Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, May 19, 2024
Please specify the group
Home > Featured > வசிஷ்டர் அருளிய தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்

வசிஷ்டர் அருளிய தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்

print
சிஷ்டர் பிரம்மாவின் புத்திரர்களுள் ஒருவர். இவர் ஒரு பிரம்மரிஷி. ஸப்தரிஷிகளுள் ஒருவர். தன் அம்சம் மூலமாக ஒரே நேரத்தில் பல இடங்களில் இருக்கும் ஆற்றல் பெற்றவர். சாமான்ய மக்களும் சிவனருள் பெற்று பொருளாதரத்தில் உயர அவர் இயற்றியது தான் இந்த அற்புதமான ]தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்’ ஸ்லோகம்.

பெயருக்கு ஏற்றார்போல, தமது தரித்திரத்தை சுட்டுப் பொசுக்க கூடியது இந்த சுலோகம்.

சமஸ்கிருதத்தில் காணப்படும் இந்த ஸ்லோகத்தை நீங்கள் சுலபமாக உச்சரிக்க வேண்டும் என்பதால் கடைசியில் இதன் வீடியோவை தந்திருக்கிறோம். வீடியோவை ஒலிக்கவிட்டு படித்துவரவும். நாளடைவில் உச்சரிப்பு நன்கு பழகிவிடும்.

பொருள் தெரியாமல், ஒரு ஸ்லோகத்தை உச்சரிப்பதால் என்ன பயன்? இது அர்த்தமற்ற செயலாகாதா என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். பொருள் தெரியாமல் ஸ்லோகத்தை உச்சரித்தாலும் பலன் நிச்சயம் உண்டு. ஒவ்வொரு அட்சரத்திற்கும் பலன் உண்டு. அடுத்த பதிவில் அதைப் பற்றி விரிவாக விளக்குகிறோம். அவசியம் அனைவரும் அதை படிக்கவேண்டும்.

Lord Siva statue

தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்

விஶ்வேஶ்வராய னரகார்ணவ தாரணாய
கர்ணாம்றுதாய ஶஶிஶேகர தாரணாய |
கர்பூரகான்தி தவளாய ஜடாதராய
தாரித்ர்யதுஃக தஹனாய னமஶ்ஶிவாய || 1 ||

கௌரீப்ரியாய ரஜனீஶ களாதராய
காலான்தகாய புஜகாதிப கம்கணாய |
கம்காதராய கஜராஜ விமர்தனாய
தாரித்ர்யதுஃக தஹனாய னமஶ்ஶிவாய || 2 ||

பக்தப்ரியாய பவரோக பயாபஹாய
உக்ராய துஃக பவஸாகர தாரணாய |
ஜ்யோதிர்மயாய குணனாம ஸுன்றுத்யகாய
தாரித்ர்யதுஃக தஹனாய னமஶ்ஶிவாய || 3 ||

சர்மாம்பராய ஶவபஸ்ம விலேபனாய
பாலேக்ஷணாய மணிகும்டல மம்டிதாய |
மம்ஜீரபாதயுகளாய ஜடாதராய
தாரித்ர்யதுஃக தஹனாய னமஶ்ஶிவாய || 4 ||

பம்சானனாய பணிராஜ விபூஷணாய
ஹேமாம்குஶாய புவனத்ரய மம்டிதாய
ஆனம்த பூமி வரதாய தமோபயாய |
தாரித்ர்யதுஃக தஹனாய னமஶ்ஶிவாய || 5 ||

பானுப்ரியாய பவஸாகர தாரணாய
காலான்தகாய கமலாஸன பூஜிதாய |
னேத்ரத்ரயாய ஶுபலக்ஷண லக்ஷிதாய
தாரித்ர்யதுஃக தஹனாய னமஶ்ஶிவாய || 6 ||

ராமப்ரியாய ரகுனாத வரப்ரதாய
னாகப்ரியாய னரகார்ணவ தாரணாய |
புண்யாய புண்யபரிதாய ஸுரார்சிதாய
தாரித்ர்யதுஃக தஹனாய னமஶ்ஶிவாய || 7 ||

முக்தேஶ்வராய பலதாய கணேஶ்வராய
கீதாப்ரியாய வ்றுஷபேஶ்வர வாஹனாய |
மாதம்கசர்ம வஸனாய மஹேஶ்வராய
தாரித்ர்யதுஃக தஹனாய னமஶ்ஶிவாய || 8 ||

வஸிஷ்டேன க்றுதம் ஸ்தோத்ரம் ஸர்வரோக னிவாரணம் |
ஸர்வஸம்பத்கரம் ஶீக்ரம் புத்ரபௌத்ராதி வர்தனம் |
த்ரிஸம்த்யம் யஃ படேன்னித்யம் ன ஹி ஸ்வர்க மவாப்னுயாத் || 9 ||

|| இதி ஶ்ரீ வஸிஷ்ட விரசிதம் தாரித்ர்யதஹன ஶிவஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||

வசிஷ்ட மகரிஷியால் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லி வந்தால், தரித்திரமும் நோயும் விலகி, சந்தான ப்ராப்தி உள்ளிட்ட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

==================================================================

அறிவிப்பு : வரும் ஞாயிறு எதிர்பாராதவிதமாக ஒரு ரோல்மாடல் சந்திப்புக்காக நாம் கோவை செல்லவிருப்பதால், நமது புதுவை குரும்பபேட் ராகவேந்திரர் பிருந்தாவன உழவாரப்பணி அடுத்த ஞாயிறு – செப்டம்பர் 21, 2014 – அன்று நடைபெறும். வாசகர்கள் சிரமத்திற்கு மன்னிக்கவும். செப்டம்பர் 21 வர விரும்பும் வாசகர்கள் நமக்கு மின்னஞ்சலில் தகவல் தெரிவிக்கவும். நன்றி.

==================================================================

தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம் –   YOUTUBE VIDEO

Also check …  From earlier posts of Rightmantra.com

===============================================================

நமக்கென்று ஒரு சொந்த வீடு – உங்கள் கனவு இல்லத்தை வாங்க / கட்ட வழிகாட்டும் பதிகம்!

ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

அகத்தியரின் ‘திருமகள் துதி’ – இது வீட்டில் இருந்தாலே திருமகளின் அருள்மழை நிச்சயம்!

மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!

பன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்!

ஆஞ்சநேய பக்தர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் – கிடைப்பதர்க்கரிய ஸ்ரீஹநுமத் சுப்ரபாதம்!!

வறுமையை விரட்டி, பொன் பொருள் சேர்க்க எளிய தமிழில் ஒரு அழகிய ஸ்லோகம்!

ராம நாமமும் சுந்தரகாண்டமும் வாசகரின் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்கள்!

‘திருவாசகம்’ என்னும் LIFESTYLE MANTRA – கருவுற்றிருக்கும் பெண்கள் கவனத்திற்கு!

===============================================================

[END]

7 thoughts on “வசிஷ்டர் அருளிய தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்

 1. வணக்கம்…………

  யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என இந்த ஸ்தோத்திரத்தை அனைவரும் பயன் பெறும் பொருட்டு அளித்தமைக்கு நன்றி……….

 2. நன்றி சுந்தர்.. ஆனால் நீங்கள் கொடுத்துள்ள வரிகளுக்கும், வீடியோ வில் உள்ள வரிகளுக்கும் சில வித்யாசங்கள் வருகிறது. தயவு கூர்ந்து சரி பார்க்கவும், எது சரியான உச்சரிப்பு அல்லது பாடல் என்று தெரிவிக்கவும்.

  நன்றி.

  1. ஆம்… காலை நானும் கேட்கும்போது கவனித்தேன். நேரமின்மையால் திருத்தம் செய்ய இயலவில்லை. இப்போது எஸ்.பி.பி. பாடிய வேறு ஒரு வீடியோவை இணைத்துள்ளேன். இது சரியாக என்று கருதுகிறேன்.

   – சுந்தர்

 3. இந்த சுலோகத்த நான் அடிக்கடி படிப்பேன் மிகவும் அழகான சுலோகம் திரு SPB அவர்களின் இனிமையான குரல் வளத்தில் கேட்க அற்புதமாக இருக்கும். கண்டிப்பாக இந்த ஸ்லோகத்தை படிப்பதால் வீட்டில் சுபிக்ஷம் ஏற்படும் பொருளாதார அபிவிருத்தி உண்டாகும்

  நன்றி

  உமா

 4. மிக்க நன்றி சுந்தர். ஒரு பணிவான வேண்டுகோள். இந்த மாதிரி முக்கிய ஸ்லோகங்களை தொகுத்து ஒரு கையேடு போன்று நமது தளத்தின் சார்பாக வெளியிட்டால் (ஆலய தரிசனம் போன்று )நம் வாசகர்கள் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். அதற்கு ஆகும் செலவை வாசகர்கள் எல்லோரும் பகிர்ந்து கொள்ளலாம். ஒரு பதிவு பார்த்தவுடன் தினசரி சுலோகம் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. பிறகு அன்றாட பணிகளில் மறந்து விடுகிறது. இந்த பதிவில், இதற்கு முன்பு பதிவிட்ட சுலோகங்களின் லிங்க் கொடுத்துள்ளீர்கள். அதனை பார்த்த பின்புதான் இந்த யோசனை தோன்றியது. வாசக நண்பர்கள் இது பற்றிய உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.

 5. திரு சக்திவேல் அவர்கள் சொல்வது சரி தான்.
  நீங்கள் போடும் சுலோகங்கள் பேப்பரில் எழுதி வைத்து படித்தால் கூட தினப்படி வேலையில் மறந்து விடுகிறது.
  அதனால் புத்தகமாகவோ அல்லது cd வடிவிலோ கொடுத்தால் நன்றாக இருக்கும்.
  ஆனால் கேட்டால் கிடைக்குமா (அதிலும் நான் கேட்டால்) என்பது தெரியவில்லை.
  இந்த சுலோகம் என் உடன்பிறவா சகோதரி என் மொபைலில் பதிந்து கொடுத்தால் தான் தினமும் கேட்கும் பாக்கியம் பெற்ற்றுள்ளேன்.
  நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *