Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, June 14, 2024
Please specify the group
Home > All in One > இருள் வந்த போது விளக்கொன்று உண்டு; எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு!

இருள் வந்த போது விளக்கொன்று உண்டு; எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு!

print
டந்த சரஸ்வதி பூஜை திருநாளன்று, “அன்னயாவினும் புண்ணியங்கோடி” என்னும் தலைப்பில் நாம் ஒரு பதிவை அளித்திருந்தோம். அதில் கல்விக்கடவுள் அன்னை கலைவாணிக்கு உண்மையில் மகிழ்ச்சி தரக்கூடிய ஏதாவது ஒன்றை நாம் செய்ய விரும்புவதாக கூறியிருந்தோம்.

இதற்காக கோவை மாவட்டம் இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை நவீன வசதிகளுடன் கூடிய ஒரு முன்மாதிரி பள்ளியாக மாற்றிய சாதனையாளர்கள் தலைமை ஆசிரியர் திருமதி.சரஸ்வதி மற்றும் உதவி ஆசிரியர் திரு.பிராங்க்ளின் இருவருடனும் ஆலோசித்தோம். அப்போது ரீசார்ஜ் செய்யக்கூடிய லைட்டுகளை பள்ளிக்கு வாங்கித் தர நாம் விருப்பம் தெரிவித்தோம். தொடர்ந்து நடைபெற்ற எங்கள் ஆலோசனையின் முடிவாக இராமம்பாளையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள வெண்மணி என்னும் அடிப்படை வசதிகளற்ற ஒரு கிராமத்தில் இந்த பள்ளியின் குழந்தைகள் வீடு திரும்பியவுடன் படிக்க ஏதுவாக தரமான சோலார் ரீசார்ஜ் விளக்குகளை நம் RightMantra.com சார்பாக அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

கோவையில் உள்ள நமது நண்பர் மற்றும் தளவசாகர் திரு.சக்திவேலிடம் இது சம்பந்தமான பணிகளை ஒப்படைத்தோம். அவர் மகிழ்ச்சியுடன் களமிறங்கினார். மேலும் நண்பர்கள் சிலர் இந்த பணியில் இணைய விருப்பம் தெரிவிக்கவே… மொத்தம் ஐந்து விளக்குகள் வாங்கப்பட்டன. ஒரு விளக்கொளியில் குறைந்தது 10 குழந்தைகள் படிக்கலாம். இதை பயனாளிகளிடம் சென்ற வாரமே நேரில் சேர்ப்பித்துவிட்டு வர விருப்பம் தெரிவித்திருந்தோம்.

ஆனால், பள்ளியின் ஆசிரியர் திரு.பிராங்க்ளின் இதை ஒரு எளிய நிகழ்ச்சியின் மூலம் நடத்த விருப்பம் தெரிவித்தார். அதற்க்கு காரணம், பயனாளிகள் அதன் அருமை உணர்ந்து அதை முறைப்படி பராமரிப்பார்கள் என்பது. அடுத்து, இப்படி ஒரு அடிப்படை வசதியற்ற கிராமமும் அதன் தேவைகளும் வெளியுலகிற்கு தெரியவரும். அதன் மூலம் நூறு குடும்பங்கள் வாழும் இந்த கிராமத்திற்கு ஒவ்வொரு வசதியாக கிடைக்க ஏதுவாக இருக்கும் என்பது தான்.

திரு.பிராங்க்ளின் அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கான முயற்சிகள் மேற்கொண்டபோது, உதவி தொடக்க கல்வி அலுவலர் (AEO) திரு.சரவணன் அவர்கள் மேற்படி நிகழ்ச்சிக்கு வருவதாக இசைவு தெரிவித்தார். இதையடுத்து திரு.சரவணன் அவர்களின் தலைமையில் நமது நண்பர்களை சிறப்பு விருந்தினர்களாக வைத்து, பயனாளிகளான அந்த கிராமத்தின் மக்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் ஆகியோர் முன்னிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.சரஸ்வதி, திரு.பிராங்க்ளின் ஆகியோர் மேற்படி ‘விளக்கு வழங்கும்’ நிகழ்ச்சியை சிறப்பாக வியாழன் 08/11/2012 அன்று மாலை நடத்தியுள்ளனர்.

நமது தளம் சார்பாக இந்த வெண்மணி கிராமத்தை தத்தெடுக்க முடிவு செய்திருக்கிறேன். மிகப் பெரிய மாற்றங்களை எங்களால் செய்துவிட முடியுமா என்று எனக்கு தெரியாது. இருப்பினும் I COULD MAKE THE DIFFERENCE என்று நம்புகிறேன்.

———————————————————————————————————–
நன்றி… நன்றி…நன்றி….!

இந்த விளக்குகளை வாங்குவதற்கு உதவி புரிந்திட்ட LivingExtra.com திரு.ரிஷி, நம் தள வாசகர்கள் மற்றும் நண்பர்கள் சக்திவேல்,  ஹரி சிவாஜி, மாரீஸ் கண்ணன், பிரேம் கண்ணன், விஜய் வாசு, யவனிகை ஆகியோருக்கு என் நன்றி. குறிப்பாக நண்பர் சக்திவேலின் பங்களிப்பு இல்லையெனில் இது சாத்தியப்பட்டிருக்காது. அவருக்கு மீண்டும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த பள்ளியை பற்றிய செய்தியை வெளியுலகிற்கு கொண்டு வந்த ‘புதியதலைமுறை’ யுவகிருஷ்ணா  உள்ளிட்ட பத்திரிகை தோழர்களுக்கும் பிற பதிவர்களுக்கும் நன்றி. (‘புதிய தலைமுறை’ கட்டுரையை ரிஷி அவர்கள் பகிர்ந்திருந்தார். அதைப் பார்த்து தான் நான் இப்படி ஒரு பள்ளி இருப்பதை தெரிந்துகொண்டேன்.) எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் இந்த பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு பாராட்டு தெரிவித்ததாக அறிந்தேன்.
———————————————————————————————————–

நிகழ்ச்சிக்கு சென்று வந்தது குறித்து நண்பர் சக்திவேல் கூறியதாவது :

Over to Mr.Sakthivel…

மறக்க முடியாத, மன நிறைவான ஒரு நாள்

நேற்று (08/011/2012) எனது வாழ்வில் மறக்க முடியாத, மன நிறைவான ஒரு நாள். ஒரு முன் மாதிரி பள்ளியை பார்த்தது, சாதனை ஆசிரியர்களை சந்தித்தது & கள்ளங்கபடமற்ற பள்ளிக் குழந்தைகள் மற்றும் அன்புபிக்க கிராம மக்கள் இவர்களோடு உரையாடியதை என்னால் மறக்க முடியாது.

அலுவலகத்தில் பர்மிஷன் போட்டு  விட்டு நானும் எனது நண்பர் திரு.ஹேமில்டன் அவர்களும் அவரது காரில் புறப்பட்டு கோவையிலிருந்து 38 கி.மீ. தொலைவில் உள்ள ராமம்பாளையம் கிராமத்திற்கு சென்றோம். சரியாக 45 நிமிட பயணத்திற்கு பிறகு பள்ளியை அடைந்தோம். ஆசிரியர்கள் திரு. பிராங்க்ளின் மற்றும் தலைமை ஆசிரியர் திருமதி. சரஸ்வதி ஆகியோர் நம்மை அன்புடன் வரவேற்றனர்.

அங்கிருந்த பள்ளி மாணவ மாணவியரும் நம்மை உற்சாகமாக வரவேற்றனர். பள்ளி முழுவதும் ஒரு முறை சுற்றி பார்த்தோம். வெளி தோற்றத்தில்தான் அரசு பள்ளி போன்று உள்ளது. உள்ளே தனியார் பள்ளியை மிஞ்சும் அளவுக்கு அனைத்து வசதிகளும் செய்ய பட்டிருந்தது. இத்துடன் இணைத்துள்ள புகைப்படங்களை பார்த்தாலே தெரியும், எந்த அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்று.

கம்ப்யூட்டர் லேப் கட்டி முடியும் தருவாயில் உள்ளது. கழிவறைகள் அவ்வளவு சுத்தமாக உள்ளது. பள்ளியின் வசதிகள் மற்றும் பராமரிப்பை பார்த்து வியந்தபடியே, பள்ளியிலிருந்து 4km தொலைவில் உள்ள வெண்மணி கிராமத்திற்கு சென்றோம்.

செல்லும் வழியில் AEO திரு. சரவணன் அவர்களையும் அழைத்து கொண்டு அந்த கிராமத்திற்கு சென்றோம்.

இந்த நவீன உலகத்திலும் இப்படி ஒரு பின் தங்கிய கிராமமா என்று கேட்கும் அளவிற்கு மிகவும் பின் தங்கிய கிராமமாக, அடிப்படை வசதிகள் மிக மிக குறைவான கிராமமாக இருந்தது.  93 குடிசைகள் கொண்ட அந்த கிராமத்தில் ஒரு வீட்டில் கூட மின் வசதி இல்லை.

………………………………………………………………………………………………………………………………
இடமிருந்து வலம் : தலைமை ஆசிரியை திருமதி.சரஸ்வதி, யோகா ஆசிரியை சரஸ்வதி, நண்பர் திரு.ஹேமில்டன், நண்பர் திரு.சக்திவேல், உதவி தொடக்க கல்வி அலுவலர் திரு.சரவணன், உதவி ஆசிரியர் பிராங்க்ளின்
………………………………………………………………………………………………………………………………

கிராம மக்கள் எங்களை அன்புடன் வரவேற்று உபசரித்தனர். தொடர்ந்து நடைபெற்ற ஒரு எளிமையான நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு சோலார் விளக்குகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் உதவி ஆசிரியர் திரு. பிராங்க்ளின் அவர்கள் பேசியதாவது:

மின்வசதியில்லாத இங்கு பிள்ளைகள் படிப்பதற்கு சோலார் லைட் மிகவும் உபயோகமாக இருக்கும்

நமது பள்ளியை பற்றி இணையத்தின் மூலம் தெரிந்து கொண்டு RIGHTMANTRA.COM என்ற இணைய தளத்தை நடத்தி வரும் சென்னையை சேர்ந்த சுந்தர் அவர்கள் நம்மை தொடர்பு கொண்டு உங்கள் பள்ளிக்கு ஏதேனும் உதவி செய்ய விரும்புவதாக கூறினார்கள். நம் பள்ளியில் படிக்கும் மிகவும் பின்தங்கிய குடுமபத்தை சேர்ந்த இரு மாணவர்களுக்கு எமெர்ஜென்சி  லைட் வாங்கித் தருவதாக சொன்னார். அவரிடம் நான் இந்த வெண்மணி கிராமத்தை பற்றி கூறி, இங்குள்ள பிள்ளைகளுக்கு அதை வாங்கித் தரும்படி கேட்டுகொண்டேன். அவரும் அவர் நண்பர்களும் சேர்ந்து மொத்தம் 5 லைட்கள் வாங்கி தருகிறோம் என்று சொன்னார்.

அவர் சொன்னது போலவே அவரது நண்பர் கோவையை சேர்ந்த திரு. சக்திவேல் அவர்களை இங்கு அனுப்பி வைத்து இருக்கிறார். திரு. சக்திவேல் மற்றும் அவரது நண்பர் திரு. ஹேமில்டன் அவர்களுக்கு எங்கள் நன்றி. மின்சாரமே இல்லாத இந்த ஊரில் அவர்கள் கொடுக்கும் இந்த லைட் பிள்ளைகளின் படிப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

சென்ற வாரமே இவர்கள் உங்களை பார்க்க வருவதற்கு தயார் நிலையில் இருந்தார்கள். நான்தான் நமது மாவட்ட கல்வி அலுவலர் அவர்களையும் வைத்து கொண்டு இந்த விழாவை நடத்தலாம் என்று இந்த வாரம் வர சொன்னேன். தாமதத்திற்கு வருந்துகிறேன்.

இவர்களுக்கும் இந்த பள்ளிக்கும், ஏன் இந்த ஊருக்கும் கூட எந்த சம்மந்தமும் கிடையாது. நமது பள்ளியின் செயல்பாடை கேள்வி பட்டு நமக்கு உதவ வந்துள்ள இவர்களுக்கு மீண்டும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த பணியில் என்னுடன் உறுதுணையாய் இருக்கும் நமது தலைமை ஆசிரியர் மற்றும் AEO  சார் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

இந்த வசதிகளை பயன்படுத்திக்கொண்டு உங்கள் பிள்ளைகளை நாள் தவறாமல் பள்ளிக்கு அனுப்புங்கள். தினமும் பள்ளி முடிந்து வந்தவுடன் ஒரு மணி நேரம் அவர்களை விளையாட விடுங்கள். அதன் பிறகு வீட்டு பாடம் செய்ய சொல்லுங்கள். உங்கள் குழந்தைகளின் முன்னேற்றம் பெற்றோர்களாகிய உங்கள் கையில் தான் இருக்கிறது. உங்களின் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் எங்களுக்கு தேவை. அனைவருக்கும் நன்றி, வணக்கம்.”  இவ்வாறு திரு.பிராங்க்ளின் அவர்கள் பேசினார்.

அடுத்து அக்குழந்தையில் பெற்றோர்கள் / ஊர் மக்கள் சார்பாக நான்கு பயனாளிகள் பேசினர். அவர்கள் குழந்தைகளை இந்த பள்ளிக்கு அனுப்புவதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், ஆசிரியர்களின் பணியை பாராட்டி பேசினார்கள்.

அடுத்து, AEO திரு.சரவணன் அவர்கள் பேசியதாவது:

நேரம் ஒதுக்கி நேரில் உதவிட வந்துள்ள இந்த RIGHTMANTRA.COM நண்பர்களுக்கு நன்றி

நானும் நமது வட்டத்தில் உள்ள எத்தனையோ தனியார் பள்ளிகளை பார்த்து உள்ளேன். அந்த பள்ளிகளில் இல்லாத எவ்வளவோ வசதிகள் நமது அரசு பள்ளியில் உள்ளன. நானும் கிராமத்தில் படித்து வளர்ந்தவன்தான். எனது கல்லூரியில்தான் முதன் முதலில் கம்ப்யூட்டர் பார்த்தேன். ஆனால் உங்களுக்கு முதல் வகுப்பிலேயே கம்ப்யூட்டர், யோகா போன்றவை கற்று தரப்படுகிறது.

அரசின் மூலமாக 4 செட் சீருடை, நோட்டு, புத்தகம், ஸ்கெட்ச், செருப்பு ஆகியவை வழங்கபடுகிறது. அவை அனைத்தையும் நல்ல முறையில் பயன் படுத்த வேண்டும். இந்த மாதிரி ஆசிரியர்கள் உங்களுக்கு கிடைப்பது அரிது.

இந்த பரபரப்பான உலகில் அறிமுகம் இல்லாதவர்களுக்கு உதவி செய்வது மிகப்பெரிய விஷயம். அதுவும் உங்களுக்காக நேரம் ஒதுக்கி நேரில் உதவிட வந்துள்ள இந்த RIGHTMANTRA.COM நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

உங்கள் பிள்ளைகளை தொடர்ந்து படிக்க அனுப்பி வையுங்கள்.

இரண்டு மூன்று மணி நேரம் கரண்ட் இல்லை என்றாலே எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. ஆனால் சுத்தமாக மின்சாரம் இல்லாமல் நீங்கள் இருப்பது மிகவும் வேதனையாக உள்ளது.  ஒரு அரசாங்க அதிகாரியான என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் கண்டிப்பாக உங்கள் ஊருக்கு செய்வேன். தொடக்க பள்ளி உங்கள் ஊரிலே அமைத்திட நடவடிக்கை மேற்கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.”

இவ்வாறு கூறினார் திரு.சரவணன்.

அடுத்து என்னை ஓரிரு வார்த்தைகள் பேச சொன்னார்கள்.

“இது ஒரு பெரிய சேவையோ உதவியோ அல்ல. ஒரு சிறிய தொடக்கம் தான்.”

இந்த பள்ளியை பற்றி இணையத்தில் வந்த கட்டுரையை பார்த்த எனது நண்பரும், RIGHTMANTRA.COM என்ற இணைய தளத்தை நடத்துபவருமான  சுந்தர் அவர்களின் முயற்சியால் உங்களுக்கு உதவிடும் பொருட்டு, நண்பர்கள் சில பேர் சேர்ந்து உங்களுக்கு இந்த எமர்ஜென்சி லைட் வாங்கி தருகிறோம். இது ஒரு பெரிய சேவையோ உதவியோ அல்ல. ஒரு சிறிய தொடக்கம் தான். போக போக எங்களால் முடிந்த மேலும் பல உதவிகள் உங்களுக்கு செய்ய உள்ளோம்.

நானும் கிராமத்தில் படித்தவன்தான். உங்கள் பிள்ளைகளும் நாளை டாக்டர், என்ஜினியர் ஆவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. பிராங்க்ளின் மாதிரி ஆசிரியர் கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அரசு பள்ளி ஆசிரியரான அவர் இந்த அளவுக்கு அர்பணிப்பு உணர்வோடு உங்களுக்கு செய்யும் சேவை மகத்தானது. இதன் மூலம் அவருக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்.

அவரின் இந்த பனி மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன். அதற்கு எங்கள் ஆதரவு எப்பொழுதும் உண்டு. நன்றி, வணக்கம்.

ஊர் மக்கள் அனைவரும் வந்து கை குலுக்கி நன்றியை தெரிவித்தார்கள். சில கோரிக்கைகளையும் முன் வைத்தார்கள்.

1. குடி தண்ணீருக்கு 2km தூரம் நடந்து சென்றுதான் எடுத்து வர வேண்டும். அதற்காக அனைவரும் சேர்ந்து போர் அமைத்து உள்ளார்கள். ஆனால் அதிலிருந்து தண்ணீர் எடுக்க மின்சாரம் தேவை. மின் இணைப்பே இல்லாத அந்த ஊரில் மோட்டார் எப்படி இயங்கும்? அதனால் ஒரு சிறிய ஜெனரேட்டர் வாங்கி கொடுத்தால் அவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தார்கள்.

2. குழந்தைகள் விளையாட காலி இடம் உள்ளது. புதர் மண்டி உள்ளது. அதனை செப்பனிட்டு விளையாட்டு மைதானம் ஆக்கி தர வேண்டும்.

என்னுடன் வந்த நண்பர் திரு. ஹேமில்டன் அவர்கள் முதலில் டீஸல் செலவை நீங்கள் ஏற்றால் நான் வருகிறேன் என்று கூறித்தான் என்னுடன் வந்தார். இந்த பள்ளியை, மக்களை பார்த்தவுடன் என் பங்களிப்பு எதாவது இருக்க வேண்டும் என்று கூறி முழு டீஸல் செலவையும் அவரே ஏற்று கொண்டார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

எல்லாவற்றுக்கும் மேலாக எனக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த நமது சுந்தர் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி. சுந்தர் மூலமாக என்னை கருவியாய் அனுப்பிய இறைவனுக்கு கோடானு கோடி நன்றி.

——————————————————————————————–
இப்பள்ளியின் கட்டிட பணியில் உதவிட விரும்புகிறவர்கள் கீழ்கண்ட முகவரியில் உள்ள பதிவை பார்க்கவும்.
http://rmpschool.blogspot.in/2012/04/blog-post.html
——————————————————————————————–

[END]

11 thoughts on “இருள் வந்த போது விளக்கொன்று உண்டு; எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு!

 1. வெண்மணி கிராமத்தை தத்தெடுக்க முடிவு செய்ததற்கு மிக்க நன்றி சுந்தர். என்னுடைய ஆதரவு வழக்கம்போல் எப்பொழுதும் உண்டு.

  இந்த கட்டுரையை படித்து வாழ்த்துக்கள் தெரிவித்த எனது நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. அவர்களும் இது போன்ற பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள ஆர்வமாக உள்ளனர்.

 2. காலத்தினார் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப்பெரிது. சிறிய அளவில் ஆரம்பித்திருக்கும் இந்த பணியின் நோக்கம் மகத்தானது. இல்லத்தில் ஏற்றி வைத்திருக்கும் விளக்கு பலரது வாழ்க்கையில் ஒளி காட்டும். உண்மையிலேயே இதுதான் ரைட் மந்த்ரா.

 3. its a good beginning…that too its our duty to share our growth with our beloved humans….so that we will also become humans
  Sundar what is the difficulty in getting electricity for them
  Its the distance or any other hindrance

  —————————————————–
  The village lacks basic infrastructure it seems. Bringing electricity to a village is not an easy thing. Hope they would get soon.
  – Sundar

 4. My strong belief is that, Only education will pave way for the uplift of our country. Whoever contributes to the education, is not only helping the individual, but our nation. Hats Off Sundar and team. Let this noble beginning turn out to be successful journey.

 5. வாழ்த்துக்கள் இன்னும் இது பெரிதாக வளர்ந்து ஆலமரமாக ஆகா போகிறது அதுக்கு கடவுளும் வழிவகுப்பார்

 6. Hi Sundar and Sakthivel and team,

  Hearty congrats to all. I really appreciate this great help.

  If you help people by giving food or money enough to buy a food, it will help them only for a day or two.

  But if you do help in education or its related, it will bring light in their lives forever.

  // நண்பர்கள் சக்திவேல், ஹரி சிவாஜி, மாரீஸ் கண்ணன், பிரேம் கண்ணன், விஜய் வாசு, யவனிகை //

  I strongly appreciate all these great people along with Sundar. Appreciation should reach all those who have been part of it.

  Since even small appreciation will bring a great good feelings in them and which will turn out to do more and more of like this.

  I sincerely appreciate Mr. Sakthivel and his friend Mr.Hamilton – for their time and money involved in diesel.

  I sincerely laud all – Mr. Hari Sivaji, Mr. Marees Kannan, Mr. Prem Kannan, Mr. Vijay Vasu and Yavanigai and Mr. Sundar for their phenomenal contributions.

  And I sincerely appreciate Mr. Rishi, livingextra.com and other reporter people for bringing out such good things in to the light of the people.

  Hope all would be living happily and peacefully with their loving, positive people around them.

  I wish you all a very happy, prosperous and peaceful Diwali.

  by,

  Chitti.

 7. தானத்திலே சிறந்தது வித்யா தானம் தான். This all started as a good seed of powerful thought in Mr.Sundar’s mind. And it has borne fruits today. U r too good sir.

  And other friends of “Rightmantra” team, Mr.Sakthivel n Mr.Milton, The result was ur action. Great. Ur initiative for implementing this idea is the key to our success.
  GOD BLESS 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *