ஆனால் அந்த பகுதியை நெருங்கும்போது அப்படி யாரும் இல்லை என்று புரிந்தது. கார் அந்த பகுதியை கடக்கும் தருணம், திடீரென யாரோ வீசிய ஒரு கருங்கல் பறந்து வந்து காரின் பக்கவாட்டு கதவில் மோதியது. அதிர்ச்சியடைந்த அவன், காரை சடர்ன் பிரேக் போட்டு நிறுத்துகிறான். வெளியே எட்டிப்பார்க்கிறான். கல் பட்டு அவனது புதுக் கார் சொட்டையாகியிருந்தது. வேகமாக ரிவர்ஸ் எடுத்து, காரிலிருந்து இறங்கி யார் கல்லை எறிந்தது என்று ஆத்திரத்துடன் சுற்றுமுற்றும் பார்க்கிறான். அங்கே ஒரு சிறுவன் நின்றுகொண்டிருப்பதை பார்த்து, அவனருகே சென்று அவன் சட்டையை பிடித்துக்கொள்கிறான்.
“ராஸ்கல்… யார்டா நீ ? எதுக்குடா கார் மேல கல்லை எறிஞ்ச? இது எவ்ளோ காஸ்ட்லி கார் தெரியுமா? இதை ரிப்பேர் பண்ண எவ்ளோ ஆகும் தெரியுமா? நீ கல் எறிஞ்சி விளையாட என்னோட கார் தான் கிடைச்சதா? உன்னை என் பண்றேன் பாரு இப்போ….” வார்த்தைகளால் வெடிக்கிறான்.
“சார்… சார்…. என்னை மன்னிச்சிடுங்க.” அந்த சிறுவன் அழ ஆரம்பிக்கிறான்.
“சார்….எனக்கு வேற எந்த வழியும் தெரியலே… நான் கல்லை விட்டு எறிஞ்சதுக்கு காரணம், யாரும் வண்டியை நிறுத்தலே!” அழுதுகொண்டே சொன்னவன், அங்கே ஒரு ஓரத்தில், கையை காட்டியபடி, “அதோ சார்… அவன் என் தம்பி…அவனால நடக்க முடியாது. இந்த பக்கம் அவனை கூட்டிட்டு வரும்போது பிளாட்பாரத்துல இருந்து வீல் சேர் திடீர்னு இறங்கி அவன் கீழே விழுந்துட்டான். என்னால அவனை தூக்க முடியலே… யாரையாவது உதவிக்கு கூப்பிடலாம்னா யாரும் வண்டியை நிறுத்தலே… அதான் கல்லால உங்க காரை அடிச்சேன்… அவனை என் கூட சேர்ந்து கொஞ்சம் தூக்கி விட முடியுமா?”
அந்த சிறுவன் மீது கோபம் மறைந்து அவனுக்காக பரிதாபப்படும் இவன், உடனே சென்று வீல் சேரை தூக்கி நிறுத்தி, பாக்கெட்டிலிருந்து கையிலிருந்த கர்சீப்பை எடுத்து அந்த சிறுவனின் கைகளில் இருந்த சிறாய்ப்புக்களை துடைத்தான்.
“பயப்படாதே… உன் தம்பிக்கு ஒன்னும் இல்லை. லேசான சிறாய்ப்பு தான்.”
அந்த சிறுவன் கையெடுத்து இவனை கும்பிட்டு, “நீங்க நல்லா இருக்கணும் சார்.. God bless you!” என்று கூறிவிட்டு, தனது தம்பியை வீல் சேரில் தள்ளிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
அதை பார்க்கும் அந்த கணம், இவன் மிகவும் நெகிழ்ந்துபோய்விடுகிறான்.
இவன் மெதுவாக யோசித்தபடி தனது புதுக் காரை நோக்கி நடந்து வருகிறான். சிறுவன் வீசிய கல்லால் காரில் ஏற்பட்டிருந்த அந்த DENT மிக பெரிதாக தெரிந்தது. “யாராவது கல்லெறிஞ்சி தான் உங்களை திரும்பி பார்க்க வைக்க முடியும் என்கிற அளவுக்கு ரொம்ப ஸ்பீடா வாழ்க்கையில போகவேண்டாமே!” என்கிற மிக பெரிய செய்தியை அது சொல்லியதால் அதை ரிப்பேர் செய்யவேண்டாம், அப்படியே விட்டுவிடலாம் என்று தீர்மானித்தான்.
கடவுள் நம் இதயத்துடனும் மனசாட்சியுடனும் அவ்வப்போது ரகசியமாக பேசவே செய்கிறார். ஆனால் நாம் தான் அதை கேட்பதில்லை. நமக்கு கேட்க நேரம் இல்லாமலிருக்கும்போது, கல்லால் அடித்து நம் கவனத்தை ஈர்க்க அவர் முயல்கிறார். கடவுள் பேசுவதை கேட்பதும் கேட்காமல் இருப்பதும் நம் விருப்பம்.
அந்த சிறுவனை போல பாதிக்கப்பட்ட ஜீவன்கள் எத்தனையோ நம் கவனத்துக்காக காத்திருக்கிறார்கள். நமது வேகமான (அர்த்தமற்ற) ஓட்டத்தை சிறிது நிறுத்தி, அந்த ஜீவன்களை பார்ப்போம். நீங்கள் கோவிலுக்கு போகும் நேரம் வேண்டுமானால் நீங்கள் கடவுளை பார்க்கும் நேரமாக இருக்கலாம். ஆனால் மற்றவர்களுக்கு நீங்கள் உதவி செய்யும் நேரமே கடவுளின் குரலை நீங்கள் கேட்கும் நேரமாகும். பரபரப்பான இந்த உலகில் கடவுளின் குரலை சிறிது நேரமாவது கேட்போமே…!
==============================================================
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….
==============================================================
[END]
எங்களுக்கு இந்த அருமையான செய்தியை உங்கள் மூலமாக அந்த கடவுளே சொன்னதாக நினைக்கிறேன் (காரணம் என்ன தெரியுமா சுந்தர் சார், நேற்று மாலை முதல் எனக்கும் கடவுளுக்கும் மனசுக்குள் சண்டை அந்த நேரம் என் மனதில் தோன்றியது என்ன தெரியுமா? “கடவுள் கொடுக்க மறுப்பதிலும் நியாயம்” இருகிறது இந்த வாசகம் நம் தள வாசகர்கள் அனைவர்க்கும் மிக மிக பரிச்சயமானது ஆனால் தனக்கு என்று ஒரு கஷ்டம் வரும்போது அதை ஏற்க இந்த மனம் மறுக்கிறது இதுவும் அவன் செயல் என்று ஏற்றுக்கொண்டு இந்த திங்கள் கிழமையும் அவனின் திருவிளையாடல் என்று மனதை தேற்றிக்கொண்டு தங்களுக்கு நன்றி சொல்லி புறப்படுகிறேன்.
நன்றி
வணக்க சுந்தர் சார்
வழக்கம் போல் இன்றும் அருமையான பதிவு
நன்றி
Welcome to this week with great heart touching story……………….
Nice
வழக்கம் போல் அருமையான பதிவு.
கடவுளின் குரல் கேட்க நமக்கு பொறுமை மிகமிக அவசியம்.
கடவுள் நம் மனதில் இருந்தால், நடக்க போவதையும் நமக்கு உணர்த்திக்கொண்டிருப்பார்.
அதையும் நம்மால் உணரவும் முடியும்.
சுந்தர் சார்,
மனதை வருடிவிட்டது. அந்த சிறுவனின் அன்புதான் கடவுள் என்று நினைக்கிறேன். அதனால் தான் அந்த இளைஞனும் சிறுவனின் அன்பை பெற்றான். அருமை.!
நன்றியுடன் அருண்.
மிகவும் அருமையான கருத்துள்ள பதிவு.. நாமும் இயந்திர கதியில் நம் வாழ்கையை ஒட்டிக் கொண்டிருக்காமல் மற்றவர்களுக்கும் உதவி செய்து அவர்கள் வாழ்த்தும் வாழ்த்து ஒலி மூலம் இறைவனின் குரலைக் கேட்கலாம்
superb ஸ்டோரி
நன்றி
உமா
அருமையான பதிவு.
ஹரிதாஸ் அவர்கள் சொன்னது எல்லோருக்கும் பொருந்தும்.
கடவுள் கொடுக்க மறுபப்திலும் அர்த்தம் இருக்கிறது. இது நம் வாசகர்கள் தெரிந்து கொண்ட வார்த்தை மட்டுமல்ல பல வாசகர்கள் மூச்சாக கொண்டுள்ள தாரக மந்திரம்.
சிறுவனின் அன்பு அந்த மனிதனை அவன் மேல் கோபம் கொள்ளாமல் அவனிடம் அன்பு பாராட்ட வைத்துள்ளது.
நமக்கும் கடவுள் யார் மூலமாகவாது குரல் கொடுப்பார். நாம் அதை பொறுமையுடன் கேட்டு மற்றவர்களுக்கு உதவி செய்து வர வேண்டும்.
nandri
உறுதியான நம்பிக்கையும் ,நிலைகுலையா பொறுமையும் இவற்றோடு நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என்று இருந்தால் , வாழ்க்கை நன்றாக அமையும் .
மிகவும் அருமையான பதிவு
நன்றி
நாகராஜ் T
Sir,
while reading this article my eyes are filled with full of tears.
.I am thinking that this article is also the god’s voice to communicate something to me.
. Because I have read after watching today’s mahabharatham episode.I can correlate now.
.Really nice .
Regards,
Senthil
கதையின் கருத்து நன்று..
பிரக்ஞை இல்லாத மனிதாபிமானம் மறந்தவர்கள் அடிக்கடி கல்லடி பட்டு சுய நினைவு பெற்று கருணையை பெறுகிறார்கள்..அடுத்த கல்லடி பட்டு மீண்டும் இப்படியே அவர்கள் வாழ்க்கை போகிறது..
மனித கழிவை அகற்றும் மனிதனை மனிதனாக பார்பவர்கள் மிக குறைவு. அடுத்தவர் துன்பத்தை பார்த்து வருந்தி உதவி செய்பவர்கள் கடவுள் பேசுவதை கேட்பவர்களே!
வன்முறையால் ஒரு போதும் அன்பை வளர்க்க முடியாது…
பாலகன் என்ற போர்வையில் பாதகஞ் செய்வோரை மன்னிப்பது ஒரு குற்றவாளியை உருவாக்கும் செயல்..
பொறுமையோடு முயல்பவர்களுக்கு ஆண்டவன் உதவாமல் இருபதில்லை..