தொடர்ந்து துரத்திய துரோகங்களாலும் பொறாமையினாலும் சூழ்ச்சிகளாலும் மனம் வெறுத்துப் போய் ஒரு கட்டத்திற்கு மேல் என்ன செய்வதென்று புரியாமல், எவரிடமும் சொல்ல வழியுமின்றி கண்ணீரிலேயே நாம் நாட்களை நகர்த்திய காலம் உண்டு. கைகள் கட்டப்பட்ட நிலையில் பந்தயத்தில் இறக்கிவிடப்பட்டால் ஒருவனால் என்ன செய்ய முடியும்? படித்த படிப்புக்கு ஏற்றதொரு வேலையை ஓரளவு நல்ல சம்பளத்தோடு நாம் பார்த்துவந்தாலும், சமுதாயத்தில் வெற்றிக்கொடி நாட்ட, ஒரு உயர் நிலையை அடைய எழுதுவதை தவிர நமக்கு வேறொன்றும் தெரியாத நிலையில் நமது பேப்பரும் பேனாவும் நம்மிடமிருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டன. என்ன செய்வது? எங்கே போவது? ஒன்றும் புரியாமல், திக்கு தெரியாத கடலில் தத்தளித்தோம்.
கட்டுண்டோம். பொறுத்திருந்தோம். காலம் கனிந்தது.
திக்கற்றோருக்கு தெய்வம் தானே துணை? இறைவனை சரணடைந்தோம். நம்மை அவனிடம் முழுக்க முழுக்க ஒப்படைத்தோம். TOTAL SURRENDER என்பார்களே அது போல. செய்த தவறுகளுக்காகவும், வீணடித்த காலத்திற்காகவும் அவன் சன்னதியில் தேம்பி தேம்பி பல முறை அழுததுண்டு. “நான் வாழ ஆசைப்படுகிறேன். எனக்கு மீண்டும் ஒரு வாழ்க்கை வேண்டும்!” என்று கதறி துடித்தோம்.
நல்லதோர் வீணைசெய்தே-அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி;-எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ,-இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி,சிவசக்தி!-நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
என்ற பாரதியின் மனநிலை தான் நமக்கு அப்போது இருந்தது.
அவனைப் பற்றிய கால்களை மட்டும் விடவேயில்லை.
காலம் கனிந்தது. கடவுள் கண் திறந்தார். பாதை தெரிந்தது. இறைவனின் கட்டளைப்படி ரைட்மந்த்ரா பிறந்தது. இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஒரு விநாயகர் சதுர்த்தி நன்னாளில் நம் தளம் மலர்ந்தது.
எந்த தைரியத்தில், எந்த நம்பிக்கையில் இப்படி ஒரு ஆன்மீக + சுயமுன்னேற்ற தளத்தை நாம் துவக்கினோம் என்று இன்று வரை நமக்கு தெரியாது. எனவே தான் இறைவனின் கட்டளை என்று சொல்கிறோம்.
சினிமாவையும் அரசியலையும் அறவே தவிர்த்து இப்படி ஒரு தளம் துவக்கி அதை வெற்றிகரமாக இவனால் எப்படி நடத்த முடியும் என்று புறம் பேசியவர்கள் ஏராளம். இங்கும் நமது வீழ்ச்சியை காணத் துடித்தவர்கள் உண்டு. புறம் பேசுபவர்கள் உண்டு.
இதோ இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த இரண்டு ஆண்டுகளில் 642 பதிவுகள் நம் தளத்தில் அளிக்கப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்ப்பட்டவர்கள் நம் தளத்தை முகநூலில் பின்தொடர்கிறார்கள். தினசரி பார்வையாளர்கள் சுமார் ஐந்தாயிரத்தை நெருங்கவிருக்கிறார்கள்.
இந்த இரண்டு ஆண்டுகளில் மாபெரும் சாதனையாளர்களை கொண்டு இரண்டு பாரதி விழா, ஒரு ஆண்டுவிழா, பி.சுவாமிநாதன் அவர்கள் தலைமையில் மகா பெரியவா சொற்பொழிவு என்று நமது தளம் நான்கு பெரிய விழாக்களை நடத்திவிட்டது. ஒவ்வொரு விழாவும் ஒன்றையொன்று விஞ்சும் வகையில் அமைந்தது ஆண்டவன் கருணையே.
(*நமது புகைப்படத்தை இந்த தளத்தில் வெளியிடுவதை நாம் விரும்புவதில்லை. அதை எந்தளவு தவிர்த்து வந்துள்ளோம் என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள். ஆனால், தற்போது வெளியிடவேண்டிய ஒரு சூழல் என்பதால் வெளியிடுகிறோம். நண்பர்களும் வாசகர்களும் பொருத்தருளவேண்டும்.)
மேலும் ஒப்பற்ற பல சாதனையாளர்கள் சந்திப்பு, வாசகர்களின் துணையோடு பல கோவில்களில் பல திருப்பணிகள், திருக்கோவில் அன்னதானங்கள், ஆலய தரிசனங்கள், பதினைந்துக்கும் மேற்ப்பட்ட உழவாரப்பணிகள், பல ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகளின் அறிமுகம், சான்றோர்களின் நட்பு, பல திருக்கோவில்களில் ராஜ மரியாதை என நம் பாதை சென்றுகொண்டிருக்கிறது. முட்கள் வீசப்பட்ட நம் பாதையில் இன்று மலர்கள் கொட்டுகின்றன. எல்லாம் அவன் செயல்.
எல்லாவற்றுக்கும் மேல், நமக்காக பிரார்த்திக்கும் நல்லுள்ளங்கள், நமது நலனில் உண்மையான அக்கறை கொண்ட நண்பர்கள், என இது ஒரு புது உலகம்.
இது ஒரு வகையில் நமக்கு மறுபிறப்பு போல.
கருவேப்பிலை போல போவோர் வருவோர் கால்களில் எல்லாம் மிதிபட்டு சாக்கடையில் தூக்கிவீசப்பட்ட நாம் இன்று துளசி தளமாக மாறி இறைவனின் திருவடியை அலங்கரிக்கிறோம். (சில நாட்களுக்கு முன்னர் புதுவை சென்றபோது அங்கு குரும்பபேட் ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் நமக்கு கிடைத்த வரவேற்பும் கௌரவமும் நாம் கனவில் கூட நினைத்துப் பார்த்திராத ஒன்று! அதை விவரிக்க ஒரு பதிவு போதாது!! நமது புதுவை ராகவேந்திரர் பிருந்தாவன தரிசன அனுபவம் தனிப் பதிவாக வருகிறது. அதில் நண்பர்கள் படங்கள் [மட்டுமே] இடம்பெறும்.)
நமக்கு மட்டுமல்ல, நம்முடன் வந்த நண்பர்களுக்கும் ராயர் தந்த அந்த சிறப்பும் கௌரவமும் கிடைத்தது என்பது நம்மை கூடுதல் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் செயல். பசி தூக்கம் துறந்து இந்த தளத்தை நாம் நடத்துவதற்கு பெருமைப்பட்ட தருணம் அது. நெகிழ்ச்சியில் அழுதே விட்டோம்.
வாழ்வில் நாம் கற்றுக்கொண்ட மிகப் பெரும் நீதி :
1) கடவுளை நம்பினோர் கைவிடப்படார் 2) நடப்பதெல்லாம் நன்மைக்கே. நடக்காதது இன்னும் நன்மைக்கே.
நம்மை அந்த நிலைக்கு தள்ளியவர்கள் அனைவருக்கும் இப்போது நன்றி சொல்கிறோம். அவர்களால் தான் இதெல்லாம் சாத்தியமாயிற்று. ஒன்றுக்கும் உதவாத இந்த களிமண்ணை கோவில் சிற்பமாக வடித்த பெருமை அவர்களையே சாரும். அவர்கள் இல்லையேல், இன்று ரைட்மந்த்ரா சுந்தர் இல்லை. தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசியே காலம் கழிந்திருக்கும்.
இந்த நன்னாளில் நம் வாசகர்கள், நண்பர்கள், தளம் துவக்க மறைமுக உந்துதலாய் இருந்த www.shivatemples.com நாராயணசாமி, நேரடி உந்துதலாய் இருந்த, இக்கட்டான நேரத்தில் சரியான வழி காட்டிய www.livingextra.com நண்பர் ரிஷி, மற்றும் அனைவருக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
பெயரைக் கூட வெளியிட விருப்பமின்றி நம் தளத்திற்கும் நமது பணிகளுக்கும் உதவி வருபவர்கள் பலர் உண்டு. அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை கூற கடமைப்பட்டுள்ளோம்.
நேற்றை நாள் நமது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாள். இரண்டு விதங்களில். ஒன்றை மட்டும் இங்கே பகிர்ந்துகொள்கிறோம்.
நேற்றைக்கு வெளியான மாலைமலர் நாளிதழின் இணைப்பான விநாயகர் சதுர்த்தி சிறப்பிதழில் நமது கட்டுரை ஒன்று நமது பெயரோடு வெளியாகியிருக்கிறது.
பத்திரிக்கையில் ஒரு கட்டுரை வெளிவருவது ஒன்றும் பெரிய விஷயமல்ல. சாதனையுமல்ல. ஆனால் அங்கீகரிக்க வாய்ப்பிருந்தும் நம்மை அங்கீகரிக்க தயங்குபவர்கள், அச்சப்படுபவர்கள் மத்தியில் இது ஒரு பெரும் சாதனை. ஆம்… மிகப் பெரும் சாதனை.
துரோகத்தால் வீழ்ந்தவனுக்கு இது புதிது. இந்த அனுபவம் புதிது. இந்த வாழ்க்கை புதிது. இந்த அங்கீகாரம் புதிது.
நமது முதல் நாளிதழ் பத்திரிகை கட்டுரை முழுமுதற்க் கடவுள் ஆனைமுகனை பற்றி வெளியாகியிருப்பது நமக்கு மிக்க மகிழ்ச்சி. இது ஒரு நல்ல தொடக்கம். ஏனெனில், நமது படைப்புக்கள் பத்திரிக்கைகளில் வெளியாக இதற்கு முன்பு நாம் சில முறை முயற்சித்தது உண்டு. ஆனால், ஏதேனும் ஒரு காரணத்தினால் அது கைகூடாமல் நழுவிச் சென்று கொண்டிருந்தது. ஆனைமுகனுக்குரிய விநாயகர் சதுர்த்தி நன்னாளில் பிறந்ததால் என்னவோ நம் தளத்தின் மீது ஆனைமுகனுக்கு தனி கருணை போல. அவனை பற்றிய படைப்பே முதல் படைப்பாக வெளிவந்துள்ளது. நமது லட்சியப்படி, அடுத்து நாம் செல்லவிருக்கும் ஒரு மிகப் பெரிய பயணத்திற்கு இது ஒரு பிள்ளையார் சுழி.
மேன்மேலும் நாம் வளர உங்கள் அனைவரின் நல்லாசிகளும் பிரார்த்தனையும் என்றும் வேண்டும்.
இந்த பயணத்தில் அறிந்தோ அறியாமலோ அடியேன் ஏதாவது தவறு செய்திருந்தால், எவர் மனதையேனும் புண்படுத்தியிருந்தால் பெரிய மனது கொண்டு நம்மை மன்னித்தருள வேண்டும்.
நாம் அனைவருமே சாதிக்கப் பிறந்தவர்கள். இந்த உலகில் நம்மால் முடிந்த ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வந்தவர்கள். அற்ப சிந்தனைகளுக்கு இடங்கொடுத்து, இறைவன் அளித்த அருட்கொடையாம் இந்த மனிதப் பிறவியை வீணடிக்கவேண்டாம்.
மனதி லுறுதி வேண்டும்.
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்!
[END]
வாழ்த்துக்கள் சுந்தர். ஏதோ நானே வெற்றி பெற்ற மாதிரி உள்ளம் உவக்கிறது. மேலும் பலப் பல வெற்றிகள் கிடைக்க குரு துணை உங்களுக்கு உண்டு.
சகோதரன் சுந்தர் அவர்களுக்கு ,
வாழ்த்துக்கள்.உங்கள் பணி மற்றும் தொண்டு மென் மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்….
சகோதரி,
சுந்தரலட்சுமி
வாழ்த்துக்கள்…………வாழ்த்துக்கள்…………வாழ்த்துக்கள்…………
தங்கள் பயணம் மென்மேலும் தொடர்ந்து தாங்கள் எட்ட வேண்டிய இலக்கை விரைவில் அடைய வாழ்த்துக்கள்………….
எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாங்கள் நினைத்த காரியம் யாவினும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ……………
வாழ்க வையகம் வாழ்க நலமுடன்
வாழ்க அறமுடன்..வளர்க அருளுடன்..
வாழ்க வளர்க உங்கள் பணி.. வளர்க உங்கள் தொண்டு…
வாழ்த்துக்கள் சார்
உங்கள் பணி இறைவனின் துணையோடு மென்மேலும் சிறப்பான முறையில் வளர மனமார வாழ்த்துக்கள்
பிரியதர்சினி
அன்பு நண்பர் சுந்தர் அவர்களுக்கு……
மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ரைட்மந்த்ரா தளத்திற்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்….
வாழ்வில் பற்பல சோதனைகளை கடந்த உங்களுக்கு அந்த இறைவன் நல்ல உடல் ஆரோக்கியம், இனிமையான வாழ்க்கை, நிறைவற்ற செல்வம், நல்ல நண்பர்கள், அமைதியான குடும்ப வாழ்க்கை என்று அனைத்தையும் தர வேண்டும் என்று மனமார வேண்டுகிறேன்….
தங்கள் பணி மென்மேலும் சிறக்க என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சுந்தர் ஜி……
நண்பர் சுந்தர் அவர்களது இந்த பயணம் மென்மேலும் சிறக்க என் மனபூர்வமான வாழ்த்துக்கள்.
உங்கள் பணி மற்றும் தொண்டு மென் மேலும் சிறக்கவேண்டும் என இறைவனை வேண்டிகொள்கிறேன்.
Nice recap Sundar Sir, also nice article about ‘Argampul’.
You are doing Right things in a Right way for Right Mantra.
We are very much know that you would reach another milestone in the media world by this time next Vinayagar Sathuri(2015).
God bless you!
சுந்தர் சார் அவர்களுக்கு
மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நம் தளத்திற்கு நல் வாழ்த்துக்கள்.
இரண்டு ஆண்டுகள் தட்டு தடுமாறி படிகள் ஏறி, புது புது பதிவுகள் போட்டு, யார் என்ன சொன்னாலும் அது வாழ்த்தாக இருந்தாலும் சரி, அவமதிப்பாக இருந்தாலும் சரி, என் கடன் பணி செய்து கிடப்பதே என்று எல்லா நாளும் ஒரே குறிகோளுக்காக வாழ்ந்தவர் நீங்கள்.
ஆனால் வெற்றி கோப்பை பெற்றதென்னவோ உங்கள் வாசகர்கள் நாங்கள் தான்.
குருவருளும் திருவருளும் துணை செய்ய இன்னும் பல படிகள் முன்னேற எல்லாம் வல்ல சிவனை வேண்டுகிறோம்.
நன்றி
Great Sir, You are doing a valuable service to the society and the hard path you have crossed to built the site is really great. We are really thankful to you for making us to join hands with you for lot of services especially our Ulavara Pani. Monday Morning Spl has Motivated us a lot and re-invented us in very positive manner.
Few of the things which really impressed is that helping the Farmers community while going for temples and you have set an example for others to do the same. Hats off to you.
Wish you all the success and Your Wishes will come true very Soon….
Thanks
Venkatesh
மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ரைட் மந்த்ராவிற்கு என் மனப்பூர்வமான இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். எவாளவோ அடிபட்டு கஷ்டப்பட்டு இந்த தளத்தை தாங்கள் வெற்றிகரமாக நடத்துவது என்பது சாதாரண விஷயமல்ல அலுவலகத்திலும் வேலை செய்து கொண்டு. . குருவருளும் திருவருளும் இருந்ததால் தான் நீங்கள் இத்தகைய சாதனைக்கு சொந்தக் காரராக ஆகி இருக்கிறீர்கள். கருவேப்பிலையாக இருந்த தாங்கள் துளசி தளமாக மாறி இருகிறீர்கள். இந்த 2 இரண்டு வருடத்தில் எவ்வளவு சாதனையாளர்கள் சந்திப்பு, அன்ன தான நிகழ்ச்சி, கோவில் உழவார்ப்பனி , கோ சம்ரோக்ஷனம், கிளிகளுக்கு உணவு, வயலில் வேலை செய்தோருக்கு உணவு இன்னும் பல அறிய சாதனைகளை செய்து இருக்கிறீர்கள்.
தாங்கள் 3 ம் ஆண்டில் பத்திரிகைத் துறையில் கால் பதித்து விட்டீர்கள். இனிமேல் தங்கள் வாழ்கையில் ஏறுமுகம் தான். தாங்கள் செய்யும் நல்ல செயல்களுக்கு நாங்கள் எப்பொழுதும் உறுதுணையாக இருப்போம் பூவோடு சேர்ந்த நாறும் மணப்பது போல்.
மகா பெரியவா அநு கிரகம் நம் தளத்திற்கு எப்பொழுதும் உண்டு
நன்றி
உமா
திரு சுந்தர் அவர்களுக்கு இதுவரை வாழ்க்கை தனி பயணமாக இருந்தது. இனிமேல் வாழ்க்கை துணைவியுடன் பயணமாக எல்லாம் அருளும் இறைவனை வேண்டுகிறோம். keep it up யுவர் குட் வொர்க். வி ஆர் வித் யு.
regards
jr
வாழ்த்துக்கள் . நன்றி
ராஜா
வாழ்த்துக்கள் சுந்தர். நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் நேற்று தான் ஆரம்பித்த மாதிரி இருக்கிறது. அதற்குள் மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளோம். இந்த தருணத்தில் எனக்கும் நமது தளத்தின் சார்பாக ஒரு பணியை கொடுத்து அதனை எனது எழுத்தின் வழியாகவே தளத்தில் வெளியிட்டதை (http://rightmantra.com/?p=1216) நினைவு கூர்கிறேன். ஒவ்வொரு நாளும் அலுவலகம் வந்தவுடன் மெயில் பார்க்கும் முன்னரே நமது தளத்தை பார்த்த பின்புதான் வேலையை ஆரம்பிப்பது வழக்கம்.
இந்த தளத்தின் மூலமாகதான் முக்கிய விரத தினங்கள், வழிபாட்டு முறைகள் தெரிந்து கொண்டதுடன் முடிந்த வரையில் கடைபிடித்தும் வருகிறேன். உதாரணம்: மார்கழி மாதம் விஸ்வரூப தரிசனம், அன்னாபிஷேகம், ஏகாதசி விரதம் இப்படி சொல்லி கொண்டே போகலாம். உங்களால் அருகில் இருந்து இதுவரை செல்லாத கோவில்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. எல்லாம் அவன் செயல். உங்கள் பணி மென்மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள். என்றும் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பேன்.
நன்றியுடன்,
சக்திவேல், கோவை
இனிய வாழ்த்துக்கள்.
உங்கள் பணி மென்மேலும் சிறக்கவும், வாழ்வில் எல்லாவித நலனும் பெறவும் வாழ்த்துக்கள்.
சுந்தர்ஜி
நம் தளத்திற்கு மூன்றாவது ஆண்டு பிறந்ததது போல் நமக்கும் மறு பிறப்பு எடுத்து இரண்டு வருடம் முடிந்து மூன்றாவது ஆரம்பித்து இருக்கும். ஏன் எனில் அவ்வளவு மாற்றம் நமக்கு ரைட் மந்திரா மூலம் கிடைக்கப் பெற்று உள்ளோம். சுந்தர்ஜி அவர்களின் எழுத்துக்கள் நம்மை போன்றவர்களை மெருகு ஏற்றி உள்ளது என்றால் மிகையில்லை. இந்த வெற்றிக்கு சுந்தரின் தளராத முயற்சியும் குருவின் திருவருளும் முக்கிய காரணங்களாக நாம் கருதுகிறோம்.
மென்மேலும் அவர் வெற்றி பெறவும் நம் தளம் வளரவும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன். நாமும் இந்த தளத்தின் ஒரு வாசகர் என்பதில் பெருமிதம் கொள்வது மட்டும் தான் தற்போதைக்கு நம்மால் முடிந்த நன்றிகடன்! நன்றி சுந்தர்ஜி! வாழ்க வளமோடு !
சுந்தர்ஜி,
“பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு ஆனைமுகன் தந்த அற்புதப் பரிசு”
தலைப்பை பார்த்தவுடன் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
தங்களின் முதல் படைப்பு அந்த ஆணை முகனை பற்றி போட வேண்டும் என்பது அவனது உத்தரவு அன்றி வேறு எதுவும் இல்லை. தாங்கள் மென் மேலும் வளர்ந்து பெரிய ஆளாக வரும் நாள் விரைவில் ………………..
தேனீக்களை போன்று சுறு சுறுப்பாக ஒய்வு இன்றி
எந்த ஒரு பிரதிபலன்கள் எதிர்பார்க்காமல் நல்லதை மட்டும் நினைத்து , நல்ல செயல்கள் செய்து, எத்தனையோ உள்ளங்களின் கவலைகள் போக்கி,தன்னலம் கருதாமல் பிறர் நலம் வேண்டி பிரார்த்தனைகள் செய்து, இப்படி சொல்லி கொண்டே
போகலாம் ………. இத்தனை செய்த தங்களுக்கு
அந்த ஆனைமுகன் தந்த பரிசு அன்றி வேறு எதுவும் இல்லை. தங்களின் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
வாழ்கையில் தங்களுக்கு தடை கல்லிற்கு வேலை இல்லை. இனி ஏறு முகம்தான்.
வாழ்த்துக்கள்.
ரைட் மந்த்ரா தளத்திற்கு என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள். ஆனை முகன் அருளால் மேலும் பல milestone சாதனை புரிந்திட வாழ்த்துக்கள். நன்றி சுந்தர்ஜி
பல அலைபேசி உரையாடல் …பலரை பற்றி பலவிதமான பேச்சு என்று சில வருடங்கள் சென்றன.
ஆனால் சில பல காரணங்களால் உங்களது முந்தைய ஐந்தாண்டு உழைப்பை கைவிட்ட நேரம் …அந்த குழப்பமான காலகட்டம் மறக்க முடியாது (that switch ஓவர் டைம்)
இது சாத்தியமா என்று இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாம் பேசிய அலைபேசி உரையாடல் நியாபகம் வருகிறது.
இன்று இந்த நிறைவான பயணம்
அந்த இறுக்கத்தை குறைத்து
இன்று ஏனோ மனம் லேசாகிறது.
சந்தோஷப்படுகிறது
அன்றும் இன்றும் பல மாற்றங்கள் பலரிடம்
ஆனால் உங்களது மாற்றம், சற்று கடினாமாக இருந்தாலும்
நிறைவானது உள்ளது இன்று
இன்னும் பல மாற்றத்தை எதிர்பார்கிறேன்
எதிர்பார்ப்புடன்
-ஹரி.சிவாஜி
வாழ்த்துக்கள் சுந்தர்
உங்கள் லட்சிய பாதையில் மென் மேலும் தொடர்ந்து, இன்னும் பல நற்காரியங்களும், இறை தொண்டும் செய்து உங்கள் கனவுகள் எல்லாம் கை கூட எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்.
வாழ்க வளர்க.
நன்றி
சுந்தர் அவர்களே
எல்லாம் வல்ல இறைவன் அருளாலும் மஹா பெரியவரின் அருளாலும் மென் மேலும் ரைட் மந்த்ரா வளர்ச்சி பெற்று பல கோடி நல்ல உள்ளம் படைத்த வாசர்களை பெற்று புகழ் பெரும்.
All the best
reg
KK Navi Mumbai
இனிய நல்வாழ்த்துக்கள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
இறைவன் அருளால் மேலும் பல்லாண்டு உங்கள் பணி தொடரவும் சிறக்கவும் வாழ்த்துக்கள்.
பல்வேறு சோதனைகளுக்கு இடையிலும் தொடர்ந்து சேவை செய்துவரும் உங்களுக்கு நன்றி.
ஓம் நம சிவாய.
வாழ்த்துக்கள் சுந்தர் சார்.
Congrats Sundar Ji for this achievement..
Wish you greater success in years to come..
For all the noble deeds and I am sure GOD will bless you with choicest blessings
சுந்தர்ஜி
மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நம் ரைட்மந்த்ரா தளத்திற்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்…
எங்களை போல் வாழ்கையில் கடைசி நுனியில் நிற்பவர்களுக்கு நம் தளம் சிறந்த தன்னபிக்கை, தைரியம் தரும் அருமருந்து
நமது தளத்தை பார்த்த பின்புதான் வேலையை ஆரம்பிப்பது வழக்கம்.
மேலும் பல பல சாதனை படைக்க வாழ்த்துகள்.
நன்றி
,
நன்பர் சுந்தர் அவர்களுக்கு
உங்கள் பணி இறைவனின் துணையோடு மென்மேலும் சிறப்பான முறையில் வளர மனமார வாழ்த்துக்கள்.
ஹரிகிருஷ்ணன்
சார் நீங்க சொன்னது நிஜம் சத்தியமான உண்மை
உன் கண்ணீர் தெரியாது
உன் வலி தெரியாது
உன் துன்பம் தெரியாது
ஆனால் உன் தவறுகள் மட்டும் எல்லோருக்கு தெரியும்……
அதை சொல்லிகாட்டதான் எத்தனை பேர்
உங்கள் வார்தைகள்ள எத்தனை ஆழம் …. கண்ணீர் வருது சார்
கீப் இட் ஆப்
வாழ்த்துக்கள் சுந்தர் அவர்களே இப்பொழுது தான் தொடங்கியது போல் உள்ளது ,காலம் எவ்வளவு வேகமாக சுழல்கிறது ,அதே போல் உங்களின் நிறைய பதிவுகள் முன்னணி தினசரிகளில் தங்களுடைய பதிவை போல் போட்டு பெருமை தேடி கொண்டார்கள்.நாம் போடும் உழைப்பிற்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும் அது யார் தடுதக்க நினைத்தாலும் நடக்கும் என்ற உண்மை தான் இன்று கிடைத்துள்ள இந்த அங்கிகாரம்
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
மனமார்ந்த வாழ்த்துக்கள் சுந்தர்…
உங்களுடைய சிருஷ்டிகள் / பதிவுகள் நல்ல பக்தர்களின் மன அதிர்வோடு ஒத்துப்போகிறது.மனம் நல்ல விசயங்களை நினைத்து கொண்டிருப்பது ஒரு வரம். அது உங்களிடம் இருக்கிறது!
மனம் பெற்றெடுத்த குழந்தையை போன்றது. நல்ல விசயங்களை சொல்லிக் கொடுத்தால் நல்லதையே செய்யும்.
எந்திரங்கள் செய்யாத விசயங்களை மந்திரங்கள் செய்ய முடியும்..
நல்ல மந்திரங்களை சொல்லித் தரும் தளம் உள்ளங்களை வசீகரிப்பதில் வியப்பேதுமில்லை!!
நம் தளத்தை படிக்கும்போது .
பேரமைதி பிறந்தது
பணம் பொருள் வேண்டா பக்தி பிறந்தது
மனம் கரைந்து மகிழ்ச்சி பிறந்தது
தானத்தால் கிடைக்கும் நிதானம் பிறந்தது
திருக்குளத்தில் குளித்தெழுந்த திருப்தி பிறந்தது
குருவருளால் பக்தி பரிணாமம் பிறந்தது
சோகம் மறைந்து சுகம் பிறந்தது
சீவனே சிலாகித்து சிவசுகம் பிறந்தது
மந்திரக் குழந்தைக்கு
சுந்தரத் தமிழ் ஊட்டி
திக்கெல்லாம் இறைமணம்
பரப்பிட வாழ்கவென வாழ்த்துகிறேன்…..
வால்டேர்.
வாழ்க வளமுடன் . எல்லாம் நன்மைகே , எவரையும் நம்பாதே , பரமனை மட்டும் நினை
ஆசிரியர் சுந்தர் அவர்கட்கு, தங்கள் தளத்தின் வளர்ச்சி பாராட்டத்தக்கது. தானத்தில் சிறந்தது நிதானம். உங்கள் தரமான பதிவுகளும்,வாசிப்பவர் கண்களை கண்ணீர் வரவைக்கும் சம்பவங்களும், மகான்களின் அற்புதங்களும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். சில சமயங்களில் உங்கள் பதிவு படிக்கும் போதே உடனே ஓடிச்சென்று இறைவனை பார்க்க வேண்டும் போல இருக்கும். அத்தனை தத்ரூபமாக எழுதிக் கொண்டு இருக்கிறீர்கள்.உங்கள் தளம் மென்மேலும் வளர என் மனமுவந்த பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்.
வந்த துன்பம் எது என்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை .நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு.கவியரசர் சொன்ன உண்மை.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
Hi Sundarji,
Wonderful and very happy to know about your entry in Newspaper through the same god on whom’s day you had started this site.
**
From earlier Sundar to Rightmantra Sundar, still the transition and your feelings come alive even now too.
God blessed you on so many occasions and to top it all, the recognition which you deserve you got is recent Pondicherry Kurumbapet Sri Ragavendra’s blessings along with his ‘real’ darshan of showing his face and legs in the photo plus that temple’s prasadam – literally to say it’s the prasadam came from Mantralayam – his statue, his dollar, and above all, salvai recognition – that too, in front of Swami Krishna – on whom you have recently written article about his various struggles in his human life (avatar) with Swami Ragavendra at his back.
**
I had been with you at the end of your earlier version and came again into your life at the end of this two yr’s new version. God blessed me too to be with you at these occasions.
**
You should not stop with this newspaper’s entry alone, but to enter into publishing and writing books like ‘Amman Satyanathan’ – who is one of your favourite and Inspirational writers.
**
I’m waiting for the day when I get to have the opportunity of participating in ‘your book’ release function.
**
I’m sure from this third yr starting, you would achieve stupendous success in your personal and professional life along with your grandma’s blessings.
**
If it not had been the bitter experience of yours earlier, it would not have come to this such a great level – which you might haven’t expected. So you’re where you’re meant to be. If you have any bitter feelings about earlier things, please drop them all from your mind. All is well and will be well too.
**
Wish you the very best future for you and your family (Wife- soon will happen, & parents).
God bless this good soul.
**
your wellwisher,
**Chitti**.
முதலில் உங்களுக்கு என் வாழ்த்துகள் சுந்தர் அண்ணா….மகிழ்வாக இருக்கிறது. இந்த மகிழ்வு மாலைமலர் செய்தியினால் மட்டும் அல்ல, நமது தளம் கடந்து வந்த பாதையை பார்க்கும்போதும் , இன்று நம் தளம் அடைந்திருக்கும் புதிய பரிமாணத்தை பார்க்கும் போதும் கிடைக்கும் பூரிப்பு. இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்த “சுந்தர்-ஜி” க்கும், இப்போதிருக்கும் “ரைட்மந்த்ரா” சுந்தருக்கும் நிறைய வேற்றுமைகள். அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி உங்கள் உழைப்பு மாறியதில்லை. ஆனால் உங்கள் களம் எதுவென்று சரியாக, சரியான நேரத்தில் தேர்ந்தெடுத்தது உங்கள் முதல் வெற்றி. அதன் பின் கிடைத்தவை உங்கள் உழைப்பின் வெற்றி.
—
இன்று நீங்கள் பெற்றிருக்கும் நிலைமை பெரியதா? சிறியதா? என்று என்னால் அளவிட முடியவில்லை. ஆன்னல் நீங்கள் மிகப் பெரிய உயரங்களை அடைவீர்கள் என்பது மட்டும் உண்மை. ஏனென்றால் “உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?”
—
நீங்கள் கண்ட மாற்றத்தை என்னுள்ளும் புகுத்தியதற்கு நன்றிகள்…! மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நம் ரைட்மந்த்ரா தளத்திற்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்…!
—
“கடமையைச் செய்; பலனை எதிர்பார் ”
—
விஜய் ஆனந்த்
Sundar,
I feel really happy for you, with God’s blessings you have completed 2 years successfully. I wish greater success in your life and you will soon reap the benefits for all the hard work you have put in so far.
Very nice that your article has been published in a daily newspaper. This is just the beginning and I am confident that you will reach greater heights because you are such an energetic and hardworking individual. God bless you my dear friend.
congratulations sundar Saar..
சுந்தர் சார்…இனி உங்கள் சுகமான பயணம் பத்திரிக்கை உலகில் தொடரட்டும் …ஒருமுறை நாம் காட்டூர் மலைகோயில் கால பைரவர் திருகோயில் தரிசனம் முடித்து தங்கள் பைக்கில் வரும் பொழுது உங்கள் கட்டுரைகளை பத்திரிக்கைகளுக்கு அனுப்பும் படி கூறினேன்….அதற்கு பைரவர் அருளால் இப்போதுதான் தங்கள் வாழ்வின் வசந்த காலம் உதயமாகி இருகிறது ….சிவாய நம……………காட்டூர் மலைகோயில் கால பைரவர் மறந்து விடாதீர்கள் சார் ……………….உங்களுக்கு இன்று முடி சூடிய காட்டூர் மலைகோயில் கால பைரவர் ,அன்று தங்களிடம் ஒரு மகுடம் கேட்டார் …மறகாமல் ஒருமுறை காட்டூர் மலைகோயில் கால பைரவர் திருகோயில் தரிசனம் செய்ய வாருங்கள் சார் ……………
நிச்சயம் சிவா அவர்களே.
வாழ்த்து தெரிவித்த நல்லுலங்கள் அனைவருக்கும் என் நன்றி. தன்னலமற்ற சேவையை உங்கள் அனைவருக்கும் அளிப்பதே, நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு நான் செலுத்தும் கைமாறாக இருக்கும்.
உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் எனது பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் உண்டு.
இது ஒரு துவக்கம் தான். இன்னும் பல தூரம் நாம் போகவேண்டியிருக்கிறது. இந்த நெடும்பயணத்தில் உடனிருந்து நீங்களும் வளம் பெற்றும் உங்களை சார்ந்தவர்களையும் வளப்படுத்தி, அனைவரை சுற்றியும் ஒரு மகிழ்ச்சியான சமுதாயத்தை உருவாக்குவோம்.
மனிதகுலத்தின் மிக பெரிய சாபக்கேடு சுயநலமே. நமக்கிருக்கும் துன்பங்களே பெரிது என்று எண்ணாமல் நாம், நமது குடும்பம் என்கிற வட்டத்தை தாண்டி அனைவரும் வெளியே வந்து சேவைகள் செய்யவேண்டும்.
இந்த உலகம் நமக்காக காத்திருக்கிறது.
– சுந்தர்
Dear sundarji,
Congratulations.
Regards/Senthil
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.
சார்
நீங்கள் கண்ட மாற்றத்தை என்னாகும் புகுத்தியதற்கு நன்றிகள்…! மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நம் ரைட்மந்த்ரா தளத்திற்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்…!
என்னை போல் வாழ்கையில் கடைசி நுனியில் நிற்பவர்களுக்கு நம் தளம் சிறந்த தன்னபிக்கை, தைரியம் தரும் அருமருந்து
நமது தளத்தை பார்த்த பின்புதான் வேலையை ஆரம்பிப்பது வழக்கம்.
என் மகனும்கும் நீங்கள் தன inspiration
மென்மேலும் அவர் வெற்றி பெறவும் நம் தளம் வளரவும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன். நாமும் இந்த தளத்தின் ஒரு வாசகர் என்பதில் பெருமிதம் கொள்வது மட்டும் தான் தற்போதைக்கு நம்மால் முடிந்த நன்றிகடன்! நன்றி சுந்தர் சார் ! வாழ்க வளமோடு ! –
selvi
ரைட் மந்த்ரா என்னும் செல்லக் குழந்தை இரண்டாம் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு செல்லும் குழந்தையாக பார்ப்பதை நினைத்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்கள் தளத்தின் மண்டே மார்னிங் ஸ்பெஷல் எங்களுக்கு அந்த வாரம் முழுவதும் energetic இருக்க உதவுகிறது. தங்களின் சேவை மனப்பான்மையை பார்த்து நாமளும் கொஞ்சமாவது மாற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு எங்களை மாற்றி கொண்டுள்ளோம். முக்கியமாக பிறந்த நாளன்று செய்யக் கூடியது மற்றும் செய்யக் கூடாதது என்பதை இந்த தளத்தின் பதிவை படித்த பிறகு மாறினோம்.
மார்கழி மாத விஸ்வ ரூப தரிசனம் என்றால் என்ன என்பதை இந்த தளத்தின் மூலம் தெரிந்து கொண்டு 2013-14 மார்கழி மாதம் விஸ்வ ரூப தரிசனம் செய்து நன்மை அடைந்தேன். தாங்கள் ஒரு பதிவில் அணிலை நரிகுறவர்களிடமிருந்து காப்பாற்ற முயற்சி செய்து நீங்கள் அந்த அணிலை எப்படியாவது காப்பாற்றி விடுவீர்கள் என்று நினைத்தால் முடிவில் அந்த அணில் தொப்பென்று கீழே விழுந்தது என்று முடித்து இருப்பீர்கள். அந்த பதிவை படித்தால் கல் நெஞ்சும் கரையும்.
மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் தங்கள் எண்ணமானது வாசகர்களாகிய நாங்களும் பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னுள் ஏற்படுத்தியது உங்கள் எழுத்துக்கள் தான்.
தாங்கள் மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள்
நன்றி
உமா
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் இப்படி ஒரு தளத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது இது சாத்தியமா என்று ஒரு சின்ன சந்தேகம் இருந்தாலும் மனதில் நம்பிக்கை இருந்தது. நீங்கள், நண்பர் Prem kannan நாம் அனைவரும் மயிலை சாய்பாபா கோயிலில் சந்தித்து பேசியது பிறகு ஒரு முக்கியமான நபரை சந்தித்தது, அதன் பிறகு நடந்தவை எல்லாம் இறைவன் செயல்.
இன்று நம் தளத்தின் பதிவுகளை படித்தபின் இது எத்தனை பேர் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது என்பதில்தான் என் மனம் செல்கிறது. அதனால்தான் பலசமயங்களில் பின்னூட்டம் அளிக்க மறந்துவிடுகிறேன்.
நம் தளத்தில் எனக்கு மிகவும் பிடித்தது நம்முடைய பிரார்த்தனை குழு. முகம் தெரியாத ஒரு ஜீவனுக்காக நாம் செய்யும் பிரார்த்தனை இறைவனை நிச்சயம் சென்றடையும். நம் சுயநலத்தில் இருந்து நாம் விடுபட்டு மற்றவர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்யும்போது மனம் லேசாகிறது. மற்றவர்களின் பிரச்சனைகளோடு ஒப்பிடும்போது நம் பிரச்சனை ஒன்றுமில்லை என்று தோன்றுகிறது. நம்முடைய இன்றைய நல்ல நிலைமைக்கு இறைவனுக்கு நன்றி. நாம் செய்யவேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என்பதை அவ்வப்போது நம் தளம் நினைவூட்டுகிறது.
என் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திய நம் தளத்திற்கும் நண்பர் சுந்தருக்கும் மூன்றாமாண்டு துவங்கும் இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
Sundar Sir,
Congratulations to you and Rightmantra.
Wishing you all the best.
Usha
வாழ்த்துகள் சுந்தர் சார். நடப்பதெல்லாம் நன்மைக்கே. நடக்காதது இன்னும் நன்மைக்கே. இந்த வரிகள் என்மனதில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கிவிட்டது. எந்த விஷயத்திற்காக நான் ஐந்தாண்டுகளாக இறைவனை வேண்டிக்கொண்டிருந்தேனோ, பல ஊர்களுக்குச் சென்று பிரபலாமான பலரிடம் ஜோதிடம் பார்த்து அவர்கள் சொன்ன அனைத்து பூஜைகளும் செய்தும் அக்காரியம் நிறைவேறாததற்கு இறைவன் ஏதோ காரணம் வைத்திருப்பார் என்ற நம்பிக்கை என் மனதில் ஏற்பட்டு விட்டது. ஆகையால் கடந்த மூன்று மாதங்களாக அவ்விஷயத்திற்க்காக வருத்தப்படுவதை நிறுத்தி விட்டேன். இந்த மன மாற்றத்திற்குக் காரணம், நமது தளத்தில் வந்த நடப்பதேல்லாம் நன்மைக்கே, நடக்காதது இன்னும் நன்மைக்கே என்ற தலைப்பில் வெளியான பதிவு தான். இதை அப்பதிவிற்கான பின்னூட்டத்திலேயே எழுத வேண்டுமென்று நினைத்திருந்தேன், ஆனால் இம்முடிவை மூளை ஏற்றுக்கொண்டாலும் என்மனம் ஏற்றுக்கொள்ள பல நாட்கள் ஆனாதால் இப்பொழுது கூறுகிறேன், இதுவே ஏற்றத் தருணமாக இருக்குமென நினைக்கிறேன். மென்மேலும் நமது தளம் சிறப்பு பெற்று என்னை போல் ஞானம் குறைவாக இருக்கும் சிலரையும் மேல் நிலைக்கு அழைத்து வரும் பணியைச் சிறப்பாக செய்து வரவேண்டும் வேண்டிக்கொள்கிறேன்.
Wish you happy vinayaka chaturthi. Sundar you have successfully run this blog for last two years. I am very happy to see this website everyday.. All the best to you and rightmantra for upcoming years….
Congrats…
Thanks,
Nagaraj T.
மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் என் நண்பர் என்று கூறி கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி. பழைய ஏமாற்றத்தை விட்டு தள்ளுங்கள் சுந்தர். கடவுள் நம்முடன் இருக்கிறார். எதை பற்றியும் கவலை படாமல் முன்னேறுங்கள். தக்க தருணத்தில் உதவி செய்ய நங்கள் உள்ளோம். எந்நேரத்திலும் தொடர்பு கொண்டுகொள்ளுங்கள். எங்களால் முடிந்த அத்துணை உதவியும் செய்ய இறைவன் எங்களை உங்களுடன் பயணம் செய்ய வைத்துள்ளான் என்று நம்புங்கள்.
சிறப்பான கட்டுரை, மாலை மலர் பதிவு அருமை நண்பரே. உங்கள் பெற்றோருக்கு எனது நமஸ்கரம். ராஜ்குமார். சென்னை.
வணக்கம் சுந்தர் சார்
மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நம் தளத்திற்கு எனது மன மார்ந்த வாழ்த்துக்கள்.
தங்களை இறைவன் வழிநடத்துவார் சுந்தர் சார். இத்தளம்
மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்
நன்றி
ராஜாமணி
வணக்கம் சுந்தர்….
.
முதற்கண் என்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்…சில அலுவல் மற்றும் சொந்த வேலைப்பளுவின் காரணமாக நமது தளத்திருக்கு வரமுடியவில்லை….தொலைப்பேசியுலும் தொடர்புகொள்ள இயலவில்லை…
.
தங்களின் பதிவு மாலைமலரில் வந்ததை தெரிந்தும் இந்த பின்னூட்டத்தை அளிகின்றேன்…
.
இந்த சந்தோஷ தருணத்தில் நான் தங்களுடன் இருக்கமுடியவில்லை என்பதை நினைக்கும் போது என் மனது வேதனைபடுகிறது….ஏனென்றால் இந்த தளத்தை தொடங்கும் முன் நீங்கள் அனுபவித்த கஷ்டங்களை நன்கு அறிந்தவன் நான்…இத்தளம் தொடங்கப்பட்ட நோக்கம் நிறைவேறும் தருணம் வந்ததைப்போல உணர்கிறேன்….மிக்க சந்தோசம் சுந்தர்…
..
தங்களின் விடாமுயற்சியால் இந்த அங்கீகாரம் ஒரு மைல் கல்…இதுபோன்ற தொடர்வெற்றி பெற்று தங்களின் இலக்கை அடைய அந்த எல்லாம் வல்ல இறைவனை பிரத்திகிறேன்…நான் தங்களுடன் இல்லாவிட்டாலும் என்னுடைய பிராத்தனை எப்பொழுதும் இருக்கும் என்பதை நான் மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்…
.
என்றும் தங்களின் நலம் விரும்பி
மாரீஸ் கண்ணன் (எ) மாரீஸ்வரன்
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின். (குறள் 805)
அண்ணா நீங்கள் கூறியது பார்வையாளர்களுக்கு ஒரு பதிவாக தெரியலாம்! உங்களுடன் இக்கட்டான காலங்களில் நான் கூடவே இருந்து பார்த்திருக்கிறேன்!! இது வெறும் பதிவல்ல! ஒரு உணர்ச்சிக்குவியல்!! உங்களை வாழ்த்தவோ, பாராட்டவோ நான் தகுதியற்றவன்! என்றும் உங்கள் தொடர்பு எனக்கு வேண்டும்! அது போதும் அண்ணா எனக்கு!!
நன்றி!
மிக்க மகிழ்ச்சி சுந்தர் சார்… நீங்கள் மேலும் வளர என் அன்பார்த வாழ்த்துக்கள்…..
My best wishes dear Sundar Sir! Let God Showers you Tons of Health, Wealth and Prosperity to change the world. YOU serve as an Inspiration to me!!! Let Rightmantra.com reach Himalayan heights.
நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள நீங்கள் நான் மறை போற்றும் நல்லவராக வளர்வீர்கள் .
மேன்மலும் பதிப்புகள் வரட்டும் /
தங்களின் திறமைக்கு நல் வழியே கிட்டும்/
நன்றி ..
தங்களின் வளர்ச்சில் பூரிக்கும்
சோ. ரவிச்சந்திரன்
கார்வார்.