Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, November 8, 2024
Please specify the group
Home > Featured > “நான் உன்னை மறவேன். நீ என்னை மறக்காதே!” — ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்!!

“நான் உன்னை மறவேன். நீ என்னை மறக்காதே!” — ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்!!

print
ள்ளிமலை ஸ்வாமிகள் என்றழைக்கப்பட்ட சச்சிதானந்த ஸ்வாமிகள், தான் ஜீவனோடு இருந்தபோதே வள்ளிமலை ஆஸ்ரமத்தை வள்ளிமலையில் நிறுவினார். மகா மந்திரம் என்றழைக்கப்பட்ட திருப்புகழின் பெருமைகளை பரப்ப, திருப்புகழ் பஜனை சபைகளை நிறுவ சென்னை உட்பட பல நகரங்களுக்கு அடிக்கடி சென்றுவருவார். அவரால் நாத்திகத்தை கைவிட்டு ஆத்திகத்தை தழுவியர் பலர் உண்டு. அவர் நிகழ்த்திய அற்புதங்கள் பலப் பல.

Vallimalai Sachidhananda Swami

(Please check : அடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் ! ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்!)

வள்ளிமலை ஸ்வாமிகள் சுறுசுறுப்புக்கு பெயர் பெற்றவர். ஒரு இடத்தில நிற்கமாட்டார். ஓடிக்கொண்டே இருப்பார். ஒருமுறை அப்படி அவர் சென்னை வரும்போது லிங்கி செட்டி தெருவில் திருப்புகழ் பஜனை நடைபெற்றது. சுமார் பன்னிரண்டு வயதுடைய ஒரு இளம் மங்கை வந்து தனக்கு திருப்புகழ் பாடத் தெரியும் என்றும் தன்னுடன் அடுத்து பாடவிருக்கும் சபாவில் பாடவேண்டும் என்றும் கேட்டுகொண்டாள். ஸ்வாமிகள் ஒப்புக்கொள்ள,

வள்ளிமலை பொங்கி அம்மன்
வள்ளிமலை பொங்கி அம்மன்

விரகற நோக்கியும் உருகியும் வாழ்த்தியும்
விழிபுனல் தேக்கிட  அன்பு மேன்மேல்
மிகவுமி ராப்பகல் பிறிதுப ராக்கற
விழைவுகு ராப்புனை  யங்குமார

என்று தொடங்கும் திருப்புகழை அப்பெண் தேனினும் இனிய குரலில் சுமார் ஒரு மணி நேரம் பாடினாள்.

அப்பெண் பாடி முடித்தவுடன், ஸ்வாமிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பாராட்டி தள்ளிவிட்டார்.

“வெறும் பாராட்டு மட்டும் தானா? எனக்கு பரிசு எதுவும் கிடையாதா?” என்று அந்த பெண் கேட்க, “என் உயிரைக் கூட உன் பாடலுக்கு தரலாமம்மா… உனக்கு என்ன வேண்டும்?’

“எனக்கு ஒன்றும் வேண்டாம்… நீங்கள் வைத்திருக்கும் வெற்றிலைப் பெட்டியை கொடுத்தால் போதும்!”

மிகவும் மகிழ்ச்சியோடு அந்த வெற்றிலை பெட்டியை அப்பெண்ணுக்கு கொடுத்தார் ஸ்வாமிகள். அந்த வெற்றிலைப் பெட்டியில், வெற்றிலைப் பாக்கும், ஒரு ஐந்து ரூபாய் நோட்டும், சில சில்லறைக் காசுகளும் இருந்தன.

அவள் அங்கிருந்து சென்ற பின்னர் தான் ஸ்வாமிகளுக்கு தோன்றியது, அவள் யார், எந்த ஊர், என்ன பேர் என்று கூட கேட்காமல் விட்டுவிட்டோமே என்று.

இது நடந்து சில நாட்களுக்கு பின்பு வள்ளிமலைக்கு திரும்பும்போது, அங்கே பொங்கி அம்மனின் முன்பாக அந்த வெற்றிலைப் பெட்டி காணப்பட்டது. அதில் கீழ்கண்ட குறிப்பு காணப்பட்டது : “நான் உன்னை மறவேன். நீ என்னை மறக்காதே! – பொங்கி” என்று எழுதப்பட்ட ஒரு சிறு குறிப்பு காணப்பட்டது.

வள்ளிமலையில் எழுந்தருளி அருள்பாளித்த்துவரும் பொங்கியம்மன் ஒரு வரப்பிரசாதி. ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது வள்ளி மலையில் உள்ள முருகனின் ஆலயத்துக்கு சென்று தரிசிக்க வேண்டும் என கிருபானந்தவாரியார் ஸ்வாமிகள் கூறுவது உண்டு.

முடியாப் பிறவிக் கடலிற் புகார் முழுதும் கெடுக்கும்
மிடியாற் படியில் விதனப்படார் வெற்றி வேற்பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலமடங்கப்
பொடியாக்கிய பெருமாள் திருநாமம் புகல்பவரே

நமது தளம் சார்பாக வள்ளிமலை பயணம் ஒன்று விரைவில் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

==================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குவது தனது திருமுறை, திருப்புகழ் தொண்டுக்காக திருப்புகழ் செம்மணி, சைவ சித்தாந்த ஞானாம்பிகை, திருமுறைச் சுடர், திருமுறை தீபம், திருமுறைத் தமிழ் மணி, ஏழிசை வல்லபி, திவ்யபிரபந்த மணி, சித்தாந்த செம்மல், பெரும்பாண நங்கை உள்ளிட்ட பல பட்டங்களை பெற்றுள்ள அன்னை ஸ்வர்ணா சோமசுந்தரம் அவர்கள்.

swarna somasundaram amma pooja room

நாம் செய்த பாக்கியம்!

அன்னையை பற்றியும் அவருடனான நமது சந்திப்பை பற்றியும் அறிந்துகொள்ள இந்த பதிவை பார்க்கவும். (திருமுறை, திருப்புகழ் விளக்கை அனைவருக்கும் ஒளிரச் செய்யும் ஓர் அன்னை!)

அன்னையின் வீட்டு பூஜை அறையே ஒரு கோவில் தான். இந்த ஆலயத்தில் கணபதி விக்ரகம் பிரதானமாக உள்ளது. பக்கவாட்டில் தக்ஷிணாமூர்த்தி சிலை ஒன்றும் உண்டு. தவிர திருப்புகழ் ஸ்வாமிகள் என்றழைக்கப்பட்ட வள்ளிமலை ஸ்வாமிகள் படமும், முருகன் படமும் உண்டு.

அன்னை, பூஜை அறையை நம்மிடம் காண்பித்த பின்னர், மீண்டும் ஹாலுக்கு வந்தபிறகு கூட பூஜை அறையின் அழகு நம் மனதை விட்டு நீங்க மறுத்தது. உங்களுக்காக எப்படியும் அதை படம்  பிடிக்க வேண்டும் என்று கருதி ‘அம்மா… ஒரே ஒரு விண்ணப்பம். உங்கள் பூஜையறை முன்பு உங்களை நிற்க வைத்து ஒரே படம் எங்கள் வாசகர்களுக்காக எடுத்துகொள்கிறேன்…” என்றோம் தயங்கித் தயங்கி.

“ஹூம். இதென்ன… வம்பாப் போச்சு…” என்று சிரித்துக்கொண்டே நின்றார்கள்.

சாட்சாத் அந்த அம்பாளே நிற்பது போல நமக்கு தெரிந்தது.

Swarna Somasundaram amma

அன்னையின் ஸ்பரிசமே நமது பிறவிப் பிணி தீர்க்கும் என்றால், அவர்கள் நமக்காக பிரார்த்தனை செய்தால்?

நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி நமக்காக பிரார்த்தனை செய்யவேண்டும் என்று கேட்டுகொண்டபோது, மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். யாருக்காக பிரார்த்தனை செய்யவேண்டும், பொது பிரார்த்தனை என்ன என்பது உள்ளிட்ட விஷயங்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு சொல்வதாக கூறியிருக்கிறோம்.

தேவார, திருப்புகழ், திவ்யபிரபந்த தொண்டுக்கென்றே தன்னை அற்பணித்துகொண்டுள்ள அன்னை ஸ்வர்ணா சோமசுந்தரம் அவர்கள் நமக்காக பிரார்த்தனை செய்வது நாம் செய்த பாக்கியமே அன்றி வேறொன்றுமில்லை.

எல்லாம் அவன் செயல்!

==================================================================

இந்த வார பிரார்த்தனைகளுக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

Lost my child during delivery

Dear Sundar sir and Rightmantra friends,

I am manju krishnamurthy from Tirupur. Previously i submitted my prayer for child birth. With blessings of Maha Periyava i was conceived. But the God didn’t shower his blessing on me fully. Sadly my baby died at the time of delivery. I trusted Maha Periyava completely that he will be with me always. But now i feel depressed very much which leads to me negative thinking and some times i don’t want to live. Please pray for me to overcome this trying times and to be blessed with a child.

Thank you all….

Regards
Manju Krishnamurthy,
Tiruppur

==================================================================

பிரிந்துவிட்ட சகோதரரின் குடும்பம் ஒன்று சேரவேண்டும்!

வணக்கம் அண்ணா…

என் பெயர் ராக்கி ரமேஷ்.  கோவையில் வசிக்கிறேன். நமது தளத்தை நீண்ட நாட்களாக பார்த்துவருகிறேன். நமது தளத்தில் இடம்பெற்ற ‘தினசரி பிரார்த்தனை’ பாடலை பாடாமல் நான் அன்றைய நாளை துவக்குவதில்லை.

என் உடன் பிறந்த அண்ணனும், அண்ணியும் (தினேஷ், ரேவதி) கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்கள். மூன்று வருடங்களாகிறது இன்னும் ஒன்று சேரவில்லை. அவர்களுக்கு தீபக் சபரி, லாவண்யா என்ற இரு குழந்தைகள் உண்டு. அனைவரிடமும் உள்ள குறைகள் நீங்கி, நிறைகள் பெருகி, அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க, அனைவரையும் பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

– ராக்கி ரமேஷ்,
கோவை.

==================================================================

இது நமது பிரார்த்தனை!

தலைவரை இழந்து தவிக்கும் குடும்பம் ஆறுதல் பெறவேண்டும்!

நமது வாசகி பரிமளம் அவர்களின் கணவர் திரு.மணிமாறன் சென்ற வாரம் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென காலமாகிவிட்டார். அவரை இழந்து வாடும் நம் சகோதரிக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. குடும்பப் பொறுப்பை முழுதும் நிறைவேற்றாமலே (மகன்களுக்கு திருமணம்) திரு.மணிமாறன் சென்றுவிட்டார். தற்போது பாரம் முழுதும் பரிமளம் அவர்கள் மேல் விழுந்த்ள்ளது. அவர்கள் நல்லபடியாக தனது பொறுப்புக்களை நிறைவேற்றி, தன் குடும்பத்தை கரைசேர்க்க இறைவன் அருள் புரியவேண்டும். அவர்கள் ஏற்கனவே அனைத்துவித கஷ்டங்களையும் பட்டுவிட்டவர் என்பதால் இனியும் அவரை சோதிப்பது இறைவனுக்கு அழகல்ல. அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான உதவிகள் அனைத்தையும் இறைவன் தந்து இரட்சிக்கவேண்டும். கணவனை இழந்து கலங்கித் தவிக்கும் அவர் மன அமைதி பெறவேண்டும்.  பிரதோஷத்தன்று பிரிந்த திரு.மணிமாறன் அவர்களின் ஆன்மா, சிவஜோதியில் கலந்து பேரின்ப பெரு நிலையில் திளைக்கவேண்டும். இதுவே நமது பிரார்த்தனை.

–  சுந்தர் மற்றும் ரைட்மந்த்ரா உழவாரப்பணி நண்பர்கள்.

==================================================================

பொது பிரார்த்தனை

ஏழை நாடுகளை அச்சுறுத்தி வரும் எபோலா என்கிற அரக்கன்!

கடந்த பிப்ரவரி மாதம் கினியாவில் பரவத் தொடங்கிய எபோலா என்னும் விஷத் தொற்றுநோய் அண்டை நாடுகளான லைபீரியா, சியரா லியோன், நைஜீரியா, செனெகல் ஆகிய நாடுகளிலும் பரவியதில், இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. குழந்தைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நோயினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள கினியா, லைபீரியா மற்றும் சியரா லியோன் நாடுகளில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக எடுக்கப்பட்ட கணிப்பீடுகளின் முடிவுகளே இவை என்று கூறப்படுகின்றன. இந்த நாடுகளிலும் லைபீரியாவே மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Ebola

பெற்றோர்கள் இறந்ததினால் புறக்கணிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு பராமரிப்பு கிடைப்பது என்பது மிகவும் கடினமாக உள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவிக்கின்றது.

இக்குழந்தைகளின் உறவினர்கள் தங்களின் பெற்றோர்கள் இறந்து போன மருத்துவமனைகளிலேயே ஆதரவற்றவர்களாக உள்ளனர். மூன்று, நான்கு வயதுடைய குழந்தைகள் கூட இவ்வாறு காணப்படுவதாக யுனிசெப் கூறுகின்றது.

மேற்கு ஆஃப்ரிக்காவில் எபோலா நோய் தொற்றுக்கு பலர் உயிரிழந்து வரும் நிலையில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஐ.நாவின் கணக்குப்படி இதுவரை 4 ஆயிரம் குழந்தைகள் ஆதரவு அற்றவர்களாக மாறியுள்ளது தெரிய வந்துள்ளது. பெற்றோர் இல்லை என்பதை கடந்து தங்களது நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டார்களாலும் இவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தொண்டு நிறுவனத்தினர் கூறுகின்றனர். ஒரு சிலருக்கு தொண்டு நிறுவனங்களின் உதவி கிடைத்துள்ள நிலையில் பலருக்கு எவ்வித உதவிகளும் இல்லை என கூறப்படுகிறது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களில், பதிவு செய்யப்படும் ஆதரவற்ற குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

மேற்கத்திய நாடுகளில், வளர்ந்த நாடுகளில் ஒரு சில இடங்களில் இந்த நோய் தலையை நீட்டினாலும் இந்த நோயால் மிகவும் பாதிக்க்ப்பட்டிருப்பது சுகாதார வசதிகள் குறைவாக உள்ள ஆப்பிரிக்க நாடுகளே. ஏற்கனவே ஏழ்மையில் வாடும் ஆப்பிரிக்க நாடுகள் இந்த நோயால் செய்வதறியாது கலங்கித் தவிக்கின்றன.

எபோலா அரக்கனின் கோர தாண்டவம் முடிவுக்கு வர, எல்லாம் வல்ல ஆடல்வல்லானிடம் இறைஞ்சுவோம்.

(எபோலா பாதிப்பை காண்பிக்கும் படத்தை தேர்வு செய்வது சவாலாக இருந்தது. காரணம், பல படங்கள் இரத்தத்தை உறைய வைக்கும் அளவு கொடுமை. அவற்றை அப்படியே உங்களுக்கு காட்டினால், நீங்கள் நான்கு நாட்கள் சாப்பிட மாட்டீர்கள். தூங்க மாட்டீர்கள். இறைவன் நம்மை எவ்வளவோ நல்ல நிலைமையில் வைத்திருக்கிறான். அதற்கு முதலில் நன்றி சொல்வோம்.)

==================================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgகுழந்தை பிறந்தவுடன் இறந்த துக்கத்தில் இருக்கும் வாசகி மஞ்சு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஆறுதல் பெறவும், அவர்களுக்கு ஆரோக்கியமான அழகான குழந்தை மீண்டும்  பிறக்கவும், வாசகர் ராக்கி ரமேஷ் அவர்களின் அண்ணன் தினேஷ் அவர்கள் குடும்பம் ஒன்று  சேரவும்,  கணவனை இழந்து வாடும் சகோதரி பரிமளம் அவர்கள் ஆறுதல் பெறவும், தனது கடமைகளை அவர் இனி செவ்வனே நிறைவேற்றவும் எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுவோம். ஏழை நாடுகளை அச்சுறுத்தி வரும் எபோலா என்கிற அரக்கனின் பிடியில் இருந்து உலகம் மீளவும், அந்த நோய் அடியோடு ஒழியவும் இறைவனை வேண்டுவோம். ஏழையாய் பிறப்பதே ஒரு தண்டனை தான். அதுவும் ஆப்பிரிக்க நாடுகளில் பிறப்பது அதைவிட பெரிய தண்டனை. அங்கும் இது போன்ற நோய் தாக்கி மாள வேண்டுமா? இறைவா… கருணை காட்டு!

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : அக்டோபர் 12, ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

=============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=============================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131

=======================================================

[END]

8 thoughts on ““நான் உன்னை மறவேன். நீ என்னை மறக்காதே!” — ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்!!

  1. வணக்கம்……….

    நம் பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்றிருக்கும் கோரிக்கைகளுக்காக பிரார்த்திப்போம்…….அம்மாவின் பிரார்த்தனையாலும், குரு மற்றும் திருவின் அருளாலும் நம் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்…

    எபோலா நோயின் தாக்கம் பயத்தை ஏற்படுத்துகிறது…….ஆதரவற்ற குழந்தைகளின் நிலை வருத்தத்தை ஏற்படுத்துகிறது……..இறைவன் திருவருளால் இந்த விஷ நோய் நீங்கவும், இது போன்ற தொற்று நோய்கள் இனியும் ஏற்படாமல் இருக்கவும், குழந்தைகளுக்கு சரியான ஆதரவும், பாதுகாப்பும் கிடைக்கவும் பிரார்த்திப்போம்……..

  2. அன்னை ஸ்வர்ணா சோமசுந்தரம் அவர்கள் வீட்டில் உள்ள அந்த வள்ளிமலை ஸ்வாமிகள் விக்ரகம் அருமை… அழகு. வள்ளிமலை ஸ்வாமிகளுக்கு பொங்கியம்மன் அருள்புரிந்த சம்பவம் சிலிர்க்கவைக்கிறது. எங்கேயிருந்து தான் இப்படிப்பட்ட புதுப் புது கேள்விப்படாத சம்பவங்களை கதைகளை உங்களால் திராட்ட முடிகிறதோ… பல முறை வியக்கிறேன்.

    நீங்கள் சொல்வது போல அன்னை ஸ்வர்ணா சோமசுந்தரம் அவர்கள் நமது பிரார்த்தனைக்கு தலைமை தாங்குவது நாம் செய்த புண்ணியம் தான். அவர்கள் பூஜையறை உண்மையில் ஒரு கோவில் தான். நேரில் தரிசித்த நீங்கள் பாக்கியசாலி.

    திருப்பூர் வாசகி மஞ்சு கிருஷ்ன்மூர்த்திக்காகவும், ராக்கி ரமேஷ் அவர்களின் சகோதரர் தினேஷ் அவர்களின் குடும்ப ஒற்றுமைக்காகவும், பரிமளம் அவர்களின் குடும்பம் அமைதி பெறவும், அவர் கணவர் மணிமாறன் அவர்கள் சிவபததில் கலந்து லயிக்கவும் இறைவனை வேண்டுவோம். எபோலா நோயின் கொடுமை முழுவதும் நீங்க இறைவனை இறைஞ்சுவோம்.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  3. அன்னை ஸ்வர்ணா சோமசுந்தரம் அவர்களின் பூஜை அறை பார்த்தவுடன் மனதிற்கு மிகவும் அமைதியை தருகிறது.

    கடவுளைப் போல் நம்மையும், நமது உணர்வுகளையும் 100% புரிந்து கொள்ளக்கூடியவர்கள் யாரும் இல்லை.
    நாம் அவரை நினைக்காவிடினும் அவர் நம்மை 24 மணி நேரமும் நினைத்துக் கொண்டு தான் இருக்கிறார்.
    அவரைப் போல நேசிக்க முடியா விட்டாலும்,அவரை போல பாசம் வைக்க முடியாவிட்டாலும் , நாம் அவரை கொஞ்சமாவது நேசிப்போம்.

    “நான் உன்னை மறவேன். நீ என்னை மறக்காதே!”——- தலைப்பே மிகவும் அருமையாக உள்ளது.
    கடவுளுக்கு நாம் கைங்கரியம் செய்யவில்லை. அவன் தான் நம்மை செய்ய வைக்கிறான். ஆட்டுவிப்பவன் அவன். வெறும் பொம்மைகள் மட்டும் தான் நாம் என்பதை எப்போதும் நினைவில் கொள்வோம்.

    இந்த வார கோரிக்கை வைத்திருக்கும் வாசகி மஞ்சு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நிலைமையை எண்ணி மனம் மிகவும் வருந்துகிறது. இறைவா, “எங்களுக்காவது மழலை பாக்கியம் இதுவரை இல்லை என்று மனதை நாங்களே சமாதானம் செய்து கொள்வோம். ஆனால் அந்த சுகத்தை, பாக்கியத்தை மஞ்சு கிருஷ்ணமூர்த்திஅவர்களுக்கு தந்தும் அதை ஏன் இறைவா உடனே பறித்து விட்டாய்? உன்னை கேள்வி கேட்க எங்களுக்கு துணிவு இல்லை தான் ? ஆயினும் வேறு யாரிடம் நாங்கள் கேட்போம்? யார் தான் எங்களுக்கு ஆறுதல்?

    தயவு செய்து அந்த நல்ல உள்ளத்துக்கு ஆறுதலையும், மன திடத்தையும், மீண்டும் ஒரு நல்ல செய்தியையும் கூடிய விரைவில் தா இறைவா. அந்த தாய் படும் வேதனையை நீ அறியாயோ இறைவா? நீயே ஒரு தாயுள்ளம் கொண்ட கருணா மூர்த்தி. அவர்களுக்கு உன்னை தவிர யாராலும் ஆறுதல் தர முடியாது”.

    இந்த உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு உயிர் இழப்பு மட்டும் தான். கணவனை, குடும்ப தலைவனை பிரிந்து மீளா துயரில் இருக்கும் அந்த குடும்பத்திற்கு ஆறுதலையும், தைரியத்தையும், மன உறுதியையும் உன்னால் மட்டுமே தர முடியும் இறைவா. மேலும் திரு.மணிமாறன் அவர்களின் ஆன்மா சாந்தி அடையவும் இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்.

    ராக்கி ரமேஷ் அவர்களின் அண்ணன் தினேஷ் அவர்கள் குடும்பம் ஒன்று சேரவும், பெற்றோர்களை பிரிந்து இருக்கும் குழந்தைகள் சந்தோசம் அடையவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.

    ஏழை நாடுகளை அச்சுறுத்தி வரும் எபோலா என்கிற அரக்கனின் பிடியில் இருந்து உலகம் மீளவும், அந்த நோய் அடியோடு ஒழியவும் இறைவனை வேண்டுவோம்.

  4. வள்ளி மலை சுவாமிகளிடத்தில் இறைவி செய்த திருவிடயாளலை பற்றி படிக்கும் பொழுதே மெய் சிலிர்கிறது. அறிய தகவலுக்கு நன்றிகள் பல. நாமும் வள்ளி மலை பயணத்தில் என் மகனுடன் கலந்து கொள்ள ஆவலாக உள்ளோம். வள்ளி மலை ஸ்வாமிகள் படம் அருமை.

    இந்த வார பிராத்தனைக்கு தலைமை தாங்கும் திருமதி சொர்ணா சோம சுந்தரத்திற்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அவர்கள் பூஜை அறையின் முன் இருக்கும் போட்டோ மிக அற்புதமாக உள்ளது. சிவகாமி அம்மையை நேரில் பார்ப்பது போல் உள்ளது. அவர்கள் இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குவதில் மிக்க மகிழ்ச்சி

    இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் அனைவருக்காகவும் மற்றும் பரிமளம் அவர்கள் குடும்பத்திற்காகவும் பிரார்த்தனை செய்வோம். திருமதி பரிமளம் அவர்களுக்கு கடவுள் இனிமேலும் சோதனைகளை தராமல் அவர்கள் குடும்பத்தை அந்த ஈசன் காக்க வேண்டும். மற்றும் நாட்டு நலனுக்காகவும் பிரார்த்தனை செய்வோம்.

    லோகா சமஸ்தா சுகினோ பவந்து

    ராம் ராம் ராம்

    நன்றி
    உமா

  5. குழந்தை பிறந்தவுடன் இறந்த துக்கத்தில் இருக்கும் வாசகி மஞ்சு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஆறுதல் பெறவும், அவர்களுக்கு ஆரோக்கியமான அழகான குழந்தை மீண்டும் பிறக்கவும், வாசகர் ராக்கி ரமேஷ் அவர்களின் அண்ணன் தினேஷ் அவர்கள் குடும்பம் ஒன்று சேரவும், கணவனை இழந்து வாடும் சகோதரி பரிமளம் அவர்கள் ஆறுதல் பெறவும், தனது கடமைகளை அவர் இனி செவ்வனே நிறைவேற்றவும் எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுவோம் –

  6. வள்ளி மலை சுவாமிகளின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை அறிந்து கொள்ள உதவியதற்கு நன்றிகள். கையில் கிடைத்தது, கை நழுவி விட்டது வேதனையானது தான். சகோதரி மஞ்சு கிருஷ்ணமூர்த்தி மனம் துயரிலிருந்து மீண்டு வரவும், தம்பி ராக்கி ரமேஷ் அவர்களின் குடும்பம் ஒன்று சேர்ந்து ஒற்றுமையுடன் நீண்ட காலம் வாழவும், பரிமளம் அவர்களின் மனம் தைரியம் அடையவும், எபோலா வைரஸின் கொடுமை நீங்கி அம்மக்கள் நலம் பெறவும், எங்கள் அன்னையுடன் நாங்களும் இணைந்து மகாபெரியவா அவர்களின் பொற்பாதத்தை வேண்டிக்கொள்கிறோம்.

  7. குழந்தை பிறந்தவுடன் இறந்த துக்கத்தில் இருக்கும் வாசகி மஞ்சு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஆறுதல் பெறவும், அவர்களுக்கு ஆரோக்கியமான அழகான குழந்தை மீண்டும் பிறக்கவும், வாசகர் ராக்கி ரமேஷ் அவர்களின் அண்ணன் தினேஷ் அவர்கள் குடும்பம் ஒன்று சேரவும், கணவனை இழந்து வாடும் சகோதரி பரிமளம் அவர்கள் ஆறுதல் பெறவும், தனது கடமைகளை அவர் இனி செவ்வனே நிறைவேற்றவும் எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுவோம் –

  8. Emperuman thiruvadi pala kalam thointha idam valli malai. Migavum mukiamana sthalam.
    Migavum arumaiyana varigal.Vetrivel perumal adiyarku nalla perumal.

    Vaariyar swamigal than ange rajagopuram ezhupinar.

    Om Saravana bhava.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *