு பெற்றுக்கொண்டு எங்கேயோ போய்கொண்டிருப்பார்க்கள். ஆனால் அதே நிறுவனத்தில் நீண்ட காலமாக பணியாற்றும் ஒரு மூத்த ஊழியர் அதே சம்பளத்துடன் நீண்ட நாட்களுக்கு வேலை பார்த்துவருவார். சொல்லப்போனால் புதிதாக வேலைக்கு சேருபவர்களுக்கு பல விஷயங்களை கற்றுத் தருவது இவராகத் தான் இருக்கும். எல்லோரையும் விட அதிக விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கும் அந்த மூத்த ஊழியர் ஏன் முன்னேறிச்செல்ல முடியவில்லை? காரணம் என்னவென்றால், முதலாளிகளிடமிருந்து அவ்வப்போது வரும் புகழ் மாலைகளை அணிந்து கொண்டு தன்னிடமுள்ள திறமையின் மதிப்பையும், அதன் தேவையையும் உணராது என்றாவது ஒரு நாள் தான் சார்ந்திருக்கும் நிறுவனத்தில் தனக்கு பண ரீதியான மரியாதை நிச்சயம் கிடைக்கும் என்று தான். இவரை வார்த்தைகளால் புகழ்ந்து பேசிப்பேசி அதே நிலையில் வைத்திருப்பார்கள்.
இப்படி புகழ் வார்த்தைகளுக்கு அடிமையாகும் ஒவ்வொருவரும் தங்களுடைய திறமையின் மதிப்பை உணராமல் தங்களின் திறமைக்குக் கிடைக்க வேண்டிய அல்லது கிடைத்திருக்க வேண்டிய பலனை மட்டுமே நினைத்து, நினைத்து காலந்தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் ஆரம்பத்தில் தன்னுடைய திறமையின் மதிப்பு என்னவென்று தெரிந்துதான் இருக்கிறது. ஆனால் அவர்களுக்குக் கிடைக்கும் அதீத புகழ்ச்சியானது அந்த மதிப்பை மறக்கச் செய்துவிடுகிறது. மற்றவர்களின் புகழ் வார்த்தைகளில் மயங்கி, தான் இருக்குமிடம்தான் உலகம் என்று எண்ணி தங்களுடைய திறமையின் மதிப்பை தாங்களும் உணராமல் மற்றவர்களுக்கும் உணர்த்தாமல் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே இருந்துவிட்டு மறைந்து போகிறார்கள்.
உன்னைப் புகழும்போது செவிடனாக இரு!
உன்னை இகழும்பொது ஊமையாக இரு!!
முன்னேற துடிப்பவர் மனதில் செதுக்க வேண்டிய வைர வரிகள் இவை.
==========================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.
Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!
Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215 | E-mail : editor@rightmantra.com
==========================================================
Also check :
வெற்றுப் படகுகளை கண்டால் என்ன செய்வீர்கள்?
நம்முடைய மதிப்பை உயர்த்துவது எது?
அள்ளிக்கொடுத்த வள்ளலும் நன்றி மறந்த புதுப்பணக்காரனும்!
வாழ்க்கையில் வெற்றி என்பது உண்மையில் என்ன?
எதுக்கு இந்த விஷப்பரீட்சை? உன்னால ஜெயிக்க முடியுமா??
எல்லோருக்கும் பொதுவான ஒரு மிகப் பெரிய சொத்து!
‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?
செய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமை தான் நமது செல்வம்!
வியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா?
எது உண்மையான வெற்றி? எது உண்மையான தோல்வி?
What is the real meaning of PRECIOUS ? மதிப்புமிக்கது என்றால் என்ன ?
இன்று கிடைக்கும் தேன்துளி Vs நாளை கிடைக்கக்கூடிய வெகுமதி!
பாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா?
ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?
விதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா?
நாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் ?
‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’
எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? –
வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா?
பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா?
சந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்
மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா ?
இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ?
நடப்பதெல்லாம் நன்மைக்கே! நடக்காதது இன்னும் நன்மைக்கே!!
அனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் ?
நினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்!
மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா?
================================================
Don’t miss this….
எதுக்குமே டயம் இல்லை சார்… என்ன பண்றது?
தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே!
================================================
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….
http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
==========================================================
[END]
அருமையான மற்றும் பொருத்தமான பதிவு.
புகழ்ச்சிக்கு மயங்கும் போது நமக்கு கிடைக்க வேண்டிய உண்மையான அங்கீகாரம் மறைமுகமாக மறுக்கப்படுகிறது.
சில சமயங்களில் நமது மனமே மற்றவர்களின் புகழ்ச்சிக்காக ஏங்குகிறது.பாராட்டு தேவை தான். அதே நமது முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தால் என்ன செய்வது?
அதனால் நமக்கு நாமே நீதிபதியாக இருந்து நமது செயல்களை judge பண்ணும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நமது மனதை விட நம்மை 100% சரியாக மதிப்பிடுபவர்கள் யாரும் இல்லை.
இது போல சுய சிந்தனை வளர்க்கும் கட்டுரைகள் எங்கள்ளுக்கு மிகவும் பயனளிகறது. வளர்க உங்களது பணிகள்.
முற்றிலும் வித்தியாசமான பதிவு. பதிவில் நீங்கள் கூறியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை. கடந்த காலங்களில் நானும் இதை உணர்ந்திருக்கிறேன். ஏன் ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பார்கள். புகழ் போதை மது போதையைவிட ஆபத்தானது. இப்பதிவு பலர் கண்களை திறக்கும் என்பது உறுதி. வாரத்தின் துவக்கத்தில் நல்லதொரு பதிவை தந்தமைக்கு நன்றி.
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்
சார்
சிம்ப்லி சூப்பர். உண்மாயில் வைர வரிகள் தான்.
நன்றி
லோஹாபிராமன்
சுபெர்ப் ஸ்பெஷல்
நிதர்சனமான உண்மை.
அருமையான பதிவு .
உன்னைப் புகழும்போது செவிடனாக இரு!
உன்னை இகழும்பொது ஊமையாக இரு!!
—
வெற்றி ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஓடிக் கொண்டிருப்பவர்கள் மனதில் இருத்த வேண்டிய வரிகள் இவை…!
குதிரைக்குக் கட்டியிருக்கும் கடிவாளம் போல….! மிகவும் ஆழமாக பதிந்து விட்டது அண்ணா…! உங்கள் பதிவுக்கு நன்றி…!
—
“கடமையைச் செய்; பலனை எதிர் பார்”
—
விஜய் ஆனந்த்
Dear sir,
I fully agree with the contents of your article and i used to say frankly that no one is needed to appreciate me for anything which i do officially or unofficially. As pointed out seniors are neglected in all sectors and that too in government services as they don’t try to please the superiors and don’t bend rules. But as pointed out in let us do our duties without worrying about results and leave the good or bad to almighty.
Thanking you
Yours faithfully
S.Chandra Mouli
அருமையான பதிவு…………நன்றிகள் பல……..
பதிவு அருமை….
ஒருவர் தன்னுடைய திறமையை உலகிற்கு வெளிப்படுத்தியதும் சமுதாயம் அவர்களுக்குக் கொடுக்கும் அதீத புகழ்ச்சி வார்த்தைகள் மற்றும் பரிசுகள் அவர்களை அடுத்த நிலை பற்றி சிந்திக்காத அளவுக்கு மயக்கத்தை உண்டாக்குகிறது. இந்தப் புகழ் வார்த்தைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளும் நபர்களுக்கு இனி இந்தத் துறையில் நம்மை மிஞ்ச ஆளே இல்லை போலிருக்கிறது” என்ற எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது.
புகழ் போதை
வார்த்தைகளில் கிட்டிய போதை
வாழ்க்கைப் பாதையை மறைக்கும்..
கழ் வார்த்தைகளில் மயங்கி, தான் இருக்குமிடம்தான் உலகம் என்று எண்ணி தங்களுடைய திறமையின் மதிப்பை தாங்களும் உணராமல் மற்றவர்களுக்கும் உணர்த்தாமல் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே இருந்துவிட்டு மறைந்து போகிறார்கள்.
பயனுள்ள நம் உலக பார்வையை திறக்க வைக்கும் பதிவு…
Pragmatic Facts… Liked a lot… Hv read it twice…
அருமையான பதிவு…………நன்றிகள் பல……..
நந்தா கோபால்
வந்தவாசி
என்னுடைய வாழ்க்கையில் நடந்தது . மிக துல்லியமாக சொன்னீர்கள் நண்பரே படித்தவர்கள் தெளிவு பெறட்டும்
நன்றி மட்டும் சொல்கிறேன் நன்றி கோடி மை சூ பாண்டியன்