Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, October 8, 2024
Please specify the group
Home > Featured > யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்? — ரைட் மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்? — ரைட் மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

print
தொடர் விடுமுறையாக இருப்பதால், நமது பிரார்த்தனை கிளப்புக்கு வாசகர்கள் அனுப்பியுள்ள புதிய கோரிக்கைகளுடன் பிரார்த்தனை பதிவை வெளியிட்டால் எத்தனை பேர்  பார்க்க முடியும் என்கிற ஐயம் இருந்துகொண்டே இருக்கிறது. வாசகர்கள் பலர் விடுமுறையில் இருந்தாலும், தங்கள் கைபேசி மூலம் நமது தளத்தை பார்த்து பதிவுகளை படித்து வருகிறார்கள் என்பது காந்தி ஜெயந்தி பதிவை பார்த்து நமக்கு வந்த அழைப்புக்களே சான்று. நமது தளத்தை பார்க்க அலுவலக கணினியை மட்டுமே பயன்படுத்துபவர்கள் (கைபேசியில் இணையம் பார்க்க இயலாதவர்கள் & வீட்டில் இணைய வசதி இல்லாதவர்கள்) நன்மைக்காக புதிய கோரிக்கைகள் இந்த வாரம் சேர்க்கப்படவில்லை. அடுத்த வாரம் முதல் நிச்சயம் வழக்கமான பாணியில் பிரார்த்தனை பதிவு இடம்பெறும்.

மேலும் மிக மிக தகுதியான ஒருவரை அடுத்த பிரார்த்தனைக்கு அழைக்க தீர்மானித்திருப்பதால், அவர் கலந்துகொள்ளும் கூட்டுப் பிரார்த்தனையில் நம் வாசகர்களின் 100% பங்கேற்பு இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். எனவே இந்த வாரம் வாசகர்களின் கோரிக்கைகளுடன் பிரார்த்தனை பதிவு அளிக்கப்படவில்லை. அதே நேரம் நம் வாசகர்கள் நம் தேசத்தின் சவால்களாக விளங்கும் பல முக்கிய பிரச்னைகளுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

நம் நாட்டின் பொருளாதார சீர்கேடு, உற்பத்தி சரிவு, விலைவாசி உயர்வு, சுற்றுச் சூழல் சீர்கேடு, வறட்சி, வெள்ளம், விவசாயிகளின் பிரச்னைகள், தீவிரவாதம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், மதுப் பழக்கம், ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை, மேற்கத்திய கலாச்சாரத்தின் படையெடுப்பு இவைகள் நீங்கி, பசுமையும் செழுமையும் ஒழுக்கமும் ஆரோக்கியமும் நாடு முழுதும் ஓங்க இந்த வாரம் பிரார்த்தனை செய்வோம். இந்நாட்டின் முன் நிற்கும்  என  கருதுகிறீர்களோ அதற்காகவெல்லாம் பிரார்த்தனை செய்யுங்கள்.

எது உண்மையான வழிபாடு என்பது குறித்து சுவாமி விவேகானந்தர் இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோயிலில், 27.1.1897 ல் நிகழ்த்திய உரையை இங்கு தருகிறோம்.

ஒவ்வொரு வரியும் கல்வெட்டில் பொறிக்கப்படவேண்டியவை. கோவில் கல்வெட்டில் மட்டுமல்ல…. நம் இதயமென்னும் கல்வெட்டிலும் கூட. திரும்ப… திரும்ப… திரும்ப… திரும்ப… படியுங்கள். மனதில் இருத்துங்கள். (இதில் இடம்பெற்றுள்ள கதையை ஏற்கனவே நம் பிரார்த்தனை  பதிவில் வெளியிட்டிருக்கிறோம். இருப்பினும் முழு பதிவும், அதன் வரிகளும் சிந்திக்க தூண்டுபவை என்பதால் இங்கு தருகிறோம்.)

Siva Lingam Decorated

யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்?

அன்பிலும், இதயத்தின் தூய்மையான பக்தியிலும்தான் மதம் வாழ்கிறதே தவிர, சடங்குகளில் மதம் வாழவில்லை. ஒருவன் உடலும் மனமும் தூய்மையாக இல்லாமல், கோயிலுக்குச் செல்வதும் சிவபெருமானை வழிபடுவதும் பயனற்றவை. உடலும் மனமும் தூய்மையாக இருப்பவர்களின் பிரார்த்தனைகளை சிவபெருமான் நிறைவேற்றுகிறார். ஆனால், தாங்களே தூய்மையற்றவர்களாக இருந்துகொண்டு, பிறருக்கு மதபோதனை செய்பவர்கள் இறுதியில் தோல்வியே அடைகிறார்கள். புற வழிபாடு என்பது, அக வழிபாட்டின் அடையாளம் மட்டுமே ஆகும். அக வழிபாடும் தூய்மையும்தாம் உண்மையான விஷயங்கள். இவையின்றிச் செய்யப்படும் புற வழிபாடு பயனற்றது. இதை நீங்கள் மனத்தில் பதிய வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம்; பிறகு ஒரு திருத்தலத்திற்குச் சென்றால், அந்தப் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டுவிடும் என்று நினைக்கும் அளவிற்குக் கீழான நிலைக்கு, இந்தக் கலியுகத்தில் மக்கள் வந்துவிட்டார்கள். தூய்மையற்ற உள்ளத்துடன் கோயிலுக்குச் செல்லும் ஒருவன், ஏற்கெனவே தன்னிடம் இருக்கும் தன் பாவங்களுடன் மேலும் ஒன்றை அதிகப்படுத்துகிறான்; கோயிலுக்குப் புறப்பட்டபோது இருந்ததைவிட, இன்னும் மோசமானவனாக அவன் வீடு திரும்புகிறான்.

திருத்தலங்கள், புனிதமான பொருள்களாலும் மகான்களாலும் நிரம்பி இருப்பவை. மகான்கள் வாழ்கின்ற இடங்களில் கோயில் எதுவும் இல்லையென்றாலும், அந்த இடங்கள் திருத்தலங்கள்தான். நூறு கோயில்கள் இருந்தாலும், அங்கே புனிதமற்றவர்கள் இருப்பார்களானால் அங்கு தெய்விகம் மறைந்துவிடும். திருத்தலங்களில் வாழ்வதும் மிகவும் கடினமான செயலாகும். காரணம், சாதாரண இடங்களில் செய்யும் பாவங்களைச் சுலபமாக நீக்கிக்கொள்ள முடியும். ஆனால் திருத்தலங்களில் செய்யும் பாவத்தை நீக்கவே முடியாது. மனத்தைத் தூய்மையாக வைத்திருப்பதும், பிறருக்கு நன்மை செய்வதும்தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும். ஏழை எளியவர்களிடமும், பலவீனர்களிடமும், நோயாளிகளிடமும் சிவபெருமானைக் காண்பவன்தான் உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறான். விக்கிரகத்தில் மட்டும் சிவபெருமானைக் காண்பவனின் வழிபாடு ஆரம்ப நிலையில்தான் இருக்கிறது. ஒரே ஒரு ஏழைக்காகிலும், அவனது ஜாதி, இனம், மதம் போன்ற எதையும் பாராமல் – அவனிடம் சிவபெருமானைக் கண்டு, அவனுக்கு உதவிகள் செய்து தொண்டாற்றுபவனிடம் சிவபெருமான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறார். கோயிலில் மட்டும் தன்னைக் காண்பவனைவிட, அவனிடம் சிவபெருமான் அதிக மகிழ்ச்சி கொள்கிறார்.

Swami-Vivekanand_Quotes copy

இறைவனின் தோட்டம்

ஒரு பணக்காரனுக்கு ஒரு தோட்டம் இருந்தது. அதில் இரண்டு தோட்டக்காரர்கள் இருந்தார்கள். ஒருவன் சோம்பேறி. அவன் வேலையே செய்ய மாட்டான். ஆனால் யஜமானன் தோட்டத்திற்கு வந்தால் போதும்; உடனே எழுந்துபோய் கைகூப்பி வணங்கியபடி யஜமானனிடம், ஓ, என் யஜமானின் முகம் எவ்வளவு அழகாக இருக்கிறது! என்று புகழ் பாடி, அவர் முன்னால் பல்லை இளித்துக்கொண்டு நிற்பான். மற்றொரு வேலைக்காரன் அதிகம் பேசுவதே இல்லை. ஆனால் அவன் கடினமாக உழைப்பான். பல வகையான பழங்களையும் காய்கறிகளையும் பயிர் செய்து, நீண்ட தூரத்தில் வசிக்கும் தன்னுடைய யஜமானனின் வீட்டிற்குச் சுமந்துகொண்டு செல்வான். இந்த இரண்டு தோட்டக்காரர்களில் யாரை யஜமானன் அதிகம் விரும்புவார்? சிவபெருமான்தான் அந்த யஜமானன். இந்த உலகம் அவரது தோட்டம். இங்கே இரண்டு வகையான தோட்டக்காரர்கள் இருக்கிறார்கள். ஒரு வகையினர் சோம்பேறிகள் – ஏமாற்றுக்காரர்கள். அவர்கள் எதுவும் செய்வதில்லை; சிவபெருமானின் அழகான கண்களையும் மூக்கையும் மற்ற குணநலன்களையும் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள். ஏழைகளும், பலவீனர்களுமான எல்லா மனிதர்கள், விலங்குகள் மற்றும் அவரது படைப்புகள் அனைத்தையும் மிகுந்த கவனத்தோடு பராமரிப்பவர்கள் மற்றொரு வகையினர்.

இவர்களில் யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்?

நிச்சயமாக அவருடைய பிள்ளைகளுக்குச் சேவை செய்பவர்களே சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள். தந்தைக்குச் சேவை செய்ய விரும்புவர்கள், முதலில் பிள்ளைகளுக்குச் சேவை செய்ய வேண்டும். சிவபெருமானுக்குச் சேவை செய்ய விரும்புபவர்கள், முதலில் அவருடைய குழந்தைகளாகிய இந்த உலக உயிர்கள் அனைத்திற்கும் தொண்டு செய்ய வேண்டும். இறைவனின் தொண்டர்களுக்குச் சேவை செய்பவர்களே இறைவனின் மிகச் சிறந்த தொண்டர்கள் என்று, சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் கருத்தை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் சொல்கிறேன்: மனத்தூய்மையுடன் இருங்கள்; உங்களை நாடி வரும் ஏழைகளுக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். இது நல்ல செயல். இதன் பலனாக உங்கள் இதயம் தூய்மையடையும். அதனால் எல்லோரிடமும் குடிகொண்டிருக்கும் சிவபெருமான் உங்களிடம் வெளிப்பட்டுத் தோன்றுவார். அவர் எல்லோருடைய இதயத்திலும் எப்போதும் இருக்கிறார். அழுக்கும் தூசியும் படிந்த கண்ணாடியில் நாம் நம் உருவத்தைப் பார்க்க முடியாது. அஞ்ஞானமும் தீய குணங்களும்தாம் நம் இதயம் என்ற கண்ணாடியில் படிந்திருக்கும் தூசியும் அழுக்குமாகும்.

சொர்க்கம் செல்வதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் நரகத்திற்குச் செல்வதால் என் சகோதரர்களுக்கு உதவ முடியுமானால் – நான் நரகத்திற்குச் செல்லவும் தயாராக இருக்கிறேன் என்று சொல்கிறான். இத்தகைய சுயநலமற்ற தன்மைதான் ஆன்மிகம்.

நமது நன்மையை மட்டுமே நினைக்கும் சுயநலம், பாவங்கள் எல்லாவற்றிலும் முதல் பாவமாகும். நானே முதலில் சாப்பிடுவேன்; மற்றவர்களைவிட எனக்கு அதிகமாகப் பணம் வேண்டும்; எல்லாம் எனக்கே வேண்டும்; மற்றவர்களுக்கு முன்னால் நான் சொர்க்கம் போக வேண்டும்; எல்லோருக்கும் முன்னால் நான் முக்தி பெற வேண்டும் என்றெல்லாம் நினைப்பவன் சுயநலவாதி. சுயநலம் இல்லாதவனோ, நான் கடைசியில் இருக்கிறேன். சொர்க்கம் செல்வதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் நரகத்திற்குச் செல்வதால் என் சகோதரர்களுக்கு உதவ முடியுமானால் – நான் நரகத்திற்குச் செல்லவும் தயாராக இருக்கிறேன் என்று சொல்கிறான். இத்தகைய சுயநலமற்ற தன்மைதான் ஆன்மிகம். சுயநலம் இல்லாதவனே மேலான ஆன்மிகவாதி; அவனே சிவபெருமானுக்கு அருகில் இருக்கிறான். அவன் படித்தவனாக இருந்தாலும் சரி, படிக்காதவனாக இருந்தாலும் சரி – அவன் அறிந்தாலும் சரி, அறியவில்லை என்றாலும் சரி – அவனே மற்ற எல்லோரையும்விட சிவபெருமானுக்கு அருகில் இருக்கிறான்.

சுயநலம் கொண்டவன் எல்லாக் கோயில்களுக்கும் சென்று வழிபட்டிருந்தாலும், புண்ணியத் தலங்கள் அனைத்தையும் தரிசித்திருந்தாலும், சிறுத்தையைப் போல் தன் உடல் முழுவதும் மதச் சின்னங்களை அணிந்திருந்தாலும் – அவன் சிவபெருமானிடமிருந்து விலகியே இருக்கிறான்.

(சுவாமி விவேகானந்தர், இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோயிலில் 27.1.1897-ஆம் நாள் நிகழ்த்திய சொற்பொழிவு.)

===================================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgநம் நாட்டின் பொருளாதார சீர்கேடு, உற்பத்தி சரிவு, விலைவாசி உயர்வு, சுற்றுச் சூழல் சீர்கேடு, வறட்சி, வெள்ளம், விவசாயிகளின் பிரச்னைகள், தீவிரவாதம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், மதுப் பழக்கம், ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை, மேற்கத்திய கலாச்சாரத்தின் படையெடுப்பு இவைகள் நீங்கி, பசுமையும் செழுமையும் ஒழுக்கமும் ஆரோக்கியமும் நாடு முழுதும் ஓங்க இந்த வாரம் பிரார்த்தனை செய்வோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : அக்டோபர் 5, ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131

=======================================================

[END]

7 thoughts on “யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்? — ரைட் மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

  1. >>>>>அன்பிலும், இதயத்தின் தூய்மையான பக்தியிலும்தான் மதம் வாழ்கிறதே தவிர, சடங்குகளில் மதம் வாழவில்லை. <<<<<<

    முதல் வரியிலேயே சிக்சர் அடித்துவிட்டார் விவேகானந்தர்.

    நீங்கள் கூறியது போல திரும்ப திரும்ப படித்து மனதில் இருத்தவேண்டிய பதிவு.

    இடையில் கூறப்பட்டுள்ள "In your culture, tailor makes a gentleman. In our culture, character makes a gentleman" என்னா பதில்… என்னா பதில்… இப்படி ஒரு கேள்வி நம்மிடம் கேட்டால் பேந்த பேந்த விழிப்பதை தவிர வேறு ஒன்றும் நம்மால் செய்ய இயலாது. ஆனால், விவேகானந்தர் உரிய பதில் அளித்து நமது நாட்டின் மானத்தை காப்பாற்றி, நமது கலாச்சாரத்தின் பெருமையையும் நிலைநாட்டியிருக்கிறார்.

    இந்த வார பிரார்த்தனையில் குறிப்பிட்டுள்ள அனைத்துக்காகவும் பிரார்த்தனை செய்வோம்.

    எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்.

  2. “நம் நாட்டின் பொருளாதார சீர்கேடு, உற்பத்தி சரிவு, விலைவாசி உயர்வு, சுற்றுச் சூழல் சீர்கேடு, வறட்சி, வெள்ளம், விவசாயிகளின் பிரச்னைகள், தீவிரவாதம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், மதுப் பழக்கம், ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை, மேற்கத்திய கலாச்சாரத்தின் படையெடுப்பு இவைகள் நீங்கி, பசுமையும் செழுமையும் ஒழுக்கமும் ஆரோக்கியமும் நாடு முழுதும் ஓங்க இந்த வாரம் பிரார்த்தனை செய்வோம்”

  3. இந்த பதிவு மிகவும் கருத்துள்ள அழகிய பதிவு. விவேகானந்தர் கூறிய ஒவொரு வரிகளையும் மனதில் மிகவும் deep ஆக பதிய வைத்துக் கொள்ளவேண்டிய வைர வரிகள்.
    ஒவ்வொரு வரிகளும் பொட்டில் அடித்தார் போல் உள்ளது.
    சிவலிங்கம் மிக அருமை. நான் செவ்வாயன்று பெங்களூரில் ஓம்காரேஸ்வரர் கோவிலில் 12 ஜோதிர் லிங்கங்களை தரிசித்து விட்டு வந்தேன். அதில் ராமேஸ்வரம் லிங்கமும் ஒன்று. இந்த பதிவை படிக்கும் பொழுதே என் மனம் ஓம்காரேஸ்வரர் கோவிலுக்கு சென்று விட்டது.

    “In your culture, tailor makes a gentleman. In our culture, character makes a gentleman” – wonderful …….

    // சொர்க்கம் செல்வதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் நரகத்திற்குச் செல்வதால் என் சகோதரர்களுக்கு உதவ முடியுமானால் – நான் நரகத்திற்குச் செல்லவும் தயாராக இருக்கிறேன் என்று சொல்கிறான். இத்தகைய சுயநலமற்ற தன்மைதான் ஆன்மிகம். சுயநலம் இல்லாதவனே மேலான ஆன்மிகவாதி; அவனே சிவபெருமானுக்கு அருகில் இருக்கிறான். // சுபெர்ப்.

    இந்த வாரம் நாட்டு நலனுக்காகவும், மற்றும் எல்லோருக்காகவும் பிரார்த்தனை செய்வோம்.

    லோக சமஸ்த சுகினோ பவந்து
    ராம் ராம் ராம்

    அழகிய பதிவைக் கொடுத்த தங்களுக்கு நன்றிகள் பல.

    நன்றி
    உமா

  4. இந்த பதிவு எத்தனை முறை படித்தாலும் மனதில் நிரந்தரமாக நிற்க கூடிய பதிவு.
    நீகள் கூறியுள்ள அனைத்து கருத்துகளும் அருமை.
    நீங்கள் கூறியபடி இந்த வாரம் எல்லா காரியங்களுக்கு சேர்த்து பிரார்த்தனை செய்வோம்.
    நன்றி

  5. Not as Usual Something “”ifferent as usual

    “In your culture, tailor makes a gentleman. In our culture, character makes a gentleman”

    this reply shows the different thinking of Swamiji , and because of this
    Mr. Vivekanand became Swami Vivekanand.

    Simply superb Mr. Sundar (simple SUNDAR)

    Keep posting and one day you will become a great personality

    May GOD bless all .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *