Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, December 6, 2024
Please specify the group
Home > Featured > ராவணனின் வீழ்ச்சிக்கு பிள்ளையார் சுழி போட்ட நிகழ்வு – Rightmantra Prayer Club

ராவணனின் வீழ்ச்சிக்கு பிள்ளையார் சுழி போட்ட நிகழ்வு – Rightmantra Prayer Club

print
ராவணன் மூவுலகையும் ஆட்சி செய்து வந்த சமயம் அது. ஒரு முறை, இந்திர லோகத்தில் இருந்து கைப்பற்றிய புஷ்பக விமானம் ஒன்றில் வானில் பவனி வந்துகொண்டிருந்தான். அப்படி செல்லுகையில் இடையில் கயிலாயம் குறுக்கிட்டது. இராவணனும் அவன் தந்தை விச்வரஸூம் சிறந்த சிவபக்தர்கள் ஆதலின் இயல்பிலேயே அவர்கள் வலிமை மிக்கவர்களாக இருந்தனர்.

ravana lifting kailashஎன்ன இருந்து என்ன பயன்? தான் என்கிற அகம்பாவம் அனைத்தையும் அழித்துவிடும் அல்லவா?

தன் பாதையில் குறுக்கிட்ட கயிலையை சுற்றிச் செல்ல ராவணனுக்கு கௌரவக் குறைச்சலாக இருந்தது.

மேலும் முன்பு சிவபெருமானிடம் பெற்ற வரத்தினால் நவக்கிரகங்கள் முதல் அனைவரையும் அடிமைப்படுத்தி வைத்திருந்தான். நவக்கிரங்களை படிக்கட்டுக்களாக்கி, அவர்கள் ஒவ்வொருவர் மீதும் ஏறித் தான் தன் சிம்மாசனத்திலேயே அமர்வான் ராவணன். அந்தளவு வலிமை பெற்றவனுக்கு மலையை சுற்றிச் செல்ல விருப்பமில்லை.

ஆனால் நந்தி பகவான் இராவணனை  பார்த்துவிட்டார், கயிலையை தாண்டி செல்ல அவன் விரும்புவது அவருக்கு புரிந்துவிட்டது. “ராவணா! நீ சிறந்த சிவபக்தன் என்பதை நான் அறிவேன். இவ் வழியாக வருபவர்கள் கயிலாய மலையைச் சுற்றிச் செல்வதே வழக்கம். நீயும் அப்படியே செல். அதுதான் முறை,” என்றார் பவ்வியமாக.

ராவணனுக்கு கோபம் வந்து விட்டது.

காளை முகம் கொண்ட நந்தியை, “குரங்கு மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு, எனக்கே புத்தி சொல்கிறாயா! போடா குரங்கே!” என கடுமையான வார்த்தைகளால் திட்டினான்.

ராவணன் தேவையில்லாமல் நந்தீஸ்வரரைத் திட்டியதால் அவனது தவவலிமை குறைந்தது. நந்தீஸ்வரர் பெரும் வயிற்றெரிச்சலுடன், “ஏ ராவணா! என்னைக் குரங்கென்று பரிகாசம் செய்த நீயும், உன் தேசமும் அதே குரங்குகளால் அழிந்து போவீர்கள்!” என்று சாபமிட்டார்.

நாம் ஒருவரைப் பழித்தால், என்ன சொல்லி பழிக்கிறோமோ, அதே பழி நம்மையே திரும்பத்தாக்கும். அதன்படி இலங்கை ஆஞ்சநேயர் உள்ளிட்ட வானரங்களால் அழிந்தது பின்னால் நடந்த கதை.

ஒருவருடைய தோற்றம், நிறம், அங்கஹீனம் இவற்றை கொண்டு கேலி பேசுதல் கூடவே கூடாது.

ராவணன் நந்தி பகவானின் எச்சரிக்கையை மீறி கயிலாய மலையைக் பெயர்த்து தூக்க முயற்சித்தான். அப்போது, சிவபெருமான் தன் பெருவிரலால் மலையை அழுத்த, இடுக்கில் கை சிக்கிக் கொண்டது. மாட்டிக்கொண்டவன் அலறினான். பிறகு தனது நரம்பை கம்பியாக்கி, ஒரு கையை மீட்டும் தண்டாக்கி சாமகானம் இசைத்து இறைவனை மகிழ்வித்தான். இசைக்கு வசமான சிவனும் அவனை விடுவித்தார்.

================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : குமணன்சாவடி கண்ணபிரான்  திருக்கோவில் குருக்கள் திரு.திரு.சீனிவாசன் அவர்கள்.

திரு.சீனிவாசன் அவர்களை கடந்த ஒருவருடமாக நாம் அறிவோம். கடந்த பிள்ளையார் சதுர்த்தியின் போதும் அதற்கு பிறகும் இங்கு பலமுறை சென்றிருக்கிறோம்.

கோவில் பெயர் தான் கண்ணபிரான் கோவிலே தவிர இது ஒரு பிள்ளையார் கோவில். ஆனால், பிள்ளையாரின் விக்ரகம் அருகிலேயே கிருஷ்ணரின் விக்கிரகமும் உண்டு.

கண்ணபிரான் கோவிலில் நடைபெறும் ஒரு ஹோமம்...
கண்ணபிரான் கோவிலில் நடைபெறும் ஒரு ஹோமம்…

சென்ற வாரம் கிருஷ்ண ஜெயந்தி அன்று இங்கு தான் நமது வழிபாடும், பூஜையும் நடைபெற்றது.

சீனிவாச குருக்கள், பூவிருந்தவல்லி வைத்தியநாதஸ்வாமி திருக்கோவிலில் 20 ஆண்டுகளுக்கும் மேல் அர்ச்சகராக பணியாற்றியவர். இந்த கண்ணபிரான் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக  உள்ளார். இந்த கோவில், சிதிலமடைந்திருந்தது. அங்கிருந்த ஒரு முக்கியப் பிரமுகர் ஒருவரின் முயற்சியில் மீண்டும் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சீனிவாச குருக்களின் முயற்சியால் தற்போது இந்த கோவில் அங்கு பிரபலமடைந்து வருகிறது.

DSC06044

சீனிவாச குருக்களின் சிறப்பு என்னவெனில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருமணங்களை  நடத்திவைத்திருக்கிறார். ஆம்…இவர் ஒரு சுப முஹூர்த்த வேதியர். (நீங்க நம்மகிட்டே என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியுது… அட…சீனிவாச குருக்கள் கிட்டே சொல்லி வெச்சிருக்கோமுங்க!)

இந்த கோவிலிலுள்ள சிறப்பு என்னவென்றால் ஒரே இடத்தில அனைத்து மூர்த்தங்களையும் தரிசிக்கலாம். அனைத்து கடவுளர்களுக்கும் இங்கு சந்நிதி உள்ளது.

நவராத்திரி உற்சவத்தின்போது...
நவராத்திரி உற்சவத்தின்போது…

வரும் விநாயகர் சதுர்த்தியையொட்டி இங்கு நமது தளம் சார்பாக 28ஆம் தேதி வியாழன் மாலை (விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய தினம் மாலை) விநாயகர் சதுர்த்தி சிறப்பு ஹோமமும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெறவுள்ளது. சென்னையில் உள்ள வாசகர்கள் ஹோமத்தில் கலந்துகொண்டு பிரசாதம் பெற்று செல்லவேண்டும்  கேட்டுக்கொள்கிறோம்.

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.

பிள்ளையாருக்கும் கண்ணபிரானுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்வதாக சொல்லியிருக்கிறார். சீனிவாச குருக்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றிகள்.

================================================================

பிரிந்த குடும்பம் ஒன்று சேரவேண்டும்

வணக்கம் ரைட்மந்த்ரா ஆசிரியர் மற்றும் குடும்பத்தினர்களே…

நான் அயல்நாட்டில் வசித்து வரும் ஒரு பெண். எங்கள் குடும்பத்தில் ஏகப்பட்ட சிக்கல்கள் ஏற்பட்டு இன்று பிரிவில் வந்து நிற்கிறது. என்னுடைய கணவர் இனி என்னுடன் வாழவே முடியாது என்று பிடிவாதமாக இருக்கிறார். 17 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தோம். கிரக அமைப்புகள் படு மோசமாக உள்ளது. பிரார்த்தனைகளால் மட்டுமே இந்த பிரச்சினைகளில் இருந்து  வெளிவர முடியும் என்று நம்புகிறேன். எனது கணவர் ,மனைவி மகனுக்கு தான் செய்ய வேண்டிய கடமைகளை உணர்ந்து எங்களுடன் சேர்நது வாழ வரவேண்டும் .அவரது பிரிவால் சிதைந்து போய் உள்ள எங்களது வாழ்வு அவரது வருகையால் மட்டுமே சீரடைய முடியும். அவர் மனந்திருந்தி வந்து பாசத்துடனும் பொறுப்புணர்வுடனும் எங்கள் குடும்பத்தை வழிநடத்தி செல்ல வேண்டும் என்று பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
ஊர் பெயர் வெளியிட விரும்பாத வாசகி

மேலும் பல தகவல்களை இந்த வாசகி பகிர்ந்திருந்தார். நாம் தான் அவரது வேண்டுகோளுக்கிணங்க அவரது ப்ரைவஸி கருதி தேவையான தகவல்களை மட்டும் இங்கே அளித்திருக்கிறோம். ஒருவர் தாய்நாட்டில் இருந்தால் அந்த பலமே வேறு. இவர் இருப்பதோ அயல்நாட்டில். மருந்துக்கு கூட இந்து கோவில்கள் இல்லை. துன்பம் வந்தால் ஓடிச்சென்று கதற கூட இங்கே எனக்கு வழியில்லை என்று வேதனைப்படுகிறார்.

இவர் சார்பாக அவர் குடும்ப ஒற்றுமைக்கும் சந்தோஷத்துக்கும் நாம் இங்கே வழிபாடு செய்வதாக கூறியிருக்கிறோம்.

================================================================

இதய நோய்க்கான சிகிச்சை நல்லபடியாக முடிந்து, விரைவில் முழு நலத்துடன் வீடு திரும்பவேண்டும்!

இவர் பெயர் வஞ்சுளவல்லி. சில மாதங்களுக்கு முன்பு மயிலையில் நடைபெற்ற லோக தர்மா சேவா பவுண்டேஷன் என்ற அமைப்பின் உழவாரப்பணிக்கும், ஆலோசனைக் கூட்டத்திற்கும் நாம் சென்ற போது அங்கு தான் இவரை பார்த்தோம்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் அக்குழுவின் தலைர் திரு.சுப்பிரமணியன் நமக்கு போன் செய்தார். தமது குழுவில் இடம்பெற்றுள்ள வஞ்சுளவல்லிக்கு மாரடைப்பு ஏற்பட்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருடைய மருமகளுக்கு நேற்றைக்கு தான் குழந்தை பிறந்துள்ளதாகவும் இங்கே அவரை கவனித்துக்கொள்ள யாரும் இல்லை, கொஞ்சம் எட்டிப்பார்த்து அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் செய்துவிட்டு வருமாறும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து சென்ற வாரம் ஒரு நாள் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றோம். வஞ்சுளவல்லி அவர்களை சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினோம்.

Sankara Curves2

மருமகளுக்கு நேற்று முன்தினம் குழந்தை பிறந்துள்ள படியால், அவளை கவனித்துக்கொள்ள மகனை அனுப்பிவிட்டதாகவும் அந்த தாய் கூறினார்கள். தாய்மைக்கே உரியது இந்த தியாக மனப்பான்மை.

மருந்து, உணவு உள்ளிட்ட ஏதாவது தேவைப்படுகிறதா என்று கேட்டோம். அனைத்தும் இருப்பதாகவும் எதுவும் வேண்டாம் என்றும் கூறிவிட்டார்கள்.

மகாபெரியாவா அவர்களின் குஞ்சித பாதம் படத்தை அவருக்கு பரிசளித்தோம். உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்கள் அருகில் அந்தப் படம் இருந்தால் நல்லது.

இன்று அவருக்கு அறுவை சிகிச்சை நடக்கிறது. இந்த வார பிரார்த்தனை கிளப்பில் அவருக்காக கோரிக்கை சமர்பித்து பிரார்த்தனை செய்வதாக கூறியிருக்கிறோம்.

பெயர் : வஞ்சுளவல்லி. வயது 61. விரைவில் பரிபூரண குணம் பெற்று வீடு திரும்பவேண்டும். அந்த தாய் சௌக்கியமாகவும் சந்தோஷமாகவும் வாழவேண்டும்.

================================================================

இந்த வார பொது பிரார்த்தனை..

பார்வையை இழந்து தவிக்கும் பிஞ்சு குழந்தை !

முகநூலில் படித்தது இது.  கடந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் இடம்பெற்ற ஒரு தம்பதியினரின் குழந்தைக்காக இந்த பிரார்த்தனை. நமது சபரி வெங்கட்டுக்கு மருத்துவர்களின் அலட்சியத்தால் ஏற்பட்ட நிலை தான் இந்த குழந்தைக்கும் ஏற்பட்டுள்ளது.

அந்த குழந்தை பிறந்ததும் அதற்க்கு தாய் பால் கூட கொடுக்க அனுமதிக்க வில்லை இந்த மருத்துவ நிர்வாகம். குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து நான்கு நாள் கழித்து தான் பெற்றோரிடமே காமித்து இருக்கிறார்கள் ..

இந்த நான்கு நாளும் அந்த குழந்தையை ஒரு பக்கமாக படுக்க வைத்து தூரத்தில் இருந்து ஒரு சிறிய கண்ணாடி வழியே பார்க்க வைத்து உள்ளனர். குழந்தை ஏன் ஒரு பக்கமா படுத்து இருக்கிறது என்று கேட்டதுக்கு சரியான பதில் இல்லை. பிறகு தான் தெரிந்து இருக்கிறது குழந்தையின் ஒரு பக்க கண் மிக பெரிய வீக்கமும்…மிக மோசமாக கன்னம் சிவந்தும் போய் இருப்பது. அந்த கிருமி தொற்று மெல்ல மெல்ல அடுத்த கண்ணுக்கும் பரவி இரண்டு கண்களின் பார்வையையும் பறித்து விட்டது ..! இவர்கள் சண்டை போட்டு தான் குழந்தையை மருத்துவமனை நிரவாகத்தில் இருந்து வாங்கி இருக்கிறார்கள் ..

vijay tv neeya nana

அவர்கள் இதை விவரிக்கும் போது கல் நெஞ்சம் கூட கலங்கும் .. சில மருத்துவர்களின் அலட்சியத்தால் ஒட்டுமொத்த மருத்துவ துறைக்கே கேட்ட பெயர். பிறக்கும் போது நலமாக இருந்த அந்த குழந்தைக்கு சில மணி நேரங்களில் இரண்டு கண்களிலும் பார்வை இல்லை..!

அந்த சகோதரி, “என் குழந்தையின் பார்வையை நான் பார்த்தேன் ..கடைசியாக பார்த்த அந்த பார்வை ..இன்னமும் என் கண்ணுக்குள்ளே இருக்கு” என்று சொல்லும் போது இதயம் கனக்கிறது ..!

இவரை விட அவர் அவரை விட இன்னொருவர் என்று எல்லா மருதுவனமனைக்கும் கொண்டு போய் இருக்கிறார்கள் ..! ஒவ்வொரு மருத்துவமனையிலும் தினம் தினம் ஊசி மருந்து அது இது என அந்த பிஞ்சு மண்ணை..அவர்கள் விவரிக்கும் போதே .. நமக்கும் கண்ணீர் அரும்பிவிடுகிறது.

இரண்டு கண்களிலும் ஆபரேஷன் செய்து விட்டார்கள் ..ஆனா பார்வை ..???.

நீயா நானாவில் பங்குபெற்ற சிறப்பு விருந்தினர் உயர்திரு DR.ராஜ்குமார் அவர்கள் இந்த குழந்தைக்கு பார்வை வருவதற்கான அனைத்து முயற்ச்சிகளையும் எடுப்பதாக கூறியிருக்கிறார். அவருக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்
.
எனினும் நாமும் இந்த குழந்தைக்காக பிராத்தனைகளும் முடிந்த உதவியையும் செய்வோம். இவர்களின் தொலைப்பேசி என் கொடுத்திருக்கிறது விஜய் தொலைக்காட்சி.

கடவுள் தான் இவர்கள் குழந்தைக்கு உதவ வேண்டும் ..! இவ்ளோ கஷ்டங்களை பிறந்த உடனையே கொடுத்திருக்க கூடாது கடவுளே ..இரண்டு வருடம் குழந்தை இல்லாமல் பெரும் ஏக்கங்களுக்கு இடையே பிறந்த இந்த குழந்தை …இப்படி சிலரின் அலட்சியத்தால் அந்த சின்ன சிறு உலகு மட்டும் அல்ல அதன் எதிர்காலமே இப்போது மிக பெரிய கேள்வி குறியா இருக்கிறது…?

ரண வேனதையையும் வலியையும் கொடுக்கிறது இது மாதிரி நிகழ்வுகள் .. ..! கண்ணீருடன் என் வேண்டுதல்கள் ..!

பிரார்த்திப்போம்…! அந்த குழந்தை பூரண நலம் பெற..!

நமது பிரார்த்தனை கிளப்பில் சென்ற வாரம் இக்குழந்தை பற்றிய கோரிக்கை இடம்பெற்றதை நம் வாசகர் ஒருவர் எஸ்.எம்.எஸ். மூலம் இவருக்கு தகவல் தெரிவிக்க, இவர் நம்மை அலைபேசியில் தொடர்புகொண்டு நன்றி தெரிவித்தார். அப்போது தான், தொடர் விடுமுறை காரணமாக சென்ற வார பிரார்த்தனை இந்த வாரமும் ரிப்பீட் செய்யப்படும் விபரத்தை கூறினோம். மிக்க மகிழ்ச்சியடைந்தார். அவரும் குடும்பத்துடன் அந்நேரம் பிரார்த்தனை செய்வதாக கூறியிருக்கிறார்.

குழந்தையின் பெயர் : சாய் சஜீத்
தந்தை : தேவேந்திரன்
தாய் : சௌம்யா

================================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgகுடும்பத்தில் வீசிய புயல் காரணமாக கணவரை பிரிந்து வாடும், ஊர் பெயர் வெளியிட விரும்பாத அந்த வாசகியின் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படவு, அவரது கணவர் மனந்திருந்தி மீண்டும் வரவும், இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள உழவாரப்பணி தொண்டர் வஞ்சுளவல்லி (61) அவர்கள் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து பரிபூரண ஆரோக்கியத்துடன் வீடு திரும்பவும் நலமுடன் வாழவும், பார்வையை இழந்து தவிக்கும் பிஞ்சுக் குழந்தை சாய் சஜீத்துக்கு மீண்டும் பார்வை கிடைக்கவும், அக்குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம். மேலும், இந்த வார பிரார்த்தனையை தலைமையேற்று நடத்தி  தரவுள்ள,திரு.சீனிவாச குருக்கள் அவர்கள் எல்லா வித நலமும் வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : ஆகஸ்ட் 31,  2014 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131

=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : திருவாரூரின் திருஞானசம்பந்தர் என பெயர் பெற்றுள்ள திருவள்ளுவரின் தத்துப்பிள்ளை சிறுவன் குறள் மகன் அவர்கள்.

11 thoughts on “ராவணனின் வீழ்ச்சிக்கு பிள்ளையார் சுழி போட்ட நிகழ்வு – Rightmantra Prayer Club

  1. வணக்கம்….

    இந்த வாரம் பிரார்த்தனை சமர்ப்பித்துள்ளவர்களுக்காகவும் ஏற்கனவே சமர்பித்தவர்களுக்கும் சேர்த்து குருவடியையும், திருவடியையும் வணங்குவோம். எம்பெருமான் திருவருளால் நல்லதே நடக்கும்.

    குழந்தையை பற்றி படிக்கும் போது மனது கனக்கிறது. கூடிய விரைவில் குழந்தை நலம் பெறும். குறைவிலாது உயிர்கள் வாழ இறைவன் கருணை கிடைக்கும்……

  2. ஒருவருடைய தோற்றம், நிறம், அங்கஹீனம் இவற்றை கொண்டு கேலி பேசுதல் கூடவே கூடாது என்பது ராவணின் கதை மூலம் நாம் அறிந்து கொண்டோம்.

    //”இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல் மேல்
    தலங்கொள் விரல் சங்கரன் ஊன்றலும்
    மலங்கி வாய் மொழி செய்தவ னுய்வகை
    நலங்கொள் நாமம் நமச்சிவாயவே //

    இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு ஸ்ரீனிவாச குருக்களுக்கு எமது வணக்ககள்.

    மகா பெரியவா குஞ்சித பாத போட்டோ அருமை. நம் வீட்டில் இந்த போட்டோ உளளது

    // தில்லைத்தல கோமகனாம் அதிரூப நடராஜன்
    திருத் தாளில் மேவி அருள் ஆசியினைத் தாம் கூட்டும்
    குஞ்சித்த பாதமுடை குரு நாதர் தரிசனத்தை ஓர் கணமும் தியானித்தால் அகம் விலகும் ரோகமுமே //

    இந்த வார ப்ராதனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் அனைவருக்கும் பிராத்திப்போம். இந்த வார பதிவி;ல் இடம் பெற்ற குழந்தையைப் பற்றி படிக்கும் பொழுது மனது வலிக்கிறது

    லோஹா சமஸ்தா சுகினோ பவந்து

    ராம் ராம் ராம்
    நன்றி
    உமா

  3. எவ்வளவு நல்ல குணநலன்கள் பல இருந்தாலும், தான் என்ற அகம்பாவம் ஒன்று இருந்தால் அது நமது அழிவிற்கே காரணமாகிறது என்பதை ராவணனின் மூலம் அறியலாம்.

    இந்த வார கோரிக்கைகளை படிக்கும் போதே மனம் கனக்கிறது.
    கணவரைப் பிரிந்து வாடும் அந்த வாசகியின் மனம் நமக்கும் புரிகிறது.
    அவரது கணவர் கூடிய விரைவில் மனம் திருந்தி குடும்பத்துடன் சேர்ந்து வாழ இறைவனை வேண்டுவோம்.ஆயிரம் பேர், லட்சம் பேர் நம்மை எதிர்த்து வந்தாலும், கிரக நிலைகள் சரி இல்லாமல் போனாலும் சிறிதும் கவலை பட வேண்டாம். அனைத்தையும் ஆட்டி வைக்கும் பரபிரம்மம் அவனே.

    வஞ்சுளவல்லி அம்மா அவர்கள் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து பரிபூரண ஆரோக்கியத்துடன் வீடு திரும்பவும் நலமுடன் வாழவும் வேண்டுவோம்.
    பொது கோரிக்கையை படிக்கும் போது மனம் வலிக்கிறது.
    அந்த பச்சை குழந்தைக்கு கூடிய விரைவில் பூரண நலம் பெறவும் வேண்டிக்கொள்வோம்.
    மேலும் இந்தவார பிராத்தனைக்கு தலைமை தாங்கும் திரு.சீனிவாச குருக்கள் அவர்கள் எல்லா வித நலமும் வளமும் பெற்று வாழ்வாங்கு வாழவும் இறைவனை வேண்டிக்கொள்வோம்.

  4. நீயா நானா நிகழ்ச்சியை நேற்று தான் பார்த்தேன். ஆண்டவனால் முடியாததும் ஒன்று உண்டோ? எனக்கு தெரிந்ததை அகத்தியர் ஜீவ நாடியில் வந்ததை இங்கே தருகிறேன்.
    அனைத்து பாவங்களுக்கும், அவ்வளவு ஏன்- விதியையே, மாற்ற கூடிய தன்மை தான தர்மங்களுக்கு மட்டுமே உண்டு. அடுத்த கேள்வி வரும் – பணம் இருந்தால் தானே தான தர்மம் செய்ய முடியும் என்று. பணத்தால் செய்வது மட்டுமே தர்மம் இல்லை. அடுத்தவர்கள் மேல் பொறாமை படாமல் இருப்பதும், அடுத்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று மனமார நினைப்பதும் தர்மமே.
    மனதை சுத்தமாகி கொண்டு தான தர்மங்களும் செய்து கொண்டே வந்தால் பாவங்கள் கழிந்து கொண்டே வரும். இது அகத்தியரின் சத்தியமான வாக்கு.
    அனைத்து பிரார்த்தனைகளையும், செய்து கொள்கிறேன். குழந்தை கண் பார்வை பெறவும். வஞ்சுளவல்லி அம்மா பூரண குணம் அடைந்து வீடு திரும்பவும், நம் வாசகியின் கணவர் அவரோடு வந்து சேரவும் பிரார்தனை செய்கிறேன். தங்களுக்கு நல்ல குணவதியான பெண் அமையவும் பிரார்தனை செய்கிறேன்.

  5. இவ்வார பிரார்த்தனைக் கோரிக்கைகள் அனைத்தும் மகாப்பெரியவாவின் பேரருளால் நிவர்த்தியாக வேண்டுமென்று மகாப்பெரியாவாவின் மலர்ப்பாதங்களைத் தொழுகிறேன்.

  6. இந்த வார பிரார்த்தனை கோரியுள்ள அனைவருக்காகவும் இறைவனிடம் உளமார பிரார்த்திப்போம் …

  7. ராவணனைப் பற்றிய கதை மிக அருமை. ராவணனிடம் எண்ணற்ற குணநலன்கள் உண்டு. ராவணனைப் போன்ற ஒரு சிவபக்தனை பார்ப்பது அரிது. இருப்பினும் தர்ம நெறி தவறியதாலும், பெண்ணாசையாலும், அகம்பாவத்தாலும் அழிந்தான்.

    ஆனாலும் அவன் அழிவுக்கு பிள்ளையார் சுழி போட்டது நந்தீஸ்வரரே என்பது புது தகவல். நன்றி.

    மருத்துவத் துறையில் சேவை மனப்பான்மை போய் பணம் பறிக்கும் துறையாக மாறிவிட்டது. இருப்பினும் நீங்கள் சொல்வதை போல, ஆங்காங்கே ஒன்றிரண்டு நல்ல மருத்துவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.

    இந்த வாரம் பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் அனைவருக்காகவும் பிரார்த்திப்போம்.

    நான் என் குடும்பத்தினருடன் அந்நேரம் விளக்கு ஏற்றி வைத்து பிரார்த்தித்து வருகிறேன். ஊருக்கு சென்ற போது கூட பிரார்த்தனையை மட்டும் தவறவிடவில்லை.

    என் தோழிக்கு ஃபோன் செய்து அவளை தளத்தை பார்க்கச் சொல்லி யாருக்கு பிரார்த்தனை செய்யவேண்டும் என்று கேட்டுத் தெரிந்துகொண்டு பிரார்த்தனை செய்தேன்.

    மனம் இப்போதெல்லாம் லேசாக நிம்மதியாக இருக்கிறது.

    எங்கள் அனைவரையும் இணைக்கும் உங்களுக்கும் ரைட் மந்த்ரா தளத்திற்கும் நன்றி.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்.

  8. முக்கிய விஷயத்தை குறிப்பிட மறந்துவிட்டேன்.

    ஆக்சஸ்ட் 28 மாலை நடைபெறவுள்ள, நம் தளத்தின் விநாயக சதுர்த்தி ஹோமமும், அன்னதானமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

    என் கணவருடன் பேசி எங்களால் முடிந்ததை செய்கிறேன். நன்றி.

    – பிரேமலதா மணிகண்டன்
    மேட்டூர்

  9. “ஸ்ரீ சம்மோஹன க்ருஷ்ண ஸ்துதி”எப்போதும் தினமும் ராதா கிருஷ்ணனை மனதில் தியானித்து சொல்லி வரவும் ….

    ஸ்ரீ க்ருஷ்ணம் கமலபத்ராட்சம் திவ்ய ஆபரண பூஷிதம் |
    த்ரிபங்கி லலிதாகாரம் அதிசுந்தர மோகனம் ||
    பாகம் தட்சிணம் புருஜம் அந்யத் ஸ்திரீடூபிணம் ததா |
    சங்கம் சக்ரம் சாங்கு சஞ்ச புஷ்ப பாணம் ச பங்கஷம் ||
    இட்சீ சாபம் வேணு வாத்யம்ச தாரயந்தம் புஷாஷ்டகை
    ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம் ||
    ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் ஸ்ரீ க்ருஷ்ண
    மாஸ்ரயே ||
    – ஸ்ரீ சம்மோஹன க்ருஷ்ண ஸ்துதி [மரீசி மகரிஷி]…..
    ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

    “ஸ்ரீ காலபைரவாஷ்டகம்”தினமும் அசைவம் தவிர்த்து ,பைரவரை தியானித்து பாராயணம் செய்யவும் ..

    தேவராஜஸேவ்யமானபாவனாம்க்ரிபங்கஜம்
    வ்யாலயக்யஸுஉத்ரமின்துஷேகரம் க்ருபாகரம் .
    நாரதாதியோகிவ்ரு‍ந்தவந்திதம் திகம்பரம்
    காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..

    பானுகோடிபாஸ்வரம் பவாப்திதாரகம் பரம்
    நீலகண்டமீப்ஸிதார்ததாயகம் த்ரிலோசனம் .
    காலகாலமம்புஜாக்ஷமக்ஷஷுஉலமக்ஷரம்
    காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..

    ஷூலடம்கபாஷதண்டபாணிமாதிகாரணம்
    ஷ்யாமகாயமாதிதேவமக்ஷரம் நிராமயம் .
    பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவப்ரியம்
    காஷிகாபுராதிநாதகாலபைரவம் பஜே ..

    புக்திமுக்திதாயகம் ப்ரஷஸ்தசாருவிக்ரஹம்
    பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோகவிக்ரஹம் .
    வினிக்வணன்மனோக்யஹேம கிங்கிணீலஸத்கடிம்
    காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..

    தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்கனாஷனம்
    கர்மபாஷமோசகம் ஸுஷர்மதாயகம் விபும் .
    ஸ்வர்ணவர்ணஷேஷ்ஹபாஷஷோபிதாம் கமண்டலம்
    காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..

    ரத்னபாதுகாப்ரபாபிராமபாதயுக்மகம்
    நித்யமத்விதியமிஷ்டதைவதம் நிரம்ஜனம் .
    ம்ரு‍த்யுதர்பனாஷனம் கராலதம்ஷ்ட்ரமோக்ஷணம்
    காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..

    அட்டஹாஸபின்னபத்மஜாண்டகோஷஸம்ததிம்
    த்ரு‍ஷ்டிபாத்தனஷ்டபாபஜாலமுக்ரஷாஸனம் .
    அஷ்டஸித்திதாயகம் கபாலமாலிகாதரம்
    காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..

    பூதஸம்கனாயகம் விஷாலகீர்திதாயகம்
    காஷிவாஸலோகபுண்யபாபஷோதகம் விபும் .
    நீதிமார்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்
    காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..

    .. பல ஷ்ருதி ..
    காலபைரவாஷ்டகம் படம்தி யே மனோஹரம்
    க்யானமுக்திஸாதனம் விசித்ரபுண்யவர்தனம் .
    ஷோகமோஹதைன்யலோபகோபதாபனாஷனம்
    ப்ரயான்தி காலபைரவாம்க்ரிஸன்னிதிம் நரா த்ருவம்

    .. இதி ஸ்ரீமசங்கராசார்யவிரசிதம்
    ஸ்ரீ காலபைரவாஷ்டகம் சம்பூர்ணம் ..

    ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

    வீட்டில் தினமும் பூஜை அறையில் ,திருப்பாச்சேத்தி ஈசனை [ மருநோக்கும் பூங்குழலி உடனுறை திருநோக்கிய அழகிய நாதர்]மானசீகமாக வழிபடவும் ..திங்கள் கிழமை தோறும் அவரை துளசியால்[வில்வத்தால் அல்ல ] மானசீகமாக வழிபடுங்கள்..அங்கு உள்ள ரெட்டை நாய் வாகன பைரவரையும் மானசீகமாக வழிபடுங்கள் .[04574 266 495]……வெகு விரைவில் இணைவீர்கள்….மேலும் உங்கள் மானசீக பூஜையில் திருவாவடுதுறை ஒப்பிலாமுலையம்மை உடனுறை கோமுக்தீஸ்வரர்திருகோயில்[9443900408] இல் உள்ள அணைத்திருந்த நாயகர் வழிபாடு செய்யவும் .திருக்கூடலூர் வையம்காத்த பெருமாள் [திருவையாறிலிருந்து 12 கிமீ தொலைவில் அமைந்துள்ளது]திருகோயில் மானசீக வழிபாடு செய்து வாருங்கள் .. நந்தக முனிவரின் மகளான உஷை, தலப்பெருமாளுக்கு மலர்ச் சேவை செய்து வந்ததாகவும், அவள் மேல் மையல் கொண்ட சோழ மன்னன் ஒருவன் அவளை மணந்ததாகவும், அவனது அமைச்சர்களின் பொய்யான தகவல்களை நம்பி அவளை விட்டுப் பிரிந்ததாகவும், பின் பெருமாளே அவர்கள் மீண்டும் கூடி வாழக் காரணமாக இருந்ததாகவும், அதனாலேயே இத்தலம் ‘கூடலூர்’ [ஆடுதுறைப் பெருமாள் கோவில்]என்ற பெயர் பெற்றதாம்[93452 67501]..
    ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;திருமுறைகள் தினமும் எப்போதும் பாராயணம் செய்து வாருங்கள் ..

    மாதர்ப் பிறைக்கண்ணி யானை
    மலையான் மகளொடும் பாடிப்
    போதொடு நீர்சுமந் தேத்திப்
    புகுவா ரவர்பின் புகுவேன்
    யாதுஞ் சுவடு படாமல்
    ஐயா றடைகின்ற போது
    காதன் மடப்பிடி யோடுங்
    களிறு வருவன கண்டேன்
    கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.

    போழிளங் கண்ணியி னானைப்
    பூந்துகி லாளொடும் பாடி
    வாழியம் போற்றியென் றேத்தி
    வட்டமிட் டாடா வருவேன்
    ஆழி வலவனின் றேத்தும்
    ஐயா றடைகின்ற போது
    கோழி பெடையொடுங் கூடிக்
    குளிர்ந்து வருவன கண்டேன்
    கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.

    எரிப்பிறைக் கண்ணியி னானை
    யேந்திழை யாளொடும் பாடி
    முரித்த இலயங்க ளிட்டு
    முகமலர்ந் தாடா வருவேன்
    அரித்தொழு கும்வெள் ளருவி
    ஐயா றடைகின்ற போது
    வரிக்குயில் பேடையொ டாடி
    வைகி வருவன கண்டேன்
    கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.

    பிறையிளங் கண்ணியி னானைப்
    பெய்வளை யாளொடும் பாடித்
    துறையிளம் பன்மலர் தூவித்
    தோளைக் குளிரத் தொழுவேன்
    அறையிளம் பூங்குயி லாலும்
    ஐயா றடைகின்ற போது
    சிறையிளம் பேடையொ டாடிச்
    சேவல் வருவன கண்டேன்
    கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.

    ஏடு மதிக்கண்ணி யானை
    ஏந்திழை யாளொடும் பாடிக்
    காடொடு நாடு மலையுங்
    கைதொழு தாடா வருவேன்
    ஆட லமர்ந்துறை கின்ற
    ஐயா றடைகின்ற போது
    பேடை மயிலொடுங் கூடிப்
    பிணைந்து வருவன கண்டேன்
    கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.

    தண்மதிக் கண்ணியி னானைத்
    தையல்நல் லாளொடும் பாடி
    உண்மெலி சிந்தைய னாகி
    உணரா வுருகா வருவேன்
    அண்ண லமர்ந்துறை கின்ற
    ஐயா றடைகின்ற போது
    வண்ணப் பகன்றிலொ டாடி
    வைகி வருவன கண்டேன்
    கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.

    கடிமதிக் கண்ணியி னானைக்
    காரிகை யாலொடும் பாடி
    வடிவொடு வண்ண மிரண்டும்
    வாய்வேண் டுவசொல்லி வாழ்வேன்
    அடியிணை ஆர்க்குங் கழலான்
    ஐயா றடைகின்ற போது
    இடிகுர லன்னதோர் ஏனம்
    இசைந்து வருவன கண்டேன்
    கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.

    விரும்பு மதிக்கண்ணி யானை
    மெல்லிய லாளொடும் பாடிப்
    பெரும்புலர் காலை யெழுந்து
    பெறுமலர் கொய்யா வருவேன்
    அருங்கலம் பொன்மணி யுந்தும்
    ஐயா றடைகின்ற போது
    கருங்கலை பேடையொ டாடிக்
    கலந்து வருவன கண்டேன்
    கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.

    முற்பிறைக் கண்ணியி னானை
    மொய்குழ லாளொடும் பாடிப்
    பற்றிக் கயிறறுக் கில்லேன்
    பாடியும் ஆடா வருவேன்
    அற்றருள் பெற்றுநின் றாரோ
    டையா றடைகின்ற போது
    நற்றுணைப் பேடையொ டாடி
    நாரை வருவன கண்டேன்
    கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.

    திங்கள் மதிக்கண்ணி யானைத்
    தேமொழி யாளொடும் பாடி
    எங்கருள் நல்குங்கொ லெந்தை
    எனக்கினி யென்னா வருவேன்
    அங்கிள மங்கைய ராடும்
    ஐயா ரடைகின்ற போது
    பைங்கிளி பேடையொ டாடிப்
    பறந்து வருவன கண்டேன்
    கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.

    வளர்மதிக் கண்ணியி னானை
    வார்குழ லாளொடும் பாடிக்
    களவு படாததோர் காலங்
    காண்பான் கடைக்கணிக் கின்றேன்
    அளவு படாததோ ரன்போ
    டையா றடைகின்ற போது
    இளமண நாகு தழுவி
    ஏறு வருவன கண்டேன்
    கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.
    ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
    திருச்சிற்றம்பலம்

    சீரி னார்மணி யும்மகில் சந்துஞ் செறிவரை
    வாரி நீர்வரு பொன்னி வடமங்க லக்குடி
    நீரின் மாமுனி வன்நெடுங் கைகொடு நீர்தனைப்
    பூரித் தாட்டியர்ச் சிக்கஇ ருந்த புராணனே.

    பணங்கொ ளாடர வல்குல்நல் லார்பயின் றேத்தவே
    மணங்கொள் மாமயி லாலும்பொ ழில்மங்க லக்குடி
    இணங்கி லாமறை யோரிமை யோர்தொழு தேத்திட
    அணங்கி னோடிருந் தானடி யேசர ணாகுமே.

    கருங்கை யானையின் ஈருரி போர்த்திடு கள்வனார்
    மருங்கெ லாம்மண மார்பொழில் சூழ்மங்க லக்குடி
    அரும்பு சேர்மலர்க் கொன்றையி னானடி யன்பொடு
    விரும்பி யேத்தவல் லார்வினை யாயின வீடுமே

    பறையி னோடொலி பாடலும் ஆடலும் பாரிடம்
    மறையி னோடியல் மல்கிடு வார்மங்க லக்குடிக்
    குறைவி லாநிறை வேகுண மில்குண மேயென்று
    முறையி னால்வணங் கும்மவர் முன்னெறி காண்பரே.

    ஆனி லங்கிளர் ஐந்தும் அவிர்முடி யாடியோர்
    மானி லங்கையி னான்மண மார்மங்க லக்குடி
    ஊனில் வெண்டலைக் கையுடை யானுயர் பாதமே
    ஞான மாகநின் றேத்தவல் லார்வினை நாசமே.

    தேனு மாயமு தாகிநின் றான்றெளி சிந்தையுள்
    வானு மாய்மதி சூடவல் லான்மங்க லக்குடிக்
    கோனை நாடொறும் ஏத்திக் குணங்கொடு கூறுவார்
    ஊன மானவை போயறும் உய்யும் வகையதே.

    வேள் படுத்திடு கண்ணினன் மேருவில் லாகவே
    வாள ரக்கர் புரமெரித் தான்மங்க லக்குடி
    ஆளு மாதிப் பிரானடி கள்ளடைந் தேத்தவே
    கோளு நாளவை போயறுங் குற்றமில் லார்களே.

    பொலியும் மால்வரை புக்கெடுத் தான்புகழ்ந் தேத்திட
    வலியும் வாளொடு நாள்கொடுத் தான்மங்க லக்குடிப்
    புலியின் ஆடையி னானடி யேத்திடும் புண்ணியர்
    மலியும் வானுல கம்புக வல்லவர் காண்மினே.

    ஞாலம் முன்படைத் தான்நளிர் மாமலர் மேலயன்
    மாலுங் காணவொ ணாஎரி யான்மங்க லக்குடி
    ஏல வார்குழ லாளொரு பாகமி டங்கொடு
    கோல மாகிநின் றான்குணங் கூறுங் குணமதே.

    மெய்யின் மாசினர் மேனி விரிதுவ ராடையர்
    பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர்மங்க லக்குடிச்
    செய்ய மேனிச் செழும்புனற் கங்கைசெ றிசடை
    ஐயன் சேவடி யேத்தவல் லார்க்கழ காகுமே.

    மந்த மாம்பொழில் சூழ்மங்க லக்குடி மன்னிய
    எந்தை யையெழி லார்பொழிற் காழியர் காவலன்
    சிந்தை செய்தடி சேர்த்திடு ஞானசம் பந்தன்சொல்
    முந்தி யேத்தவல் லாரிமை யோர்முத லாவரே.

    ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;கோளு நாளவை போயறுங் குற்றமில் லார்களே….என்கிறார் சம்பந்தர் …எனவே தங்கள் கிரக டோசங்களும் நிவர்த்தியாகி இணையலாம் …………….

  10. இந்த வாரம் பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் சீனிவாச குருக்கள், அவர்களுக்கு மிக்க நன்றி.

    கணவரைப் பிரிந்து வாடும் அந்த வாசகி, அவரது கணவர் கூடிய விரைவில் மனம் திருந்தி குடும்பத்துடன் சேர்ந்து வாழவும்,
    வஞ்சுளவல்லி அம்மா அவர்கள் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து பரிபூரண ஆரோக்கியத்துடன் வீடு திரும்பி நலமுடன் வாழவும்,
    அந்த பச்சை குழந்தைக்கு கூடிய விரைவில் பூரண நலம் பெற்று, கண் பார்வை திரும்ப பெறவும் மகா பெரியவாவை வணங்கி மனம் உருகி பிரார்த்தனை செய்வோம். வாழ்க வளமுடன்!

  11. இதய நோய் தீர சென்னை திருநின்டவூர் இருதயலீஸ்வரர்,பூசலார் வழிபாடும் ,மூவலூர் மார்க்கசகாயேச்வர் திருகோயில் வழிபாடும் கைமேல் பலன் கொடுக்கும் ……கூடவே திருமுறைகளை பாராயணம் செய்தல் உடனடி நிவாரணம் கிடைக்க துணை புரியும்…….
    திருச்சிற்றம்பலம்

    என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே
    யிருங்கடல் வையத்து
    முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை
    முழுமணித் தரளங்கள்
    மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி
    வாணனை வாயாரப்
    பன்னி யாதரித் தேத்தியும் பாடியும்
    வழிபடும் அதனாலே.

    விண்டொ ழிந்தன நம்முடை வல்வினை
    விரிகடல் வருநஞ்சம்
    உண்டி றைஞ்சுவா னவர்தமைத் தாங்கிய
    இறைவனை உலகத்தில்
    வண்டு வாழ்குழன் மங்கையோர் பங்கனை
    வலஞ்சுழி யிடமாகக்
    கொண்ட நாதன்மெய்த் தொழில்புரி தொண்டரோ
    டினிதிருந் தமையாலே.

    திருந்த லார்புரந் தீயெழச் செறுவன
    விறலின்கண் அடியாரைப்
    பரிந்து காப்பன பத்தியில் வருவன
    மத்தமாம் பிணிநோய்க்கு
    மருந்து மாவன மந்திர மாவன
    வலஞ்சுழி யிடமாக
    இருந்த நாயகன் இமையவ ரேத்திய
    இணையடித் தலந்தானே.

    கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தினர்
    அறத்திற முனிவர்க்கன்
    றிறைவ ராலிடை நீழலி லிருந்துகந்
    தினிதருள் பெருமானார்
    மறைக ளோதுவர் வருபுனல் வலஞ்சுழி
    யிடமகிழ்ந் தருங்கானத்
    தறைக ழல்சிலம் பார்க்கநின் றாடிய
    அற்புதம் அறியோமே.

    மண்ணர் நீரர்விண் காற்றின ராற்றலாம்
    எரியுரு வொருபாகம்
    பெண்ண ராணெனத் தெரிவரு வடிவினர்
    பெருங்கடற் பவளம்போல்
    வண்ண ராகிலும் வலஞ்சுழி பிரிகிலார்
    பரிபவர் மனம்புக்க
    எண்ண ராகிலும் எனைப்பல இயம்புவர்
    இணையடி தொழுவாரே.

    ஒருவ ராலுவ மிப்பதை யரியதோர்
    மேனியர் மடமாதர்
    இருவ ராதரிப் பார்பல பூதமும்
    பேய்களும் அடையாளம்
    அருவ ராததோர் வெண்டலை கைப்பிடித்
    தகந்தொறும் பலிக்கென்று
    வருவ ரேலவர் வலஞ்சுழி யடிகளே
    வரிவளை கவர்ந்தாரே.

    குன்றி யூர்குட மூக்கிடம் வலம்புரங்
    குலவிய நெய்த்தானம்
    என்றிவ் வூர்களி லோமென்றும் இயம்புவர்
    இமையவர் பணிகேட்பார்
    அன்றி யூர்தமக் குள்ளன அறிகிலோம்
    வலஞ்சுழி யரனார்பால்
    சென்ற வூர்தனில் தலைப்பட லாமென்று
    சேயிழை தளர்வாமே.

    குயிலின் நேர்மொழிக் கொடியிடை வெருவுறக்
    குலவரைப் பரப்பாய
    கயிலை யைப்பிடித் தெடுத்தவன் கதிர்முடி
    தோளிரு பதுமூன்றி
    மயிலி னேரன சாயலோ டமர்ந்தவன்
    வலஞ்சுழி யெம்மானைப்
    பயில வல்லவர் பரகதி காண்பவர்
    அல்லவர் காணாரே.

    அழல தோம்பிய அலர்மிசை யண்ணலும்
    அரவணைத் துயின்றானுங்
    கழலுஞ் சென்னியுங் காண்பரி தாயவர்
    மாண்பமர் தடக்கையில்
    மழலை வீணையர் மகிழ்திரு வலஞ்சுழி
    வலங்கொடு பாதத்தால்
    சுழலு மாந்தர்கள் தொல்வினை யதனொடு
    துன்பங்கள் களைவாரே.

    அறிவி லாதவன் சமணர்கள் சாக்கியர்
    தவம்புரிந் தவஞ்செய்வார்
    நெறிய லாதன கூறுவர் மற்றவை
    தேறன்மின் மாறாநீர்
    மறியு லாந்திரைக் காவிரி வலஞ்சுழி
    மருவிய பெருமானைப்
    பிறிவி லாதவர் பெறுகதி பேசிடில்
    அளவறுப் பொண்ணாதே.

    மாதொர் கூறனை வலஞ்சுழி மருவிய
    மருந்தினை வயற்காழி
    நாதன் வேதியன் ஞானசம் பந்தன்வாய்
    நவிற்றிய தமிழ்மாலை
    ஆத ரித்திசை கற்றுவல் லார்சொலக்
    கேட்டுகந் தவர்தம்மை
    வாதி யாவினை மறுமைக்கும் இம்மைக்கும்
    வருத்தம்வந் தடையாவே.
    [சம்பந்தர் ]
    ”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””’எத்தாயர் எத்தந்தை எச்சுற் றத்தார்
    எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்
    செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை
    சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்
    சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித்
    திருவானைக் காவுடைய செல்வா என்றன்
    அத்தாவுன் பொற்பாத மடையப் பெற்றால்
    அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

    ஊனாகி உயிராகி யதனுள் நின்ற
    உணர்வாகிப் பிறவனைத்தும் நீயாய் நின்றாய்
    நானேதும் அறியாமே யென்னுள் வந்து
    நல்லனவுந் தீயனவுங் காட்டா நின்றாய்
    தேனாருங் கொன்றையனே நின்றி யூராய்
    திருவானைக் காவிலுறை சிவனே ஞானம்
    ஆனாயுன் பொற்பாத மடையப் பெற்றால்
    அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

    ஒப்பாயிவ் வுலகத்தோ டொட்டி வாழ்வான்
    ஒன்றலாத் தவத்தாரோ டுடனே நின்று
    துப்பாருங் குறையடிசில் துற்றி நற்றுன்
    திறமறந்து திரிவேனைக் காத்து நீவந்
    தெப்பாலும் நுண்ணுணர்வே யாக்கி யென்னை
    ஆண்டவனே எழிலானைக் காவா வானோர்
    அப்பாவுன் பொற்பாத மடையப் பெற்றால்
    அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

    நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்சக் கள்வா
    நிறைமதியஞ் சடைவைத்தாய் அடையா துன்பால்
    முனைத்தவர்கள் புரமூன்று மெரியச் செற்றாய்
    முன்னானைத் தோல்போர்த்த முதல்வா வென்றுங்
    கனைத்துவரும் எருதேறுங் காள கண்டா
    கயிலாய மலையாநின் கழலே சேர்ந்தேன்
    அனைத்துலகும் ஆள்வானே ஆனைக் காவா
    அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

    இம்மாயப் பிறப்பென்னுங் கடலாந் துன்பத்
    திடைச்சுழிப்பட் டிளைப்பேனை இளையா வண்ணங்
    கைம்மான மனத்துதவிக் கருணை செய்து
    காதலரு ளவைவைத்தாய் காண நில்லாய்
    வெம்மான மதகரியி னுரிவை போர்த்த
    வேதியனே தென்னானைக் காவுள் மேய
    அம்மான்நின் பொற்பாத மடையப் பெற்றால்
    அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

    உரையாரும் புகழானே ஒற்றி யூராய்
    கச்சியே கம்பனே காரோ ணத்தாய்
    விரையாரும் மலர்தூவி வணங்கு வார்பால்
    மிக்கானே அக்கரவம் ஆரம் பூண்டாய்
    திரையாரும் புனற்பொன்னித் தீர்த்த மல்கு
    திருவானைக் காவிலுறை தேனே வானோர்
    அரையாவுன் பொற்பாத மடையப் பெற்றால்
    அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

    மையாரும் மணிமிடற்றாய் மாதோர் கூறாய்
    மான்மறியு மாமழுவும் அனலு மேந்துங்
    கையானே காலனுடல் மாளச் செற்ற
    கங்காளா முன்கோளும் விளைவு மானாய்
    செய்யானே திருமேனி யரியாய் தேவர்
    குலக்கொழுந்தே தென்னானைக் காவுள் மேய
    ஐயாவுன் பொற்பாத மடையப் பெற்றால்
    அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

    இலையாருஞ் சூலத்தாய் எண்தோ ளானே
    எவ்விடத்தும் நீயலா தில்லை யென்று
    தலையாரக் கும்பிடுவார் தன்மை யானே
    தழல்மடுத்த மாமேரு கையில் வைத்த
    சிலையானே திருவானைக் காவுள் மேய
    தீயாடீ சிறுநோயால் நலிவுண் டுள்ளம்
    அலையாதே நின்னடியே அடையப் பெற்றால்
    அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

    விண்ணாரும் புனல்பொதிசெஞ் சடையாய் வேத
    நெறியானே எறிகடலின் நஞ்ச முண்டாய்
    எண்ணாரும் புகழானே உன்னை யெம்மான்
    என்றென்றே நாவினிலெப் பொழுதும் உன்னிக்
    கண்ணாரக் கண்டிருக்கக் களித்தெப் போதுங்
    கடிபொழில்சூழ் தென்னானைக் காவுள் மேய
    அண்ணாநின் பொற்பாத மடையப் பெற்றால்
    அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

    கொடியேயும் வெள்ளேற்றாய் கூளி பாடக்
    குறட்பூதங் கூத்தாட நீயு மாடி
    வடிவேயும் மங்கைதனை வைத்த மைந்தா
    மதிலானைக் காவுளாய் மாகா ளத்தாய்
    படியேயுங் கடலிலங்கைக் கோமான் றன்னைப்
    பருமுடியுந் திரள்தோளு மடர்த்து கந்த
    அடியேவந் தடைந்தடிமை யாகப் பெற்றால்
    அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

    [அப்பர்]
    ……………………………………………………………………………………………………………….
    திருச்சிற்றம்பலம்

    469

    திருவேயென் செல்வமே தேனே வானோர்
    செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதி மிக்க
    உருவேஎன் னுறவேஎன் ஊனே ஊனின்
    உள்ளமே உள்ளத்தி னுள்ளே நின்ற
    கருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற்
    கருமணியே மணியாடு பாவாய் காவாய்
    அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம்
    ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

    மாற்றேன் எழுத்தஞ்சும் என்றன் நாவின்
    மறவேன் திருவருள்கள் வஞ்ச நெஞ்சின்
    ஏற்றேன் பிறதெய்வம் எண்ணா நாயேன்
    எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால்
    மேற்றான்நீ செய்வனகள் செய்யக் கண்டு
    வேதனைக்கே யிடங்கொடுத்து நாளு நாளும்
    ஆற்றேன் அடியேனை அஞ்சே லென்னாய்
    ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

    வரையார் மடமங்கை பங்கா கங்கை
    மணவாளா வார்சடையாய் நின்றன் நாமம்
    உரையா உயிர்போகப் பெறுவே னாகில்
    உறுநோய்வந் தேத்தனையு முற்றா லென்னே
    கரையா நினைந்துருகிக் கண்ணீர் மல்கிக்
    காதலித்து நின்கழலே யேத்து மன்பர்க்
    கரையா அடியேனை அஞ்சே லென்னாய்
    ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

    சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவச்
    சிலைவளைவித் துமையவளை யஞ்ச நோக்கிச்
    கலித்தாங் கிரும்பிடிமேற் கைவைத் தோடுங்
    களிறுரித்த கங்காளா எங்கள் கோவே
    நிலத்தார் அவர்தமக்கே பொறையாய் நாளும்
    நில்லா வுயிரோம்பு நீத னேநான்
    அலுத்தேன் அடியேனை அஞ்சே லென்னாய்
    ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

    நறுமா மலர்கொய்து நீரின் மூழ்கி
    நாடோறும் நின்கழலே யேத்தி வாழ்த்தித்
    துறவாத துன்பந் துறந்தேன் தன்னைத்
    சூழுலகில் ஊழ்வினைவந் துற்றா லென்னெ
    உறவாகி வானவர்கள் முற்றும் வேண்ட
    ஒலிதிரைநீர்க் கடல்நஞ்சுண் டுய்யக் கொண்ட
    அறவா அடியேனை அஞ்சே லென்னாய்
    ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

    கோன்நா ரணன் அங்கத் தோள்மேற் கொண்டு
    கொழுமலரான் தன்சிரத்தைக் கையி லேந்திக்
    கானார் களிற்றுரிவைப் போர்வை மூடிக்
    கங்காள வேடராய் எங்குஞ் செல்வீர்
    நானார் உமக்கோர் வினைக்கே டனேன்
    நல்வினையுந் தீவினையு மெல்லாம் முன்னே
    ஆனாய் அடியேனை அஞ்சே லென்னாய்
    ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

    உழையுரித்த மானுரிதோ லாடை யானே
    உமையவள்தம் பெருமானே இமையோர் ஏறே
    கழையிறுத்த கருங்கடல்நஞ் சுண்ட கண்டா
    கயிலாய மலையானே உன்பா லன்பர்
    பிழைபொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்றன்
    கடனன்றே பேரருளுள் பால தன்றே
    அழையுறுத்து மாமயில்க ளாலுஞ் சோலை
    ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

    உலந்தார் தலைகலனொன் றேந்தி வானோ
    ருலகம் பலிதிரிவாய் உன்பா லன்பு
    கலந்தார் மனங்கவருங் காத லானே
    கனலாடுங் கையவனே ஜயா மெய்யே
    மலந்தாங் குயிர்ப்பிறவி மாயக் காய
    மயக்குளே விழுந்தழுந்தி நாளும் நாளும்
    அலந்தேன் அடியேனை அஞ்சே லென்னாய்
    ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

    பல்லார்ந்த வெண்டலை கையி லேந்திப்
    பசுவேறி யூரூரன் பலிகொள் வானே
    கல்லார்ந்த மலைமகளும் நீயு மெல்லாங்
    கரிகாட்டி லாட்டுகந்தீர் கருதீ ராகில்
    எல்லாரு மெந்தன்னை யிகழ்வர் போலும்
    ஏழையமண் குண்டர்சாக் கியர்க்ளொன்றுக்
    கல்லாதார் திறத்தொழிந்தேன் அஞ்சே லென்னாய்
    ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

    துறந்தார்ந் தூநெறிக்கண் சென்றே னல்லேன்
    துணைமாலை சூட்டநான் தூயே னல்லேன்
    பிறந்தேன்நின் திருவருளே பேசி னல்லாற்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
    செறிந்தார் மதிலிலங்கைக் கோமான் தன்னைச்
    செறுவரைக்கீ ழடர்த்தருளிச் செய்கை யெல்லாம்
    அறிந்தேன் அடியேனை அஞ்சே லென்னாய்
    ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *