Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, September 12, 2024
Please specify the group
Home > Featured > இனிதே நடைபெற்ற நம் நவராத்திரி (ஆண்டு) விழா!

இனிதே நடைபெற்ற நம் நவராத்திரி (ஆண்டு) விழா!

print
ம் தளம் சார்பாக வாரியார் சுவாமிகளின் வாரிசுகளான வள்ளி-லோச்சனா சகோதரிகளின் ‘நவராத்திரி பாடல்கள்’ சிறப்பு நிகழ்ச்சி அன்னை விசாலாட்சியின் அருளால் நேற்று மாலை மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் மிக மிக சிறப்பாக நடந்தேறியது. வாசகர்கள் பலர் நிகழ்ச்சிக்கு வந்திருந்து சிறப்பித்தார்கள். பொதுமக்களும் இறுதி வரை ஆவலுடன் அமர்ந்து கேட்டு,  பிரசாதம் பெற்றுச் சென்றனர்.

DSCN6828

DSCN6847

இந்நிகழ்ச்சியை நாம் சென்ற சனிக்கிழமை 27 ஆம் தேதியன்றே திட்டமிட்டிருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும். தமிழகத்தில் அன்று நிலவிய அசாதரணமான சூழலால் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டு நேற்று மாலை நடைபெற்றது.

DSCN6855

சென்ற ஆண்டு செப்டம்பர் 29 அன்று நமது ஆண்டுவிழா நடைபெற்றது நினைவிருக்கலாம். அதே செப்டம்பர் 29 அன்று மேற்படி நவராத்திரி பாடல்கள் நிகழ்ச்சி அமைந்துவிட்டதால் இதுவும் ஒரு வகையில் நமக்கு ஆண்டுவிழா தான். அம்மையப்பனின் பெருமை பேசும் ஆண்டு விழா. எத்தனையோ தடைகளை மீறி அன்னையின் இந்த நவராத்திரி பாடல் நிகழ்ச்சியை நாம் நடத்த முடிந்தது எல்லாம் வல்ல கருணைக் கடல் அன்னை விசாலாட்சியின் திருவுள்ளமே அன்றி வேறில்லை. எனவே தான் 27 அன்று நடைபெறவேண்டிய நிகழ்ச்சி 29 அன்று நடைபெற்றது. எதிர்பார்த்ததைவிட சிறப்பாக.

நவராத்திரி நேரம் என்பதால் நிகழ்ச்சியை காண வந்தவர்களுக்கு அம்பாளின் புறப்பாடும், ஊஞ்சல் சேவையும் காணும் பாக்கியமும் கிடைத்தது. அம்பிகைக்காக நிகழ்ச்சி இடையில் 15 நிமிடம் நிறுத்தப்பட்டது. அன்னைக்காக குழந்தைகள் காத்திருப்பதில் ஆனந்தம் தானே?

DSCN6844

FILE0321

DSCN6889

இது பற்றிய விரிவான பதிவு விரைவில்…. இப்போதைக்கு ஓரிரு படங்கள் அளித்திருக்கிறோம்.

அனைவருக்கும் நன்றி.

===========================================================

[END]

12 thoughts on “இனிதே நடைபெற்ற நம் நவராத்திரி (ஆண்டு) விழா!

  1. வாழ்க வளமுடன்

    சுந்தர் அவர்களின் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி . நல்ல , நல்ல கருத்துகளை சொல்வது எளிது , அதை நடைமுறை படுத்தும்போதுதான் அதில் உள்ள சிரமங்கள் தெரியவரும் . எல்லாம் நல்ல படியாக முடிந்தது . உங்களோடு பணி செய்ய சந்தர்பம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி . நன்றி

    சீதாராமன்,
    வள்ளி, லோச்சனாவின் தந்தை

  2. வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.

    நிகழ்ச்சியின் தரமும் நிறைவும் புகைப்படங்களை பார்க்கும்போதே தெரிகிறது.

    வந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

    வேலையும் பார்த்துக்கொண்டு, இதைப் போன்ற நிகழ்ச்சிகளை திட்டமிட்டு சரியாக நடத்துவது என்பது எளிதல்ல. இறைவன் அருளால் தான் அது உங்களுக்கு சாத்தியமாகியிருக்கிறது.

    நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல சென்ற வருட ஆண்டு விழா தேதியிலேயே இந்த விழாவும் அமைந்தது இறைவன் செயல் தான்.

    எல்லாம் நல்லபடியாக முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி. முழு பதிவையும் ஒத்திப்போடாமல் எங்களுக்காக விரைந்து அளிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    அனைவருக்கும் ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்துக்கள்.

    – பிரேமலதா மணிகண்டன்
    மேட்டூர்.

  3. வணக்கம்…….

    குழந்தைகள் பாடுவதை பார்க்கவே இனிமையாக உள்ளது…….கூடவே அன்னையின் தரிசனமும் நம் தளம் மூலம் கிடைத்துள்ளது………மிக்க நன்றி………

  4. சந்தோசமான பதிவு.
    நிகழ்ச்சியை காண முடியா விட்டாலும், அது இனிதே நடந்து முடிந்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.

  5. It was a well motivating event for the kids. Moreover, the entire program was carried out neatly in well organized manner.

  6. நேற்றைய விழா இனிதே நடை பெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி. இனிய இசையை கேட்க முடிந்ததும் சுவாமியையும் தாயாரையும் தரிசித்தது மிகவும் பாக்கியம். நல்லவை நிறைய சொல்லலாம், அமுல்படுத்துவதும், எல்லோரையும் ஒருங்கினைபதும் எவ்வளவு கடினம் என்று தெரியும். தங்களின் வேலை பளுவுக்கு இடையில் எப்படி தங்களுக்கு சேவை செய்ய முடிகிறது என்று வியப்பாக உள்ளது. மகாபெரியவாளின் ஆசிகளுடன் கூடிய விரைவில் தங்களுக்கு இணைய துணை சேர வேண்டுகிறேன்.

    ராஜ்குமார்.

  7. குழந்தைகளின் உற்சாகம் நன்கு புலப்படுகிறது. படங்கள் அருமை. பாடல்களும் இனிமையாக இருந்திருக்கும் என்பதில் ஐய்யமில்லை. மென்மேலும் தங்களின் பணி தொடர வாழ்த்துகள்.

  8. Dear Sundarji,

    thavirka mudiatha sila kaaranathinal nigazhchiku vara iyalavillai.Enninum murugaperuman arulinalum vaariyarin arulinalum andha nigazchi arumaiyaga nadandhathu mikka santhosham.

    Regards,

    Harish V

  9. இறை பக்தியையும் ஞானத்தையும் அதிகமாக பெற்ற இந்த குழந்தைகளை ஊக்குவிக்கும் திரு.சுந்தர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்…வாழ்க..வளர்க…

  10. இந்த பதிவை படித்த பிறகு இந்த நிகழ்ச்சியை மிஸ் பண்ணி விட்டோமே என நினைக்கத் தோன்றுகிறது. நிகழ்ச்சி போன வருட ஆண்டு விழா நாளிலேயே சிறப்பாக நடைபெற்றதை அறிய மிக்க மகிழ்ச்சி. படங்கள் மிக அருமை. இந்த பதிவின் தொடர்ச்சியை வெகு விரைவில் அளிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். சென்னையில் இருந்திருந்தால் கண்டிப்பாக நான் கலந்து கொண்டிருப்பேன்.

    தங்களின் அலுவலக வேலைக்கு இடையிலேயும் மிக சிறப்பாக நிகழ்ச்சியை organize பண்ணியதற்கு நன்றிகள் பல. வள்ளியும் லோச்சனாவும் மேலும் மேலும் பல பெரிய கச்சேரிகள் செய்ய வாழ்த்துகிறேன்.

    இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்

    நன்றி
    உமா

  11. சகோதரர் சுந்தர் அவர்களுக்கு

    உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள், தங்களிடம் இருந்து தான் நேர மேலாண்மை கற்றுக்கொள்ள வேண்டும். அலுவலக வேலையும் நிறைவு செய்து விட்டு இது போன்ற ஆன்மிக பணியாற்றுவது பாராட்ட தகுந்த ஒன்று. வாழ்க வளமுடன். மனதார வாழ்த்துகிறேன்.

    நன்றி

    சங்கர நாராயணன்
    http://www.myriadwealth.in

  12. வாழ்த்துக்கள் …தள்ளிபோனதும் நன்மைக்கே எல்லாம் நன்மைக்கே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *