Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, August 10, 2022
Please specify the group
Home > Featured > அர்த்தமுள்ள வாழ்க்கை & உண்மையான பக்தி! – Rightmantra Prayer Club

அர்த்தமுள்ள வாழ்க்கை & உண்மையான பக்தி! – Rightmantra Prayer Club

print
புராதன பெருமை மிக்க அந்த ஊரில் உள்ள சிவன் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. மிகப் பழமையான கோவில் என்பதால் எங்கெங்கிருந்தோ பக்தர்கள் அன்னாபிஷேகத்தை காண அவ்வூருக்கு வந்து குவிந்தனர். உள்ளூர் மக்களும் ஒருவர் கூட வீட்டில் முடங்கியிராது கோவிலில் குழுமிவிட்டனர். இறைவனை தரிசிப்பதில் அனைவருக்கும் அவ்வளவு ஆர்வம்.

எங்கெங்கு பார்த்தாலும்

“ஓம் நமச் சிவாய”

“தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!”

“திருசிற்றம்பலம்”

“சிவ சிவ”

என்கிற கோஷங்கள் தான்.

இந்த அன்னாபிஷேகத்தை காண்பதற்கு ஒரு துறவி தனது சீடனுடன் வந்திருந்தார்.

DSC02217

ஊரே இப்படி கோவிலில் கூடியிருப்பதை பார்த்து சீடனுக்கு ஒரே வியப்பு. தனது குருவுடன் சேர்ந்து அவன் பல அன்னாபிஷேகங்களை கண்டிருந்தாலும் இது போல எங்கும் பார்த்ததில்லை.

“குருவே, இப்படி தெய்வ பக்தி மிக்க மக்களை நான் எங்குமே பார்த்ததில்லை!!!!” என்றான்.

குரு பதிலேதும் கூறாமல் மெலிதாக ஒரு புன்முறுவல் மட்டும் புரிந்தார்.

அந்நேரம் பார்த்து அரக்க பரக்க ஒருவர் ஓடி வந்தார். நேரே கோவில் கோபுரத்தை பார்த்து கையெடுத்து கும்பிட்டுவிட்டு, “சிவ சிவ” என்று ஏதோ கூறி கன்னத்தில் போட்டுக்கொண்டு வந்த வழியே நடையை கட்டினார்.

இருவருக்கும் அந்த செய்கை ஆச்சரியமாய் இருந்தது.

ஊரே இந்த அன்னாபிஷேகத்தை காணவும் சுவாமி தரிசனம் செய்யவும் இங்கே குவிந்திருக்கிறது என்று இப்போது தானே ஆச்சரியப்பட்டோம்…? இவர் என்னடாவென்றால் கோபுரத்தை பார்த்து கும்பிட்டுவிட்டு திரும்ப போய்விட்டாரே..!

குரு அவரிடம் வேகமாக சென்று, “ஐயா…. நீங்கள் இறைவனை தரிசனம் செய்யவில்லையா? அன்னாபிஷேகத்தை பார்க்கவில்லையா?”

“சுவாமி… இப்போது தான் இரவு ஷிப்ட் வேலை முடித்துவிட்டு வருகிறேன். என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. அவரை பக்கத்து ஊரில் உள்ள மருத்துவரிடம் அழைத்து செல்லவேண்டும். அதற்கு முன் என் பிள்ளைகளை அவர்கள் பள்ளியில் கொண்டு போய் விடவேண்டும். மதியம் என் மனைவியின் அம்மா ஊரிலிருந்து வருகிறார். அவரை ரயில் நிலையம் சென்று அழைத்து வரவேண்டும். இதற்கிடையே எங்கள் தெரு முனையில் உள்ள ஒரு உடல் ஊனமுற்ற பிச்சைக்காரருக்கு உணவு வாங்கி தரவேண்டும். அவர் எனக்காக காத்திருப்பார். அன்னாபிஷேகத்தை பார்க்க எனக்கு நேரம் இல்லை. மந்திரம் சொல்லவும் தெரியாது. பூஜை புனஸ்காரங்களையும் நான் அறியேன். தினமும் காலையில் இந்த கோபுரத்தை பார்த்து, ‘அப்பனே ஈசா இன்னைக்கு பொழுது நல்லபடியா போகணும். நீ தான் கூட இருந்து காப்பாத்தணும்’ என்று வேண்டிக்கொள்வேன். எனக்கு தெரிந்த பக்தி இது தான் ஐயா. நான் வருகிறேன்!” என்று கூறிவிட்டு நடையை கட்டினார்.

Swami Vivekananda
ஜூலை 4 – இன்று சுவாமி விவேகானந்தரின் நினைவு நாள்!

 

குரு சீடனைப் பார்த்து, “இப்போது புரிகிறதா யார் மிகப் பெரிய பக்திமான் என்று… அவரவர்க்கு விதிக்கப்பட்ட கடமையை அனைவரும் சரியாக செய்யவேண்டும். அதையும் காலத்தே செய்யவேண்டும். உலக வாழ்க்கையில் ஒருவர் செய்யவேண்டிய அனைத்தும் இவரது அன்றாட பணிகளில் உள்ளது. அதை சலிக்காமல், வெறுக்காமல், மிக நேர்த்தியாக செய்கிறார். இதுவே உண்மையான வழிபாடு. உள்ளன்போடு இவர் கோவில் கோபுரத்தை பார்த்து சொல்லும் “சிவ சிவ” என்னும் சொல், பன்னிரு திருமுறைகளுக்கு ஈடானது! கடமையை புறக்கணித்துவிட்டு கோவிலிலேயே விழுந்து கிடப்பதால் யாருக்கும் எந்த பலனும் இல்லை!” என்றார்.

(இப்படி சொல்வதால் தங்கள் குடும்பமே கதி என்று சுயநலத்தோடு வாழ்ந்தால் அது தான் கடமை, உன்னத பக்தி என்று எவரேனும் அனர்த்தம் செய்து கொண்டால் அது அவர்கள் அறியாமை! ஒவ்வொருவரும் தத்தங்கள் குடும்பத்திற்கு ஆற்றவேண்டிய கடமையை ஆற்றவேண்டும். இடையே தொண்டுக்கும் சிறிது நேரம் ஒதுக்கவேண்டும். அதுவே அர்த்தமுள்ள வாழ்க்கை. உண்மையான பக்தி!)

================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : பிரபல ஆன்மீக பேச்சாளர் / நடிகர் திரு.ஆடுதுறை அழகு.பன்னீர்செல்வம் அவர்கள்.

சென்ற வாரம் குன்றத்தூர் சேக்கிழார் விழாவுக்கு சென்றிருந்தபோது, நமக்கு இவரது அறிமுகம் கிடைத்தது. அங்கு நடைபெற்ற ஆன்மீக பாட்டு பட்டிமன்றதிற்கு தலைமை தாங்கி பட்டிமன்றத்தை சுவாரஸ்யம் குறையாமல் இறுதிவரை நடத்திச் சென்றார்.

DSC02838திரு.அழகு.பன்னீர்செல்வம் அவர்களை பற்றி சொல்வதானால் இன்றைக்கெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கலாம். நாம் பார்த்து வியந்த பெரிய மனிதர்களுள் ஒருவர்.

கடவுள் மறுப்பும் நாத்திகமும் நித்தம் பேசிக்கொண்டிருந்த இவர், இறைவனின் அருளால் பன்றிமலை சுவாமிகளின் அறிமுகம் கிடைத்து அது முதல் ஆன்மீகப் பாதைக்கு திரும்பியவர். தனது ஞானத்தை எல்லாம் ஞாலம் போற்ற இன்று வாரி வழங்கிக்கொண்டிருப்பவர்.

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சித்தர்களையும் இறையடியார்களையும் சந்தித்து அவர்களின் ஆசியை பெற்றிருக்கிறார். தமிழகம் முழுதும் பல திருக்கோவில்களில் நூற்றுக்கணக்கான ஆன்மீக பட்டிமன்றங்களை நடுவராக இருந்து நடத்தியிருக்கிறார். தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், திருக்குறள் என அனைத்திலும் புலமை பெற்று விளங்குகிறார்.

ஏறக்குறைய ஒவ்வொரு ஆண்டு சதயத்தன்றும் தஞ்சை பெரிய கோவிலில் இவர் தலைமையில் ஆன்மீக பட்டிமன்றம் நிச்சயம் உண்டு. தன்னை வளர்த்ததாக இவர் குறிப்பிடுவது அன்னை மதுரகாளியம்மனைத் தான். அந்த அன்னையின் புகழ் பாடுவதே தனது குறிக்கோள் என்று செயல்பட்டு வருகிறார் திரு.அழகு.பன்னீர்செல்வம்.

இவர் நமக்கு அறிமுகமாகி நமது நட்பு வட்டத்திற்குள் வந்தது சேக்கிழார் பெருமானின் திருவுள்ளம் தான். இறைவனின் கருணையினால் எதிர்வரும் நமது ஆண்டுவிழாவிலோ பாரதி விழாவிலோ நிச்சயம் இவரது பங்களிப்பு இருக்கும்.

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். தினசரி தியானம் செய்யும் வழக்கம் தமக்கிருப்பதால், பிரார்த்தனை நேரத்தில் தாம் வெளியே எங்கேனும் நிகழ்ச்சியில் இருந்தாலும் ஒரு ஐந்து நிமிடம் நமக்காக தியானம் செய்வதாக கூறியிருக்கிறார்.

அவருக்கு நம் நன்றி.

================================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

முதல் கோரிக்கை மகப்பேறு பற்றியது. தாய்மையைவிட உயர்ந்தது இந்த உலகில் எதுவும் இல்லை. தனக்கு பிறக்கும் குழந்தை நலமாகவும் ஆரோக்கியமாகவும் பிறப்பதைவிட ஒரு தாய்க்கு வேறு மகிழ்ச்சி எதுவும் இருக்க முடியாது. ஆனால், அதில் பிரச்னை ஏற்பட்டு செய்வதறியாது தவிக்கும் ஒரு தாய் நமது பிரார்த்தனை கிளப்புக்கு கோரிக்கை அனுப்பியிருக்கிறார். அயல்நாட்டில் வசிக்கும் இவருக்கு உதவிடவோ, உரிய ஆலோசனைகளை சொல்லவோ, அருகேயிருந்து பார்த்துக்கொல்லவோ ஆறுதல் சொல்லோ உறவினர்கள் எவரும் இல்லை என்று தெரிகிறது. தாய்க்கும் தாயான நம் தாயுமானவன் இருக்கையிலே என்ன கவலை? திருச்சி அருள்மிகு தாயுமானசுவாமியை இவருக்கு துணையிருக்குமாறு வேண்டிக்கொள்வோம். தன் சக்தியை மீறி அடுத்து அன்னைக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை ஏற்பாடு செய்திருப்பதாக ஒரு வாசகர் கூறியிருக்கிறார். நெகிழ வைக்கும் ஒன்று. நிச்சயம் குணமடைவார்கள்.

இனி பிரார்த்தனையை அவர்கள் வரிகளில் பார்ப்போம்…

================================================================

குழந்தைகள் நல்ல முறையில் பிறக்கவேண்டும் & கணவருக்கு ஊதிய உயர்வு கிடைக்கவேண்டும்!

வணக்கம் சுந்தர் அவர்களே மற்றும் நண்பர்களே…

நான் என் கணவருடன் அயல்நாடு ஒன்றில் வசித்து வருகிறேன். எனக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறான். தற்போது நான் இறையருளால் கருத்தரித்திருக்கிறேன். கடந்த மாதம் சோனார் ஸ்கேன் எடுத்து பார்த்ததில், கருவில் இரட்டை குழந்தைகள் இருப்பதும் அவை பிரியாத நிலையில் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இது மிகவும் சிக்கலான நிலை என்றும் என்னை நன்றாக ஓய்வெடுத்துக்கொள்ளுமாறும் டாக்டர் அறிவுறுத்தியிருக்கிறார். நான் வசிக்கும் இந்த நாட்டிலேயே சில பல காரணங்களுக்காக குழந்தைகளை பிரசவிக்கவேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் டாக்டர் கூறியிருப்பதை பார்த்து மிகவும் கவலையாக உள்ளது. எனக்கு உதவி செய்ய இங்கு யாரும் இல்லை. இந்த தளத்தை பற்றி கேள்விப்பட்டு இந்த பிரார்த்தனையை சமர்பித்திருக்கிறேன். என் குழந்தைகள் கருவில் நல்லபடியாக வளர்ந்து பரிபூரண ஆரோக்கியத்துடன் பிறக்கவேண்டும் என்பதே என் பிரார்த்தனை.

மற்றபடி என் கணவர், கடந்த பல வருடங்களாக ஒரே நிறுவனத்தில்  எந்த வித சம்பள உயர்வுமின்றி பணிபுரிந்து வருகிறார். அவருக்கு உத்தியோகத்தில் நல்ல உயர்வும் நல்ல ஊதியமும் கிடைக்கவும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

எங்கள் குடும்பம் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும், ஆரோக்கியத்துடனும் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும்.

நன்றியுடன்…
ஊர் பெயர் வெளியிட விரும்பாத வாசகி

================================================================

அம்மாவுக்கு அறுவை சிகிச்சை  வெற்றிகரமாக நடக்கவேண்டும்!

வணக்கம் சார்…

தங்கள் தளத்தின் வாசகன். அப்படி கூறிக்கொள்வதில் பெருமை கொள்பவன். என் தாயாருக்கு சென்னையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. மிகவும் சிரமத்துக்கு இடையே இதை நான் செய்கிறேன். சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்து, என் தாயார் முன்பு போல எழுந்து நடமாடவேண்டும் என்று அனைவரையும் பிரார்த்திக்கும்படி  கேட்டுக்கொள்கிறேன்.

தாயார் பெயர் : லலிதா. வயது 62.

என்றென்றும் நன்றியுடன்,

கார்த்திக் சிவக்குமார்,
திருவொற்றியூர்

================================================================

இந்த வார பொது பிரார்த்தனை

கட்டிட விபத்தில் பலியானவர்களின் ஆன்மா சாந்தியடையவேண்டும்!

சென்னையை அடுத்த போரூர், மவுலிவாக்கத்தில் கடந்த 28-ந் தேதி மாலை, இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையின் போது புதிதாக கட்டப்பட்டு வந்த 11 தள அடுக்குமாடி கட்டிடம், கண்ணிமைக்கும் நேரத்தில், சீட்டுக்கட்டு சரிந்து விழுவது போல் விழுந்து தரைமட்டமானது. கட்டிடத்தில் பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள், தொழிலாளர்கள் என 71 பேர் சிக்கினர். இதில் 36 பேர் ஆந்திராவை சேர்ந்தவர்கள். மீதம் உள்ள 35 பேர் தமிழ்நாடு மற்றும் ஒடிசா உள்பட வடமாநிலங்களை சேர்ந்தவர்கள்.

HAND

இன்று காலை நிலவரப்படி இதுவரை 61 பேர் இறந்துள்ளதாக தெரிகிறது. இவர்களில் பெரும்பாலனவர்கள் கூலித் தொழிலாளர்கள். தரை மட்டமான  கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

01_debris_1977300g

விபத்துக்கு காரணம் விதிமுறை மீறலும், பல்வேறு மட்டங்களில் விளையாடிய லஞ்சமுமே என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ஒவ்வொரு முறையும் இது போன்று ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் மட்டுமே அரசாங்கமோ அதிகாரிகளோ பொதுமக்களோ விழித்துக்கொள்கின்றனர்.

இனி இப்படி ஒரு துயரம் நிகழக்கூடாது. அதுவே பலியான தொழிலாளர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி.

விபத்தில் உயிரிழந்த அனைத்து தொழிலாளர்களின் ஆன்மாவும் சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்வோம்.

================================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgஅயல்நாட்டில் வசிக்கும் நம் தள வாசகிக்கு நல்ல முறையில் கருவில் இரு குழந்தைகளும் வளர்ந்து ஆரோக்கியமாக பிறக்கவும், அவர் கணவருக்கு உத்தியோகத்தில் உயர்வும் பொருளாதார முன்னேற்றமும் ஏற்படவும், அறுவை சிகிச்சை செய்துகொள்ளவுள்ள நம் தளத்தின் வாசகர் கார்த்திக் அவர்களின் தாயார் லலிதா அவர்கள் பரிபூரண குணம் பெறவும், அறுவை சிகிச்சை வெற்றியடையவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம். போரூர் கட்டிட விபத்தில் பலியாகியுள்ள தொழிலாளர்களின் ஆன்மா சாந்தியடையவும் இறைவனை வேண்டுவோம். இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றுள்ள ஆன்மீக பேச்சாளர் திரு.ஆடுதுறை அழகு.பன்னீர்செல்வம் அவர்கள் எல்லா நலனும் வளமும் பெற்று வாழவும் இறைவனைவேண்டுவோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : ஜூலை 6,  2014 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131

=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபத்தின் பொறுப்பாளர் திரு.பாலு அவர்கள்

7 thoughts on “அர்த்தமுள்ள வாழ்க்கை & உண்மையான பக்தி! – Rightmantra Prayer Club

 1. தாங்கள் பதிவு செய்த கதை நன்றாக உள்ளது குடும்பத்தின் கடமையை செய்வதுடன் இறைவனையும் த்யானித்து இறை தொண்டும் செய்ய வேண்டும்.

  இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் திரு அழகு பன்னீர் செல்வம் அவர்களுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறோம்

  இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் வாசகர்களுக்ககவும் மற்றும் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்வோம்

  போரூர் கட்டிட விபத்தில் பலியானவார்களின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்வோம்.இனிமேல் இந்த மாதிரி சம்பவம் ஏற்படாமல் இருக்க வேண்டும்

  சுகப்பிரசவம் சாத்தியமாக
  ஆபிருப்யகரோ வீர ஸ்ரீப்ரதோ விஜயப்ரத
  ஸர்வ வஸ்யகரோ கர்ப்ப-தோஷஹா புத்ரபௌத்ரத:
  இதைப் பாராயணம் செய்தால் சுகப் பிரசவம் ஏற்படும்.

  லோக சமஸ்த பவந்து
  சாந்தி சாந்தி சாந்திஹி

  ராம் ராம் ராம்

  நன்றி
  உமா

 2. அற்புதமான கதை. ஆழ்ந்த பொருள்.

  “நல்லவனாக இருந்து உன் கடமையை குறைவின்றி செய்து வா. ஆண்டவன் மேலே இருந்து இறங்கி வந்து, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்பான்” என்றொரு மேற்கோளை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

  இந்த கதை உணர்த்துவதும் அதைத் தான்.

  படத்தில் தெரியும் சிவாலயம் எந்த ஊர்? பார்க்க அத்தனை அழகாக இருக்கிறதே…

  இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் திரு.அழகு.பன்னீர்செல்வம் அவர்கள் சன் டி.வி.யின் அரட்டை அரங்கத்தில் ஒரு முறை சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருக்கிறார்.

  நீங்கள் சொல்வது போல, நல்ல குரல்வளமும், ஞானமும் கைவரப்பெற்றவர். நம் பிரார்த்தனை கிளபுக்கு சரியான தேர்வு.

  இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் சகோதரிக்கு சகோதரருக்கும் அவர்கள் பிரார்த்தனை நிறைவேற இறைவனை வேண்டுகிறேன்.

  நன்றி.

  – பிரேமலதா மணிகண்டன்,
  மேட்டூர், சேலம் மாவட்டம்

  1. அது திருவீழிமிழலை கோவில். சீர்காழி அருகே உள்ளது. இந்த கோவில் பற்றிய சிறப்பு பதிவும் இறைவன் இங்கு நடத்திய லீலைகளை பற்றியும் ஒரு தனிப் பதிவு வருகிறது.

   நன்றி.

   – சுந்தர்

 3. இந்த வாரம் பிரார்த்தனை கோரிக்கைகள் இரண்டும் மருத்துவ சம்பந்தமானவை. வைத்தீஸ்வரப்பெருமான் அருளால் இருவரது வேண்டுதல்களும் நிறைவேற வேண்டுகிறேன். திருவீழிமிழலை ஆலய கோபுர தரிசனம் மனநிறைவைத் தருகிறது, மற்றும் கட்டிட விபத்தில் பலியானவர்கள் அனைவரும் தியாகிகளே!……இந்த கட்டிடம் முழுமை பெற்று மக்கள் குடிவந்திருந்தால் உயிர்ப் பலியின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்திருக்கும். தங்களது இன்னுயிரை ஈந்து அவர்களைக் காப்பாற்றியுள்ளனர். அவர்களின் ஆன்மாக்கள் நிச்சயம் இறைவனடியைச் சேரும்.

 4. கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.

  அந்த பக்தர் தன்னுடைய அத்தனை அலுவல்களுக்கு நடுவிலும் கோபுரத்தை பார்த்து சிவ சிவ என்று கன்னத்தில் போட்டுக்கொண்டதே பெரிய பிரார்த்தனை.
  உள்ளன்போடு இவர் கோவில் கோபுரத்தை பார்த்து சொல்லும் “சிவ சிவ” என்னும் சொல், பன்னிரு திருமுறைகளுக்கு ஈடானது! கடமையை புறக்கணித்துவிட்டு கோவிலிலேயே விழுந்து கிடப்பதால் யாருக்கும் எந்த பலனும் இல்லை! இந்த வரிகளை படித்ததும் அப்பாடா ஒரு ஈஸி வழி கிடைத்து விட்டது என்று நிமிர்ந்தால் உடனே கீழே நச் என்று ஒரு பதில், thanks a lot
  இந்த வார பிரார்த்தனை தலைவர் அவர்களை பற்றி போன பதிவிலேயே மிகவும் விரிவாக எடுத்து கூறி அவர் பெருமை கூறி உள்ளீர்கள்.

  அயல்நாட்டில் வசிக்கும் நம் தள வாசகிக்கு நல்ல முறையில் கருவில் இரு குழந்தைகளும் வளர்ந்து ஆரோக்கியமாக பிறக்கவும், அவர் கணவருக்கு உத்தியோகத்தில் உயர்வும் பொருளாதார முன்னேற்றமும் ஏற்படவும், அறுவை சிகிச்சை செய்துகொள்ளவுள்ள நம் தளத்தின் வாசகர் கார்த்திக் அவர்களின் தாயார் லலிதா அவர்கள் பரிபூரண குணம் பெறவும், அறுவை சிகிச்சை வெற்றியடையவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம். போரூர் கட்டிட விபத்தில் பலியாகியுள்ள தொழிலாளர்களின் ஆன்மா சாந்தியடையவும் இறைவனை வேண்டுவோம். இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றுள்ள ஆன்மீக பேச்சாளர் திரு.ஆடுதுறை அழகு.பன்னீர்செல்வம் அவர்கள் எல்லா நலனும் வளமும் பெற்று வாழவும் இறைவனைவேண்டுவோம்.
  நன்றி

 5. பொதுவாக கர்ப்பகாலத்தில் பெண்கள் டிவி சீரியல் எல்லாம் தள்ளி வைத்து விட்டு விநாயகர் அகவல் ,கந்தர் சஷ்டி கவசம் ,திருமுறைகள் ,அபிராமி அந்தாதி ,அபயாம்பிகை சதகம் ,சுந்தர காண்டம் ,விஷ்ணு சஹஸ்ரநாமம் இவற்றில் முடிந்தததை படித்து வருவது நலம் பயக்கும் .அயல்நாட்டில் வசிக்கும் தாங்கள் உடனடியாக செய்யவேண்டியது ஓன்று மட்டுமே ..நீங்கள் அங்கு உடனடியாக ஈசனுக்கும் ,உமையவளுக்கும் ஆலயம் ஓன்று கட்ட வேண்டும் ..அதாவது தங்கள் இதயத்தில் ஆலயம் கட்ட வேண்டும்.அந்த ஆலயத்தில் ஈசனாக நம் சுந்தர் சார் கூறியுள்ளது போல் திருச்சிராப்பள்ளி மலைகோட்டை அருள்மிகு தாயுமானசுவாமியையும் ,அம்பாளாக திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகையையும்,.கூடவே அந்த ஆலயத்தில் வைரவன்பட்டி வைரவரை யும் மானசீகமாக பிரதிஷ்டை செய்து ,கும்பாபிசேகம் செய்வித்து தினமும் வழிபட்டு வாருங்கள் .அது போதும் ..அசைவம் தொடாதீர்கள் .நல்லதே நடக்கும் .பின்பு தமிழ்நாடு வரும் பொழுது ,உங்கள் குழந்தைகளுடன் திருச்சிராப்பள்ளி மலைகோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருகோயில், திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை திருகோயில் ,வைரவன்பட்டி[பிள்ளையார்பட்டி அருகில்] வைரவன் திருகோயில் சென்று நன்றி தெரிவியுங்கள்…தற்போது முடிந்தால் உங்கள் கணவர் பெயர் ,உங்கள் பெயர் ,நட்சத்திரம் அனுப்பி சுகப்ரசவ எண்ணெய்காகக் ரூபாய் 100 அனுப்பி திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை திருகோயில் முகவரிக்கு[http://garbaratchambigaitemple.org/] அனுப்பி உடனே வாங்கி அதில் கூறி உள்ள படி சுகப்ரசவ எண்ணெய் பயன்படுத்தி வாருங்கள்..பதிகம்களை தொடர்ந்து படித்து வாருங்கள் …

  திருச்சிற்றம்பலம்

  தலையே நீவணங்காய் – தலை
  மாலை தலைக்கணிந்து
  தலையா லேபலி தேருந் தலைவனைத்
  தலையே நீவணங்காய்.

  கண்காள் காண்மின்களோ – கடல்
  நஞ்சுண்ட கண்டன்றன்னை
  எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக்
  கண்காள் காண்மின்களோ.

  செவிகாள் கேண்மின்களோ – சிவன்
  எம்மிறை செம்பவள
  எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ்
  செவிகள் கேண்மின்களோ.

  மூக்கே நீமுரலாய் – முது
  காடுறை முக்கணனை
  வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
  மூக்கே நீமுரலாய்.

  வாயே வாழ்த்துகண்டாய் – மத
  யானை யுரிபோர்த்துப்
  பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னை
  வாயே வாழ்த்துகண்டாய்.

  நெஞ்சே நீநினையாய் – நிமிர்
  புன்சடை நின்மலனை
  மஞ்சா டும்மலை மங்கை மணாளனை
  நெஞ்சே நீநினையாய்.

  கைகாள் கூப்பித்தொழீர் – கடி
  மாமலர் தூவிநின்று
  பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்
  கைகாள் கூப்பித்தொழீர்.

  ஆக்கை யாற்பயனென் – அரன்
  கோயில் வலம்வந்து
  பூக்கை யாலட்டிப் போற்றி யென்னாதவிவ்
  வாக்கை யாற்பயனென்.

  கால்க ளாற்பயனென் – கறைக்
  கண்ட னுறைகோயில்
  கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக்
  கால்க ளாற்பயனென்.

  உற்றா ராருளரோ – உயிர்
  கொண்டு போம்பொழுது
  குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்
  குற்றார் ஆருளரோ.

  இறுமாந் திருப்பன்கொலோ – ஈசன்
  பல்கணத் தெண்ணப்பட்டுச்
  சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்
  கிறுமாந் திருப்பன்கொலோ.

  தேடிக் கண்டுகொண்டேன் – திரு
  மாலொடு நான்முகனுந்
  தேடித் தேடொணாத் தேவனை என்னுளே
  தேடிக் கண்டுகொண்டேன்.

  திருச்சிற்றம்பலம்[அப்பர்]
  …………………………………………………………………………………………
  திருச்சிற்றம்பலம்

  வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்
  பொன்னி யன்ற சடையிற் பொலிவித்த புராணனார்
  தென்ன வென்றுவரி வண்டிசை செய்திரு வாஞ்சியம்
  என்னை யாளுடை யானிட மாகவு கந்ததே.

  கால காலர்கரி கானிடை மாநட மாடுவர்
  மேலர் வேலைவிட முண்டிருள் கின்ற மிடற்றினர்
  மாலை கோலமதி மாடமன் னுந்திரு வாஞ்சியம்
  ஞாலம் வந்துபணி யப்பொலி கோயில் நயந்ததே.

  மேவி லொன்றர்விரி வுற்ற இரண்டினர் மூன்றுமாய்
  நாவின் நாலர்உட லஞ்சினர் ஆறர்ஏ ழோசையர்
  தேவில் எட்டர்திரு வாஞ்சிய மேவிய செல்வனார்
  பாவந் தீர்ப்பர்பழி போக்குவர் தம்மடி யார்கட்கே.

  திரு வாஞ்சிய மேவிய செல்வனார்
  பாவந் தீர்ப்பர்பழி போக்குவர் தம்மடி யார்கட்கே
  சூல மேந்திவளர் கையினர் மெய்சுவண் டாகவே
  சால நல்லபொடிப் பூசுவர் பேசுவர் மாமறை
  சீல மேவுபுக ழாற்பெரு குந்திரு வாஞ்சியம்
  ஆல முண்டவடி கள்ளிட மாக அமர்ந்ததே.

  கையி லங்குமறி யேந்துவர் காந்தளம் மெல்விரல்
  தையல் பாகமுடை யாரடை யார்புரஞ் செற்றவர்
  செய்ய மேனிக்கரி யம்மிடற் றார்திரு வாஞ்சியத்
  தையர் பாதமடை வார்க்கடை யாவரு நோய்களே.

  அரவம் பூண்பரணி யுஞ்சிலம் பார்க்க அகந்தொறும்
  இரவில் நல்லபலி பேணுவர் நாணிலர் நாமமே
  பரவு வார்வினை தீர்க்கநின் றார்திரு வாஞ்சியம்
  மருவி யேத்தமட மாதொடு நின்றவெம் மைந்தரே.

  விண்ணி லானபிறை சூடுவர் தாழ்ந்து விளங்கவே
  கண்ணி னாலனங் கன்னுட லம்பொடி யாக்கினார்
  பண்ணி லானஇசை பாடல்மல் குந்திரு வாஞ்சியத்
  தண்ண லார்தம்அடி போற்றவல் லார்க்கில்லை அல்லலே.

  மாட நீடுகொடி மன்னிய தென்னிலங் கைக்குமன்
  வாடி யூடவரை யாலடர்த் தன்றருள் செய்தவர்
  வேட வேடர்திரு வாஞ்சியம் மேவிய வேந்தரைப்
  பாட நீடுமனத் தார்வினை பற்றறுப் பார்களே.

  செடிகொள் நோயின்அடை யார்திறம் பார்செறு தீவினை
  கடிய கூற்றமுங் கண்டக லும்புகல் தான்வரும்
  நெடிய மாலொடயன் ஏத்தநின் றார்திரு வாஞ்சியத்
  தடிகள் பாதமடைந் தாரடி யாரடி யார்கட்கே.

  பிண்ட முண்டுதிரி வார்பிரி யுந்துவ ராடையார்
  மிண்டர் மிண்டுமொழி மெய்யல பொய்யிலை யெம்மிறை
  வண்டு கெண்டிமரு வும்பொழில் சூழ்திரு வாஞ்சியத்
  தண்ட வாணனடி கைதொழு வார்க்கில்லை அல்லலே.

  தென்றல் துன்றுபொழில் சென்றணை யுந்திரு வாஞ்சியத்
  தென்று நின்றஇறை யானையு ணர்ந்தடி யேத்தலால்
  நன்று காழிமறை ஞானசம் பந்தன செந்தமிழ்
  ஒன்று முள்ளமுடை யாரடை வாருயர் வானமே.
  திருச்சிற்றம்பலம்[சம்பந்தர் ].
  வாஞ்சிநாதர், வாழவந்தநாயகி அருளும் திருவாஞ்சியம் சம்பந்தர் திருப்பதிகம் நம் முன் ஜென்ம பாவங்களை துடைத்து எறிந்து நல விதமாக நமக்குபிள்ளைகள் பிறக்க திருவருள் புரியும்.. “வாஞ்சியத்
  தண்ட வாணனடி கைதொழு வார்க்கில்லை அல்லலே”, ” நாமமே
  பரவு வார்வினை தீர்க்கநின் றார்திரு வாஞ்சியம்
  மருவி யேத்தமட மாதொடு நின்றவெம் மைந்தரே”,”திரு வாஞ்சியத்
  தையர் பாதமடை வார்க்கடை யாவரு நோய்களே”,”திரு வாஞ்சிய மேவிய செல்வனார்
  பாவந் தீர்ப்பர்பழி போக்குவர் தம்மடி யார்கட்கே”..என்பது சம்பந்தர் வாக்கு..உங்கள் மூதாதையர் ,குலதெய்வம் வேண்டுதல்களை செய்யுங்கள் ..சிவாய நம.,….

 6. திருவொற்றியூர் அடியவரின் அப் புண்ணிய திருபாதம் போற்றி .உங்கள் திருபாதம் எத்தனை முறை திருவொற்றியூர் பெரும் பதியை வலம் வந்திருக்கும் ..நிற்க ..தங்கள் தெய்வத்தின் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நலம் பெற திருவொற்றியூர் மகான் பாடகசேரி ராமலிங்க சுவாமிகள் [பைரவ சித்தர் ]சமாதி திருகோயில்[9841021820] சென்று தொடர்ந்து 48 நாட்கள் வழிபட்டு வாருங்கள் ..தினமும் அவர் சமாதி முன் ஒரு 15 நிமிடம் அமர்ந்து ,நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்து தங்கள் வேண்டுதல்களை கூறுங்கள் ..நல்லது கூடி வரும் கூடவே தினமும் நாய்களுக்கு உணவிடுங்கள் ..இது பாடகசேரி ராமலிங்க பைரவ சுவாமிகள் அருள் பார்வையை உங்கள் மீது விரைவில் திருப்பும் ..பாடகசேரி ராமலிங்க பைரவ சுவாமிகள் ஒருமுறை தன்னுடைய பக்தன் ஒருவனை பாம்பு கடித்த பொழுது அவனுக்கு ஏற இருந்த விசத்தை தான் ஏற்று கொண்டு ,அவனை அதிலிருந்து விடுவித்த புண்ணியர் அவர் ..இவரிடம் நோய் நீங்க வேண்டி யார் சென்றாலும் “ஆபத் சகாயம் “என கூறி ஈசனையும் ,முருக பெருமானையும் நினைத்து திருநீறு பூசி விடுவாராம் ..உடனே நோய் குணமாகி விடுமாம் …எனவே நீங்கள் திருவொற்றியூர் மகான் பாடகசேரி ராமலிங்க சுவாமிகள் [பைரவ சித்தர் ]சமாதி திருகோயில் சென்று அங்கிருந்து திருநீறு எடுத்து வந்து “ஆபத் சகாயம் “என கூறி,பாடகசேரி ராமலிங்க பைரவ சுவாமிகலையும் ஈசனையும் ,முருக பெருமானையும் நினைத்து திருநீறு பூசி விடுங்கள்..அது போதும் …வருகிற ஆடி பூரம்[30-7-14 ]அன்று அவரது குரு பூஜை நாள் ஆகும் ..அன்று காலை திருவொற்றியூர் மகான் பாடகசேரி ராமலிங்க சுவாமிகள் [பைரவ சித்தர் ]சமாதி திருகோயில் சென்று அவரது சமாதி யில் இருக்கும் சிவலிங்கத்திற்கு பால் அபிசேகம் செய்து வழிபட்டு ,நாய் களுக்கு உணவிடுங்கள் ..[ குறிப்பு :பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் விந்தையான பைரவ பூசையை நடத்துவார். நூற்றுக்கணக்கான இலைகளில் விருந்தைப் படைக்கச் செய்து வெளியே சென்று அவர் விளித்தவுடன் திடீரென்று நூற்றுக்கணக்கான நாய்கள் எங்கிருந்தோ மந்தையாக வரும். அவர் கட்டளைப்படி குளத்தில் மூழ்கி எழுந்து அமைதியாக தனித் தனி இலைகளில் விருந்து உண்டுவிட்டு வந்தவழியே மாயமாய் மறைந்து போய்விடும். போடப்பட்ட இலைக்கு கூடவோ குறையவோ இல்லாமல் நாய்கள் வந்து போவது தான் விந்தை ]……திருவொற்றியூர் மகான் பாடகசேரி ராமலிங்க சுவாமிகள் [பைரவ சித்தர் ]சமாதி திருகோயில் தேரடிக்கு எதிரே உள்ள அப்பர் சாமி கோவில் தெருவில் உள்ளது. இவரது சமாதிக்கு பக்கத்திலேயே இவரது மாணாக்கர் அப்புடு சுவாமி என்ற ஐகோர்டு சுவாமிகளின் சமாதி கோவிலும் உள்ளது. http://www.padagacheriswamigal.org பதிகம்களை தினமும் படித்து வரவும் ..

  திருச்சிற்றம்பலம்

  வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்
  பொன்னி யன்ற சடையிற் பொலிவித்த புராணனார்
  தென்ன வென்றுவரி வண்டிசை செய்திரு வாஞ்சியம்
  என்னை யாளுடை யானிட மாகவு கந்ததே.

  கால காலர்கரி கானிடை மாநட மாடுவர்
  மேலர் வேலைவிட முண்டிருள் கின்ற மிடற்றினர்
  மாலை கோலமதி மாடமன் னுந்திரு வாஞ்சியம்
  ஞாலம் வந்துபணி யப்பொலி கோயில் நயந்ததே.

  மேவி லொன்றர்விரி வுற்ற இரண்டினர் மூன்றுமாய்
  நாவின் நாலர்உட லஞ்சினர் ஆறர்ஏ ழோசையர்
  தேவில் எட்டர்திரு வாஞ்சிய மேவிய செல்வனார்
  பாவந் தீர்ப்பர்பழி போக்குவர் தம்மடி யார்கட்கே.

  திரு வாஞ்சிய மேவிய செல்வனார்
  பாவந் தீர்ப்பர்பழி போக்குவர் தம்மடி யார்கட்கே
  சூல மேந்திவளர் கையினர் மெய்சுவண் டாகவே
  சால நல்லபொடிப் பூசுவர் பேசுவர் மாமறை
  சீல மேவுபுக ழாற்பெரு குந்திரு வாஞ்சியம்
  ஆல முண்டவடி கள்ளிட மாக அமர்ந்ததே.

  கையி லங்குமறி யேந்துவர் காந்தளம் மெல்விரல்
  தையல் பாகமுடை யாரடை யார்புரஞ் செற்றவர்
  செய்ய மேனிக்கரி யம்மிடற் றார்திரு வாஞ்சியத்
  தையர் பாதமடை வார்க்கடை யாவரு நோய்களே.

  அரவம் பூண்பரணி யுஞ்சிலம் பார்க்க அகந்தொறும்
  இரவில் நல்லபலி பேணுவர் நாணிலர் நாமமே
  பரவு வார்வினை தீர்க்கநின் றார்திரு வாஞ்சியம்
  மருவி யேத்தமட மாதொடு நின்றவெம் மைந்தரே.

  விண்ணி லானபிறை சூடுவர் தாழ்ந்து விளங்கவே
  கண்ணி னாலனங் கன்னுட லம்பொடி யாக்கினார்
  பண்ணி லானஇசை பாடல்மல் குந்திரு வாஞ்சியத்
  தண்ண லார்தம்அடி போற்றவல் லார்க்கில்லை அல்லலே.

  மாட நீடுகொடி மன்னிய தென்னிலங் கைக்குமன்
  வாடி யூடவரை யாலடர்த் தன்றருள் செய்தவர்
  வேட வேடர்திரு வாஞ்சியம் மேவிய வேந்தரைப்
  பாட நீடுமனத் தார்வினை பற்றறுப் பார்களே.

  செடிகொள் நோயின்அடை யார்திறம் பார்செறு தீவினை
  கடிய கூற்றமுங் கண்டக லும்புகல் தான்வரும்
  நெடிய மாலொடயன் ஏத்தநின் றார்திரு வாஞ்சியத்
  தடிகள் பாதமடைந் தாரடி யாரடி யார்கட்கே.

  பிண்ட முண்டுதிரி வார்பிரி யுந்துவ ராடையார்
  மிண்டர் மிண்டுமொழி மெய்யல பொய்யிலை யெம்மிறை
  வண்டு கெண்டிமரு வும்பொழில் சூழ்திரு வாஞ்சியத்
  தண்ட வாணனடி கைதொழு வார்க்கில்லை அல்லலே.

  தென்றல் துன்றுபொழில் சென்றணை யுந்திரு வாஞ்சியத்
  தென்று நின்றஇறை யானையு ணர்ந்தடி யேத்தலால்
  நன்று காழிமறை ஞானசம் பந்தன செந்தமிழ்
  ஒன்று முள்ளமுடை யாரடை வாருயர் வானமே.
  திருச்சிற்றம்பலம்[சம்பந்தர் ].
  ………………………………………………………………………………………………..

  திருச்சிற்றம்பலம்

  விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல்விளை யாடல்அரவம்
  மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி நீடுபொழில் மாகறலுளான்
  கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்களணி செஞ்சடையினான்
  செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள் தீருமுடனே.

  கலையினொலி மங்கையர்கள் பாடலொலி யாடல்கவின் எய்தியழகார்
  மலையின்நிகர் மாடமுயர் நீள்கொடிகள் வீசுமலி மாகறலுளான்
  இலையின்மலி வேல்நுனைய சூலம்வலன் ஏந்தியெரி புன்சடையினுள்
  அலைகொள்புன லேந்துபெரு மானடியை யேத்தவினை யகலுமிகவே.

  காலையொடு துந்துபிகள் சங்குகுழல் யாழ்முழவு காமருவுசீர்
  மாலைவழி பாடுசெய்து மாதவர்கள் ஏத்திமகிழ் மாகறலுளான்
  தோலையுடை பேணியதன் மேலோர்சுடர் நாகமசை யாவழகிதாப்
  பாலையன நீறுபுனை வானடியை யேத்தவினை பறையுமுடனே.

  இங்குகதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்தியெழில் மெய்யுளுடனே
  மங்கையரும் மைந்தர்களும் மன்னுபுன லாடிமகிழ் மாகறலுளான்
  கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி செஞ்சடையி னானடியையே
  நுங்கள்வினை தீரமிக ஏத்திவழி பாடுநுக ராவெழுமினே.

  துஞ்சுநறு நீலமிருள் நீங்கவொளி தோன்றுமது வார்கழனிவாய்
  மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கள்நட மாடல்மலி மாகறலுளான்
  வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ் வானோர்மழு வாளன்வளரும்
  நஞ்சமிருள் கண்டமுடை நாதனடி யாரைநலி யாவினைகளே.

  மன்னுமறை யோர்களொடு பல்படிம மாதவர்கள் கூடியுடனாய்
  இன்னவகை யாலினிதி றைஞ்சியிமை யோரிலெழு மாகறலுளான்
  மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள் கங்கையொடு திங்களெனவே
  உன்னுமவர் தொல்வினைகள் ஒல்கவுயர் வானுலகம் ஏறலெளிதே.

  வெய்யவினை நெறிகள்செல வந்தணையும் மேல்வினைகள் வீட்டலுறுவீர்
  மைகொள்விரி கானல்மது வார்கழனி மாகறலு ளான்எழிலதார்
  கையகரி கால்வரையின் மேலதுரி தோலுடைய மேனியழகார்
  ஐயனடி சேர்பவரை அஞ்சியடை யாவினைகள் அகலுமிகவே.

  தூசுதுகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வனபொன் மாடமிசையே
  மாசுபடு செய்கைமிக மாதவர்கள் ஓதிமலி மாகறலுளான்
  பாசுபத விச்சைவரி நச்சரவு கச்சையுடை பேணியழகார்
  பூசுபொடி யீசனென ஏத்தவினை நிற்றலில போகுமுடனே.

  தூயவிரி தாமரைகள் நெய்தல்கழு நீர்குவளை தோன்றமருவுண்
  பாயவரி வண்டுபல பண்முரலும் ஓசைபயில் மாகறலுளான்
  சாயவிர லூன்றியஇ ராவணன தன்மைகெட நின்றபெருமான்
  ஆயபுக ழேத்தும்அடி யார்கள்வினை யாயினவும் அகல்வதெளிதே.

  காலின்நல பைங்கழல்கள் நீள்முடியின் மேலுணர்வு காமுறவினார்
  மாலுமல ரானும்அறி யாமையெரி யாகியுயர் மாகறலுளான்
  நாலுமெரி தோலுமுரி மாமணிய நாகமொடு கூடியுடனாய்
  ஆலும்விடை யூர்தியுடை யடிகளடி யாரையடை யாவினைகளே.

  கடைகொள்நெடு மாடமிக ஓங்குகமழ் வீதிமலி காழியவர்கோன்
  அடையும்வகை யாற்பரவி யரனையடி கூடுசம் பந்தன்உரையான்
  மடைகொள்புன லோடுவயல் கூடுபொழில் மாகறலு ளான்அடியையே
  உடையதமிழ் பத்துமுணர் வாரவர்கள் தொல்வினைகள் ஒல்குமுடனே. [சம்பந்தர்]

  முடிந்தால் அறுவை சிகிச்சை நாளுக்கு முந்தைய நாள் சென்னை அமிஞ்சிகரை காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருகோயில்[044 26640243] சென்று அர்ச்சித்து வழிபடுங்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *