Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, October 6, 2024
Please specify the group
Home > Featured > குரு என்பவர் இறைவனை விட உயர்ந்தவரா? MUST READ

குரு என்பவர் இறைவனை விட உயர்ந்தவரா? MUST READ

print
வ்வொரு வியாழனும் நம் தளத்தில் மகாகுரு ஸ்ரீ ராகவேந்திரர் மகிமையையும் காஞ்சி மகான் மகா பெரியவாவை பற்றியும் படித்து வருகிறீர்கள். அது எவ்வளவு பெரிய புண்ணியம் என்பது தெரியுமா? இருவினை தீர்க்கும் குருவின் பெருமை கேட்பது படிப்பது.

அதென்ன இருவினை ?
 
தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை  வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்
பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள்
சென்னியில் வைத்த சிவனருளாலே
– திருமந்திரம்

‘முன்னை  வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள், பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள்’ என்கிற இந்த ஒரு வரி போதும் குருவின் பெருமையை உணர்த்துவதற்கு. நமது முன்ஜென்ம வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள். பின்னால் வரக்கூடிய வினையை மாற்றிடுவார்கள். இது குருவருளாலே மட்டும் தான் முடியும்.

குருவின் பெருமையையும் குரு பக்தியின் சிறப்பையும் விவரிக்கும் இந்த பதிவை குருவாரத்தில் (வியாழக்கிழமை) தான் அளிக்கவேண்டும் என்று கருதினோம்.  ஆனால் ஒவ்வொரு குருவாரமும் இரண்டு மூன்று  பதிவுகளை நாம் அளிக்க வேண்டியிருப்பதால் இன்றே அளிக்கிறோம். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வேதத்தில் கூறப்பட்டிருக்கும் வாக்கியம் சாதாரண வாக்கியம் அல்ல. எண்ணற்ற அர்த்தங்கள் கொண்டது. பல நீதிகளை சொல்வது.

தீமைகள் மலிந்து கிடக்கும் கலியுகத்தில் கலியின் தீமை நம்மை அண்டாது இருக்கவேண்டுமெனில் குரு அருள் அவசியம் தேவை.

மகா குரு ஸ்ரீ ராகவேந்திரர், நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி மகா பெரியவர், பாம்பன் ஸ்வாமிகள், திருமுருக.கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள், மகாவதார் பாபாஜி, ஷீரடி சாய்பாபா, வள்ளி மாலை ஸ்வாமிகள், இராமலிங்க அடிகளார் இவர்களை போன்ற மகான்களில் எவரேனும் ஒருவரை குருவாக ஆத்மார்த்தமாக ஏற்றுக்கொண்டு அவர்கள் காட்டிய நெறிமுறைப்படி வாழ்ந்து வரவேண்டும்.

இது ஒன்றே கலியுகத்தின் தீமைகளிலிருந்து நம்மை காத்துக்கொள்ளும் வழி. இறைவனின் அருளைப் பெறவும் வழி.

குரு என்ன இறைவனை விட உயர்ந்தவரா? என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கக்கூடும். குருவருளின்றி திருவருள் இல்லை.

மும்மூர்த்திகளின் அம்சமாக அனுசூயா தேவிக்கு பிறந்த ஸ்ரீ தத்தாத்ரேயரின் மகிமைகளை விளக்கும் குரு சரித்திரத்தில் வரும் கீழ்கண்ட வரலாற்றை படியுங்கள்… உங்கள் சந்தேகம் தீரும்.

http://rightmantra.com/wp-content/uploads/2014/01/dattatreya-GURU-PARAMPARA.jpg

குருவருளின்றி திருவருள் இல்லை!

கோதாவரி நதிக்கரையில் அங்கரீச மகரிஷி ஆசிரமம் இருந்தது.  அங்கு நல்லோர்கள், தவம் செய்பவர்கள், விரதத்தை கடைப்பிடிப்பவர்கள் பலர் இருந்தார்கள். அவர்களில் பைலமுனி என்பவரின் புதல்வர் வேததர்மன் என்பவர் இருந்தார். அவருக்கு அனேக சீடர்கள் இருந்தார்கள். வேததர்மன் தன சீடர்களின் குரு பக்தியின் சிரத்தையை தெரிந்து கொள்ள நினைத்து அவர்களை அழைத்து, “என் முற்பிறவியில் செய்த பாவங்களினால் பெற்ற கர்மாவை இந்தப் பிறவியில் என் தவத்தினால் கொஞ்சம் போக்கினேன். மீதமுள்ள கர்மாவை போக்குவதற்கு மற்றுமொரு பிறவி எடுத்து தவம் செய்ய வேண்டும். எனக்கு மீண்டும் ஒரு பிறவியில் விருப்பமில்லை. எனவே அதை நாம் இப்பிறவில் அனுபவிக்க வேண்டுமென்று எண்ணி அதற்காக எல்லா பாவங்களையும் போக்கும் காசிக்கு சென்று அங்கு 21 வருடம் ‘தொழுநோய் பெற்று குருடனாகவும், முடவனாகவும் வாழ்ந்து என் பாவங்களை போக்கிக் கொண்டு முக்தி அடைய திட்டமிட்டுள்ளேன்.  ஆகையால் அங்கு எனக்கு பணிவிடைகள் செய்து துணையாக இருக்க யார் உங்களில் தயாராக இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

தொழு நோயாளிக்கு சேவை செய்யவேண்டுமா என இதைக் கேட்ட பலர் தயங்கினர். மேலும் சிலர் குரு சேவையில் குறை நேர்ந்தால் என்ன நடக்குமோ என்று பயந்து மௌனமாய் இருந்தார்கள். ஆனால் தீபகன் என்ற சீடன் மட்டும் முன் வந்து, சுவாமி, “நீங்கள் அனுமதி கொடுத்தால் உங்களுக்குப் பதிலாக நான் 21 வருடங்கள் குருடனாகவும், முடவனாகவும், மாறி தொழுநோய் பெற்று அந்த கர்மாவை அனுபவிப்பேன்” என்று வேண்டினான். இதைக் கேட்ட குரு “எவனொருவன் பாவம்  செய்கிறானோ அவனே அந்த பாவ கர்மாவை அனுபவித்தாக வேண்டுமே தவிர, வேறொருவர் அனுபவித்தால் அந்த கர்மா தீராது.  ஆகையால் நானே அதை அனுபவிக்க வேண்டும்.  நோயாளிகளுக்கு சேவை செய்வது மிகக் கடினமானது. அதற்கு சம்மதமானால் நீ என்னுடன் வரலாம்” என்றார்.  தீபகன் சம்மதித்து குருவுடன் காசிக்குச் சென்றான்.

அங்கு வேததர்மன் மணிகர்ணிகா கட்டத்தில் நீராடி விஸ்வநாதரை வணங்கி அருகிலுள்ள கன்பலாஸ்வரத்தில் தன் சீடன் தீபகன் கட்டிய குடீரத்தில் வாழ ஆரம்பித்தார்.

உடனே அவர் கண் பார்வை இழந்து, முடவனாகி, தொழுநோய் உடலில் ஏற்பட்டது. உடலில் புண்கள் ஏற்பட்டு சீழ், புழுக்களுடன் துர்நாற்றம் வரத் தொடங்கியது. மேலும் அவர் மனநிலையும் பிறழ்ந்தது.

இந்நிலையில் தீபகன் தன் குருவுக்கு செய்யும் சேவையை காசி விஸ்வநாதருக்கு செய்யும் சேவையைப் போல் பாவித்து தினமும் குருவுக்கு நீராட்டி, புண்களைத் துடைத்து, பாத பூஜை செய்து பிச்சை எடுத்து சோறூற்றி வந்தார்.  ஆனால் குருவோ தனக்கு சேவைகள் சரியாக செய்யவில்லை என்றும், புண்களை சரியாக துடைத்து விடாததால் ஈக்கள் என்னைக் கடிக்கின்றன அவற்றை விரட்டு என்றும் கோபிப்பார். அப்பொழுது தீபகன் உடலை சுத்தம் செய்ய முற்பட்டால் கோபித்து எனக்கு பசியாக இருக்கிறது சீக்கிரமாக சாப்பாடு கொண்டுவா என்பார்.  அவன் நல்ல சாப்பாடு கொண்டு வந்தால் அது நன்றாக இல்லை என்று தூக்கி எறிவார்.  சில நேரங்களில் நீ நன்றாக சேவை செய்கிறாய் என்று பாராட்டுவார். உடனே கோபித்து “நீ என்னை மிகவும் துன்புறுத்துகிறாரய் . நீ இங்கிருந்து செல்” என்பார்.  ஆனால் தீபகனோ இவை எதனையும்  பொருட்படுத்தாமல், பாவம் அதிகமாக உள்ளவர்களுக்கு துன்பங்களுடன் கொடூரமும் இருக்குமென்று நினைத்து குருவை பக்தியுடன்  சேவிக்கலாணன்.  குருவே சகல தேவதா ரூபமென்று நினைத்து காசி ஷேத்திர யாத்திரையும் செய்யாமல் அங்கு தேவதைகளையும் சேவிக்காமல் குரு சேவையில் மூழ்கினான்.

மந்த்ராலயத்தில் ஸ்ரீ சுயதீந்த்ர தீர்த்தர் ஸ்ரீ ராகவேந்திரரின் பாதுகைக்கு பூஜை செய்யும் அற்புத காட்சி

ஒரு நாள் காசி விஸ்வநாதர் தீபகனின் குரு பக்திக்கு உவந்து தரிசனம் தந்து “என்ன வரம் வேண்டுமோ கேள்” என்றார்.  அவன் குருவின் அனுமதி இல்லாமல் எந்த வரமும் கேட்க முடியாது என்று கூறி, தன் குருவிடம் சென்று இந்த விஷயத்தை கூறி “உங்கள் வியாதி போகும்படி நான் வரம் கேட்கலாமா?” என்றான்.

அப்போது அவர், “என்னடா எனக்கு சேவை செய்வது உனக்கு கடினமாக உள்ளதா?  என் பாவத்தை தீர்க்க என் கர்மாவை நானே அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்  ஆகையால் நீ எந்த வரமும் கேட்க வேண்டாம்” எண்டு கோபித்துக் கொண்டார்.

தீபகன் காசி விஸ்வநாதரை பார்த்து “ஸ்வாமி, எனக்கு என் குருவே சகலமும். என் குருவிற்கு  விருப்பமில்லாதது எனக்கு வேண்டாம்.  ஆகையால் நீங்கள் செல்லலாம்” என்றான்.

காசி விஸ்வநாதர் இதைக் கேட்டு மிக்க ஆச்சிரியப்பட்டு உடனே வைகுண்டதிற்குச் சென்று விஷ்ணுவிடம் தீபகனின் குரு பக்தி பற்றி தெரிவித்தார்.  இதைக்  ஆச்சரியப்பட்ட விஷ்ணு தீபகனின் குரு பக்தியால் ஆனந்தப்பட்டு அப்படிப்பட்ட சீடனைப் பார்க்க்க வேண்டுமே என்று தீபகனிடம் சென்று அவனிடம் “பாலகா உன்னுடைய குரு பக்திக்கு நான் பெரும் சந்தோஷப்பட்டேன் உனக்கு என்ன வரங்கள் வேண்டுமோ கேள். அவற்றை நான் தருகிறேன்” என்றார்.

தீபகன் விஷ்ணுவை வணங்கி “தேவா…. வரங்களைப் பெற உங்களுக்க தவம் செய்பவர்களை விட்டு விட்டு உங்களை என்றும் வணங்காத எனக்கு தரிசன தந்தீர்களே ஏன்?” என்று கேட்டார்

விஷ்ணு “அப்பனே குருவை பக்தியுடன் சேவித்தால் என்னை சேவிப்பது போல் ஆகும். அப்படிப்பட்ட உத்தமனான சீடனுக்கு நான் வசமாகிறேன். தாய், தந்தையர்களை, வித்வான்களை, பிராமணர்களை, யதுகளை, யோகிகளை, தவம் புரிபவர்கள், திருநீறு பூசியவர்களை,  கணவனே கண்கண்ட தெய்வம் போல் நினைத்து அவர்களை சேவிக்கும் உத்தமிகள், எல்லோரும் என்னை சேவிப்பவர்கள் ஆவார்கள். ஆகையால் என்ன வரம் வேண்டுமோ கேள்” என்றார்.

தீபகன் விஷ்ணுவை வணங்கி “குருவே சகல தேவதா ஸ்வரூபம், சகல தீர்த்த சொரூபம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.  நீங்கள் கொடுக்கும் வரங்கள் குரு அவர்கள் கொடுக்க முடியுமல்லவா?” என்றான்.  ஸ்ரீமன் நாராயணன்  “நாங்கள் இருவரும் ஒன்று ஆகையால் எங்கள் சந்தோஷத்திற்காக வரம் கேள்” என்றார்.

DSC00643 copy

“சுவாமி அப்படி என்றால் என்றும் என் குரு பக்தி பெருகிக் கொண்டிருக்குமாறு அருள் புரியுங்கள்” என்று வேண்டினான்.  லக்ஷ்மிபதி சந்தோஷமடைந்து “குரு சேவாயால் நீ உயர்ந்து விட்டாய்.   சகல தேவதைகள் உன் வசமாகி விடுவார்கள்.  இந்தக் காசி விஸ்வநாதர் என்றும் கண் இமை போல் உன்னைக் காப்பாற்றுவார்.  எவனொருவன் குருவே பரமார்தமென்றும்,  சகலமும் அவர் என்றும், மும்மூர்த்திகளின் அவதாரமென்றும் அறிந்து அவரை சேவிக்கிறானோ அவனுக்கு எல்லா வளமும் கிடைத்து சுகமாக வாழ்வான்.  குருவை சேவிப்பவர்களுக்கு மும்மூர்த்திகள் என்றும் வசமாவார்கள். மும்மூர்த்திகளின் அருளினால் மனிதர்களுக்கு சத்குரு கிடைப்பார்” என்று கூறி மறைந்தார்.

தீபகன் தன குருவான வேத தருமரிடம் சென்று நடந்ததை எல்லாம் சொல்ல குரு மிக்க மகிழ்ச்சியுடன் “மகனே உன் குருபக்திக்கு மிக்க மகிச்சி அடைந்தேன்.  நீ காசியில் சுகமாக வாழ உனக்கு நவநிதிகள். எல்லா சித்திகளும் வசமாகும். எல்லா கல்விச் செல்வங்கள் உன்னிடம் வந்தடையும்.  உன் நாமத்தை சொல்வதினால் மனிதர்களின் சகல வியாதிகள், துன்பங்கள் நிவர்த்தியாகும். உன்னை பக்தியுடன் துதிப்பவர்களுக்கு எல்லா வளமும் கிடைக்கும். கலியுகத்தில் அனைவரையும்  துன்புறுத்தும் கலியின் தீமை குருபக்தி இருப்பவர்களை மட்டும் அண்டாது!” என்று ஆசிர்வதித்து பிரகாசமான உடலைப் பெற்றார்.

வேததர்மர் ஒரு சீடன் எப்படி சேவை செய்ய வேண்டும், முக்தி வேண்டுகிறவர்கள் எப்படி தன் பாவ கர்மாவை அனுபவிக்க வேண்டுமென்றும் உலகிற்கு தெரிவிப்பதற்காக இப்படி ஒரு ரூபம் எடுத்தார். நாடகம் நடத்தினார்.

எவனொருவன் மிக்க பக்தியுடன் சிரத்தையுடன் குருவை சேவிக்கிறானோ அவனுக்கு சகல தேவதைகள் வசமாகும்.   ஆகையால் குரு சேவையில் வாழ்வை கழிக்கவேண்டும்.

[END]

19 thoughts on “குரு என்பவர் இறைவனை விட உயர்ந்தவரா? MUST READ

  1. மிகவும் அருமையான பதிவு. குரு பக்திக்கு தீபகனின் குரு சேவை ஒரு உதாரணம். காசி விஸ்வநாதரே தீபகனின் குரு பக்தியை உணர்ந்து தீபகனுக்கு வரம் கொடுக்கிறேன் என்று சொன்னாலும் , குருவே உயர்ந்தவர், தனக்கு எந்த வரமும் வேண்டாம் என்று சொல்வதிலிருந்து குருவின் மகிமையை அறியலாம்.

    நமக்கு குரு சரித்திரம் மிகவும் பரிட்சயமாதலால் இந்த கதையை நாம் பல முறை படித்திருக்கிறோம். இருந்தாலும் நம் தளம் மூலம் படிக்கும் பொழுது இன்னும் நன்றாக உள்ளது .

    அனைத்து படங்களும் அருமை இன்று காலையில் தான் என் மகன் குரு சரித்திரம் ஒரு வாரத்திற்குள் படித்து முடித்தான். இன்று நான் குருவை வணங்கி விட்டு வந்தேன், இந்த பதிவை பார்த்ததும் மிக்க ஆச்சர்யம். என் மகனின் கோரிக்கை கண்டிப்பாக நிச்சயம் நிறைவேறும் என்று நினைக்கிறேன்.

    குருவே சரணம்.

    நன்றி
    உமா

  2. அருமையான பதிவு சுந்தர் சார். ஒரு முறை திருக்கோவிலூர்
    ( திருக்கோவிலூர் – திருவண்ணாமலை சாலை) அருகிலுள்ள ஞானானந்த தபோவனம் போய் ஞானானந்தகிரி சுவாமிகளை தரிசித்து வரவும். 1500 வருடங்கள் தவம் செய்து சித்தி பெற்ற ஒப்பில்லாத குருநாதராவார். போய் வந்தவர்களுக்கு கண் கண்ட பலன் நிச்சயம் உண்டு.

    1. நான் மனதுக்குள் நினைத்தேன். நீங்களும் கூறுகிறீர்கள். விரைவில் செல்வோம்.

      நன்றி.

      – சுந்தர்

      1. ஞானானந்தா கிரி சுவாமிகளைப் பற்றி ராகவேந்திரன் அவர்கள் எழுதியதை படிக்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. நான் போன வருடம் திருக்கோவிலூர் தபோவனத்திற்கு சென்றுள்ளேன். என் அம்மா, அம்மாவின் அப்பா ஸ்வாமிகள் வாழ்ந்த காலத்தில் அவருடனே இருந்து அவருக்கு பணிவிடைகள் செய்திருக்கிறார். என் தாத்தா கனவிலேயே 500 பாடல்கள் சுவாமிகள் சொல்ல சொல்ல எழுதி இருக்கிறார். என் அம்மாவிடம் அந்த பாடல்கள் உள்ளன. நான் குழந்தையாக இருந்த பொழுது என்னுடைய முதல் தீபாவளி ஆசிரமத்தில் தான் கொண்டாடினேன் என்று என் அம்மா சொல்வார்கள். இப்பொழுது மதுரைக்கு சென்ற பொழுது என் அம்மா அவர்கள் சுவாமிகள் என் அம்மாவிற்கு எழுதிய கடிதங்களை காண்பித்தார்கள்.

        நன்றி
        உமா

        1. Dear Madam,
          உங்கள் கட்டுரையைப் படித்தேன். அருமை. நான் தங்களுடன் தொடர்பு கொள்ளலாமா ? என் மொபைல் நம்பர். 9380288980. Thanks and regards
          N.R.Ranganathan. Thapovanam.

        2. Dear Madam,

          Is it possible for me to get in touch with you to get more details of Sri Gnananandagiri swamigal ? I hope you wont mind. My numbr is 9380288980. Thanks and regards,
          Ranganathan. Editor, Gnana oli

      1. சென்னையிலிருந்து திருக்கோவிலூருக்கு நேரடி பஸ் உள்ளது. அல்லது விழுப்புரம் அல்லது திருவண்ணாமலையிலிருந்து செல்லலாம். ஊருக்கு வெளியே இருக்கிறது தபோவனம். பேருந்து நிறுத்தம் உள்ளது. சொன்னால் அங்கேயே இறக்கிவிடுவார்கள்.

  3. வணக்கம்………..

    இக்கட்டுரை குருபக்தி பற்றிய நமது பல சந்தேகங்களை நீக்கியுள்ளது. குருவின் அருள் இருப்பதாலேயே இவையெல்லாம் நடப்பதாகத் தோன்றுகிறது. நன்றிகள் பல……….

    குருவே சரணம்……..

  4. Dear sundarji,

    Exited to see this story today in right mantra.I have completed reading guru charithra today.

    Thanks and Regards
    V.HARISH

  5. “எவனொருவன் மிக்க பக்தியுடன் சிரத்தையுடன் குருவை சேவிக்கிறானோ அவனுக்கு சகல தேவதைகள் வசமாகும். ஆகையால் குரு சேவையில் வாழ்வை கழிக்கவேண்டும்” சத்தியமான வார்த்தைகள் சுந்தர் சார்!

    உமா குறிப்பிட்ட குரு சரித்திரம் எங்கு கிடைக்கும் சுந்தர் சார்?

    1. கிரி ட்ரேடிங் ஏஜென்சி உள்ளிட்ட முக்கிய புத்தக கடைகளில் கிடைக்கும். இது பற்றி ஏற்கனவே ஒரு பதிவு அளித்துள்ளோம்.

      http://rightmantra.com/?p=8819

      – சுந்தர்

    2. மைலாப்பூர் சீரடி சாய் திருத்தலத்தில் நல்ல பதிப்புக்கள் கிடைக்கிறது…

  6. என் மனத்திலும் கடந்த மூன்று நான்கு வாரங்களாக தபோவனம் சென்று ஞானானந்த கிரி சுவாமிகளை தரிசிக்க வேண்டும் என்று மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. இந்த பதிவு எனக்கு மீண்டும் அதை வலியுறுத்துவதாக நினைக்கிறேன்.

    நான் சீக்கிரம் சென்று தரிசனம் செய்யும் பாக்யத்தை குருநாதர் எனக்கு அருள வேண்டும் என்று பிரார்த்தித்து கொள்கிறேன்.

  7. பதிவு அருமை

    கிரி ட்ரேடிங் ஏஜென்சி வெளியிட்டுள்ள மஹா பெரியவா அருள் விளையாட்டுக்கள் “அலகிலா விளையாட்டுடையான்” கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.

    குரு இல்லாத இறை தேடல்
    வழிகாட்டி இல்லாத காட்டுப்பயணம்.
    கண்நோக்கில் கரும வினைகள்
    காணாமல் போய்விடும்.
    இதயத்தில் குரு இருந்தால்
    ஈடில்லா மன அமைதி.
    திருவடியை பற்றி விட்டால் – அது
    திசைகாட்டும் நல்வாழ்க்கை.
    வன்மனம் கெட்டு
    மென்மனம் பெற குருவருள் அவசியம்.

    வால்டேர்

  8. Glad to know so many details – why Guru’s so important to reach god, history of Deepagan and his guru, etc.
    **
    Mind becomes peaceful after reading this kind of articles in our site amidst of being in so many distracting and unnecessary things in this world.
    **
    And yesterday it was a divine experience in Sri Ragavendra mutt, Boomiyanpet, Pondicherry.

    It was certainly an above than expected experience where I’d received Mantralaya’s Guru’s statues, dollar and unexpected + shawl (for which I don’t deserve such a huge recognition). It’s all happened because of you.
    **
    What to say, I’m more than satisfied, fulfilled. It’s guru’s mind I think that I should go to his brindavan through you – even though I’ve been here for few years. Thanks so much for all of that.
    **
    And it’s surprising to know about one who did penace for 1500yrs (Gnanadagiri Swamigal) through Ragavendran sir. And it’s also equally surprising to know Uma madam’s family’s association with swamigal.
    **
    All of which makes me wanted to know more about the swamigal.
    **
    **Chitti**.

  9. குருபக்தியையும் மேன்மையையும் அறிந்துகொண்டோம் .
    அருமையான பதிவு……. குருவின் மலர்ப்பாதம் பணிவோம்
    நன்றி
    பிரியதர்சினி

  10. குரு சரித்ரா போன வாரம் என் மகன் ஹரிஷ் படித்து முடித்து அவன் கோரிக்கை நிறைவேற பிரார்த்தனை செய்தான் . கரெக்டாக ஒரு வாரத்தில் இன்று அவன் கோரிக்கை நிறைவேறியது . இந்த குரு சரித்திரம் என்னைப் பொறுத்த வரையில் நம் கோரிக்கையை வெகு விரைவில் நிறவேற்றும் உன்னத புத்தகம். நமக்கும் குரு மீது நம்பிக்கை வேண்டும்

    நான் மிகவும் சந்தோசத்துடன் இதை பகிர்ந்து கொள்கிறேன். இன்றைய நாள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியான நாள். நம் தளத்திற்கும் குருவின் மகிமையை பரப்புவதில் பெரும் பங்கு உண்டு.

    நம் தளத்திற்கும் குரு நல்லது செய்வார்
    நன்றி
    உமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *