பரிமளம் அவர்களின் கணவர் திரு.மணிமாறன் (55) அவர்கள் இன்று காலை உணவு உட்கொள்ளும்போது, மூச்சடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார் என்று தகவல் கிடைத்தது. பரிமளம் அவர்களின் அண்டை வீட்டு பெண் ஒருவர் நமக்கு தகவல் சொன்னார். நம்மால் நம்ப முடியவில்லை. நேற்று கூட நமது கடந்த வார பதிவுகளை படித்து பின்னூட்டம் இட்டிருந்தார் பரிமளம். ஆயுத பூஜை அன்று கூட அவர்களிடம் பேசினோம்.

அண்ணா பலகலைக்கழகத்தில் அதிகாரியாக பணிபுரியும் திரு.மணிமாறன் அவர்களுக்கு ஏற்கனவே ஒரு முறை மாரடைப்பு (1st attack) சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்டு, ஓய்வெடுத்து வந்தார். தற்போது குணமாகி மீண்டும் பணியில் சேரவிருந்த நேரத்தில் இப்படி ஆகிவிட்டது துரதிர்ஷ்டம்.
பரிமளம் – மணிமாறன் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்தவர் படித்து முடித்து அயல்நாட்டில் வேலையில் உள்ளார். இளைய மகன் நான்காம் ஆண்டு பொறியியல் படித்துவந்தார்.
மூத்த மகன் சமீபத்தில் தான் தந்தைக்கு உடல் நலமில்லை என்று தெரிந்து 2 மாத விடுப்பு எடுத்து வந்திருக்கிறார். இரண்டு பிள்ளைகள், மற்றும் மனைவி ஆகியோர் அருகில் இருக்கும்போதே மணிமாறன் அவர்களது உயிர் பிரிந்துவிட்டது. இது தான் இறைவன் திருவுள்ளம் போலும். நாளை நடப்பதை யாரறிவார்?
மணிமாறன் அவர்கள் இறைவனடி சேர்ந்த தகவல் நமக்கு கிடைத்தவுடன், நமது தளத்தில் அஞ்சலி தகவலை SCROLLING TEXT மூலம் அளித்துவிட்டு நமது உழவாரப்பணி நண்பர்கள் அனைவருக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு மேடவாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று அண்ணாருக்கு அஞ்சலி செலுத்தினோம். பரிமளம் அவர்களுக்கு என்ன ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை. அவர்கள் முகத்தை பார்க்கும் தெம்பு நமக்கில்லை. நண்பர்கள் மற்றும் வாசகர்கள் அண்ணாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இறுதிச் சடங்கு நாளை காலை நடைபெறும்.
நமது உழவாரப்பணி, ஆலய தரிசனம் மற்றும் பல்வேறு சேவைகளில் உடனிருப்பவர் பரிமளம் அவர்கள். அவரது கணவர், நமது தளம் தொடர்புடைய நிகழ்ச்சி என்றால் சிறிதும் தயங்காமல் பரிமளம் அவர்கள் பங்கேற்க பரிபூரண ஒத்துழைப்பு நல்கியிருக்கிறார். தானும் இயன்றபோதெல்லாம் நமது நிகழ்ச்சிகளுக்கு வந்திருக்கிறார்.
அண்ணாரின் ஆன்மா நிச்சயம் சிவனடியை சேர்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அவரை இழந்து வாடும் சகோதரி பரிமளம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நமது தளம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். இறைவன் தான் அவரது குடும்பத்தினரை அரணாக இருந்து காக்கவேண்டும். அவர்களுக்கு தேவையான மன அமைதியையும் தைரியத்தையும் தரவேண்டும்.
ராம் ராம் ராம்!
[END]
மிகவும் வருத்தமான செய்தி. அவரை இழந்து வாடும் சகோதரி பரிமளம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். நாம் நம்பும் ஆண்டவன் அவர்களுக்கு மன அமைதியையும் தைரியத்தையும் தரவேண்டும் என்று வேண்டி கொள்வோம்.மேலும் திரு. மணிமாறன் அவர்களது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்.
சகோதரிக்கு என்ன ஆறுதல் வார்த்தைகள் கூறுவது என்று தெரியவில்லை…….தகவல் அறிந்ததிலிருந்து மிக்க வருத்தமாக உள்ளது……சகோதரிக்கும் அவரது குடும்பத்தார்க்கும் அன்னார் திரு.மணிமாறன் அவர்கள் தெய்வமாக இருந்து வழிகாட்டுவார் …….
சகோதரி பரிமளம் அவர்களுக்கு இந்த இழப்பு ஒரு மாபெரும் இழப்பு நாம் என்னதான் ஆறுதல் சொன்னாலும் அது அவருக்கு போதாது…என்ன செல்வது எல்லாம் விதி என்றே சொல்லலாம் …அந்த கடவுல்தான் அவர்களின் குடும்பத்திற்கு நல்ல ஆறுதலும் மன அமைதியையும் விரைவில் தர இறைவனிடம் பிரார்திப்போம..
என் உடன்பிறவா தங்கை பரிமளம் அவர்களின் கணவர் இறைவனடி சேர்ந்த தகவல் படித்தஉடன் மிகுந்த அதிர்ச்சி அடைத்தேன்.சகோதரி பரிமளம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.திரு. மணிமாறன் அவர்களது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்தனை செய்கிறேன் . எனது தங்கை கணவர் உயிரிழந்து செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தவர் என் தங்கை பரிமளம். இன்று அவர் கணவர் இறைவனடி
சேர்ந்த தகவல் என் உளத்தை மிகவும் வாட்டுகிறது
நம் சகோதரி பரிமளம் அவர்களுக்கு இந்த இழப்பு ஒரு மாபெரும் இழப்பு நாம் என்னதான் ஆறுதல் சொன்னாலும் அது அவருக்கு போதாது…என்ன செல்வது எல்லாம் விதி என்றே சொல்லலாம் …அந்த கடவுல்தான் அவர்களின் குடும்பத்திற்கு நல்ல ஆறுதலும் மன அமைதியையும் விரைவில் தர இறைவனிடம் பிரார்திப்போம் …
சார் , மிகவும் வருத்தமான செய்தி . ஒருவர் உய்ருடன் இல்லை என்றால் எவ்வளவு கஷ்டம் என்று என் அப்பா இறந்த பொது தான் தெரிந்தது . அன்னாரின் குடும்பதர்க்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை . இறைவனிடம் வேண்டுவோம் .
சகோதரியின் துயரம் சொல்லில் அடங்காதது. அவருக்கு மனதில் தைரியத்தை இறைவன் தான் நல்கவேண்டும். அன்னாரின் ஆன்மா இறை திருவடியை அடைய வேண்டிக்கொள்கிறேன்.
இறுக்கமாக உள்ளது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராத்திக்கிறேன்
அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராத்திக்கிறேன்
சார் vanakkam
மிகவும் வருத்தமான செய்தி . ஒருவர் உயருடன் இல்லை என்றால் எவ்வளவு கஷ்டம் என்று நல்லவ தெரியும்..மேலும் திரு. மணிமாறன் அய்யா அவர்களது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம். –
திரு மணிமாறன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்துகொள்கிறேன் மற்றும் திருமதி பரிமளம் அவர்களுக்கு மன உறுதியும் உடல் வலிமையும் பகவான் வழங்க பிரார்த்திக்கிறேன்.
மிகவும் வருத்தமாக உணர்கிறேன்…! திரு. மணிமாறன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை மனதார வேண்டுகிறேன்.
—
விஜய் ஆனந்த்
சகோதரி பரிமளம் அவர்களது குடும்பத்திற்கு மன ஆறுதல் கிடைக்கவும் மணிமாறன் அவர்களது ஆன்மா சாந்தி அடையவும் இறைவனை வேண்டுகிறேன். இந்த துக்கமான நேரத்தில் நமது தளம் அவர்கள் குடும்பத்திற்கு மிகப்பெரிய ஆறுதலாக இருக்கும். நமது தள நண்பர்களின் பிரார்த்தனை இந்த நேரத்தில் பரிமளம் அவர்களின் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கும்.
சிவ சிவ சிவ.
வருத்தமான செய்தி.திரு.மணிமாறன் அய்யா, அவர்களது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம். சகோதரி பரிமளம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
நேற்று அவர்கள் கணவர் மறைந்த செய்தியை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். அவர்களுக்கு ஆறுதல் சொல்ல எனக்கு வார்த்தைகளே இல்லை.
சனிகிழமை கூட நான் அவர்களிடம் பேசினேன் . அப்பொழுது கூட அவர்கள் கணவர் நன்றாக இருப்பதாக சொன்னார்கள். இந்த துயர செய்தியை என்னால் தாங்க முடியவில்லை.
பரிமளம் அவர்களின் குடும்பத்திற்கு இந்த இழப்பு தாங்க முடியாத ஒன்று . திரு மணிமாறன் அவர்கள் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்வோம். நேற்று பிரதோஷம், பிரதோஷ தினத்தில் அவர் சிவனடி சேர்ந்து விட்டார்.
நான் திருசெந்தூர் சென்றபொழுது கூட பரிமளம் அவர்களுக்காக வேண்டினேன்.
நன்றி
உமா
சுந்தர்ஜி
நமது தளம் மூலம் தகவல் தெரிந்து அதிர்ச்சியடைந்தேன். என்னால் இன்னும் ஜீரணிக்க இயலவில்லை. அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவது மட்டுமே நம்மால் இயன்ற ஒன்று. சகோதரி பரிமளம் அவர்களை நினைத்தால் மிகவும் வேதனையாக உள்ளது. கணவரை இழந்த பெண்ணின் உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதை அறிந்தவர் என்ற முறையில் இனிவரும் அவரின் காலத்தை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது. என்ன செய்வது ? திக்கற்றவர்க்கு தெய்வம் தான் துணையிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். அனைவரும் அவருக்காக பிரார்த்திப்போம். நன்றி
திரு.மணிமாறன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம். சகோதரிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் ஆறுதலும் மனஅமைதியும் கிடைக்க பிரார்த்திப்போம்.
பரிமளம் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. நமது தளத்திற்கு வரும் ஒவ்வொரு முறையும் அவர்கள் கமெண்ட்டை தேடிப் பிடித்து படிப்பேன்.
அவர் செய்த சேவையின் காரணமாகவே அவர் கணவருக்கு பிரதோஷ தினத்தன்று சிவபதம் கிடைத்துள்ளது.
அவரும் அவர் தம் குடுபத்தினரும் இந்த இழப்பிலிருந்து மீண்டு வந்து, ஆறுதல் பெற இறைவனை வேண்டுகிறேன்.
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்.
Dear Parimalam,
I know how special he is to you. I understand how painful it is, losing someone so dear to you. I’m really sorry for your loss. May God ease the pain in your heart.
He may not be there physically, But he will always be right there with you in soul. Remember, love never dies. Take care of yourself and keep your heads up
-MALATHI
முதலில் என்ளால் namba முடிய வில்லை
சண்டே அன்று 3.00 திருபோரூர் போவதகயும் எப்படி போக வேண்டும் வழி எல்லாம் கட்டு கொண்டார்
காலையில் சுந்தர் மெசேஜ் பார்த்து என்னால் நம்ப முடியவில்லை
நன் 1.00 லஞ்ச் டைம் பரிமலதிடம் பேசலாம் என்று இருதுஅன்
பரிமளம் அவர்களது குடும்பத்திற்கு மன ஆறுதல் கிடைக்கவும் மணிமாறன் அவர்களது ஆன்மா சாந்தி அடையவும் இறைவனை வேண்டுகிறேன்.
selvi
சகோதரி பரிமளம் அவர்களுக்கு இந்த இழப்பு ஒரு மாபெரும் இழப்பு. அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை நாம் என்னதான் ஆறுதல் சொன்னாலும் அது அவருக்கு போதாது. திரு.மணிமாறன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
மிகவும் வருத்தமாக உணர்கிறேன்…! திரு. மணிமாறன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை மனதார வேண்டுகிறேன்.
On hearing this news I felt very sad.My heart felt condolences to the family members.
May his soul rest in peace.
திரு. மணிமாறன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை மனதார வேண்டுகிறேன்.
சகோதரி பரிமளம் அவர்களுக்கு இறைவன் மன ஆறுதலையும், மன தைரியத்தையும் நல்குமாறு வேண்டி கொள்கிறேன்.
மிகவும் வருத்தமான செய்தி திரு மணிமாறன் அவர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திபோம்.
மன்னிக்கவும் ,சொல்ல வார்த்தை இல்லை , அனைவரும் பிராத்தனை செய்வோம்
தகவலை நேரம் கடந்து இன்றுதான் பார்த்தேன்.மன்னிக்கவும். அன்னாரின் ஆன்மா இறைவனடி சேரவும், சகோதரி குடும்பம் இந்த சோகத்தில் இருந்து விரைவில் மீண்டு நல்வாழ்க்கை பெறவும் மஹா பெரியவாளை பிராத்திக்கிறேன்.
சகோதரி பரிமளம் அவர்களது குடும்பத்திற்கு மன ஆறுதல் கிடைக்கவும் மணிமாறன் அவர்களது ஆன்மா சாந்தி அடையவும் இறைவனை வேண்டுகிறேன். இந்த துக்கமான நேரத்தில் நமது தளம் அவர்கள் குடும்பத்திற்கு மிகப்பெரிய ஆறுதலாக இருக்கும். நமது தள நண்பர்களின் பிரார்த்தனை இந்த நேரத்தில் பரிமளம் அவர்களின் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கும்.
சிவ சிவ சிவ.
திரு மணிமாறன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்துகொள்கிறேன்…சுரேஷ் நாராயணன், குவைத்
ஈடு செய்ய முடியாத இழப்பு ,குடும்ப தலைவரை இழந்து தவிப்பவர்களுக்கு மன ஆறுதலும் தயிரியத்தையும் தர எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியவேண்டும் என பிரார்த்திப்போம்.ஆதரவும் ஆறுதலும் தான் அவர்களை துன்பத்தில் இருந்து மீட்டெடுக்கும்.
திரு மணிமாறன் அவர்களின் ஆன்மா சாந்தி அடையவும் இறைவனை வேண்டுகிறேன்.
பாலு மகேந்திரன்.