Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, October 10, 2024
Please specify the group
Home > Featured > உருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர்! உண்மை சம்பவம்!! – நவராத்திரி SPL 1

உருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர்! உண்மை சம்பவம்!! – நவராத்திரி SPL 1

print
ந்த மாதரசி ஒரு தலைசிறந்த சிவபக்தை. தேவாரம், திருப்புகழ் மற்றும் இதர சைவ ஆகமங்களிளெல்லாம் அசாத்திய பாண்டித்யம் பெற்றவர். அவரது பரம்பரையே பக்தி நெறியில் ஊறித் திளைத்த ஒன்று எனும்போது அவருடைய உதிரத்தில் சிவபக்தி இரண்டற கலந்திருப்பதில் வியப்பென்ன?

தான் கற்ற பன்னிரு திருமுறை, திருப்புகழ் ஆகியவற்றை அடுத்தவர்களுக்கு குறிப்பாக அடுத்த தலைமுறைக்கு வணிக நோக்கமின்றி சொல்லிக் கொடுத்து வருபவர். வீட்டில் சுமார் மூன்று அடியில் நடராஜர் விக்ரகம் ஒன்றை ஸ்தாபித்து  அதன் முன்னணியில் தனது திருமுறை, திருப்புகழ் பாடத்தை சொல்லிக் கொடுக்கவேண்டும் என்பது அவரது நீண்ட நாள் ஆசை.

அப்படி ஒரு விக்ரகத்தை வாங்க ஒரு நாள் தனது மகனை அழைத்துக் கொண்டு, சுவாமிமலை செல்கிறார்.

சுவாமிமலை ஏன் ?

கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுற்றுப் பகுதிகளில் உலோக சுவாமி சிலைகள் பாரம்பரியமிக்க ஆகம சாஸ்திர விதிகளின்படி தயார் செய்யப்படுகிறது. சுவாமிமலை பகுதியில் தயாராகும் சிலைகள் உலக அளவில் பிரபலமானவை.

சுவாமி மலை, ஆலயத்தின் உற்சவச் சிற்பங்கள் செய்வதற்கு மிகவும் புகழ் பெற்ற ஊர்! Investment Casting/Lost Wax Casting என்று சொல்லப்படும் மெழுகினால் உருக்கி ஐம்பொன் சிலைகளைச் செய்யும் ஆச்சாரி / நகாசு வேலைகள் இங்கு சிறப்பு.

ஸ்தபதிகள் நடத்தும் கொல்லர் உலைக் கூடங்கள் நிறைய! வீட்டிற்கும் அழகிய சிறு சிற்பங்கள் செய்து கொடுக்கிறார்கள்! காவிரிப் படுகைக் களிமண்ணின் சிறப்பு! கைரேகையைக் கூடத் துல்லியமாகப் பிரதி எடுக்க வல்ல மண் என்பதால், உலோகச் சிற்பங்கள் அத்தனை அழகாக அமைகின்றன!

இவர் சென்ற நேரம் சுமார் ஆறடி உயரம் கொண்ட மிக பெரிய நடராஜர் சிலை ஒன்று பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரத்துக்கு அனுப்புவதற்காக தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது தான் பாடம் செய்யப்பட்ட மண்ணை உடைத்து சிலையை எடுக்கிறார்கள். மண்ணை உடைக்க உடைக்க, நடராஜர் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பிக்கிறார். இவருக்கு அதை பார்க்கையில் அத்தனை பரவசம்.

DSC06688

“அப்பா… ஆடல்வல்லானே… நீ அப்படியே என்னுடன் என் வீட்டுக்கு வந்துவிடமாட்டாயா?” மனமுருக அதை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்.

சிலையை உருவாக்கிய ஸ்தபதி “அம்மா… அது பாரீஸ் போற சிலை… உங்களுக்கு பிடிச்சிருக்கா?” ஆர்வத்துடன் கேட்க…. இவர் ஏக்கத்துடனும் காதலுடனும் அந்த விக்ரகத்தையே பார்த்துக்கொண்டிருக்க, என்ன நினைத்தாரோ அந்த ஸ்தபதி “நீங்க வேணும்னா இதை எடுத்துக்கோங்கம்மா…. நான் பாரீஸ் அனுப்ப வேற செய்துக்கறேன்….!”

“இவ்வளவு பெரிய விக்ரகம் வாங்குற அளவு இப்போ என்கிட்டே பணம் இல்லே. மூணு அடியிலேயே எனக்கு ஒன்னு பண்ணிக் கொடுங்க போதும்…”

“நீங்க பண்ற தொண்டுக்கு முன்னால பணம் என்னம்மா பெரிய பணம்? … உங்ககிட்டே இப்போ இருக்குறதை கொடுங்க… அடுத்த வருஷம் மீதி பணம் கொடுங்க” என்று ஸ்தபதி தாராள மனதுடன் கூற, இவர் சிந்தனையில் ஆழ்கிறார்.

அந்த நடராஜரை பிரிய இவருக்கு மனமில்லை.

கையிலிருந்த பணத்தை கொடுத்து அந்த நடராஜர் சிலையை ஒரு வாகனத்தில் ஏற்றி தன் வீட்டுக்கு கொண்டு வந்துவிடுகிறார்.

DSC06710

வீட்டுக்கு நடராஜர் விக்ரகம் வந்து இறங்கிய தருணம், இவர் வீட்டுக்கு ஒரு ரெஜிஸ்டர் தபால் வருகிறது. தபாலை பெற்று பிரித்து பார்க்கும் இவர் ஒரு கணம் இன்ப அதிர்ச்சியில் உறைகிறார். ஓடிச்சென்று நடராஜர் விக்ரகத்தை கட்டி அணைத்துக்கொள்கிறார்.

சரியாக இவர் ஸ்தபதிக்கு பாக்கி செலுத்த வேண்டிய தொகைக்கு யாரோ இவருக்கு டி.டி. அனுப்பியிருக்கிறார்கள். (இவர் திருமுறை, திருப்புகழ் தொடர்பான சேவையில் ஈடுபட்டு பல புத்தகங்கை பதிப்பித்து வந்தமையால் அது தொடர்பாக கிடைத்த நன்கொடையாகவோ வருவாயாகவோ இருக்கலாம்!).

தன் பக்தையின் ஏக்கத்தை தீர்க்கும் பொருட்டு அவருடன் வீட்டுக்கு வந்ததோடல்லாமல், அது தொடர்பான பணத்தையும் வரவழைத்து அதிசயம் புரிந்தார் நடராஜர். இது நடந்து சுமார் 30 – 35 வருடங்கள் இருக்கலாம்.

அந்த விக்ரகம் தான் நீங்கள் மேலே பார்ப்பது.

திருமாலும் நான்முகனுமே கூட அடிமுடி காணவியலா ஆடவல்லானை தனது வீட்டுக்கே வரவழைத்த அந்த மாதரசி யார் ? இப்போது எங்கிருக்கிறார்?

விபரங்கள்….நாளைய பதிவில்!

[END]

Also check:

=================================================================

சிவபெருமான் தன் பக்தனுக்கு காட்டிய கண்ணனின் ராசலீலை (உண்மை சம்பவம்)!

வள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

ஆருத்ரா தரிசனம் – சிவபெருமானின் திருநடனத்தை காண ஆதிசேடனை அனுப்பிய திருமால்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்! – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்!

‘என் கடைக்காலம் அரங்கன் சேவைக்கே!’ – கண்கலங்க வைத்த ரங்கநாயகி – திருநீர்மலை உழவாரப்பணி UPDATE!

=================================================================

[END]

 

13 thoughts on “உருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர்! உண்மை சம்பவம்!! – நவராத்திரி SPL 1

  1. வணக்கம்…………

    தில்லை நாயகனையும் அம்மையையும் பார்க்கையில் நமக்கும் பரவசமே…………மனதில் மகிழ்ச்சி நிறைகிறது………. நாளைய பதிவை இன்றே அளித்து விடுங்களேன்……ப்ளீஸ்………

  2. அழகு கொஞ்சும் நடராஜர் சிலை அதன் கீழே நந்தி வாகனம் பார்பதற்கு கோயில் உள்ளே இருப்பது போல ஒரு தோற்றம்.
    அடுத்த படத்தில் நம் தளத்தின் படத்துடன் கூடிய போட்டோ இரண்டும் பார்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
    அந்த மாதரசியான சிவபக்தை யார் என அறிந்துகொள்ளும் ஆவல் அதிகமாக உள்ளது.
    சிவதொண்டு புரியம் அவர்களுக்கு ஈசன் கருணை செய்ததில் வியப்பொன்றும் இல்லை. அது அவர் கடமை.
    நன்றி

  3. உருகிய பக்தையின் வீட்டில் நடராஜர் சிவகாமி அம்மையுடன் பார்ப்பது சிதம்பரம் நடராஜரை நேரில் தரிசித்த உணர்வு ஏற்படுகிறது. அந்த மாதரசி எவ்வளவு இறைவன் மீது எவ்வளவு அளவு கடந்த பக்தியும் பாசமும் வைத்திருந்தால் இறைவன் பக்தியின் ஆவலை பூர்த்தி செய்து இருப்பார். படிக்கும் பொழுதே புல்லரிக்கிறது. அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

    அனைத்து படங்களும் சூப்பர்

    திருச்சிற்றம்பலம்

    நன்றி
    உமா

  4. தில்லை அம்பல நடராஜா
    செழுமை நாதனே பரமேசா
    நாளைய பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்.

  5. திருச்சிற்றம்பலம்
    உள்ளம் உருக நினைத்தாள்
    உன்னைத்தேடி வருவான்
    உமாபதி என உறுதி செய்தான்
    அம்பலவாணன் ஆடல்அரசன்

    கீர்த்தித் திருஅகவல் அருமையான பாடலையும் பாருங்கள்
    தில்லை மூதூர் ஆடிய திருவடி
    பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி,
    எண் இல் பல் குணம் எழில் பெற விளங்கி,
    மண்ணும், விண்ணும், வானோர் உலகும்,
    துன்னிய கல்வி தோற்றியும், அழித்தும்,
    என்னுடை இருளை ஏறத் துரந்தும்,
    அடியார் உள்ளத்து அன்பு மீதூரக்
    குடியாக் கொண்ட கொள்கையும், சிறப்பும்,

    இந்நிலவுலகுக்கு நடுவாய் அமைந்த இடம் தில்லை மாநகரம். அதே போன்று, இவ்வுடம்புக்கு நடுவாய் அமைந்த இடம் நெஞ்சத்தாமரை. இவ்விரண்டு இடங்களிலும் இறைவனது இயக்கம் விளங்கிக் காணப்படும் என்பார், “தில்லை மூதூராடிய திருவடி பல்லுயிரெல்லாம் பயின்றனனாகி” என்றும், அண்டமாகிய உலகிலும் பிண்டமாகிய உடம்பிலும் ஓயாது நடைபெறும் இவ்வியக்கம் கொண்டே இறைவனது குணம் வெளிப்படுமாதலால், “எண்ணில் பல்குணம் எழில்பெற விளங்கி” என்றும், இறைவன் அறிவித்தாலன்றி உயிர்கள் அறியமாட்டா வாகையால், “துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும்” என்றும், தம்முடைய அறியாமையைப் போக்கி இறைவன் அருள் புரிந்தமையைக் கூறுவார், “என்னுடை யிருளை ஏறத் துரந்தும்” என்றும், இறைவன் எல்லாவுயிர்களிலும் கலந்திருந்த போதிலும் அவன் விரும்பித் தங்கியிருக்குமிடம் அடியார் உள்ளமாதலால், “அடியார் உள்ளத்து அன்புமீதூரக் குடியாகக்கொண்ட கொள்கையும் சிறப்பும்” என்றும் இறைவனது திருவருள் முறைமை கூறப்பட்டது.

  6. படிப்பதற்கே பரவசமாக இருக்கும்போது அதை அனுபவித்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்..
    தொடரும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் ஆவலை ஏற்படுத்திவிட்டது ….

  7. அம்மா வீட்டிற்கு நடராஜர் வருகை தந்த வரலாற்றை சுவைபட கூறியுள்ளீர்கள். அவர்களின் அருகில் இருந்து பணி செய்யும் நாளுக்காக இறைவனை வேண்டிக்கொண்டிருக்கின்றேன். படங்கள் சிறப்பு. நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

  8. சுந்தர் சார் காலை வணக்கம்

    தங்களின் மூலம் நாங்களும் புண்ணியம் சேர்க்கிறோம்,

    நன்றி

  9. வணக்கம் சார்,
    தன்னலம் இல்லாத தங்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன்… குரு வாக இருந்து அனைவருக்கும் வழிகாட்டுகின்றிர்கள்..
    நீங்கள் கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளது சிவதொண்டிற்காக தன வாழ்நாளை அர்பணித்த அம்மா ராஜம்மா அவர்களா சார்…
    நன்றி..

  10. வாழ்த்துக்கள் சுந்தர் தங்களது வலைதளமும்,ஆன்மீகத் தொண்டும்
    மலைக்க வைக்கின்றன.குறிப்பாக என் ஆன்மீக குரு அன்னை
    சிவத்திரு சொர்ண சோமசுந்தரம் அம்மா அவைகளின் நேர்காணல்
    இன்னும் சிறப்பு.தங்கள் பணி மென்மேலும் சிறக்க மனமார்ந்த
    வாழ்த்துக்கள்.
    அன்புடன்
    நர்த்தகி நடராஜ்

    1. தங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். தொடரட்டும் தங்கள் சேவை. ஓங்குக சிவநெறி. வளர்க கலை.

      – சுந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *