Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, September 12, 2024
Please specify the group
Home > Featured > துதிக்காதவரையும் தடுத்தாட்கொள்ளும் தண்டாயுதபாணி – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் !

துதிக்காதவரையும் தடுத்தாட்கொள்ளும் தண்டாயுதபாணி – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் !

print
அகிலாண்ட கோடி பிராமாண்ட நாயகன் எனப்படும் முருகப் பெருமானின் பெருமையை நாளெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கலாம். வேதங்களுக்கெல்லாம் தலைவனான அந்த வேதநாயகத்துக்கே பிரணவத்தின் பொருளை உரைத்த சுவாமிநாதனாயிற்றே நம் கந்தவேல்.

DSC03063

ஸ்ரீ வைகுண்டதில் குமரகுருபரன் ஊமையாக இருந்தார். தனது குறை தீர திருச்செந்தூரில் 42 நாட்கள் விரதமிருந்தும் பலன் கிட்டாததால் கடலில் விழ எத்தனித்தபோது, அர்ச்சகர் வடிவில் வந்த முருகன் பூவைக் காட்ட, ஊமையாக இருந்த குமரகுருபரன் “பூமருவும்’ என்று தொடங்கி கந்தர் கலிவெண்பா பாடினான் என்றால், முருகனின் அருளை என்ன சொல்வது!

காஞ்சி குமரக்கோட்டத்திலும் கச்சியப்ப சிவாச்சாரியருக்கு “திகடச்சக்கர’ என ஆனைமுகன் பாடலை அடி எடுத்துக் கொடுத்து தமிழில் கந்தபுராணம் பாட வைத்தார். அக்கோவிலிலேயே அரங்கேற்றம் செய்தபோது அந்த ஆரம்ப அடியே இலக்கணக் குற்றம் என ஒரு புலவர் சொல்ல, முருகனே முதிர்ந்த புலவனாக வந்து தெளிவு ஈந்து முருக தரிசனமும் தந்தாரென்றால் கந்தன் கருணையை என்ன சொல்வது!

அதுமட்டுமா? தன்னை நினைக்காத அடியார்களுக்கு கூட நாடி வந்து அருள் செய்வான் ஆறுமுகன்.

Palani murugan in Raja alangaramபக்தனுக்கு மாலையிட்ட முருகப் பெருமான்!

ராமநாதபுரம் மாவட்டம் சதுர்வேதி மங்கலத்தை சேர்ந்தவர் பகழிக் கூத்தர். வைணவர். இவர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். எத்தனையோ மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெற்றும் அவர் வயிற்று வலி குணமாகவில்லை.

இந்த நிலையில் ஒரு நாள் திடீரென பகழிக்கூத்தர் கனவில் முருகன் தோன்றினார். “அன்பனே… என்னைப் பார். உன் வயிற்று வலி தீரும்” என்று கூறி மறைந்தார். கண் விழித்த பகழிக் கூத்தர் முருகனின் கருணையை எண்ணி கண்ணீர் விட்டு மனம் உருகினார்.

உடனடியாக முருகனை மனதுக்குள் நினைத்தபடி திருச்செந்தூருக்குப் புறப்பட்டார். கோவிலுக்குள் நுழைந்து முருகனை வேண்டினார். பிறகு அதி அற்புதமான தமிழில் முருகன் மீது “திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்” பாடினார். அதை முழுமையாக எழுதி பாடி முடித்ததும் பகழிக் கூத்தரின் வயிற்று வலி இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.

மிகவும் மகிழ்ச்சி அடைந்த பகழிக் கூத்தர் அந்த நூலை பாலசுப்பிரமணியனின் திருச்சன்னதியில் வைத்து வணங்கி அரங்கேற்றினார். என்றாலும் பகழிக் கூத்தரின் திறமை மதிக்கப்படவில்லை. அவர் வைணவர் என்று கூறி அவருக்கு உரிய மதிப்பும், மரியாதையும் கொடுக்காமல் புறக்கணித்தனர்.

பகழிக் கூத்தர் இதுபற்றி எல்லாம் கவலைப்படாமல் முருகனையே சதா துதித்துக் கொண்டிருந்தார் ஒரு நாள் இரவு பகழிக் கூத்தரின் திறமையையும் சகிப் புத்தன்மையையும் பாராட்டி முருகப்பெருமானே தன் கழுத்தில் இருந்த ரத்தினப் பதக்கத்தை அவருக்கு சூட்டிவிட்டார். மறுநாள் காலை நடை திறந்தவர்கள் முருகன் திருமேனியில் ரத்தின மாலை காணாது அதிர்ச்சி அடைந்தனர்.

கோவில் முழுக்க ரத்தின பதக்க மாலையைத் தேடினார்கள். எங்கும் கிடைக்கவில்லை. அப்போது கோவில் பிரகாரத்தில் இருந்து ஒரு அசரிரீ கேட்டது “நான் எனது அன்பன் பகழிக் கூத்தனுக்கு அளித்தேன்” என்று குரல் ஒலித்தது.

இதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த கோவில் பணியாளர்கள் பகழிக் கூத்தர் தங்கி இருந்த இடத்துக்கு ஓடோடிச் சென்றுப் பார்த்தனர். அங்கு பகழிக் கூத்தர் நன்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவர் கழுத்தில் முருகனின் ரத்தின பதக்க மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பிறகே பகழிக் கூத்தரின் பக்தி மீது எல்லோருக்கும் மரியாதை வந்தது. அவரைப் பல்லக்கில் ஏற்றி திருச்செந்தூர் முழுக்க சுற்றி வந்து சீரும் சிறப்பும் செய்தனர்.

தன்னை பற்றி சிந்தித்தேயிராத ஒருவருக்கே இப்படி அருள்செய்கிறான் அந்த ஆறுமுக அண்ணல் என்றால், தன்னையே அனுதினமும் மெய்யுருகி துதித்து வரும் அடியார்களை விட்டுவிடுவானா?

“யாமிருக்க பயமேன்!” என்பதே அவனது தாரக மந்திரமல்லவா?

சேல்பட்டு அழிந்தது செந்தூர் வயல்பொழில், தேங் கடம்பின்
மால்பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம், மா மயிலோன்
வேல்பட்டு அழிந்தது வேலையும், சூரனும், வெற்பும்! அவன்
கால்பட்டு அழிந்தது இங்கு, என் தலை மேல், அயன் கையெழுத்தே!!

என்பது அருணகிரிநாதர் வாக்கு.  கடைசி வரியை கவனியுங்கள்… “அவன்  கால்பட்டு அழிந்தது இங்கு, என் தலை மேல், அயன் கையெழுத்தே”… பிரம்மன் எழுதிய தலையெழுத்து முருகப் பெருமானின் கால் பட்டு அழிந்தது என்று  அருணகிரியார்.

எனவே கந்தனை நம்புங்கள். கவலை தீரும்.

================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : ஈரோடு அரசு இசைப்பள்ளியில் தேவார ஆசிரியராக இருக்கும், பார்வைத்திறன் சவால் கொண்ட திரு.ஞானப்பிரகாசம் அவர்கள்.

ஞானப்பிரகாசம் அவர்களின் சிறப்பு பற்றியும் அவர் செய்து வரும் திருமுறைத் தொண்டு குறித்தும் நேற்று நமது தளத்தில் விரிவான பதிவு அளிக்கப்பட்டுள்ளது. அவசியம் அந்த பதிவை அனைவரும்  படிக்கவேண்டும்.

DSCN4695

இவரது துணைவியார் தமிழ்செல்வி ஞானப்பிரகாசம் அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு நமது பிரார்த்தனைக் கிளப்பில் மகப்பேறு குறித்த கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திரு.ஞானப்பிரகாசம் அவர்கள் செய்து வரும் திருமுறைத் தொண்டு குறித்து கேள்விப்பட்டவுடனேயே அவரை சந்திக்கும் ஆவல் நமக்கு எழுந்து ஈரோடு சென்று அவரை சந்தித்துவிட்டு  வந்தோம்.

பிரார்த்தனைக்கு கோரிக்கை சமர்பித்தவரையே நமது பிரார்த்தனை குழுவுக்கு இறைவன் தலைமை ஏற்கச் செய்திருக்கிறான் அவன் திருவிளையாடலை என்னவென்று சொல்வது!!!

திருமதி.தமிழ்செல்வி ஞானப்பிரகாசம் அவர்களின் பிரார்த்தனை நிறைவேறி, நமது முந்தைய பிரார்த்தனைகள் கூட நிறைவேறப்போகிறது என்று அர்த்தம். பிறருக்காக பிரார்த்தனை செய்பவர்களது வினைப்பயன் தானாகவே கரைந்து ஒழிந்துவிடும். அதற்காகவே எம்பெருமான் கந்தவேல் இந்த திருவிளையாடலை நிகழ்த்தியுள்ளான். விரைவில் இந்த பேருண்மை அனைவருக்கும் விளங்கும்.

இந்த வார பிரார்த்தனைகளுக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

================================================================

மகளுக்கு செய்வினை பாதிப்பு நீங்க வேண்டும்!

ரைட்மந்த்ரா ஆசிரியர் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.

என் பெயர் கலா. என் மகள் மோகனா (20)  ராஜமுந்திரியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். நாங்கள் காக்கிநாடாவில் வசிக்கிறோம். நன்றாக படிக்கக் கூடிய என் மகள் அண்மைக் காலங்களாக படிப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார். ஞாபக மறதி, கவனச்சிதறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் அவளை ஆட்டிவைக்கிறது. படிப்பதையெல்லாம் மறந்து போகிறாள்.

சொத்துப் பிரச்சனையில் நெருங்கிய உறவினர்களே, என்னுடன் கூடப் பிறந்த சொந்தங்களே அவளுக்கு ஏதோ சூனியம் வைத்துவிட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக ஆதாரப்பூர்வ தகவல் ஒன்றும் எனக்கு கிடைத்தது. அது முதல் நிம்மதியின்றி தவிக்கிறோம்.

எங்களுக்கு துணை யாரும் இல்லை. அவ்வப்போது  தளத்தை வந்து பார்ப்பேன். மனதில் நம்பிக்கை பிறக்கும். இங்கு பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்தால் என் மகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் தீரும் என்று கருதுகிறேன்.

என் மகளுக்கு வைக்கப்பட்டுளால் செய்வினை நீங்கி, அவளின் எதிர்காலம் நோய்நொடியின்றி சிறப்பாக அமையவும், செய்வினை வைத்தவர்களுக்கு இறைவன் தக்க பாடத்தை புகட்டவேண்டும் என்றும் இறைவனை வேண்டிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

-கலா கோவிந்தசாமி,
காக்கிநாடா,
ஆந்திரப் பிரதேசம்

================================================================

பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர வேண்டும் !

வணக்கம் சார்…

நான் நம் தளத்தின் நீண்ட நாள் வாசகன். வரும் Sunday பிரார்த்தனையில் ஒரு நண்பருடையே கோரிக்கையும் சேர்த்து பிராத்தனை செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன்.

பிரார்த்தனை விவரம்:  ஒரு வருடமாக பிரிந்து இருக்கும் கணவன் மனைவி ஓன்று சேர வேண்டும்.  அவர் பெயர் பெயர் ராமு. சென்னையை  சேர்ந்தவர்.

தன் மனைவியுடன் அவர் மீண்டும் சேர்ந்து, ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் வாழவேண்டும் என்பதே என் கோரிக்கை.

-காளிமுத்து,
கருடா டிரேடர்ஸ்,
சேலம்

================================================================

முதல் பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியுள்ள திருமதி.கலா சில மாதங்களுக்கு முன்பே நம்மிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு தனது மகளுக்கு பரீட்சையின் போது சில மாணவர்களுக்கு ஏற்படும் EXAM FEVER ஏற்படுவதாகவும், நன்றாக படிக்கக்கூடிய தன் மகளுக்கு இப்படி ஏற்படுவது தனக்கு கவலையை ஏற்படுத்துவதாகவும் கூறி கண்ணீர் வடித்தார். அதுசமயம் அவருக்கு ஆறுதல் கூறி, தைரியமும் கூறி, மகளுக்கு தேர்வு தொடர்பாகவோ அதில் எடுக்கும் மதிப்பெண்கள் தொடர்பாகவோ எந்தவித நிர்பந்தத்தையும் கொடுக்கவேண்டாம். ரிசல்ட்டை பற்றியும் கவலை இல்லை. நீ என்ன மார்க்குகள் வாங்கினாலும் சந்தோஷமே என்று ஊக்கம் கொடுக்கும்படி சொன்னோம்.  மேலும் மன தைரியத்தை அளிக்கும் சில பதிகங்கள் மற்றும் ஸ்லோகங்களையும் அவரை படிக்கச் சொன்னோம்.

இந்நிலையில், சென்ற சனிக்கிழமை நாம் பேரம்பாக்கம் நரசிம்மர் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது, நம்மை அலைபேசியில் தொடர்பு கொண்ட திருமதி.கலா, தன் மகளுக்கு பிரச்னைகள் அதிகரித்திருப்பதாகவும் அவளுக்கு யாரோ சூனியம் வைத்திருப்பதாக தாம் சந்தேகிப்பதாகவும் கூறி, மகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை குறித்து கண்ணீர் வடித்தார். அவருக்கு ஆறுதல் கூறிய நாம், உடனடியாக அருகில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனதிற்கு தனது மகளை அழைத்துச் சென்று பிரதக்ஷனம் வந்து அங்கு வழங்கப்படும் பிரசாதத்தை உட்கொள்ளும்படி கேட்டுக்கொண்டோம். மேலும் பிரார்த்தனை கிளப்பில் பதிவு வெளியிட்ட பின்னர் கூறப்படும் எளிய பரிகாரங்களையும் செய்து வரும்படி கேடுக்கொண்டுள்ளோம்.

பொதுவாக இதுபோன்ற செய்வினைகள் சொத்துத் தகராறு காரணமாகவே செய்யப்படுகின்றன. எனவே சொந்தங்களுடன் சொத்துத் தகராறு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

அடுத்த பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருப்பவர் திரு.காளிமுத்து. நிறைய இருக்கிறது இவரைப் பற்றி பேச. இவரைப் பற்றி வேறு ஒரு நாள் பதவளிக்கிறோம். இவர் ஒரு மாற்றுத் திறனாளி. தன்னம்பிக்கை மிக்கவர். நம் தளத்தின் வாசகர். தனது நண்பருக்கு குடும்பப் பிரச்னை என்று தெரிந்தவுடன், நமது தளத்தை பற்றி பரிந்துரைத்து அவரிடம் ஒப்புதல் பெற்று அவருக்காக இங்கு பிரார்த்தனையை சமர்பித்திருக்கிறார். பிறர் நலன் கருதும் அவருக்கு இறைவன் ஒரு குறையுமில்லாத வாழ்வை தரவேண்டும்.

================================================================

பொது பிரார்த்தனை

பெருகிவரும் சாலை விபத்துக்கள் குறையவேண்டும்!

தமிழகம் பல விதங்களில் இன்று முன்னனி வகித்து வருகிறது. ஆனால், இந்த முன்னணி பெருமை கொள்ளக்கூடிய முன்னணி  அல்ல.  நாம் தலைகுணிய வேண்டிய முன்னணி. மதுவிற்பனையில் முன்னணி, விபச்சாரத்தில் முன்னணி அடுத்து சாலை விபத்தில் முன்னணி.

2008032154220801செய்தித் தாளை திறந்தாலே குறைந்தது ஒரு மிகப் பெரிய சாலை விபத்து பற்றிய செய்தியை படிக்க நேர்கிறது. அந்த நேரம், பலியான அந்த ஜீவன்களுக்காக நாம் பிரார்த்தித்துக் கொண்டாலும் இதற்கு நிரந்தரத் தீர்வு தான் என்ன ? சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணங்கள் என்னவென்றால் ஓட்டுநர்களின் கவனக்குறைவு, மிதமிஞ்சிய வேகம், சாலை விதிகளை பின்பற்றாமை, குடித்துவிட்டு வண்டி ஒட்டுதல். இவை தவிர தமிழகத்தில் விபத்துக்களுக்கு இன்னொரு முக்கிய காரணம் உண்டு. மோசமான சாலைகள்! ஐந்து விபத்து நடந்தால் அவற்றில் நான்கு இந்த ஒரு வழிச் சாலைகளில் தான் நடக்கிறது. (நேருக்கு நேர் வாகனங்கள் மோதி விபத்தாவது).

தமிழகத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல சாலைகள் இன்னும் இரு வழிப் பாதையாக்கப்படாமல் ஒரு வழிச் சாலையாகவே உள்ளன. (அதாவது ஒரே சாலையில் எதிரெதிரே வாகனங்கள் செல்வது). ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்ட பெரும்பாலான சாலைகளில் தான் நாம் இன்னும் பயணம் செய்துகொண்டிருக்கிறோம். அன்று இருந்த மக்கட் தொகை என்ன? இன்று இருக்கும் மக்கட் தொகை என்ன? ஊரும் நகரமும் வளர்வதற்கு ஏற்ப, சாலை வசதிகளும் மேம்படவேண்டும். அப்போது தான் விபத்துக்கள் குறையும்.

IMG_8193

நாட்டில் வாகனங்களில் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. போக்குவரத்து நெரிசல்களால் விபத்துகளும், அதில் இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றன. தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் சாலை விபத்துகளில் 5,078 பேர் இறந்துள்ளனர். சென்னையில் மட்டுமே 366 பேர் இறந்துள்ளதாக அரசு புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலைட் மதுபார் திறப்பதிலும், அடுத்த இலவசம் என்ன கொடுக்கலாம் என்று சிந்திப்பதிலும் கவனம் செலுத்தும் அரசு, சாலை வசதிகளை மேம்படுத்துவதில் சிறிது கவனம் செலுத்தவேண்டும். சாலை வசதிகளை மேம்படுத்த நம் மாநிலத்தில் எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படுவதில்லை என்பதே உண்மை. பல  திட்டங்கள் அறிவிப்பு அளவிலேயே நிற்கின்றன. நடைபெறாத திட்டத்தையெல்லாம் நடைபெற்றதாக கூறி, பத்திரிக்கைகளில் தவறான விளம்பரம் தேடிக்கொள்கின்றனர்.

இறைவனிடம் முறையிடுவதைத் தவிர வேறு வழி இல்லை. தமிழகத்தில் சாலை வசதிகள் மேம்படவேண்டும். விபத்துக்கள் குறைந்து அனைவருக்கும் பாதுகாப்பான சாலைப் பயணம் கிடைக்கவேண்டும் என்பதே இந்த வாரம் பொது பிரார்த்தனை.

================================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgகாக்கிநாடாவை சேர்ந்த திருமதி.கலா அவர்களின் மகள் மோகனாவுக்கு செய்வினை பாதிப்பு நீங்கி அவர் தனது படிப்பில் முழு கவனம் செலுத்தவும், அந்த குடும்பம் பாதுகாப்பாகவும் சந்தோஷமாகவும் இருக்கவும், திரு.காளிமுத்து அவர்களின் நண்பர் ராமு தனது துணைவியுடன் மீண்டும் சேர்ந்து சந்தோஷமாக வாழவும், அனைவரும் போக்குவரத்து விதிகளை மதித்து, பெருகிவரும் சாலை விபத்துக்கள் குறைந்து, மக்கள் பாதுக்காப்பான பயணம் மேற்கொள்ளும் வகையில் சாலை வசதிகள் நம் தமிழகத்தில் மேம்படவும் எல்லாம் இறைவனை வேண்டுவோம். அதே போன்று இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றிருக்கும் ‘பண்ணிசைச் சுடர் மணி’ திரு.ஞானப்பிரகாசம் அவர்களும் எல்லா வளங்களும் செல்வங்களும் பெற்றும் சந்தோஷமாக வாழ்ந்து தேவாரத் தொண்டை தொய்வின்றி செய்துவரவேண்டும் என்றும் இறைவனை பிரார்த்திப்போம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : ஜூலை 20,  2014 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131

=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் :  ‘மந்த்ரலாய முரசு’ திரு.மானாமதுரை சேதுராமன் அவர்களின் புதல்வர் திரு.லக்ஷ்மி நரசிம்மன் அவர்கள்.

10 thoughts on “துதிக்காதவரையும் தடுத்தாட்கொள்ளும் தண்டாயுதபாணி – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் !

  1. வணக்கம்

    முருகனைக் கும்பிட்டு முறையிட்ட பேருக்கு

    முற்றிய வினை தீருமே உடல் பற்றிய பிணி ஆறுமே

    இறைவன் திருவருளால் அனைவரும் நலமாய் இருக்க பிரார்த்திப்போம்.

    தாமரை வெங்கட்

  2. “அவன்
    கால்பட்டு அழிந்தது இங்கு, என் தலை மேல், அயன் கையெழுத்தே “உண்மை ..அருமை…ஆடி கிருத்திகை நாளில் அருமையான பதிவு …சிவாய சிவா

  3. சுப்ரமண்யோம் சுப்ரமண்யோம் சுப்ரமண்யோம்

    வேலு மயிலும் துணை

    ஓம் ஸ்ரீ சுப்ரமண்யாய கார்த்திகேயாய ஸ்கந்தாய நமஹ

  4. முருகனைப் பற்றிய கதையை போட்டு எங்களை மகிழ்வித்து விட்டீர்கள். பகழிக் கூத்தரின் கதையை இந்த பதிவின் மூலம் இறைவான் தடுத்தாட்கொண்டதை தெரிந்து கொண்டோம்.

    இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திருமதி அண்ட் திரு ஞானப்ரகாசம் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.

    அவர்களுது முதிய பிரார்த்தனை கிளப்பில் வாய்த்த கோரிக்கையை இறைவன் நிறைவேற்றவேண்டும்.

    இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் கலா அவர்கள் மகள் மோகனா படிப்பில் கவனம் செளுத்ஹி நன்றாக படித்து எதிர்காலம் சிறப்பாக இருக்கவும், திரு காலி முது அவர்களின் நண்பர் திரு ராமு தனது மனையுடன் சிறப்பாக இல்லறம் நடத்தவும் சாலை விபத்துகள் குறையவும் பிரார்த்தனை செய்வோம். பிரார்த்தனை செய்யும் சமயம் மகா பெரியவ நம்முடன் இருப்பார்.

    லோக சமஸ்த சுகினோ பவந்து

    ராம் ராம் ராம்
    நன்றி
    உமா

  5. நாங்கள் எதிபார்க்காத ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளீர்கள். நிச்சயமாக அனைவரது கோரிக்கைகளும் மகாப்பெரியவா அவர்களின் திருவருளாலும் தொண்டைமண்டல ஆதீனம் குருமகா சன்னிதானம் திரு.ஞானப்பிரகாச தேசிக சுவாமிகளின் குருவருளாலும் நிறைவேறும் எனும் நம்பிக்கையுள்ளது. தனக்காக இறைவனிடம் வேண்டுபவர்கள் சுயநலம் மிக்கவர்கள். ஆனால் மற்றவர்களுக்களின் துயரம் தீர இறையை நாடுபவர்களே மனிதர்கள். நமது குழுவில் இருக்கும் அனைவருமே மனிதர்களில் புனிதர்கள். அவர்களுக்குத் தலைமையேற்று இவ்வாரம் பிரார்த்தனை செய்யும் பணியை வழங்கியுள்ள அனைவருக்கும் நன்றி. ”வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்”, என்று பாடியருளிய வள்ளல் பெருமானார் ”அன்பர் பணி செய்ய ஆளாக்கி விட்டுவிட்டாய்”, எனவும் அருளியுள்ளார். அவ்வாறான பணியை எமக்கு அளித்தமைக்கு மீண்டும் நன்றி!.

  6. இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திருமதி & திரு ஞானப்பி ரகாசம் அவர்களுக்கு மிக நன்றி. அவர்களது பிரார்த்தனை நிறைவேறி நீடுடி வாழ வேண்டும்.

    இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் கலா அவர்கள் மகள் மோகனா படிப்பில் கவனம் செலுத்தி நன்றாக படித்து எதிர்காலம் சிறப்பாக இருக்கவும், திரு காளிமுத்து அவர்களின் நண்பர் திரு ராமு தனது மனையுடன் சிறப்பாக இல்லறம் நடத்தவும்,

    சாலை விபத்துகள் குறையவும் காஞ்சி பெரியவாவை வணங்கி மனம் உருகி பிரார்த்தனை செய்வோம்.

  7. கதை மிக மிக அருமை. எப்படித் தான் ஒவ்வொரு வாரமும் இது போன்ற முத்து முத்தான நாங்கள் கேள்விப்படாத கதைகளை தருகிறீர்களோ. என் குழந்தைகளுக்கு சொல்ல ஒரு அருமையான கதை இன்று கிடைத்தது.

    பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றுள்ள ஞானப்பிரகாசம் அவர்களை பற்றி தெரிந்துகொள்ளும் போதே சிலிர்ப்பாக இருக்கிறது. இன்று காலை தான் ஊரிலிருந்து வந்தேன். இனி தான் எல்லா பதிவுகளையும் படிக்கவேண்டும்.

    பிரார்த்தனைக்கு கோரிக்கை அளித்டிருப்பவர்கள் அனைவரின் பிரார்த்தனையும், குறிப்பாக தலைமை ஏற்றுள்ள திரு.ஞானபிரகாசம் மற்றும் திருமதி.தமிழ்செல்வி ஞானபிரகாசம் அவர்களின் பிரார்த்தனை நிறைவேறவேண்டும்.

    முருகன் அருள்புரிவானாக. மகா பெரியவ திருவடிகள் சரணம்.

    – பிரேமலதா மணிகண்டன்
    மேட்டூர்.

  8. காக்கிநாடாவை சேர்ந்த திருமதி.கலா அவர்களின் மகள் மோகனாவுக்கு செய்வினை பாதிப்பு நீங்கி அவர் தனது படிப்பில் முழு கவனம் செலுத்தவும், அந்த குடும்பம் பாதுகாப்பாகவும் சந்தோஷமாகவும் இருக்கவும், திரு.காளிமுத்து அவர்களின் நண்பர் ராமு தனது துணைவியுடன் மீண்டும் சேர்ந்து சந்தோஷமாக வாழவும், அனைவரும் போக்குவரத்து விதிகளை மதித்து, பெருகிவரும் சாலை விபத்துக்கள் குறைந்து, மக்கள் பாதுக்காப்பான பயணம் மேற்கொள்ளும் வகையில் சாலை வசதிகள் நம் தமிழகத்தில் மேம்படவும் எல்லாம் இறைவனை வேண்டுவோம். அதே போன்று இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றிருக்கும் ‘பண்ணிசைச் சுடர் மணி’ திரு.ஞானப்பிரகாசம் அவர்களும் எல்லா வளங்களும் செல்வங்களும் பெற்றும் சந்தோஷமாக வாழ்ந்து தேவாரத் தொண்டை தொய்வின்றி செய்துவரவேண்டும் என்றும் இறைவனை பிரார்த்திப்போம்.

  9. காளிமுத்து அய்யா அவர்களின் நண்பர் ராமு அய்யா ஒருமுறை காலையில் திருவையாறு அருகில் உள்ள பெரும்புலியூர்[9443447826]சவுந்தரநாயகி உடனுறை வியாக்ரபுரீஸ்வரர் திருகோயில் சென்று வழிபட்டு ,அங்கு தனி சன்னதியில் உள்ள உமாசிவம் [உமா சமேத மூர்த்தி ]யை அபிசேகம் செய்து ,நெய் தீபம் ஏற்றி வழிபட்,வாராகி ,பைரவர் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் மீண்டும் தம்பதியர் ஓன்று கூடலாம் .பின்பு அருகில் உள்ள திருக்கூடலூர் [ஆடுதுறை பெருமாள் கோயில்].ஜெகத்ரட்சக பெருமாள் திருகோயில் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடவும் ..பின்பு மாலையில் பட்டீஸ்வரம் அருகில் உள்ள திருச்சத்திமுற்றம் பெரியநாயகி உடனுறை தழுவக்குழைந்த நாதர் திருகோயில் சென்று அங்கு உள்ள முறைப்படி வழிபாடு செய்யவும் ..தொடர்ந்து பைரவர் வழிபாடு செய்து வரவும்,அது சமயம் அசைவம்,மது விலக்கிவிடவும்.
    …பதிகம்களை படித்து வரவும் ……
    திருச்சிற்றம்பலம்

    மாதர்ப் பிறைக்கண்ணி யானை
    மலையான் மகளொடும் பாடிப்
    போதொடு நீர்சுமந் தேத்திப்
    புகுவா ரவர்பின் புகுவேன்
    யாதுஞ் சுவடு படாமல்
    ஐயா றடைகின்ற போது
    காதன் மடப்பிடி யோடுங்
    களிறு வருவன கண்டேன்
    கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.

    போழிளங் கண்ணியி னானைப்
    பூந்துகி லாளொடும் பாடி
    வாழியம் போற்றியென் றேத்தி
    வட்டமிட் டாடா வருவேன்
    ஆழி வலவனின் றேத்தும்
    ஐயா றடைகின்ற போது
    கோழி பெடையொடுங் கூடிக்
    குளிர்ந்து வருவன கண்டேன்
    கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.

    எரிப்பிறைக் கண்ணியி னானை
    யேந்திழை யாளொடும் பாடி
    முரித்த இலயங்க ளிட்டு
    முகமலர்ந் தாடா வருவேன்
    அரித்தொழு கும்வெள் ளருவி
    ஐயா றடைகின்ற போது
    வரிக்குயில் பேடையொ டாடி
    வைகி வருவன கண்டேன்
    கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.

    பிறையிளங் கண்ணியி னானைப்
    பெய்வளை யாளொடும் பாடித்
    துறையிளம் பன்மலர் தூவித்
    தோளைக் குளிரத் தொழுவேன்
    அறையிளம் பூங்குயி லாலும்
    ஐயா றடைகின்ற போது
    சிறையிளம் பேடையொ டாடிச்
    சேவல் வருவன கண்டேன்
    கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.

    ஏடு மதிக்கண்ணி யானை
    ஏந்திழை யாளொடும் பாடிக்
    காடொடு நாடு மலையுங்
    கைதொழு தாடா வருவேன்
    ஆட லமர்ந்துறை கின்ற
    ஐயா றடைகின்ற போது
    பேடை மயிலொடுங் கூடிப்
    பிணைந்து வருவன கண்டேன்
    கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.

    தண்மதிக் கண்ணியி னானைத்
    தையல்நல் லாளொடும் பாடி
    உண்மெலி சிந்தைய னாகி
    உணரா வுருகா வருவேன்
    அண்ண லமர்ந்துறை கின்ற
    ஐயா றடைகின்ற போது
    வண்ணப் பகன்றிலொ டாடி
    வைகி வருவன கண்டேன்
    கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.

    கடிமதிக் கண்ணியி னானைக்
    காரிகை யாலொடும் பாடி
    வடிவொடு வண்ண மிரண்டும்
    வாய்வேண் டுவசொல்லி வாழ்வேன்
    அடியிணை ஆர்க்குங் கழலான்
    ஐயா றடைகின்ற போது
    இடிகுர லன்னதோர் ஏனம்
    இசைந்து வருவன கண்டேன்
    கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.

    விரும்பு மதிக்கண்ணி யானை
    மெல்லிய லாளொடும் பாடிப்
    பெரும்புலர் காலை யெழுந்து
    பெறுமலர் கொய்யா வருவேன்
    அருங்கலம் பொன்மணி யுந்தும்
    ஐயா றடைகின்ற போது
    கருங்கலை பேடையொ டாடிக்
    கலந்து வருவன கண்டேன்
    கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.

    முற்பிறைக் கண்ணியி னானை
    மொய்குழ லாளொடும் பாடிப்
    பற்றிக் கயிறறுக் கில்லேன்
    பாடியும் ஆடா வருவேன்
    அற்றருள் பெற்றுநின் றாரோ
    டையா றடைகின்ற போது
    நற்றுணைப் பேடையொ டாடி
    நாரை வருவன கண்டேன்
    கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.

    திங்கள் மதிக்கண்ணி யானைத்
    தேமொழி யாளொடும் பாடி
    எங்கருள் நல்குங்கொ லெந்தை
    எனக்கினி யென்னா வருவேன்
    அங்கிள மங்கைய ராடும்
    ஐயா ரடைகின்ற போது
    பைங்கிளி பேடையொ டாடிப்
    பறந்து வருவன கண்டேன்
    கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.

    வளர்மதிக் கண்ணியி னானை
    வார்குழ லாளொடும் பாடிக்
    களவு படாததோர் காலங்
    காண்பான் கடைக்கணிக் கின்றேன்
    அளவு படாததோ ரன்போ
    டையா றடைகின்ற போது
    இளமண நாகு தழுவி
    ஏறு வருவன கண்டேன்
    கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.

    ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
    திருச்சிற்றம்பலம்

    திருவேயென் செல்வமே தேனே வானோர்
    செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதி மிக்க
    உருவேஎன் னுறவேஎன் ஊனே ஊனின்
    உள்ளமே உள்ளத்தி னுள்ளே நின்ற
    கருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற்
    கருமணியே மணியாடு பாவாய் காவாய்
    அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம்
    ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

    மாற்றேன் எழுத்தஞ்சும் என்றன் நாவின்
    மறவேன் திருவருள்கள் வஞ்ச நெஞ்சின்
    ஏற்றேன் பிறதெய்வம் எண்ணா நாயேன்
    எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால்
    மேற்றான்நீ செய்வனகள் செய்யக் கண்டு
    வேதனைக்கே யிடங்கொடுத்து நாளு நாளும்
    ஆற்றேன் அடியேனை அஞ்சே லென்னாய்
    ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

    வரையார் மடமங்கை பங்கா கங்கை
    மணவாளா வார்சடையாய் நின்றன் நாமம்
    உரையா உயிர்போகப் பெறுவே னாகில்
    உறுநோய்வந் தேத்தனையு முற்றா லென்னே
    கரையா நினைந்துருகிக் கண்ணீர் மல்கிக்
    காதலித்து நின்கழலே யேத்து மன்பர்க்
    கரையா அடியேனை அஞ்சே லென்னாய்
    ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

    சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவச்
    சிலைவளைவித் துமையவளை யஞ்ச நோக்கிச்
    கலித்தாங் கிரும்பிடிமேற் கைவைத் தோடுங்
    களிறுரித்த கங்காளா எங்கள் கோவே
    நிலத்தார் அவர்தமக்கே பொறையாய் நாளும்
    நில்லா வுயிரோம்பு நீத னேநான்
    அலுத்தேன் அடியேனை அஞ்சே லென்னாய்
    ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

    நறுமா மலர்கொய்து நீரின் மூழ்கி
    நாடோறும் நின்கழலே யேத்தி வாழ்த்தித்
    துறவாத துன்பந் துறந்தேன் தன்னைத்
    சூழுலகில் ஊழ்வினைவந் துற்றா லென்னெ
    உறவாகி வானவர்கள் முற்றும் வேண்ட
    ஒலிதிரைநீர்க் கடல்நஞ்சுண் டுய்யக் கொண்ட
    அறவா அடியேனை அஞ்சே லென்னாய்
    ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

    கோன்நா ரணன் அங்கத் தோள்மேற் கொண்டு
    கொழுமலரான் தன்சிரத்தைக் கையி லேந்திக்
    கானார் களிற்றுரிவைப் போர்வை மூடிக்
    கங்காள வேடராய் எங்குஞ் செல்வீர்
    நானார் உமக்கோர் வினைக்கே டனேன்
    நல்வினையுந் தீவினையு மெல்லாம் முன்னே
    ஆனாய் அடியேனை அஞ்சே லென்னாய்
    ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

    உழையுரித்த மானுரிதோ லாடை யானே
    உமையவள்தம் பெருமானே இமையோர் ஏறே
    கழையிறுத்த கருங்கடல்நஞ் சுண்ட கண்டா
    கயிலாய மலையானே உன்பா லன்பர்
    பிழைபொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்றன்
    கடனன்றே பேரருளுள் பால தன்றே
    அழையுறுத்து மாமயில்க ளாலுஞ் சோலை
    ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

    உலந்தார் தலைகலனொன் றேந்தி வானோ
    ருலகம் பலிதிரிவாய் உன்பா லன்பு
    கலந்தார் மனங்கவருங் காத லானே
    கனலாடுங் கையவனே ஜயா மெய்யே
    மலந்தாங் குயிர்ப்பிறவி மாயக் காய
    மயக்குளே விழுந்தழுந்தி நாளும் நாளும்
    அலந்தேன் அடியேனை அஞ்சே லென்னாய்
    ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

    பல்லார்ந்த வெண்டலை கையி லேந்திப்
    பசுவேறி யூரூரன் பலிகொள் வானே
    கல்லார்ந்த மலைமகளும் நீயு மெல்லாங்
    கரிகாட்டி லாட்டுகந்தீர் கருதீ ராகில்
    எல்லாரு மெந்தன்னை யிகழ்வர் போலும்
    ஏழையமண் குண்டர்சாக் கியர்க்ளொன்றுக்
    கல்லாதார் திறத்தொழிந்தேன் அஞ்சே லென்னாய்
    ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

    துறந்தார்ந் தூநெறிக்கண் சென்றே னல்லேன்
    துணைமாலை சூட்டநான் தூயே னல்லேன்
    பிறந்தேன்நின் திருவருளே பேசி னல்லாற்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
    செறிந்தார் மதிலிலங்கைக் கோமான் தன்னைச்
    செறுவரைக்கீ ழடர்த்தருளிச் செய்கை யெல்லாம்
    அறிந்தேன் அடியேனை அஞ்சே லென்னாய்
    ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

    திருச்சிற்றம்பலம்

  10. கலா கோவிந்தசாமி அவர்கள் ,தங்கள் பெண் மீண்டும் நன்றாக படிக்க,தினமும் வீட்டில் “சகலகலாவல்லி மாலை “[குமரகுருபரர்]படித்து வரவும் ….செய்வினை அகன்று ,செய்வினை வைத்தவர்களுக்கு இறைவன் தக்க பாடத்தை புகட்ட சம்பந்தரின் “செய்யனே ….”பதிகத்தை படித்து வரவும் .அசைவம் கூடாது …கண்டிப்பாக குலதெய்வம் கோயில் சென்று வழிபடவும் …பின்பு குலதெய்வம் கோயில் மண் எடுத்து வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபடவும் …ஒருமுறை திருச்சி சமயபுரம் அருகில் உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திங்கள் கிழமை சென்று அம்மனுக்கு [காலை 11 மணிக்கு அபிசேகம் நடக்கும் ]பால் அபிசேகம் செய்து வழிபடவும் ….தினமும் பைரவர் வழிபாடு செய்து வரவும் ….

    நடைமரு திரிபுரம் எரியுண நகைசெய்த
    படைமரு தழலெழ மழுவல பகவன்
    புடைமரு திளமுகில் வளமமர் பொதுளிய
    இடைமரு தடையநம் இடர்கெடல் எளிதே.

    மழைநுழை மதியமொ டழிதலை மடமஞ்ஞை
    கழைநுழை புனல்பெய்த கமழ்சடை முடியன்
    குழைநுழை திகழ்செவி அழகொடு மிளிர்வதொர்
    இழைநுழை புரியணல் இடமிடை மருதே.

    அருமையன் எளிமையன் அழல்விட மிடறினன்
    கருமையின் ஒளிபெறு கமழ்சடை முடியன்
    பெருமையன் சிறுமையன் பிணைபெணொ டொருமையின்
    இருமையும் உடையணல் இடமிடை மருதே.

    பொரிபடு முதுகுற முளிகளி புடைபுல்கு
    நரிவளர் சுடலையுள் நடமென நவில்வோன்
    வரிவளர் குளிர்மதி யொளிபெற மிளிர்வதொர்
    எரிவளர் சடையணல் இடமிடை மருதே.

    வருநல மயிலன மடநடை மலைமகள்
    பெருநல முலையிணை பிணைசெய்த பெருமான்
    செருநல மதிலெய்த சிவனுறை செழுநகர்
    இருநல புகழ்மல்கும் இடமிடை மருதே.

    கலையுடை விரிதுகில் கமழ்குழல் அகில்புகை
    மலையுடை மடமகள் தனையிடம் உடையோன்
    விலையுடை அணிகலன் இலனென மழுவினொ
    டிலையுடை படையவன் இடமிடை மருதே.

    வளமென வளர்வன வரிமுரல் பறவைகள்
    இளமணல் அணைகரை யிசைசெயும் இடைமரு
    துளமென நினைபவர் ஒலிகழல் இணையடி
    குளமண லுறமூழ்கி வழிபடல் குணமே.

    மறையவன் உலகவன் மதியவன் மதிபுல்கு
    துறையவன் எனவல அடியவர் துயரிலர்
    கறையவன் மிடறது கனல்செய்த கமழ்சடை
    இறையவன் உறைதரும் இடமிடை மருதே.

    மருதிடை நடவிய மணிவணர் பிரமரும்
    இருதுடை யகலமொ டிகலின ரினதெனக்
    கருதிடல் அரியதொர் உருவொடு பெரியதொர்
    எருதுடை யடிகள்தம் இடமிடை மருதே.

    துவருறு விரிதுகில் உடையரும் அமணரும்
    அவருறு சிறுசொலை நயவன்மின் இடுமணல்
    கவருறு புனலிடை மருதுகை தொழுதெழும்
    அவருறு வினைகெடல் அணுகுதல் குணமே.

    தடமலி புகலியர் தமிழ்கெழு விரகினன்
    இடமலி பொழிலிடை மருதினை யிசைசெய்த
    படமலி தமிழிவை பரவவல் லவர்வினை
    கெடமலி புகழொடு கிளரொளி யினரே.[சம்பந்தர்]

    ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

    திருச்சிற்றம்பலம்

    செய்ய னேதிரு ஆலவாய் மேவிய
    ஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப்
    பொய்ய ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
    பைய வேசென்று பாண்டியற் காகவே.

    சித்த னேதிரு ஆலவாய் மேவிய
    அத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனை
    எத்த ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
    பத்தி மன்தென்னன் பாண்டியற் காகவே.

    தக்கன் வேள்வி தகர்த்தருள் ஆலவாய்ச்
    சொக்க னேயஞ்ச லென்றருள் செய்யெனை
    எக்க ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
    பக்க மேசென்று பாண்டியற் காகவே.

    சிட்ட னேதிரு ஆலவாய் மேவிய
    அட்ட மூர்த்திய னேயஞ்ச லென்றருள்
    துட்ட ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
    பட்டி மன்தென்னன் பாண்டியற் காகவே.

    நண்ண லார்புரம் மூன்றெரி ஆலவாய்
    அண்ண லேயஞ்ச லென்றருள் செய்யெனை
    எண்ணி லாவம ணர்கொளு வுஞ்சுடர்
    பண்ணி யல்தமிழ்ப் பாண்டியற் காகவே.

    தஞ்ச மென்றுன் சரண்புகுந் தேனையும்
    அஞ்ச லென்றருள் ஆலவா யண்ணலே
    வஞ்சஞ் செய்தம ணர்கொளு வுஞ்சுடர்
    பஞ்ச வன்தென்னன் பாண்டியற் காகவே.

    செங்கண் வெள்விடை யாய்திரு ஆலவாய்
    அங்க ணாவஞ்ச லென்றருள் செய்யெனைக்
    கங்கு லார்அமண் கையரிடுங் கனல்
    பங்க மில்தென்னன் பாண்டியற் காகவே.

    தூர்த்தன் வீரந் தொலைத்தருள் ஆலவாய்
    ஆத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனை
    ஏத்தி லாஅம ணர்கொளு வுஞ்சுடர்
    பார்த்தி வன்தென்னன் பாண்டியற் காகவே.

    தாவி னான்அயன் தானறி யாவகை
    மேவி னாய்திரு ஆலவா யாயருள்
    தூவி லாஅம ணர்கொளு வுஞ்சுடர்
    பாவி னான்தென்னன் பாண்டியற் காகவே.

    எண்டி சைக்கெழில் ஆலவாய் மேவிய
    அண்ட னேயஞ்ச லென்றருள் செய்யெனைக்
    குண்ட ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
    பண்டி மன்தென்னன் பாண்டியற் காகவே.

    அப்பன் ஆலவா யாதி யருளினால்
    வெப்பந் தென்னவன் மேலுற மேதினிக்
    கொப்ப ஞானசம் பந்தன் உரைபத்துஞ்
    செப்ப வல்லவர் தீதிலாச் செல்வரே.
    [சம்பந்தர்]

    திருச்சிற்றம்பலம்
    ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
    திருச்சிற்றம்பலம்

    சிட்ட னைச்சிவ னைச்செழுஞ் சோதியை
    அட்ட மூர்த்தியை ஆல நிழலமர்
    பட்ட னைத்திருப் பாண்டிக் கொடுமுடி
    நட்ட னைத்தொழ நம்வினை நாசமே.

    பிரமன் மாலறி யாத பெருமையன்
    தரும மாகிய தத்துவன் எம்பிரான்
    பரம னாருறை பாண்டிக் கொடுமுடி
    கரும மாகத் தொழுமட நெஞ்சமே.

    ஊச லாளல்லள் ஒண்கழ லாளல்லள்
    தேச மாந்திருப் பாண்டிக் கொடுமுடி
    ஈச னேயெனும் இத்தனை யல்லது
    பேசு மாறறி யாளொரு பேதையே.

    தூண்டி யசுடர் போலொக்குஞ் சோதியான்
    காண்ட லுமெளி யன்னடி யார்கட்குப்
    பாண்டிக் கொடுமுடி மேய பரமனைக்
    காண்டு மென்பவர்க் கேதுங் கருத்தொணான்.

    நெருக்கி யம்முடி நின்றிசை வானவர்
    இருக்கொ டும்பணிந் தேத்த இருந்தவன்
    திருக்கொ டுமுடி யென்றலுந் தீவினைக்
    கருக்கெ டுமிது கைகண்ட யோகமே[அப்பர்]
    ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *