மஹாளய அமாவாசை தினத்தன்று நம் பித்ருக்கள் அனைவரும் சூரிய சந்திர உலகத்துக்கு வருவதால் அனைத்து உறவினர்களுடைய சந்திப்பும் நிகழ்கிறது. அன்று செய்கின்ற தர்ப்பணத்தில் விடுகின்ற எள் மற்றும் தண்ணீரை ஸ்வேதா தேவி என்பவள் மிக எளிதாக பித்ருக்களிடம் சேர்த்துவிடுகிறாள்.
* தந்தை இருக்கும்போது மகன் பித்ரு காரியங்கள் செய்யக்கூடாது. அதற்கு பதில் கோ-சம்ரோக்ஷனம் செய்யலாம். கோ-சம்ரோக்ஷனம் பரம ஔஷதம். பசுவுக்கு அகத்திக்கீரை, பழங்கள் இவற்றை வாங்கித் தரலாம். உங்கள் பித்ருக்களின் திதியன்று நீங்கள் அன்னதானம் செய்யலாம். காக்கைக்கு உணவிடலாம். ஏழைகளுக்கு வஸ்திர தானம் உள்ளிட்டவற்றை செய்யலாம். இவை நிச்சயம் உங்கள் பித்ருக்களை திருப்தி படுத்தும்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மஹாளயம் பற்றியும் மஹாளய அமாவாசை பற்றியும் சென்ற ஆண்டு நாம் 5 பதிவுகள் அடங்கிய ஒரு மினி தொடரே தந்திருக்கிறோம். பல தகவல்கள் அதில் அடங்கியுள்ளன. படித்து பயன்பெருவீர்களாக.
இந்த ஆண்டும் மஹாளய ஸ்பெஷல் பதிவுகள் உண்டு. முதல் பதிவாக பித்ருக்களின் முக்கியத்துவத்தை பற்றியும், அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் குறித்தும், அப்படி செய்தால் என்னென்ன நன்மைகள் விளையும் என்பதைப் பற்றியும் தகவல்களை தருகிறோம்.
பித்ருக்களை போற்றுவோம். நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெறுவோம்.
சென்ற ஆண்டு மஹாளயத்தையொட்டி நாம் அளித்த சிறப்பு பதிவுகள்
==================================================================
நற்பலன்களை வாரி வழங்கும் பித்ருக்களுக்குரிய மஹாளய புண்ணிய காலம் – மஹாளய SPL 1
அண்ணன்-தம்பி தனித்தனியே சிரார்த்தம் செய்யவேண்டுமா? மஹாளய SPL 2
சிரார்த்தம், திதி, தர்ப்பணம், மஹாளயம் & பித்ரு தோஷ பரிகாரம் – முழு தகவல்கள் – மஹாளய SPL 3
மஹாளய நாட்களில் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்! மஹாளய SPL 4
மகத்துவம் மிக்க மகாளய அமாவாசை – நீங்கள் செய்ய வேண்டியது என்ன? மஹாளய SPL 5
==================================================================
[END]
முன்னறிவிப்பு செய்து நடக்க வேண்டியவற்றை நினைவு படுத்தியுள்ளீர்கள். நன்றி1.
மகாளைய பதிவு எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். பித்ருக்கள் மனம் குளிர்ந்தால் நம் வருங்கால சந்ததியினர் கண்டிப்பாக பார் போற்றும் நன் மக்களாக இருப்பார்
நன்றி
உமா
சார் மேலே குறிப்பிட்டுள்ள மாகாளய ஸ்பெஷல் 5 ஐயும் அச்சிட்டு விழாக்களில் கொடுக்கலாம். அனுமதி தேவை. வியாபாரம் கிடையாது. இலவசமாக நினைவு நாட்களில் கொடுகலாம்- ராமலிங்கம், கரசூர், புதுவை மாநிலம்.
தாராளமாக. நமது தளத்தின் பெயரை (www.rightmantra.com) முகப்பிலோ இறுதியிலோ குறிப்பிட்டீர்கள் என்றால் மிக்க மகிழ்ச்சியடைவேன்.
நன்றி.
– சுந்தர்
அப்படியே செய்கிறேன். தேவையான போது தாங்கள் குறிப்பிட்ட படி உங்கள் தளத்திற்கு நன்றி என்ற குறிப்புடன் வழங்கி விட்டு நகல் ஒன்றையும் அனுப்பி வைக்கின்றேன். நன்றி