Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, September 11, 2024
Please specify the group
Home > Featured > புலிக்கால் முனிவர் எனும் வியாக்ரபாதர், சிவனிடம் கேட்டது என்ன? – ரிஷிகள் தரிசனம் (5)

புலிக்கால் முனிவர் எனும் வியாக்ரபாதர், சிவனிடம் கேட்டது என்ன? – ரிஷிகள் தரிசனம் (5)

print
ரிஷிகள் தரிசனத்தில் இந்த வாரம் நாம் பார்க்கவிருப்பது வியாக்ரபாதர். வியாக்ரம் என்றால் சமஸ்கிருதத்தில் புலி என்று பொருள். தமிழில் இவர் புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்பட்டார். இவருக்கும் புலிக்கும் என்ன தொடர்பு? புலிக்கால் முனிவர் என்று பெயர் ஏற்பட்டது ஏன்? வாருங்கள்… வியாக்ரபாதரின் திவ்ய சரிதத்தை பார்ப்போம்.

Lord Shivaஇறைபக்தியிலும் அறநெறிகளிலும் சிறந்தவர் மத்யந்தன முனிவர். சிவபெருமானின் அருளால் அவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மழன் என பெயர் சூட்டி, வேதங்களையும் நீதி சாஸ்திரங்களையும் கற்று கொடுத்தார். மழன் படிப்பில் படு சுட்டியாக திகழ்ந்தான். தந்தையின் சிவபூஜைக்கு வில்வங்களை மலர்களை பறித்து தருவது, பூஜையின் போது அவருடன் பாடுவது மந்திரங்களை சொல்வது என குழந்தை மழன் உதவி வந்தான்.

ஒருமுறை மழன், தனது தந்தை மத்யந்தனரிடம், “தந்தையே! ஆண்டவனை அடைய வழி தவம் செய்வது தானே?” என்று கேட்டான்.

“மகனே! தவம் செய்வதால் மனிதனுக்கு சொர்க்கம் மட்டுமே கிடைக்கும். ஆனால், பிறவியில்லாத நிலை ஏற்படாது. சிவபூஜையைப் பக்தியுடன் செய்பவர்களே மறுபிறவி எடுப்பதில்லை. நீ தில்லைமரங்கள் அடர்ந்த வனத்தில் இருக்கும் சிவனை வழிபட்டால் உனக்கு நற்கதி கிடைக்கும்!” என்றார்.

மழமுனிவர் சிவபூஜை செய்வதற்கு தில்லைவனம் வந்து சேர்ந்தார். தினமும் பூப்பறித்து அர்ச்சனை செய்வார். சில சமயங்களில் அழுகல் பூக்களும் சேர்ந்து வந்து விடும். அதனை எண்ணி வேதனைப்படுவார்.  “இறைவா… அழுகிய மலர்களால் உம்மை அர்ச்சித்தால் பாவம் வந்து விடுமே! விடிந்த பிறகு மலர் பறித்தாலோ, வண்டுகள் தேன் குடிக்க வந்து எச்சில்பட்டு விடுகிறது. விடியும் முன் பறிக்க எண்ணி மரம் ஏறினாலோ கால் வழுக்குகிறது. இருட்டில் மலர் பறித்தால் கண் தெரியாமல் அரும்பையும், அழுகலையும் பறித்து விடுகிறேன். நல்ல பூக்களை மட்டும் பறிக்க நீ தான் வழிகாட்ட வேண்டும்!” என்று வேண்டிக் கொண்டார்.

Vyakrapadhar

பக்தனின் கோரிக்கையை ஏற்ற சிவன் அவர் முன் தோன்றினார். அதைக் கண்ட மழமுனிவர் பரவசம் அடைந்து, “எனக்கு வாழ்வில் எந்த சுகமும் வேண்டாம். உன்னைக் காலம் முழுவதும் பூக்களால் அர்ச்சிக்கும் பாக்கியம் மட்டும் போதும். வழுக்காமல் மரம் ஏற புலியின் கால்களைத் தரவேண்டும். கைவிரல்கள் புலி நகமாய் மாற வேண்டும். இதைத் தந்தால் எளிதாக மரம் ஏறமுடியும். அது மட்டுமல்ல! கால்களிலும், விரல்களிலும் கண்கள் இருந்தால் நல்ல மலர்களை மட்டும் பறிப்பேன். அவற்றையும் தர வேண்டும்!” என்று வேண்டினார்.

எப்பேற்பட்ட பக்குவம்….. எப்பேற்பட்ட வேண்டுதல்… நாம் கேட்கும் எதையும் தரவல்ல இறைவனை கண்ட பிறகும் ‘எனக்கு எந்த சுகமும் வேண்டாம். உன்னை காலம் முழுதும் பூஜிக்கும் சுகம் ஒன்றே போதும்/ என்று கேட்கிறாரே, இதுவன்றோ பக்தி…

வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் என்று திருநாவுக்கரசர் பாடியதைப் போல, சிவனும் அந்த வரத்தை வழங்கினார். புலியை சமஸ்கிருதத்தில் வியாக்ரம் என்பர். இதனால், மழமுனிவர் வியாக்ரபாதர் என்னும் பெயர் பெற்றார்.

சிவதரிசனம் மூலம் அரிய வரம் பெற்ற அவரை அனைவரும் பாராட்டினர். வியாக்ர பாதரின் புகழ் திக்கெட்டும் பரவியது. இந்நிலையில் ஒரு நாள் வைகுண்டத்தில் விஷ்ணுவின் பாரத்தை திடீரென தாங்க முடியாமல் ஆதிசேஷன் அவதிப்பட்டார். இதற்கான காரணத்தைக் கேட்ட போது, மகாவிஷ்ணு, “ஆதிசேஷா! பூலோகத்திலுள்ள தில்லைவனத்தில் சிவனின் நடனக்காட்சியைப் பார்த்தேன். அந்த மகிழ்ச்சியில் என் உடல் பூரித்தது. அதனால் பாரம் அதிகமானது!” என்றார்.

அந்தக்காட்சியைக் காண ஆதிசேஷன் விருப்பம் கொண்டார். விஷ்ணுவும் அனுமதித்தார். பூலோகத்தில் பிறக்க வேண்டுமானால் ஒரு தாய் தந்தை வேண்டுமல்லவா! தங்களுக்கு ஆதிசேஷன் பிள்ளையாகப் பிறக்க வேண்டும் என்று அத்திரி மகரிஷியும், அவர் மனைவி அனுசூயாவும் விஷ்ணுவிடம் வரம் பெற்றிருந்தனர். அந்த தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். அவருக்கு பதஞ்சலி என்னும் பெயரிடப்பட்டது.

வியாக்ரபாதர் தவம் செய்யும் வனத்திற்குச் சென்று அவரைச் சந்தித்த பதஞ்சலி, சிவனின் நடனத்தைக் காணும் ஆவலைத் தெரிவித்தார். இருவரும், சிவபெருமான் நடன தரிசனம் தரும் நன்னாளுக்காகக் காத்திருந்தனர். மார்கழி திருவாதிரையன்று பேரொளி ஒன்று அவர்கள் கண் முன் விரிந்தது. நந்திகேஸ்வரருடன் கருணையே வடிவான சிவன் எழுந்தருளினார். உமையவள் சிவகாமி இறைவனின் அருகில் நின்றாள். அப்போது சிவன் ஆனந்த நடனம் ஆடினர். வியாக்ரபாதரும், பதஞ்சலியும் ஈசனின் திருநடனம் கண்டு மகிழ்ந்தனர். நடராஜா என்று போற்றி மகிழ்ந்தனர்.

அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

இத்தோடு முடிந்ததா வியாக்ர பாதரின் தரிசனம்? அது தான் இல்லை…

வியாக்ரபாத முனிவரை பற்றி ரிஷிகள் தரிசனத்தில் பதிவளிக்கலாம் என்று முடிவு செய்து நாம் பதிவை தயாரித்துக்கொண்டிருக்கும்போதே அவரது திருச்சமாதியை தரிசிக்கும் பொன்னான வாய்ப்பு கிடைத்தது.

எங்கே? எப்படி?? எப்போது???

அதை தனிப் பதிவாக அளிப்பதே பொருத்தம்.

அடுத்த வாரம்… புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்பட்ட வியாக்ரபாதரின் திருச்சமாதி – ஒரு நேரடி அனுபவம்!

(ரிஷிகள் தரிசனம் தொடரும்)

==================================================================

Also check :

9 thoughts on “புலிக்கால் முனிவர் எனும் வியாக்ரபாதர், சிவனிடம் கேட்டது என்ன? – ரிஷிகள் தரிசனம் (5)

  1. புலிக்கால் முனிவரின் சமாதி பற்றி அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் நன்றி

    ஈசனடி போற்றி !

  2. வணக்கம்

    வியாக்ரபாத மகரிஷிக்கு நம் வணக்கங்கள்…போற்றிகள்……

    எப்பேற்பட்ட பக்குவம்….. எப்பேற்பட்ட வேண்டுதல்… நாம் கேட்கும் எதையும் தரவல்ல இறைவனை கண்ட பிறகும் ‘எனக்கு எந்த சுகமும் வேண்டாம். உன்னை காலம் முழுதும் பூஜிக்கும் சுகம் ஒன்றே போதும்/ என்று கேட்கிறாரே, இதுவன்றோ பக்தி…

    இப்படிப்பட்ட பக்தி நமக்கு என்று வரும்???????? நாம் என்று பெருமானின் ஆனந்த தாண்டவத்தை காண்போம்?????????

  3. வியாகிரபாதர் கதையை நம் தளத்தின் மூலம் இப்பொழுது தான் அறிந்து கொண்டோம். சிவ பூஜை செய்வதால் மறு பிறவி கிடையாது என்பதை இந்த கதை உணர்த்துகிறது. நாம் சிவன் கோவில்களில் பதஞ்சலி, வியாகிரபாதரை பார்த்திருக்கிறோம்.

    குரு வாரத்தில் முனிவர்களின் கதைகளை கேட்கவோ, படிக்கவோ புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

    இந்த கதையை படிக்கும் எல்லோருக்கும் சிவனருள் உண்டாகட்டும்

    வியாகிரபாதரின் சமாதியை பற்றிய பதிவை எதிர் பார்க்கிறோம்

    வியாகிரபாதர் ஓவியம் மிக அருமை. நமது தள ஓவியருக்கு பாராட்டுக்கள்.

    நன்றி
    உமா

  4. ஓம் நமசிவாய……………….ஓம் நமசிவாய…………..ஓம் நமசிவாய……..

  5. Like the many Rishis who did penance for many years and attained salvation, how can we – common people do that? I had this question in my mind for long. This post has answered it.

    “தவம் செய்வதால் மனிதனுக்கு சொர்க்கம் மட்டுமே கிடைக்கும். ஆனால், பிறவியில்லாத நிலை ஏற்படாது. சிவபூஜையைப் பக்தியுடன் செய்பவர்களே மறுபிறவி எடுப்பதில்லை.”

    Om Nama Sivaya…

    1. மிக்க மகிழ்ச்சி. சிவபெருமானுக்கு அன்போடு அர்ச்சிக்கும் ஒரு வில்வ இலைக்கு கூட மிகப் பெரிய பலன் உண்டு.

      – சுந்தர்

  6. பதஞ்சலி முனிவரைப் பற்றி நாம் கேள்விப் பட்டதை பதிவு செய்ய விரும்புகிறோம்.

    ஒரு முறை பதஞ்சலி முனிவர் சிவனை தரிசிக்க செல்கிறார் . அப்பொழுது நந்தியம் பெருமான் சிவனை தரிசிக்க விடாமல் தடை செய்கிறார். எவ்வளவோ முயன்றும் சிவனை தரிசிக்க முடியவில்லை. அப்பொழுது நந்தியிடம் தங்களைப் போல் எனக்கு கால் இல்லாததால் தானே என்னை இழிவு படுத்துகிறாய் , நான் இப்பொழுதே கால் இல்லாமல் அதாவது பாடலில் துணை எழுத்தான கால் இல்லாமல் பாடுகிறேன் என்று பாட ஆரம்பிக்கிறார்.. அந்த பாட்டைக் கேட்டு சிவன் ஓடோடி வந்துஅவரின் பாட்டிற்கு மயங்கி தன்னுடன் கூடவே இருக்குமாறு ஆசிர்வதிக்கிறார். பதஞ்சலி பாடிய பாடல் வரிகள் அனைத்திலும் துணைக் கால்கள் இல்லாமல் இருக்கும். பாடல் மிகவும் நன்றாக இருக்கும். இந்த கதையை திருமதி ரேவதி சங்கரன் அவர்கள் FM RADIO வில் சிவராத்திரி அன்று சொன்ன கதை

    நன்றி
    உமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *