Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, September 12, 2024
Please specify the group
Home > Featured > சாதனையாளர்களை உருவாக்குவது எது? MONDAY MORNING SPL 61

சாதனையாளர்களை உருவாக்குவது எது? MONDAY MORNING SPL 61

print
ந்த இளைஞன் ஒரு சிறந்த தோட்டத்தை அமைத்து தனது வீட்டில் பராமரித்து வந்தான். ஒரு நாள் பட்டாம்பூச்சி ஒன்று ஒரு பூந்தொட்டியில் முட்டையிட்டதை பார்த்தான். அது முதல் அந்த முட்டையின் வளர்ச்சியை மிகவும் ஆர்வமாக கவனித்து வரலானான்.

ஒரு கட்டத்தில் முட்டை அசைந்தது. முட்டை உடைந்து ஒரு உயிர் ஜனிப்பதை பார்க்க அவனுக்கு பரவசமாய் இருந்தது. மணிக்கணக்கில் அந்த முட்டையை கவனிப்பதில் கழித்தான். சிறிது நாளில் முதலில் ஒரு புழுவின் தலைமட்டும் வெளியே வந்தது. இவனுக்கு பரவசம் தாளவில்லை. உடனே ஒரு லென்சை கொண்டு வந்து அதை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தான். அந்தப் புழு வெளியே வர மிகவும் போராடிக்கொண்டிருப்பது இவனுக்கு தெரிந்தது. இவன் எப்படியாவது அதற்கு உதவவேண்டும் என்று தீர்மானிக்கிறான். ஒரு சிறிய கத்திரிக்கோலை கொண்டு வந்து அந்த முட்டையை உடைத்து அதற்கு உதவுகிறான்.

Butterfly

கடைசியில் புழு முழுதுமாய் வெளியே வந்துவிட்டது. இவனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அந்த புழு வளர்ந்து பட்டாம்பூச்சியாக மாறி பறக்க ஆரம்பிக்கும் தருணத்தை பார்க்க ஒவ்வொரு நாளும் காத்திருந்தான். ஆனால் கடைசி வரை அது நடக்கவில்லை. மாறாக தலைமட்டும் கனத்து போன புழு அங்கேயும் இங்கேயும் இலைகள் மீது ஊர்ந்து கடைசியில் இறந்துவிட்டது.

மிகவும் ஏமாற்றமடைந்த இவன், தாவரவியல் படித்து வரும் தனது நண்பன் ஒருவனை சந்தித்து நடந்ததை கூறி காரணத்தை கேட்டான்.

புழுவானது முட்டையிலிருந்து வெளியே வர, நடத்தும் போராட்டமானது (STRUGGLE) இறைவன் அதற்கு தந்த பரிசு. அந்த போராட்டம் தான் அதன் இறக்கைகளுக்கு இரத்தத்தை செலுத்தி அது வெளியேறிய பின்னர் வளர்ந்து பறக்க உந்துதலாக இருக்கும் என்றும், அதே போல, முட்டையை முட்டி மோதும் முயற்சியானது அதன் தலையை அளவாக வைத்திருக்கும் என்றும் அப்போது தான் மெல்லிய இறக்கைகளை தலையால் தாங்க முடியும் என்றும் இது தான் ஒரு புழு, வண்ணத்துப் பூச்சியின் மாறும் சூட்சுமம் என்றும், இவனது ஆர்வத்தாலும் அவசரத்தாலும் முட்டையை உடைத்து ஒரு வண்ணத்து பூச்சியை கொன்றுவிட்டான் என்று கூறியபோது இவன் திடுக்கிட்டான்.

போராட்டம் (STRUGGLE) என்பது வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் தேவையான ஒன்று. கேட்கும் அனைத்தும் கிடைத்தால் நம்மை அது வளர்ப்பதற்கு பதில் முடக்கி போட்டுவிடும். போராட்டம் இல்லை எனில் பலமும் இல்லை. வளர்ச்சியும் இல்லை.

சரித்திரத்தை புரட்டினோம் என்றால் செழுமையைவிட வறுமையும் போராட்டமுமே பல சாதனையாளர்களை உருவாக்கியிருக்கி இருப்பதை காணலாம்.

This looks great even if I say so myself.

சராசரி மனிதர்களாக வாழ்ந்து மறைய விரும்புவர்களுக்கு இந்த பதிவும் தேவையில்லை இதன் கருத்தும் தேவையில்லை. ஆனால் ஏதேனும் முத்திரையை இந்த உலகில் பதித்துவிட்டு மறைய விரும்புகிறவர்கள் நிச்சயம் இந்த பதிவை நினைவில் கொள்ளவேண்டும்.

ஒரு பெற்றோராக நமது குழந்தைகளுக்கு நாம் தேவைக்கு அதிகமாகவே உதவிகள் செய்து அவர்களை அவர்கள் காலில் நிற்க பழக்காமல் முடக்கிப் போட்டுவிடுகிறோம். வாழ்வின் யதார்த்தமான ஏமாற்றங்களை, சிறு சிறு தோல்விகளை கூட அவர்கள் எதிர்கொள்ள முடியாத அளவு பலவீனர்களாக வளர்க்கிறோம். இப்படி வளர்க்கப்படும் குழந்தைகள் வளர்ந்தபிறகு கூட எந்த வித சவால்களையும் எதிர்கொள்ள இயலாமல் துவண்டுவிடுகின்றனர்.

செல்லும் பயணத்திற்கும் பாதைக்கும் ஏற்றவாறு நம் பிள்ளைகளை தயார் செய்வதைவிடுத்து பிள்ளைகளுக்கு ஏற்றவாறு தான் நாம் பாதையையே தேர்ந்தெடுக்கிறோம்.

போராட்டம் என்பது வெற்றிகரமான வாழ்விற்கு அவசியமான ஒன்று என்பதை நாம் உணர்வோம். நமது பிள்ளைகளுக்கும் உணர்த்துவோம்.

==================================================================
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….

http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
==================================================================
[END]

20 thoughts on “சாதனையாளர்களை உருவாக்குவது எது? MONDAY MORNING SPL 61

  1. டியர் சுந்தர்

    Monday Morning special நச் என்று இருந்தது.

    வாழ்க்கையில் போராடி சாதனை படைக்க நினைக்கும் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு.

    நட்புடன்

    ரம்யா

  2. ///சரித்திரத்தை புரட்டினோம் என்றால் செழுமையைவிட வறுமையும் போராட்டமுமே பல சாதனையாளர்களை உருவாக்கியிருக்கி இருப்பதை காணலாம். ///
    உண்மைதான் சுந்தர் சார்..

  3. காலை வணக்கம்………..அருமையான கருத்து……..நன்றிகள் பல…………

  4. பதிவு நன்று…
    தெய்வத்தான் ஆகா எனினும் முயற்சிதன்
    மெய்வருத்தக் கூலி தரும்.

  5. சுந்தர் சார் காலை வணக்கம்

    மிகவும் நிதற்சனமான உண்மை சார்

    வலியும் போரட்டங்களும் வெற்றியின் படிகட்டுகள்.

    நன்றி

  6. வாழ்க வளமுடன்

    நல்ல கருத்துள்ள கதை . சேர வேண்டியவருக்கு சேர்ந்தால் சரி

  7. மிகவும் அருமையான ஸ்பெஷல்.

    போராட்டம் என்பது வெற்றிகரமான வாழ்விற்கு அவசியமான ஒன்று.

    மிகவும் சரியான வரிகள்.

    நன்றி
    உமா

  8. sir,

    Good story to motivate today’s younger generation who are upset with small failures and take extreme steps unable to cope up with the failures. We have learned in our days to face problems which has made us more strong and determined to reach our goals. one should understand that path of life is not with full of roses but also sometimes with thorns. So no gain without pain let youngsters clearly understand and prepare themselves to achieve the goals and ambitions in their life.

    Chandra mouli

  9. மிகவும் சரியான போராட்டம் வாழ்விற்கு அவசியமான ஒன்று

  10. இந்த காலத்தில் குழந்தைகளும் மிகவும் சென்சிடிவ் ஆக இருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் பெற்றோர்கள் அவர்களை போட்டி நிறைந்த உலகம் என்று சொல்லி சொல்லி வளர்ப்பது தான். அவர்களுக்கு வெற்றியை போல் தோல்வியும் வாழ்க்கையில் இயல்பானது தான், அதில் வருத்தப்படுவதற்கு ஒன்றுமே இல்லை என்று புரிய வைக்க நாம் முயல்வதில்லை.

    இதனால் குழந்தைகளிடத்தில் போட்டியை விட பொறாமை மனப்பான்மையும் தாழ்வு மனப்பான்மையும் தான் அதிகமாக காணப்படுகிறது.

    \\
    ஒரு பெற்றோராக நமது குழந்தைகளுக்கு நாம் தேவைக்கு அதிகமாகவே உதவிகள் செய்து அவர்களை அவர்கள் காலில் நிற்க பழக்காமல் முடக்கிப் போட்டுவிடுகிறோம். \\

    முக்கியமாக இப்பொழுதெல்லாம் குழந்தைகள் ஓடியாடி விளையாடி பார்ப்பதே மிகவும் அரிதாக இருக்கிறது. ஒன்று டிவி இல்லை வீடியோ கேம்ஸ், மேலும் புஸ்தகங்கள் படிக்கும் பழக்கமும் மிகவும் குறைந்து விட்டது.

  11. நமது சேவையில் தங்களை இணைத்துக்கொள்ள பணம் அனுப்புபவர்கள் தயை கூர்ந்து நமது தளத்தின் நிர்வாக செலவு மற்றும் இதர செலவுகளுக்கு அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்களே மனமுவந்து ஒதுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். அப்போது தான் இந்த தளத்தை நாம் தொடர்ந்து தொய்வின்றி நடத்த முடியும். இது கட்டாயமல்ல. ஒரு வேண்டுகோள். நம் தளத்திற்கு என்று விளம்பர வருவாயோ அல்லது வேறு வித வருவாயோ கிடையாது என்பதை கவனத்தில் கொள்ளும்படி கேட்டுகொள்கிறோம்.

    மேலும் நீங்கள் விரும்பினால் நம் தளத்தின் செலவுகளுக்கு பிரதி மாதமோ அல்லது உங்களால் முடியும்போதெல்லாம் பணம் அனுப்பலாம். வீட்டை விட்டு வெளியே இறங்கினால், சுவாசிக்கும் காற்றை தவிர, இங்கு அனைத்துக்கும் பணம் தேவைப்படுகிறது என்கிற ஒரு சூழ்நிலையில் இந்த தளம் நடத்தப்படுகிறது என்பதை என்றும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அப்படிப்பட்டதொரு சூழ்நிலையிலும் நமது தளம் தனித்தன்மையுடன் கிட்டத்தட்ட ஒரு முன்னணி பத்திரிக்கை போல நடத்தப்படுவது நீங்கள் அறிந்ததே. நம்மால் இந்த தளத்தை நடத்த நேரத்தை தான் ஒதுக்கமுடியுமே தவிர பணத்தை அல்ல. அப்படியிருந்தும் எவ்வளவோ முறை கைகளில் இருந்து செலவு செய்துள்ளோம். மயிலிறகே ஆனாலும் ஒரு குறிப்பிட்ட அளவு தான் வண்டி பாரம் தாங்கும் என்பது யதார்த்தம்.

    அதே போன்று நமது உழவாரப்பணியின் போது வேன் ஏற்பாடு செய்தால், கலந்துகொள்பவர்கள் உணவு மற்றும் போக்குவரத்து செலவுக்கு அவரவர் வசதிக்கேற்ப அவர்களால் இயன்ற தொகையை நன்கொடையாக அளித்தால் மிகவும் உபயோகமாக இருக்கும். (இது கட்டாயமல்ல. அவரவர் விருப்பம்.)

    நமது தளத்தின் சேவைகளில் தங்களை இணைத்துக்கொள்ள பணம் அனுப்பும் வாசகர்கள் மறக்காமல், மின்னஞ்சலில் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் இவற்றை குறிப்பிட்டு அனுப்பவும். ஏனெனில் நாம் ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஆலயத்திற்கு செல்லும்போதெல்லாம், நம் வாசகர்கள் ஒவ்வொருவரின் குடும்பமாக தேர்வு செய்து அர்ச்சனை செய்துவருகிறோம். ஏதோ நம்மால் முடிந்த ஒரு சிறு பிரதி உபகாரம்.

    நமது பணிகளுக்கு நீங்கள் அளிக்கும் தொகை மிகுதியானால் அது ரைட்மந்த்ரா வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டு வழக்கமான அறப்பணிகளுக்கு உபயோகப்படுத்தப்படும்.

    புரிதலுக்கு நன்றி!!!

    – சுந்தர்,
    ஆசிரியர்,
    http://www.rightmantra.com
    E: simplesundar@gmail.com | M : 9840169215

    ஜி,
    மேலே உள்ள பதிவை தற்போதுதான் பார்த்தேன். நிச்சயம் என்னால் முடிந்த அளவு நமது பணிகளுக்கு உதவுவேன். நன்றி.

  12. Ji,
    நான் படித்தது

    If egg is broken by
    outside force,life ends.
    if broken by inside force
    life begins.
    Great things always
    begin from inside.

  13. மிகவும் அருமையான ஸ்பெஷல்.
    வாழ்க்கையில் போராடி சாதனை படைக்க நினைக்கும் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு.

    நட்புடன்

    நந்தகோபால்
    வந்தவாசி

  14. ஜி,
    மேலே உள்ள பதிவை தற்போதுதான் பார்த்தேன். நிச்சயம் என்னால் முடிந்த அளவு நமது பணிகளுக்கு உதவுவேன்.
    நன்றி.

    நந்தகோபால்
    வந்தவாசி

  15. Ur words bear inexhaustible strength and serves as a strongest motivation to our people. You continue to inspire us by your personal power throughout. I feel empowered to achieve the Best Of the Bests in MY LIFE.,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *