இவர் தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு நெருக்கமானவாராக இருந்தவர். காந்தியுடன் இணைந்து நாட்டு விடுதலைக்காகவும் போராடியதோடு மட்டுமல்லாது, இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும் இருந்தார். அத்துடன் மேற்கு வங்க மாநிலத்தின் முதல் அமைச்சராகவும் பொறுப்பு வகித்து மக்கள் சேவையாற்றினார்.
தன் வீட்டையே ஏழைகளுக்கான மருத்துவமனை கட்ட கொடுத்த டாக்டர் பி.சி.ராய், முதல்-அமைச்சராக இருந்த காலத்தில்கூட ஏழைகளுக்கு தினமும் இலவச மருத்துவம் செய்தவர்.
இவர், தான் பிறந்த தேதியான (1962-ம் ஆண்டு) ஜூலை 1-ம் தேதியிலே மரணம் அடைந்தார். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் மார்ச் 30-ம் தேதி டாக்டர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது என்றபோதிலும், டாக்டர் பி.சி.ராயின் நினைவாக இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
இவரின் பெயரில் சிறப்பாக மருத்துவ சேவை செய்பவர்களுக்கு 1976-ம் ஆண்டு முதல் டாக்டர் பி.சி.ராய் விருது வழங்கப்பட்டு வருகிறது.
மனிதர்களின் ஆரோக்கியம் மற்றும் உயிர் காப்பவர்கள் டாக்டர்கள். ஆனால், அவர்களின் ஆயுள் சராசரி மக்களை விட குறைவாக இருக்கிறது என்கிறது இந்திய மருத்துவக் கழகத்தின் (ஐ.எம்.ஏ) ஆய்வு முடிவு. இந்தியாவில் மருத்துவர்களின் சராசரி வயது 55 முதல் 59 ஆண்டுகளாக இருக்கிறது. இது பொது மக்களின் ஆயுளை விட 10 ஆண்டுகள் (சாதாரண மக்களின் ஆயுள் 69 முதல் 72 ஆண்டுகள்) குறைவாகும்.
அதிக மன அழுத்தம், உடல் செயல்பாடு குறைந்த சொகுசு வாழ்க்கை, உடற்பயிற்சி இல்லாமை, உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம்,ஒழுங்கற்ற சாப்பாட்டு வேளைகள் போன்றவை மருத்துவர்களின் ஆயுளைக் குறைத்து வருகிறது.
தங்களுக்காக மட்டுமல்லாது, மற்ற உயிர்களை காப்பாற்றவேண்டும் என்ற பொது நலனும் அடங்கி இருப்பதால், மருத்துவர்கள் தங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்! (நன்றி : VIKATAN.COM)
==================================================================
எல்லா துறைகளையும் போல, மருத்துவத் துறையிலும் குற்றம் குறைகள் உண்டு. ஆனாலும் மருத்துவத்தை ஒரு வணிகமாக கருதாமல் சேவையாக கருதி அதை நேர்மையாக தொழில் தர்மம் மீறாமல் ப்ராக்டீஸ் செய்யும் மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த மருத்துவர்களை கௌரவிக்கும் விதமாக இதோ நம் தளத்தின் இன்றைய சிறப்பு நீதிக்கதை.
அவசரப்பட்டு யாரையும் எடைபோடாதீர்கள்!
ஒரு விபத்து கேஸில் ஒரு சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று அந்த டாக்டருக்கு மருத்துவமனையிலிருந்து அவசரமாக ஒரு கால் வந்தது. ஓடோடி வந்தவர் தனது உடைகளை மாற்றிக்கொண்டு ஆப்பரேஷன் தியேட்டருக்கு விரைந்தார்.
ஆப்பரேஷன் தியேட்டருக்கு வெளியே அந்த சிறுவனின் தந்தை இவர் வருகைக்காக பதட்டத்துடன் காத்திருந்ததை கவனிக்கிறார்.
“என்ன சார்… ஒரு போன் பண்ணா, வர்றதுக்கு இவ்ளோ நேரமா? என் மகனின் உயிர் கொஞ்ச கொஞ்சமா போய்கிட்டிருக்கிறது தெரியுமா? உங்களுக்கு ஏதாவது பொறுப்பு இருக்கா?”
“என்னை மன்னிக்கணும். நான் டூட்டில இல்லே. வெளில இருந்தேன். கால் வந்தவுடனே எவ்ளோ சீக்கிரம் வரமுடியுமோ அவ்ளோ சீக்கிரம் வந்தேன். அதான் வந்துட்டேன்ல…கொஞ்சம் ரிலாக்ஸா இருங்க. நான் பார்த்துக்குறேன்!”
“என்ன ரிலாக்ஸா இருக்கிறதா? என் பையன் இடத்துல உங்கள் பையன் இருந்தா இப்படி பேசுவீங்களா? இல்லே இப்படி நடந்துக்குவீங்களா?”
டாக்டர் மெலிதாக புன்னகைத்து… “எங்களுக்கு எல்லாரும் ஒன்று தான். எந்த உயிரையும் காப்பாத்துறது எங்கள் கைகளில் இல்லை. அது கடவுள் கிட்டே இருக்கு. நாங்கள் ஜஸ்ட் ஒரு கருவி. போய் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்!”
“பாதிக்கப்படுவது நாமாக இல்லாதப்போ அட்வைஸ் செய்வது மிகச் சுலபம்” முணுமுணுத்தபடி நகர்கிறார் அந்த தந்தை.
தொடர்ந்து அந்த தீவிர அறுவை சிகிச்சை சில மணிநேரங்களுக்கு நடைபெற்று முடிந்தது. கைகளில் மாட்டியிருந்த கிளவுசை கழற்றிக்கொண்டே வெளியே வந்த டாக்டர், அந்த சிறுவனின் தந்தையிடம், “டோண்ட் ஒர்ரி. GOD IS GREAT. உங்க பையனை காப்பாத்தியாச்சு!”. அவரிடமிருந்து எந்த பதிலையும் எதிர்பார்க்காமல், “உங்களுக்கு ஏதாவது பேசணும்னா நர்ஸ்கிட்டே பேசிக்கோங்க!” என்று கூறிவிட்டு சிரித்தபடி போய்விடுகிறார்.
“எதுக்கு அந்த ஆள் இவ்ளோ திமிரா நடந்துக்கணும்? என் பையன் எப்படி இருக்கான்னு நான் கேக்குறதுக்கு கூட அவகாசம் கொடுக்காம ஓடறார்… ச்சே… என்ன மனுஷங்களோ” கோபத்துடன் சலித்துக்கொள்கிறார் மனிதர்.
நர்ஸ் இவரைப் பார்த்து கண்களில் நீர் துளிர்க்க சொன்னார் : “சார்… அவரோட பையன் நேத்து நடந்த ரோட் ஆக்சிடெண்ட்ல இறந்துட்டான். நாங்க ஃபோன் செய்யும்போது அவர் அவனோட இறுதிச் சடங்குல இருந்தார். இங்கே ஒரு பையனுக்கு விபத்து, உடனே ஆப்பரேஷன் பண்ண வாங்கன்னு கூப்பிட்டதும், அதை பாதியில விட்டுட்டு ஓடிவந்தார். இதோ உங்க பையனோட உயிரை காப்பாத்திட்டார். தன் பையனுக்கு தன்னோட கடமையை செய்ய இதோ திரும்ப போய்கிட்டுருக்கார்!”
நீதி : அவசரப்பட்டு யாரையும் எடைபோடாதீர்கள். ஒருவர் போகும் பாதை எத்தகையது, அதில் அவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன, வலி என்ன என்று நமக்கு தெரியாது.
==================================================================
உங்கள் வாழ்வில் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்திய, உங்களை குணப்படுத்திய, உங்களை உங்கள் குடும்பத்தினரை பல்வேறு நோய்களில் இருந்து காப்பாற்றிய மருத்துவர்களுக்கு இன்று நன்றி சொல்லுங்கள். அவர்களை நேரிலோ அல்லது ஃபோனிலோ அழைத்து வாழ்த்து சொல்லுங்கள். உங்கள் வாழ்த்து அவர்களை மனம் குளிரவைக்கும். வைத்தியர்கள் மனம் குளிர்ந்தால் வைத்தியர்களுக்கெல்லாம் வைத்தியனான அந்த வைத்தியநாதனே மனம் குளிர்ந்தாற்போல!
==================================================================
[END]
வணக்கம்.
டாக்டர் தினம் பற்றி படிக்கும் போது எனக்கு நடந்த ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் எனக்கு கடுமையான வயிற்று வலி வந்தது.
3 மருத்துவமனைகளில் டெஸ்ட் செய்தோம். எல்லோரும் எனக்கு குடல் இறங்கி இருப்பதால் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என கூறினர். எனது வயிற்று தசை மிகவும் லேசாக இருந்ததால் உள்ளே வலை வைத்து தைக்க வேண்டுமென கூறினர்.
இறுதியில் ராமச்சந்திரா மருத்துவமனையில் அட்மிட் ஆனேன். எனக்கு அறுவை சிகிச்சை செய்ய இருந்த டாக்டர் பெயர் திரு பாலாஜி சிங். எனக்கோ பயம். அப்பர் பெருமானை வேண்டி கொண்டேன். (அவரும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர் ஆயிற்றே)
அறுவை சிகிச்சை அன்று என் தந்தையும் பழனியில் எங்கள் வீட்டில் கூற்றாயினவாறு விலக்ககிலீர் என்ற அப்பர் பெருமானின் பதிகத்தை இடை விடாது பாராயணம் செய்து கொண்டிருந்தார்.
அறுவை சிகிச்சை முடிந்த மறுநாள், வேறு ஒரு சீப் டாக்டர் வந்து என்னை நலம் விசாரித்தார். அவரை பற்றி எனக்கு தெரியவில்லை. பின்னால் வந்த ஜூனியர் டாக்டரிடம் விசாரித்த போது அந்த சீப் டாக்டர் தான் எனக்கு அறுவை சிகிச்சை செய்ததாக கூறினார். (அறுவை சிகிச்சை நடைபெற்ற பொது மயக்கத்தில் இருந்ததாலும், கண்கள் மூடப்பட்டு இருந்ததாலும் எனக்கு தெரியவில்லை). நான் டாக்டர் பாலாஜி சிங்கை பற்றி விசாரித்தேன். அவர் அவசர வேலையாக வெளியூர் சென்றுவிட்டதாக கூறினார்.
மேலும் எனக்கு சிகிச்சை செய்த டாக்டர் பெயர் திரு அருளப்பன் என்றும் கூறினார். என்னால் நம்ப முடியவில்லை, அறுவை சிகிச்சை செய்தது டாக்டரா அல்லது அப்பர் சுவாமிகளா என்று! அப்போது நினைத்து கொண்டேன் இருவரும் ஒருவரே என்று.
நன்றியுடன்
தாமரை வெங்கட்
நெகிழ வைக்கும், சிலிர்க்க வைக்கும் அனுபவம்.
பகிர்ந்தமைக்கு நன்றி!
– சுந்தர்
இன்று மருத்துவர்கள் தினம்.
சிறப்பு நீதி கதை கண்ணில் நீர் துளிர்க்க செய்தது.
அந்த நோயாளியின் தந்தை கோபப்படும் போது கூட டாக்டர் புன்னகையுடன் இருந்து பதில் சொன்ன நேர்த்தி அவர் தொழில் மீது அவர் கொண்டுள்ள பற்றை காட்டுகிறது.
நீதியில் நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை.
இந்த தினத்தில் போரூர் ராமச்சந்திரா இருதய நிபுணர் உயர்திரு.தணிகாசலம் அவர்களுக்கு என் வணக்கத்தையும் மரியாதையையும் தெரிவித்துகொள்கிறேன்.
இன்று நான் கணவருடன் சந்தோசமாக வாழ்க்கை நடத்த அவர் தான் காரணம். மனித உருவில் வந்த தெய்வம்.
Belated Doctors Day wishes.
தாங்கள் இந்த பதிவில் கூறிய கதை நெகிழ வைக்கும் கதையாக உள்ளது.
2008 ல் எனது மகன் ஹரிஷ் ரோட்டில் நடந்து சென்ற பொழுது பைக்கில் வந்தவன் மோதி தள்ளி விட்டதில் தலையில் அடிபட்டு பிழைக்க முடியாத situation யில் விஜயா மருத்துவமனையில் அட்மிட் செய்து அவனை காப்பாற்றிய doctors யை இப்பொழுது நினைவு கூறி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவர்கள் தெய்வ ரூபத்தில் வந்து என் பையனை காப்பற்றினார்கள். அனைத்து டாக்டர்ஸ் களுக்கும் எனது டாக்டர்ஸ் டே வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்,
.
நன்றி
உமா
நான் இன்று உயிரோடு இருப்பது ராமன் ,அசோக்தியகராஜ் , என்கிற இரு டாக்டர்களின் உதவியால், எனக்கு கிட்னி 2 லும் கட்டி வந்தது . என் பையன் 5 மாத பேபி அதனால் அவர் லப்ரோகோபி ஆபரேஷன் செய்தார்கள், அடுத்த 1 மதம் கழித்து ஸ்கேன் செய்தால் , முன்பிருந்ததை விட மிகவும் பெரிதாகி விட்டது . டாக்டர்க்கு அதிர்ச்சி, ஒன்றும் புரியவில்லை, நான் மீண்டும் சென்னையில் உள்ள பெரிய ஹோச்பிடல்களில் கன்சுல்டின் சென்றேன், அனைவரும் நீங்கதான் எங்களுக்கு முதல் கேஸ் இது லட்சதில் ஒருத்தருக்குத்தான் வரும் இன்று சொன்னார்கள். அன்று என் கண்கள் இருண்டன. மறுபடியும் டாக்டர் ராமனிடம் சென்றேன். அவர் எனக்காக செங்கல்பட்டு மருத்துவமனையில் என்னும் 1 மாதம் தாண்டினால் என் உயிருக்கு ஆபத்து என உடனே ஆபரேஷன் என் மார்பின் விளிம்பில் ஆரம்பித்து கீழே வரை மேஜர் ஆபரேஷன் செய்து என்னை காப்பாற்றினார் . மீண்டும் வரலாம். கடவுள் தான் உங்களை காப்பத்தனும், என சொல்லினார். 1 இயர் பிறகு ஸ்கேன் செய்து பார்த்து இனி பயமில்லை என சொன்னார். எனக்கு கடவுள் எப்பவும் அந்த 2 டாக்டர்ஸ் தான். 1 இயர் தினமும் மரணம் எப்போ என நடுங்குவேன்.
.