Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, September 11, 2024
Please specify the group
Home > Featured > புடவை கட்டிக்கொள்ளும் பெருமாள் – சென்னை புறநகரில் ஒரு அதிசய மலைக்கோவில்!

புடவை கட்டிக்கொள்ளும் பெருமாள் – சென்னை புறநகரில் ஒரு அதிசய மலைக்கோவில்!

print
சென்னை சிங்கபெருமாள் கோவில் – ஒரகடம் சாலையில் திருக்கச்சூரை தாண்டி அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆப்பூர். அந்த ஊரில் உள்ள ஒரு மலை மேலே ஒரு சிறிய வைணவத் திருக்கோவில். அந்த கோவிலில் நின்றகோலத்தில் ஒரு அழகிய பெருமாள். “மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது” என்பது பழமொழி. அந்த பழமொழி உண்மை என்பதை உணர இந்த கோவிலில் வந்து பெருமாளை வழிபட்டு செல்ல வேண்டும். பெருமாள் குடி இருக்கும் இந்த மலைக்கு பெயர் ‘ஒளஷத கிரி’ (மூலிகை மலை).  ஒளஷதம் என்றால் மருந்து என்று பெயர். பல் வேறு மூலிகைகள் நிறைந்த மலை என சொல்லபடுகிறது இந்த ‘ஒளஷத கிரி’.

(‘முந்தைய பதிவையே படிக்கவில்லை. அதற்குள் இன்னொன்றா?’ என்று நினைக்கவேண்டாம். வடலூர் சிவப்பிரகாச ஸ்வாமிகள் ஆஸ்ரமத்துக்கு நம் வாசகர்களுடன் சென்றது, பேரம்பாக்கம் உழவாரப்பணி, இந்து ஆன்மீக கண்காட்சி, ஆடிக்கிருத்திகை தரிசனம் உள்ளிட்ட பல பதிவுகள் இன்னும் அளிக்கவேண்டியிருக்கிறது. முடியும்போதெல்லாம் பதிவளிக்கிறோம். நேரம் இருக்கும்போது முழுமையாக படித்து எங்களை கௌரவிக்கவும். நன்றி.)

சிங்கப்பெருமாள் கோவில் - ஆப்பூர் செல்லும் சாலை
சிங்கப்பெருமாள் கோவில் – ஆப்பூர் செல்லும் சாலை

DSC03288பெருமாள் பெயர் ‘நித்திய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள்’. மற்ற கோவில்களை போல அல்லாமல் பெருமாளுக்கு இங்கு வஸ்திரத்துக்கு பதில் புடவையே சாத்தப்படுகிறது. பல சிறப்புக்கள் பெற்ற இந்த ஆலயத்தை பற்றி மேலும் தெரிந்துகொள்வோம் வாருங்கள்…

DSC03291

ராம ராவண யுத்தத்தின் போது இந்திரஜித்தின் ப்ரம்மாஸ்திரத்தால் தாக்கபட்டு ராம சேனையும், இலக்குவணும் மூர்சையாகி விழுந்து விடுகின்றனர். ஜாம்பவானின் அறிவுறைப்படி மயங்கிய மற்றும் இறந்தவர்களை உயிர்பிக்க ஆஞ்சநேயர் இமயமலையை அடுத்த ரிஷபம் மற்றும் கைலாய மலைகளில் இடையில் உள்ள மூலிகை மலையில் இருந்து நான்கு வகையான மூலிகைகளை எடுக்க செல்கிறார். இறந்தவர்களை உயிர்பிக்கும் மிருத சஞ்ஜீவனி, உடல் காயத்தை ஆற்றும் விசல்யகரணி, காயத்தால் உண்டான வடுவை போக்கும் சாவர்ணய கரணி, அறுபட்டஉடலை ஒட்ட வைக்கும் சந்தான கரணி என்பவை அந்த நான்கு மூலிகைகள். மூலிகைகளை தேடிக்கொண்டிருந்தால் நேரம் வீணாகும் என்ற காரணத்தால் ஹனுமான் அந்த மலையையே தன் வாலால் பெயர்த்து கையில் ஏந்தி கொண்டு இலங்கையை நோக்கி பறக்கிறார்.

DSC05633

DSC03298DSCN5518அவ்வாறு இலங்கை செல்லும் வழியில் ஒரு கையில் இருந்து மறுகைக்கு மூலிகை மலையை மற்றும் போது அந்த மலையில் இருந்து விழுந்த ஒரு சிறு பகுதி தான் வளர்ந்து இந்த ஔஷத கிரியாக மாறி நிற்கிறது. அந்த மலையில் இருந்து விழுந்த மண் திருகச்சூரிலும் விழுந்ததாம். அங்கிருக்கும் சிவபெருமானின் பெயர் மருந்தீஸ்வரர்.

இந்த பகுதிக்கும் ஆஞ்சநேயர் தூக்கிச் சென்ற சஞ்ஜீவனி மலைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது புலனாகிறது.

சென்ற ஞாயிறு ஜூலை 13 அன்று இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சிக்கு சென்றோம். கண்காட்சியை பார்த்துவிட்டு பின்னர் அங்கிருந்து அப்படியே நேரே வேளச்சேரி தாம்பரம் வழியாக சிங்கப்பெருமாள் கோவில் பயணம்.

சரியாக 5.00 மணிக்கு மலை மீது இருக்கவேண்டும் என்பது ப்ளான். அப்போது தான் பிரார்த்தனை கிளப் பிரார்த்தனையை அங்கு செய்ய முடியும். 5.00 மணிக்கு மலை மீது இருக்கவேண்டும் என்றால் அடிவாரத்திற்கு 4.30 க்கெல்லாம் சென்றுவிடவேண்டும். 3.00 மணிக்கு திருவான்மியூரிலிருந்து கிளம்பினோம்.

வழியில் அர்ச்சகருக்கு ஃபோன் செய்து, “ஏதேனும் வாங்கி வரவேண்டுமா?” என்று கேட்டோம்.

“எனக்கு ஒன்றும் வேண்டாம். மலை மீது குரங்குகள் நிறைய உண்டு. அவற்றுக்கு வேண்டுமானால் சாப்பிட பிஸ்கட் வாங்கி வாருங்கள்” என்றார்.

வழியில் ஒரு கடையில் இருபது பாக்கெட்டுகள் PARLE-G  வாங்கிக்கொண்டோம்.

சரியாக 4.30 கெல்லாம் ஆப்பூர் வந்துவிட்டோம்.

ஆப்பூர் மிக அருமையான ஒரு ஊர். ஊர் கிராமம் போல இல்லை. நன்கு டெவலப் ஆகியிருக்கிறது. நகரத்து பரபரப்புக்களில் இருந்து.

கோவிலுக்கு செல்லும் பாதையில் திரும்பி, மலையை நெருங்க நெருங்க பரவசம் தொற்றிக்கொண்டது. அடிவாரத்தில் பைக்கை பார்க் செய்துவிட்டு, அர்ச்சகருக்கு போன் செய்து நாம் வந்து சேர்ந்துவிட்ட தகவலை சொன்னோம். “நீங்க மேலே கோவில்ல வெயிட் பண்ணுங்க…. நான்  வந்துகிட்டே இருக்கேன்” என்றார்.

500 படிகளையும் ஒரே மூச்சாக ஏறுவது இயலாதது. சில படிகள் ஏறி கொஞ்சம் ஆசுவாச படுத்திக்கொண்டு மூலிகை காற்றை சுவாசித்து பின்னர் படிப்படியாக ஏறினால் சிரமம் தெரியாமல் இருக்கும்.

DSCN5523

DSCN5524DSCN5527

படியேற ஆரம்பித்தோம். ஒவ்வொரு 100 படிக்கும் ஒரு  நிமிடங்கள் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு மீண்டும் ஏறினோம். மேலே செல்லச் செல்ல, ஜில்லென்ற மருந்து  நம்மை வருட ஆரம்பித்தது. ஆப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் தெரிந்தது. எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலென்று பசுமை தான்.  நீர்நிலைகளும், பசுமைப் புல்வெளிகளும் பார்க்கவே கண்கொள்ளா காட்சிதான். ஆளையே தூக்கும் அளவுக்கு ஜில் ஜில் காற்று வேறு.

அட… அட… சென்னைக்கு அருகே இப்படி ஒரு தலமா… இத்தனை நாள் தெரியாமல் போய்விட்டதே.. என்று மனம் துடித்தது.

சென்னையில் இருப்பவர்கள் ஒருமுறை தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு குடும்பத்தினருடன் அவசியம் வரவேண்டும். (சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து அப்பூருக்கு ஷேர் ஆட்டோ வசதி இருக்கிறது.) கார் வைத்திருப்பவர்கள் நிச்சயம் தவறாமல் வரவேண்டும்.

அந்த காலத்து ஒரிஜினல் படிக்கட்டுக்கள். (குரங்கார் வரவேற்பது தெரிகிறதா?)
அந்த காலத்து ஒரிஜினல் படிக்கட்டுக்கள். (குரங்கார் வரவேற்பது தெரிகிறதா?)

சுமார் 500 படிகள் ஏறி மலை உச்சியை அடைய வேண்டும். படி அமைக்கும்போது, பழைய ஒரிஜினல் படிகள் எப்படி இருந்தது என்று வருங்கால சந்ததியனருக்கு தெரியவேண்டும் என்பதற்காக சில அடி தூரங்களை அப்படியே விட்டுவைத்திருக்கிறார்கள். பார்க்கவே கண்கொள்ளா காட்சி.

DSCN5533

மலையில் ஏறியவுடன் நம்மை முதலில் வரவேற்பது சிறிய திருவடி என போற்றப்படும் அனுமனின் வழித்தோன்றல்கள். அதாவது குரங்குகள். இவை இந்த மலையை விட்டு அகலுவதில்லை. இந்த மலையிலேயே வசித்து கொண்டு வரும் பக்தர்கள் தரும் உணவை மட்டுமே உண்டு வாழ்வதாக சொல்கிறார்கள்.

DSCN5535

DSCN5536DSCN5538முதலில் ஒரு சிறிய மண்டபம் போன்ற அமைப்பு பின்னர் நேரே சென்றால் இறைவன் சந்நிதி. பெரிய திருவடியின் ஒரு சிறிய சிலை பிரதிஷ்டை செய்யபட்டுள்ளது. அந்த மண்டபத்தில் தசாவதார சுதை சிற்பங்கள், மற்றும் அஷ்ட ல‌ஷ்மிகள் நடுவில் திருவேங்கடவன் சுதை சிற்பம்.  பெருமாள் சந்நிதி. பெருமாள் இங்கே பார்பதற்கு திருவேங்கடவனின் சிறிய வடிவு போல காட்சி அளிக்கிறார். முன்பே சொன்னது போல பெருமாள் மூர்த்தி சிறிது தான், ஆனால் பெருமானின் ஆற்றலை உனர்ந்தவர்கள் பல்வேறு இடங்களில் இருந்து தேடி வருகின்றனர்.

கோவிலுக்கு செல்பவர்கள் அங்கே வாழும் குரங்குகளுக்கும் ஏதேனும் உணவு எடுத்து செல்வது நல்லது. தமக்கும் அவர்கள் குடிநீர் மற்றும் தின்பண்டங்கள் எடுத்து செல்வது நல்லது, ஏனெனில் 500 படிகள் ஏறும்போது களைப்படைவது நிச்சயம். நினைக்கும் அனைவருக்கும் நிச்சயம் அருள்வான் நித்திய கல்யான பிரசன்ன வெங்கடேசன்.

தசாவதார சிற்பங்கள்
தசாவதார சிற்பங்கள்

பெருமாளால் நன்மை பெற்ற பக்தர்கள் பலர் இந்த கோவிலுக்கு பல்வேறு கைங்கர்யங்களை செய்து வருகின்றனர். உதாரணமாக  காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒரு பக்தர் அவர் சுமார் எட்டு ஆண்டுகளாக இங்கே வருவதாகவும் அப்போதெல்லம் மலை மேல் செல்ல சரியான பாதை இல்லாமல் இருந்ததாகவும், பின்னர் அவரும் இன்னும் சில பக்தர்களும் சேர்ந்து நடைபாதை அமைக்க முயற்சி எடுத்து பல்வேறு கால கட்டங்களில் படிப்படியாக படி அமைத்தார்களாம்.

கோவிலின் சிறப்பு

இங்கே தனியாக தாயார் சந்நிதி கிடையாது. பட்டரின் கூற்றுபடி பெருமாள் லஷ்மி சொருபமாகவே இருந்து தன்னகத்தே மஹாலக்ஷ்மியை கொண்டிருப்பதால் அவருக்கு வச்திரத்திற்கு பதில் புடவையே சாற்றப்படுகிறது. வேறு வஸ்திரங்கள் சாற்றபடுவதில்லை. தாயாரும் பெருமாளும் இனைந்து ஒரேவடிவில் இருப்பதால் எப்போதும் கல்யாண கோலத்தில் இருப்பதாக நம்பிக்கை, அதனால் தான் பெருமாள் பெயர் ”நித்திய கல்யான பிரசன்ன வெங்கடேச பெருமாள்”.

அகத்திய மாமுனிவர் தவம் செய்த ஒரே வைணவத் திருத்தலம் இது மட்டுமே என்று கூறப்படுகிறது.

DSC03320

மேலே கோவிலை அடைந்த பிறகு நம்மை முதலில் வரவேற்றது குரங்கார் தான். ஒருவர் வர, அவருக்கு நாம் வாங்கிச் சென்ற பிஸ்கட் பாக்கெட்டுக்களை பிரித்து பிஸ்கட்டுக்களை போட, எங்கிருந்து தான் வந்தார்களோ தெரியாது சுமார் இருபது முப்பது குரங்குகள் நம்மை நோக்கி ஓடிவந்தன.

DSC03322

நமக்கு ஒரே பயம். பிஸ்கட் பையை பிடுங்கிக்கொண்டு போய்விட்டால் என்ன செய்வது. பிஸ்கட் பையை நமது பேக்கில் பத்திரப்படுத்தி ஒவ்வொன்றாக எடுத்து பிரித்து போடா ஆரம்பித்தோம்.

ஒரு சில வலிமையான குரங்குகள், மற்ற குரங்குகளுக்கு எதுவும் கிடைக்காதபடி அவையே எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போக, அந்த அப்பாவி குரங்குகளுக்கு சிறப்பு கவனம் எடுத்து நாம் பிஸ்கட் போட்டோம். ஒரு சில குரங்குகள் உரிமையோடு நம்மருகே வந்து கையை நீட்டி வாங்கிச் சென்றன.

சில குரங்குகள் பிஸ்கட்டுக்காக அவற்றுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டன. நாம் தான்  பிஸ்கெட்டை போட்டு அவற்றை திசை திருப்பி ஒழுங்குபடுத்த வேண்டியிருந்தது. சிறிது நேரத்தில்  அனைத்தும், நன்கு நம்மிடம் பழகிவிட்டன.

(குரங்குகளை சீண்டுவது, அவற்றை நோக்கி கற்களை எறிவது கூடவே  கூடாது!)

எப்படியும் ஒரு 50, 60 குரங்குகள் இருக்கும். சமீபத்தில் தான் குட்டியை ஈன்ற குரங்குகள் ஒரு நான்கைந்து உண்டு. குட்டிக்கு அவை பிஸ்கட் ஊட்டும் அழகே தனி.

உள்ளம் நிறைந்த ஒரு அன்னதானம் இது. காரணம், இந்த குரங்குகளுக்கு வேறெதுவும் இங்கு கிடைக்காது. நம்மை போன்ற பக்தர்கள்  தரும் உணவுப்பொருள் தான் இவற்றுக்கு ஆகாரம்.

(பிஸ்கட்டுக்களை வாங்கிச் செல்பவர்கள், கவரோடு குரங்குகளுக்கு தயவு செய்து போடவேண்டாம். கவர்களை பிரித்தே பிஸ்கட் போடவேண்டும். மேலும் கவர்களை இங்கே மலைமீது போடாமல், தங்களுடனே எடுத்துச் சென்று கீழே ஊரில் உள்ள குப்பைத் தொட்டிகளில் போடவேண்டும். மலையை எக்காரணம் கொண்டு அசுத்தம் செய்யவேண்டாம். அதன் இயற்க்கை தன்மையை மாசுபடுத்தவேண்டாம்! மலையை அசுத்தம் செய்யாமல் இருந்தாலே அதுவே மிகப் பெரும் சேவை!)

நாம் உழவாரப்பணிக்கு அங்கு செல்லும்போது இது தொடர்பாக விழிப்புணர்வு வாசகங்களை ஆங்காங்கே வைக்க திட்டமிட்டுள்ளோம்.

* பழங்களை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், அவை சாப்பிடாமல் விட்டுவிடும் பட்சத்தில் அல்லது சண்டையிட்டு வீணாக்கும் பட்சத்தில் அவை அழுகும் வாய்ப்பு உள்ளது. அங்கு சுத்தம் செய்ய ஆட்கள் கிடையாது. மேலும் பழங்கள் வந்தால் ஈக்கள் வந்துவிடும் அபாயம் இருக்கிறது. பிஸ்கட், பொரி போன்ற DRY FOODS அங்கு மிகவும் ஏற்றது. பிஸ்கெட்டுகள் சற்று கூட வாங்கிச் சென்று அர்ச்சகரிடம் கொடுத்துவிட்டால் ஸ்டாக் வைத்திருந்து கூட கொடுக்கலாம்.

நம்மைப் பொறுத்தவரை இவை குரங்குகள் அல்ல. இந்த மலையில் வசிக்கும் ரிஷிகள். தங்கள் தனித்தன்மை கெடக்கூடாது என்று இந்த ரூபத்தில் ஸ்ரீனிவாசனின் கோவிலில் நித்தம் அவனை தரிசித்தபடி இங்கு வசிக்கிறார்கள் என்றே நம் நம்புகிறோம்.

சில குட்டிகள் செய்யும் சேட்டை கண்கொள்ளா காட்சி. கம்பியை பிடித்து தொங்கி சாகசம் செய்வது. மரத்தின் உச்சிக்கு சென்று அங்கு தொங்குவது என்று இந்த மலைக் கோவில் முழுக்க அவற்றின் ராஜ்ஜியம் தான்.

DSC03348
தண்ணீர் குடிக்கின்றன

இவற்றை பார்த்தபோது நமக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. இந்த குரங்குகளுக்கு குடிக்க தண்ணீர் எப்படி? இங்கு மலை மேல் தொட்டியோ அல்லது தண்ணீர் குழாயோ கிடையாது. அப்படியிருக்க இவை எப்படி தாகம் தீர்த்துக்கொள்ளும்?

நமது கேள்விக்கு சற்று நேரத்தில் விடைகிடைத்தது.

 திரு.கார்த்திக் குரங்களுக்கு உணவிடுகிறார்....

திரு.கார்த்திக் குரங்களுக்கு உணவிடுகிறார்….

நாம் கோவிலில் இருக்கும்போதே ஒருவர் வந்தார். ஒரு பை நிறைய பிஸ்கட் பாக்கெட்டுகள், பொரி ஆகியவற்றை குரங்குகளுக்கு போட்டார்.

பின்னர் கிணற்றுக்கு சென்று (மலை மீது கிணறு!) நீர் இறைத்து ஒரு பிளாஸ்டிக் ட்ரேயில் ஊற்றினார். குரங்குகளுக்கு என்று வைக்கப்பட்டுள்ள ட்ரே என்று அப்புறம் தான் புரிந்தது.

DSCN5548DSCN5553

தாய்மையின் அரவணைப்பு
தாய்மையின் அரவணைப்பு

விசாரித்ததில், அவர் பெயர் கார்த்திக் என்பதும் மேற்கு மாம்பலத்தில் இருந்து  வருவதாகவும், சுமார் ஆறு மாதங்களாக வருவதாகவும் கூறினார். வரும்போதெல்லாம் இங்கு குரங்குகளுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகள் வாங்கி வந்து போட்டுவிட்டு அடுத்து ஒரு வாரத்துக்கு தேவையான பிஸ்கட் பாக்கெட்டுக்களை பட்டரிடம் கொடுத்துவிடுவதாகவும், அவர் மற்ற நாட்களில் குரங்குகளுக்கு அவற்றை போடுவார், நீர் இறைத்து ட்ரேவில் ஊற்றுவார் என்றும் சொன்னார்.

பொரி சாப்பிடுகின்றன
பொரி சாப்பிடுகின்றன

கேட்கவே சந்தோஷமாக இருந்தது. கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் உணவிடுபவனாயிற்றே இறைவன்… தன்னையே நம்பியிருக்கும் இந்த ஜீவன்களை விட்டுவிடுவானா?

கார்த்திக் அவர்கள் செய்வதும் சேவை தான். மிகப் பெரிய சேவை. மிகப் மிகப் பெரிய அன்னதானம். அனுமனின் அருள் அவருக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும்.

DSCN5562

சித்தர்கள் பெளர்னமி இரவுகளில் வந்து இங்கே வழிபடுவதாக நம்பிக்கை. பெருமாள் மிகுந்த வரப்பிரசாதி என பக்தர்கள் சாட்சியம் சொல்கிறார்கள்.

பெருமாளின் பெருமைகளை சொற்களால் முழுவதும் சொல்வதென்பது இயலாது, அனைவரும் ஆப்பூர் சென்று பெருமானை தரிசித்து வழிபட்டு பயன் பெற வேண்டும்.

ஒரு சில நாடி ஜோதிடங்களில் கூட இந்த கோவிலில் பரிகாரம் செய்ய பரிந்துரைக்க படுவதாக தகவல் உண்டு.

கோவிலை பற்றிய சரித்திர ஆதாரமோ அல்லது புராண வரலாறோ யாருக்கும் சரியாக தெரியவில்லை. தெரிந்தவர்கள் அது குறித்து பகிர்ந்துகொள்ளலாம்.

நாங்கள் பேசிக்கொண்டிருந்த போதே பட்டர் வந்துவிட்டார். பாலாஜி பட்டர். இவர் ஒரு அனிமேஷன்  டிசைனர். தனது தந்தைக்கு உதவும்பொருட்டு இந்த கைங்கரியத்தை செய்து வருகிறார். ஒரு நாள் ஒரு வேளை படியேறியதற்கே நமக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க… இங்கே இவர் தினமும் இருவேளை படியேறி  இறங்குகிறார்.

இவருக்கு வருமானமெல்லாம் பெரிதாக கிடையாது. நம்மை போன்று ஆலயத்திற்கு வருபவர்கள் தட்டில் போடுவது தான்.

பட்டரிடம்  பேசியதில் நாம் முன்னேர் விளக்கிய கோவிலின் தல வரலாற்றை சிறப்புக்களை நம்மிடம் விளக்கினார்.

பெருமாளுக்கு தீபாராதனை காட்டி தீர்த்தப் ப்ரசாதமும் திருத்துழாயும் தந்தார். தொடர்ந்து புட்டு பிரசாதம் தரப்பட்டது.

இந்த கோவிலில் உழவாரப்பணி செய்ய நமது விருப்பத்தை தெரிவித்ததும், “ரொம்ப சந்தோஷம். தாரளமாக செய்ங்க…” என்று ஒப்புதல் தந்தார். இப்படி ஒரு கோவிலில் உழவாரப்பணி செய்வது நாம் செய்த பாக்கியம்.

DSC03360

 சந்தியா காலம் எனப்படும் பகலும் மாலையும் சந்திக்கும் நேரத்தில் ஒரு அழகிய 'க்ளிக்'

சந்தியா காலம் எனப்படும் பகலும் மாலையும் சந்திக்கும் நேரத்தில் ஒரு அழகிய ‘க்ளிக்’

கோவில் சிறிய கோவில் தான். அதிக வேலை கிடையாது. ஒட்டடை  அடித்து, தரையை பெருக்கி, சோப் ஆயில் போட்டு பிரகாரத்தை அலம்பிவிடவேண்டும். ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் குப்பைகளை பிளாஸ்டிக் கவர்களை சேகரித்து அப்புறப்படுத்தவேண்டும். அவ்வளவு தான்.

உழவாரப்பணிக்கு வருபவர்களுக்கு மதிய உணவுக்கு புளி சாதம், தயிர் சதம் உள்ளிட்ட தளிகைகளை தயார் செய்து தருவதாக கூறியிருக்கிறார்.

* நாம் உழவாரப்பணிக்கு செல்லும்போது, இங்குள்ள அனுமனின் வழித்தோன்றல்களுக்கு அளிக்க தேவையான தின்பண்டங்களும், பிஸ்கட்டுகளும் போதுமான அளவு வாங்கிச் செல்லப்படும். தவிர ஒரு மாதத்திற்கு தேவையான பிஸ்கட்டுகளும் (STOCK) வாங்கி தரப்படும்.

வரும் 27 ஜூலை ஞாயிறன்று இங்கு உழவாரப்பணி நடைபெறும். கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் நமக்கு தகவல் தெரிவிக்கவும். வேன் ஏற்பாடு செய்யப்படும். (வேன் ரூட் ஐயப்பன்தாங்கல் >> போரூர்  >> விருகம்பாக்கம் >> வடபழனி >> 100 அடி ரோடு  >> கத்திப்பாரா சந்திப்பு >> விமான நிலையம்  >> குரோம்பேட்டை >> தாம்பரம்  >> மறைமலைநகர் >> ஆப்பூர்).

DSC03356 copy

கோவிலின் முகவரி : ஸ்ரீ நித்ய கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில், ஔஷத கிரி மலை, ஆப்பூர், சிருவாஞ்சூர் – 603204.

(ஆப்பூர் கோவில் விபரங்கள் உதவி : aatralaithedi.blogspot.in)

வழிகாட்டி சிமெண்ட் பலகை வைக்கும் கைங்கரியம்!

இப்படி ஒரு கோவில் இங்கே இருப்பது பற்றி பலருக்கு தெரியாதது ஆச்சரியம் தான். இது பற்றி பட்டரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “வேண்டுமானால் எங்கள் தளம் சார்பாக இந்த பகுதியை சுற்றியுள்ள முக்கிய சந்திப்புக்களில் சிமெண்ட்டினால் ஆன வழிகாட்டி போர்டுகள் வைத்து தருகிறோம்” என்றோம்.

இதை அவர் எதிர்பார்க்கவில்லை. மிகவும் மகிழ்ச்சியுடன் “அப்படி வெச்சு தந்தீங்கன்னா ரொம்ப உதவியா இருக்கும்” என்றார்.

போர்டுகள் வைப்பதற்கு தேவையான உள்ளூர் அமைப்புக்களின் ஒப்புதல், போர்டு வைக்க ஆகும் செலவு உள்ளிட்ட அனைத்தையும் நாமே பார்த்துக்கொள்கிறோம் என்று கூறியிருக்கிறோம்.

ஃபோட்டோஷாப்பில் டிசைன் செய்யப்பட்ட சாம்பிள் கான்க்ரீட் வழிகாட்டி போர்டு ஒன்றை உங்கள் பார்வைக்கு இணைத்திருக்கிறோம். (நாம் வைக்கும் போர்டு இப்படித்தான் இருக்கும்.)

nAME B copy

நம் வாசகர் சந்திரசேகரன் என்பவர் இங்கே மறைமலைநகரில் தான் வசிக்கிறார். (மறைமலைநகர் இங்கேயிருந்து 4 கி.மீ. தான்). அவரிடம் இது பற்றி  சொல்லி, வழிகாட்டி பலகைகள் வைக்க உதவவேண்டும் என்று சொன்னபோது, மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். “நீங்கள் அடுத்த ஞாயிறு நேரில் வாருங்கள். உள்ளூர் அமைப்புக்களிடம் பேசி அனுமதி பெற்று எந்தெந்த இடத்தில் வைப்பது என்று முடிவு செய்துவிடலாம். உடனடியாக வேலையையும் துவக்கிவிடலாம். நான் அனைத்தையும் உடனிருந்து அனைத்தையும் பார்த்துக்கொள்கிறேன்!” என்றார்.

சொன்னபடி நேற்று முன்தினம் நாமும் நண்பர் சந்திரசேகரனும் அந்த பகுதியில் சுமார் மூன்று மணிநேரம் சுற்றி போர்டு வைப்பதற்கு மூன்று இடங்களை தேர்வு செய்திருக்கிறோம்.

1) சிங்கப் பெருமாள் கோவில் சந்திப்பு அருகே
2) மறைமலைநகர் சந்திப்பு அருகே
3) ஒரகடம் சந்திப்பு அருகே என மொத்தம் மூன்று இடங்களை தேர்வு செய்திருக்கிறோம். (முதல் இரண்டு ஜி.எஸ்.டி. ரோட்டில் வருகிறது.)

உடனடியாக அந்தந்த  இடங்களில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தலைவர்களிடம் இது பற்றி கூறி அவர்களது ஒப்புதலையும் பெற்றுவிட்டோம்.

ஒரு போர்டு வைப்பதற்கான செலவு – கொத்தனார் கூலி, போக்குவரத்து செலவு, உள்ளிட்ட அனைத்தும் சேர்த்து எப்படியும் ரூ.4000/- ஆகும். மூன்று போர்டுகளுக்கும் சேர்த்து மொத்தம் 12,000/- என்று தெரிகிறது. இது தவிர, கோவில் அடிவாரத்தில் சாலையில் உள்ள துருப்பிடித்த பழைய இரும்பு போர்டும் (துவக்கத்தில் நீங்கள் பார்த்த படம்) பெயிண்ட் அடிக்கப்பட்டு புதிதாக எழுத தீர்மானித்திருக்கிறோம். (இதற்கு தனி செலவு.)

தற்போதைய நிலவரப்படி – நாம் விசாரித்தவரையில் – மூன்று சிமெண்ட் போர்டுகள், ஒரு இரும்பு போர்டு (இரு பக்கம்) ஆகியவற்றுக்கு பெயிண்டிங்கிற்கு மட்டுமே எக்கச்சக்கமாக ஆகும் என்று தெரிகிறது. அநேகமாக எல்லாம் சேர்த்து ரூ.23,000 – 24,000 அல்லது அதற்கு மேலும் வரக்கூடும்.

இன்று அதற்கான பணிகள் பூர்வாங்க துவங்கவிருக்கிறது.

இது போன்ற பாரம்பரியமிக்க கோவில்களுக்கு பக்தர்கள் அதிகளவு  வரவேண்டும். அப்போது தான் கோவிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடியும். அதற்கு நிச்சயம் இந்த வழிகாட்டி பலகைகள் உதவும். அதற்கு ஏதோ நம்மாலான ஒரு சிறிய முயற்சி.

வாசகர்கள் இந்த எளிய முயற்சிக்கு வழக்கம்போல தோள் கொடுக்கவேண்டும். இது ஒரு வேண்டுகோள். அவ்வளவே. விருப்பம் உள்ளவர்கள் உதவிடலாம். ஒருவேளை தொகை கூடுதலாக சேர்ந்தால், நமது வழக்கமான அறப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.

நமது தளத்தின் வங்கிக் கணக்கு முகவரிக்கு :

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

தொகையை செலுத்திய பின்பு, மறக்காது நமக்கு simplesundar@gmail.com, rightmantra@gmail.com ஆகிய முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பவும். அல்லது 9840169215 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும்.

தங்கள் ஆதரவுக்கு நன்றி!

================================================================

நமது ஆடிகிருத்திகை முருகப் பெருமான் தரிசனம், அறப்பணிகள் மற்றும் அன்னதானம் தொடர்பான பதிவு விரைவில்…

================================================================

[END]

16 thoughts on “புடவை கட்டிக்கொள்ளும் பெருமாள் – சென்னை புறநகரில் ஒரு அதிசய மலைக்கோவில்!

  1. பதிவை படிக்க படிக்க பரவசமாக உள்ளது., சென்னையில் இவ்வளவு அழகான மலை கோவிலா என வியக்க வைக்கிறது இந்த பதிவு. இவ்வளவு நாள் சிங்க பெருமாள் கோவிலுக்கு மட்டும் 5 முறை சென்றிருக்கிறோம். ஆனால் இந்த நிதய கல்யாண பெருமாள் கோவில் பற்றி இப்பொழுது தான் நம் தளம் மூலமாக கேள்வி படுகிறோம். இந்த மலையை பார்த்தால் ஷோளிங்கர மலை ஞாபகத்திற்கு வருகிறது.

    நாமும் உழவார பணியில் பங்கு கொண்டு இறை அருள் பெறுவோம்

    அருமையான பதிவிற்கு நன்றி, படங்கள் கண் கொள்ளாக் காட்சி
    வழி காட்டி சிமெண்ட் பலகை நம் தளம் சார்பாக வைப்பது அறிய மகிழ்ச்சி. நம் contribution கோவிலுக்கு வரும் பொழுது அளிக்கபடும்

    நன்றி
    உமா

  2. Dear sundar

    Once we went to one trip we seen monkey and offered the biscuits which we eat and those monkeys also got habit of eating fast foods like us & what we
    eat…what to do it gets what we offer only bcoz we spoiled the nature almost and thinking only human being is capable for living in this world and other living beings are below to human being and existing for surviving for human being.

    So my humble request if we see any living being we will try to understand what they need and we will surve accordingly. ,
    Eating Habits of Monkeys :-They are strictly vegetarians and they enjoy eating small, young, tender leaves by hanging upside down from their tails. Their diet consists of fresh fruits like yams, bananas, grapes ,Seeds, Nuts, Grain and green vegetables. Corn is considered a treat to a monkey. எதுவும் கிடக்கவில்லை என்றல் தான் மாமிசம் உண்ணும் …..

    1. பழங்களை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், அவை சாப்பிடாமல் விட்டுவிடும் பட்சத்தில் அல்லது சண்டையிட்டு வீணாக்கும் பட்சத்தில் அவை அழுகும் வாய்ப்பு உள்ளது. அங்கு சுத்தம் செய்ய ஆட்கள் கிடையாது. மேலும் பழங்கள் வந்தால் ஈக்கள் வந்துவிடும் அபாயம் இருக்கிறது. பிஸ்கட், பொரி போன்ற DRY FOODS அங்கு மிகவும் ஏற்றது. பிஸ்கெட்டுகள் சற்று கூட வாங்கிச் சென்று அர்ச்சகரிடம் கொடுத்துவிட்டால் ஸ்டாக் வைத்திருந்து கூட கொடுக்கலாம்.
      – Sundar

  3. ஔஷத கிரி மலை தொகுப்பு SUPERB.
    படிக்க ஆரம்பித்தவுடன் ஒரு சிறு நெருடல். எங்கே நம் மக்கள் பிஸ்கட் கொடுத்துவிட்டு கவர் களையும் அங்கேயே எரிந்து விடுவார்களே (சதுரகிரி போன்ற புண்ணிய மலை பிரதேசங்கள் குப்பைகளால் அவமதிக்க படுகின்றன என கேள்வி ) என்று. ஆனால் நீங்களும் குப்பைகளை அங்கே போட வேண்டாம் என கேட்டு கொண்டு உள்ளீர்கள். மனமார்ந்த நன்றிகள். ஒவ்வருவரும் குப்பைகளை அதற்கு உரிய இடத்தில போட்டாலே நாடு 80% சத விகிதம் சுத்த மாகி விடும்.

  4. சுந்தர், இது ஒரு அருமையான கவரேஜ். புகைப்படம் ஒவ்வொன்றும் பேசுகிறது. படிக்கும்போதே இனிமையான ஒரு அனுபவம்போல் உணர்ந்தேன். பெயர் பலகை அழகாக வந்திருக்கிறது.

    நம் துருதுரு நண்பர்களான குரங்குகளை பார்ப்பதே ஒரு சந்தோஷம். கோயில் என்பதால் சுத்தமாக வைத்திருக்கவேண்டும் அதே சமயம் குரங்குகளுக்கு உணவிடவேண்டும் என்றால் நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல் உணவுகளை கொடுப்பதுதான் சரி. அங்கே சுத்தம் செய்வதற்கு ஆளில்லை என்பதால் நம் பொறுப்பு இன்னும் அதிகமாகிறது.

  5. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பார்கள் அதுபோல கோவில் சிறியதாக இருந்தாலும் அதன் பழமையும் பெருமையும் பெரிது.
    படங்கள் அனைத்தும் அருமையாக வந்துள்ளது.
    குட்டியுடன் இருக்கும் தாய் குரங்கு மிக அருமை.
    மலை பாதையும் கோவில் செல்லும் படிக்கட்டுகளும் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது.
    குன்றத்தூர் சேக்கிழார் மண்டபம் போல இதுவும் மக்களுக்கு மிகவும் தெரியாத ஒரு மலை கோவில்.
    மருந்தின் மகத்துவம் நிறைந்த அந்த காற்றை மலை மீது நின்று சுவாசித்தாலே நம் உடம்பும் மனமும் புத்துணர்வு பெறும்.
    நன்றி

  6. உழவாரப்பணி செய்ய மிக மிக அருமையான ஓர் கோவிலை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். உள்ளூரில் இருந்தான் நிச்சயம் வந்துவிடுவேன். கரும்பு தின்ன கசக்குமா?

    மலைப்பாதை மிகவும் ரம்மியமாக உள்ளது. படங்களை பார்க்கும்போது இந்த நொடி நாம் அங்கிருக்கமாட்டோமா என்று மனம் ஏங்குகிறது.

    குரங்குகளை மிக அழகாக படம்பிடிதிருக்கிரீர்கள். மரத்தில் கூட்டமாக உட்கார்ந்திருக்கும் புகைப்படம், ஒரு ஓவியம் போல கொள்ளை அழகு.

    சென்னை வரும்போது நிச்சயம் இந்த கோவிலை தரிசிப்போம்.

    தொடரட்டும் உங்கள் நற்பணி. உங்கள் முயற்சிக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர், சேலம்

  7. அருமையான கோவில்.அழகான சூழ்நிலை.
    எங்களுக்கும் சேர்த்து ஸ்ரீ நித்ய கல்யாண வெங்கடேச பெருமாளை வேண்டிக்கொள்ளுங்கள்.
    தொடரட்டும் உழவாரப்பணி.

  8. சுந்தர் சார் வணக்கம்

    மிகவும் அழகான அருமையான பதிவு

    மிக்க நன்றி

  9. புடவை கட்டிக்கொள்ளும் பெருமாள் இங்கு ஆப்பூர் “பிரசன்ன நித்திய கல்யாண வெங்கடேச பெருமாள்”என்று அழைக்கப்படுகிறார் ..அதுபோல ,புடவை கட்டிக்கொள்ளும் சிவபெருமான் அருளும் தலம் மயிலாடுதுறை அபயாம்பிகை அம்மன் உடனுறையும் “மயூரநாதர் ” திருத்தலம் ஆகும் .அம்பிகை மயில் உருவத்தில் பூஜை செய்த தலங்கள் இரண்டு. ஒன்று திருமயிலாப்பூர். மற்றொன்று பல்வேறு பெருமைகளையுடைய திருமயிலாடுதுறை. இங்கு நம் மயூரநாதர் புடவை கட்டி இருக்கும் அதிசயத்தை அங்கு உள்ள நம் “அபயாம்பிகை அம்மன்” சன்னதியின் அருகில் தனி சன்னதியில் உள்ள சிவலிங்கவடிவில் கண்டு அருள் பெறலாம் … இந்த லிங்கத்திற்கு சிவப்பு நிறத்திலேயே புடவை சாத்தப்படுகிறது. இந்தத் தலத்தில் மட்டுமே லிங்க உருவமாக உள்ள ஈசன்க்கு புடவை சாத்தி வழிபடப் படுகிறது.சிவ சிவாய சிவ …..

  10. மிக அருமையான பதிவு
    மனதிற்குள்ளே நெரூர் தரிசனம் செஇய்ததுபொல் பெருமாள் தரிசனமும் கிடைத்தது

    1. கோவிலைப் பற்றிய நீங்கள் உங்கள் வலைப்பூவில் அளித்திருந்த தகவல் எனக்கு பதிவு எழுத மிகவும் உபயோகமாய் இருந்தது. மிக்க நன்றி.

      – சுந்தர்

  11. Dear Sundar,

    Good narration of temple visit. Please give Pattar phone number also, so that any body who want to go can call him and he will be aware of. I feel this from your experience, as you called Pattar twice to inform your visit.

    Regds,
    Paz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *