ஒரு நாள், வாகனத்தில் செல்லும்போது கீழே தவறி விழுந்துவிட அடி கிடி எதுவும் படவில்லை. ஆனால் இடது கையில் கட்டைவிரலுக்கு கீழே உள்ள பகுதி லேசாக வலிக்க ஆரம்பித்தது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வீங்க ஆரம்பித்துவிட்டது.
அந்த பகுதியில் இருக்கும் பெரிய மருத்துவமனைக்கு சென்று காட்டியபோது, உள்ளே எலும்பு உடைந்திருக்கிறது என்று உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று கூறிவிட்டார்கள்.
தன் கையில் இருந்த பணம், வீட்டில் அப்பா அம்மா கொடுத்தது என்று பணத்தை புரட்டி அறுவை சிகிச்சை செய்ய அந்த மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிடுகிறார்.
அன்று வியாழக்கிழமை. இவருக்கு பிற்பகல் அறுவை சிகிச்சைக்கு நேரம் குறித்திருந்தார்கள். அறுவை சிகிச்சைக்கான பூர்வாங்க ஏற்பாடுகளை செய்யும் பொருட்டு மருத்துவமனை ஊழியர் ஒருவர் வந்து இவரது இடது கை முழுக்க ஷேவிங் செய்து முடிகளை அகற்றிவிட்டனர்.
கீழ்த்தளத்தில் உள்ள பார்மஸியில் அறுவை சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை வாங்கிக்கொண்டு இவர் லிப்ட்டில் மீண்டும் ஏறி வருகையில், லிப்ட் ஆப்பரேட்டர் இவரிடம், “தம்பி… நீ இங்கேயிருந்து உடனே போயிடு. ஏன், எதுக்குன்னு கேட்காதே. ஆப்பரேஷனும் வேணாம் ஒன்னும் வேணாம்…உடனே போயிடு” என்று கூறுகிறார்.
இவருக்கு ஒன்றும் புரியவில்லை. இருப்பினும் அவர் வார்த்தையை தட்ட முடியவில்லை. தன்னை மெஸ்மரிசம் செய்து கட்டளையிட்டதை போன்று அவ்வார்த்தைகள் இருந்தன.
எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் கிடைக்கவில்லை. ஆகையால் ஆப்பரேஷனை ஒரு வாரம் தள்ளிப்போடும்படியும் ஹாஸ்பிடல் தரப்பில் கூறிவிட்டு, மருந்துகளை ரிட்டர்ன் செய்துவிட்டு பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேறிவிடுகிறார்.
அப்புறம் தான் அவருக்கு நிம்மதியாக இருந்தது.
மருந்துகளை ரிட்டர்ன் செய்த பணம் ரூ.1200/- கையில் இருந்தது. அந்தப் பணம் முழுவதையும் ஏனோ ராகவேந்திரருக்கே செலவு செய்ய வேண்டும் என்று அவருக்கு தோன்றியது. உடனே மந்த்ராலயம் செல்ல தீர்மானிக்கிறார்.
வீட்டுக்கு சென்று ஒரு பையில் துணிமணிகளை எடுத்துக்கொண்டு நேராக போரூர் ஜங்க்ஷன் வந்துவிடுகிறார். மந்த்ராலயம் கிளம்பியாகிவிட்டது. ஆனால், எங்கே போகவேண்டும், எப்படி போகவேண்டும் உள்ளிட்ட எந்த விபரமும் அவருக்கு தெரியாது. நேரம் அப்போது மாலை 7.00 மணியிருக்கும்.
இவர் தனியாக அந்த பரபரப்பான சந்திப்பில் நின்று கொண்டிருப்பதை ஒரு முதியவர் பார்க்கிறார். இவரிடம் வந்து “என்ன தம்பி? எங்கே போகணும்?” என்று வாஞ்சையுடன் விபரத்தை கேட்க, இவர் “மந்த்ராலயம்” போகணும் என்று கூறுகிறார்.
“சரி என் கூட வா… நான் உன்னை மந்த்ராலயத்துக்கு ரயிலேற்றி விடுகிறேன்” என்று கூறி, இவரை சென்ட்ரல் அழைத்துச் சென்று, உடனிருந்து டிக்கட் எடுத்துக் கொடுத்து மந்த்ராலயம் ரோடு செல்ல பம்பாய் மெயிலில் ஏற்றி வழியனுப்புகிறார்.
அந்த முதியவர் யார் என்ன என்கிற விபரம் இவருக்கு எதுவும் தெரியாது.
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது. (குறள் : 101)
என்ற திருக்குறளுக்கு ஏற்ப, அவரை கையெடுத்து கும்பிடுகிறார்.
மறுநாள் மந்த்ராலயத்தில் ஸ்ரீ ராகவேந்திர தரிசனம். பக்தி பரவசம் பொங்க, ஆட்கொண்ட அண்ணலை, கருணைக் கடலை கண்ணீர் மல்க கும்பிடுகிறார்.
மந்த்ராட்சதையை பெற்றுக்கொண்டு வெளியே வருகிறார். நேரே அன்னதான கூடம் சென்று அன்னதானத்தை சாப்பிடுகிறார்.
மாலை மீண்டும் தரிசித்துவிட்டு கோவிலின் ஒரு ஓரத்தில் இரவு படுத்து தூங்குகிறார்.
இரவு ஒரு கனவு. ஒரு பெரிய அலை இவரை மூழ்கடிப்பது போல வந்து பிறகு அப்படியே விலகிவிடுகிறது. பின்னணியில் ஒரு குரல் கேட்கிறது. “உனக்கு மட்டும் அறுவை சிகிச்சை நடந்திருந்தால் உன் கையே போயிருக்கும்”.
காலை எழுந்தவுடன் புரிகிறது. இராகவேந்திரர் தான் தன்னை தடுத்தாட்கொண்டார் என்று. கைகளில் இப்போது வீக்கமும் இல்லை. வலியும் இல்லை.
நினைத்துப் பாருங்கள். ஆபத்தில் சிக்கவிருந்த பக்தனை காப்பாற்றி, மாறுவேடத்தில் வந்து மந்த்ராலயத்திற்கு டிக்கட் எடுத்து தந்து ரயிலும் ஏற்றிவிட்டிருக்கிறார் குருராஜர். “அழைத்தால் போதும் அடுத்த கணமே நினைத்தது நடக்கும், அஞ்சேல் மனமே!” என்கிற பாடல் வரிகள் தான் எத்தனை உண்மை.
அது முதல் ராகவேந்திரரின் தீவிர பக்தராக மாறிவிட்ட இவரது வாழ்வில் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். (அடுத்த வாரம் அவை இடம்பெறும்.)
அந்த இளைஞர் பெயர் சுகுமாரன். ஒரு மெக்கானிக்கல் சர்வீஸ் என்ஜினீயராக தற்போது கைநிறைய சம்பளத்துடன் பணிபுரிகிறார். ராயரின் ஆசீர்வாதத்தில் திருமணம் நடைபெற்று ஒரு குழந்தையும் உண்டு. போரூரில் உள்ள இவரது அலுவலகத்திற்கே சென்று இவரை சந்தித்து இவர் கதையை கேட்டோம்.
தோஷாஸ்தே நஷமாயாந்தி ராகவேந்திர ப்ரஸாதத:
ஓம் ஸ்ரீராகவேந்திராய நம: இத்யஷ்டர்க்ஷர மந்த்ரத:
ஜபிதாத் பாவிதாந்நித்யம் இஷ்டார்த்தாஸ்யு: ந ஸம்ஷய: ||
ஸ்ரீ ராகவேந்திரரை துதிப்பவர்கள் எத்தனையோ பேர் கணக்கில்லாமல் இருக்க, இவரை தேடி வந்து அருள் செய்ய காரணம் என்ன ?
இதற்கான விடை அடுத்த வாரம்…
(அடுத்த வாரம் : தஞ்சை பிருந்தாவனக் காட்சி மந்த்ர்யாலத்தில் தெரிந்த அதிசயம்…!)
குருவே சரணம்………
பகவான் ராகவேந்திரர் பற்றிய பதிவு அருமை . திரு சுகுமாரன் அவர்களை ராகவேந்திரர் தடுத் தாட்கொண்ட விதத்தை படிக்கும் பொழுது மெய் சிலிர்கிறது. நாம் ஆத்மார்த்தமாக அழைத்தால் ஓடோடி வருவார் நம் குரு
//பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யா தர்ம ரதாயச
பஜதாம் கல்ப விருக்ஷாயா நமதாம் காமதேனவே //
ராகவேந்திரர் தொடர் நம் ரைட் மந்த்ராவில் ஆரம்பித்ததில் இருந்து ராகவேந்திரர் பிருந்தாவனத்திற்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளோம்
”’நினைத்தது நிறைவேறும் அது உந்தன் அருளாகும் ”
ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ்
நன்றி
உமா
மனதிற்கு கஷ்டம் வரும்போதெல்லாம் ,நமது தளத்தை படிக்கும் போது அதில் வரும் வார்த்தைகள் பொருத்தமாக நமக்கு ஆறுதல் அளிப்பதை பல முறை பார்த்து விட்டோம்.
அதேபோல் இதுவும் “When people let you down,GOD will pick you up” .
இன்று எனக்கு மிகவும் மனது கவலையாக இருந்தது.எல்லா கதவுகளும் அடைத்து விட்டால் நான் என்ன செய்வேன் என்று தவித்துக்கொண்டிருந்தேன். இந்த வரிகள் எனக்கே ஆறுதல் சொல்வது போல் இருந்தது.
கூடிய விரைவில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்
கண்ணீருடன்
நித்யகல்யாணி.
சகோதரி கவலை கொள்ளாதீர்கள் நானும் தங்களைப்போலத்தான் ஆனால் கடவுள் இருப்பது உண்மை நம் கஷ்டங்களை நம்மால் தாங்க முடியாமல் போகும்போழுதுதான் நமக்கு கடவுள் நம்பிக்கை குறையும் நம் நண்பர் சுந்தர் சொல்வது போல் அவன் கொடுப்பதற்கும் கொடுக்க மறுப்பதற்கும் சரியான் காரணம் உண்டு அது அவன் ஒருவனுக்கே தெரியும்
என்றும் இறை நம்பிக்கையுடன்
கி. ஹரித்தாஸ்.
சார் வணக்கம் ,
“அழைத்தால் போதும் அடுத்த கணமே நினைத்தது நடக்கும்!” – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம்_2
படித்தேன் .2 ம் பாகம் கண்டிப்பா போடவும்.
நான் நவ பிருந்தாவனம்,மந்தராலயம்,திருப்பதி சென்று வந்தேன்
எனக்குள் இருந்த ஒரு வித பயம்,கவலை.எல்லாம் எங்க போனதுனே தெரியவில்லை.இப்போ எந்தவித குழப்பமும் இல்லாமல் நிம்மதியாக இருக்கேன்.
எங்கும் நிறை பரப்ரம்மமாய் நீக்கமற நிறைந்திருக்கும் எங்கள் மந்த்ராலய வாசா துங்கா தீரா.
குரு ராகவேந்திரா ஆபத்பாண்டவா காருண்யா மூர்த்தி..
ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ
ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ
ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ
குரு ராயரின் மகிமைகள் ஏராளம் அவர் புரியும் லீலைகள் மெய் சிலிர்க்க வைக்கும். மேற்கண்ட நிகழ்ச்சியை படிக்கும் போது அன்பரின் அனுபவம் என் கண்முன் ஓடியது.
எல்லாம் குரு ராஜரிர்ன் மகிமை.
விசு
yen ninna karunae gururaja..yen ninna karunae!!!
Photo is divine & awesome!!Can keep watching it for ages…
ஆனந்தத்தால் கண்ணீர் பெருகுகிறது. சுவாமிகள் அருட்பார்வையைப் பெற எவ்வளவு புண்ணியம் செய்துள்ளார் என எண்னம் தோன்றுகிறது. பதிவிற்கு நன்றிகள்.
“When people let you down,GOD will pick you up” God always with us to resolve our problem. Thanks for the nice article Sundar Sir.
படிக்க படிக்க கண்கள் பனித்து உடல் சிலிர்த்தது.
அருள் செய்யும் மகானின் அற்புதங்கள் நம் தளத்தில் படிக்கும் பேறு நாங்கள் மிக பாக்கியசாலிகள்.
நம் மன பாரம் எல்லாம் குறைந்து மன நிம்மதி கிடைக்கிறது.
நன்றி.
சார் வணக்கம்
மிகவும் அருமையான பதிவு
நன்றி
very good artical.
ellam avan karunai.
குருவே சரணம் !!!….
மகானின் மகிமை அட்சய பாத்திரம் போல!
எந்த நிலை வந்தாலும் எந்தன் துணை நீ அல்லவா
குருவே சரணம்
ஸ்ரீ ராகவேந்தராய நமஹ
ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ
ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ
அன்போடு பாசத்தோடு பக்தியோடு அழைத்தால் ஓடோடி வந்து குறைகளை தீர்த்துவைப்பாா்
எந்தவித மன சங்கடங்கள் இருந்தாலும் பக்தியோடு அழைத்தால் உடனே தீர்வு கிடைக்கும்
ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ
குருவின் மகிமையே மகிமை
அவர் அருளை பெற்று அனைவரும் நலமாக வாழ்க்கை வளமாக செழிப்பாக அனைத்துவிதமான வளங்களும் வாழ்வில் பெற்று விளங்க குருவின் நாமத்தை ஜெபியுங்கள்
ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ
குருவே சரணம்
ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ
கிம்த் விஷ்டார்த ஸம் ருத்ரவே கமல நாத ப்ரஸாே தாே தயாத் கீர்தீர் திக் விதிதா விபூதிரதுலா ஷாக்ஸி ஷயா எஸ் யாேத்ரஹி
ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ
Super….
என் பிரச்சனை திக்க வருவாரா!!!!!!!!!
உயிரிழப்புகளைத்தான் சந்தித்தேன்.பலருக்கும் தர்மம் செய்த குடும்பம்.இன்று சொல்லொணாத்துயரில் முழிகி இருக்கிறம்.படித்தும் வேலை இல்லை.பணமில்லை.மகில்சி இல்லை.இருக்கிறது உயிர் ஒண்டுதான்.எனக்கும் அருள் கிடைக்குமா.
நிச்சயம் கிடைக்கும். கவலைவேண்டாம். கீழ்கண்ட பதிவை பாருங்கள்.
http://rightmantra.com/?p=8973